World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

International concern over US support for Israeli war drive

இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு மீதான சர்வதேச அமைதியின்மை

By Chris Marsden
5 February 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் ஆரியல் ஷரோன் விடுத்த ஒரு அறிக்கையில், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இஸ்ரேல், லெபனானை ஆக்கிரமிக்கும் போது பாலஸ்தீன தலைவரான யசீர் அரபாத்தை கொலை செய்யாமல் விட்டது தான் இழைத்த ஒரு தவறு எனவும் அதற்காக அவர் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த அனுபவமுள்ள யுத்த குற்றவாளி, ஒரு நேரம் தனது நம்பிக்கைக்குரிய அரசியல்வாதிகளுடனும், இராணுவத்தினருடனும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை தற்சமயம் ஏன் வெளிப்படையாக சுதந்திரமாக பேசக்கூடியதாக உணர்ந்து கொண்டுள்ளார்?

இதற்கான பதில், ஷரோன் இராணுவ ரீதியில் பாலஸ்தீன அதிகாரத்தை நசுக்குவதற்கான ஆதரவை தற்போது அவர் அமைதியான முறையில் புஷ் நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொள்கிறார் எனும் ஒரு நம்பிக்கையிலாகும்.

Maariv எனும் இஸ்ரேல் பத்திரிகைக்கு அண்மையில் ஷரோன், ''அரபாத்தை அழிக்கக் கூடாது எனும் ஒரு ஒப்பந்தம் லெபனானில் செய்து கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில், அவரை நாம் அழிக்காமல் விட்டதற்காக நான் வருந்துகிறேன்.'' எனக் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஷரோன் 1982 ல் பெய்ரூட்டினுள் புகுந்து அங்கிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை நாட்டை விட்டு வெளியேற்றினார்.

அரபாத் ஏற்கனவே றமாலாவிலுள்ள அவருடைய காரியாலத்தில் தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் ஒரு பிரதானமான பயங்கரவாதி என ஷரோனால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். அவர் Maariv பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ஜெருசலேம் முதல் மேற்கு கரை வரையிலும் அவற்றை, கண்காணிப்பதற்காக உயர்ந்த கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தல், எலெக்ரோனிக் புகைப்பட கருவிகளை பொருத்துதல் மற்றும் பெரிய அகழிகளை வெட்டுதல் மேலும் இராணுவ சோதனைகளுக்கான எல்லைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் இஸ்ரேல் அரசாங்கத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார். இத் திட்டம் ''சுற்றி வளைக்கப்பட்ட ஜெருசலேம்'' என அழைக்கப்படும், இந் நகரம் பூராவும் யூத கட்டுப்பாட்டின் கீழ் பொலிஸ் காவலுக்கு உள்ளாக்கப் படுவதுடன், ''அராபியர்கள் மிகவும் நெருக்கமாக ''குவிந்து இருக்கும் ஒரு இடமாக மேலும் இது இருக்காது என ஷரோனின் பொதுஜன பாதுகாப்பு அமைச்சரான Uzi Landau என்பவரும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மிகவும் கடுமையான மற்றும் ஒரு இறுதியான இராணுவத் தாக்குதலை பாலஸ்தீன அதிகாரத்துக்கு மேலாக முன்னெடுப்பதையிட்டு அச்சமடைந்த ஐரோப்பிய சக்திகள் இதை உடனடியாக நிறுத்துமாறு ஷரோனுக்கு அறிக்கைகளை வெளியிட்டன. ஸ்பெயின் வெளிநாட்டு அமைச்சரான Josep Pique என்பவர் ஷரோனுடைய நடவடிக்கைகளை, ''அவர்கள் எமது நிராகரிப்புக்களை அனுசரிப்பார்கள் என நான் எதிர்பார்கிறேன்'' எனக் குறிப்பிட்டார். அதற்கு மாறாக அமெரிக்க மாநில அமைச்சின் பேச்சாளரான Richard Boucher, இந்த குறைபாடான அறிக்கை, ''இது ஓர் பிரயோசனமற்றதாக இருக்கும்'' என தெரிவித்தார், இதே கருத்தையே பின்னர் புஷ் உம் வலியுறுத்தியிருந்தார்.

