World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Opportunism in practice: the response of French left groups to the presidential election

நடைமுறையில் சந்தர்ப்பவாதம்: ஜனாதிபதி தேர்தலில் பிரெஞ்சு இடது குழுக்களின் பதில்

By Peter Schwarz
6 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று முடிவுகள் சோசலிச இடது கட்சிகளுக்கு பெரும் பொறுப்பினை முன்வைத்துள்ளன. Lutte Ouvrière (LO) -ன் ஆர்லட் லாகியே (Arlette Laguiller), Ligue Communiste Révolutionnaire (LCR)- ன் ஒலிவியே பெசன்ஸநோ (Olivier Besancenot), Parti des Travailleurs (PT)-ன் டானியல் குளுக்ஸ்டைய்ன் (Daniel Gluckstein) ஆகியோருக்கு முப்பது இலட்சம் பேர் அல்லது பத்து சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்ததானது, தேர்தலில் தோல்வியால் பாதிக்கப்பட்ட ஜொஸ்பன் (சோசலிஸ்ட் கட்சி) அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு, முற்போக்கான சோசலிச மாற்றுக்கான தேடலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம் மிகையாக மதிப்பிட்டுவிடக்கூடாது. தேர்தல் முடிவுகள் எப்போதும் உண்மையான சமூக சக்திகளின் திரிந்த பிரதிபலிப்பை மட்டுமே வழங்குகின்றன. அவை இயக்க நிகழ்ச்சிப்போக்கின் நிலையான நிழற்பட நொடிப்பெடுப்பு ஆக இருக்கின்றன. தேர்தல் தன்னின் நோக்கத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு வாக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் எதிர்கால சோசலிச அபிவிருத்தியின் அர்த்தத்தில், ஒவ்வொரு வாக்கும் ஒரேமாதிரியானது என்பது எல்லா விஷயத்திலும் அல்ல.

பிரான்சில் வாக்களிப்பை செல்வந்தத் தட்டினருக்கும் வாழ்க்கைத் தரங்கள் தேக்கநிலை அடைந்திருக்கிற அல்லது வீழ்ச்சி அடைந்திருக்கிற பரந்த பெரும்பான்மையினருக்கும் இடையில் துருவமுனைப்படல் அதிகரித்து வரும் சமுதாயத்தின் வெளிப்பாடாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். வெகுஜனங்களிடம் தெளிவான முன்னோக்கு இல்லை மற்றும், அவர்கள் உத்தியோக ரீதியாக ஆளுமை செய்யும் கட்சிகளான கோலிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை அதிகமாய் நிராகரிப்பது, சோசலிச இடதுகளின் மூன்று வேட்பாளர்களுக்காகவும் மற்றும் சிலருக்காகவும் தனது வலதுசாரி ஜனரஞ்சக வாய்ச்சவடாலால் ஏமாற்றப்பட்டு, லு பென் மற்றும் தேசிய முன்னணிக்காகவும் சிறிது வாக்களித்தல் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுக்கு இந்த நெருக்கடியிலிருந்து வெளிவரும் வழி தெரியவில்லை. அதிவலதுசாரிகளுக்கான வாக்காளர்கள் மத்தியில் கூட, பாசிச ஆதரவாளர்கள் வித்தியாசமான சிறுபான்மையைக் கொண்டிருந்தனர்.

பிரெஞ்சு உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் உடனடியான பெரும் அபாயம் பாசிசம் அதிகாரத்தை எடுப்பது அல்ல, மாறாக "குடியரசைப் பாதுகாத்தல்" என்ற பெயரில், சிராக்கிற்கும் முதலாளித்துவ அரசியல் நிறுவனத்திற்கும் தொழிலாள வர்க்கத்தைத் தொடர்ச்சியாகக் கீழ்ப்படுத்துவதே ஆகும். இது சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினர் ஆகிய உத்தியோகபூர்வ இடது கட்சிகள் உள்பட இரண்டாவது சுற்றுத் தேர்தலில் எடுத்துக் காட்டப்பட்டது.

லு பென்னால் பொதிந்திருக்கும் அபாயத்திற்கு எதிரான போராட்டம் உட்பட, அனைத்து சமூக முன்னேற்றமும், இறுதியில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டுவதும் அபிவிருத்தி செய்வதும் சாத்தியமா என்பதைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதுவரை, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக் கொள்ளும் அரசாங்கமல்லாத கட்சிகளில் ஒன்று கூட இந்தப் பொறுப்பினை நிறைவேற்றுதற்கான சாடையான குறிகாட்டலைக்கூட காட்டி இருக்கவில்லை. இம் மூன்றும் ஜொஸ்பனின் தோல்விக்கும் சந்தர்ப்பவாதத்தின் மிக ஒளிரும் வடிவங்களில் வெளிக்காட்டப்படும் தட்டிக் கழிப்புக்கள் மற்றும் வக்காலத்துக்கள் இவற்றுடன், லு பென் தேர்தல் எழுச்சிக்கு எதிர்ச்செயலாற்றினர்.

தொழிலாளர் கட்சி (Parti des Travailleurs)

130,000 வாக்குகளைப் பெற்ற தொழிலாளர் கட்சி (PT)-ன் வேட்பாளர் டானியல் குளுக்ஸ்டைய்ன், மிக அப்பட்டமான வகையில், எந்தவிதமான அரசியல் பொறுப்பெடுத்தலையும் நிராகரித்தார். வாக்குச் சாவடிகள் மூடப்பட்டதன் பின்னர், இக்கட்சி நடைமுறையில் காட்சியிலிருந்து மறைந்தது. அது லு பென்னுக்கு எதிரான எந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை மற்றும் எந்தவிதமான பொது நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. கட்சியின் வலைத் தளம் ஏப்பிரல் 20க்குப் பின்னர் இருந்து இது வரை நடப்பு நாளுக்கு உயர்த்தப்படவில்லை மற்றும் அதன் வாரப் பத்திரிகையைக் கூட மிகவும் கஷ்டப்பட்டே பெறக் கூடியதாக இருந்தது.

