World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government signals support for Iraq war

ஜேர்மன் அரசாங்கம் ஈராக் மீதான போருக்கு ஆதரவாக சமிக்கை கொடுக்கிறது

By Peter Schwarz
16 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

புத்தாண்டுக்கு முன்பு, ஜேர்மன் கூட்டரசாங்கத்திலுள்ள சமூக ஜனநாயக கட்சியும் (SPD), பசுமைக் கட்சியும் தங்களுடைய முந்னயை நிலையான, ஈராக் மீதான போருக்கான ஒட்டுமொத்த எதிர்ப்பை கைவிட்டுவிட்டது. ஜேர்மனி அத்தகைய போருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்களிக்குமா என்று Spiegel எனும் பத்திரிகை கேட்ட கேள்விக்கு, வெளிநாட்டு அமைச்சர் ஜோஷ்கா ஃபிஷ்ஷர் (பசுமைக் கட்சி) கூறுகையில், ''இதை முன்பே தீர்மானிக்க இயலாது, ஏனென்றால் இப்பிரச்சனையை எப்படி, எந்த நிலைமையின்கீழ் பாதுகாப்பு சபை கையாளும் என்பது யாருக்குமே தெரியாது'' என்றார்.

இந்த அறிக்கையானது, சமூக ஜனநாயகம் மற்றும் பசுமைக் கட்சியின் உறுப்பினர்களுக்குள் கோபத்துடன் கூடிய எதிர்ப்புகளை கிளப்பிவிட்டதும், கான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schorder) தன் வெளிநாட்டு அமைச்சரின் உதவிக்கு உடனே விரைந்தார். ''ஒரு தீர்மானத்தின் பின்னணி தெரிந்தால்தான், குழுவில் ஒருவருடைய வாக்கை ஒருவர் தீர்மானிக்க முடியும்'' என்று அவர் Spiegel பத்திரிகைக்கு கூறினார்.

இப்பிரச்சனை மேற்கொண்டு கட்சிக்குள் எழுாமலிருக்க ஷ்ரோடர் பார்த்துக் கொண்டார். ''இப்படிப்பட்ட ஊகங்களில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை'' என்று பேசிய அவர், ''ஜேர்மனியின் வாக்கு, தேர்தல்களுக்கு முன்னும் பின்னும் இருக்கும் நம்முடைய நிலைப்பாட்டைதான் எதிரொலிக்கும்'' என்று உறுதியளித்தார்.

இது இப்படித்தான் என்றால், ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும், பாதுகாப்பு சபையில் போர் தொடர்பான எந்த தீர்மானத்திற்கும் எதிராக தமது தெளிவான நிராகரிப்பை தெரிவிக்கவேண்டும். ஜனவரி தொடக்கத்திலிருந்து தற்காலிக உறுப்பினராக பாதுகாப்பு சபையில் இருக்கும் ஜேர்மனி, எதிர்வரும் பிப்ரவரி வரை பாதுகாப்புசபைக்கு தலைமை வகிக்கும்.

பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்பே சென்ற செப்டம்பரில், ஷ்ரோடர் தொடர்ந்து போருக்கு எதிரான தன் எதிர்ப்பை தொடர்ச்சியாய் அறிவித்தார். பல பிரச்சார பேரணிகளில், ஈராக்குக்கு எதிராக எடுக்கப்படும் எந்த ஒரு இராணுவ நடவடிக்கையையும் ''அபாயகரமானசெயல்'' என்று வர்ணித்த அவர், ஜேர்மனி அவரது தலைமையின் கீழ் அதில் பங்குகொள்ளாது என்றும் விளக்கினார். சென்ற செப்டம்பரில் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ''ஐ.நா. எடுக்கும் தீர்மானம் எவ்வாறாக இருந்தாலும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தான் முன்வைக்கும் கருத்துகளில் மாற்றமில்லை'' என்றார்.

இந்த போர் நிராகரிப்பு, தேர்தலை நிர்ணயம் செய்தது. தேர்தல் நாளுக்கு இரண்டு மாதத்துக்கு முன்புவரை சமூக ஜனநாயகக் கட்சியானது கிறிஸ்தவ ஜனநாயக கட்சியைவிட (CDU) மிகவும் பின்தங்கியதாய் இருந்தது. போர் எதிர்ப்பு கொள்கையை கையில் எடுத்துக்கொண்ட சமூக ஜனநாயக கட்சி, மிக விரைவில் முன்னணி நிலைக்கு வந்துவிட்டது. சமூக ஜனநாயகம் மற்றும் பசுமைக் கட்சி, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றன.

