World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

French President Chirac appoints new government with right-wing agenda

பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் வலதுசாரி வேலைத்திட்டங்களுடன் புதிய அரசாங்கத்தினை ஸ்தாபிக்கின்றார்

By Peter Schwarz
17 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பாவிலேயே பிரெஞ்சு அரசியல் அமைப்பு முறைதான் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஒன்றாகும். மே 5 ல் கோலிச வேட்பாளரான ஜக் சிராக் பிரான்சின் "பன்மை இடது'' கள் எனப்படும் சோசலிசக் கட்சி, கம்யூனிசக் கட்சி மற்றும் பச்சை கட்சிகளின் ஆதரவினால் மிகப் பெரும் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். இப்போது அவர் அவரது அதிகாரங்களை திட்டத்திறனுடன் அவரது இருப்புநிலையினை பலப்படுத்தும் வகையில் அவருக்கு சார்பாக அரசியல் யாப்பு வடிவங்களை மாற்றியமைக்க பயன்படுத்துகின்றார்.

இறுதியானதும் தீர்மானகரமானதுமான சுற்றில் சிராக் இற்கும் நவ பாசிச லூ பெனுக்கும் இடையிலான வாக்களிப்புகளில் இன்று வெளியேறிக்கொண்டிருக்கும் ஜொஸ்ப்பனுக்குக் கீழான அரசாங்கத்தினை அமைத்திருந்த இப் பன்மை இடது கட்சிகள், இதுவே ஐந்தாவது குடியரசினையும் ஜனநாயகத்தினையும் பாதுகாப்பதற்கு ஓரே வழி என விவாதிப்பதன் மூலம் இருப்பிலுள்ள ஜனாதிபதிக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிட்டன. இப்போது சிராக், ஒரு ஜனநாயக ஆட்சியினையன்றி ஒப்புநோக்குகையில் பொனப்பாட்டிச சர்வாதிகாரத்திலும் மேலான ஆட்சியினை அமைப்பதற்கு இத் தேர்தலினை பயன்படுத்துகின்றார். முன்னைய காலங்களில் அவர் தனது மாதிரி வடிவமான Charles de Gaulle இனால் தகவமைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே கொண்டிருந்தார். முன்னைய பிரெஞ்சு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் வகையினை ஒத்த தாக்குதல்களினை மேற்கொள்வதற்கு இவ்வாறான வழிவகைகளையே நம்பியுள்ளார்.

மீளவும் அவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் உடனடியாகவே, சிராக் ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தனக்குள்ள சட்டரீதியான உரிமையினை பயன்படுத்தி அவரது சொந்த விருப்பத்திற்கமைய அரசாங்கத்தின் புதிய தலைவரையும் புதிய கபினெட் ஐயும் நியமனம் செய்தார். ஜூன் 9 மற்றும் ஜூன் 16 ல் பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் வரை இருப்பிலுள்ள (சட்டரீதியாக இப்பொழுதும் இடதுசாரி கூட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்) பாராளுமன்றத்தின் உடன்பாடு எதுவுமின்றி இடைக்கால நிர்வாக அடிப்படையில் நாட்டை நிர்வகிக்க அவர் ஒரு பழமைவாதியான பிரதம மந்திரியினை நியமித்ததுடன் வலதுசாரி அமைச்சர்கள் அடங்கிய குழுவினையும் தேர்வுசெய்தார். இவ் யாப்பு விதிக்கமைய, ஜனாதிபதி அடிப்படையில் அரசாங்கத்தின் தலைவரை நியமிக்க முடியும், பின்னர் அவர் அமைச்சர்களை நியமிப்பார், அவர்கள் ஜனாதிபதியினால் முறைப்படி ஆமோதிக்கப்படுவர். ஒரு பொதுவான நடைமுறையினை உடைப்பதாக இருந்தபோதிலும், சிராக் தானாகவே கபினெட் அமைச்சர்களை தெரிவு செய்வதனை தனது கையில் எடுத்துக்கொண்டார்.