தேர்தல் நாள் அன்று, குளுக்ஸ்டைய்ன் கூறினார்: "தொழிலாளர்களும் இளைஞர்களும் இப்பொழுது போட்டியிட முடியாத கடினமான காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். ஆனால் அவர்களின் சொந்த அளிதிரளல் மூலம், தீர்வுகளைக் காண்பதற்கு அவர்களை அனுமதிக்கும் அனைத்து வழிகளையும் காண்பதற்கு உள்ள, அவர்களின் சொந்த பங்கில், அவர்களின் திறமையில் நாம் நம்பிக்கை கொள்கிறோம்." மிகவும் கோழைத்தனமாக மற்றும் தட்டிக் கழிப்பு பாணியில், ஏப்ரல் 21 அன்று அபிவிருத்தி அடைந்த சூழ்நிலைக்கு எதிர்ச் செயலாற்றல் என்பது இயலாது. இப்பிரச்சினைக்கு பதிலாக அவர்கள் என்ன செய்து தீர வேண்டும் என குளுக்ஸ்டைய்ன் அவரது வாக்காளர்களுக்கு பதில் கூறுகிறார்: நீங்கள் பதிலைக் காண்பீர்கள் என்ற உண்மையில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.

மற்றவகையில், அவர் அவர்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தைக் குறிக்கிறார். "முந்தைய விஷயங்கள் பலவற்றில் போல, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதானது அத்தியாவசியமான வகையில், தொழிலாள வர்க்கம் அதன் உரிமைகளையும் உத்தரவாதங்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு வேண்டி தொழிலாள வர்க்கத்தினதும் அதன் அமைப்புக்களதும் ஐக்கியத்தை ஒன்றிணைப்பதற்கான தொழிற்சங்கங்களின் திறமையினைச் சார்ந்துள்ளது" என்று அவர் தொடர்கிறார்.

குளுக்ஸ்டைய்னின் உறுதிப்படுத்தல் தொழிலாளர் கட்சி (PT)- யின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தொழிலாள வர்க்கம் அதுதானாகவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வினைக் காண முடியுமானால், அதற்கு சொந்தக் கட்சி ஏன் தேவைப்படுகிறது? தற்போதைய கடினமான சூழ்நிலைமையில் எப்படி அது தன்பங்கைச் செய்யக் கூடும்?

தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, அவை தற்போதைய நெருக்கடிக்கான பிரதான பொறுப்பை பெற்றிருக்கின்றன. எங்கும் போலவே பிரான்சிலும், அவை கடுமையாக வலது பக்கத்திற்கு நகர்ந்துள்ளன மற்றும் நீண்டகாலத்திற்கு முன்பாகவே ஜனநாயக உரிமைகளையும் சமூக வெற்றிகளையும் பாதுகாப்பதை நிறுத்தி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், அவை ஜொஸ்பன் அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்துள்ளன. ஊழல் மிக்க மற்றும் செல்வாக்கிழந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு, ஜொஸ்பனுக்கு எதிராக வாக்களித்த தொழிலாளர்களைக் குறித்தல் அந்த அளவு அபத்தமானது மற்றும் மேலும் கருத்துரைத்தல் தேவைப்படாததாகும்.

தேர்தலைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சி (PT)- யின் கோழைத்தனமான மற்றும் தட்டிக்கழிக்கும் நடத்தையானது, ஜொஸ்பனின் தோல்வி தொழிலாளர் கட்சி (PT)- யின் சொந்த அரசியலுக்கான படுவீழ்ச்சி என்ற உண்மைக்கு பங்களித்திருக்க முடியும் என்பது, கொஞ்சமும் குறைவானதல்ல. லியோனல் ஜொஸ்பன் உள்பட சோசலிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைமையின் கணிசமான பகுதியினர், தொழிலாளர் கட்சி (PT) ஆல் அல்லது அதன் முன்னோடிகளால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

1970களில் ஜொஸ்பன் Organisation Communiste Internationaliste (OCI)-ன் இரகசிய உறுப்பினராக இருந்தார், மற்றும் பிரான்சுவா மித்திரோனின் மிக நெருங்கிய கூட்டாளியாய் ஆவதற்கு மற்றும் கட்சியின் செயலாளராகக் கூட ஆகும் வகையில் சோசலிஸ்ட் கட்சியில் செல்வாக்குப் பெற்றார். அந்த நேரத்தில், தொழிலாளர் கட்சி (PT)- யின் முன்னோடியான ஓ.சி.ஐ (OCI), சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவங்களுடன் ஒத்துழைத்தலானது, தொழிலாள வர்க்கம் ஐக்கிய முன்னணியை அடைவது என அறிவித்ததில் ஒருபோதும் களைப்படையாதிருந்தது மற்றும் மித்திரோனையும் ஆதரித்தது.

1980களில், மித்திரோன் அவரது முதலாவது பதவிக் காலத்தில், கடுமையாக வலது பக்கம் திரும்பினார், ஓ.சி.ஐ ஆனது தனது சொந்த வழியில் தொழிலாளர் கட்சி (PT)-ஐ நிறுவியது. அதன் விளைவாக முக்கிய உறுப்பினர்கள் பலர் அமைப்புடன் முறித்துக் கொண்டு, சோசலிஸ்ட் கட்சிக்கு சென்று சேர்ந்தனர், அங்கு அவர்கள் முன்னணிப் பதவிகளைப் பெற்றனர். ஓ.சி.ஐ-ல் அவர்கள் கற்றுக் கொண்டவற்றை- சாராம்சத்தில் வலதுசாரி கொள்கைகளை இடது சொற்றொடர்களால் மூடுதிரை இடுவதை, அவர்கள் நடைமுறைபடுத்தினர்.

