World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP campaign wins support in Cincinnati, Ohio

ஓகியோ, சின்சினாட்டியில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவை வென்றது

By Jerry Isaacs
15 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் ஓகியோ முதலாவது பாராளுமன்ற மாவட்டத்தில் பிரதிநிதிகள் சபைக்கான கட்சியின் வேட்பாளராக டேவிட் லாரன்ஸ் -ஐ நிறுத்துவதற்கு ஓகியோ, சின்சினாட்டியில் நூற்றுக்கணக்கான கையெழுத்துக்களை சேகரித்தனர்.

37 வயதுடைய டேவிட் லோரன்ஸ் டேய்ரனில் அரசாங்கப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியராவர் மற்றும் அவர் சினெசினாட்டி பல்கலைக் கழகத்தின் ஒரு பட்டதாரியுமாவர். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஒகெனுடன் தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரான ஜிம் லோரன்சின் மகனும் ஆவார்.

வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு தேவையான 1,695 கையெழுத்துக்களில் கிட்டத்தட்ட 600 கையெழுத்துக்களை முதலாவது வார இறுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆதரவாளர்கள் சேகரித்தார்கள். நிர்வாகத்தினரின் சவால்கள் எதற்கும் நின்று தாக்குப் பிடிக்கும் பொருட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த பட்சம் 2,500 கையெழுத்துக்களை சேகரிக்க நோக்கங் கொண்டுள்ளனர். அதேவேளை, காங்கிரசுக்கான சுயேட்சை வேட்பாளர்களுக்கான மனுச்செய்யும் நாளை மார்ச் 1 ஐ இறுதிக்கெடுவாக அறிவித்தல் உள்பட, ஓகியோவின் ஜனநாயகமற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை முறியடிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு தயார் செய்து வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்திற்கு, குறிப்பாக கட்சியின் கோரிக்கையான ஈராக்கிலிருந்து உடனடியாக அமெரிக்கத் துருப்புக்களை விலக்குவதற்கு தொழிலாளர்களும் மாணவர்களும் மிக ஆர்வத்துடன் செவிகொடுத்தனர். சின்னசினாட்டி பல்கலைக் கழகத்திலும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் மனுக்களில் கையெழுத்திட்ட பலர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தில் இருப்பதாக கூறினர் மற்றும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் ஆக்கிரமிப்பைத் தொடர்வதாக குறிப்பிட்ட, ஜனநாயகக் கட்சியினரின் ஜனாதிபதி வேட்பாளராக ஊகிக்கப்படும் ஜோன் கெர்ரியால் கோபமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மனுவில் கையெழுத்திட்ட மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை வாக்குச்சீட்டில் இடம்பெறச்செய்ய உதவ முன்வந்த ஒரு மாணவர், முந்தைய வாரத்தில் சின்சினாட்டி பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த கெர்ரி பற்றி குறிப்பிட்டார். "கெர்ரி இங்கு இருந்தார். அவரைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லாதிருந்தது. அவர் போர் பற்றி நாவை அடக்கிக் கொண்டார். அது ஒரு பெரிய போராட்டமாக இருக்கும், ஆனால் உழைக்கும் மக்களுக்கு அவர்களின் சொந்தக் கட்சி தேவை என்பதில் உடன்படுகிறேன்."

மனுவில் கையெழுத்திடுகையில் ஒரு தொழிலாளி (பெண்), "இது அர்த்தமற்ற போர். அது எண்ணெய்க்காகத்தான்" என்றார். "நாம் அதற்கான விலையை அடுத்த 50 ஆண்டுகளுக்கு கொடுக்கப் போகிறோம். நியூயோர்க் மற்றும் கலிஃபோர்னியா உடைந்து போயின, மக்கள் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள், மற்றும் திருவாளர் அமெரிக்கக் கார்ப்பொரேட் அதிக வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றுகிறார்கள். நான் இணையத்திற்கு செல்கிறேன் மற்றும் சர்வதேச பத்திரிகைககள் நிறைய வாசிக்கிறேன் ஏனென்றால் அமெரிக்காவில் உள்ள செய்தி ஊடகங்கள் தாங்கள் எவற்றைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவற்றை மட்டுமே உங்களுக்கு கூறுவார்கள்."