அரசாங்கத்தின் அதி முக்கிய பதவிகளான உள்நாட்டு, வெளிவிவகார, பாதுகாப்பு, பொதுநலத்துறை மற்றும் நீதித்துறை அமைச்சகங்கள் எல்லாம் சிராக்கினது நெருங்கிய சகாக்களினால் நிரப்பப்பட்டுள்ளன. நிதி மற்றும் தொழிற்துறைக்குப் பொறுப்பான பொருளாதார அமைச்சு ஒரு எஃகு நிறுவனத்தின் (steel company) முகாமையாளரும் Medef எனப்படும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பிரதிநிதியுமான ஒருவரினால் வழிநடாத்தப்படவுள்ளது.

புதிய பிரதம மந்திரி Jean-Pierre Raffarin தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democrats) அங்கத்தவராவார். இவர் நடுநிலைதன்மையின் (moderation) சின்னமாக முன்னைய நிர்வாகப் பெரும்பான்மையின் ஆதரவினை ஈர்ப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க செயலாளர்களான 28 பேரில், 12 பேர் கோலிச RPR , 6 பேர் மத்தியவாத UDF, 5 பேர் LD (Liberal Democrats) கட்சியினர். மற்றய 5 பேர் சுயேட்சைகள்.

இப் புதிய அரசாங்கத்தின் தகவமைவு பல நோக்கங்களை குறித்துநிற்கின்றது; முற்றுமுதலான முக்கியத்துவம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் (legislative elections) வலதுசாரிகள் பெரும்பான்மை பெறுதலை உறுதிப்படுத்துவதாகும். ஒரு தொகை அமைச்சர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டது முன்னைய நிர்வாக பெரும்பான்மையினை கவருவதுடன் நில்லாது மேலும் லூ பென் இனது தேசிய முன்னணியின் முகாமிலிருந்தும் ஆதரவினை வென்றுகொள்ளும் இலக்குடனுமாகும்.

 

ஜனாதிபதியான சிராக் பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கைளுக்கு பொறுப்பு வகிக்கின்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் தனது சொந்த நிர்வாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் வெற்றிபெறுவாராயின் அவரே உள்நாட்டு கொள்கைகளில் முடிவினை எடுக்கும் ஒரு பொறுப்பினையும் வகிப்பார். ஐக்கிய அமெரிக்காவில், அரசியல் அமைப்புமுறை பாராளுமன்றத்திற்கு (Congress) ஜனாதிபதிக்கு எதிரிணையான அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது போலல்லாது, பிரெஞ்சு நாடாளுமன்றம் (National Assembly) மிகவும் குறுகிய அதிகாரங்களையே கொண்டுள்ளது.

சிராக் புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தினை அவரது சொந்த முகாமுக்குள் உள்ள சச்சரவுகளை சரிசெய்துகொள்ளவும் பயன்படுத்துகின்றார். அவரது ஆதரவாளர்கள் ஆதரிக்கப்படுகின்றனர், எதிராளிகள் ஓரங்கட்டப்படுகின்றார்கள். பாரம்பரியமாக கோலிஸ்ட்டுகளுடன் அதிகாரத்திற்கு போட்டியிடும் வலதுசாரி கட்சிகளிலிருந்து, அதாவது, UDF மற்றும் DL இலிருந்து, அண்மைய தேர்தல் பிரச்சாரத்தினபோது தனக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகளின் மத்தியிலிருந்து பிரதானமாக வேண்டியவர்களை அவர் தெரிவுசெய்துகொண்டார்.

உதாரணமாக, அரசாங்கத்தின் புதிய தலைவர், Raffarin லிபரல் டெமொக்கிரட்ஸ் இன் உப தலைவராக இருந்தும்கூட, DL கட்சியின் தேர்தல் வேட்பாளர் Alain Madelin இற்கு ஆதரவளிப்பதை விடுத்து, ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றில் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிட்டார். அத்துடன் Raffarin வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் சிராக்கிற்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில் ஒழுங்கமைக்க வலதுசாரி பூர்ஜூவா கட்சிகளை ஒருங்கமைக்கும் அமைப்பான பெரும்பான்மை ஜனாதிபதிக்கான சங்கத்திற்கும் (UMP-Union for a Presidential Majority) ஆதரவளிக்கின்றார்.

சிராக் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படத் தேவையற்ற ஐனாதிபதித் தேர்தலுக்கும் பாராளுமன்றத்தேர்தலுக்கும் இடையிலுள்ள இக் குறுகிய காலப்பகுதியில் முன்கூட்டியே தனது இலக்கை உறுதிப்படுத்திக்கொள்வதனை வேண்டி நிற்கின்றார். நடைமுறைப்படுத்துகின்ற செயல்முறை நடவடிக்கைகளானவை பின்னர் ஒருபோதும் பின்வாங்கப்பட முடியாதவையாக ஆக்குவதன்மூலம் அவர் வாக்காளர்களை கவருவதற்கு விரும்புகின்றார்.

அரசாங்கத்தின் புதிய தலைவரான Raffarin ஒரு பக்கச்சார்பற்றவராகவும் அரசியல் ரீதியில் நடுநிலையானவராகவும் கருதப்படுகின்றார். இவரது நியமனம் இந்த ஆட்சியின் பொருளாதார ஓட்டத்தின் ஒருங்கிணைப்பிற்கு ஆதரவு தேடுவதை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னரான முதலாவது உத்தியோகபூர்வ உரையில், அரசின் ஆட்சியதிகாரத்தினை புனரமைப்பதுடன், தனது மிகவும் முதலுரிமைக்குரிய பணி சமூக ஒருங்கிணைப்பாகும் (social dialogue) என்று கூறினார். இப்படியான ஒரு ஒருங்கிணைப்பு உடைந்து சிதறியதற்காக அவர் முன்னைய ஜொஸ்பன் அரசாங்கத்தினை குற்றஞ்சாட்டினார்.

Raffarin இனது சமூக ஒருங்கிணைப்பு (social dialogue) என்பதன் கருத்து அரசாங்கம், தொழிலதிபர்கள் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான நெருங்கிய கூட்டு என்பதாகும். நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிச கட்சியினர் படுமோசமான தோல்வியினைத் தழுவியதைத் தொடர்ந்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அரசாங்கத்தின் கதைகளுக்கு செவிசாய்ப்பதற்கும் மேலாகச் சென்று அவற்றினை ஆரவாரத்துடன் வரவேற்று நிற்கின்றன. தொழிற்சங்கங்கள் பெருமளவில் தமது அங்கத்தவர்களை இழந்துள்ளன- பிரான்சின் பணியாளர்களின் தொகையில் 8 வீதத்திற்கும் குறைந்தவர்கள் மாத்திரமே தொழிற் சங்கங்களினுள் அமைப்பு வடிவப்படுத்தப்படுகின்றனர்- தொழிற்சங்கங்களின் அனைத்து அதிகார மட்டங்களும் (union hierarchy) தமது இருப்பு நிலையினையிட்டு பயம் கொள்கின்றன, நிச்சயமாக இவ் அரசாங்கம் அவர்களை தங்கள் பங்காளிகளாக சேர்த்துக்கொள்ளாது விருப்பமின்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

Force Ouvrière என்னும் தொழிற்சங்க செயலாளரான Marc Blondel, உடனடியாக Raffarin இன் கூற்றிற்கு பதிலளித்துடன் அரசாங்கத்துடனான ''சமூக ஒருங்கிணைப்பு'' என்பதற்கு தனது சொந்த கோரிக்கையையும் முன்வைத்தார். ஏனைய மற்றய முக்கியமான தொழிற்சங்க இயக்கங்களும் அனைத்தும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளில் அவர்களது "சமூக பங்காளிகளுடன்" ஈடுபடுவதற்கு தமது விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் Raffarin இனது இன்னுமொரு வேலை என்னவெனில், பிரான்சின் தலைநகரத்தில் அன்னியமாகிப் போனதும் ஊழல்மலிந்து போனதுமான பிரான்சின் அரசியலில் பாரியளவிலான அதிருப்தியினை தவிர்த்து சமப்படுத்துவதாகும். Poitou-Charentes மாவட்டத்தின் 54 வயதான அதிபர் இன்று கலந்துரையாட இலகுவானவராகவும் (affable) நடைமுறைக்கு சாத்தியமானவற்றை முன்வைப்பவராகவும் மதிப்பிடப்படுகின்றார். அண்மைய வருடங்களில் அவர் மதிப்பை இழக்கவைக்கும் தேசிய அரசியலின் மத்தியிலிருந்து தன்னை தள்ளிவைத்திருந்ததுடன் நாட்டுப்புற பிரஞ்சு மத்தியதர வர்க்கத்தினரிடம் நெருங்கியிருந்தார். இவர் முதன்முதலாகா தேசிய அலுவலகத்தில் 1995 மற்றும் 1997 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியல் சிறியதும் இடைப்பட்டதுமான தொழிற்துறைகளிற்கான மந்திரியாக இருந்தார், இப் பதவி சிராக்கின் பெரும் எதிராளியான எடுவார்ட் பலடூர் இற்கு எதிராக சிராக்கிற்கு ஆதரவு வழங்குவதற்காக வழங்கப்பட்டது.

