World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: மருத்துவம் & சுகாதாரம்

US National Institute of Health announces new guidelines for embryo stem cell research

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (NIH) பரம்பரைக் கல ஆய்விற்கான புதிய நெறிமுறைகளை அறிவிக்கின்றது.

By Frank Gaglioti
4 September 2000

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத்தளத்தில் 4 September 2000 வெளிவந்த கட்டுரையை கீழே காணலாம். இதன் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகள் ஏற்கனவே உலக சோசலிச வலைத்தளத்தின் தமிழ் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23 அன்று NIH (National Institute of Health) ஆனது அமெரிக்காவில் கருப்பரம்பரைக் கல ஆய்வுப் பொதுநிதி தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டது. இது இதனுடைய முன்னைய நிலைப்பாட்டிற்கு நேர்மாறானதாகும். இதற்கு முன்பாக கருப்பரம்பரைக் கல ஆய்விற்கான பொதுநிதி தனியார் வளம் மூலமே அளித்து வரப்பட்டது. NIH இன் இந்த அறிவிப்பானது 1996 இல் அமுலில் இருந்து வந்த ஆய்விற்கான தடையை நீக்கி விட்டது. ஜனாதிபதி பில் கிளின்டன் இந்த அறிவிப்பை ''மிகுந்த பயனுடையதாக இருக்கும் '' என வரவேற்றுக் கூறினார்.

இந்த புதிய நெறிமுறைகள் முன்னுக்குப் பின் முரண்பாடான தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் இந்த நெறிமுறைகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விளைபயன்கள், அமெரிக்க இரசாயன தொழில்நுட்ப தொழிற்துறையால் சுரண்டப்படுவது அமெரிக்க அரசின் ஒரு நோக்கமாக அமைந்திருக்கிறது. அதேவேளை பெரும் கூச்சலிட்டு கருப்பரம்பரைக் கல ஆய்வை, கரு அழிப்புக்களாகக் கருதி எதிர்க்கும் மதம் மற்றும் கரு அழிப்பு எதிர்ப்புக் குழுக்களை திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது இருக்கின்றது.

விஞ்ஞான சமூகத்தாலும் மற்றும் நோயாளர் உரிமைக் குழுக்களாலும் இந்தப் புதிய நெறிமுறைகள் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன. ஆனால் மதவாதிகளுக்கு மிகத் தெளிவாக வழங்கப்பட்ட விட்டுக்கொடுத்தல் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர். லொஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ தொழில்நுட்ப மற்றும் சமூகத்திட்டமிடல் இயக்குனரான கிறிஹொறி ஸ்டொக், ''இது ஒரு அரசியல் அறிக்கை என்றும் விசேடமாக ஆர்வம் காட்டும் குழுக்களிடம், பெரியளவில் நீதி நெறியான மற்றும் ஒழுக்க நெறி தொடர்பான விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதுடன், சிறியளவில் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ள ஆய்வு நடைமுறைகளைப்பற்றி ஒரு நுட்பமான முடிவை எடுக்க நீங்கள் அனுமதிக்கும் போது இது ஒரு மிகச் சிக்கலுக்குரிய போக்காக இருக்கும் '' என்று கருத்துத் தெரிவித்தார்.

