World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

California: Schwarzenegger transition team reveals right-wing agenda

கலிஃபோர்னியா: ஷ்வார்ஸ்நெக்கரின் இடைக்கால குழு வலதுசாரி நிகழ்ச்சி நிரலை புலப்படுத்துகின்றது

By Don Knowland
21 October 200
3

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 6ம் தேதியன்று, கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கர், தனக்கு தொடக்க கொள்கைகள் முடிவுகள் பற்றியும், நிர்வாகப் பதவிகளை நிரப்புவது பற்றியும், 65 பேர்கள் அடங்கிய இடைக்காலக் குழு ஒன்றை ஆலோசனை கூறுவதற்கு அறிவித்தார். தன்னுடைய குழுவைப்பற்றி 2002 தேர்தலில் கிரே டேவிசிடம் தோற்றுப்போன, குடியரசுக்கட்சி வலதுசாரியான, பில் சைமன் முதல், "இடப்புறத்தில்" சான்பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரெளன் வரை, அரசியல் நிறமாலையில் "பரந்த தன்மையுடையது", எனத் துதிபாடினார். இப்படிப்பட்ட கூற்றுக்கள், செய்தி ஊடகத்தால் கிளிப்பிள்ளைபோல் திரும்பக் கூறப்பட்டாலும்கூட, குழு, ஷ்வார்ஸ்நெக்கரின் கொள்கைகளின் சாரத்தை, அனைவரும் தெளிவாகக் காணலாம்.

இக்குழுவின் தலைமையிடத்தில், கலிஃபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினரும், நெட் கிங்ரிச்/ரொம் டிலே இரட்டையர் கோஷ்டிக்கு நெருக்கமானவரும், புஷ்ஷிற்கு உற்றவருமான டேவிட் டிரையர் இருக்கிறார். மற்ற முக்கிய குடியரசுக்கட்சி வர்த்தகர்களிலும், அரசியல் பிரமுகர்களிலும், முக்கியமானவர்கள் வருமாறு: புஷ்ஷின் கலிஃபோர்னிய அரசியல் நடைமுறைகளுக்குத் தலைமை தாங்குவதோடு, முதலீட்டு வங்கியாளராகவும் உள்ள ஜெரால்ட் பார்ஸ்கி; ஹெவ்லெட் பாக்கார்டின் தலைவர் கார்லி பியோரினா; பழைய லொஸ் ஏஞ்சலஸ் மேயர் ரிச்சார்ட் ரியார்டன்; பழைய கலிஃபோர்னிய கவர்னர் பீட் வில்சன்; பில்லியன் அதிபர் எலை பிராட், புஷ் குடும்பம் பெருமளவு நிதியங்கள் முதலீடு செய்திருக்கும் பாதுகாப்புத் தொழில்துறை, கார்லைல் குழுவின் நிர்வாகி பொப் கிராடி.

Bechtel நிறுவன நிர்வாகக்குழு உறுப்பினரான George Schultz (ரேகன், ்ஃபோர்ட் நிர்வாகங்களில் உயரதிகாரியாக இருந்தவர்). ஸ்வார்ஸ்நெக்கர் செல்லவுள்ள பாதையைப் பற்றி சுருக்கிக் கூறியதாவது: "வரவு-செலவு திட்ட பிரச்சினையைத் தீர்க்க, செலவினங்களைக் குறைப்பாரே ஒழிய, வரிவிதிப்பை உயர்த்தமாட்டார். சாக்ரமென்டோவின் ஒலிப்பே,180 டிகிரிகள் திரும்பி, வர்த்தக-எதிர்ப்பு என்பதிலிருந்து, வர்த்தக-சார்பு என மாறும்."

எஞ்சியுள்ள சமுக நல திட்டங்களைத் தகர்ப்பது, பெருநிறுவன இலாப சேகரிப்பிற்குள்ள தடைகளை அகற்றுவது ஆகியவைதான், "வர்த்தக-சார்பு" என்ற அடையாளச் சொல்லின் பொருளாகும். ஏற்கனவே டேவிசின் வரவுசெலவுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் செலவுக் குறைப்புக்களின் தன்மை, வேகம் இவற்றில் திருப்தி அடையாத இந்த அடுக்குத்தான், திருப்பியழைத்தல் முறைக்கான செலவுகள் செய்து, ஷ்வார்ஸ்நெக்கரை தங்கள் சார்பில்முன்வைத்திருந்தது. இன்னும் கூடதலாக அத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்ற நிர்வாகத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.

