World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Government parties routed in regional elections

பிரான்ஸ்: பிராந்தியத் தேர்தல்களில் அரசாங்க கட்சிகள் படுதோல்வி

By Marianne Arens
31 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 28 ஞாயிறு அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று பிராந்தியத் தேர்தல்களில் பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கினுடைய அரசாங்க கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. 22 பிராந்தியங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சிகளான UMP (Union for a Popular Movement) மற்றும் UDF (Union for the French Democracy) ஆகியவை அல்சாஸ் பகுதியில் மட்டுமே தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டன. தேர்தல்களுக்கு முன்னர் இந்தக் கட்சிகள் 14 பிராந்தியங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இந்தத் தேர்தல் முடிவுகள் அண்மையில் நடந்து முடிந்த ஸ்பெயினின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைப் போன்றே அமைந்திருக்கிறது. சமூக சேவைகள் பரவலாக குறைக்கப்படும் போது அதை எதிர்ப்பதை சுட்டிகாட்டும் வகையில், வலதுசாரி அரசாங்கத்திற்கு உழைக்கும் மக்கள் தங்களது வாக்குச்சீட்டின் மூலம் ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறார்கள்.

மார்ச் 21 ல் நடைபெற்ற முதலாவது சுற்றுத் தேர்தலைவிட இரண்டாவது சுற்றில் தெளிவான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இடது கூட்டணியான சோசலிஸ்ட் கட்சி (PS) கம்யூனிஸ்ட் கட்சி (PCF) பசுமைக்கட்சி மற்றும் தீவிர இடது கட்சி (PRG) ஆகியவை தங்களுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கையை ஆறு சதவீதம் அதிகரித்துக் கொண்டுள்ளன. அவை மொத்தம் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றன. 1988 ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சித் தலைவர் பிரான்சுவா மித்திரான், பிரெஞ்சு ஜனாதிபதிப் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு பெற்ற வாக்குகளுக்கு இணையாக 15 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக இடது கட்சிகள் இவ்வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.

ஆளும் கட்சிகள் 37 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. பிரான்சுவா பைரூ (François Bayrou) தலைமையிலான வலதுசாரி தாராளவாத UDF கட்சியானது 13 சதவீதமான வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. பழமைவாத UMP க்கட்சி புவத்தோ சரண்ந் (Poitou-Charentes) பகுதியில் மிகவும் வியப்பளிக்கும் வகையில் படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. இது பிரதம மந்திரி ரஃப்ரனின் பாரம்பரிய அடிதளப் பகுதியாகும். ரஃப்ரன் 14 ஆண்டுகள் இந்தப் பிராந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது 36 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற்று இந்தப் பிராந்தியத்தை இடதுகள் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.

அதிதீவிர-வலதுகளான தேசிய முன்னணி (National Front - NF) இரண்டாவது சுற்றில் 17 பிராந்தியங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இக்கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. முதல் சுற்றில் 10 சதவீத வாக்குகளை பெற முடியாத கட்சிகள் இரண்டாவது சுற்றில் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

நாடாளுமன்ற இடதுகள் உள்மாவட்ட தேர்தல்களிலும் (élections cantonales) கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. UMP மற்றும் UDF கட்சிகள் மொத்தம் 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலைமையில், இடதுகள் 51 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. மேலும், இடதுசாரிக் கட்சிகள் பெருபான்மை கொண்ட ஏழு உள் மாவட்ட நிர்வாகங்களை வலதுசாரிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளன. இந்தத் தேர்தல்களில், தேசிய முன்னணி முதல் சுற்றில் பெற்றிருந்த 12 சதவீத வாக்குகளிலிருந்து 5 சதவீதத்தை இழந்துள்ளது.

குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகள் மிகப்பெருமளவிற்கு வாக்குப்பதிவு நடந்ததால் அதிகமாகப் பயனடைந்துள்ளன. நடைபெற்ற தேர்தலில், அறுபத்தைந்து வீதமான வாக்குகள் பதிவுவாகியுள்ளது. ஒப்பீட்டளவில், 1998 ல் நடைபெற்ற பிராந்தியத் தேர்தல்களில்போது 58 சதவீத வாக்குகள்தான் பதிவாகி இருந்தன. இப்போது பதிவான 65 சதவீத வாக்குகளில் பெரும்பாலான இளைஞர்களும், முதல் தடவையாக வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளவர்களும் அடங்குவர். இத் தேர்தலின்போது, பெரும்பாலானவர்கள் தமது வாக்குகளை ரஃப்ரன் மற்றும் சிராக்கிற்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த தேர்தலில் சமூகப் பிரச்சனைகள்தான் தீர்க்கமான பிரச்சினையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. இதை உறுதிப்படுத்துகிற வகையில் சற்றும் எதிர்பாராத முறையில் சமூக விவகார அமைச்சர் பிரான்சுவா பியோன் (François Fillon) அவரது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். உண்மையிலேயே இந்தத் தேர்தல் முடிவுகள் முழுவதும் ரஃப்ரன் அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகளை வாக்காளர்கள் தெளிவாக ஒதுக்கித் தள்ளியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அரசாங்கம் தொடர்ந்தும் ஓய்வூதியங்களை குறைப்பது, நலன்புரி மற்றும் சமூக நலன்கள் மீதான தாக்குதல், சுகாதார காப்பீடுகளை அழிப்பது, பள்ளி முறையை தளர்த்துவது, அரசு மற்றும் போலீஸ் நிறுவனங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்கி ஜனநாயக உரிமைகளை சீருகுலைப்பது ஆகியவற்றின் விளைவாக சென்ற ஆண்டு துவக்கத்திலிருந்து பல்வேறு வேலைநிறுத்தங்களும், பெரும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது மக்களிடையே அரசாங்கத்திற்கு எதிராக நிலவுகின்ற பரவலான அதிருப்தி தேர்தலில் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. தேசிய நாடாளுமன்றத்தில் மக்களது தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த எவருமில்லை என்பதை இது தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும் நாடாளுமன்றத்தில் UMP க்கு பெரும்பான்மை உள்ளது.