தொழிலாளர் கட்சி (PT) யும் கூட அதன் பழைய வழிமுறைகைளப் பின்பற்றுகிறது: சோசலிச முன்னோக்கிற்கு வெளிப்படையாகப் போராடுவதற்குப் பதிலாக, அது திரைக்குப் பின்னால் ஆன நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கிறது, செல்வாக்குமிக்க அதிகாரத்துவங்களின் செவிகளில் போடுவதற்கும் தொழிற்சங்க ஸ்தாபனத்தின் உள்ளே ஸ்தானங்களை வகிப்பவர்களின் செவிகளில் போடுவதற்கும் நாடியது. தொழிலாளர் சக்தி (Force Ouvrière -FO) எனும் தொழிற்சங்கத்தின் தலைமையானது பெரும்பாலும் இதன் செல்வாக்கின் கீழேயே இருந்தது. Force Ouvrière இன் தலைமை தொழிலாளர் கட்சி (PT) க்குப் பின்னால் உள்ள முன்னணி நபரான பியர் லம்பேர்ட் உடன் தொடர்ச்சியான கலந்தாலோசனைக்காக சந்தித்து வந்தது.

ஜொஸ்பனின் தோல்வி இந்த வகை அரசியலுக்கு அழிவுகரமான தாக்கமாகும். பல தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட இனியும் அனுமதிக்கமாட்டார்கள் மற்றும் ஒரு மாற்றீட்டிற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அது தெளிவாக்கியது. தொழிலாளர் கட்சி (PT) இதற்கு அமைதியையே பதிலாக்குகின்றது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Révolutionnaire)

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்.சி.ஆர் -ஆனது பிரெஞ்சு அரசியலில் அது நீண்ட காலம் ஆற்றியிருக்கும் பாத்திரத்தைத் தொடர்ந்தது: அரசியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து முறித்துக் கொள்ள அச்சுறுத்தும் தொழிலாளர்கள், அறிவர்கள் (புத்திஜீவிகள்) மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள சக்திகளைக் கட்டுப்படுத்த அது சேவை செய்தது. அரசியல் நிறுவனத்துடன் அதற்கு உள்ள பல்வேறு தொடர்புகளின் வழியில் அதன் முழக்கங்களும் நடவடிக்கைகளும் நிற்காதவாறு உறுதிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை, அது எவ்வளவு தீவிரமாக இருக்குமோ அவ்வளவு தீவிரமான வாய்ச்சவடாலை முன் வைப்பதற்கு எப்போதும் பெரு முயற்சி செய்தது.

மே5 க்கான, மத்திய குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட, கட்சியின் உத்தியோக ரீதியான தேர்தல் பரிந்துரை முற்றிலும் இதனுடன் பொருந்துகிறது: "தேர்தல்களிலும் தெருக்களிலும், தொழிலாள வர்க்கத்தின் மோசமான எதிரியான லு பென்னின் பாதையை ஒருவர் கட்டாயம் தடை செய்ய வேண்டும்."

இச் சூத்திரமானது சிராக்கிற்கு வாக்களிக்க குறிப்பாகச் சுட்டுகிறது, மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளால் அவ்வாறுதான் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. மே2 அன்று எல்.சி.ஆர் இன் ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ ஐரோப்பா-1 என்ற வானொலி சேவையில் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தார் மற்றும் அவர் கூறினார்: "ஞாயிறு மாலை அனைத்து வாக்காளர்களும் தங்களின் கைகளைக் கழுவிவிட வேண்டும் (அதாவது, சிராக்கிற்கு தங்களின் வாக்குகளை அளித்த பிறகு), மற்றும் கணிசமான அளவில் தெருக்களுக்கு செல்வதன் மூலம், மூன்றாவது, சமூக, சுற்றினை ஒழுங்கு செய்ய வேண்டும் என நாம் கருத்துரைக்கிறோம்." அக் கட்சியின் முக்கிய பிரமுகரான டானியல் பென்சாய்ட், மே1 கூட்டம் அன்று, அதே பாணியில் வெளிப்படுத்தினார். அவர், "ஞாயிறு அன்று, நாம் லு பென்னை விரட்டுவோம், மற்றும் திங்கள் அன்று சிராக்கை விரட்டுவதை ஆரம்பிப்போம்" என்றார்.

இந்தச் சூத்திரமானது, எந்தவிதமான குறிப்பிட்ட நடவடிக்கையையும் பிணைக்காத, சிராக்கிற்கு எதிரான ஆவேசமான வார்த்தை வசவுகளுக்கும் கூட இடமளித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, வெறுப்பிற்குரிய ஜனாதிபதிக்கு வாக்களிப்பதிலிருந்து தயங்கி நிற்பதாக வெளிக்காட்டிக் கொண்ட எல்.சி.ஆரின் இளைஞர் அமைப்பு, அத்தகைய தாக்குதல்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தது. சிராக்கிற்கு வாக்களித்தல் உண்மையில் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

மொத்தத்தில், எல்.சி.ஆரின் தலையீடானது தொழிலாள வர்க்கத்தின் வாக்குகளின் காரணமாக சிராக்கிற்கான அமோக ஆதரவிலிருந்து விளைவாகும் ஆபத்துக்களை முகமூடி இட்டு மறைக்கும் அதன் பெருமுயற்சியால் குறிக்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில், சிராக்கிற்கும் லு பென்னிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே சாத்தியம், உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழு கூறியது போல ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு ஆக இருக்கும். இது எல்.சி.ஆரால் நிராகரிக்கப்பட்டது, அது தெருக்களில் சண்டை இட, இத்தியாதி, இத்தியாதிகளை முன்னெடுக்க இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்கான அதன் சொல் அலங்கார அழைப்புக்களில் தலைகீழாக சென்றது.

எல்.சி.ஆர் அவர்களை சிராக்கிற்காக வாக்களிக்குமாறு அழைக்கின்ற அதேவேளையில், "சமூக கோரிக்கைகளுக்காக" தெருக்களில் தொழிலாளர்களும் இளைஞர்களும் எந்த முன்னோக்கை எடுத்துச் செல்வது? எல்.சி.ஆர் பதிலளிக்கிறது, வேறுவார்த்தைகளில் சொன்னால், முதலில் அவர்கள் தங்களின் வாக்கை சிராக்கிற்கு அளிப்பதன் மூலம் அவரது தேர்வை சட்டபூர்வமானதாக்க வேண்டும் மற்றும் இதுவரை ஜொஸ்பனின் மீது அழுத்தம் கொடுத்து சாதிக்க முடியாமல்போனதை சாதிப்பதற்கு சிராக் மீது அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதாகும். இந்தக் கருத்துரு அபத்தமானதாகும்.

