World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : சீனா

Human Carnage Continues in the Chinese Coal Industry

சீன நிலக்கரி தொழிலில் மனிதப் படுகொலை தொடர்கிறது

By John Chan
02 February 2002

Use this version to print | Send this link by email | Email the author

சீனாவுடைய தாராள சுதந்திர சந்தைக் கொள்கைகள் அந்நாட்டின் மாபெரும் நிலக்கரி தொழிலில் பயங்கரமான மரண விபத்துக்களையும் அராஜகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சென்ற ஆண்டு 5,400 சாவுகளும் 2,500 விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. ஜனவரி 2002- இந்த படுகொலையில் எந்த கடுமை தணிவிப்பையும் காணவில்லை.

ஜனவரி 14 அன்று மத்திய ஹீனான் மாகாணத்தில் Zijang குழியில் ஒரு வெடி விபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியானார்கள். அன்றே யுனான் மாகாணத்தில் ஒரு தனியார், லைசென்ஸ் இல்லாத சுரங்கத்தில் நிலவாயு வெடி விபத்தில் 25 பேர் மாண்டு போயினர். மத்திய சீனாவில் ஹேப்பே மாகாணத்தில் செங்டே மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இரண்டு நில எரிவாயு விபத்தில் பத்து நாட்களுக்கு பிறகு 27 சுரங்கத் தொழிலாளிகள் 36 மணி நேரத்துள்ளாக இறந்துவிட்டனர். ஆதாரபூர்வமான க்சின்குவா செய்தி அறிக்கையின்படி ஜனவரி 26 காலையில் பூமிக்கடியில் பணிபுரிந்து கொண்டிருந்த 19 சுரங்கத் தொழிலாளர்கள் பலியானார்கள். ஜனவரி 27 மதியம் காணாமற்போன தொழிலாளியை தேடச் சென்ற எட்டு பேர் இரண்டாம் வெடி விபத்தில் பலியானார்கள், பன்னிரண்டு பேர் காயமடைந்தனர்.

மாகாண ஆளுநர்கள் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு மீட்பு பணிகளுக்குத் தலைமை தாங்கினர். பெய்ஜிங் மாகாண அதிகாரிகளின் லஞ்ச ஊழலே விபத்துக்களுக்கு காரணம் என்று குறை கூறப்பட்டது. அது சென்ற ஆண்டு அறிவித்த தொடரான பாதுகாப்பு விதிகளை கண்டு கொள்ளாது இருக்குமாறு உள்நாட்டு அதிகாரிகளுக்கு சுரங்க முதலாளிகள் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதாக வாக்களித்தது.

இருப்பினும், மேற்கூறப்பட்ட பல விபத்துகளுக்கு உண்மையான காரணங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நிலக்கரி தொழில் முற்றிலும் பரந்த அளவில் மறு சீரமைக்கப்பட்டுள்ளதில் இருக்கின்றன. 1979-ல் சீனா நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடப்பட்டது. அன்று முதல் சைனா துரிதமாக தொழில் மயமாக்கப்பட்ட நாடாக உருவாயிற்று. உலகத்திலேயே அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்வதும் நுகர்வதுமாக முன்னோடியாக சீனா விளங்குகிறது. 1990 களில் சீன அரசு, பெரிய அரசுக்கு சொந்தமான, நஷ்டத்தில் இயங்கும், திறன் குறைவாக உள்ள சுரங்கங்களை விற்றுவிடவோ, மூடவோ செய்தது. சக்திக்காக வளர்ந்து வரும் தேவையானது முதலாளிகளை குழிகளைத் தோண்டவும் பணமாக்கிக் கொள்ளவும் தூண்டியது. சீனாவில் இந்த புதிய சுரங்கங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படவில்லை. விவசாயம் லாபகரமாக இல்லை. ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளிகள் சுரங்க வேலைக்கு சேர்ந்தனர். திவாலாகிவிட்ட அரசின் சுரங்கங்களிலிருந்து 20 லட்சம் சுரங்கத் தொழிலாளிகள் வேலையிழந்தனர். நிலக்கரி உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டது, விலைகள் சரிந்தன.