அதிலிருந்து, ஷ்ரோடரும், ஃபிஷரும் தங்களுடைய முந்தைய கொள்கையிலிருந்து மெள்ள பின்வாங்க ஆரம்பித்தனர். தேர்தலுக்கு முன்பு வரை போரில் ஜேர்மனி பங்குகொள்ளாது என்று தான் சொல்லி வந்தார் ஷ்ரோடர். ஆனால் தேர்தலுக்குப்பின் அக்கொள்கை ''நேரடியாக பங்குகொள்ளாது'' என்று திருத்தம் செய்யப்பட்டது.

''போரின்போது, அமெரிக்க படைகளுக்கான தளநிலைப்பாடுகள், ஜேர்மனியில் 'எதிர்ப்பார்த்த வகையில்' கிடைக்கப்பெறும் என்றும் தன் அரசானது அமெரிக்க போர் விமானங்களுக்கு ஜேர்மனியின் வான்பரப்பை உபயோகித்துக் கொள்ள அனுமதியளிக்கும்'' என்று அவர் அமெரிக்காவுக்கு வாக்குறுதி தந்தார்.

வெகுவிரைவில், ஷ்ரோடர் ''நேரடியாக பங்கேற்காது'' என்பதையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். குவைத்தில் இருக்கும் இரசாயன மற்றும் உயிர்க்கொல்லி தாக்குதல்களை எதிர்க்கொள்ளக்கூடிய தாங்கிகளை ஜேர்மனி திரும்ப அழைத்துக் கொள்ளாது என்று உறுதிமொழி தந்துள்ளார். ஜேர்மன் இராணுவத்தினர் நேட்டோவின் AWACS விமானங்களில் இருப்பார்கள் என்றார். இதில் ஜேர்மன் இராணுவத்தின் இரு கரங்களும் போர் செயல்பாடுகளில் நேரடியாக பங்குபெறும் என்பது தெரிகிறது. ஈராக் மீதான போர் நடக்கும்போது, ஜேர்மனியிலுள்ள அமெரிக்க படைகளை விடுவித்து ஈராக்கில் பயன்படுத்துவதற்காக, ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்புக்காக ஜேர்மனி தன் படைகளை கொடுத்து உதவ உள்ளது.

சென்ற நவம்பரில், ஈராக்கில் தீவிர ஆயுத சோதனைகள் நடத்துவதென, ஐ.நா. பாதுகாப்பு சபை இயற்றிய தீர்மானம் 1441 க்கு, ஜேர்மன் அரசு தன் முழு ஆதரவை அளித்தது. இத்தீர்மானம் இயற்றப்பட்டதை ஒரு ராஜ தந்திர ரீதியான வெற்றி என்றும், அமெரிக்கா எந்த ஒரு இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் அது பாதுகாப்பு சபையிடம் ஆலோசனை பெற்றே செயல்பட வேண்டும் எனவும் பிரான்சு கூறியுள்ளது. இன்னொரு பக்கம் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஃபிஷர் டிசம்பரில், இத் தீர்மானமானது இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக ஐ.நா.வின் அனுமதி தேவைதானா என்ற ''நேற்றைய விவாதத்தை'' எழுப்புகிறது என்றார். அமெரிக்காவின் உரையாடலை இவர் சாதுர்யமாக அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார். இத் தீர்மானத்தின்படி, ஈராக் ''விஷயதான அத்துமீறல்'' செய்துள்ளதாக புஷ் நிர்வாகம் முடிவுக்கு வரும்பட்சத்தில், ஈராக் மீது இராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பதோடு பாதுகாப்பு சபையிடமிருந்து மேலும் அனுமதி பெறாமலே இதை செய்வது சாத்தியம்.

பாதுகாப்பு சபை அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கான புதிய பிரத்யேகமான தீர்மானம் இயற்றி அனுமதி வழங்காது என்று ஜேர்மன் அரசு நம்புகிறது. ஏனென்றால் அப்படிப்பட்ட தீர்மானம் ஒரு தீர்க்கப்படாத குழப்பத்தை விளைவிக்கும் என்கிறது. ஜேர்மனியர்கள் போருக்கு சாதகமாக வாக்களித்தால், தேர்தல் வாக்குறுதிகளை மீறியதற்காக ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும் இனி தொடர்ந்தும் முகமூடியை அணிந்து கொள்ளும் தேவையிருக்காது, மேலும் ஆளும் கூட்டணியும் நிட்சயமாக பிளவுபட்டு போகும். எப்படியானாலும், ஜேர்மனி வாக்களிக்காமல் இருந்தாலோ, எதிராக வாக்களித்தாலோ, சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அச்சுறுத்தப்படுவார்கள்.