எல்.சி.ஆர், சிராக்கின் தேர்வை ஏன் எதிர்க்கவில்லை என்பதற்கு வெளிப்படையான காரணம் இருக்கிறது. அது, அதன் அதிகமான நண்பர்களை இழக்க நேரிடும். அரசாங்க இடதுகளின் பொறிவு மற்றும் ஆச்சிரியப்படத்தக்க வகையில் அதிகமாக 12 இலட்சம் வாக்குகள் பெற்ற, அதன் சொந்த வேட்பாளர் பெசன்ஸநோ, பெரிய இடைநிலைவாத இயக்கத்தை (large centrist movement) க் கட்டுவதற்கான புதிய நம்பிக்கையில், எல்.சி.ஆர் தலைமையில் விழித்து இருக்கிறார், அதில் அது முக்கிய பாத்திரத்தை வகிக்கும்.

முதல் சுற்றினை அடுத்து உடனடியாக, எல்.சி.ஆர் அரசியல் குழு பின்வருமாறு கூறியது: "புதிய முதலாளித்துவ எதிர்ப்பு சக்தி, புதிய தொழிலாளர் கட்சி பற்றிய பிரச்சினை எல்லாவிதத்திலும் கூர்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது." எல்.சி.ஆரின் படி, அத்தகைய கட்சி ஆனது முதலாவது எடுத்துக் காட்டாக பெசன்ஸ்நோட் மற்றும் லாகியேக்கு வாக்களித்தவர்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், பின்னர் பாசிசத்திற்கும் பூகோளமயமாக்கலுக்கும் எதிராகப் போராடும் சமூக இயக்கங்களை அடிப்படையாக்க் கொள்ள வேண்டும், மற்றும் இறுதியில் ஒரு அரசியல் முன்னோக்கைத் தேடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினரின் உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஏப்பிரல் 30 அன்று, எல்.சி.ஆர் தலைவர் அலன் கிறிவின் Le Figaro- பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இன்னும் தெளிவாக இருந்தார்: பசுமைக் கட்சியினர் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகள் எல்.சி.ஆரை கூட்டத்திற்கு அழைத்தனர், அது இயல்பாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உள்நோக்கிய வெடிப்பை (Implosion) அனுபவித்தது, மற்றும் பல உறுப்பினர்கள் பெசன்ஸநோக்கு வாக்களித்திருப்பர். நீண்ட காலப்போக்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கிய வெடிப்பானது, புதிய பெண் நிலைவாத, சுற்றுச்சூழல், முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் தோற்றத்திற்கு வழி வகுக்கும். அது தற்போதைய அதி இடது எனும் நிலைக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது. ஆயிரக்கணக்கான அரசியல் ரீதியாக இயக்கம் இல்லாதவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைக் குழுக்கள் அதில் இடத்தைக் கண்டு கொள்வர்" என்றார்.

கிறிவின் மனதில் வைத்திருக்கும் கட்சிக்கான வேட்பாளர்கள் கிட்டத்தட்ட விதிவிலக்கில்லாமல் சிராக்கின் தேர்வுக்கு அழைக்கின்றனர் - தொழிற்சங்கங்கள், "பன்மை இடதுகள்" கட்சிகள் மற்றும் வதிவிடப்பத்திரம் இல்லாதோரின் அமைப்பு, ATTAC, துவேச எதிர்ப்பு! மற்றும் AC! ஆகியோர். அதில் எல்.சி.ஆர் இன் உறுப்பினர்கள் செயலூக்கமான பாத்திரம் ஆற்றினர். சிராக்கிற்கு ஆதரவளிப்பதன் மூலம், அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளும் தட்டிற்கு அவர்கள் தெளிவான சமிக்கையை அனுப்புகின்றனர். அவர்கள் இருக்கின்ற ஸ்தாபனமாகச் செயலாற்றுகின்ற கட்டமைப்பை மதிக்கின்றனர் மற்றும் அது சமூக இயக்கத்தால் தகர்த்தெறியப்படுவதற்கு அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

கிறிவின் முயற்சி செய்யும் இடதுசாரி இயக்கம், இவ்வாறாக முதலாளித்துவ எதிர்ப்பானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஐந்தாண்டு காலமாக பிரெஞ்சு நிறுவனத்திற்கு சேவை செய்திருக்கின்ற, "பன்மை இடதுகளை" அது பதிலீடு செய்ய வேண்டும் என்பதாகும், ஆனால் அது தேர்தலின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்றுள்ளது.

தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière)

மே5 தேர்தலுக்கு ஒரு திட்டவட்டமான பரிந்துரையை வழங்கும் முன்னர் Lutte Ouvrière-க்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் எடுத்தது. ஏப்ரல் 27 ஞாயிறு அன்று, ஆர்லட் லாகியே சிறு அறிக்கையை வழங்கினார், அது குறிப்பிட்டதாவது: "Lutte Ouvrière வாக்களிப்பதிலிருந்து விலகி இருக்க அழைப்பு விடுக்கவில்லை, மாறாக வாக்காளர்களை அவர்களின் வாக்குச்சீட்டுக்களை காலியாக அல்லது செல்லாத ஒன்றாக ஆக்குவதற்கு அழைக்கிறது." இரண்டு நாட்களுக்கு பின்னர், கட்சியானது பின்வரும் தலையங்கத்தில் ஆசிரிய உரையை வெளியிட்டது: "லு பென்னுக்கு எதிராக, ஆனால் சிராக்கிற்குகாக அல்ல: வாக்குப் பெட்டிக்குள் காலியான வாக்குச்சீட்டு." இந்த அறிக்கைக்கு முன் நிகழ்வாக வாரம் முழுவதும் மறுதிருப்பமான மற்றும் பல பொருள் தரும் அறிவிப்புக்கள் இருந்தன.

