World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Death toll in India's communal violence continues to rise

இந்தியாவில் வகுப்புவாத வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

By Arun Kumar and Sarath Kumara
23 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் சுமார் இரண்டு மாதங்களாக இடைவிடாது வகுப்புவாத வன்முறை தொடர்கிறது, அது இந்து தீவிரவாத அமைப்புகளினால் செயலூக்கத்துடன் தூண்டிவிடப்பட்டு பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்படுகிறது. இந்து குண்டர்கள் மாநில தலைநகரான அகமதாபாத் மற்றும் இதர நகரங்களிலும் முஸ்லிம்களை தாக்கினார்கள், வீடுகளையும் கடைகளையும் எரித்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி மோதல்களில், மேலும் 17 பேர் கொல்லப்பட்டனர், அகமதாபாத் மற்றும் ஏனைய நகரங்களில் 91 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒன்பது பேர் முஸ்லிம்களாவர், அவர்கள் மாநில தலைநகரில் திரண்ட கும்பல் என போலீசாரால் கூறப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்பு இந்து வெறியர்களுடன் போலீஸ் வெளிப்படையாகவே பக்கம் சார்ந்து நின்றது என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அம்மாநிலத்துக்கு இராணுவ துருப்புகள் அனுப்பப்பட்டன. அகமதாபாத் மற்றும் இதர நகரங்களின் வெவ்வேறு பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு சட்டம் போடப்பட்டது.

``ஆறுதல் அளிக்கும் பயணம்`` என்ற பேரில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அங்கு சுற்றுலா சென்றபோதுகூட வன்முறை நிகழ்ந்தது. பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயி உள்பட தேசிய மட்டத்திலான பி.ஜே.பி. தலைமை முழுமையான ஒரு பாத்திரம் வகித்தது - ஒரு புறம் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள (NDA) அவர்களது பங்காளிகளை சமாதானப்படுத்துவதற்காக அமைதிக்கு அழைப்பு விடுகின்றன. அவர்கள் கூட்டணியை முறிக்கப்போவதாக பயமுறுத்தினார்கள், மறுபுறம் மாநில அரசாங்கத்துக்கும் இந்து குண்டர்களுக்குமான ஆதரவை, மூடி மறைக்காது அளித்தன.

புது தில்லி மற்றும் அகமதாபாத் இரண்டிலுமுள்ள பி.ஜே.பி. தலைவர்கள் இந்த உயிர் கொலைகள் தீவிரவாத விஸ்வ இந்து பரிஷத் (VHP) அல்லது உலக இந்து சபையை சேர்ந்த செயல் துடிப்புள்ளவர்களை (Activities) கொண்டு சென்ற ரயில், பிப்ரவரி 27 இல் கோத்ராவில் எரிக்கப்பட்டதற்கான ``தன்னியல்பான`` எதிர்நடவடிக்கை என கூறினார்கள். 58 பேர் இறந்த திட்டவட்டமான நிலைமைகள் என்ன என்பது தெளிவில்லாத நிலையில், சில அறிக்கைகள் குறைந்தபட்சம் இதற்கான பொறுப்பில், ஒரு பகுதி விஸ்வ இந்து பரிஷத் ஆதரவாளர்களின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் என்று சுட்டிக்காட்டுகின்றன. அன்றிலிருந்து அந்த (கோத்ரா) சம்பவத்தை விஸ்வ இந்து பரிஷத்தும் அதன் பேரினவாத சகாக்களான - பஜ்ரங்தளம், சிவசேனா, ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங் (RSS) - ஒரு தொடர்ச்சியான வகுப்புவாத சமூக படுகொலையை ஏற்பாடு செய்வதற்காக பயன்படுத்திக்கொண்டது.

விஸ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரங்தளமும் ``முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க`` தயார் செய்துவருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் நேற்று அறிவித்தது. வகுப்புவாத பிரச்சனைக்கு ஒரு ``இறுதி தீர்வு`` காணுவதற்காக மாநிலம் முழுவதும் ஆதரவு திரண்டு வருவதாக விஸ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச பொது செயலாளர் பிரவின் தொகாதியா கூறியுள்ளார். அந்த பத்திரிகை செய்தியின்படி, ``ஐந்து லட்சம் செயல்வீரர்களின் ஆதரவுடன் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள தலைவர்கள் அகமதாபாத்திலுள்ள பால்டி காம்பிளெக்ஸில் (பல பாகங்களை கொண்ட கட்டிடத்தில்) ஒரு `நிலவர சோதனை`க்காக ஒவ்வொரு மாலையும் கலந்தாலோசிப்பார்கள். கோத்ரா சம்பவம் பற்றிய துண்டு பிரசுரங்கள், வீடியோக்கள் மற்றும் வண்ண புகைப்படங்கள் வெகுஜன விநியோகத்துக்காக அனுப்பப்படுகின்றன, அதன் மூலம் வகுப்புவாத காய்ச்சல் வீணாகிபோய்விடாமல் உறுதி செய்துகொள்கின்றனர்``.