வீட்டோ (veto) உரிமை பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா மற்றும் பிரான்சு, இவை உடையன. அப்படிப்பட்ட, ஒரு தீர்மானத்தை ஆதரிக்கத்தான் செய்யும் ஏனென்றால் போருக்குப் போகும் அமெரிக்காவையும், பிரிட்டனையும் எக்காரணத்துக்காகவும் தடுத்து நிறுத்த இயலாது என அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

ஒரு அமைதியான தீர்வையே தான் விரும்புவதாய் தொடர்ந்து சொல்லி வந்த பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக், புத்தாண்டுக்குப் பிறகு முற்றாக பின்வாங்கினார். ஈராக்குக்கு எதிரான போரில் பிரான்சும் இராணுவ ரீதியான செயலில் ஈடுபடும் என்று வெளிப்படையாக முதல்முறையாக உறுதிப்படுத்தினார்.

படைத் தலைவர்களுக்கான புத்தாண்டு நிகழ்ச்சியில், ''நேரக்கூடிய எந்த சம்பவத்திற்கும்'' தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு படைகள் செயல்பட்டு வரும் இடங்கள் மேலும் அதிகமாகக்கூடும் எனக் குறிப்பிட்டு அதற்காக ''வருந்தினார்.'' ஈராக் என்று பெயரிட்டு கூறவில்லையென்றாலும், யாருக்கும் அவர் பேசிய வார்த்தைகள் சந்தேகமின்றி புரியாமல் இல்லை. அன்றே தூதரக அதிகாரிகளிடம் பேசுகையில், ஐ.நா. ஒரு தீர்மானத்துக்கு வந்தால், பிரான்ஸ் ''சர்வதேச சமுதாயத்தில்` தன்னுடைய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்'' என்றார்.

ஏன் இந்த மாற்றம்?

ஐ.நா. பாதுகாப்பு சபை, மற்றும் ஜேர்மன் அரசு உட்பட, புஷ் நிர்வாகத்தின் போர் கொள்கைகளுக்கேற்ப தம்மை நடத்திச் செல்கின்றன. இது ஏன் இப்படி என்பது கட்டாயம் விவரிக்கப்படல் வேண்டும்.

பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள் ஈராக் மீதான போருக்கு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். கருத்துக் கணிப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள், ஜேர்மனியில் தேர்தலை நிர்ணயித்த போர் எதிர்ப்பு கொள்கை இன்னும் குறையவில்லை. கடுமையான போர் கொள்கைகளை பரப்பினாலும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மக்களிடையே அதற்கான ஆர்வமும் மகிழ்ச்சியும் காணப்படவில்லை. ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும் ஜேர்மன் தேர்தல் பிரச்சாரத்தின்போது விவாதித்த, பேச்சுக்கள் யாவும் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. புஷ் நிர்வாகமானது, தன்னுடைய கடுமையான போர் கொள்கைகளை இன்னும் தக்கவைத்துக் கொள்வது எப்படி?

ஜேர்மன் தேர்தல் பிரச்சாரத்தின்போது புஷ்ஷின் போர் நடவடிக்கையை விமர்சித்த ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும் வாஷிங்டனின் கோப தாக்குதலுக்கு ஆளானார்கள். வாஷிங்டனின் இத் தாக்குதலுக்கு ஜேர்மனியின் பழமைவாதிகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. கிறிஸ்த்தவ ஜனநாயக கட்சி (CDU) மற்றும் அதன் அங்கமான கிறிஸ்த்தவ சமூக கட்சி (CSU), மற்றும் பழமைவாத செய்திப் பிரிவும் சமூக ஜனநாயக, பசுமைக் கட்சியின் அரசாங்கம் அத்திலாந்திற்கு இடையிலான கூட்டணியை சீர்குலைப்பதாகவும், ஜேர்மனியை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளியிருப்பதாகவும் குறைகூறின.

''ஜேர்மனி, நம்பிக்கையையும், தன் செல்வாக்கையும் ஏராளமாக இழந்து வருகிறது'' என CDU வின் பேச்சாளர் Friedbent Pfliiger, என்பவர் Frankfurter Rundschau எனும் பத்திரிகைக்கு, வெளியுறவு கொள்கைகளைப் பற்றி பேசும்போது ''ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஜேர்மனி ''இல்லை'' என்று வாக்களித்தால், (சிரியாவுக்கு அடுத்தபடியாக இதுவும்) நேட்டோ (NATO) கூட்டு நாடுகளுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பின் பொது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கும் அரசியல் ரீதியாக பேராபத்து அதிகரிக்கும்.'' என குறிப்பிட்டார்.

ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும், தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் வெற்றிகரமான கேட்டுக் கொண்ட போர் எதிர்ப்பு கொள்கைகளுக்கு வளைந்து கொடுக்காமல், இந்த வலதுசாரி நெருக்குதலுக்கு வளைந்து கொடுத்தது ஏன்?

போரை தொடர்ந்தும் எதிர்த்துக்கொண்டிருந்தால், ஐரோப்பிய மக்களின் ஆதரவை மட்டுமல்லாது, இதன் தாக்கம் அமெரிக்க மக்களின் கருத்துக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இது புஷ் நிர்வாகத்துக்கு வேண்டிய அளவு பிரச்சனைகளை விளைவித்திருக்கும். செய்தி நிறுவனங்கள் கூறுவதைப் போல் அவரின் போர்க்கொள்கைகள் ''பிரபல்யமானது'' அல்ல என்ற தெளிவான நிலை உடனடியாக தெரியவந்தது, ஜனநாயக கட்சியின் எதிர்ப்பே இல்லாமல் போனதால், இப்படிப்பட்ட கட்டுக்கதை சாத்தியமாகிவிட்டிருந்தது. புஷ்ஷின் போர் கொள்கை குறித்து ஆழமான வித்தியாசங்கள், அவருடைய இராணுவ அமைப்புக்குள்ளேயே எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் அரசு ''ஜோர்ஜ் புஷ்ஷின் அன்பைத் தவிர வேறு எதையும் இழக்காது'' என்று Michael Naumann கூறியுள்ளார். ஈராக் மீதான போரை எதிர்க்கும் சில ஜேர்மன் பத்திரிகையாளர்களில் ஒருவரான இவர், Zeit வாரப் பத்திரிகையின் தலையங்கத்தில் இவ்வாறு எழுதினார். Zeit பத்திரிகையில் ஆசிரியராகும் முன்பு, ஷ்ரோடரின் அமைச்சரவையில் சிறிது காலம் இவர் பணியாற்றியுள்ளார்.

அத்திலாந்திற்கு இடையிலான கூட்டணியை காப்பாற்றுவதற்காகவே புஷ்ஷுக்கு ஏற்ப ஷ்ரோடரும், ஃபிஷ்ஷரும் வளைந்து கொடுக்கிறார்கள் என்ற கூற்றை ஆராயதேவையில்லை. அமெரிக்காவின் சலுகை படைத்த தட்டினரின் ஆர்வங்கள், ஆக்ரோஷம் மற்றும் ஒருதலைபட்சமான போக்குகள், இவர்களுடைய கீழ்படியும் செயலை நன்கு பலப்படுத்தினாலும், அது மேலும் சர்வதேச உறவுகளையும் சீர்குலைக்கும். புஷ் நிர்வாகம் தன்னுடைய பிரச்சாரத்தில் வெற்றி கண்டால், இராணுவ ஆக்கிரமிப்பு என்ற பசியை மேலும் பெருக்கி, சர்வதேச அளவில் மேலும் பதட்டத்தை அதிகரித்துவிடும். ஈராக்குக்கு எதிராக உள்ள சர்வதேச நாடுகளின் கூட்டணி சீனாவை அடக்குவதற்காக 1900 களில் ஏகாதிபத்திய நாடுகளால் கூட்டணி அமைக்கப்பட்டன. பதினான்கு வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்குள்ளேயே குத்துவெட்டுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

போரை பொறுத்தவரையில் சமூக ஜனநாயகமும், பசுமைக் கட்சியும் திருப்பம் எடுத்துக் கொண்டதற்கான காரணங்கள் எவை ?

ஷ்ரோடர் மற்றும் ஃபிஷரின் ஆளுமைகளும் இதில் கணிசமான பாத்திரத்தை வகிக்கின்றன. ஒரு மத்தியதர சமூக பின்னணியில் இருந்து வளர்ந்து, மிக உயர்வான அரசாங்க பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த இருவருக்கும், முன்னேறத்துடிக்கும் அவா மற்றும் அரசியல், பொருளாதார உயர்தட்டினருக்கு தங்களை நம்பகமானவர்களாக நிரூபிக்கும் உந்துதலும் உண்டு. இப்படிப்பட்ட போக்குடைய அவர்கள் வலதுசாரி எதிர்ப்புக்கு ஆளாகுவதோடு, மக்கள் உணர்ச்சிகளுக்கு வெறும் இகழ்வைத்தான் பெற்றுள்ளார்கள்.