முதல் சுற்று வாக்குப் பதிவின் மாலையில் லாகியே, சிராக்கிற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஒருவர் லு பென்னை எதிர்த்துப் போராட முடியாது என்று தொலைக்காட்சியில் கூறினார். அந்தக் கூற்று இரண்டாவது சுற்றில் வாக்களிப்பதினின்று விலகி இருப்பதற்கான அழைப்பு என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும், அடுத்தநாளே எழுத்து வடிவிலான அறிக்கை பின்வரும் வார்த்தைகளுடன் காணப்பட்டது: "ஜனாதிபதி வாக்கெடுப்பில் இரண்டாவது சுற்றில் வாக்களிப்பதிலிருந்து விலகி இருக்குமாறு நான் அழைக்கவில்லை." இது லு பென்னை கட்டுறுதியாய் நிராகரிக்க மற்றும் சிராக்கை குறைவான உறுதியாய் நிராகரிக்க சென்றது. பல தொழிலாளர்கள் லு பென் பாதையைத் தடை செய்வதற்காக வேண்டி சிராக்கிற்கு வாக்களிக்க முயற்சிப்பர், ஆனால் அப்பெண்மணி லாகியே, தொழிலாளர்களின் நலன்களின் பேரில் வாக்கானது சிராக்கிற்கான பொதுமக்களின் நேரடி வாக்காக மாற இருந்தது என்பதை நம்பவில்லை. அவர் வாக்களிக்க ஸ்தூலமான பரிந்துரையை வழங்க முடியாது என மறுத்தார்.

சிராக்கிற்கு ஆதரவு தவறாக இருக்கும் என லாகியே தனிப்பட்ட முறையில் கருதுகிறார், ஆனால் அவரது உதாரணத்தை ஆதரிப்பதற்கு ஏனையோரை அழைக்கவில்லை என்ற அர்த்தத்தில் மட்டுமே அவ்வறிக்கையானது விளக்கப்பட முடியும். அவர் இதனை அதே நாளில் ஆசிரிய தலையங்கத்தில் பின்வரும் வார்த்தைகளில் உறுதிப்படுத்துகிறார்: "நினைவிற் கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் தாங்கள் எதைச் சரி என்று நினைக்கிறார்களோ அதைச் செய்ய வேண்டும், ஆனால் அவர் தனது வாக்கின் எதிர்கால விளைபயன்களையும் கூட கவனத்தில் கொள்ள வேண்டும்."

இந்த நிலைப்பாடு பிறர்நிலைக்கு ஆட்படுவதைக் கசிய விடுகிறது. அது விஷயங்களை சரியான பெயரில் அழைக்கத் தயாரிப்புச் செய்யாத, மற்றும் இறுதியாக அவர்கள் அதனை அவ்வாறு செய்யும்படி கடப்பாடுடையவராக இருக்கின்ற, அரசியல் விளைபயன்கள் பற்றி எந்தவிதமான கருத்தார்ந்த அக்கறையும் பெறுவதற்கு, கடப்பாடில்லாமையின் கீழ் உணரக்கூடிய இடைநிலைவாதிகளின் ஒரு வகைப்பட்ட நிலைப்பாடாகும். புரட்சிகர மார்க்சிஸ்டுகள் எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தில் இருந்து வரும் அழுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஆயுதபாணி ஆக்கும் பொருட்டு, தங்களின் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதன் மூலம், முதலாளித்துவ பொதுக்கருத்தை எதிர்த்துப் போராடுவதை தங்களின் பணியாக எப்போதும் கொண்டிருப்பர். Lutte Ouvrière இந்த வகையான எதையும் செய்யவில்லை. செய்தி ஊடகமும் உத்தியோகபூர்வ இடதுசாரிகளும் தொழிலாளர்களை சிராக் முகாமுக்குள் இழுக்க முயலும்பொழுது முழுக்காலக்கட்டத்தின் பொழுதும், Lutte Ouvrière எந்தவிதமான எதிர்த் தாக்குதலையும் பொறுப்பெடுக்க மறுத்தது. அவர்கள் இப்பிரச்சினையை "நன்றி, அது உண்மையில் என்னுடைய விவகாரம் அல்ல!" எனும் வழியில் அப்பட்டமான தன்னிறைவு பாணியில் நடத்தினர். அரசியல் ரீதியாக, இது சிராக் ஆதரவு பிரச்சாரத்திற்கு சரணாகதி அடைவதைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. Lutte Ouvrière சிராக் ஆதரவு முன்னணியின் கீழ் அணிகளில் சேர்த்துக் கொள்ளுதலை மேலோட்டமாக நிராகரிக்கிறது, ஆனால் எந்தவிதமான புரட்சிகரமான முன்முயற்சியின் எந்த அடையாளத்தையும் வெளிப்படுத்தத் தவறுகிறது.

லுபென் வாக்குக்கு அதன் பதில் தொடர்பாக அமைப்புக்குள்ளேயே எழும் கடும் மோதல்கள் குறித்துச் சுட்டிக்காட்டும் பல குறிகாட்டல்கள் இருக்கின்றன. கட்சிப் பத்திரிகையில் ஒரு பந்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கும், சிறுபான்மைப் போக்கினர், முதல் சுற்று முடிவுகள் தெரிந்த உடனேயே வாக்களிப்பதிலிருந்து விலகி இருத்தலுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் செயலூக்கமான புறக்கணிப்பினை முன்மொழியவில்லை, மாறாக சாதாரணமான வகையில், Lutte Ouvrière ஆதரவாளர்கள் இரண்டாவது சுற்றுத் தேர்தலை அலட்சியம் செய்யுங்கள் என்றனர். இரண்டாவது சுற்றில் தொழிலாளர்களுக்கு மாற்று எதுவும் இல்லை என அவர்கள் எழுதினார்கள். வாக்களிப்பிற்குப் பின்னர் தவிர்க்க முடியாதவகையில் எழவிருக்கும் போராட்டங்களுக்காக தொழிலாளர்கள் வீதிகளில் வேலைநிறுத்தம் மற்றும் நடவடிக்கைகளுக்கு தயார் செய்ய Lutte Ouvrière -இன் சிறுபான்மைப் போக்கு பரிந்துரை செய்தது.