இப்புதிய நெறிமுறைகள் ஆராய்ச்சியாளர்களை உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருக்களில் இருந்து மட்டுமே கலங்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும் என கட்டுப்படுத்துகின்றது. அவைகள் எந்த விதத்திலும் கைவிடப்படக் கூடியவையாகும். அத்தகையதாக இருக்கின்ற கருக்கள் ஆய்வு கூட பரிசோதனைக் குழாயிலும் கருக்கொள்ளச் செய்யக் கூடியதாக இருக்கின்றன. உண்மையில் பரம்பரைக் கலங்களின் உருவாக்கமானது, தனியார் நிதி அளிக்கப்பட்ட விஞ்ஞானிகளால் மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் பொதுநிதி அளிக்கப்பட்ட விஞ்ஞானிகள் கருக்களில் இருந்து நேரடியாகப் பரம்பரைக் கலங்களைப் பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான ஆராய்ச்சியும் முதலில் மனிதப் பரம்பரைக்கல ஆய்வுக்குழுவால் (HPSERG) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு இறுதி வரை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகள் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடு இன்மை எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கட்டான நிலையில் கிளின்டன் நிர்வாகம் இருந்து கொண்டிருக்கின்றது. வெள்ளை மாளிகையின் பரம்பரைக்கல ஆராய்ச்சி நிதியினுடைய அனைத்து வரலாற்று முயற்சியானது, முதலீட்டுத் தரகர்களுடைய தேவைகளுக்கு சேவை செய்வதையே காட்டுகின்றது. மேலும் அதே நேரத்தில் கிறிஸ்தவ உரிமையையும் கத்தோலிக்க சபையினது ஆதரவின் இழப்பையும் தவிர்ப்பதற்காக முயற்சிக்கின்றது. 1994 இல் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஒர் அங்கமான மனிதக் கல ஆராய்ச்சிக் குழுவானது, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கருக்கள் உண்மையாக உருவாக்கப்படாது இருக்கும் நிலையில், கருப்பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு பொதுவாக நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என பரிந்துரைத்தது. கிளின்டன் இந்தப் பரிந்துரையையும் மனிதக் கருக்களுடைய ஆராய்ச்சிக்காக வரி செலுத்துவோர் நிதிப்பயன்பாட்டு வளம் இருந்தும் அதை தடை செய்து நிராகரித்தார். 1995 இலும் 1998 இலும் இத்தடையானது வலுவாக்கப்பட்டது.

1999 ஜனவரியில் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களமானது (Health and Human Services) ஆராய்ச்சி மூலமாக அழிக்கப்படுகின்ற கருக்களில் இருந்து பரம்பரைக்கலங்களின் உருவாக்கல் ஆராய்ச்சிக்கு ஐக்கிய அரசுகள் நிதி அளிக்க முடியுமென்று அறிவித்தது. ''சட்ட ரீதியான வரைவிலக்கணத்தின்படி மனிதக் கரு பரம்பரைக் கலங்கள் ஒரு மனிதக் கருவல்ல'', ஏனெனில் ''கருப்பைக்குள் செலுத்தினால் கூட கலங்கள் ஆனது ஒரு மனிதனுக்குள் வளர்ச்சி அடையச்செய்யும் ஆற்றல் அதற்கு கிடையாது. ஆராய்ச்சியின் விளைவாக அவைகளினுடைய அழிவு ஒரு கருவினுடைய அழிவாக உரிமைப்படுத்த இயலாது''. வேறு வார்த்தைகளில் கூறுவோமானால் ஒரு கருப்பையில் இடப்பட்டு ஆனால் அவைகள் மேலதிக வளர்ச்சி அடையாது இருக்கும் அப்படிப்பட்ட கலங்களின் அழிவு ஒரு கருக்கலைப்பாக கருதப்பட்டிருக்க முடியாது. இந்த வருட ஆரம்பத்தில் இந்த புதிய திட்டங்களுக்கு NIH இன் பொது விசாரணையின் போது அதிக எதிர்ப்புகளைச் சேர்ந்த இந்த சட்டரீதியான ஏய்ப்புத் திட்டமானது பலவகைப்பட்ட மதக்குழுக்களை சினமூட்டி சேவையை மட்டுமே செய்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சச்சரவு தொடர்பான விடயத்தால், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் உதவி ஜனாதிபதியுமான அல்கோரிற்கு எவ்வித தர்மசங்கடமான நிலையும் இல்லாமல் ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்டதைப்போல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்பும் எவ்வித அறிவிப்பும் காலதாமதப்படுத்தும் என புதிய நெறிமுறைகளின் அறிவிப்புக் காலமானது சரியாக வெளிப்படுத்தியிருக்கின்றது. NIH ஆனது ஒரு முன்மொழிவு நெறிமுறையை 1999 டிசம்பரில் உருவாக்கியது. ஆனால் திடீரென ஒரு புதிய ஒழுங்குகளை அறிவிப்பதற்கு சென்றது. ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் கருப்பரம்பரைக்கல ஆராய்ச்சியை அங்கீகரிப்பதற்கு இது இட்டுச்செல்லுகின்றது.