Raffarin உடன் மேலும் வேறு இரண்டு அரச செயலர்கள் நடுநிலை வாக்குகளை ஈர்க்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ளனர். சூழல் பாதுகாப்பு அமைச்சுக்கு ''வெண்ணை" என அழைக்கப்படும் இனத்தவர் அல்லது அல்ஜீரிய குடியேறியான Tokia Saïfi இன் நியமனமும் தேசிய அரசாங்கத்தில் உள்ளடங்கியுள்ளது. பாரிஸ் நகர சமூக அவசரகால சேவைப் பிரிவின் முன்னைநாள் தலைவர் டொமினிக் வெர்சினி, "வறுமைக்கும் பாரபட்சத்திற்கும் எதிரான போராட்டம்" என்பதற்கு பொறுப்பாளராவார்.

ஒரு தாராளவாத பாத்திரத்தினை வெளிப்படுத்தும் ஓர் பாத்திரம் Raffarin இற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இப் புதிய அரசாங்கத்தின் உண்மையான சக்திவாய்ந்த மனிதர் ஓர் உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரியாவார். முன்நாள், கோலிச பொது செயலாளரும் சிராக்கிற்கு மிக நெருக்கமானவருமாகிய, Nikolas Sarkozy முன்னைய உள்நாட்டு அமைச்சருக்குரிய அதிகாரங்களைக்காட்டிலும் மிகவும் அதிகமானவற்றுடன் மேலும் அதிகரித்துச் செல்லும் வகையில் உள்நாட்டு அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் Sarkozy பிரதமமந்திரி பதவிக்கு வேண்டப்பட்டிருந்தார். அவர் மிகவும் அதிகம் வலதுசாரியாக இருந்தபோதிலும், பரந்துபட்ட வாக்காளர்களின் பார்வைக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவராகப் நோக்கப்பட்டார். உதாரணமாக 1998 இல் அவர் வெளிநாட்டு குடிவரவாளர்களின் இழப்பில்(தியாகத்தில்) வேலைகள், சமூகக் கொடுப்பனவு மற்றும் வீட்டு வசதிகள் என்பவற்றை பிரஞ்சுக் குடிமக்களுக்கு முதலிடமாக்குதல் என்பதன் பேரில் பிரச்சாரம் செய்தார்- இதுவே தேசிய முன்னணியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

Sarkozy யும் அவரது உதவி அமைச்சருமான Patrick Devedjian உள்ளிட்ட நியமனங்கள், இடைக்கால அரசாங்கத்திற்கும் நவ பாசிஸ்ட்டுகளுக்கும் இடையிலான மிகக் குறுகிய வேறுபாட்டினைத்தான் கோடிட்டு காட்டுகின்றது. Devedjian சிராக்கின் ஒரு சட்ட ஆலோசகரும் அவர் இளைஞராக இருந்தபோது ''Occident" என்னும் பாசிச இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். ஜனவரி 12 1967 இல், அவர் ருவான் பல்கலைக்கழகத்தில் வியட்நாம் முன்னணியினுடைய ஒரு தகவல் கருத்தரங்கில் அவர்களின் மீதான ஒரு தாக்குதலில் பங்குகொண்டார். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் மேல் இரும்புக் கம்பிக்கொண்டு தாக்கியதன் விளைவாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். Devedjian இக்கு இத்தண்டனைத் தீர்ப்பாக அபராதம் மட்டும் செலுத்தவேண்டியிருந்தது. அதேநேரம் தாக்குதலில் பங்குபற்றிய ஏனையவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1976 புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கோலிச கட்சிக்கான ஒரு சட்ட வடிவத்தை வரைவதற்கும் உதவி புரிந்தார்.

