World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Socialist Equality Party public meeting in Britain:

The Israeli-Palestinian conflict and the dead-end of Zionism

பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டம்:

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலும் சியோனிசத்தின் முட்டுச்சந்தும்

16 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி இலண்டன் மத்தியில், "21ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான முன்னோக்கு" என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த்தால் கூட்டத்திற்கு வருகைதர இயலவில்லை, பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன், மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிலைமை மீதாக உரை ஆற்றினார்.

மார்ஸ்டனின் உரையைத் தொடர்ந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீற்றர் சுவார்ட்ஸால், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் படிப்பினைகள் மீதாக உரை ஒன்று வழங்கப்பட்டது.

இரு உரைகளும் கூட்டத்திற்கு வருகை தந்தோரிடமிருந்து பல கேள்விகளை முன்னுக்குக் கொண்டு வந்தது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக உயிர்ப்புடைய கலந்துரையாடலைத் தூண்டியது.

கீழே, மார்ஸ்டன் வழங்கிய உரையை வெளியிடுகிறோம், இது இஸ்ரேலின் ஆளும் லிக்குட் கட்சியானது அந்த நாளுக்குப் பின்னர், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் பாலஸ்தீனிய அரசை ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று தீர்மானத்தை ஏற்பதற்கு முன்னர் வழங்கப்பட்ட உரை ஆகும்.

அந்தக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் அந்த தீர்மானத்தை வலியுறுத்தி இருந்தார், அது அவரது போட்டியாளர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவாளர்களால் மேசையில் வைக்கப்பட்டது, முன்னுக்குக் கொண்டு வரப்படவில்லை. ஆனால் மத்தியக் குழுவானது பிரம்மாண்டமான அளவில் அத்தீர்மானத்தை ஆதரித்தது.

****

ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் ஒரு மனித துயரம் திறந்துவிடப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய அரசாங்கமானது பல மாதங்களாக பாலஸ்தீன மக்களை நீடித்த இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருவது நூற்றுக் கணக்கான உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது. அவர்கள் இந்தவார முடிவில் காசா துண்டு நிலப் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அங்கு அகதிகள் முகாம்கள் ஜெனின் போல மூன்று மடங்கு அளவு இருக்கின்றன, ஆனால் பத்திரிக்கைகளுக்கு அவர்களின் இலக்குகள் பற்றியது அதிகமாய் கசிந்துவிட்டதன் காரணமாக, அதனைத் தாமதப்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற பாலஸ்தீனிய போராளிக்குழுக்களுக்கு அவர்களின் பாதுகாப்பைத் தயார்செய்வதற்கு நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், இராணுவமானது ஏற்கமுடியாத அளவுக்கு இஸ்ரேலிய சேதங்களை எண்ணி அஞ்சுகிறது. பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் ஆற்றொணா நிலையானது, செயலற்றதாக்க அல்லது டாங்கியைக் கூட அழிப்பதற்கு போதுமான அளவு உயர் வெடிபொருளை நிரப்பிய தற்கொலை குண்டு வெடிப்பாளர்கள் கொண்ட படையால் வழி நடத்தப்படும் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கையால் சுருங்கக் காட்டப்படுகிறது.

தங்களின் சொந்த எதிர்காலத்தையும் தங்களின் குடும்பங்களையும் பற்றி சிந்தித்தாக வேண்டி இருக்கும் இந்த இளைஞர்கள், தங்கள் மக்களின் தப்பி உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டத்தில் தங்களது வாழ்க்கையை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு மாற்றைக் காணவில்லை.

அரசாங்கம் உறுதிப்படுத்த குறைவாக அக்கறை காட்டும், காசா நடவடிக்கையை தாமதப்படுத்தும் இன்னொரு முக்கியமான காரணி, கணிசமான அளவு திரைக்குப் பின்னால் ஆன வாஷிங்டனில் இருந்து வரும் அழுத்தம் ஆகும். இது பற்றி நிறையவே கூறலாம். ஆனால் இராணுவ நடவடிக்கையானது இன்னும் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது, கைவிடப்படவில்லை.

மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிய அரசாங்கமானது, தற்கொலை குண்டு வெடிப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு பதிலாக சுத்தமாகத் திருப்பித் தாக்கும் நடவடிக்கையாக, பாலஸ்தீனிய நிர்வாகத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அடித்து நொறுக்கும் தனது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்கு விழைகிறது.

இந்தப் பொய்யானது இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தால் செய்யப்படும் அத்தகைய பிரச்சாரத்தை வழங்குகிறது. இஸ்ரேலிய ஆளும் கட்சியான லிக்குட் கட்சியின் மத்திய குழு, கட்டுப்படுத்தும் மற்றும் நிரந்தரக் கொள்கையாக பாலஸ்தீன அரசை உருவாக்குதலை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு கட்சி அர்ப்பணித்துக் கொள்வதை நாடும் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட இருக்கிறது.

அத்தகையதொரு தீர்மானம் ஒருபோதுமே சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூற இயல்பாகவே பிரதமர் ஏரியல் ஷரோன் விரும்பி இருந்தார். தானும் தனது தொழிற்கட்சி கூட்டாளிகளும் -விலைபோகும் ஷிமோன் பெரஸ் போன்றோர்- இஸ்ரேல் அமைதியை நாடுகிறது அதேவேளை அரஃபாத்தும் பாலஸ்தீனிய நிர்வாகமும் சியோனிச அரசின் அழிவை நாடுகின்றன என்று நம்பி ஏற்கச் செய்வதற்கான, என்றுமில்லாத வகையில் தெள்ளத்தெளிவான மற்றும் வெறிபிடித்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற பொழுது, கொள்கை சம்பந்தமான அத்தகைய வெளிப்படையான அறிவிப்பைச் செய்வது அரசியல் ரீதியாக இருக்கிறது என்பதை அவர் உணரவில்லை.

ஷரோனுக்கு முந்திய, எகுட் பாராக்கின் பயனற்ற தாராளமான அளிப்பினை அரஃபாத் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கூற்றின் மீது அரசாங்க கொள்கைப் பிரச்சாரம் மையப்படுத்தி இருந்தது. அது தண்டிக்கும் யுத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கப்பட்ட 90 சதவீத எல்லைப்பகுதிகளில் பாலஸ்தீனிய அரசாங்கத்தை நிறுவுவதாக இருக்கும்.

ஷரோன் பாலஸ்தீனிய நிர்வாகத்தின் அழிவை நாடுகிறார்

ஷரோன் விரும்பும் விளைவு, அவரின் இணங்கமறுக்கும் இலக்கு, மேற்குக் கரையிலும் காசா பகுதியிலிருந்தும் ஒவ்வொரு பாலஸ்தீனிய தனி நபரையும் வெளியேற்றுவது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை அகன்ற இஸ்ரேலாக ஐக்கியப்படுத்துவது என்ற உண்மையே ஆகும்.