பிரித்தானியாவினுடைய ஆய்வுத்திட்டத்தின் நோக்கமானது அமெரிக்க விதிமுறைகளைவிட, மிகக் குறைந்தளவு வரையறைப்படுத்தப்பட்டதும், மிகக் கூடியளவு பரந்த செயற்திறனைக் கொண்டிருப்பதாகும். ஆகஸ்ட் 16 ல் பிரித்தானியாவின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் லியம் டொனால்ஷனால் கரு பரம்பரைக்கல ஆய்வுக்கான பரிந்துரைகள் முன்கொணரப்பட்டது. அதாவது பிரித்தானிய விஞ்ஞானிகளினால் மனிதக் கலங்களை கொலோன் (clone) முறையில் (ஒரு மனிதக் கருப் பரம்பரைக் கலத்திலிருந்து செயற்கையாக அதே பரம்பரைக் கலத்தினுடைய புதிய நகலை உருவாக்கும் முறையாகும்.) உருவாக்கும் உரிமையை கொடுக்கப்பட வேண்டுமென்பதாகும். ஒரு மனிதக் கரு முட்டையை எடுத்து இன்னொரு கலத்தின் மையக்கருவில் செலுத்துவது இதன் உள்ளடக்கமாகும். அவ்வாறு உருவாக்கப்பட்ட கலமானது பின்னர் சாதாரணமாக கருவுறச் செய்யப்பட்ட முட்டையைப்போல தொழிற்படும். அத்தோடு அது ஒரு தொடக்க நிலையிலுள்ள கருவுக்குள் வளர்ச்சியடைகின்றது. விஞ்ஞானிகள் கொலோன் முறையில் உருவாக்கப்பட்ட கருக்களில் இருந்தே பரம்பரைக் கலங்களை பெறமுடியும். பிளேயர் அரசானது இந்த விதிமுறைகளிலுள்ள நம்பிக்கையை ஒப்புக்கொண்டதுடன், சட்டங்களை எளிதாக்குவதற்காக அவைகளை இவ்வாண்டுக்குள் பிரித்தானியாப் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். நெதர்லாந்தும் பிரான்சும் அவர்களுடைய கரு பரம்பரைக் கலத்தினுடைய பயன்பாட்டு நெறிமுறை அனுமதியை அடுத்த சில மாதங்களுக்குள் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இருந்தபோதும் 1998 ல் முதலாவது ஆரம்ப வளர்ச்சி நிலையில் உள்ள பரம்பரைக் கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பல உயிரியல் தொழல்நுட்ப நிறுவனங்கள் கூடிய இலாபமுடையதான இக்கண்டுபிடிப்புக்களை சுரண்டுவது ஏற்கனவே வெளிவந்துள்ளது. NIH இன் அறிவிப்பு Wall street ஆல் ஆக்கபூர்வமென வரவேற்கப்பட்டிருக்கின்றது. உயிரியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல நிறுவனங்கள், பரம்பரைக்கல ஆராய்ச்சியால் பெரியளவிலான இலாபங்களை உருவாக்குகின்றன. Aastron Bioseiences Inc of Ann Arbor Michigan இனதும் Ine Sunnyvale California இனுடைய பங்குகள் முறையே 71 வீதத்தினாலும் 37 வீதத்தினாலும் விலை அதிகரித்திருக்கின்றது.

இப்புதிய நெறிமுறைகளானது, ஆராய்ச்சி உதவிகளிலிருந்து ஒரு பெரியளவிலான கண்டுபிடிப்புக்களான அதாவது தனியார் தொழிற்துறை தனது இலாபத்தை சுரண்டுவதற்கு ஒரு தேவையான சாத்தியத்தை வழங்குவதாக இருக்கும். அப்படிப்பட்ட தந்திரோபாயமானது மனிதக் கலங்களின் வரைபடத்திலும் பயன்படுத்தப்பட்டது. பொதுநிதி அளிக்கப்பட்ட மனிதக்கலத் திட்டமானது (HGP) ஆனது இருபத்திநாலு மணித்தியாளங்கள் வலைத்தள மூலம் கிடைக்கக் கூடியதாக செய்யப்பட்டுள்ள தரவுகளை தயாரித்து வைத்தமையானது Celera Genomics போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய ஆய்வு வேலைகளை உறுதிப்படுத்துவதற்கு இப்பொதுத் தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் அவர்கள் அவர்களுடைய சொந்த ஆய்வில் நம்பிக்கை வைத்திருப்பதைவிட முழு Genome யும் மிகக் குறுகிய நேரத்தில் வரைவதற்கான சாத்தியத்தை இப்பொதுத் தரவுகள் வழங்குகின்றது.