தேவைக்கு அதிகமாக 200 மில்லியன் தொன்கள் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது. 1999-ல் 1.03 பில்லியன் தொன் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது. 2000-ல் 80,000 சுரங்கங்களில் வேலை நடந்து வந்ததாக நம்பப்படுகிறது. கடந்த காலத்து ஒப்பீட்டளவில் ஒழுங்கு படுத்தப்பட்ட பெரிய அளவிலான சுரங்கங்கள் அரசு மயமாக்கப்பட்டவை போல் அல்லாமல், பெரும்பான்மையானவை தனியார் உடைமையாகவும் சிறிய சுரங்கங்களாகவும் உள்ளன. ஒழுங்கு முறை மற்றும் பாதுகாப்பு விதிகள் அமலாக்கப்படவில்லை. இதன் காரணமாக நிலக்கரி குழிகளில் பல விபத்துகளும் மரணங்களும் நேர்ந்தன.

அதிகப்படியான உற்பத்தி பெரிய சுரங்க கம்பெனிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதிகப்படியான உற்பத்தியை குறைக்க, லாபத்தை அதிகரிக்க, மைய அரசு நிலக்கரித் தொழிலை சீரமைத்தது. அரசு மூன்று ஆண்டுகளில் 58,000 சுரங்கங்களை பாதுகாப்பு விதிமுறைகளை காரணம் காட்டி மூடிவிட்டது.

இந்த அரசின் நடவடிக்கை காரணமாக ஒரு சட்டத்தை மீறிய பாதுகாப்பற்ற சுரங்கங்கள் வேகமாக பெருகுவது இருந்து வருகிறது. சீனா தனது எரி சக்தி தேவைகளில் 70% நிலக்கரியை நம்பியுள்ளது. உற்பத்தி குறைப்பு இரண்டு ஆண்டுகளாக பற்றாக்குறையை ஏற்படுத்தி, விலைவாசி அதிகமாக காரணமாய் உள்ளது. சுரங்கப் பகுதிகளில் முதலிலேயே உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தேவை அதிகம் இருக்கும் குளிர்காலத்தில், ஆயிரக்கணக்கான சிறு சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இச்சமயத்தில் உயரும் விலைவாசியில் இலாபம் ஈட்டுவதற்கு தொடர்ந்து பல சுரங்கங்கள் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தலசுய ஆட்சிக்கு கைவசம் பணம் இல்லை. பல சுரங்கங்களில் பணி நடைபெறுவதால் வரி மூலமாகவும், லஞ்சம் மூலமாகவும் அதிகமாக தேவைப்படும் வருமானம் கிடைக்கிறது. மைய அரசு மாகாணங்களுக்கு நிதி உதவி அளிப்பதில்லை. எனவே தலசுய நிர்வாகமே கல்வி சாலை, மற்றும் கட்டுமானப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஷாங்க்சி மாகாணத்தில் போடி சுரங்கம், சென்ற நவம்பர் 15 ஒரு எரிவாயு வெடிப்பால் தகர்ந்துவிட்டது. ஜனவரி 23ந் தேதியன்று Los Angeles Times இந்த விபத்திலிருந்து மீண்டவர்களுடன் எடுத்த நேர்முக பேட்டியை பிரசுரித்தது. பாதுகாப்பு விதிமுறைப்படி மூடப்பட்ட இந்த சுரங்கம் சட்ட விரோதமாக மீண்டும் 2001-ல் திறக்கப்பட்டது. இது 24 மணி நேரமும் மூன்று ஷிப்டாக இயங்கியது. விஷ வாயு வெளிச்செல்ல புகை போக்கி வசதியில்லை. அதனால் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 33 பேர் இறந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.

33 வயதான Liziqi என்ற தொழிலாளி முன்பு அரசு மயமாக்கப்பட்ட சுரங்கங்களில் பணி புரிந்தவர். லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு தனியார் வசமுள்ள சுரங்கங்களைப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார். "இப்போது நாங்கள் 1950-ஆம் வருடத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். இது நாம் பின்னோக்கிப் போவதைப் போன்றது. பத்து புகை போக்கிகள் இருப்பதாகச் சொன்னால், ஐந்து மட்டுமே இருந்தால் அதிர்ஷ்டம்தான்." Liyansheng முன்னாள் நிலக்கரி சுரங்க அதிகாரி முன்னாலைய நிலைமையும் இப்போதைய நிலைமை பற்றியும் இவ்வாறு கூறுகிறார். `"சொர்க்கமும் பூமியும் போல் வேறுபாடு உள்ளது. 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலிற்கும், இரயில்வே நிலையத்தில் உள்ள உணவு விடுதிக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிக் கொள்ளுங்கள்."