பிரதமர் ரஃப்ரனும் மற்றும் அமைச்சர்களும் தேர்தல் முடிவுகள் கண்டு பீதியடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அரசாங்கம் ''புரிந்து கொண்டுவிட்டதாக'' முதலில் வெளியிட்ட அறிக்கைகளில் அமைச்சர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் சமூகத்தில் நேர்மையின் பக்கம் அரசாங்கம் சாயும் என்று ராஃப்ரன் உறுதியளித்துள்ளார். ஆனால் ''பிரெஞ்சு மக்கள் செயலிழந்து நிற்கும் நிலைக்கு திரும்பச் செல்ல விரும்பவில்லை. சீர்திருத்தங்கள் நீடித்தாக வேண்டும்'' என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

''ஏப்ரல் 21 ல் தேர்தல் முடிவின் பரிணாமம்'' என்று பிரான்சுவா பியோன் தேர்தல் முடிவின் விளைவைப்பற்றி கருத்து தெரிவித்தார். 2002 ஜனாதிபதித் தேர்தலை மேற்கோள்காட்டி, அப்போது சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் வியப்பளிக்கும் வகையில் தோல்வியடைந்தார் என்று குறிப்பிட்டார்.

Sofres பிரசுரித்துள்ள மக்கள் கருத்துக் கணிப்பில், 59 சதவீதம் பேர் ரஃப்ரன் பதவி விலகுவதை வரவேற்கின்றனர். 29 சதவீதம் பேர் மட்டுமே அவர் பதவியில் நீடிப்பதை ஆதரிக்கின்றனர். பிரான்சில் அடிக்கடி நடப்பதைப் போன்று, பல அமைச்சர்கள் தங்களுக்கு கூடுதல் பொறுப்புக்களை பெறமுடியும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் வாக்காளர்களால் தண்டிக்கப்பட்டிருப்பதால் பதவி விலகுவதற்கு நிர்பந்திக்கப்படும் நிலையில் இருக்கின்றனர்.

ஜனாதிபதி சிராக் ஒரு இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ளார். எவ்வாறாயினும், பிரதமர் ராஃப்ரன்-க்கு பதிலாக உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி (Nicolas Sarkozy) பிரதமர் பதவிக்கு கொண்டுவரப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. சார்க்கோசி கண்டிப்பான சட்டம் ஒழுங்கு கொள்கைகளுக்காக வலதுசாரிகளின் ஆதரவை பெற்றுள்ளார். அத்துடன், சார்க்கோசிக்கு சொந்த சாதகமான நிலமையின் கீழ் பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதை ஏதாவதொரு வகையில் இதுவரை சிராக் தடுக்க முயன்று வருகிறார்.

தேர்தல் முடிவுகள் சிராக்கையும் அவரது UMP கட்சியையும் நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது. 2002 ஜனாதிபதி தேர்தல்களில்போது சிராக் UMP கட்சியை உருவாக்கி பல்வேறு வலதுசாரி சக்திகளை தனக்கு பின்னால் அணிவகுத்து வரச்செய்தார். ஆரம்பத்தில் இந்தக் குழுவிற்கு ''Union for a Presidential Majority" என்று பெயர் சூட்டப்பட்டு, அதற்குப்பின்னர் ''Union for a People's Movement" என்று மாற்றப்பட்டது. ஆனால் தற்போது இந்த அமைப்பு உடைந்துவிடுமென்று அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. 65 சதவீதமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில், UMP கூட்டணி அதில் 6 ல் ஒரு பங்கு வாக்குகளைக்கூட பெறமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுகளை அரசாங்க கொள்கைகளுக்கு எதிரான பொதுவாக்கெடுப்பாகத்தான் (referendum) எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமான இடதுகளின் பக்கம் மக்களது நம்பிக்கை மீண்டும் உயிர்பெற்றுவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்விகளை இவர்கள் சந்தித்தனர். இந்த அதிகாரப்பூர்வமான இடதுகளிடம் சாத்தியமான எந்த மாற்றுத் திட்டமுமில்லை.

சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளர் பிரான்சுவா கொலன்ட் (François Hollande) தேர்தல் முடிவுகள் குறித்து வியப்பளிக்கும் வகையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி, ''முடிவுகள் ஆழமாக மனதில் பதிந்துவிட்டன'' என்று அறிவித்தார். ''இடதுகள்'' தங்கள் மீது மக்கள் எந்த அளவிற்கு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து தனது கட்சியான சோசலிஸ்ட் கட்சி ''வலது சாரிகளைவிட அதிகப்பொறுப்புக்களை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

இடது கட்சியினர் சீர்திருத்தங்கள் என்று கூறப்படுபவற்றை செயல்படுத்துவதில் வலதுசாரிகளைப் போன்று ஆர்வம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் நலன்புரி அரசையும் சமூக உரிமைகளையும் ஒழித்துக்கட்டுவதில் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். ராஃப்ரனின் முன்னாள் அடிப்படை இடமான புவத்தோ சரண்ந் பகுதியில் ஆட்சிக்கு வந்திருக்கும் செகோலன் ரோயல் (Segolene Royal - முன்னாள் சமூக விவகாரங்கள் அமைச்சர் மற்றும் கட்சித் தலைவரின் கூட்டாளியாக இருப்பவர்) ''பிரெஞ்சு மக்கள் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள். ஆனால் அவை நியாயமானவையாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Top of page