உயிரியல் தொழில்நூட்பக் கம்பனிகளின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளுக்கு பெரியளவிலான முதலீட்டு நிதிகளின் உள் வருகையானது ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றது. 1999ல் 12 மில்லியன் டொலருக்கு மேல் இருந்த முதலீடு இந்த வருடத்தின் முதலாவது அரைப்பகுதியில் 22.1 மில்லியன் உயிரியல் தொழில்நுட்ப தொழிற்துறைக்கு முதலிடப்பட்டுள்ளது. மார்ச்சில் Celera Genomics நிறுவனம் 1 மில்லியன் பெறுமதியான இரண்டாந்தரப் பங்குகளை விநியோகித்தது. ஜூன் மாதத்தில் Celera நிறுவனம் ஒரு வெளியிடப்படாத விலையில் பரம்பரைக் கல ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட Geron கூட்டுத்தாபனத்தை வாங்கியதாக அறிவித்தது.

அண்மைய அறிவிப்புக்கான எதிர்ப்பு தணியவில்லை. வத்திக்கான ''கிழ்த்தரமான அநீதி முடிவு என்றிதனைக் கண்டித்தது. 1996 ல் தடைக்கு பொறுப்பானவரும் arkansas குடியரசுவாதியுமான jay dickey ''சட்டத்தை களங்கப்படுத்துகின்ற'' ஒரு துணிச்சலான செயற்பாடுகளை புதிய நெறிமுறைகள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொன்னார். கிளின்டன் நிர்வாகம் தேர்தலின் நடுப்பகுதியில் இதைச் சரியாகக் கொண்டுவராது என்றும், கிளின்டனிதும் கோரினதும் (Gore) ஆதரவுத் திட்ட மேம்பாட்டுக்காக ஒழிய, அவர்களுடைய அக்கறை அதிக விஞ்ஞான வளர்ச்சியுடன் அல்ல.

குடியரசுக்கட்சி வேட்பாளரான ஜோர்ஜ்.டபில்யூ.புஷ் இன் பேச்சாளரான Ray Sullivan, மனிதக்கருவை அழிக்கும் முயற்சியாக இருந்தால் பரம்பரைக்கல ஆராய்ச்சிக்கான ஐக்கியரசுகளின் நிதியை கவர்னர் புஷ் எதிர்க்கின்றார் என்று கூறினார். ஜனநாயகக் கட்சி உதவி ஜனாதிபதி வேட்பாளரான Joseph Lieverman உம், கோரும் புதிய NIH நெறிமுறைமுறைகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறினார்கள்.

அரைமனதுடன் வெளியிடப்பட்ட புதிய NIH ன் புதிய நெறிமுறைகளின் உள்ளடக்கத்தின் முரண்பாடானது உயிரியல் தொழில் கூட்டுத்தாபனங்களுடைய இலாப ஊக்கங்களுக்காக அனைத்துக் கண்டுபிடிப்புக்ளையும் அவர்களுக்குரிய செல்வமாக மாற்றுவதும் வலதுசாரி மதவாத சக்திகளினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலான அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்துவதும் ஆகும். இவ்விரு முரண்பாடுகளின் செல்வாக்குகள் ஆராய்ச்சியின் முழு அபிவிருத்திகளின் மேல் ஒரு உயர்ந்தபட்ச அழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

See Also :

ஒரு கருத்து பரிமாற்றம்: சோசலிஸ்டுகள் எவ்வாறு பரம்பரைக் கல ஆராய்ச்சி பிரச்சனையை அணுக வேண்டும்?

ஜோர்ஜ் புஷ்ஷின் பரம்பரைக் கலம் பற்றிய முடிவு: மருத்துவ அறிவியல் மீதும் ஜனநாயக உரிமைகளின் மீதுமான தாக்குதல்