வெளிநாட்டு அமைச்சர் கூட சிராக்கினுடைய ஒரு நம்பிக்கைக்குரிய ஒரு கையாக இருக்கிறார். வெளி உலகத்திற்கு உத்தியோகபூர்வமாக பதியப்பட்ட ஒரு சுயேட்சையாளராக கருதப்படுகின்ற Dominique Galouzeau de Villepin எலிசே மாளிகையில் ஜனாதிபதியின் பொதுச்செயலாளராக சேவை செய்தவருமாவார். அத்தோடு சிராக்கினுடைய மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும் கடந்த பத்துவருடங்களாக இருந்துவருகிறார்.

முன்னாள் RPR இன் தலைவரும் கோலிச கட்சியில் சிராக்கினுடைய வலதுகரமாகவும் கருதப்படுபவருமான Michèle Alliot-Marie பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரசாங்கத்தில் நீண்டகாலமாக இருந்த குறிப்பிட்ட சில அமைச்சர்களில் ஒருவர் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 1990 களில் Balladur மற்றும் Alain Juppé அரசாங்கங்களில் ஒரு அரச அதிகாரியாக Dominique Perben இருந்தவராவார். அக்காலப் பகுதியில் இவர் தொழிற்சாலைகளில் தொழிற்சங்க உரிமைகளை குறைப்பதற்கும், பிரதானமற்ற தொழில்களில் தொழிலாளர்களின் வேலை நிலைமை வசதிகளை குறைப்பதற்கும் பொறுப்பானவராக இருந்தவருமாவார்.

சிராக்கினுடைய நெருங்கிய கூட்டாளியான Juppé என்பர் மட்டும்தான் இந்தப் புதிய அரசில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் யூப்பே ஒரு பிரதான நபராக இன்னும் இருப்பதோடு பின்னணியில் இருந்துகொண்டு மிக வேகமான முறையில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு தனது காய்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறார். நடைபெறப்போகின்ற பாராளுமன்ற தேர்தல்களில் கோலிச காரர்கள் அவர்களுடைய நிலையை பலப்படுத்தி வெற்றிகொள்ளும் போது யூப்பேதான் றஃபரினுக்கு சாத்தியமான மாற்றீடாக கருதப்படுகிறார்.

பொருளாதாரம், நிதி மற்றும் தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள Francis Mer தான் ஒரு தெளிவான நல்ல சமிக்கையை பெரும் வர்த்தக நலன்களுக்கு காட்டியுள்ளார். Medef எனும் தொழிலதிபர்களின் சங்கத்திற்கு ஒரு தலைமைப் பிரதிநிதியாக மெர் இருக்கின்றார். அத்தோடு ஐரோப்பிய எஃகு நிறுவனமான Arcelor இன் முன்னாள் பொது இயக்குனருமாவார்.

Lothring பிராந்தியத்தில் உள்ள எஃகு தொழிற்சாலைகளின் ''மீள் புதிப்பிப்பு''க்கு பொறுப்பாக 15 வருடங்களாக நிறைவேற்று முகாமையாளராக இருந்த Mer தான் 70 ஆயிரம் தொழில்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த நிகழ்வுக்கு பொறுப்பானவராவார். இவர் François Bayrou வினுடைய நெருங்கிய நண்பருமாவார். (François Bayrou UDF வேட்பாளரும் திறந்த சந்தைப் பொருளாதார கொள்கையை ஆதரிப்பவருமாவார்) அத்தோடு சோசலிசக் கட்சியின் அரசியல்வாதியுமான Jacques Delors வினதும் ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் தலைவரும் மற்றும் கிறடிலியோனே வங்கியின் நிறைவேற்று தலைவருமான Jean Peyrelevade நண்பருமாவார். சோசலிச கட்சியின்தொடர்புடைய CFDT தொழிற்சங்க பொதுச் செயலாளர் Nicole Notat இன் உயர் மதிப்பீட்டுக்குரியவராக Mer கருதப்படுகிறார்.