எப்படியிருந்தாலும், தனிப்பட்ட எண்ணங்களைக் காட்டிலும், ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் அடிப்படை குறிக்கோள்களே முக்கியமானது. அமெரிக்காவோடு ஒப்பிடுகையில், பலவீனமான இராணுவத்தை கொண்டுள்ள ஏகாதிபத்திய நாடான ஜேர்மனி, வளைகுடாவில் தனது சொந்த பொருளாதார மற்றும் அரசியலில் அக்கறை எடுத்து வருகிறது.

ஜேர்மன் தேர்தலுக்கு முன், ஷ்ரோடர் மற்றும் ஃபிஷ்ஷர் உரத்த குரலில் கூறிய ஈராக் மீதான போர் எதிர்ப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் பற்றி நாம் எழுதுகையில், ''நட்பு நாடுகள், சர்வதேச சங்கங்களான ஐ.நா. மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவைகளை பொருட்படுத்தாமல், வாஷிங்டன் நடக்க உத்தேசித்ததைப் பார்த்தால், ஜேர்மனியின் நலன்கள் குறித்த பயம் பேர்லினுக்கு வந்துள்ளது.'' என எழுதியிருந்தோம்.

வாஷிங்டனின் ஆதிக்கத்திற்கு எதிரான எண்ணத்தை, முன்னாள் பிரதமர் ஹெல்மூட் கோல் (CDU) காலத்திலிருந்த ஜேர்மன் அரசு பொது ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளால் எதிர்த்து வந்துள்ளது. வரவிருக்கும் ஈராக் மீதான போரால், இத்திட்டம் இப்போது தகர்கின்றது. ஐரோப்பிய நாடுகளின் நிலைகளின் நிபந்தனையற்ற ஒப்பந்தம் (பிரிட்டன் மற்றும் ஸ்பெயின்) முதல் இராணுவ நடவடிக்கை, (பிரான்ஸ்), மிதமான எதிர்ப்பு வரை (ஜேர்மனி மற்றும் கிரேக்க நாடு) உள்ளது. இதிலிருந்துதான் சர்வதேச ''தனிமைப்படுதல்'' என்ற அச்சம் உருவாகிறது. இதைத்தான் ஜேர்மன் அரசு, பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் நிலையை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கவிரும்புகின்றது.

சமூக ஜனநாயகம் மற்றும் பசுமைக் கட்சியின் இந்த திருப்பத்திற்கான இறுதியான குறிக்கோள் அதன் உள்நாட்டு கொள்கைகளில் வேரூன்றியுள்ளது. வரவு செலவு பற்றாக்குறையும், வேலையில்லாதோர் எண்ணிக்கையும் சாதனை அளவை எட்டியுள்ளது. பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளதால், போரின் விளைவுகள் என்பது அச்சுறுத்தலாக சமூக வெடிப்புகளை உருவாக்கும்.

தேர்தலிருந்தே, அரசு, வலதுசாரியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. CDU/CSU திட்டங்களின் பெரும்பாலான அம்சங்களை உள்ளீர்த்துக் கொண்டு, உழைக்கும் மக்கள் மீது போர் தொடுக்கும் முகமாக சமுதாய நலன்களில் வெட்டுக்களை கொண்டுவந்தும், குறைந்த ஊதியத்துக்கு உழைப்பாளர்களை அறிமுகம் செய்தும், பொதுத்துறை தொழிலாளர்கள் மீதும் தாக்குதலை நடத்துகிறது.

தன் மக்கள் மீதே போர் தொடுக்கும் எந்த ஒரு அரசும் சர்வதேச அரசியலில் அமைதியை போதிக்க முடியாது. ஈராக் மீதான போருக்கும், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களுக்கும் என ஒரே குறிக்கோள்தான் உள்ளன: அதன் நோக்கம் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாத்து, செல்வந்தர்களுக்கு லாபத்தை அதிகரித்து கொடுப்பதுதான்.

ஐரோப்பிய அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் ஈராக் மீதான ஒரு போரை தவிர்க்கும் அல்லது எதிர்க்கும் என்ற அவநம்பிக்கையில்தான் பேர்லினில் அரசு இந்த திருப்பத்தை செய்துள்ளது. இந்த குறிக்கோள் போருக்கான எதிர்ப்பை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையும், சமூக நலன்களையும் பாதுகாக்கும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தினால் தான் அடையமுடியும்.

Top of page