ஷரோன் இவ்வாறான அறிக்கைகளுக்கு மிகவும் குறைந்த முக்கியத்துவத்தையே கொடுத்தார். அரபாத்தை பயமுறுத்தி பணிய வைப்பது அல்லது அவரை முற்றாக நீக்கி விடுவது போன்ற அரசியல் வித்தியாசங்களை வென்று கொள்வதில் சில சமயம் வாஷிங்டனுக்கும், Tel Aviv க்கும் இடையே வித்தியாசங்கள் காணப்படலாம். ஷாரோன் Maariv பத்திரிக்கைக்கு பகிரங்கமாக பேட்டி கொடுப்பதற்கு தீர்மானம் செய்திருந்த ஒரு தினத்திற்கு முன்பாக, புஷ் ஜனவரி 29 ல் நாட்டின் நிலைமை தொடர்பான அவரது பேச்சில், அமெரிக்கா மத்திய கிழக்கில் ஒரு யுத்தத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பது என்பது தவிர்க்கப்பட முடியாதது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கிய தாக்குதலுக்கான ஒரு இடம் ஈராக் ஆக இருக்கலாம். ஈரான், வட கொரியா அவற்றுடன் சதாம் ஹுசைனின் Baathist அரசாங்கம் உட்பட இந் நாடுகளை, இவை "உலகின் மிக ஆபத்தான ஆட்சி" என குறிப்பிடப்பட வேண்டும் எனவும், மேலும் இவை பயங்கரவாதத்துக்கு ஆதரவையும், ''பெரிய அளவில் மக்களை அழித்தொழிப்பதற்கான ஆயுதங்களையும்'' வைத்திருக்கின்றன என புஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதே மாதிரியான ஒரு கணக்கு தீர்ப்பையே புஷ் நிர்வாகத்தின் அரசியல், பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவரான அரபாத்துக்கு (ஆரம்பத்தில் பாலஸ்தீனர்களுக்கு என ஒரு நாடு அமைக்கப்படல் வேண்டும் என்பதற்கு ஆதரவு வழங்கியது) எதிராக, அவரை உண்மையில் ஒரு பயங்கரவாத தலைவர் என ஊர்ஜிதப் படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில், அமெரிக்க அரசு செயலாளரான கொலின் பெளலின் வார்த்தைகள் மிகவும் அவசரமாக இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாடுளை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அராபிய அரசாங்கங்களின் ஒத்துழைப்பை பாதுகாக்க வேண்டி, புஷ் கூறிய ''பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு'' என்பதை கவனமாக கருதவேண்டும் என முன் மொழிந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு மேலான குண்டு வைப்புகளின் வெற்றியானது, யுத்த வெறி பிடித்த வாஷிங்டனின் சில சக்திகளை ஒரு வெற்றிக் களியாட்டத்தில் திருப்தி கொள்ள வைத்தது. உதவி பிரதமர் Dick Cheney பென்டகனுடைய உதவியுடன், இஸ்ரேல் பாலஸ்தீன அதிகாரத்துக்கு எதிராக ஒரு இராணுவ கணக்குத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான ஆதரவை பலமாக முன் தள்ளவும், இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் யுத்த நிலமைகளை முன்னெடுக்க முக்கியமானது என்ற கருத்துடன் தோன்றினார். நான்கு குழுக்களில் மூன்றை, ஹாமாஸ், ஹிஸ்போலா மற்றும் இஸ்லாமிய ஜிகாத் போன்றவற்றை, இவை இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத வலைப் பின்னல்களைக் கொண்டுள்ள பாலஸ்தீன குழுக்கள் என புஷ் மேலும் தெரிவித்து உள்ளார்.

1993 ல் ஒஸ்லோ ஒப்பந்தத்திற்கு கீழ் ஏற்படுத்தப்பட்ட பாலஸ்தீனர்களுடனான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் பேணப்படல் வேண்டும் எனும் முன்னேற்றத்தை ஷரோன் துடைத்துக் கட்டி பின்னர், அதை புஷ் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென முயற்சிக்கிறார். ஷரோன் அமெரிக்காவின் உதவியுடன் பாலஸ்தீனர்களுடைய அதிகாரத்தை, ஒன்றில் அவர்களை ஒன்றிணைந்த பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களைச் சுற்றி ஒரு சிறிய அளவிலான குடியிருப்பு போன்ற, பலமான ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவது போன்ற திட்டத்தினால் அதை நிர்மூலமாக்க திட்டம் தீட்டுகிறார்.