இது தோல்வியுறும் பட்சத்தில், அடுத்த சிறந்த மாற்று எல்லாப் பக்கங்களிலும் இஸ்ரேலிய இராணுவங்களால் சூழப்பட்ட கையளவான பாலஸ்தீனிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவது. இவை ஒன்றுடன் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேலின் ஆதரவுடைய, அமெரிக்காவிற்கு நேரடியாக பதில் சொல்லக்கூடிய பொம்மை ஆட்சியால் அது நடத்தப்படும்.

ஷரோனின் நோக்கம் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழித்தல் என்பது உலகின் மிக மோசமாக வைக்கப்பட்ட இரகசியமாக இருக்கிறது. அளவுக்கு மீறிய சியோனிச ஆதரவு செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரை அதை வைத்திருக்க முடியாது, அதாவது இஸ்ரேலின் யுத்த்தை சட்டரீதியானதாக்க அழைக்க என்னென்ன பொய்கள் இருக்கின்றனவோ அவற்றை உமிழ்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றன.

செப்டம்பர் 2000ல் மலைக் கோவிலுக்கு ஷரோன் விஜயம் செய்ததில் இருந்து, 1993ல் கையெழுத்திட்ட மற்றும் இறுதி விளைவாக பாலஸ்தீன அரசை உருவாக்கும் ஒஸ்லோ உடன்பாட்டை வழிவிலகச் செய்யும் நோக்கத்துடன் திரும்பத் திரும்ப ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை அதிகரித்திருக்கிறார். அவர் பதவிக்கு வந்ததில் இருந்து அரஃபாத் பாலஸ்தீனிய ஒசாமா பின் லேடனாக நடத்தப்பட வேண்டும் என்றும் - அவருடைய சொந்த வார்த்தைகளில் "பயங்கரவாதி மற்றும் கொலைகாரர்" என்றும் வலியுறுத்தி இருக்கிறார்

தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் ரெகாவாம் ஜீவி படுகொலை செய்யப்படும் வரை, ஷெரோன் தன்னிடம் "பாலஸ்தீனிய பயங்கரவாதத்தை துடைத்துக் கட்ட "இரும்புக் கைமுஷ்டி தந்திரங்களை தான் பயன்படுத்தப் போவதாகவும், மற்றும் எல்லைப் பகுதியில் ஒரு யூதக் குடியேற்றத்தைக் கூட கலைக்கமாட்டேன் " என்றும் உறுதி அளித்திருந்ததாகவும் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.

ஷரோன் தன்னும் "ஜோர்டான் பள்ளத்தாக்கு எப்போதும் இஸ்ரேலிய இறையாண்மையின் கீழ் தொடர்ந்து இருக்கும். நான் பள்ளத்தாக்கு பற்றி பேசும்பொழுது, நான் குறுகலான துண்டுப் பிரதேசத்தைப் பற்றி கூறவில்லை மாறாக கிழக்குப் பாதுகாப்பு துண்டுப் பகுதி, அல்லன் சாலையின் மேற்கே உள்ள அதன் மேற்கு எல்லை குன்றுகளின் உச்சிப்பகுதி ஆகும்." இன்னும் எளிதாகச் சொல்வதானால், ஷரோன் இங்கு முழு மேற்குக் கரை மீதுமான என்றும் கூடிய கட்டுப்பாடு ஆகும் என வெளிப்படையாக அறிவித்தார். அவர் கிழக்கு ஜெருசலேம் மீது எந்த விதமான பாலஸ்தீனியக் கட்டுப்பாட்டிற்கும் ஆதரவு தர மறுத்தார் என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வர இருக்கின்ற லிக்குட் கட்சி கூட்டம் பற்றிய ஆசிரிய தலையங்கத்தில், பிரதான தாராண்மைவாத செய்தித்தாள் ஹாரெட்ஸ் பின்வரும் அருள்வாக்கு எச்சரிக்கையை செய்தது: "ஏரியல் ஷரோன் தீர்மானம் மீதான விவாதத்தையும் வாக்களிப்பையும் தடுக்கவில்லை என்றால், லிக்குட் மத்தியக் குழு உறுப்பினர்கள் அழிவுகரமான கொள்கைக்கு பொறுப்பாவார்கள். தேசிய வரலாறு அரசின் உண்மையான இருப்புக்கு இல்லை என்றால், அரசுக்கு சேதம் கொண்டு வருவதை, அதன் அபிவிருத்திக்கு இடருண்டாக்குவதை அவர்களுக்கு நினைவூட்டும்."

அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான பாலஸ்தீனியரின் கோரிக்கையானது "முழு சர்வதேச சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, மற்றும் அது தேசங்களுக்கு இடையிலான நடத்தை விதிமுறைகளாக, ஒழுக்கக் கட்டளையாக நிலைநிறுத்தப்படுகிறது மற்றும் கடந்த காலத்து இஸ்ரேலிய அரசாங்கங்களின் முடிவுகளாக ஆதாரம் கொண்டிருக்கிறது" என்று ஹாரெட்ஸ் விளக்கிச் செல்கிறது.

இருந்தும் அந்த செய்தித்தாளானது அத்தகைய முன்னோக்கு ஆளும் கட்சியின் உத்தியோக ரீதியான கொள்கையாக ஆகும் சாத்தியத்திற்கான காரணத்தை வழங்க முடியவில்லை, மற்றவகையில் அதனை "உணர்ச்சி வசப்பட்ட அவமதிக்கும் பழிச்செயலின் வெளிப்பாடு, காலாவதியாகிப்போன யூதவெறிக் கொள்கை பற்றிய கருத்தியல், மற்றும் யதார்த்தத்தையும் சம்பவங்களை முன்கூட்டிப் பார்ப்பதற்குமான திறனில் கவலைதரத்தக்க தோல்வியும்" என விவரித்தது.

இது ஒன்றையும் விளக்கவில்லை. அது ஹாரெட்ஸ் யதார்த்தத்தைப் பலனால் அறிவதற்குத் தவறியதை, அல்லது இன்னும் சரியாகச்சொன்னால் அதன் தலைமைக்கு அரசியல் யதார்த்தங்களை விளக்க விரும்பவில்லை என்று சாதாரணமாக அர்த்தப்படுத்துகிறது.