கடந்த வருடம் Medef இன் பிரதிநிதியான Mer ஒரு தொழிற்பயிற்சித் திட்டமான Unedic என அழைக்கப்படும் வேலை இழப்பு சேமிப்புத் திட்டத்தின் அபிவிருத்தியின் ஒரு திடமான பங்களிப்புக்கு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த ''சீர்திருத்தம்'' ஆனது அரசிடம் இருந்து நிதி உதவியை பெறும் வேலையின்மைக்கான உதவியை இல்லாது செய்யும் குறிக்கோளையே இது கொண்டுவந்துள்ளது. ஜொஸ்ப்பனது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக மீள் புனரமைப்பு என அழைக்கப்படுவதை நோக்கிய முதலாவது அடியாக இது இருந்தது. இப்படிப்பட்ட ''சீர்திருத்தத்தின்'' தொடர்ச்சியானது, குறிப்பாக சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் திட்டங்களின் ஒழுங்குபடுத்தல்களாக இப்புதிய அரசின் மத்திய குறிக்கோளாக இது இருக்கிறது.

பொருளாதார அமைச்சரின் மேலதிக முன்னுரிமை விடயமாக இருப்பது அரசிற்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான EDF-GDF இதனை தனியார் மூலதனத்திற்கு திறந்து விடுவதாக இருக்கின்றது. இதற்கான சாத்தியங்கள் ஏற்கனவே அண்மையில் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய அமர்வில் உடன்பாடாகியுள்ளது. இப்புதிய பொருளாதார அமைச்சரின் திட்டங்களை சாத்தியப்படுத்தும் நிலைப்பாட்டிற்காக சுற்றுச்சூழல் அபிவிருத்தி அமைச்சராக Roselyne Bachelot நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அணுசக்தியைப் பயன்படுத்துவதை மிகவும் ஆதரித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.

தொழிற்துறைப் பிரதிநிதியான François Loos என்பவர் இளைஞர், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். Loos ன் பின்னணியானது இரசாயன தொழிற்துறையுடன் தொடர்புடையதாகும். அவர் Thann-Mulhouse லுள்ள Rhône-Poulenc தொழிற்சாலையின் இயக்குனராவார். இவர் ஆராய்ச்சித்துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவராவும் இருக்கின்றார்.

இன்னொரு அமைச்சரான பிரான்சுவா பிலோனின் பின்னணிகூட வர்த்தகத்துடன் நெருக்கமானது. அவருடைய சிறப்பம்சமானது இராணுவ விவகாரங்களாகும். அவர் தொழிலாளர் மற்றும் சமூக ஒற்றுமை விவகாரங்களுக்கான அமைச்சில் அவருடைய புதிய பொறுப்புக்களை எடுப்பதற்கான எந்த ஆயத்தங்களை அவர் செய்வதற்கான வெளிப்பாடுகளை காண்பது கடினமானது ஆகும். இருப்பினும், 1996 இல் யுப்பேயின் அரசில் ஒரு அமைச்சராக இருந்தபோது பிரான்ஸ் ரெலி கொம்மினை தனியார்மயமாக்கலுக்கும் காலத்துக்கு முந்திய ஓய்வூதியங்களுக்காகவும் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டுக்குவர உறுதி அளிப்பதற்கு மேற்பார்வை செய்பவராக இருந்தார்.

சிறிது ஆச்சரியமென்னவென்றால், Medef ஆனது புதிய அரசின்மேல் தனது ஆர்வத்தைக் காட்டியிருந்ததாகும். பிரதம மந்திரி ரபரின் ''யதார்த்தபூர்வமான மனிதனாக அதாவது கூடிய ஆபத்துக்களை சவாலாக ஏற்றுக்கொண்டு செய்யும் வர்த்தக ஆற்றல் அனுபவத்தையும் செவிமடுப்பதற்கு தயாராக்கப்பட்டவராகவும் இருக்கிறார்''. என்று மெடப் அமைப்பின் தலைவரான தூ செலியர் என்பவர் கூறியதோடு மேலும் பிரன்சுவா மேர் என்பவர் ''பிரஞ்சுப் பொருளாதர நிலைமையை சரியாகவும் அத்துடன் அதற்கான போட்டியில் வெற்றிபெறுவதற்கான அவசியங்களையும் அறிவித்துள்ளதோடு வரிகளின் சுமை மற்றும் நிறுவனங்கள் கட்டாயத்தின் பேரில் தாங்கிக்கொண்டிருக்கும் வரிகளை குறைப்பதையிட்டும் அவர் கணக்கில் எடுத்துள்ளார் என்று அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிராக்கின் ஆரம்பக் கூட்டத்தில், புதிய கபினெட்டானது விரிவாக்கப்பட்ட செயல்முறைப் பட்டியல்களை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்தது. இக்கூட்டத்தின் பின்னர் ரபாரினும் (Raffarin) அவருடைய அமைச்சர்களும் கயிற்றில் நடக்கும் நிலையை போன்றதாயினும் அது முன்னேற்றகரமானதாக இருந்ததாக கருத்து வெளியிட்டுள்ளார்.