மறுபடியும், இந்த நிலைப்பாடு அரசியல் அகிம்சையை வெளிப்படுத்துகிறது, இந்த முறை போர்க்குணமிக்க தொழிற்சங்க ஆட்சிவாத (சிண்டிகலிச) உடுப்பிற்குள் செருகிக் கொண்டது. ஒழுங்கமைக்கப்பட்ட புறக்கணிப்பின் வடிவில் தேர்தல்களை எதிர்க்கும் செயலூக்கமான நிலைப்பாடு எதிர்காலப் போராட்டங்களுக்காக தொழிலாளர்களை தயாரிப்பதற்கு அத்தியாவசிய முன்நிபந்தனை என்பது சிறுபான்மைப் போக்கிற்கு நிகழ்ந்திருப்பதாகக் காணப்படவில்லை. சிராக்கிற்கு தொழிலாளர்களை இணைத்துப் போட முயற்சிக்கும் பரந்த கூட்டிற்கு எதிரான தீர்க்கமான போராட்டத்தை நடத்துவதற்குப் பதிலாக, சிறுபான்மைப் போக்கினர் வெறுமனே தேர்தலுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர் (பாராமுகமாக இருந்தனர்).

இன்னொருபுறத்தில் இருந்து, செய்தி ஊடக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோரிடமிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் லாகியே இருந்து வருகிறார், அவை சிராக்கிற்கு வாக்களிக்க வெளிப்படையாக மறுத்ததற்கு கோபத்துடன் எதிர்ச்செயலாற்றின. முன்னாள் மாவோயிஸ்டுகளால் நடாத்தப்படும் இடது தாராண்மைவாத லிபரேசன் பத்திரிகை, இந்த வகையில் வெறுக்கத்தக்க பாத்திரத்தை வகித்தது. அப்பத்திரிகையானது சிராக்கிற்கான வாக்கை உத்தரவாதம் செய்வதற்கான முன்னணிப் பாத்திரத்தை இடதுகள் எடுக்க ஆவேசத்துடன் விவாதித்தது. குறிப்பாக ஒரு முறைதவறிய பத்தி லாகியே ஐ லு பென்னுக்கு சரியான மணைவி என்று விவரிக்கும் அளவுக்கு சென்றது. கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான l'Humanité கூட, லாகியே "விலகி இருத்தல் எனும் தற்கொலைக் கொள்கையை" பின்பற்றிக் கொண்டு "தேசிய முன்னணியின் விளையாட்டை" ஆடுகிறார் என குற்றஞ்சாட்டி, கட்சியின் வரலாறு பற்றிய ஒரேவகை ஸ்ராலினிச அவதூறை மேற்கொண்டது.

Lutte Ouvrière இந்த அழுத்தத்திற்கு எடுத்துக்காட்டாக பதில்செயலாற்றியது: அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அரசியல் மயக்கநிலைக்குள் விழுந்தது. காலியாகவோ அல்லது செல்லாத வாக்குச் சீட்டுக்காகவோ கட்சியால் விடுக்கப்பட்ட அழைப்பானது, மெய்யாகவே அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களில் சிலரிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பினை அடக்குவதற்காக நோக்கம் கொண்டது. அது இதுவரையில் கொண்டிருக்கும் அகிம்சை நிலைப்பாட்டுடன் முறித்துக் கொள்வதைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. கட்சியானது அதன் நிலைப்பாட்டிற்காக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்யவோ அல்லது அதன் உறுப்பினர்களை இசைந்துபோக வைப்பதற்கோ முயற்சி செய்யவில்லை.

மே1 அன்று பாரிசில் நடைபெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டத்தில், Lutte Ouvrière கருத்தார்ந்த அக்கறையுடன் கூடிய துண்டறிக்கைகளோ அல்லது அரசியல் அறிக்கைகளையோ விநியோகிக்க வில்லை. Lutte Ouvrière பத்திரிகை விற்பனையாளர்கள் ஒருவரும் காணப்படவில்லை. ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட Lutte Ouvrière -இன் படைப்பிரிவினர் ஏனைய ஊர்வலத்தினரிடம் இருந்து Lutte Ouvrière- இன் கண்கானிப்பாளர்களால் கடுமையாக ஆள்வரிசையிட்டு வேலியிடப்பட்டார்கள்.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகித்து, செயலூக்கமான தேர்தல் புறக்கணிப்பை பொறுப்பெடுக்குமாறு அழைப்புவிடுத்த ஒரே இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் ஆசிரியக் குரலான, உலக சோசலிச வலைத் தளமும் ஆகும்.

Lutte Ouvrière இன் கூற்றுக்களை புரட்சிகரமானதாகவும் மற்றும் இரண்டாவது முறையாக, 16 இலட்சம் வாக்குளை அதன் ஜனாதிபதி வேட்பாளருக்கு அதனால் வெல்லமுடிந்ததையும் எடுத்துக் கொண்டால், மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களின் பகுதியிலும் உத்தியோக ரீதியிலான இடதுகள் பகுதியிலும் ஆழமான நெருக்கடியை எடுத்துக் கொண்டால், ஒருவர் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக Lutte Ouvrière அதனால் இயன்ற எல்லா வழிகளையும் பயன்படுத்தும் என ஒருவர் எதிர்பாத்திருப்பார். கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய இடது கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறிவு அரசியல் முன்னோக்கின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி தெளிவூட்டுவதற்கான அற்புதமான வாய்ப்பை வழங்கியது.