ஷரோன் அரசாங்கத்திற்கு கீழ் ஒஸ்லோ ஒப்பந்தத்தின் முறை ஏற்கனவே இறந்து விட்டது. இஸ்ரேல் வடக்கு கரை மற்றும் காஸாவின் மிகச் சிறந்த வளமான பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டுள்ளது. இப் பிரதேசங்களுக்குள் சியோனிஸ்டுகள் ஊடுருவி தமது இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளுதல் என்பது நாளாந்தம் நடைபெறுகிறது அல்லது அங்கே உள்ள பாலஸ்தீனர்களின் வீடுகளையும், விவசாயத்தையும் நாசமாக்கி அவ்விடங்களை மேலும் அபகரித்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவின் சுயாதீனமான இராணுவ ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் ஏற்படுத்துவதினூடு இவ்வாறான கொள்கைகளை மிகவும் சுதந்திரமாக நடைமுறைப்படுத்தவும் மேலும் அவற்றை தொடர்சியாக விரிவுபடுத்தவும் முடியும் என்பதில் நிட்சயமான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் கொண்டுள்ளார். ஷரோன் இந் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக கிடைக்கும் ஒவ்வொரு காரணங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளார்.

இவ் வருடத்தின் ஆரம்பத்தில், அரபாத் பாலஸ்தீன அதிகாரத்தின் அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டிருந்த பலதரப்பட்ட குழுக்களை, அவற்றில் இஸ்லாமிய தீவீரவாத எதிர்ப்புக்களை அவர் எதிர் நோக்கினும், ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அவற்றை யுத்த நிறுத்தத்துக்காக கட்டாயப் படுத்தினார். ஷரோனுடைய அரசாங்கம் இந்த அமைதியை தொடர்சியான இராணுவக் கெடுபிடி ஆத்திரமூட்டல்களால் சீர்குலைத்தது. பின்னர் ஜனவரி 3 ல் இஸ்ரேல் கொமாண்டோக்களால் Karine A எனும் ஈராக்குக்கு சொந்தமான பொருட்களை ஏற்றி செல்லும் ஒரு கப்பலில் பெருமளவில் ஆயுதங்கள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது. இவை இஸ்ரேல் மக்களை தாக்குவதற்காக பயன்படுத்தபடவிருக்கின்றன என இஸ்ரேல் கூறிக்கொண்டது.

இந்த Karine A எனும் போக்கு வரத்து கப்பல் சம்பவத்தில் அரபாத் தனது கடமையை அலட்சியம் செய்து விட்டார் என்பதற்காக மட்டும் புஷ் நிர்வாகம் அவரை நிராகரிக்கவில்லை. அமெரிக்க உளவுத்துறை, அவற்றின் செய்திகளை சவூதி அரேபியாவின் இளவரசனான அப்துல்லா, எகிப்தின் ஜனாதிபதியான முபராக், ஜோர்தானின் மன்னர் அப்துல்லா மிமி போன்றோருக்கும் மற்றும் ஏனைய அராபிய தலைவர்களுக்கும், இவ் ஆயுதங்கள் அனேகமாக ஈரானால் ஹஸ்புல்லாவூடாக அனுப்பப் பட்டிருப்பதாகவும், ஆனால் இவை உண்மையில் பாலஸ்தீன அதிகாரத்துக்காக அனுப்பப்பட்டன என குறிப்பிட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