மிக முக்கியமான உடன்பட்ட செயல்முறையின் விடயமாக பாதிக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு இருக்கின்றது. உள்நாட்டு அமைச்சரான சார்க்கோசி அவரது நியமனம் நடந்த கையோடு பாரிஸ் பொலிசாருடன் கூட்டுச்சேர்ந்து நகர்ப்புறப் பகுதிகளில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை செய்வதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தி காட்டினார். கபினெட் அமர்வின் பின்னர் நீதி மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் விரிவாக்கப்பட்ட சட்ட மாற்றங்கள் பற்றிய திட்டங்களை அவர் அறிவித்தார். இவைகள் அனைத்தும் கோடைகாலத்துக்குள் நிறைவு செய்யப்பட்டிருக்கும் அத்தோடு அமைக்கப்படப் போகின்ற தேசியப் அரசுப் பேரவையில் இது தொடர்பான உடன்பாடும் எட்டப்படும்.

உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயல்முறைகளானது, பொலிஸ், ஜொண்டாம், சுங்க அதிகாரிகள், புலனாய்வு நீதிபதிகள் மற்றும் வரி மதிப்பீட்டு சோதனை அதிகாரிகள் ஆகியோர்களின் நெருங்கிய ஒத்துழைப்புடன் நகர்ப்புறப் பகுதிகளில் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள குற்றங்களை தடுப்பதற்கு இதுவரை சிறப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் CRS என்னும் பரா இராணுவத்தை பயன்படுத்துவதை அதிகரிப்பதும் இச்செயல்முறையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. CRS ஆனது பொலிசாருடன் சேர்ந்து மிக நெருக்கமாக இவ்வேலையை ஆற்ற இருக்கின்றது.

மே 15 ல் கபினெட்டானது உள்நாட்டுப் பாதுகாப்புச்சபையை (CSI) ஜனாதிபதியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் உடன்பாடொன்று கொண்டுவரப்பட்டது. உள்நாடு, பாதுகாப்பு, நீதி, பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர்களை உள்ளடக்கியிருக்கும் (CSI) யானது சோசலிசக் கட்சியின் முன்னாள் பிரதம மந்திரியான மிசைல் றொக்காட்டினால் 1988 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு ஜொஸ்பனால் இதனுடைய சட்டதிட்டங்கள் மீள் புதுப்பிக்கப்பட்டது. CSI ஆனது முன்னாள் பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததோடு அரச அதிகாரத்தின் பிரதான மையமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சபைகளின் அதிகாரங்கள் இன்று பரந்தளவில் விரிவாக்கப்பட இருக்கின்றது. நடைமுறை அர்த்தத்தில், சபையானது இன்றைய உள்நாட்டுக் கொள்கைகளைத்தான் பிரதான விடயங்களாக அதீத பார்வை கொண்டு பார்க்கின்றது. புதிய அரசின் சபாநாயகரின் கருத்தின்படி, சபையானது உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளை தீர்மானிக்கின்ற பிரதான நோக்கங்களில் தமது கவனத்தைக் கொண்டுள்ளதோடு இவைகளுடன் சாராத அமைச்சுக்களின் வேலைகளையும் புதிய பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தலை மேற்பார்வையிடுவதையும் இணைப்பாக்கல் செய்கின்றது. வழக்கமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாட்டுப் பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பாக உள்ளதுபோல் இப்பாதுகாப்புச்சபையும் அதனுடைய அந்தஸ்தை அவ்வாறு ஒத்து தொழிற்படுகின்றது.

கபினெட்டானது 5 சத வீதத்தால் வருமானவரியை வெட்டுவதற்கு ஒரு சட்டவரைவை விரிவாக்கம் செய்வதற்கு இன்னுமொரு தீர்மானத்தில் உடன்பட்டுள்ளது. இது அடுத்துவரும் பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படவிருப்பதோடு வருகின்ற தேர்தல்களின் பின் உடனடியாக அமூல்படுத்தப்படவிருக்கின்றது.