இருப்பினும், அரசியல் முன்முயற்சியின் அத்தகைய கொள்கையானது Lutte Ouvrière-க்கு முற்றிலும் அந்நியமானதாக இருந்தது. அவ்வமைப்பானது அதன் பத்திரிகையின் சிறப்புப் பதிப்பைக் கூட வெளியிடுவதற்கு முடியாதிருந்தது. வழக்கம்போல, அதன் பத்திரிகையில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் நிகழ்கின்ற குறிப்புக்கள் சில வரிகள் அல்லது பந்திகளுக்குமேல் போவதில்லை.

அதன் அரசியல் எதிராளிகளின்- ஏனைய சோசலிச இடது கட்சிகள், இடது மற்றும் வலது அரசாங்கக் கட்சிகள், பாசிஸ்டுகள் ஆகியோரின் விவாதங்களை அதிமுக்கியமாக எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களை கல்வியூட்டும் பொருட்டு, அதன் பல்வேறு பக்கங்களில் இருந்து வரும் புதிய அரசியல் சூழ்நிலையை விளக்குவதில் குறைந்த அளவு ஆர்வத்தைக் குறிகாட்டத் தவறியது. புரட்சிகர இயக்கங்கள் எப்பொழுதும் மாபெரும் அரசியல் நிகழ்ச்சிகளின் போக்கில் புடம் போடப்படும். இந்த வகையில் Lutte Ouvrière துன்பகரமாக தவறி இருக்கிறது. கொஞ்சக்காலமாக இவ்வமைப்பின் நல்வாய்ப்புக்களைப் பின்பற்றிக்கவனித்து வரும் எவரும் அத்தகைய அபிவிருத்திகளை இட்டு ஆச்சரியப்படமாட்டார்கள். இவ் அமைப்பு ட்ரொட்ஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தில் உறுப்பினராக இருப்பதை எப்பொழுதும் நிராகரித்தே வந்திருக்கிறது. அத்தகைய உறுப்பாண்மை (அங்கத்துவம்), தொழிலாளர் சூழலுடனான கட்சியின் இணைப்புக்களை தொந்தரவு செய்யும் என்று விவாதிப்பதன் மூலம் Lutte Ouvrière தனது நிலையை நியாயப்படுத்தியது.

அதன் சொந்த வரலாற்றைப் பற்றிய 1983 மதிப்புரையில், Lutte Ouvrière பின்வருமாறு கூறியது: "Lutte Ouvrière ஒரு சிறு குழுவாக இருப்பதால், அது அதன் அடிவேரிலுள்ள சக்தி முழுவதையும் தொழிலாள வர்க்கத்திற்குள் கொடுக்க வேண்டி இருந்தது என்ற நிலைப்பாட்டைப் பேணியது, மற்றும் வேறு எதுவும் சம்பந்தப்படவில்லை." ("Lutte Ouvrière dans le mouvement trotskyste".) பாட்டாளி வர்க்க நோக்குநிலையானது சர்வதேச நோக்குநிலையின் அடிப்படையில் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பது புரிந்து கொள்ளப்படவில்லை, Lutte Ouvrière சர்வதேசக் கட்சியைக் கட்டுவதற்கு பதிலீடாக தொழிலாளர் சூழலுடனான அதன் இணைப்புக்களை முன்வைத்தது.

1956ல் அதன் ஸ்தாபிதத்திற்குப் பின்னர் இருந்து கட்சியானது, தேசிய தொழிற்சங்க வட்டங்களுக்குள்ளே சாந்தமிக்க இருப்பிற்கு தலைமை ஏற்றிருக்கிறது, தொழிலாள வர்க்கம் இனியும் புரட்சிகரமானதல்ல மற்றும் காணக்கூடிய எதிர்காலத்தில் அது புரட்சிகர சக்தியாக ஆகும் முன்னேற்றங்கள் எதுவுமில்லை என்று ஆழமாய் நம்பி இருந்தது.

நேரத்திற்கு நேரம் கட்சியானது தொழிற்சங்கத் தலைமையை விமர்சித்த அதேவேளை, அதிகாரத்துவம் தொழிலாளர் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கும் பொழுது Lutte Ouvrière தொடர்ச்சியாக பிந்தையதன் பக்கத்திற்கு விரையும். 1995ல் யூப்பே அரசாங்கத்தை பெரும் வேலைநிறுத்த அலை அச்சுறுத்தியபோது இதுதான் விஷயமாக இருந்தது. அந்த நேரம் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான எந்த அழைப்பையும் Lutte Ouvrière நிராகரித்தது மற்றும் அது இறுதியில் வேலைநிறுத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த பொழுது தொழிற்சங்கத் தலைமைக்காக அரசியல் வழக்குரைஞராக செயல்பட்டது.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது, மிக உடனடியான தொழிற்சங்க பிரச்சினைகளில் மட்டுப்படுத்தக்கூடியதாய் இருந்த, Lutte Ouvrière இன் குறுகிய கண்ணோட்டம் அவ்வப்போது இயல்புக்கு மீறிய வடிவங்களை எடுத்தது. லாகியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடம் - ஆப்கானிஸ்தானில் யுத்தம் (பிரெஞ்சுத் துருப்புக்கள் செயலூக்கத்துடன் பாத்திரமாற்றும்), மத்திய கிழக்கில் அல்லது பால்கனின் சம்பவங்கள் உட்பட- ஒரு சர்வதேச நிகழ்ச்சியைக் கூட குறிப்பிடாமல், ஒரு மணி நேரம் பேசமுடிந்தது. ஒருவர், பிரான்சானது முற்றிலும் வித்தியாசமான கிரகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட தீவு என்று நினைக்கலாம்.

அதேவேளை Lutte Ouvrière அதன் தேர்தல் வெற்றியால் ஊக்கப்படுத்தப்படுவதைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்ததாகவே காணப்பட்டது. அது தொடர்ந்து அதன் சொந்த வாக்கை குறைவுபடுத்தும் மற்றும் அரசியல் பொறுப்பின் எந்த விளைவு பற்றியும் மறுக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாகச் சென்றது. இதுதான் 1995ல் விஷயமாக இருந்தது மற்றும் இன்றுவரையும் தொடர்ந்து இருக்கின்றது.