மாற்று ஒன்றை வழங்காதது ஒருபுறம் இருக்கட்டும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கம் இல்லாதது, தாராண்மைவாத அல்லது இடது சியோனிச வட்டங்களில் தோன்றும், ஹாரெட்ஸ் லிக்குட் கட்சியை எதிர்மறையாக "தேசிய வரலாறு" என்று அது அழைப்பவற்றால் மதிப்பிடப்படுவது பற்றி பேசுகிறது. பிரிட்டன் போன்ற நாட்டில் கருத்தியல் ரீதியாய் சீரழிந்து போன தாராண்மை பத்திரிக்கைககள் கூட அத்தகைய வார்த்தைகளில் பேசுமா என்பதை ஒருவர் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. இயக்கங்கள் எங்கும் போலவே இஸ்ரேலிலும், வரலாற்றுத் தூய்மை மற்றும் எளிமையால் மதிப்பிடப்படுகிறது. ஆனால் அங்கு யூத தேசம் என்பது புறப்பாட்டுப் புள்ளி ஆக இருந்தது மற்றும் அரசியல் சிந்தனையின் அனைத்துப் பிரதான சாயல்களின் வருகையாக இருக்கிறது.

தார்மீகப் பொறுப்பை இஸ்ரேல் இழப்பு

இஸ்ரேலின் தாராண்மை அறிவரைப் (புத்தி ஜீவிகளை) பொறுத்தவரை எடுத்துக் கொள்ளப்படும் அச்சம் என்னவென்றால், ஷரோன் அவரது நடவடிக்கைகளால் தேசிய செயல்திட்டத்தை இடருண்டாக்குகிறார் - அதாவது யூத அரசின் இருப்பையே ஆகும்.

அத்தகைய அக்கறைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஷரோனின் ஈவிரக்கமற்ற தன்மை, அரபு மக்களின் கடுஞ்சினத்தை எழுப்பும் மற்றும் அரபு அரசுகளில் தலைமையில் இருக்கும் பல்வேறு ஊழல் கும்பல்களைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டை பராமரித்தல் இயலாததாக இருக்கும் என்பது மிகவும் தெளிவான அச்சமாக இருக்கிறது.

ஆனால் இன்னொரு கவலை தெளிவாகவே சர்வதேச நிலைப்பாட்டுக்கு உரியது மற்றும் உண்மையில், இஸ்ரேலால் ஒருமுறை அனுபவிக்கப்பட்ட தார்மீகப் பொறுப்பு மற்றும் சட்டரீதியான தன்மை ஆகும். கிட்டத்தட்ட நாளாந்த அடிப்படையில், புதிய யூத எதிர்ப்பின் தோற்றம் பற்றிய பகிரங்கப் பேச்சுக்கள் சியோனிச ஆதரவு வட்டாரங்களால் பேசப்பட்டன மற்றும் கட்டுரைகள் இடம்பெற்றன.

பல பரவலான வேறுபட்ட இயல்நிகழ்ச்சியானது நாஜிக்களது தோல்விக்குப் பின்னர் இருந்து காணப்பட்டிராத அளவில், யூத விரோத உணர்வுகளை மேற்சுமந்து செல்லும் அம்சங்கள் படம்பிடித்துக் காட்டப்பட்டன. முழு அரபு உலகும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் யூத எதிர்ப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டனர். ஐரோப்பாவில் உள்ள வலதுசாரிக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஷரோனின் யுத்தத்தை விமர்சிக்கும் துணிவுள்ள எவருடனும் கலவையாய் தொடர்பு கொண்டிருந்தனர்.

வாஷிங்டனின் சொந்த "பயங்கரத்தின் மீதான யுத்தம்" என்பதுடன் எல்லா பிரதான வகைகளிலும் ஒத்ததான - பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான சட்டப்பூர்வ இராணுவ நடவடிக்கை என்று அவர்கள் விளக்குகின்றதை எதிர்ப்பதற்கான நியாயப்படுத்தல் சியோனிச வட்டாரங்களில் இருக்கமுடியாது- அப்பட்டமாக மறைக்கப்பட்ட யூதமக்களைப் பற்றிய வெறுப்பைத் தவிர. இன ஒழிப்பு மீதான குற்றப்பழியை ஒருவர் உணரும்பொழுது ஐரோப்பாவின் யூத எதிர்ப்பு "இயல்பு" தற்காலிகமாக அடங்கிவிட்டிருந்த போருக்குப் பிந்தைய காலகட்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

அத்தகைய அறிக்கைகள் சியோனிசம் யூத மக்களை இட்டுச் சென்ற பயங்கரமான அரசியல் முட்டுச் சந்தை விளக்குவதற்கு மட்டுமே சேவை செய்யும். யூத எதிர்ப்பின் வளர்ச்சி பற்றிய அபாயத்தை ஒருவரும் மறுப்பதற்கு விரும்பமாட்டார்கள். அதிவலதுசாரி கட்சிகள் மற்றும் புதிய பாசிச கட்சிகளினால் செய்யப்பட்ட கருத்தியல் ரீதியான மாற்றி அமைத்தல்கள் ஒரு பொருட்டல்ல, அதன் மேல் தோற்றத்திற்கு அடியில் எப்பொழுதும் யூதர்களுக்கு எதிரான குரோதம் இருக்கிறது. ஆனால் இது பல தொழிலாளர்கள் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட அறிவர்கள் (புத்தி ஜீவிகள்) உள்ளடங்கிய, பல இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் இஸ்ரேல் அரசுக்கு மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான அதன் கொடுமைப்படுத்தலுக்கு வளர்ந்து வரும் குரோதத்துடன் சர்வசாதாரணமாக சமப்படுத்த முடியாது.

தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாத நிலையில், ஒருவருக்கு மற்றதை ஊட்ட முடியும் - அதிவலதுசாரிகள் பாலஸ்தீனியர்களுடன் சில சந்தர்ப்பங்களில் அனுதாபம் தெரிவிப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளனர், மிக அடிக்கடி அவர்கள் விரும்புகின்ற பாதையிலும் பார்க்க முஸ்லிம் விரோத வெறுப்பைத் தூண்டிவிடலில் அக்கறை காட்டுவதாக இருக்கிறது. இருப்பினும் யூத மக்களுக்கு குரோதத்தின் உதயத்திற்கான பிரதான அரசியற் பொறுப்பு சியோனிசத்தின் அரசியல் வக்காலத்தில் கிடைக்கின்றது, அது யூதர்களை இஸ்ரேல் அரசுடன் இனம்காணல் மீதாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சியோனிசவாதிகள் ஒருவிதத்திலாவது, உண்மையான அரசியல் இயல்நிகழ்ச்சியின் திரிக்கப்பட்ட படத்தை முன்வைக்கின்றனர். ஐரோப்பிய யூதர்களுக்கு நேர்ந்த துயரத்தின் விளைவாக இஸ்ரேலால் அனுபவிக்கப்பட்ட பெரும் அரசியல் நல்வாய்ப்பு உண்மையில் ஒழுக்கக்கேடானதாக இருக்கின்றது.

ஆனால் இதற்கான காரணம் பிரதானமாக லுபென் அல்லது ஹைடரின் இனவாத வாய்ச்சவடாலில் காணப்பட்டிருக்கவில்லை, மாறாக ஜெனின் படத்தில் -அதன் வீடுகள் தரைமட்டமாக்கலில், அதன் பெண்கள் மற்றும் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படலில் இஸ்ரேலிய டாங்கிகளால் இடிந்த கட்டிடக் கற்கூளங்களுக்கு கீழே நசுக்கப்பட்ட உடல்களில் காணப்படக் கூடியதாக இருக்கின்றது.

சியோனிச முன்னோக்கின் தோல்வி

இஸ்ரேலின் வரலாற்று ரீதியான ஸ்தாபிதத்திற்கு முழுதும் ஆதரவு காட்டியவர்கள் உட்பட, பலர் யூதப்படைகள் இன்னொரு மக்களை நசுக்குதலைக் காண்கையில் திகைக்கின்றனர். எவ்வாறாயினும், திகைப்படைந்திருத்தல் போதுமானது அல்ல. ஒருவர் ஏன் இந்த சூழ்நிலை வந்திருக்கிறது என்பதைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அது சறுக்கிச் சென்று காட்டுமிராண்டித்தனமாக ஆவதை எதிர்க்க சரியான அரசியல் முன்னோக்கை விரிவுபடுத்த வேண்டும்.

சியோனிசத்தின் தோற்றத்தை முன்வைத்தலை அல்லது அதன் அடுத்தடுத்த பரிணாமத்தினை அரசியல் ரீதியாக விளக்குதல் இங்கு சாத்தியமில்லை. ஒருவர் அத்தகைய கட்டுரைகளை உலக சோசலிச வலை தளத்தில் காணமுடியும். ஆனால் சில அடிப்படை விஷயங்கள் சொல்லப்பட வேண்டும். இஸ்ரேல் அரசின் ஸ்தாபகர்களுள் ஒருவரான டேவிட் பென் குரியன் (David Ben Gurion) போன்றவர்கள், தாராண்மை, ஜனநாயக மற்றும் சோசலிச அரசை உருவாக்கும் தங்களின் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தனர். அவர்கள் அறிவார்ந்த மற்றும் முன்னேற்றகரமான யூத அறிவு ஜீவித மரபுகளுக்கு திரிக்கப்பட்ட வேண்டுகோளை விடுத்தனர்.

ஷரோனும் உத்தியோக ரீதியான சியோனிசத்திற்குள்ளே கருத்துவேறுபாடு கொண்ட மரபிலிருந்து வந்த அவரது லிக்குட் கட்சியும், திருத்தல்வாதிகள் எனப் பெயர் பெற்றனர், அவர்களது கருத்தியல் ஞானாசிரியர் விளாடிமிர் ஜபோட்டின்ஸ்கி (Vladimir Jabotinsky) ஆவார். அவர், இன்னொரு மக்களால்- பாலஸ்தீனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தில்- பலாத்காரம் மூலம் தவிர- யூத அரசு கட்டப்பட முடியும் என்ற பாசாங்கைப் பேணுதல் இயலாதது என விவாதித்திருந்தார்.

யூதக் கட்டுப்பாட்டை பலாத்காரமாக உறுதிப்படுத்துவதற்கான ஈவிரக்கமற்ற போராட்டத்திற்காக அழைப்பு விடுத்தார் மற்றும் "அரபுகளுடன் தானாக சமரசம் செய்து கொள்ளல் என்ற கேள்விக்கே இடமில்லை" என்று அறிவித்தார். இத்தாலிய பாசிசத்தால் அதிகமாய் செல்வாக்கு செலுத்தப்பட்டு, 1935ல் அவர் ஒரு பத்திரிகையாளரிடம் மிக வெளிப்படையாக, "நாம் யூத பேரரசை விரும்புகிறோம்" என்று கூறினார்.

இஸ்ரேலின் வரலாற்றில் முதல் இரு தசாப்தங்கள் தொழிற்கட்சியின் மரபு சியோனிஸ்டுகள் மற்றும் அதன் முன்னோடிகள் இஸ்ரேலிய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் சக்தியாக இருந்தனர். ஜனநாயகம் தொடர்பாக அவர்களின் வெளிப்படையான அறிவித்தல் பாலஸ்தீனியர்களை வெளியேற்றல் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல் ஆகியவற்றுக்காக அவர்களின் வலதுசாரி எதிராளிகளுடன் சேர்ந்து வேலை செய்வதிலிருந்து அவர்களை ஒருபோதும் தடுக்கவில்லை, மாறாக சியோனிசத்தை ஜனநாயக வண்ணங்களில் பூச்சு செய்வதற்கான முயற்சி இன்னும் அங்கே இருந்தது.

திருத்தல்வாத நிலைப்பாடு என்று அழைக்கப்படுவது சியோனிச செயல் முறை திட்டத்தை அடைவதற்கான அவசியமான வழிமுறைகள் மற்றும் பண்பு ஆகியவற்றின் சரியான வரலாற்று மதிப்பீடு என நிரூபித்திருந்தது என்று முரண்பாடின் அச்சம் எதுவுமின்றி சொல்வது இப்பொழுது சாத்தியமாக இருக்கிறது.

1967 யுத்தத்தின் பின்னர் இருந்து இதுவரை, இஸ்ரேல் ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாகக் கீழ்ப்படுத்தலின் மீது கட்டப்பட்ட ஒரு ஆட்சியாகவும் வெளிப்படையான விரிவாக்க மற்றும் இராணுவரீதியான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இஸ்ரேலிய அரசியலில் மேலாதிக்கம் செய்யும் சமூகத் தட்டினர் வெறிபிடித்த வலதுசாரி குடியேற்றக்காரர்கள் மற்றும் மதவெறியர்கள் ஆவர். இதற்கு மாறாக மிகவும் முற்போக்கு எண்ணம் கொண்ட மற்றும் மதச்சார்பற்ற யூதத் தொழிலாளர்கள் தங்களின் முன்னுரிமைக்குரிய கட்சிகளாக- எடுத்துக்காட்டாக தொழிற்கட்சி மற்றும் மெரெட்ஸைக் (இடதுசாரிக் கட்சி) கண்டிருக்கின்றனர், அவர்கள் அதிவலதுசாரிப் போக்கிற்கு எந்த விதமான மாற்றையும் வழங்கத் திராணியற்று இருக்கின்றனர்.

தொழிற் கட்சியால் தொடரப்பட்டிருந்த அமைதி வாக்குறுதி பரிதாபகரமாகத் தோல்வி அடைந்தது. சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவரான, ஒஸ்லோ உடன்பாட்டினை உருவாக்கிய பிரதானமானவர்களுள் ஒருவரான இட்சாக் ராபினின் வாழ்க்கையானது, பாசிச மாணவ கொலையாளியின் துப்பாக்கிக் குண்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அவருடன் இணையாக பரிசு வென்ற ஷிமோன் பெரஸ், இப்பொழுது ஷரோனின் வலதுபுறம் அமர்ந்து கொண்டு, பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் எந்த வாய்ப்பையும் அழிக்கும் எண்ணம் கொண்ட அரசாங்கத்திற்கு தலைமை வக்காலத்து வாங்குபவராக இருக்கிறார். ஒஸ்லோவின் பலனை கொண்டுவருவதற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தின் பேரில் தேர்ந்து எடுக்கப்பட்ட எகுட் பாராக், இன்று ஷரோனுக்கு முழுமையாக ஆதரவு தருகிறார்.

இது எதிர்பாராதது அல்ல. பாராக்கும் ஷெரோனும் -மற்றும் விரிவாகச் சொன்னால் தொழிற்கட்சியும் லிக்குட் கட்சியும்- அவை வேறுபாடுகளைவிட எப்போதும் பொதுவானவற்றையே கொண்டிருந்தன. அல்லது இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பொது மூலோபாயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் தந்திரோபாயத்தில் வேறுபட்டார்கள். நோம் சோஸ்கி சனிக்கிழமை கார்டியன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையில் ஒஸ்லோ உடன்பாட்டின் உண்மையான பண்பு பற்றி சரியாக கருத்தறிவிப்பு செய்தார்.

அவர் எழுதுகிறார்: "ஒஸ்லோ 'அமைதி நடவடிக்கை', 1993ல் ஆரம்பமானது, ஆக்கிரமிப்பின் முறை மாற்றப்பட்டது, அடிப்படைக் கருத்துரு மாற்றப்படவில்லை. எகுட் பாராக்கின் அரசாங்கத்துடன் சேருவதற்கு சற்று முன்னர், வரலாற்றாசிரியர் ஷ்லோமோ பென்-அமி, 'ஒஸ்லோ உடன்பாடுகளானது, ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க்கைக்காக சார்ந்திருப்பதன் மேல், புதிய காலனித்துவ அடிப்படையில் நிறுவப்பட்டன' என்று எழுதினார். அவர் விரைவில் 2000ல் காம்ப் டேவிட் அமெரிக்க- இஸ்ரேலிய முன்மொழிவுகளின் கட்டிடக் கலைஞரானார், அது இந்த நிபந்தனையில் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 200 சிதறிய பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டனர். பில் கிளிண்டனும் இஸ்ரேலிய பிரதமர் பாராக்கும் அபிவிருத்தியை முன்மொழிந்தனர்: உண்மையில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் மூன்று மண்டலங்களாக (ஆட்சிப் பகுதிகளாக) வலுப்படுத்தப்படல், பாலஸ்தீனிய செய்தித் தொடர்புகளின் மையமான, கிழக்கு ஜெருசலேத்தின் சிறு பகுதியான நான்காவது மண்டலத்திலிருந்தும் பிரிக்கப்பட்டிருத்தல். ஐந்தாவது மண்டலமாக காசா இருந்தது."

பின்னர் சோம்ஸ்கி, தொழிற்கட்சியின் மோசே தயானை மேற்கோள் காட்டுகிறார், அவர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், "எங்களிடம் தீர்வு இல்லை, நீங்கள் நாயைப் போல தொடர்ந்து வழுங்கள், விரும்புகிறவர்கள் வெளியேறலாம்" என்று இஸ்ரேலிய மந்திரிசபையில் கூறியது பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்." அது சவால் செய்யப்பட்ட பொழுது, அவர் பென் குரியனை மேற்கோள்காட்டுவதன் மூலம் பதில் அளித்தார், பென் குரியன் கூறியிருந்தார், "சியோனிச பிரச்சினையை ஒழுக்கக் கண்ணோட்டத்திலிருந்து அணுகுபவர் சியோனிசவாதி அல்ல."

பாலஸ்தீனியருக்கு ஒஸ்லோ என்ன வழங்குகிறது என்பதை ஒருவர் மேலும் சேர்க்க முடியும் -அது மிக ஏழ்மை, மிகக் கொடுமை மற்றும் சியோனிச குடியேற்றங்களின் இரட்டிப்பாக்குதல் ஆகியனவாக இருந்தது. பாராக்கின் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் 90 சதவீத்த்தை வழங்கல் என்று கூறப்படுவது ஒரு கட்டுக்கதை ஆகும். அகன்ற ஜெருசலேம் புதிய யூத புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கி விஸ்தரிப்பதாக இருந்தது, அதில் கிட்டத்தட்ட அரபு கிழக்கு ஜெருசலேமை தவிர்த்தல், மற்றும் மேற்குக் கரையின் 30 சதவீதம் பகுதியை மற்றும் மிக முக்கியமான பகுதியைக் கொண்டிருக்கிறது. இது பாராக்கின் கணக்கீடுகளில் விலக்கப்பட்டிருந்தது.

யூதக் குடியேற்றங்கள் மேலும் 15 சதவீத மேற்குக்கரைப் பகுதியில் உருவம் கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இராணுவச் சாலைகள் பாலஸ்தீனிய எல்லைப் பகுதிகளை குறுக்கு மறுக்காக வெட்டி முன்மொழியப்படும் அரசின் -அத்தகைய வார்த்தையை ஒருவர் பயன்படுத்த முடியும் என்றால்- அடுத்தடுத்த பகுதியாக இருக்கச் செய்யாது மற்றும் அதனால் முழு விஷயத்தையும் உருப்படச் செய்யாமல் ஆக்கும். பிறகு, தொண்ணூறு சதவீதம் அதிகம் ஒன்றல்ல.

சியோனிசத்தின் சிறப்பியல்புகள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் இருக்கின்றன.

மத பிரத்தியேகவாதத்தின் கருத்தியல் மீது அடிப்படையாகக் கொண்டும் இன்னொரு மக்களின் ஜனநாயக உரிமைகளை பலாத்காரமாக நசுக்குவதன் மூலமும் ஒரு ஜனநாயக அரசைக் கட்டுதல் சாத்தியமானது அல்ல. சியோனிசத்துடன் ஜனநாயகத்தை சமரசப்படுத்த முயற்சிப்பவர் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு நாடி, அதேவேளை இஸ்ரேல் அரசுக்கு தங்களின் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிப்பவர்கள் மறைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த பம்மாத்து சரிவராது. ஜனநாயகத்துக்கான அர்ப்பணிப்பு மற்றும் தேசியவாதத்தில் நம்பிக்கை இவற்றுக்கிடையில் கட்டாயம் தேர்வு ஒன்று செய்யப்பட வேண்டும்.

அரபு தேசியவாதத்தின் திவால்

சியோனிசத்தால் உண்டு பண்ணப்பட்ட கருத்தியல் ரீதியான வழிவிலகலின் மிகவும் திகைக்கவைக்கும் விளக்கிக்காட்டல்களில் ஒன்று இஸ்ரேலில் யுத்த எதிர்ப்பு உணர்வு மிகவும் அடிக்கடி அரபுகளையும் யூதர்களையும் நிறவெறி ஒதுக்கல் பாணியில் பிரித்தலுக்கான விவாதத்தின் பின்னே அணிதிரளாமல் இருப்பதாக இருக்கிறது. இந்தவார இறுதியில் 100,000 மக்கள் மேற்குக் கரையிலும் சாசாவிலும் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராகவும் "இருமக்களுக்கு இரு அரசு" உருவாக்கப்படுவதற்கு எதிராகவும் எதிர்ப்பைக் காட்டினர். அத்தகைய எதிர்ப்புக்கள் யூத மக்கள் மத்தியில் பாலஸ்தீனியர்களை ஷரோன் கொடுமைப்படுத்தலுக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் அமைதி இன்மையின் குறிகாட்டலாக இருக்கின்றன மற்றும் ஜனநாயக தீர்வு சாத்தியம் என்பதன் நம்பிக்கையின் குறிகாட்டலாக இருக்கின்றன. மாறாக இஸ்ரேலின் உத்தியோக ரீதியிலான அமைதி இயக்கத்தின் ஆரம்பப்புள்ளி எப்பொழுதும் சியோனிச அரசைப் பராமரிப்பதன் தேவையாக இருந்து வருகிறது.

இந்த வேலைத் திட்டத்தைப் பொதிந்து வைத்துள்ள கட்சி, மெரெட்ஸ் இப்பொழுது அமைதி வேண்டி வந்துள்ளது, மற்றும் தொழிற்கட்சி இடதுகள் அவர்களுடன் வேலை செய்கின்றன. இவர்கள் பாலஸ்தீனியர்கள் தங்களின் ஏதோ ஒரு சொந்த அரசுவடிவத்தை அனுமதித்தால்தான் இது சாத்தியமாகும் என வாதிடுகின்றனர். இருப்பினும், அவர்கள் எந்த ஒரு பாலஸ்தீன அரசின் எல்லைகளும் முற்றுமுழுதாக இஸ்ரேலின் பாதுகாப்பு தேவைகளால் தீர்மானிக்கப்படும் என வலியுறுத்துகின்றனர், மற்றும் இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்கள் வேலை செய்வது பாதுகாப்புக்கு அபாயம் நேரக்கூடியதாக இருப்பது நிச்சயமாகக் குறைந்தபட்சமாக்கப்பட வேண்டும் என்கின்றனர். சுருங்கக் கூறின்," இரண்டு - அரசுகள்" நிலைப்பாடு சியோனிசத்தை இன்றியமையா தகுதிக்கூறாக ஏற்றுக் கொள்கிறது, சியோனிசம் என்பது யூதருக்கும் அரபுகளுக்கும் சகவாழ்வு சாத்தியமின்மை என்பதாகும்.

பகுதிக்குள்ளே முழுமையும் கூட இருக்கிறது. சியோனிசத்தின் தோல்வி -யூத மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இருவருக்குமான துயரம்- தேசிய கருத்தியலின் அடிப்படையில் எமது காலத்திய அத்தியாவசிய ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகள் எதனையும் தீர்ப்பதற்கு இயலாமையின் வெளிப்படுத்தலாக மட்டுமே இருக்கிறது.

இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் மீது சியோனிசம் பிடிமானம் வைத்திருப்பதற்குக் காரணங்களுள் ஒன்று தங்களின் நாட்டை முன்னேற்றம் அடைந்த ஒன்றாக, தங்களின் அரபு அயலார்களுடன் ஒப்பிடுகையில் ஜனநாயக மோட்சம் என படம்பிடித்துக் காட்டும் இஸ்ரேலிய தலைவர்களின் திறமையாக இருந்து வந்திருக்கிறது. ஜனநாயகமானது என்று அழைப்பதற்குத் தகுதியாக மத்திய கிழக்கில் ஒரு ஆட்சி கூட கிடையாது. அனைத்தும் சிறு மற்றும் நம்பமுடியாத அளவு செல்வந்தத் தட்டுக்கும் பொதுவாக ஏழ்மை பீடித்த மக்களுக்கும் இடையிலான வாய்பிளக்கும் இடைவெளியால் பண்பிட்டுக் காட்டப்படுகிறது. அரசியலானது அரசை அரை நிலப்பிரபுத்துவ நிலையில் நடத்தும் கையளவேயான குடும்பங்களால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது.

மேலும் பாலஸ்தீனியரின் துயரம் முற்றிலும் சியோனிச ஒடுக்குமுறையால் விளைந்ததல்ல. பாலஸ்தீனியர்கள் தாங்களே இஸ்ரேலைத் தோற்கடித்துவிட முடியாது மற்றும் அவ்வாறு செய்வது அவர்களின் முன்னோக்காக ஒருபோதும் இருந்ததில்லை. பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் அரபு ஆட்சியாளர்களைப் பார்த்தது, ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக பல காட்டிக் கொடுப்புக்களை அது சந்தித்தது.

உலக அரசியலானது மேற்குநாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான குளிர் யுத்த மோதலினால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்த பொழுது, பலவேறு அரபு ஆட்சியாளர்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு தோற்றத்தை முதன்மைப் படுத்திக்கொள்ளல் சாத்தியமாக இருந்தது. அரபு முழுமைவாதம் சோசலிசத்திற்கு பிரபலமான கருத்தியல் ரீதியான மாற்றீடாக முன்னெடுக்கப்பட்டது. அதனால் ஏகாதிபத்திய ஒடுக்கு முறையிலிருந்து அரபு மக்களை விடுவிக்க தேசிய அடிப்படையை வழங்க முடிந்தது. இந்தப் போராட்டத்தின் ஈட்டி முனையாக பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை அடைதலை எகிப்தின் நாசரும் ஏனையோரும் பறைசாற்றினார்கள். ஆகையால் பாலஸ்தீனியரின் துயரம் அரபு தேசிய செயல் திட்டத்தின் இறுதித் தோல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அரபு அரசுகளின் பங்கைப் பொறுத்தவரை சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது எந்தவிதமான தீவிர பாசாங்குகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது -இந்த உண்மை அதன் முழு வெளிப்பாட்டை 1991ல் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்திற்குப் பின்னால் அரபு அரசுகள் அணிவகுத்து நின்றதில் கண்டது. அரபு முதலாளித்துவத்தின் சூழ்ச்சித்திறமுடன் கையாளுவதற்கான இடம் மறைந்து போய்விட்டது மற்றும் ஏகாதிபத்தியத்துடனான அவர்களின் அடிப்படை உறவு வெளிப்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது.

தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கமானது ஏகாதிபத்தியத்திடமிருந்து உண்மையான பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை அடையத் திராணியற்றது. அரபு ஆட்சிகள், பரந்த வெகு ஜனங்களின் இயக்கத்தின் உற்பத்தியாகத் தோன்றி இருக்கும் ஆட்சிகள் கூட எண்ணெய் வளங்களின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டின் காரணமாக பெரும் சக்தி உடையதாய் காணப்பட்டாலும், ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஐரோப்பா மற்றும் ஜப்பானால் மேலாதிக்கம் செய்யப்படும் உலகப் பொருளாதாரத்திற்குள்ளே செயல்படுகின்றன. ஆகையால் அத்தியாவசிய ரீதியில் அவை பிரதான வல்லரசுகளின் பெரும் செல்வந்த பணியாட்களாக தொழிற்படுகின்றனர்.

அவர்களின் சொந்த செல்வமானது தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரச் சுரண்டலின் மீது சார்ந்திருக்கிறது மற்றும் அவர்களின் ஆட்சிக்கு எழும் சவால் தொழிலாள வர்க்கத்துக்குள்ளே தோன்றுவது தொடர்பான அவர்களின் அச்சம், ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதில் பிரதான காரணியாக இருக்கின்றது.

அரபு முதலாளித்துவ வர்க்கம் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக தாம், மேற்கொண்ட அரபு முழுமைவாதத்தினை (Pan-Arabism) கைவிட்டிருக்கிறது. அவர்கள் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சமாதானத்தை செய்துள்ளனர் மற்றும் பாலஸ்தீனிய பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தீவிரமான ஆபத்து நிறைந்த வளம் என்று பார்க்கின்றனர், ஆகையால் அவர்களின் சொந்த சலுகைகளுக்கும் ஆட்சிக்கும் ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கின்றனர்.

மார்க்சிஸ்டுகள் வரலாற்று ரீதியாக அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான முன்னோக்கை முன்னெடுத்திருக்கின்றனர். அதன் நோக்கம் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதாகும். இந்தப் பிராந்தியத்தின் அனைத்து மக்களும் பயனடைவதற்காகவும், அதே விஷயத்திற்காக முழு உலகின் மக்களுக்காகவும், இப்பிராந்தியத்தின் வளங்களின் பகுத்தறிவு பூர்வமான அபிவிருத்திக்கான அடிப்படையை இது மட்டும் தான் உருவாக்க முடியும். அந்த முன்னோக்கிற்கு எல்லா மாற்றீடும் -மிக ஸ்தூலமான மற்றும் யதார்த்த பூர்வமானது என்று பறைசாற்றப்படும் மாற்றீடுகள் - தோல்வி அடைந்துள்ளன.

இது யூத மற்றும் அரபு தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமான பிரச்சினை அல்ல. மத்திய கிழக்கில் நடப்பது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பிரதான அக்கறைக்கு ஆளாகி உள்ளது. உலகில் மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் இடம் பெற்றதை விடவும் அதிகம் உயிர்களைக் கொன்ற இரத்தம் தோய்ந்தது என்று கூறப்படும் பல மோதல்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் ஒன்று கூட பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கவில்லை.

மத்திய கிழக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான எமது செய்தி உள்ளடக்கத்தில், உலக சோசலிச வலைதளமானது, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் நீதியான தீர்வை நாடுவதாக புஷ் நிர்வாகத்தால் செய்யப்பட்ட கூற்றுக்களை கடுமையாய் வாதிட்டு தவறென்று காட்டுதலுக்கு கணிசமான அளவு கவனத்தை அர்ப்பணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருந்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு

திறக்கப்பட்டு வருகின்ற எல்லா வளைவு நெளிவுகளையும் விவரித்தல் சாத்தியமானதல்ல ஆனால், தனது முன்னோடி பில் கிளிண்டனை எள்ளி நகையாடி புஷ் ஆட்சிக்கு வந்தது, இஸ்ரேலிய- பாலஸ்தீனிய மோதலில் அதிக தலையீட்டைச் செய்வதற்காகும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இருந்தும் இப்பொழுது இஸ்ரேலிய - பாலஸ்தீனிய பிரச்சினை வேறு எதனையும் போலன்றி புஷ் வெள்ளை மாளிகையில் இடம்பெற்று வருகிறது. அரசு செயலாளர் கொலின் பாவெல் மற்றும் உதவி ஜனாதிபதி டிக் செனி உள்பட பணிக் குழுக்கள் அனுப்பப்பட்டன. புஷ் பல்வேறு அரபு அரசுகளின் தலைவர்களையும் அதேபோல ஷரோனையும் சந்தித்திருக்கிறார். அவரும் அவரது ஆலோசகர்களும் நூற்றுக் கணக்கான தொலைபேசி அழைப்புக்களை செய்துள்ளனர் மற்றும் புஷ் பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்கு தனது ஆதரவையும் கூட பறைசாற்றி இருக்கிறார்.

இருந்தும் அதற்கு மாறாக விரிவான பாசாங்கு இருப்பினும், புஷ்-இன் வெள்ளை மாளிகை அதன் இஸ்ரேலிய கூட்டாளிக்கு எல்லா அடிப்படை விஷயங்களிலும் உண்மையாக தொடர்ந்து இருந்து வருகின்றது. ஷரோனின் இராணுவத் தாக்குதல், விரும்பினால் எந்த வேளையும் அமெரிக்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க முடியும். இஸ்ரேல் அதன் உயிர் பிழைப்புக்காக முற்றிலும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது மற்றும் பெரும்பாலான வெறித்தனமான வலதுசாரி குடியேற்றக்காரர்கள் இதனை அறிவார்கள். பதிலாக புஷ் ஜனாதிபதி இஸ்ரேலின் பங்கிற்கு கட்டுப்படுத்துமாறு சம்பிரதாயப் பூர்வமான அழைப்புக்களை செய்து கொண்டு, அதேவேளையில் பாலஸ்தீனியர்களை குற்றத்திற்கு உரியவர்களாகப் படம்பிடித்துக் காட்டும் இரண்டக விளையாட்டை விரிவுபடுத்துவதில் பங்காற்றியது.

இருப்பினும், குறைந்த பட்சம் தந்திரோபாயங்கள் மற்றும் முன்னுரிமைகள் இவற்றின் நிலைப்பாட்டிலிருந்து இரு அரசாங்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் யதார்த்தமானவை.

ஷரோன் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பதற்கான தனது திட்டத்தை புஷ்-இன் "பயங்கரத்திற்கு எதிரான யுத்தம்" என்பதில் முதலாம் முன்னுரிமையாக ஏற்கப்பட வேண்டும் என விரும்புகிறார். ஆனால் புஷ் முன்னுரிமை எங்கும் உள்ளது. "பயங்கரத்திற்கு எதிரான யுத்தம்" என்பதின் முதற் கட்டம் ஆப்கானிஸ்தானில் குண்டு போடுவதாக இருந்தது. அதன் நோக்கம், காஸ்பியன் கடலோர எண்ணெய்ப் படுகையில் உள்ள எரிவாயு மற்றும் தோண்டி எடுக்கப்படாத பெரும் எண்ணெய் வளங்களை எடுத்தல் மற்றும் விநியோகித்தல் மீதான மேலாதிக்கத்தை நிலை நாட்டும் பொருட்டு மத்திய ஆசியாவில் குறிப்பிடத்தக்க அளவு அமெரிக்க இராணுவத்தை நிறுவுதலாக இருந்தது.

அடுத்த கட்டம் ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை அறிவிக்கும் மற்றும் அந்த நாட்டை மாற்றுதற்கான அமெரிக்க திட்டமாகும் மற்றும், விஸ்தரிப்பதன மூலம் முழு மத்திய கிழக்கையும் அமெரிக்க இராணுவ ஆட்சிக் காவல் பகுதியாக மாற்றல். இவ்விரு நடவடிக்கைகளும் உலகின் நன்கறிந்த எண்ணெய் வளங்களின் பரந்த மொத்தப் பகுதி மேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை வழங்கும். அது அமெரிக்காவை அதன் போட்டியாளரான ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பொருளாதாரங்களின் குரல் வளையை நெரிக்கும், சவால்செய்ய முடியாத உலக மேலாதிக்கக்காரனாக ஆக்கும்.

இந்த பரிசின் மீது கண்களை நிலைப்படுத்திக் கொண்டு, புஷ் நிர்வாகம் ஷரோன் மீது சில மட்டுப்பாடுகளைத் திணித்தல் அல்லது குறைந்த பட்சம் அவ்வாறு செய்வதாக காணப்படல் அவசியம் என்று உணர்ந்துள்ளது. அவர்களின் அனைத்து கலந்துரையாடல்களிலும், பாலஸ்தீனியர்கள் இன்னும் ஊனமாக்கப்பட்டு மற்றும் கொலைசெய்யப்படுகின்ற அதேவேளை பாக்தாதின் மீது குண்டு வீச்சு ஆரம்பித்தால், "வீதி" - அரபு தொழிலாள வர்க்கத்திற்கான பிரபலமான இடக்கரடக்கலான வார்த்தை - வெடித்தெழும் என அரபு ஆட்சியாளர்கள் புஷ்ஷை எச்சரித்தனர்.

ஆகையால், இலட்சக் கணக்கான உயிர்களைப் பலி எடுக்கும் யுத்தத்திற்கு வழி அமைக்கும் பொருட்டு, தற்போதைக்கு இரண்டாவது சிறந்த மாற்றீடை -உறுதியாய் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டின் கீழான மிகவும் குறைக்கப்பட்ட பாலஸ்தீனிய இருப்பை -ஷரோன் ஏற்றுக் கொள்ளுமாறு வெள்ளை மாளிகையானது வலியுறுத்தி வருகிறது.

புஷ் நிர்வாகத்திற்குள்ளே இந்த தந்திரோபாய சூழ்ச்சிகளை மன்னிக்க முடியாத பின்வாங்கல் மற்றும் பாலஸ்தீனியர்களை அழிப்பதற்கான பச்சைவிளக்கு காட்டுவது போன்றதைத்தவிர வேறு எதுவுமில்லை எனக் கருதும் சக்திமிக்க குரல்கள் இருக்கின்றன என்பது சொல்லப்பட வேண்டும். எது எவ்வாறாயினும், கடந்த வருடங்களில் இஸ்ரேலிய சமூகத்தின் உயர் மட்டங்களுக்கு உயர்த்தப்பட்டிருக்கும் மற்றும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பாசிச தட்டினரை கட்டுப்படுத்தும் நிலையில் நீண்டகாலத்துக்கு ஷரோன் இருக்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை மற்றும் இராணுவ தீர்வுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டிற்காக அமெரிக்க ஆதரவில் அவர்களின் சக அந்தஸ்துள்ள ஆட்களை கூட்டாளிகளாகக் கொண்டுள்ளனர்.

ஷரோனின் பிரதான போட்டியாளரான, பின்யமின் நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் லிக்குட் கட்சியின் மத்திய குழுவுக்கு பாலஸ்தீனிய அரசு உருவாக்கத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை பின்னின்று தூண்டி விடுகின்றனர். அவர்கள் ஷரோனை ஊசலாடுபவர் என்றும் அமெரிக்க அழுத்தத்தின் முன்னே அவரது தந்திரோபாய நகர்வு மன்னிக்க முடியாதது என்றும் கருதுகின்றனர். நெதன்யாகுவின் பிரதான சுலோகம், விளக்கிக் காட்டினால் "பாலஸ்தீனிய அரசு தற்கொலைக்கு சமமானது" என்பதாகும்.

பாலஸ்தீனிய பிரச்சினை பற்றி, அல்லது உண்மையில் யூத பிரச்சினை பற்றி நாம் பேசும்பொழுது, யுத்தத்தை நோக்கிய ஏகாதிபத்திய ஒட்டத்துக்கு எதிராக உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்கான தேவையின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

இறுதி ஆய்வில், மத்திய கிழக்கின் தலைவிதியானது, ஐக்கிய அமெரிக்க அரசுகள் மற்றும் ஐரோப்பாவில், இராணுவ மற்றும் பொருளாதார கீழ்ப்படுத்தலுக்கான அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பெரு முதலாளிகளின் அரசியல் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படும் அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பிரதான சேனைகளால் இதனைத் தடுப்பதற்கு அரசியல் ரீதியாய் அவசியமானதைச் செய்வதால் தீர்மானிக்கப்படும்.

முதலாளித்துவத்தின் சூறையாடலுக்கு சுதந்திரமான (சுயாதீனமான) பதிலை தொழிலாள வர்க்கம் சூத்திரப்படுத்தலில் இருந்து அதனைத் தடுக்கும் தற்போதைய அரசியல் திசைவழிவிலகல் மற்றும் கருத்தியல் குழப்பத்தை கடந்து வருவதற்கு தேவையான தலைமையைக் கட்டி அமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நாடுகிறது.

மத்திய கிழக்கில் நிகழும் சம்பவங்களுக்கு எமது மனப்பாங்கை இணைக்கும் அடிப்படைப் பிரச்சினை இதுதான் மற்றும் தோழர் பீற்றர் சுவார்ட்ஸ் குறிப்பிடப் போகும் பிரெஞ்சு நிகழ்ச்சிகளின் அரசியல் முக்கியத்துவமும் இதுதான்.