World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The red-green tax reform: Step towards social disaster

சமூக ஜனநாயக கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் வரிச்சீர்திருத்தம்: ஒரு சமூக சீரழிவிற்கான பாதை

By Dietmar Henning
27. August 2002

Use this version to print | Send this link by email | Email the author

நான்கு வருடங்களுக்கு முன்னர், சமூக ஜனநாய கட்சியும் பசுமைக் கட்சியும் தமது தேர்தல் வெற்றிக்கு, கெல்முட் கோலின் அரசாங்கத்தால் சமூக சொத்துக்களானது மறுபங்கீடு செய்யப்பட்டாதால் உருவான பரந்த எழுச்சிக்கே நன்றி கூறவேண்டும். அவ்வரசாங்கமானது தனது 16 வருட ஆட்சியில் செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையிலான வித்தியாசத்தை அதிகரிக்க செய்தது. பாரிய மக்கள் மத்தியில் அதிகரித்துவந்த வறுமையை எடுத்துக்காட்டி சமூக ஜனநாய கட்சியினர் தாம் கூடுதலான சமூக நீதிக்காக போராடுவதாக வாக்குறுதியளித்தனர்.
ஆட்சிக் காலத்தின் முடிவை நெருங்குகையில் சமூக ஜனநாய கட்சியினதும் பசுமைக்கட்சியினதும் கூட்டரசாங்கத்தினது கணக்கெடுப்பானது பாரிய மோசமானதாக இருக்கின்றது. இவர்கள் தமது முன்னய அரசாங்கத்தின் மறு பங்கீட்டு கொள்கையை தொடர்ந்தது மட்டுமல்லாது, இன்னும் மோசமாக்கியுள்ளனர். பாரிய வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்தது மட்டுமல்லாது, குழந்தைகள் அதிகமான மற்றும் தனி பெற்றோருடன் வாழும் குடும்பங்களில் ஏழ்மை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
இது சமூக கொடுப்பனவுகள், சுகாதார சேவை, ஓய்வு ஊதியம் போன்றவற்றின் மீதான நேரடி வெட்டுக்களினதும் மற்றும் வரிச்சீர்திருத்தத்தினதும் விளைவாகும். இவ் வரிச்சீர்திருத்தம் மூலமாக நேரடியான மற்றும் மறைமுகமான முறைகளால் ஏழைகளின் பாரத்தில் பாரிய நிறுவனங்களின் பணப்பைகள் நிரம்புகின்றன.
வரிப்பணத்தின் வீழ்ச்சி

1999 ஆம் ஆண்டு ஜேர்மன் அரசாங்கம் ''ஜேர்மனின் வரலாற்றில் பாரிய ஒரு செலவுவெட்டு'' (நிதி அமைச்சரான Hans Eichel இன் கீழ்) திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதில் மிச்சம்பிடிக்கப்பட்ட 15 மில்லியாடன் யூரோவில் மூன்றில் ஒரு பகுதி வேலையற்றவர்களில் இருந்து மிச்சம்பிடிக்கப்பட்டதாகும். 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரிவீதத்தினை குறைக்கும் மற்றும் நிறுவனங்களின் வரியை குறைக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனூடாக பாரிய நிதிநிறுவனங்கள் பாரிய வரிச்சலுகை அடைந்தன. நிதி அமைச்சரான Hans Eichel இதனை நிதிக்கொள்கையில் ஒரு மைற்கல் என குறிப்பட்டார்.

இச்சட்டத்தின் மத்திய புள்ளி வருமானவரியை குறைப்பதாகும். தனியார் வருமானமுடையவர்களுக்கான வரிவீதமானது 1998 இல் 56% ஆக இருந்து, பின்னர் 53% ஆக இருக்கும் வரிவீதம் இச்சட்டம் மூலம் 2005 இல் 42% இற்கு குறைக்கப்படவுள்ளது. ஒரு மில்லியன் யூரோவை வருடாந்த வருமானம் பெறுபவகள் இதன் மூலம் வருடாந்தம் 100,000 யூரோவை மிச்சம் பிடிக்கலாம்.

இச்சட்டமானது குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கும் வரிவிலக்கை வழங்குகின்றபோதிலும், சுற்றுசூழல் வரி போன்ற மறைமுகமான வரிபோன்றவற்றால் எரிபொருள் விலையேற்றத்தாலும், புகையிலைவரி, காப்புறுதிவரி போன்றவற்றாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருமானவரி, நிறுவனங்களின்வரி மாற்றத்தின் விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உழைக்கும் மக்களாகும். நகரசபைகளுக்கும், கிராமசபைகளுக்கும் நிதியுதவி வழங்குவது இவ்வரிப்பணமாகும். அதாவது இதனால் தான் அவை உயிர்வாழ்கின்றன. வருமானவரி குறைவால் 2005 வரை அவற்றிற்கு கிடைக்கும் பணமானது 14% ஆல், அதாவது 25 பில்லியன் யூரோவால் குறையும். இதைவிட நிறுவனங்களில் இருந்துவரும் வரியினதும், வர்த்தக வரியினது குறைவாலும் நகரங்களினது வருமானம் மோசமாக பாதிக்கப்படும்.

நிறுவனங்களில் இருந்துவரும் வரியானது (மூலதனத்தின் வரியும், பங்குச்சந்தைகளினது வரியும்) 40% இருந்து 25% ஆக குறைகின்றது. இதைவிட மேலதிகமாக வரும் சட்டங்கள் மூலம் நிறுவனங்களினது வரிவீதமான 0% இற்கு கிட்ட குறைகின்றது. Der Spiegel என்னும் சஞ்சிகையானது ''வரிகள் வரும் வழி அடைக்கப்பட்டு, வரிப்பணம் வெளியேறும் பாதை திறக்கப்பட்டுள்ளது'' என குறிப்பிட்டது. இது ஒரு மோசமான நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது. ஜேர்மனியின் பாரிய நிறுவனங்கள் வரி செலுத்தாததுடன், கடந்த வருடம் செலுத்திய வரிப்பணத்தை திரும்ப பெறுகின்றன.

ஒரு பக்கத்தில் அரசாங்கமானது நிறுவனங்கள் கடந்த காலத்தின் கூடிய வரிவீதம் மூலம் பெற்ற வருமானத்தினால் பெற்ற இலாபத்தை பங்குகள் மூலமாக குறைந்த வரிவீதத்துடன் வழங்குவதற்கும், மற்றும் அதிகமாக செலுத்தப்பட்டதாக கூறப்படும் வரியை திரும்பபெற வழிவகுத்துள்ளது. மறுபக்கத்தில் கடந்த காலத்தின் நஷ்டத்தினை காலவரையறையற்று எதிர்வரும் வருடங்களில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வகை செய்யப்பட்ட 1994 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளை நிதிஅமைச்சர் தற்போதும் நடைமுறையில் வைத்திருக்கின்றார்.

இது Bayer நிறுவனத்திற்கு இந்த வருடம் வரி செலுத்ததேவையில்லாது செய்துள்ளதுடன், கடந்த வருடம் செலுத்திய 250 மில்லியன் யூரோவை திரும்பி பெற வழிவகுத்தது. ஜேர்மன் ரெலிகொம் நிறுவனமானது இதனூடாக 1.4 மில்லியாடன் யூரோவையும், RWE நிறுவனம் 800 மில்லியன் யூரோவையும், Vodafone-Mannesmann நிறுவனம் 500 மில்லியன் யூரோவையும் திரும்ப பெற்றுள்ளன.

நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் மொத்தவரியானது 2001 இல் வீழ்ச்சியாகியுள்ளது. கடந்த வருடத்தில் 23 மில்லியன் யூரோ எடுத்த தொகைக்கு பதிலாக வரித்திணைக்களமானது மில்லியாடன் தொகையை திருப்பி செலுத்தவேண்டியதாகியது. ஹெசன் மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கும், காப்புறுதி நிறுவனங்களுக்கும் இவ்வருடத்தின் முதற்பகுதியில் 2 பில்லியன் யூரோ திருப்பி வழங்கப்பட்டது. பயர்ன் மாநிலத்தில் இதே காலப்பகுதியில் 500 மில்லியன் திருப்பி வழங்கப்பட்டது.

இத்துடன் நகரங்களுக்கான வர்த்தக வரியினால் கிடைக்கும் வருமானமும் குறைகின்றது. தேர்தல் தொகுதிகளுக்கு இதனால் கிடைக்கும் வரியில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பங்கு கிடைக்கின்றது. இது பொதுச்சேவைகளுக்காக கிராமங்களால் செலவிடப்படும் முக்கிய வருமானமாகும்.

வர்த்தக வரியானது நேரடியாக மாற்றப்படவில்லை. ஆனால் அதனால் கிடைக்கும் இலாபத்திற்கே வரிவிதிக்கப்படுகின்றது. இது பொருளாதார ஏற்ற இறக்கத்தில் தங்கியுள்ளது. மேலும் 1979 இல் சமூக ஜனநாயக் கட்சியின் கீழ் கெல்முட் ஸ்மித்தாலும், 1994ல் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கீழ் கெல்முட் கோலினாலும் நிறுவனங்கள் மீதான மேலதிகமான வரிகள் இல்லாதொழிக்கப்பட்டன. 1994ல் நிறுவனங்களுக்குள் உள்ளேயான இலாப, நஷ்ட கணக்குகள் மதிப்பிடுவது சுலபமாக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் கீழ் ஜேர்மனியின் நிறுவனங்கள் இச்சட்டங்களை அதிகரித்தளவில் தமக்கு சாதகமாக்கிக்கொண்டன.

Schwäbisch Hall எனப்படும் வங்கி தொடர்பான விடயம் இதற்கு உதாரணமாக வெளிவந்தது. பிராங்பேர்ட் நகரத்தில் உள்ள DZ-Bank இன் நஷ்டத்தை இவ் வங்கியானது தனது இலாபத்திலிருந்து கழித்துக்கொண்டது. இந்நகரத்தில் மட்டும் வர்த்தக வரியானது 50 மில்லியன் யூரோவிலிருந்து 9 மில்லியனாக குறைந்தது. சர்வதேச ரீதியான பங்குகளை கொண்ட நிறுவனங்கள் உள்ள பல நகரங்கள் மில்லியன் கணக்கில் இழந்துள்ளன. Bayer நிறுவனம் கிளைகளை கொண்டுள்ள Leverkusen, Krefeld நகரங்களில் 2001 இல் வியாபார வரியானது 65% ஆலும், 50% ஆலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த வியாபார வரியானது கடந்தவருடம் 9% ஆலும், இவ்வருடம் இதுவரை 13,6% ஆலும் குறைந்துள்ளது.

வருமான இழப்பால் உருவாகும் சமூக விளைவு

சமூக ஜனநாய கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் கூட்டரசாங்கத்தினது வரிச்சீர்திருத்தத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் உருவாகிய வருமான இழப்பானது உள்ளூராட்சி சபைகளூடாக மக்களை சென்றடைந்துள்ளது. நகரங்களும், கிராமங்களும் தம்மால் இயன்ற இடங்களில் செலவை கட்டுப்படுத்துகின்றன. சமூகசேவைக்கான செலவு, சிறுவர்களுக்கான உதவி (சிறுவர் பாடசாலை, குழந்தை பராமரிப்பு, சிறுவர் நிலையங்கள்) போன்றவற்றிற்கான செலவுகளும், பாடசாலை உபகரணங்கள், முழுநாள் பாடசாலைக்கான செலவு மற்றும் ஏனைய பாடசாலை செலவுகள் போன்றவை பாரியளவில் வெட்டப்பட்டுள்ளன.

Munich நகரத்தில் திட்டமிடப்பட்டிருந்த கைக்குழந்தைகளை பராமரிக்கும் மற்றும் வயோதிபர் விடுதி போன்றவை கட்டும் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. E.on எனப்படும் மின்சார விநியோக நிறுவனம் அமைந்துள்ள Gelsenkirchen நகரத்தில் 12 சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள் மூடப்படவுள்ளது. மற்றைய நகரங்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு, நினைவு சின்னங்களை பராமரிப்பதில் செலவு மிச்சம் பிடிக்கின்றன.

இதேவேளை உள்ளூராட்சி சபைகளால் வழங்கப்படும் சேவைகளுக்கான (நூல்நிலையம், நீச்சல்தடாகம், நாடகம், குப்பைகள் அகற்றுதல்) கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பேர்லின் நகரத்தின் மிகவும் ஏழ்மையான பிரதேசத்தில் நீச்சல்தடாகத்திற்கான நுழைவுக்கட்டணம் ஒரு வயதுவந்தவருக்கு 4 யூரோவாக உள்ளது. உள்ளூர்சபைகளால் ஒழுங்கமைக்கப்படும் விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் வெட்டுப்பட்டுள்ளன. அங்கவீனமானவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், வீடற்றவர்களுக்கும், போதைமருந்துக்கு அடிமையானவர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்படும் இலவச ஆலோசனை மற்றும் உதவிகள் குறைக்கப்பட்டுள்ளன அல்லது இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

சமூகநல உதவி பெறுபவர்கள், வேலையற்றோர்கள், குழந்தைகள் அதிகமாக உள்ள குடும்பங்கள், இளைஞர்கள், பராமரிப்பு தேவையானவர்கள் போன்றவர்களின் தற்போதைய மோசமான சமூகநிலைமையின் மத்தியிலும், கலாச்சார, பொழுதுபோக்கு வசதிகள் அழிக்கப்படும் இவ்வரித்திருத்தமானது ஒரு சீரழிவான நிலைமையையே உருவாக்கும். கஷ்டமற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்வதென்பது பணம்படைத்தவர்களுக்கே உரித்தானதாகியுள்ளது.

கடந்த காலத்தில் வரியால் கிடைக்கும் வருமானம் இல்லாததால் ஏற்கனவே அரசியல்வாதிகள் உள்ளூராட்சிசபைகளை குப்பை அகற்றுதல், மின்சக்தி வழங்குதல், பொது போக்குவரத்துசேவை, நீச்சல்தடாகங்கள், நாடக மன்றங்கள் போன்றவற்றையும் தனியார்மயமாக்கியுள்ளனர். இது மக்களுக்கு செலவையும், கட்டணங்களையும் அதிகரித்துள்ளது. இங்கு வேலை செய்பவர்கள் மீது வேலைச்சுமையை அதிகரித்துள்ளதுடன், விரைவாக வேலைசெய்யவும் நிர்ப்பந்திக்கின்றது.

மத்திய அரசாங்கமானது ''உள்ளூராட்சி சபைகளினது நிதிச்சீர்திருத்தத்திற்கான ஆணைக்குழு'' ஒன்றிற்கு அழைப்பு விட்டுள்ளது. இது இந்நிதிப்பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளது. உள்ளூர் சபைகளில் வேலைநீக்கம் தொடர்பாக அதில் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஆனால் ஆணைக்குழு என்ன செய்யவேண்டும் என்பது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது ''நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான செலவீனங்களையும், கொடுப்பனவுகளை மாற்றுவதையும் தவிர்ப்பதற்கு இரண்டு பக்கத்தையும் (மத்திய, உள்ளூர்சபை) கவனத்திற்கு எடுக்கவேண்டும்''.

நிதி அமைச்சினதும், தொழில் அமைச்சினது கீழான இவ் ஆணைக்குழுவானது வேலையிலாதவர்களுக்கு கிடைக்கும் உதவிப்பணத்தையும், சமூகநல உதவிப்பணத்தையும் இணைக்க வழிவகுக்குப்பதுடன், உள்ளூராட்சிசபைகளினது மேலதிக செலவை சமூகநல உதவிப்பணத்தின் மீதான வெட்டின் மூலம் சமாளிக்க வழிவகுப்பதால் சமூகநல உதவிப்பணத்தின் மீது மேலதிக வெட்டுக்களுக்கு வழி வகுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜேர்மன் அரசாங்கத்தின் இவ்வரிச்சீர்திருத்த சட்டமானது உள்ளூராட்சி மட்டத்தில் சமூக சேவைகள் மட்டத்தில் பாரிய நிதிப்பற்றாக்குறையை உருவாக்கும். இது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னைய காலகட்டத்தில் தனித்துவமானதும் மற்றும் பழைமைவாத கட்சிகளால் கூட செய்ய இயலாதிருந்ததை, அதாவது செல்வத்தை மேலிருந்து கீழிருந்து பங்கீடு செய்கின்றது. இது சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு (குழந்தைகள் கூடிய குடும்பம், வெளிநாட்டவர், வயோதிபர்) வாழ்க்கைக்கு உடனடி தேவையாக உள்ள சேவைகள் மீது பாரிய விளைவுகளை உருவாக்கும்.

ஜேர்மன் தேர்தல் பிரசாரத்தில் இச்சமூகப்பிரச்சனைகள் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்வதில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுட்டுள்ளன. இது தொடர்பான தமது தற்காலிக வாயடிப்புகளின் மத்தியிலும் அனைத்துக் கட்சிகளும் சமுதாயத்தின் மீது தாக்குதல் மிக்க தமது கொள்கையை தேர்தலின் பின்னர் தொடருவதுடன், மூர்க்கமடையவும் செய்வர்.

See Also :

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

Top of page