ஏப்பிரல் 26 அன்று Lutte Ouvrière- பத்திரிகையில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவில், "தேர்தல் தொகுதியின் ஸ்திரத்தன்மை" பற்றி, ஒரு கவலை தணிப்பு உணர்வுடன், வலியுறுத்தல் செய்தது. மற்றும் பின்னர் Lutte Ouvrière, வாக்காளர்களைப் பொறுத்தவரை கட்சியின் கம்யூனிச குறிக்கோள்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என அழுத்தமாகக் குறிப்பிட்டது: "லாகியே கம்யூனிசத்தை தனக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கின்றாரா என அறிவதும் மற்றும் அவர்கள் அத்தகைய குறிக்கோள்களுக்கு ஆதரவளிக்காதிருந்தபோதும், அந்த உண்மைக்காக வெட்கப்படாததும் வாக்காளர்களைப் பொறுத்த விஷயம்." வாக்காளர்கள் லாகியேக்கு தங்களின் ஆதரவை அளித்தது ஒருவிதமான வேறுபட்ட காரணங்களுக்காக என்று மறுக்க முடியாது, ஆனால் இக்கேள்வியை எதிர்மறையாக வைப்பதைக் காட்டிலும் செயலூக்கமான முறையில் முன்வைக்க வேண்டியது அவசியமானது: அத்தகைய குறிப்பிடத்தக்க 16 இலட்சம் வாக்குகளில் வெளிப்படுத்தப்பட்ட சோசலிச சாத்தியத்தை எப்படி அபிவிருத்தி செய்வது?

அதன் ஏப்பிரல் 26 அறிக்கையில், LCR மற்றும் PT ஆகியோரால் பதிவு செய்யப்பட்ட முடிவை "பல்வேறு கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதி இடது வேட்பாளர்கள் பலர் இருப்பது தடங்கலாக இல்லை, மாறாக வளமூட்டுவதாக இருக்கிறது" என்ற வார்த்தைகளுடன் வரவேற்றது.

பின்னர் அது LCR ஐ, அது இடைநிலைவாத பலதரப்பட்ட தட்டுக்களை உருக்கி ஒன்றாக ஆக்கும் முயற்சிக்காக வாழ்த்தி: "கிட்டத்தட்ட 1995ல் லாகியே பெற்றதைப் போல பெரிய எண்ணிக்கையான, அதன் முக்கிய தேர்தல் மொத்தத்திற்கும் LCR க்கு நன்றி கூறுகிறோம், அவர்கள் ஒருமுறை எமக்குப் பரிந்துரைத்த முன்முயற்சியை -பல்வேறு அரசியல் சக்திகளை, குழுக்களை மற்றும் அது ஒத்துழைக்கும் பூகோளமயமாக்கல் எதிர்ப்பு முன்முயற்சியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய, 100 சதவீத இடது அல்லது 'இடதின் இடது' கட்சியைக் கட்டியமைப்பதற்கான முன்மொழிவை- இப்பொழுது LCR முன்னெடுத்தால் நாங்கள் மகிழ்வடைவோம்." என தெரிவித்தது.

பாதுகாப்பான, ஆழ்ந்து ஆராய்ந்த மற்றும் ஆழமான அவநம்பிக்கை நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, எந்த அரசியல் முன்முயற்சியும் இன்மை "சந்தர்ப்பவாதத்தின் கலாச்சாரத்தை" கொண்டிருக்கிறது, அது LO அமைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அந்த நேர யூப்பே அரசாங்கத்துக்கு எதிரான பெரும் வேலைநிறுத்த இயக்கம் பற்றி ஆய்கிற, 1996ல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், உலக சோசலிச வலைதளத்தின் டேவிட் வோல்ஷ் எழுதினார்: "இந்த வட்டங்களின் குறிப்பிடத்தக்க உண்மையான சிறப்பியல்பு சந்தர்ப்பவாதக் கலாச்சாரம் என்றழைக்கக் கூடும். ஒருவர் LO, LCR அல்லது அவர்களின் சுற்றுவட்டாரத்தில் கொள்கை அடிப்படையில் நிற்கும் அல்லது விஷயங்களை எழுப்பும் கற்பனை செய்யக் கூடிய தனி ஒரு உறுப்பினரை சந்திக்க முடியாது. அது ஏற்கனவே இருக்கவில்லை என்பது தெரியும் மற்றும் கிட்டத்தட்ட எல்லா தொழிலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்கள் அரசியல் பலமற்றவர்களாக இருந்தனர்."

இந்த மூன்று "இடது" இயக்கங்கள் அனைத்தினாலும் எடுத்துக் காட்டப்படும் இந்த விசித்திரமான கற்பனைக் கதம்ப சந்தர்ப்பவாத வடிவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர் கொள்ளும் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றன: தொழிலாள வர்க்கம் மீது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் கொண்டிருந்த தசாப்தங்களான நீண்ட கால மேலாதிக்கத்தின் விளைவான அரசியல் நனவின் வீழ்ச்சியாகும்.

தற்போதைய தேர்தலின் போக்கில் அவர்கள் எடுத்துக் காட்டியவாறு, PT, LCR மற்றும் LO ஆகியன இந்தப் பிரச்சினைக்கு பதிலளிக்கவில்லை -உண்மையில் அவர்கள் அத்தகைய பிரச்சினை நிலவுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இல்லை. உலக சோசலிச வலைதளம் தானே உண்மையான சர்வதேசிய, சோசலிச கட்சியைக் கட்டி அமைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பணியை அமைத்திருக்கிறது. அது பிரான்சில் உள்ள அரசியல் மாற்று ஒன்றினை நாடும் அனைவரையும் இந்த புரட்சிகர முன்னோக்கை அடைவதற்கான மைய சாதனமான, எமது வலைதளப் பகுதியை தொடர்ந்து வாசிக்குமாறும் அதற்கு ஆதரவு தருமாறும் அழைக்கின்றது.

See Also :

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மே2002 (முழு உள்ளடக்கல்)