அரபாத் பொய் சொல்லுகிறார் என தான் நம்புவதாக புஷ் பகிரங்கமாகவே தெரிவித்து, மேலும் அரபாத் அசட்டையாகவும் உள்ளார் என குற்றம் சாட்டி தெரிவித்தாவது, ''ஆயுதங்களை வேண்டுவதற்காக விண்ணப்பித்து பின்னர் அவற்றை கப்பலுக்கு தருவித்திருப்பது என்பது, இது உலகத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு அல்ல மாறாக பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிப்பதற்காகவாகும்''. புஷ் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர்களுக்கான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார், அதில் அவர் பாலஸ்தீன அதிகாரத்துக்கு எதிராகவும், மற்றும் அரபாத்துடன் இணைந்துள்ள Fatah இயக்கம், அதனது Tanzim எனும் போராளிக் குழு போன்றவற்றை பயங்கரவாத அமைப்புகளாக கணிப்பிட்டு அவற்றிக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஆலோசித்துள்ளார். ஒரு பெயர்குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி, இஸ்ரேயல் பத்திரிகையான Haaretz ல் ''வாஷிங்டனில் உள்ள அதிகமானவர்கள் பாலஸ்தீன தலைவர் அரபாத்துடன் ஏற்பட்ட சச்சரவால் வெளியேறி விடவில்லை, மற்றும் அவருடைய பொய், செயலற்ற தன்மை போன்றவற்றுக்காகவும் போய்விடவில்லை... நிலைமை மோசமாக உள்ளது, இது மேலும் பரவி மிகவும் இக்கட்டான நிலமையை தோற்றுவிக்கும் '' எனத் தெரிவித்துள்ளார்.

உதவிப் பிரதமர் Cheney, Fox News இற்கு கொடுத்த பேட்டியில் அரபாத் ஈரானுடன் சதி முயற்சிகளில் ஈடுபடுகிறார் எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரான் ''பயங்கரவாதத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருப்பதுடன், ஒரு அமைதிக்கான சூழலை முடிவுக்கு கொண்டுவர பிரயத்தனப்படுகிறது'' என்றுள்ளார். Tony Snow எனும் நிருபர் அவரிடம், ''ஈரான் இப்போது பாலஸ்தீன அதிகாரத்துடன் இணைந்து ஒரு குழிபறிப்பு வேலையில் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் பயப்படுகிறீர்களா?'' எனக் கேட்டதிற்கு, அவர் ''ஆம்'' என பதிலளித்துள்ளார். மேலும் அரபாத் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரா எனும் கேள்விக்கு, ''அவர் உண்மையில் கடந்த காலங்களில் ஒரு பயங்கரவாதியாகவே இருந்துள்ளார், அது அமெரிக்க அரசாங்கத்தாலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது, இது மேலும் ஒரு உண்மை'' எனவும் பதிலளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதிகாப்பாளராக செயல்படும் அமெரிக்காவைச் சேர்ந்த Anthony Zinni என்பவர் அமெரிக்காவில் உள்ள யூதத் தலைவர்களுக்கு அனைத்து நிலமைகளையும் மூடிமறைக்கு முகமாக குறிப்பிட்டதாவது, பாலஸ்தீன அதிகாரம் நியூயோர்க் நகரத்தில் உள்ள Gambini மாபியா குடும்பத்துடன் ஒப்பிடலாமெனவும், அரபாத்தை அதனது தலைவர் போன்று இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். Anthony Zinni மேலும் குறிப்பிடுகையில், பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு மறுபடியும் திரும்பி வருவதற்கான அவர்களுடைய உரிமையை தான் முற்றாக எதிர்ப்பதாகவும், ஏனெனில் இந் நடவடிக்கையானது இஸ்ரேல் அரசை அழித்துவிடும் எனவும், அத்துடன் பாலஸ்தீனர்களின் பகுதிகளுக்குள் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப் பகிரங்கமான அறிக்கை இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு இராஜதந்திரியை, ''இவை அனைத்தும், (புஷ்) நிர்வாகம், இஸ்ரேல் எவ்வாறு அரபாத்தை கணிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றது போலிருக்கின்றது. இப்போது உள்ள கேள்வி யாதெனில், இது எவ்வாறு அரசியலை பாதிக்கப்போகின்றது?'' கேட்கவைத்துள்ளது.