ஷ்வார்ஸ்நெக்கர், தன்னுடைய இடைக்கால குழுவில், ஜனநாயகக் கட்சி மேயர்களான லொஸ் ஏஞ்சல்சின் ஜிம் ஹான், சான்பிரான்ஸிஸ்கோவின் பிரெளன், ஆகியோர்தவிர வலதுசாரி ஆதரவாளர்களின் செயற்பட்டியலை அடக்குவதற்காக இல்லாமல், தொழிலாளருக்கு வரவுள்ள தாக்குதல்களின் தீவிரத்தை மூடிமறைக்கும் வகையில் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் சேர்த்துள்ளார். தான் எல்லாப்பிரிவு மக்களுடைய வேட்பாளர் என்று காட்டிக்கொள்ளும் மாயத் தோற்றத்தை, கூடுதலாக நிலைநிறுத்தவும், வழக்கமான "சிறப்பு நலன்கள்" கொண்ட அரசியல் செல்வாக்கினின்றும் தனித்து நிற்பதாக காட்டிக்கொள்ள இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பியழைத்தல் தேர்தலில் தோல்வியைக்கண்டதால் அதிர்ந்து போயுள்ள ஜனநாயகக் கட்சி, எப்படியும் மேலும் வலதுபுறம் நகர்ந்து, புதிய கவர்னருடன் இணைந்து செயல்படத்தான் இருக்கும். கலிஃபோர்னிய சட்டமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் சபாநாயகருமான, பொப் ஹெர்ட்ஸ்பேர்க் உற்சாகத்துடன் கூறினார்: "பொருள்பொதிந்த ஓர் இருகட்சி அரசாங்கம் அமைத்துச் செயல்படுவது ஒரு நம்பிக்கையுடைய அடையாளம் ஆகும்." மாநில செனட் மன்றத்தின் இடைக்காலத் தலைவர், ஜோன் பேர்ட்டனும் மற்றும் வில்லி பிரெளனும், ஷ்வார்ஸ்நெக்கருடன் நெருக்கமாகச் செயல்படும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

ஸ்வார்ஸ்நெக்கர் புளோரிடாவின் நிதித் துறையின் இயக்குனராக உள்ள டோனா அர்டுயினையும், தன்னுடைய கலிஃபோர்னிய வரவுசெலவுத் திட்டத்தை "தணிக்கை" செய்ய தலைமை தாங்க பெயரிட்டுள்ளார். இந்நடவடிக்கைக்கு, புளோரிடாவின் கவர்னர் ஜெப் புஷ், அர்டுயினின் பணிகளை "கடனாக" கொடுத்துள்ளார். முன்பு இவ் அம்மையார், புளோரிடா, மிச்சிகன் மாநில குடியரசு கவர்னர்களுக்காக பணி புரிந்து, அம்மாநிலங்களில் சமுக நல திட்டங்களை குறைத்து செலவுகளையும் குறைக்கும் வேலையைச் செய்தார்.

பட்ஜெட்டில், "நிறைய வீண்செலவுகளை காணக்கூடும்" என பலமுறை ஸ்வார்ஸ்நெக்கர் கூறியிருக்கிறார். ABC செய்திகளின் நிருபராகிய பீட்டர் ஜெனிங்ஸிற்கு அளித்தபேட்டியில், அரசாங்க ஊழியர்களுக்கு குறைப்புக்கள் ஏற்படுத்தினால், "1 பில்லியன் டாலர்கள் அதிலேயே மிச்சப்படும்" எனக் கூறியுள்ளார். மாநில அரசாங்கம், புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது -- சிலமாதங்கள் முன் பட்ஜெட் காரணங்கள் காட்டி 16,000 அரசு ஊழியர்களுக்கு பணிமுடக்கம் செய்துள்ளது. ஷ்வார்ஸ்நெக்கர் இவ்வொப்பந்தங்களை, கூடுதலான பணி முடக்கங்கள் என்ற கைத்தடி காட்டி பயமுறுத்தும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.