சட்டபூர்வமாக செயல்படும் தனியார் சுரங்கங்கள் கூட பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதில்லை. மைய அரசு சுரங்கத் தொழில் குறைக்க முயலுவதால், உள்நாட்டு அதிகாரிகள் தனியாருக்கு ஒரு குறுகிய கால ஒப்பந்தமே அளிக்கிறார்கள். சீனத் தொழிலாளர் புல்லட்டின் பிப்ரவரி5 அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: "சுரங்க முதலாளிகள் தாங்கள் அதிக நாள் லைசன்ஸை வைத்திருக்க முடியாது. ஆகவே அவர்கள் குறைந்த காலத்தில் நிறைய லாபம் சம்பாதிக்க முயல்கின்றார்கள். பாதுகாப்பு விதிமுறைகளில் முதலீடு செய்வதில்லை." சிறிய தனியார் சுரங்கங்கள், சீனாவில் மிகப்பெரிய நிலக்கரி மாகாணமான Shanxi-ல் 60% நிலக்கரி தயாரிக்கின்றன. இவற்றில் 30% விபத்து நிகழக்கூடியவை ஆகும்.

சுரங்கங்கள் பழைய மாதிரியாக, சரியாக கட்டப்படவில்லை. இது மட்டுமல்லாமல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான சம்பளமும் வேலை நேரமும் சீரழிந்துள்ளது. முன்பெல்லாம் புதிய தொழிலாளிகள் மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட்டனர். இப்போது தனியார் சுரங்கங்களில் தொழிலாளிகள் உடனடியாக வேலை தொடங்குகிறார்கள். பீஸ்ரேட் முறையில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள், அவர்களது குழு எவ்வளவு நிலக்கரியைத் தோண்டி எடுக்கிறது என்பதைப் பொறுத்தே சம்பளம் கொடுக்கப்படுகிறது. 1000 யுவான்கள் ($US 120) மாதச் சம்பளம் அதிகமாக கருதப்படுகிறது.

கிராமப்புற மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி குறைந்த ஊதியம் பெறுவதற்கு காரணமாகும். அதிக வரிபளு சுமையால் அவதிப்படும் ஏழ்மைமிக்க விவசாய குடும்பங்கள் உள்நாட்டு தொழில்களிலேயே வேலை தேடுகின்றனர். Shanxi-ல் 15% விவசாய குடும்பங்கள் சுரங்கத் தொழிலை நம்பியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தினால் முதலாளிகள் சுரங்க சட்ட திட்டங்களை மாற்றியமைக்கின்றனர்.

தொழிலாளிகளுக்கு வேறு வழியில்லை. சுரங்க பிரதேசங்களில் வேறு வேலையே கிடைக்காது. Liziqi-ஐ பேட்டி கண்டபோது அவர் வேறொரு சுரங்கத்தில் வேலை ஆரம்பித்துவிட்டார். "என் குடும்பத்திற்கு பணம் தேவை, எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியாது" என்கிறார்.

ஆட்சியாளர்களின் தொழிற் கொள்கை சுரங்கத் தொழிலாளிகளுக்கு பிடிக்கவில்லை. தனியார் மயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்புக் கொள்கை போன்றவை அவர்களுடைய தொழிலை பாதித்துள்ளது. தனியார் சுரங்க முதலாளிகளுக்கு மனித உயிரைவிட ஒரு தொன் நிலக்கரிதான் மதிப்பு (பெறுமதி) மிக்கது. அவர்களின் துயர் தொழிற்துறைத் தொழிலாளர் அடுக்கின் மொத்தப் பகுதியினரின் நிலையைப் பிரதிபலிக்கிறது. சுதந்திர சந்தையின் கீழ் அவர்கள் மோசமான நிலைமையை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் அல்லது வேலை கிடைப்பது என்பது அதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது.

லொஸ் ஏஞ்சலஸ் டைம்சிடம் ஒரு ஓய்வு பெற்ற சுரங்கத் தொழிலாளி பின்வருமாறு கூறினார்: "டெங்க் சியாவோ பிங் (மூன்னாள் சீனத் தலைவர்) முதலில் சிலர் பணக்காரராகட்டும்" என்றார். சட்டத்தை மீறி சிலர் பணக்காராகிவிட்டனர். சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனித உரிமைகள் இல்லை. உயிரோடு வாழ்வதற்கு கூட எங்களுக்கு உரிமையில்லை`` என கூறினார்.