அமெரிக்க - அராபிய உறவுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

வாஷிங்டன் அனேகமாக ஒரு மூலோபாய தாக்குதலின் அடிப்படையில் மத்திய கிழக்கை அப்படியே அமெரிக்காவின் ஒரு இராணுவ திடலாக மாற்றிக் கொள்ளும் நோக்கையும், இஸ்ரேலின் முன்னைய கட்டுப்பாடுகளை இதனூடு துடைத்துக் கட்டுவதையும் செயல்படுத்த முனைந்து கொண்டுள்ளது. அரபாத்துக்கு அனுப்பப்பட்ட செய்தியானது எதுவிதமான மாற்றீடும் அற்றது. இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து எதிராளிகளும் மற்றும் அவர்களுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான அரசியல் தீவரவாதிகளும் ஒன்றில் மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கப்படவேண்டும் அல்லது துப்பாக்கி கொலையாளியின் குண்டுகளை எதிர்நோக்க தயாராகவேண்டும் என்பதாகும்.

அராபிய கூட்டு தொடர்பான அமெரிக்காவினுடைய நிலைப்பாடும் பயமுறுத்துவதை தவிர வேறொன்றுமில்லை.

மத்திய கிழக்கு அரசாங்கங்கள் அவற்றுள் சவுதி அரேபியா மிகவும் ஒரு கேவலமான, அடிமைத்தனமான ஏகாதிபத்திய சார்பு அரசாங்கமாகும். இக்காரணத்துக்காகவே அதனுடைய முன்னணிப் பேச்சாளர் ஒருவர் இஸ்ரேலுக்கான புஷ்சின் ஆதரவுக்கும் அதேபோன்று ஈராக் மற்றும் ஈரானுக்கு எதிரான அவருடைய அச்சுறுத்தலையும், இவை இப் பிராந்தியத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டுமானங்களுக்கான ஒரு வெடிப்பை அச்சுறுத்திக் கொண்டுள்ளது எனக் கூற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் உளவுத் துறையின் அதிகாரியான இளவரசன் Prince Nawwaf bin Abdul Aziz அரபாத்தை பலவீனப்படுத்த அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு முயற்சிகளும் அமைதிக்கான ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலமைகளையும் அழிப்பதுடன், மன்னர் ஆட்சி முறையையும் பலமாக ஆட்டம் காணவைக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் அமெரிக்காவை எச்சரிக்கையில், சவுதி அரேபியாவின் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏற்கனவே ஒசாமா பின் லாடனுக்கு தமது கணிசமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றனர், இதை அவர்கள் அவருடைய பயங்கரவாத நடவடிக்கைக்காக அன்றி மாறாக, அமெரிக்கா பெருமளவில் இஸ்ரேலுக்கு வழங்கும் கண்மூடித்தனமான ஆதரவுக்கு பதிலாக செய்கின்றனர். ''இப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களும், அனைத்து மக்களும், அதாவது அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவது சரியோ அல்லது பிழையோ, இச் சமயத்தில் அரபாத்துக்கு ஏதாவது நடந்தால் அமெரிக்காவின் அரசியலுக்கு எதிரான உணர்வுகள் மேலும் அதிகரிக்கும் என கருதுகின்றனர்.'' என அவர் தெரிவித்தார். எனவே ''அமெரிக்காவின் நலன்களை இப் பகுதியில் எவரேனும் இடையூறு செய்வதற்கான வாய்ப்புக்களே உள்ளன. சவுதி அரேபியா மிகவும் ஒரு சங்டமான நிலையில் உள்ளது, ஏனெனில் அங்கு மத்திய கிழக்கு பிரச்சனை தொடர்பான உணர்வு மிகவும் அதிகமாக உள்ளது.''

Prince Nawwaf bin Abdul Aziz ஈராக்குக்கு எதிரான இராணுவப் பிரச்சாரத்துக்கு எதிராகவும் எச்சரிக்கை செய்தார், அவருடைய கருத்தின்படி, '' இந் நடவடிக்கை சதாம் ஹுசைனுக்கு மேலும் நன்மையாகவே அமையும். ''ஹுசைன் சில சமயம் தூக்கியெறியப்பட்டாலும் மேலும் ''இதனூடு ஈராக் மூன்று பிரிவுகளாக பிளவுண்டு போகும் ஒரு வெற்றியை மட்டுமே அமெரிக்காவால் நிறைவேற்ற முடியும். Shiite இஸ்லாமியர்களைக் கொண்ட அரசாங்கம் தெற்கில் ஆட்சி செய்யும், குர்திஸ்தானியர்களைக் கொண்ட அரசாங்கம் வடக்கில் ஆட்சி செய்யும், மற்றும் Sunni இஸ்லாமியர்களைக் கொண்ட அரசு மத்தியில் ஆட்சி செய்யும். இவை இப் பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற போக்கையே துரிதப்படுத்தும்'' என குறிப்பிட்டார்.