K-12 கல்விச்செலவுகளுக்குப்புறத்தே, குறிப்பிட்ட சதவிகிதம் கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு விதிகள் வலியுறுத்துகின்ற பெரும்பாலான செலவுகள், முன்னரே பெரிதும் குறைக்கப்பட்டுவிட்ட சுகாதாரநலத்திற்கும், சமுகநலன்களுக்கும் உட்படுகின்றன. எனவே, செலவுக் குறைப்புக்கள் என்பது, இந்தப்பகுதிகளைப் பெருமளவு பாதிக்கும் ஆகையால், சமுதாயத்தின் மிகுந்த வறுமைக்குட்பட்ட அடுக்குகளின்பால் பெருஞ்சுமை ஏற்றப்படும். ஷ்வார்ஸ்நெக்கரின் தேர்தல் வாக்குறுதியான, தேவையான சமுக நல திட்டங்களை குறைக்காமல், வரவு செலவுத்திட்டத்தை சமன்செய்வது என்பது ஒரு பொய்யே ஆகும்.

ஷ்வார்ஸ்நெக்கருடைய 2004-2005 வரவுசெலவுத்திட்ட அறிக்கை, டிசம்பர் இறுதிக்குள் அச்சிற்கு அனுப்பப்பட வேண்டும்; அதன்பின் ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும். அதைச் சமன்படுத்த இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் சில இடையூறுகளை எதிர்நோக்கும்.

சமீபத்தில் பதிவாகியுள்ள சில வழக்குகள், 13 பில்லியன் டாலர்கள் அரசாங்க கடன் வாங்குதலை எதிர்த்துள்ளன. அக்காரணத்தினாலேயே பணப்புழக்கத்தில் சில மாதங்களில் பெரும் நெருக்கடி தோன்றலாம்.

கார்களின் பதிவுவரி ஏற்றச்சட்டத்தை அகற்றுவதாக ஸ்வார்ஸ்நெக்கர் கூறியுள்ளார்; இப்போது மதிப்பிடப்பட்டுள்ள 8 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை, அந்நடவடிக்கை, இன்னும் 4 பில்லியன் டாலர்கள் அதிகமாக்கும்.

Standard & Poor என்னும் பத்திர மதிப்புச் செய்யும் நிறுவனம், கார்வரிகளில் வெட்டு விழுந்தால், "மாவட்ட விருப்ப வருவாய்களில் பெரும் நட்டம் ஏற்பட்டு, மாநில அரசு பெரிய அளவில் உதவித் தொகையளித்தாலன்றி சமுக நல திட்டங்களில் பெரிய குறைப்பை ஏற்படுத்தும்" எனக்கூறியுள்ளது. ஏனெனில் அவ்வரிவிதிப்பிலிருந்துதான், மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும், போலீஸ், தீயணைக்கும் துறை, பொது சுகாதாரத்துறை போன்றவற்றிற்கும் பண ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தான் இந்தியப் பழங்குடியினரிடம் மீண்டும் வேட்டையாடும் ஒப்பந்தங்கள் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்போவதாகவும், அதில் மற்றும் 2 பில்லியன் டாலர்கள் வரலாம் என ஷ்வார்ஸ்நெக்கர் கூறியுள்ளார். ஆனால் ஒப்பந்தங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு காலாவதியாகா என்பதுடன், முதல்தடவையே அவர்களிடம் ஒட்டக்கறந்த முறையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. பழங்குடியினர் "எங்கேயாவது ஒழியுங்கள்" என தாராளமாகக் கூறலாம்.