கடந்த வார இறுதிக்கு முன்பு, நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால் உண்மைகள் வேறுவிதமாக பேசுகின்றன. ஏப்ரல் 14 ல் அகமதாபாத்திலுள்ள 10 கடைகள் மற்றும் வீடுகளுக்கு கும்பல்கள் தீ வைத்தன. அடுத்த நாள் இரண்டு முஸ்லிம்கள் குத்திக்கொல்லப்பட்டனர் மற்றும் இன்னொரு ஆள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். போதுமான பாதுகாப்பின்மை காரணமாக ஏப்ரல் 14 அன்று நடக்க இருந்த தேர்வை தள்ளி வைக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் மாநில அரசாங்கம் நிராகரித்ததன் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் மாநில தேர்வுகளை புறக்கணித்தனர்.

உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி வன்முறை தொடங்கியதிலிருந்து 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1,25,000 பேர் வீடுகளை இழந்தனர். வேறு விசாரணைகளின்படி இறந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும், 2,500 பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின்படி, மார்ச் இறுதியில் இறந்தோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துவிட்டது. புரொன்ட் லைன் இதழின்படி: ``எத்தனை உடல்கள் முழுமையாக எரிக்கப்பட்டது அல்லது இடிந்த கட்டிடங்களின் மத்தியில் இன்னும் சிக்கி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது``. சில சம்பவங்களில், சிறப்பாக கிராமங்களில், முழு குடும்பங்களும் கொல்லப்பட்டன, அந்த சோக சம்பவங்கள் பற்றி முறையீடு செய்ய யாருமே எஞ்சி இருக்கவில்லை.

வகுப்புவாத படுகொலைகள் சாதாரணமாக கோத்ரா சம்பவத்தின் பின்விளைவுகள் தான் என்ற அவரது பேச்சை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமாக வகுப்புவாத பதட்டங்களை வாஜ்பாயி கடந்த வெள்ளிக்கிழமை கொளுந்துவிட்டு எரியச் செய்தார். ``இந்துக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றார்கள். ஆனால் ஒருபோதும் மற்றையவர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதில்லை. ஆனால் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சமாதானமாக வாழ விரும்பவில்லை`` என்று அவர் கூறினார். ஒரு நீண்ட கால பி.ஜே.பி. உறுப்பினரும் மற்றும் பாசிச RSS இன் உறுப்பினர் என்றும் குற்றம் சாட்டப்படுபவருமான குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் விடுத்த கோரிக்கைகளை பி.ஜே.பி. செயற்குழு நிராகரித்தது.

வகுப்புவாத வன்முறையில் மோடியும் இதர மாநில அமைச்சர்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டனர். புரொண்ட் லைன் செய்தியின்படி குஜராத் சுகாதார அமைச்சர் அசோக்பட் அகமதாபாத்திலுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில், முதல் இரண்டு நாட்கள் தாக்குதல்கள் நடக்கும்போது உட்கார்ந்திருந்தார். நகரத்தில் வன்முறை நிகழ்ந்தபோது நகர வளர்ச்சி அமைச்சர் I.K.ஜடேஜா அங்கிருந்தார். இந்து தீவிரவாத குழுக்களின் மத்தியில் முதலமைச்சர் ஒரு கதாநாயகனாக கருதப்பட்டார். ``மோடி நல்ல மகத்தான ஒரு பணி ஆற்றுகிறார்`` என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் ரொகாதியா கூறினார்.

திட்டமிட்ட வன்முறை இயக்கம் முஸ்லிம் விரோத வன்முறையின் வரிசையான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தன்மை பற்றி மேலும் ஆதாரங்கள் தோன்றியுள்ளன.

இந்தியாவின் அவுட்லுக் இதழின் அறிக்கைப்படி: ``அகமதாபாத்தில், உதாரணமாக ஒரு அதிகாரி நினைவு கூர்ந்தார், அதாவது எப்படி கடந்த சில மாதங்களாக, அகமதாபாத் மாநகராட்சியிலிருந்து முஸ்லிம் வியாபார நிறுவனங்களின் பட்டியல்களை எடுப்பதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏன் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவரால் அப்போது உணர முடியவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். அவருக்கு இப்போது தெரியும்.....

``விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தொழில்சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் வட்டமிட்டனர், முஸ்லிம் மாணவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் எடுக்க முயற்சித்தனர். அரசாங்க இலாக்காக்கள் (உதாரணமாக இந்தியா உணவு கார்ப்பரேஷன்) மற்றும் அவற்றுடன் இணைந்த கிளைகளின் பட்டியல்களை எடுத்து அவற்றில் ``விரும்பத்தகாதவர்கள்`` மற்றும் அவர்களின் முகவரிகளை விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் எடுத்ததாக சில அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. ``பிப்ரவரி 27 மற்றும் 28இலும் அதற்கு பிறகும்கூட இந்தப் பட்டியல்களில் எத்தனை உதவியாக இருந்தது என்பது ஒரு ஊக விஷயமாகும். ஆனால் பார்வையாளர்கள் கூறுவதன்படி 50இலிருந்து 100 கடைகளின் கூட்டத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் கடைகள் மட்டும் எப்படி குறி வைக்கப்பட்டது என்பதை விளக்குவது கடினமானதா?``

கும்பல்களின் தலைவர்கள் தொடர்ந்து மொபைல் தொலைபேசிகளில் பேசியது பற்றி கண்ட சாட்சிகள் கூறின, அவர்கள் ஒரு வலைப்பின்னலாக இயங்குவதை அது சுட்டிக்காட்டியது. முஸ்லிம் வீடுகள் பற்றிய கணினியில் இருந்து எடுக்கப்பட்ட பட்டியல்களை சிலர் எடுத்துச்சென்றனர். முஸ்லிம் வணிக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை உடைத்து தள்ளுவதற்காக குண்டர்கள் ஆயிரக்கணக்கான LP கேஸ் சிலிண்டர்களை சேமித்தது அகமதாபாத்தில் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. ``முஸ்லிம்கள் எப்போதுமே திரும்ப வரகூடாது என்று நாம் உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம்`` அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூறியதை டைம் ஏசியா பத்திரிகை மேற்கோள் காட்டியது.

வன்முறை தொடங்கிய முதல் சில நாட்களில், போலீஸ் வெளிப்படையாகவே இந்து கும்பல்களுடன் ஒத்துழைத்தது. சில இடங்களில் குண்டர்கள் செல்வதற்கு முன்பு போலீஸ் அதிகாரிகள் அங்கு நிலைமையை அறிவதற்காக அனுப்பப்பட்டனர். முஸ்லிம்கள் தம்மையும், அவர்களது அயலவர்களையும் பாதுகாக்க முயற்சிக்கும்போது போலீசார் அவர்கள்மேல் சுட்டனர். ஒரு மாநில போக்குவரத்து குடியிருப்பு பகுதியில் மறைந்து கொள்ள முயற்சித்த ஒரு பலியாள் பத்திரிகையாளரிடம் கூறியதாவது: ``போலீசார் எங்களை அங்கே தள்ளிவிட்டனர், அது நாம் சாகும் இரவு என்று கூறினார்கள்``.

இன்னொருவர் இந்தியா டுடே இதழிடம் கூறினார்: ``கொடூரத்தை சாதாரணமான வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நமக்கு பக்கத்திலிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் தலைமைகத்திலுள்ள (SRP) ஜவான்கள் (கான்ஸ்டபிள்கள்) மேலிடத்திலிருந்து கட்டளைகள் வரவில்லை என்று கூறி நம்மை உள்ளேவிட மறுத்தனர். அவர்கள் நம்மை உள்ளே அனுமதித்து இருந்தால் டஜன் கணக்கானோரை காப்பாற்றி இருக்க முடியும்``.

முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபாரங்கள் நாசமாக்கப்பட்டன. 75 சதவீத பேக்கரிகள், 60 துணி மற்றும் இரசாயணத் தொழிற் பிரிவுகள் சூரத்திலும் அகமதாபாத்திலும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 18,000 இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 800 டிரக்குகள் நாசமாக்கப்பட்டன. மும்பாய் - மெஷனா 700 கி.மீ. நெடுஞ்சாலை மற்றும் இதர மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள 700 சிற்றுண்டி விடுதிகள் எரிக்கப்பட்டன.

இந்திய தொழிற்கூட்டமைப்பின் மூத்த இயக்குநரான சுனில் பரேக் குஜராத் அரசாங்கமானது பொருளாதார இழப்புக்கள் பற்றி குறைத்துக்கூற முயற்சிகள் மேற்கொள்வதை விமர்சித்தார். அவரது கணிப்பீட்டின்படி வன்முறை தொடங்கிய முதல் நாள்களில் மட்டுமே 20 பில்லியன் ரூபாய்கள் அல்லது 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய இழப்புகள் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான அகதிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகாம்களில் இன்னும் கஷ்டப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் முறையான கழிப்பிடங்களும் இல்லாமையைப் போக்குவதற்கு எதையுமே மாநில அரசாங்கம் செய்யவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டின. அம்மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையின் விளைவாக அதிகரித்துவரும் உயிர் இழப்புக்களுடன் சேர்ந்து கூடுதலாக நோய்களும் பரவலாம் என்ற கவலைகள் உள்ளன.

See Also :

மத வகுப்புவாத பிரச்சாரம் மீதாக இந்திய ஆளும் கூட்டணியில் குழப்பம்

இந்தியாவின் ஆளும் கட்சி வகுப்புவாத படுகொலையைத் தூண்டிவிடுகிறது

இந்தியா: அயோத்தி பிரச்சாரம் வகுப்புவாத மோதல் மற்றும் யுத்த மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது