World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Crack Down on Internet Cafes in China Follows Beijing Fire

பெய்ஜிங்கில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து சீனாவில் இணைய நிலையங்களை நசுக்கல்

By John Chan
22 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன்16 அன்று அதிகாலையில் பெய்ஜிங் பல்கலை கழக மாவட்டத்தில் உரிமம் இல்லாத "Lanjisu" இணைய நிலையத்தில் (Internet Cafe) தீ மூண்டது. உத்தியோகரீதியான தகவலின்படி சனிக்கிழமை இரவு, இணையத்தைப் பார்வையிடுவோரும் ஆகிய பொழுதுபோக்கு விளையாடுவோரும் பல்கலைக் கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகிய 24 பேர் உயிரிழந்தனர். மற்றும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் ஒருவர் ஜூன் 20 அன்று இறந்துபோனார்.

பல வாரங்களுக்கு முன்னால் Cafe நிர்வாகம் தடை செய்திருந்த இரண்டு சிறுவர்களை போலீஸ் கைது செய்து, தீயை மூட்டியதாக அவர்கள் மேல் குற்றம் சாட்டியது. மேலும் போலீசாரின்படி சிறுவர்கள் இணைய நிலைய வாசலை நோக்கிச் செல்லும் படிக்கட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மேலாளரையும் கைதுசெய்ய கைதாணை பிறப்பித்துள்ளனர். இணைய நிலையத்தில் அவசரத்திற்கு வெளியேறும் வாசல்கள் இல்லை. அறிவிக்கப்படாத போலீசின் திடீர் சோதனையை தடுக்க அதன் முன்கதவு பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் வைத்து பூட்டப்பட்டிருந்தன. இளைஞர்கள் பலர் பூட்டப்பட்ட ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டும் கைகளை ஆட்டிக்கொண்டும், "எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள்! நாங்கள் சாகவிரும்பவில்லை!" என தங்களைக் காப்பாற்றச் சொல்லி கூச்சலிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் டுக்கு ஒரு உள்ளூர் நபர் கூறினார். ஒரு ஓய்வு பெற்ற (இளைப்பாறிய) தொழிற்சாலை ஊழியர் ஜன்னல் கம்பியைக் கழற்றி பல இளஞர்களைக் காப்பாற்றினார்.

உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் இந்த பரிதாபமான சம்பவத்தினை ஒரு சாக்காக வைத்து இணைய நிலையங்களை பயன்படுத்தலை தடுக்க முயல்கின்றனர். பெய்ஜிங் நகர மேயர் நகரத்தில் உள்ள எல்லா இணைய நிலையங்களையும் --இவற்றில் 200 உரிமம் பெற்றுள்ளவை மற்றும் 2200 உரிமம் பெறாதவை என்று மதிப்பிடப்படுகின்றன-- மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் அல்லது மிகப்பெரிய அளவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளன. மேயர் கூற்றுப்படி, அடுத்த மூன்று மாதங்களில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய உரிமங்கள் எந்த இணைய நிலையத்திற்கும் வழங்கப்படமாட்டாது என மேயர் கூறியுள்ளார். தீவிபத்திற்கு முன்னர் உரிமங்கள் பெற்றவர்கள் கூட "தகுந்த தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா" என மறுபடியும் சான்றளிக்கப்பட வேண்டும்.

பெய்ஜிங்கின் வழிகாட்டலைத் தொடர்ந்து, மற்ற பெரிய நகரங்களான ஷாங்காய் மற்றும் டியான்ஜின் ஆகியன இணைய நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்து உள்ளன. ஜூன் 18 அன்று, ஷாங்காய் டெய்லி (Shangai Daily), நகர அதிகாரிகள் நகரத்தின் 1000 சட்ட விரோதமான இணைய நிலைய இயக்குதல்களை உடனடியாக நிறுத்த "அவசர நடவடிக்கைகளை" பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததாக செய்தி வெளியிட்டது. ஷாண்டோங் (Shandong) மாகாணத்தில் செயல்படுவதாக நம்பப்படும் 6,000 இணைய நிலையங்களை "சோதனை செய்வதற்கு" ஆய்வாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இணைய நிலையங்களில் அதிகப்படியான சாவுகளுக்கு காரணமான -மூடப்பட்ட கதவுகள், பூட்டப்பட்ட ஜன்னல்கள், தீயிலிருந்து தப்பித்தல் இல்லாமை- சீனாவில் மிகப் பொதுவில் காணப்படும் ஒன்றாகும். வருடா வருடம் சீனாவில் கட்டிடங்கள் இடிந்து விழுவதில், தீ விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர், அது அதிகாரிகள் சாதாரண கட்டிட விதிகளையும் பாதுகாப்பு விதிகளையும் நடைமுறைப்படுத்த தவறுவதில் இருந்து கிளைத்தெழுகிறது. முதலாளிகளும் அரசு அதிகாரிகளும் ஒத்துப்போகின்றனர். லஞ்ச ஊழல்கள் சீனாவில் மலிந்துள்ளன.

லாஞ்சிசோ இணைய நிலையத்தின் உரிமம் பெறாத வியாபாரத்தை உள்ளூர் போலீசார் ஒன்றில் கண்டுக்கொள்ளவில்லை அல்லது அலட்சியம் செய்வதற்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றனர் என்பதில் ஐயம் இல்லை. அதில் 95 கணினிகள் இருந்தன. Beijing மற்றும் Qinghua உள்பட, பிரபலமான சீன பல்கலை கழகங்களிலிருந்து மாணவர்கள் இரவும் பகலுமாக அங்கு வந்து போய்க்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் கோபத்தை தணிக்கும் பொருட்டு பரந்த அளவிலான இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் இருக்கிறவேளை, அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இணைய உலா செய்தலையே கடுமையான கட்டுப்பாடுகளைச் செய்ய முயல்கின்றனர். இதுபோன்ற உரிமம் இல்லாமல் மற்றும் பாதுகாப்பில்லாத வசதிகளுடன் நடத்தும் வர்த்தக நிலையங்களான மது அருந்தும் இடங்கள், இரவு விடுதிகள், தங்கு விடுதிகள் மற்றும் திரை அரங்குகளின் மேல் எடுக்கப்படவில்லை. சீன அதிகாரிகள் கவலைப்படுவது பாதுகாப்பு குறைவு பற்றி அல்ல மாறாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எதை வாசிக்கிறார்கள் மற்றும் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை தங்களால் சக்திமிக்க வகையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான்.

சீனாவில் இணையத்தை உபயோகப்படுத்துபவர்கள் 56 மில்லியன் பேர்கள் உள்ளனர் என்று மதிப்பிடப்படுகிறது. 250,000 சீன மொழி வலைதளங்கள், அதேபோல 200,000 இணைய நிலையங்கள் உள்ளன, பெரும்பாலானவை உரிமம் இல்லாமல் செயல்படுகின்றன. இந்த இணைய நிலையங்கள், கணினியைப் வாங்க முடியாத மற்றும் இணைய உலாச்செய்தலுக்கு தொடர்ந்து தொடர்பு கிடைக்க முடியாத, கோடிக்கணக்கான சீன இளைஞர்களுக்கு மலிவான விலையில் இணைய உலா வாய்ப்பை வழங்குகின்றன.

சீன ஆட்சியாளர்களின் பகுதியினர் இளைஞர்களிடையே இணையம் பிரபலமாக உள்ளதைக் குறித்து கவலைப்படுகிறது. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பயனற்ற மற்றும் தணிக்கை செய்யும் தொலைக்காட்சி, பத்திரிகைகளை சீன இளைஞர்கள் வெறுக்கின்றனர். அவர்கள் வலைத்தளம் மூலமாக உலகம் முழுவதும் இருந்து கருத்துக்களையும் தகவல்களையும் பெறுகின்றனர், மற்றும் மேலும் அதிகமான புத்திஜீவித சூழலுக்காக தங்களின் கோரிக்க்ைகளில் துணிவு பெறுகிறார்கள். சீன இளைஞர்களின் மொழி, பாணி, பிரபல இசை, நீதி கொள்கைகள், அரசியல் சிந்தனை ஆகியவை அவர்களுக்கு இணையம் அடையக்கூடியதாய் இருப்பதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றம் அடைந்துள்ளன. Falun Gung போன்ற மத இயக்கத்தின் எதிர்ப்பு நடவடிக்க்ைகள் அரசின் மீது அரசியல் அதிருப்தியை வளர்க்கின்றது. இவை இணையம் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன அல்லது வலைதளத்தினூடாகக் கூட ஒழுங்கு செய்யப்படுகின்றன இது பெய்ஜிங்கை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

முந்தைய அரசாங்கம் உரிமங்கள் வழங்கும் முறை மூலம் இணையத்தைப் பயன்படுத்தலைக் கட்டுப்படுத்த முயன்றது. உரிமங்கள் இல்லாத இணைய நிலையங்கள் சீனாவில் அதிகமாக பெருகியதால் இது தோல்வியடைந்தது. ஜூன் 18 அன்று, வாஷிங்டன் போஸ்ட் டுக்கு பெய்ஜிங் கல்லூரி மாணவரும் முன்னாள் Lanjiso Cafe வாடிக்கையாளருமான ஒருவர் கூறியதாவது, ``இணைய நிலையத்துக்கு உரிமம் இல்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால் அது (Lanjiso Cafe) மலிவானது மற்றும் அருகாமையில் உள்ளது. அரசாங்கம் சட்டப்படி Internet Cafe திறப்பதைக் கடினமாக்கி இருக்கிறது, எனவே இங்கு சட்ட விரோதமான இணைய நிலையங்களே உள்ளன.`` இன்னொருவர் கூறியதாவது ``பல Cafe க்கள் முன் கதவுகளை மூடி வைத்துள்ளன. போலீஸ் நேராக உள்ளே நுழைவதை ஒருவரும் விரும்பவில்லை."

ஒவ்வொரு சட்டபூர்வமான இணைய நிலையத்திற்கும் 10 சட்டவிரோத இணைய நிலையங்கள் இருக்கின்றன என்ற உண்மை, தொடரான அரசு கட்டுப்பாடுகள் சக்தியற்றதாகப் போய்விட்டதைக் காட்டுகின்றன. உரிமம் பெற்ற இணைய நிலையங்கள் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வலைத் தளங்களை குறித்துக் கொண்டு போலீசிடம் தெரிவிக்கவேண்டும். அனைவரும் ஒரு கணக்கு எண்ணை வைத்திருக்கவேண்டும், இதை அதிகாரிகளிடம் பதிவு செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பள்ளி நாட்களிலும் இரவிலும் இணையத்தைப் பயன்படுத்துவதை தடை செய்தது. இளைஞர்கள் அதிகமாகத் தங்களின் பெரும் வாடிக்கையாளர்களுள் ஒருவராக இருப்பதால், உரிமமற்ற இணைய நிலையங்கள் இந்த உத்தரவை பொருட்படுத்துவதில்லை.

தனது ஜனநாயக முறைக்கு எதிரான நடவடிக்கைகளை மறைக்க, சீன அதிகாரத்துவம் இணையப் பயன்படுத்தத்தை எதிர்த்து பிரசாரம் செய்கிறது. பெய்ஜிங் தீ விபத்திற்கு பின்பு முக்கிய சீன அரசு நாளேடான, People's Daily, ``இணைய நிலையங்கள் சிறுவர்களை அழிக்க விட்டுவிடாதீர்கள்`` என்ற தலைப்புக் கொண்ட கட்டுரையை வெளியிட்டது. விளையாடுவதற்கு இணைய நிலையத்தைப் பயன்படுத்தும் 12 வயது சிறுவனின் தாயை நேர்காணல் செய்த பின்னர் இந்த நாளேடு கட்டுரையைப் பின்வருமாறு முடித்தது, ``வலைத் தள விளையாட்டுகள் சிறுவனின் ஆன்மாவை பாதிக்கின்றன. சிறுவன் படிப்பில் பின்தங்கிவிட்டான். அவன் உடல் நலம் குன்றியது. அவன் ஒரு முட்டாளாக, மந்திரத்தால் உயிர்ப்பிக்கப்பட்ட பிணம் போல் ஆனான்.``

இத்தகைய ஒழுக்க போதனைகள் வெறுப்பு மற்றும் குரோதங்களை இளம் சீனர்களின் அறிக்கைகள் மற்றும் வலைத் தள விவாதங்களில் இருந்து பெருக்கெடுக்க வைத்துள்ளது. அரசாங்கம் இணைய நிலையங்களை மூடிவிட்டதை சீன இளைஞர்கள் கண்டிக்கின்றனர். சென்ற வார தீ விபத்திற்கு காரணமான இணைய நிலைய உரிமையாளர்களைக் கண்டிப்பதை விட்டுவிட்டு, முதற்கண் கடுமையான கட்டுப்பாடுகளைத் திணித்து, இணைய நிலையங்களை சட்ட விரோதமாக செயல்படும்படி நிர்ப்பந்தித்ததற்காக, அனேகமான சீன இளைஞர்கள் சீன அரசாங்கத்தைத்தான் குற்றம் சாட்டுகின்றார்கள்.

Top of page