அவர் முடிவாக, ''நீங்கள் ஒரு சமயம் ஈராக்குக்கு எதிராக தாக்குதல் செய்யப் போவதாக கூறினீர்கள், ஒரு சமயம் சோமாலியாவக்கு எதிராக, மற்றுமொரு சமயம் லெபனான், மற்றுமொரு சமயம் சிரியா. நீங்கள் யாருக்கு எதிராக தாக்குதல் செய்யப் போகிறீர்கள்? அனைத்து அராபிய உலகத்திற்கும் எதிராகவா? இது சரிவாராது, இது சரிவாரது.'' என சில ஐயுறவாதக் கருத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் அவர், சவுதி அரேபியா அதனது, Prince Sultan விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் பெரிய இராணுவத்தின் இருப்பை நீக்கிவிடப் போகிறது எனும் செய்தியை மறுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

சவூதி அராபிய தலைவரான இளவரசர் அப்துல்லா, Washington Post பத்திரிகைக்கு வழங்கிய அவரது நீண்ட பேட்டியில் அமெரிக்கா, ஷாரோனுக்கு கொடுக்கும் ஆதரவால் ஏற்படப் போகும் ஆபத்தையிட்டு எச்சரிக்கை செய்திருந்தார். அவர் அமெரிக்காவின் ஒரு உண்மையான நண்பனாக இருந்து பேசுவதாக குறிப்பிட்டார், ஆனால் ''தற்போதைய சூழலில், அமெரிக்காவை பாதுகாப்பது என்பது மிகவும் ஒரு நெருக்கடி வாய்ந்தது, நாம் எமது அமைதியை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஏனெனில், நான் உங்களுடன் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன், நாம் எவ்வாறு அமெரிக்காவை பாதுகாப்பது?'' என கேட்டார்.

சவுதியின் அரச தலைமுறையின் அரசியல் நெருக்கடிக்கு காரணமான புஷ் நிர்வாகத்துக்கு அவரது நட்பான எச்சரிக்கை என்பது உண்மையில் ஒரு பகிரங்கமான பகைமையாகும். வெள்ளை மாளிகையின் பேச்சாளரான Ari Fleischer இது பற்றித் தெரிவிக்கையில், அப்துல்லாவின் கருத்து அரசியல் கொள்கைகளின் அடிப்படைக்கே முரண்பாடாக விளங்குவதுடன், ''அரபாத்துக்கு ஏனைய நாடுகளின் சாதகமான செய்திகளை அனுப்பிக் கொள்வதால் அவர் பயங்கரவாதத்துக்கு எதிராக மேலும் போராடுவார் என இத் தலைவர் கருதுகிறார்'' என குறிப்பிட்டார்.

பெப்ரவரி 1ல் புஷ், ஜோர்டான் மன்னரான அப்துல்லா மிமி ஐ சந்தித்தார், அதேசமயம் எகிப்த்து, சவூதி அரேபியா மற்றும் ஏனைய அரசாங்கங்களின் விடயங்கங்களைப் பற்றியும் கதைப்பதற்காக அவருடைய Oval அலுவலகத்தில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில் ஒரு 90 நிமிடங்களை அதற்காகவும் செலவிட்டார். அரபாத்துடன் தொடர்புகளை துண்டிக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு கிடையாது, ஆனால் அதேசமயம் பாலஸ்தீன தலைவர் பயங்கரவாதத்தை அணுகுவதற்கு ஒரு ''திட்டவட்டமான நடவடிக்கையை '' எடுக்கவேண்டும் என கூறினார்.

அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையேயான பதட்டம் அதிகரிக்கின்றது

அராபிய ஆட்சியாளர்களை சாத்தியமல்லாத அரசியல் நிலைமையில் இருத்திவிட்டு, புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஐரோப்பிய சக்திகளிடம் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. ஐரோப்பா மத்திய கிழக்கின் ஸ்திரப்பாட்டில் முக்கிய மூலோபாய நலன்களை கொண்டுள்ளது. அமெரிக்கா எண்ணை விநியோகத்திற்கு தங்கியிருப்பதுபோலல்லாது ஐரோப்பா அங்கே ஒரு பாரிய அளவிலான முதலீட்டை செய்துள்ளது.

மத்திய கிழக்கின் அரசியல் கொள்கைகள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டு வாஷிங்டனில் இருந்து விலகி நிற்பதற்காக மிகவும் ஒரு உயர்ந்தளவிலான, மற்றும் நம்பமுடியாத போக்கை பகிரங்கமாகவே கடைப் பிடிக்கிறது. ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சர்கள் ஜனவரி 28 ல் புரூசலில் இடம் பெற்ற கூட்டத்தில் ''இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்தின் அதிகாரமும், (Palestinian Authority) தெரிவு செய்யப்பட்ட அதற்கான தலைவரும் தேவை. யசீர் அரபாத் இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளப்படும் ஒருவராவார். இவை இரண்டும் பயங்கரவாதத்தை அழித்து அமைதியை பேணுவதற்காக ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் அவர்களின் தன்மை எவ்விதத்திலும் பலவீனப்படுத்தப் படமுடியாது'' என தெரிவித்தார்.

ஐரோப்பியக் கூட்டின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு செயலாளர் Javier Solana ஜனவரி 30 ல் உறவை முறித்துக் கொள்ளும் விதத்தில் அரபாத்தையும், பாலஸ்தீன அதிகாரத்தையும் அணுக வேண்டாம் என கொலின் பெளலிற்கு தான் அறிவுரை வழங்கியதாக பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். ஐரோப்பிய கூட்டு, பாலஸ்தீன அதிகாரத்துவம் தொடர்ந்தும் ஒரு ''பேச்சுவார்த்தை கூட்டாளி ஆக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒரேயொரு பேச்சுவார்த்தை கூட்டாளியை நாம் பராமரிக்க வேண்டும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

சுவீடனின் வெளிநாட்டு அமைச்சர் Anna Lindh, பாலஸ்தீனர்களின் இன்ரிபாடாவுக்கு எதிரான வன்முறையை முன்னெடுக்கும் ஷரோன் அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து பாதுகாக்கும் அமெரிக்காவை பகிரங்கமாகவே விமர்சித்தார்.

அமெரிக்காவின் கொள்கை தொடர்பான சர்வதேச கவனம் பெப்ரவரி 3 ல் Manhattan இல் இடம் பெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்திலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.

ஜோர்டான் நாட்டின் மன்னரான அப்துல்லா மிமி ஒருமுறை பகிரங்கமாக குறிப்பிடுகையில், ''மத்திய கிழக்கின் முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ளதும், மேலும் உலகம் பூராகவும் தீவீரவாதத்தை பரப்புகின்றதுமான இந்த மத்தியமான பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்குவதே எம்முடைய குறிக்கோளாக இருக்கும், இருந்து கொண்டும் உள்ளது.'' என்றுள்ளார்.

துருக்கியின் வெளிநாட்டு அமைச்சரான Ismail Cem இந்த அபிவிருத்தியை, இது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடைபெறும் ஓர் ''புரிந்துணர்வான தற்கொலை போக்காக உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் ''இதை மிகவும் உணர்வுடனும், மேலும் உடனடியாகவும் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜாவியர் சோலானா தெரிவித்தார். பிரான்சின் வெளிநாட்டு அமைச்சரான Hubert Védrine அவர்களுக்கும் எதிரிகளான பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது நாம் பாலஸ்தீன அதிகாரத்தின் பொறுப்பு என கூறினால், அவர்களுக்கும் ஒரு அரசியல் ரீதியான வெற்றிடம், அரசியல் எனும் மூச்சு, மேலும் ஒரு அரசியல் முன்னோக்கு போன்றவை கொடுக்கப்படல் வேண்டும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரையில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை நாம் தொடரப் போவதில்லை என்று நீங்கள் கூறினால், வெற்றியாளர்களாக வெளியேறப் போவது பயங்கரவாதிகளே'' என்றார்.