அடுத்த செயல்முறை நடைமுறை வெளிப்படுத்தலாக இருப்பது, புதிய அரசானது எப்படியான நடைமுறை மூலம் முன்னைய அரசால் நடைமுறைப்படுத்திய நடைமுறைக்கு மாற்றாக தனது வேலைகளை நடைமுறைப்படுத்திக்காட்டி செல்வாக்குள்ள எதிர்த்தரப்பை வென்றெடுக்கப் போகின்றது. போக்குவரத்து மற்றும் நிர்மாண அமைச்சரான ஜில் தூ ரொபியன் என்பவர் தலைநகருக்கு அருகாமையில் ஒரு மூன்றாவது விமான நிலையத்துக்கான அடிப்படை திட்டங்களின் மதிப்பாய்வை அறிவித்தார் இத்திட்டங்கள் அவருடைய முன்னோடியான கம்யூனிஸ் கட்சியின் ஜோன் குளூட் கைசோவால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் அநேக மக்களிடம் இருந்து பெரியளவிலான எதிர்ப்பை எதிர்கண்டதோடு மட்டுமன்றி இத்திட்டமானது சூழலில் இரைச்சலையும் அதிக மாசுபடுதலையும் அதிகரிக்கும் விளைவை உண்டாக்கும் அபாயம் இருக்கின்றது.

இப்புதிய அரசு பொதுவாக இடதுசாரிகள் தொடர்புபட்ட வட்டங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆதரவால்தான் வெற்றிபெறமுடிந்தது. லூ மொண்ட் பத்திரிகையானது பிரான்ஸ்சுவா மித்திராண்ட் காலத்திலிருந்து சோசலிஸ்டுக்களுக்கு தனது ஆதரவைத்தெரிவித்து வந்தது. ஆனால் இம்முறை இப்புதிய அரசுக்கு தனது உயர்ந்த புகழ்ச்சியை வெளிக்காட்டியிருந்தது. ரபரினுடைய அரசு ஒரு சிறந்த நபரை நீக்கியிருந்ததாக இப்பத்திரிகை கருத்துரைத்திருந்ததோடு, நியமனமாகியிருந்த சுயேட்சை அமைச்சர்களான மேர் (பொருளாதாரம் மற்றும் நிதி), பெரி (கல்வி) குறிப்பிடும்படியான வெற்றிகர நியமன முயற்சியாக இது சிராக்குக்கு இருப்பதாக வலியுறுத்திக் கூறியது. மேலும் வெளியிட்ட கருத்தானது லு பெனுக்கு எதிரான அடியாக அரச செயலாளராக அல்ஜீரியப் பின்னணியுடைய சைபியின் நியமனத்தை சிராக் செய்ததாக கருத்து வெளியிட்டது.

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் சிராக்குக்கு ஆதரவளித்த அனைத்து பூர்சுவா சக்திகளின் ஐக்கியமானது சிராக்கினுடைய புதிய அரசிற்கான பரந்தளவிலான அங்கீகரிப்பைக் குறித்துக்காட்டுகின்றது. சிராக்குக்குப் பின்னாலுள்ள இந்தப் புதிய ஐக்கியமானது லு பெனை நிராகரிப்பதை குறைவாகவே செய்கின்றது. மக்களின் விசேடமான கோப அச்சத்திற்கும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய பெரியளவிலான வாக்களிக்காமையும் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் புரட்சிகர சோசலிஸ்டுக்கள் என தம்மை அழைத்துக் கொண்ட வேட்பாளர்களுக்கு கிடைத்த மூன்று மில்லியன் வாக்குகளையும் புறந்தள்ளி கணக்கில் எடுக்காது, இப் புதிய அரசிற்கான பல மரியாதைகளை அளித்துக் கொள்வதனுடாகவும் மேலதிக அழுத்தத்தை அரசுக்கு கொடுத்து லு பெனுடைய கோரிக்கைகளை இவ்வரசு நடைமுறைப்படுத்துவதே இந்தப் புதிய அரசினதும், அரசின் பின்னால் ஐக்கியப்பட்டுள்ள சக்திகளின் நோக்கங்களாக இருக்கின்றது.

See Also :

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மே2002 (முழு உள்ளடக்கல்)