World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

Scotland report exposes child poverty

ஸ்கொட்லாந்தின் அறிக்கை குழந்தை வறுமை பற்றி அம்பலப்படுத்துகிறது
By Niall Green
8 February 2002

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற மாதம் தேசிய குழந்தைகள் இல்ல அறநிலைய இல்லத்தின் (National Children's Home charity) ஸ்கொட்லாந்து பிரிவானது, ஒரு தொடர் அறிக்கையின் முதல் அறிக்கையை வெளியிட்டது. அது அங்குள்ள இல்லாமையையும், வறுமையையும் எடுத்துக்காட்டுகின்றது.

உத்தியோகபூர்வ ரீதியான புள்ளிவிபரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஸ்கொட்லாந்து உண்மை விவரத் தொகுப்பு, சமூக சமத்துவமின்மையையும் பத்தாயிர கணக்கிலான இளைஞர்கள் மீதான அதன் பாதிப்பையும் படம் வரைந்து காட்டுகின்றது. 1990ன் நடுப்பகுதியில் நிலவிய பொருளாதாரப் பூரிப்பின் முடிவில் சமூகப்பிளவுகள் இன்னும் கூட கடுமையாகின. முன்னெப்பொழுதையும்விட அதிக கோடீசுவரர்களை பிரிட்டன் பெற்றிருக்கும் அதேவேளை, செல்வத்தின் சமூகரீதியான மறுபங்கீடின் மட்டம் போருக்குப் பிந்தைய குறைந்த நிலை அடைந்தது.

முறைப்படி உரிமை கொண்ட ஸ்காட்லாந்து செயலாற்றக் குழுவால் இணைந்து நிதிவழங்கப்பட்ட, அறிக்கை ஸ்கொட்லாந்தில் 16 வயதிற்குட்பட்ட 310,000 சிறார்கள் அதாவது உத்தியோக ரீதியாக வரையறுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களில் (சராசரி வருவாயில் பாதியைவிடக் குறைவாக வாங்குபவர்கள்) உள்ளனர் என்று கண்டறிந்து கூறியது. இது 25 சத விகித குழந்தைகள் மத்திய அரசின் நிதி உதவியை நம்பியிருக்கும் குடும்பங்களில் வாழ்கின்றனர் என்று அர்த்தப்படுத்துகின்றது.

ஏழைகளாகப் பிறந்தோரில் பெரும்பாலோர் வறுமையில் வாடுபவர்களாகவும் நோயாளிகளாகவும், போதை மருந்து மற்றும் மது அருந்துதல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களாகவும் அவர்கள் வாழ்நாள் முழுதும் துன்புறுகின்றனர்.

மேலும் கூடுதலாக, வறுமைச் சூழலில் உள்ள இளைஞர்கள் சாலைப் போக்குவரத்து விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களின் தேசிய சராசரியினைவிட 3 மடங்கு அதிகமாகக் காயப்பட்டிருக்கின்றனர். மற்றும் காவல்துறையினரால் பெரும்பாலும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இளைஞர்களில் சில 10,000 பேர்கள் குறைந்தது அவர்களது பெற்றோர்களில் ஒருவராவது, சிறையில் இருந்திருப்பவராக இருக்கின்றனர்.

கல்வி பெறுவதிலும் வறுமை பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலோர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் விடுபவர்களாகவும் குறைந்த அளவினரே பல்கலைக்கழக படிப்புக்கு செல்லக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

ஸ்கொட்லாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான கிளாஸ்கோ வறுமையில் உயர்ந்த மட்டத்தில் நிற்கிறது. சுமார் 42 சதவிகித்தினர் அதாவது 16 வயதிற்குள் உள்ள குழந்தைகள் நிதி உதவி பெறும் குடும்பங்களில் வாழ்கின்றனர். கிளாஸ்கோ நகரத்தின் புறநகர்ப்பகுதியான ரென்ஃப்ரூவ்ஷயர் நகரத்திலிருந்து மேற்படிப்பிற்குச் செல்லும் 50 சதவிகித மாணவர்களை ஒப்பிடும்பொழுது கிளாஸ்கோவின் அரசு பள்ளிகளிலிருந்து, 17 சதவிகிதத்தினர் மேற்படிப்பிற்குச் செல்கின்றனர். கிளாஸ்கோ நகரத்திலுள்ளேயே சத்துக் குறைந்த உணவு உட்கொள்ளும் மற்றும் நடக்கும் தூரத்திலுள்ள குடிசை வாழ் பகுதிகளுக்கு மத்தியில் மேட்டுக்குடி மக்களின் கெளரவமான அடுக்ககங்களின் புதிய அபிவிருத்திகள் உள்ளன. இவ் வர்த்தகர்கள் வாழும் நகரப்பகுதி கால் முதல் அரை மிலியன் பவுண்ட்ஸ்களில் ஆடம்பர வாழ்க்கையை வழங்குகிறது.

நகரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளி இலவச உணவு பெறத் தகுதியுள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் அநேகர் இந்த ஒரு வேளை சூடான அல்லது சத்துள்ளது என்று சொல்லப்படும் உணவை உட்கொள்பவர்கள் ஆவர். கிளாஸ்கோவில் உள்ள யோர்க்ஹில் குழந்தை நோயாளி மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 சதவிகிதத்தினர் போதிய போஷாக்கு இல்லாத உணவு உண்பவர்களாகக் காட்டுவது மிகவும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரமாகும்.

தொழிற்கட்சி தலைமையிலுள்ள ஸ்கொட்லாந்தின் நிறைவேற்றுக்குழு, இதை நல்ல ஆரம்பமாக வரவேற்கின்றது. அது இதனை அவர்களுடைய "சமூக வேறுபாட்டு பணியை" கையாளுவதற்கு அனுமதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி எனக் கருதுகின்றனர். ஆனால் இந்தப் பகட்டு ஆரவார அக்கறை ஸ்கொட்லாந்திலும் வெஸ்ட்மினிஸ்ட்டரிலும் தொழிற்கட்சி தொடர்பான ஆவணங்கள் கூறும் விவரங்களுடன் முரண்படுகின்றன.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது, கன்சர்வேடிவ் கட்சி அரசின் கீழ் வேகம் பெற்றது. அதுவே தொழிற் கட்சி அரசின் கீழும் தொடர்ந்தது. இந்த வளர்ச்சி 1979 முதல் 1997 வரை தொடர்ந்தது. இந்த இழப்பின் அளவு இங்கிலாந்து முழுவதும் பிரதிபலித்தது. பிரிட்டனிலுள்ள சுமார் 5 மிலியன் மக்கள் "உணவுப் பற்றாக்குறை" யால் பாதிக்கப்படுகின்றனர், அதாவது தங்கள் உடல் நலத்தை உத்தரவாதம் செய்யக் கூடிய போதுமான அளவு சத்துள்ள உணவை உட்கொள்ள முடியாமல் வாடுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

யூனிசெஃப் (UNICEF-- United Nations International Children's Emergency Fund) நிறுவனத்தால் ஜுன் 2000ல் எடுக்கப்பட்ட ஆய்வுக்குறிப்பின்படி, இங்கிலாந்தில் வறுமையில் வாடும் குழந்தைகளின் நிலைமை மற்றய வளர்ச்சியடைந்த உலகுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமானதாக இருக்கின்றது. யூனிசெஃப் அவர்களின் வறுமை தொடர்பான அட்டவணைப் பட்டியலில் உள்ள 23 நாடுகளில் 20வது இடத்தை இங்கிலாந்திற்குக் கொடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் வறுமையில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றய மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த கால் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினர், நலம்சார் (welfare) செலவுகளில் வெட்டையும் சந்தை தாராளமயமாக்கலையும் மிகக்கடுமையாக அமுல்படுத்தி வந்துள்ளனர். அது மூலதனத் திரட்சி மீதான தடைகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளை நீக்குதலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகளைவிட மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. பிரிட்டன் சமூகதுருவமுனைப்படலை பெரிய அளவில் அனுபவித்துள்ளது. பெரு வர்த்தகர்களின் வருவாயைப் பெருக்குவதற்கான நலனின் பேரில் செல்வத்தை மறுவிநியோகம் செய்வது வெட்டப்பட்டு வருகிறது. அது பல மில்லியன் மக்களுக்கு, சிறப்பாக சமூகத்தில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களுக்கு அழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது.