World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Latest attack on academic freedom

"Campus Watch" web site witch-hunts Middle Eastern studies professors in the US

கல்வித்துறை சுதந்திரத்தின் மீதான புதிய தாக்குதல்

அமெரிக்காவில் மத்திய கிழக்கு ஆய்வு பேராசிரியர்களை வேட்டையாடும், "கம்பஸ் வாட்ச்" இணையதளம்

By Jeremy Johnson
30 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

வலதுசாரி பத்திரிக்கை ஆசிரியர், டானியல் பைப்ஸ், செப்டம்பர் மாதம் ஒரு இணையதளத்தைத் துவங்கினார். புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள, "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" அமெரிக்காவின் பல்கலைக்கழக வளாகங்களில் எதிர்ப்பு வளர்ந்து வருவதை, அடக்கி ஒடுக்குவதற்காக இந்தப் புதிய தகவல் அமைக்கப்பட்டிருக்கிறது. "கேம்பஸ் வாட்ச்" என்றழைக்கப்படும் இந்தத் இணையதளத்தில் துவக்க நிலையில், குறிவைக்கப்பட்ட மத்திய கிழக்கு ஆய்வு பேராசிரியர்கள் 8 பேர் பற்றிய ``விவரக் குறிப்புகளின் தொகுப்பை`` வெளியிட்டார்கள். அவர்கள் எட்டுப்பேரும் அவரவர் துறையில் முன்னணியில் உள்ள பேராசிரியர்கள். அவர்கள் பாடம் புகட்டும்போதும், பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிடும் நேரத்திலும், ``பக்கசார்பாக`` கருத்துத் தெரிவித்ததாகக் கருதப்படுபவர்கள். அமெரிக்கா கடைப்பிடித்துவரும், வெளிநாட்டுக் கொள்கைகளை காரணமாகவே அல்காய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்கள் வளரும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் தாக்குதல்கள் அடக்குமுறைதான் - என்பது போன்ற கருத்துக்களைத் துணிந்து கூறிய குற்றம் புரிந்தவர்கள் இந்தப் பேராசிரியர்கள்.

அமெரிக்காவின் கொள்கைகளைக் கண்டிக்கும் எவரையும், தேச பக்தி இல்லாதவர்கள் என்று சேற்றைவாரி இறைக்க இந்தத் இணையதளம் முயன்று வருகிறது. அவர்கள் குற்றம்சாட்டும் ஒரு சார்பிற்கு, இரண்டு காரணஙக்ளையும் அந்த தகவல்தளம் கற்பிக்கிறது. ``முதலாவதாக, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பொதுவாக, தங்கள் சொந்த நாட்டையே வெறுப்பதாகத் தோன்றுகிறது. மேலும் வெளிநாடுகளில் அமெரிக்காவின் நட்பு நாடுகளை மிகவும் தாழ்வாக மதிப்பிடுகிறார்கள். அமெரிக்காவின் கொள்கையை, குரோத மனப்பான்மை கொண்டதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள்`` என்று அந்தத் தகவல்தளம் விளக்கியுள்ளது. அவர்களது அமெரிக்காவிற்கு எதிரான போக்கிற்கு கீழ்க்கண்ட இனவெறி விளக்கத்தை அந்தத் தகவல்தளம் தந்திருக்கிறது: ``இரண்டாவதாக அமெரிக்காவில், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான ஆய்வு என்பது மத்திய கிழக்கு அரபுக்களின் புகலிடமாக ஆகிவிட்டது. அவர்கள் தங்கள் கருத்துக்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்துவிடுகின்றனர். மத்திய கிழக்கு ஆய்வுகள் சங்கம்தான் (MESA) பிரதான ஆய்வு அமைப்பு. இதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் தற்போது 50 சதவீதம் பேர் மத்திய கிழக்கிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அமெரிக்க குடிமக்களாக இருந்தாலும், இந்த அறிஞர்களில் பலர் அமெரிக்காவிலிருந்து தீவிரமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். சில நேரங்களில் பகிரங்கமாகவும் இதைச் செய்கிறார்கள்.``

இவ் இணையதளம் பேராசிரியர்களைப் பற்றிய விவரக் குறிப்புக்களை வெளியிட்டது. குறிவைக்கப்பட்ட 8 பேராசிரியர்கள் பற்றிய இ-மெயில் முகவரிகள், தொலைபேசி எண்கள், ஏன் புகைப்படங்களைக்கூட வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கான இ-மெயில்கள், தொலைபேசி தொடர்புகள் குவியத்துவங்கின. இவற்றில் பல அந்தப் பேராசிரியர்கள் மீது குரோதம் பாராட்டுபவையாக அமைந்தன. கொலை மிரட்டல்களும் இதில் அடங்கும். பல பேராசிரியர்களது கம்பியூட்டர்களில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் புகுந்து அவற்றினைக் கட்டுப்படுத்தி, அவர்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஆட்சேபகரமான தகவல்களை அனுப்பினார்கள்.

மக்கார்த்தி பாணியில் கறுப்புப்பட்டியல் இடும் 'கம்பஸ் வாட்ச்" இணையதளம் செயல்படுவதற்கு கண்டன அலைகள் எழுந்தன. எட்டுப் பேராசிரியர்களுக்கும் ஆதரவாக, சுமார் 200 பேராசிரியர்கள் கடிதங்களை எழுதினர். தங்களது பெயரையும் அந்தத் தகவல்தளம் தனது பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரினர். இப்படிப்பட்ட நிலை உருவாகியவுடன், பைப்ஸ், ``கம்பஸ் வாட்ச்`` இணையதள வடிவமைப்பு மாற்றப்பட்டதை அறிவித்தார். 8 பேராசிரியர்களின் விவரக் குறிப்புக்களைத் தனிமைப்படுத்தினர். அவர்களது வாழ்க்கைக் குறிப்பை பல்கலைக்கழகங்கள் பற்றிய ``ஆய்வில்`` சேர்த்தனர். அமெரிக்காவிற்கு எதிரான போக்குகள் நிலவும் பல்கலைக்கழகங்கள் ``கண்காணிப்பு`` பட்டியலில் பேராசிரியர்கள் பற்றிய சிறு குறிப்பு இடம்பெறத் துவங்கியது. தற்போது கம்பஸ் வாட்ச் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 பல்கலைக்கழகங்களில், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேருபவர்கள் திருக்குரானின் சில பகுதிகளை வாசிக்குமாறு கோரப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே நேரத்தில், கருப்புபட்டியலில் இடம்பெற்றுள்ள பேராசிரியர்களின் ஆதரவாளர்கள் 180 பேர், தகவல்தளத்தின் புதிய பிரிவில், ``போற்றித் தொழுபவர்களுடன் ஐக்கியமானோர்`` என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ``தற்கொலை குண்டு வெடிப்புகள், மற்றும் தீவிரவாத இஸ்லாத்திற்கு போற்றித் தொழுபவர்களை உருவாக்கும் பேராசிரியர்களை நாம் அடையாளம் காட்டியுள்ளோம்`` என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலிட்ட எட்டு பேராசிரியர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் தற்கொலை குண்டு வெடிப்புகளையோ அல்லது வேறு எந்த பயங்கரவாத நடவக்கைகளையோ ஆதரித்தார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் அந்த தகவல்தளம் மேற்கோள் காட்டவில்லை. அவர்களது எதிர்ப்பு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்குத்தான் அந்த எதிர்ப்பை மிக எளிதாக தற்கொலை குண்டு வெடிப்புக்களோடு பைப்ஸ் சம்மந்தப்படுத்தியிருக்கிறார். மொன்ட்ரியலில் உள்ள கண்கார்ட்டியா பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சல்மான் அமித் கருப்புப்பட்டியலிலிடப்பட்ட பேராசிரியர்களினை ஆதரவளிப்பவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பேராசிரியர் சல்மான் அமித், கம்பஸ் வாட்ச், இஸ்ரேலிய அட்டூழியங்கள் மற்றும் போர் குற்றங்களுக்கு தொழுபவர்களது ஆதரவாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை என்று மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கார்த்தி பாணியில் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை மறுக்கும் மிக சாதுர்யமான முயற்சியில் பைப்ஸ் மேற்க்கொண்டிருக்கிறார். தனது எதிர்ப்பாளர்கள் செயல்பாடுகளையும், அறிக்கைகளையும், கண்டிப்பதில் எந்த விதமான தவறும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் குறிவைத்துள்ள பேராசிரியர்களோடு விவாதம் நடத்துவதற்கோ அல்லது அவரது குற்றச்சாட்டுக்களை மெய்பிப்பதற்கோ எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை, ஆனால் மிக எளிதாக ஒன்றை அவர் செய்துவிடுகிறார். அமெரிக்காவிற்கு எதிரான போக்கு என்று அவர் ஆதாரமாக எடுத்துக்காட்டுவது அவர் குறிவைத்துள்ள பேராசிரியர்கள் அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட அவர்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை சந்தர்ப்பசூழ்நிலைகளுக்கு அப்பால் தொகுத்து வெளியிட்டுவிடுகிறார்.

``அமெரிக்காவை வெறுக்கும் பேராசிரியர்கள்`` என்ற தலைப்பில் நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் நவம்பர்-12-ந்தேதி ``பைப்ஸ்`` ஓர் உதாரணகரமான கட்டுரையை எழுதியிருக்கின்றார். அது வலதுசாரி பத்திரிக்கையாளர் பிப்ஸ் தனது பாணியில் அந்த விமர்சனக் கட்டுரையை தந்திருக்கிறார். அவர் அமெரிக்காவை வெறுக்கும் பேராசிரியர் பட்டியலில் எம்.ஐ.டி. பேராசிரியர் நோம் - ஜோம்ஸ்கியை குறிப்பிட்டிருக்கிறார். இவர் மொழியியல் துறை பேராசிரியர் ஈராக் என்ற ஏழை நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதன் உண்மையான நோக்கம் ஈராக்கின் எண்ணெய் வளம்தான் என்று அந்தப் பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் எரிக்பானர் புஷ் நிர்வாகத்தின் தற்காப்புப்போர் தத்துவத்தை ஜப்பான் பெல்ஹார்பர் துறைமுகத்தில் நடத்திய தாக்குதலோடு ஒப்பிட்டிருக்கிறார். ஏல் பல்கலைக்கழக பேராசிரியர் மாஸின்கும்சியே அவரது அறிக்கையில் ஒரு இடத்தில், ``சதாம் உசேன் சர்வாதிகாரி என்றால், வாஷிங்டன்தான் அவரை உருவாக்கியது`` என்று கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு பேராசிரியர்களும் தெரிவிக்கின்ற கருத்துக்களில் சில சொற்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் அவர்களை அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் என்று கம்பஸ் வாட்ச் இணையதளம் குற்றம்சாட்டி வருகின்றது.

இதுபோன்று தவறு செய்கின்ற பல்கலைக்கழகங்களுக்கு பட்டதாரிமாணவர்களும், சம்மந்தப்பட்ட சட்டமன்றங்களும், நிதி தருவதை நிறுத்திவிட வேண்டும் என்று அந்த தகவல்தளம் கோரிக்கைவிடுத்திருக்கிறது. மத்தியக்கிழக்கு அரங்கின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொருவர் மார்ட்டீன் கிராமர் இவர் பிப்சின் சக சிந்தனையாளர், இந்த மத்தியக்கிழக்கு அரங்குதான் கேம்பஸ் வாட்ச் தகவல்தளத்தை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதிலும், மத்தியக்கிழக்கு ஆய்வுகளுக்கு நிதி உதவி தருவதை மத்திய கல்வித்துறை நிறுத்திவிட்டு பாதுகாப்புத்துறை மூலம் நடப்பு மற்றும் எதிர்கால உளவாளிகளுக்கு மொழி பயிற்சி தருவதற்கு நிதி உதவி செய்யவேண்டுமென்று மாட்டீன் கிராமர் யோசனை கூறியிருக்கிறார். கேம்பஸ் வாட்ச் ஆய்வு செய்த பல்வேறு கல்வி நிலையங்கள் குறிப்பாக மிக்சிகன் பல்கலைக்கழகம், பாதுகாப்புத்துறை கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மிக்சிகன் பல்கலைக்கழக அரபு இலக்கியம் மற்றும் பண்பாட்டு துணைப் பேராசிரியர் கரோல் பார்டன்ஸ்டீம் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ``எங்களது மாணவர்கள் பயிற்சி பெற்றுவரும் உளவாளிகள் என்று கூறப்படுவதை நாங்கள் விரும்பவில்லை`` என்று கூறியிருக்கிறார்.

செப்டம்பர் 11, 2001-ல் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் தாக்குதலை நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பின்னர் கிராமர் மத்திய கிழக்கு நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ள அனைவர் மீதும் குற்றம்சாட்டினார். ``பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறக்கூடும் என்று நாட்டை விழிப்புணர்வுகொள்ளச் செய்யத் தவறிவிட்டார்கள்`` என்று அவர் பழிபோட்டார். பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும், செப்டம்பர் 11 - தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்ததில் அமெரிக்க அரசிற்கு உள்ள சொந்தப் பாத்திரத்திதை கண்டுகொள்வதிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக, இந்தக் குற்றச்சாட்டை கிராமர் கூறினார்..

``கம்பஸ் வாட்ச்`` இணையதளத்தின் மிக ஆபத்தான ஒரு பகுதி, ``எங்களுக்குத் தகவல் தாருங்கள்`` என்பது. மாணவர்கள் ரகசியமாகத் தங்கள் பேராசிரியர்கள் குறித்து கடிதம் எழுதுமாறு அந்தத் இணையதளம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் எடுத்துவைக்கப்படும் பல்வேறு வகையான கருத்துக்களை இந்த நடவடிக்கை விரிவுப்படுத்துவதாக கிராமர் சொல்கிறார். மாணவர்களுக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்களைத் தெரிவிக்கும் பேராசிரியர்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் போக்கை மாணவர்களிடையே வளர்ப்பதுடன் நில்லாது, அரசிற்கு ஆதரவான பிப்ஸின் கொள்கைகளுக்கு முரணாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் வரலாம் என எச்சரிக்கவும், நாடு முழுவதும், ஒரே சிந்தனைப் போக்கு உருவாகவும், சங்கிலித் தொடர் போன்ற ``ஆள்காட்டிகளை`` நியமித்திருக்கிறார்கள். தங்களது பக்கத்து வீட்டுக்காரர்களை வேவு பார்க்க, அமெரிக்க சிவிலியன்கள் அமைபான TIPS ஐ புஷ் உருவாக்கினார். இந்தத் திட்டத்தின் பல்கலைக்கழக வளாக அமைப்பை உருவாக்கும் முயற்சியை பைப்ஸ் மேற்கொண்டிருக்கிறார்.

அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் முதலாளித்துவ ஆதரவு பிரச்சாரத்திற்கு அறிவாளிகள் நடுவில் மதிப்பை ஏற்படுத்தும், `நகாசு` வேலையை மேற்கொள்ளும், வலதுசாரி பேராசிரியர்கள், போலிப் பேராசிரியர்கள் அணியைச் சேர்ந்தவர் பைப்ஸ. அவரது தந்தை பிரபலமான, கம்யூனிஸ விரோத பேராசிரியர் ரிச்சர்ட் பைப்ஸ். அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழக, ``சோவியத்`` ஆய்வு பேராசிரியர். சோவியத் யூனியன் சிதைவுறுவதற்கு முன்னர், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ரஷிய நடப்பு எதுவாக இருந்தாலும், அமெரிக்க ஊடகங்கள் அவரது கருத்தைக் கேட்டு வெளியிட்டு வந்தன. ரோனால் ரீகனின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் என்ற முறையில் எண்பதுகளின் துவக்கத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு(USSR) எதிராக, அணு ஆயுதப் போரில் அமெரிக்கா வெற்றிபெறும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர்.

அதேபோன்று, அவரது மகன், டேனியல் பைப்ஸ் தனது குடும்ப பாரம்பரியத்தைப் பயன்படுத்தி நிபுணராக உலா வருகிறார். அவர் ஹார்வர்ட் பி.எச்.டி. பட்டத்தை மட்டுமே வைத்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிற்கு பேராசிரியர் பணி எதையும் செய்யவில்லை. மத்திய கிழக்கு நிபுணர் என்று சொல்லி, அரபு நாடுகள், முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதில் மட்டுமே தகுதி பெற்றிருக்கிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் அவர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

1990ஆம் ஆண்டு, அதிதீவிர வலதுசாரி, சஞ்சிகையான ``நேஷனல் ரிவியூ``வில் பைப்ஸ் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். ``பழுப்பு நிறம் கொண்ட மக்கள் மிகவும் வியப்பூட்டும் உணவு வகைகளைத் தயாரித்துக்கொண்டும், வேறு வகை சுகாதார பழக்கவழக்கங்களைக் கொண்டும், பெருமளவிற்கு அமெரிக்காவில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். குடியேறும் அனைவருமே, மிகவும் வியப்பூட்டும் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்தான். ஆனால் முஸ்லீம்களது பழக்க வழக்கங்கள் மற்றவர்களது பழக்க வழக்கங்களைவிட மிகவும் தொந்தரவு தருபவை. அண்மையில் அவர் ஒரு நூல் எழுதியுள்ளார். ``தீவிரவாத இஸ்லாம் அமெரிக்காவிற்கு வருகிறது`` என்ற தலைப்பில் அச்சத்தைப் பரப்பும் வகையில் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இஸ்லாம் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவை அவர்கள் விரியத் சட்டப்படி இயங்கும், மத அடிப்படையில் அமைந்த சமுதாயமாக மாற்றத் திட்டமிட்டுச் சொல்லப்பட்டு வருகிறார்கள் என்று முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுடன் எழுதியுள்ளார். ``எல்லா முஸ்லீம்களுமே, துரதிருஷ்டவசமாக சந்தேகத்திற்குரியவர்கள்`` என எழுதியுள்ளார்.

இளய பைப்ஸ்-சும் ரீகன் நிர்வாகத்தில் பணியாற்றியவர். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக் குழுவில் தற்போது இடம்பெற்றுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவான நிபுணர் குழு மூலம், ரிச்சர்ட் பெர்லி, பால் ஒல்போவிச் ஆகியோருடன், தொடர்பு கொண்டவர். வாஷிங்டனின் அண்மைய கிழக்குநாடுகள் கொள்கைவகுப்பு அமைப்பு (Washington Institute for Near East Policy -WINEP) இஸ்ரேலுக்கு ஆதரவான நிபுணர்களை அடங்கியதாகும். இவர்கள்போல் புஷ் நிர்வாகத்தில் மிகவும் செல்வாக்குமிக்கவர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகப் பேராசிரியர் பாத்திரம் பற்றி பைப்ஸின் கருத்து குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தான் பயின்ற பல்கலைக்கழகம் பற்றி பைப்ஸ் பின்வருமாறு கூறியிருக்கின்றார்; ''வியட்நாம் யுத்தம் வரை எப்போதுமே ஹார்வர்ட் பல்கலைக்கழகம், தேச பக்தியுள்ள கல்வி நிலையமாகச் செயல்பட்டது. வியட்நாம் யுத்த காலப்பகுதியில், ஹார்வர்ட், இதர கல்வி நிலையங்களுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான அமைப்பாக உருவாயிற்று. போர்க் காலத்தில் மிகப்பெரும் பல்கலைக்கழகங்கள், நாட்டிற்கு எதிராக்த் திரும்புவதற்கு எந்த விதமான அடிப்படைக் காரணமும் இல்லை. ஒவ்வொருவரும் நாட்டின் பக்கம்தானே இருக்க வேண்டும்``

``நாடு`` என்ற பொதுவான சொல்லில், ஆளும் மேல் தட்டினரது நலன்களை, நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களது நலன்களோடு தவறான அடிப்படையில் ``பைப்ஸ்`` தொடர்பு படுத்துகிறார். வியட்நாம் போர் நடைபெற்ற காலத்தைவிட, தற்போது, அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களிடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. அறுபதுகளில், ஆளும் வர்க்கத்தினர் செயல்பட்டதைவிட, தற்போது, எதிர்ப்புகளை அடக்குவதிலும், நியாயமான விவாதங்கள் நடைபெறுவததைத் தடுப்பதிலும், இன்றைய அரசு மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறது. தற்போது இவர்கள் அலட்சியம் மிகுந்த பெரும் ஆக்கிரமிப்புப் போரில் நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

``கேம்பஸ் வாட்ச்`` இணையதளம், பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும், மிக விரிவான - தாக்குதலாகும். ``இன்டர்நெட்டை`` கருவியாகப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வமற்ற நிபுணர் குழுவாக, இந்தத் தகவல்தளம் செயல்பட்டு, கறுப்புப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்ற விவரத்தை வெளியிட பைப்ஸ் மறுத்து வருகிறார். இவர்களது பட்டியலில் இடம்பெற்றுள்ள எவரும் வேலை இழக்கவில்லை என்றாலும் இதுபோன்ற பட்டியலால் வரும், கடுமையான விளைவுகளைக் கருதிப் பார்க்கவேண்டும். வேலைப் பாதுகாப்பு இல்லாத பேராசிரியர்கள் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடுவதற்கே தயங்கி வருகின்றனர். நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மகளிர் ஆய்வு தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பலர் கலந்துகொண்டனர் என்பதை கம்பஸ் வாட்ச், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததனால், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் தேச பக்த சட்டத்தின்படி, பழிவாங்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் கம்பஸ் வாட்ச் வெளியிடும் நபர்கள் மீது, எதிர்காலத்தில், வேட்டையாட இது வாய்ப்பாகிவிடும் என்று சில விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் பாலஸ்தீனர் சமி-அல்-அரியன், நிரந்தரப் பணியாளராயிருந்த இவரைப்பற்றி, எந்த விதமான ஆதாரமும் இல்லாம் ``ஃபாக்ஸ் நியூஸ்``, இவர் பயங்கரவாத ஆதரவாளர் என்ற தகவலை வெளியிட்ட 15 மாதங்களுக்குப் பின்னர் அந்தப் பேராசிரியர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத்தான் கம்பஸ் வாட்ச் வெளியிட்டு வருகிறது. அல்-அரியன் வேலை நீக்கம் செய்யப்பட்டதை மிகுந்த உற்சாகத்தோடு பைப்ஸ் வரவேற்றுள்ளார்.

ஓராண்டிற்கு முன்னர், மற்றொரு வலதுசாரி பேராசிரியர்கள் குழு ACTA(American Council of Trustees and Alumni) இன் 40 பேராசிரியர்கள், மற்றும் பல்கலைக்கழகத் தலைவர் ஒருவர், ஆகியோரின் பட்டியலை வெளியிட்டு ``இவர்கள் தேசபக்தி குறைந்தவர்கள்`` என்று விளக்கம் தந்தது. இந்த ACTA - அமைப்பை நிறுவியவர் Lynne Cheney, இவர் இன்றைய குடியரசுத்துணைத்தலைவர் Dick Cheney இன் மனைவியாவார்.

Top of page