மற்றும் ஒரு 50 பில்லியன் டாலரை வாஷிங்டனிடமிருந்து பெறுவேன் என ஷ்வார்ஸ்நெக்கர் ஜம்பமடித்துக் கூறுவது, கூட்டாட்சியிலேயே இதுகாறும் இல்லாத அளவு பற்றாக்குறை இருக்கும்போது, நகைச்சுவை நாடக உரையாடல் போல்தான் உள்ளது. கடந்த வியாழக்கிழமை, கலிஃபோர்னியா ஆற்றங்கரைப்புறம், ஷ்வார்ஸ்நெக்கர் புஷ்ஷைச் சந்தித்தார். சினிமா நடிகர், புஷ்ஷை "வாஷிங்டனில் இத்தங்க மாநிலம் கொண்டுள்ள மாபெரும் நண்பர்" என அழைத்தார். வேறுவிதமாகச் சொன்னால், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளான குற்றஞ்சார்ந்த போர்கள் அயல்நாட்டிலும், உள்நாட்டிலும் செல்வந்தர்களுக்கு வரி குறைப்புக்களும், என்பது இவருக்கு வெகுஇணக்கமே. இப்பேச்சுக்களையடுத்து, புஷ்ஷோ ஷ்வார்ஸ்நெக்கரோ ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதா என்றோ கூட்டரசு நிதிகளை கொள்ளையடிக்கும் முன்கூறிய கொள்கைகளுக்குப் பிறகு, கூடுதலான கூட்டாட்சி நிதி ஒதுக்கீடு கலிஃபோர்னியாவிற்கு திருப்பப்படுமா என்றோ தெரிவிக்கவில்லை.

கூடுதலான வருவாய்க்கு வழியில்லாமலும், செலவினங்களில் வெட்டுக்களுக்கு உள்ள தடைகளும் இருக்கும்போது ஷ்வார்ஸ்நெக்கர் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியான வரி உயர்வு இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உண்மையில், பெரு நிறுவனங்களுக்கும் பெருஞ்செல்வந்தர்களுக்கும் "நம் மாநிலத்தை போட்டியற்றதாக்கும் வரிகளை" குறைப்பதாக தொடர்ந்து உறுதியளித்துள்ளார்.

ஸ்வார்ஸ்நெக்கர், ஜனநாயக கட்சியைத் தேர்தலில் நையப் புடைத்தார் என்றாலும்கூட, கலிஃபோர்னியாவில் வாக்குரிமை பெற்றவர்களின் 17 சதவீதம் தான் இவர் கொண்டதாகும்; வாக்குகள்போட பலர் பதிவு செய்துகொள்ளவில்லை, பதிவுசெய்தவர்களில் பலர் வாக்குப்போடவில்லை. இதை இவருடைய கூடுதலான தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளுக்கும், செல்வந்தர்களும், பெருநிறுவனங்களும் தடையற்ற முறையில் சமுக நன்மைகளை பெருக்கிக் கொள்ளவும், பெற்ற சமுதாய ஆதரவெனக் கூறமுடியாது.

இவை அனைத்தும், வரவுள்ள சமுக நெருக்கடிகளுக்கு நல்ல செய்முறை என்பதோடு அரசியல் மற்றும் வர்க்க மோதல்களையும் தீவிரப்படுத்தும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எல்லா மக்களையும், வர்க்கங்களையும் மீட்க ஓடிவரும் ஷ்வார்ஸ்நெக்கரின் மாயத்தோற்றம், ஹாலிவுட் கனா என வெளிப்படுத்தப்படும் என்பதோடு, முகம் இறுகிய ''Terminator" தோற்றம்தான் மாற்றாக நிலைக்கும்.

இத்தகைய சூழ்நிலைகள்தாம், சோசலிச சமத்துவ கட்சி திருப்பியழைத்தல் தேர்தலில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனை வேட்பாளராக நிறுத்திய பிரச்சாரத்தின் இலாபங்களை திரட்டுவதற்கான அடிப்படையை உருவாக்கும். கூடுதலான எண்ணிக்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மற்றோரும், கலிஃபோர்னிய நெருக்கடி பரந்த தேசிய, சர்வதேசிய அளவில், முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் வெளிப்பாடு என்பதையும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த மற்றும் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவதன் மூலம் சர்வதேச மற்றும் சோசலிச அடிப்படையில்தான் அது தீர்க்கப்பட முடியும் என்பதையும் உணர்வார்கள்.

Top of page