முதலாவது காங்கிரஸ் மாவட்டம் 331,000 மக்களை கொண்ட சின்சினாட்டியின் பெரும் பகுதியையும் ஹாமில்டன் மற்றும் பட்லர் மாவட்டத்தை சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் பெரும்பாலானவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது. அமெரிக்கா ஒட்டுமொத்தத்தையும் போல, சின்சினாட்டி பெருநகர் பகுதி கடும் சமூக பொருளாதார துருவமுனைப்படலால் பண்பிடப்படுகிறது.

Procter & Gamble, Kroger's, Chiquita Brands International மற்றும் Federated Department Stores போன்ற செல்வ வளம் மிக்க 500 கம்பெனிகளுக்கு இல்லமாக இந்த நகர் விளங்குகிறது. Center for Responsive Politics படி ஓகியோவின் 45243 ZIP Code, இந்தியன் ஹில்ஸில் உள்ள மில்லியன் டாலர்கள் வீடுகள் நிறைந்த பகுதி, சின்சினாட்டியின் கிழக்கு முனைப் பகுதியின் ஏனைய புறநகர்ப்பகுதி ஆகியன இந்த மாநிலத்தில் வேறு எந்த பகுதியையும் விட அதிக பணத்தை புஷ்ஷுக்கு கொடுத்திருக்கின்றன, இது தேசிய அளவில் மன்ஹாட்டனின் மேற் கிழக்கு பகுதியிலுள்ள 10021 ZIP Code -க்கு அடுத்து இரண்டாவது இடமாகும்.

முதலாவது மாவட்டத்தில் பதவி வகிப்பவர் ஐந்து முறை காங்கிரஸ் பிரதிநிதியான ஸ்டீவ் சாபோட், பில் கிளிண்டன் பதவி நீக்க விசாரணையின் போது ஒரு வலதுசாரி குடியரசுக் கட்சியாளாக இருந்தவர் மற்றும் தற்போது மத்திய கிழக்கின் மீதான அவையின் துணைக் குழுவில் துணைத் தலைவராக இருக்கிறார். புஷ் தனது அக்டோபர் 2002 உரைக்கான நிகழ்விடமாக சின்சினாட்டியை தேர்ந்தெடுத்தார், அங்குதான் ஈராக்கிற்கு எதிராக போர் தொடுத்ததற்கு பயன்படுத்திய பொய்களை விவரித்தார்.

ஈராக்கில் போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் கார்ப்பொரேட் ஆட்குறைப்பு ஆகியவற்றால் ஆவேசமுற்ற ஒரு பெரும் தொழிலாள வர்க்க மக்கள் தொகையினர் மற்றும் வாழ்க்கை தொழிலாக கொண்டவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியவர்களையும் கூட உள்ளடக்கியிருக்கிறது. சின்சினாட்டி அமெரிக்காவில் மிகவும் ஏழ்மை நிறைந்த உள் நகர சுற்றப்புற பகுதிகள் சிலவற்றையும் கூட உள்ளடக்கியிருக்கிறது. மக்கள் தொகையினரில் மிக செல்வம் படைத்த 5 சதவீதத்தினருக்கும் மிக ஏழ்மை பீடித்த 5 சதவீதத்தினருக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாட்டிலேயே மிக மோசமான, புளோரிடா பகுதியின், தம்பா குடாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஏப்பிரல் 2001ல் நிராயுதபாணியான இளைஞரும் கடந்த ஆறு ஆண்டுகளில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞருமான டிமோத்தி தோமஸ் போலீசாரல் கொல்லப்பட்டதை அடுத்து பல சிறுபான்மையினர் வசிக்குமிடங்களில் கலவரம் வெடித்தது. அதிகாரிகள் இம்மாநகரை நெருக்கடி நிலையின் கீழ் வைத்தனர், கலவரத்தை ஒடுக்குவதற்கு விடியும் வரை ஊரடங்கு உத்தரவையும் நூற்றுக் கணக்கான போலீஸ் அதிகாரிகளையும் குதிரைப் படையினரையும் அனுப்பினர். வன்முறை முடிவுற்ற நேரம் மக்களில் பலர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர், சேமிப்புக்லகிடங்குகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பரந்த அளவில் சேதத்திற்கு ஆளாயின மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, சூறையாடியதற்காகவும் மற்றும் ஊரடங்கை மீறயதற்காகவும் 800 பேர்களுக்கு மேல் சிறையிடப்பட்டனர்.

பெரு நிறுவன அதிகாரிகள் மற்றும் மாநகர் அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து தீராத போலீஸ் கொடூரம் மற்றும் வறுமை ஆகியன அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று உறுதிமொழிகள் இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் விஷயம் இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது. 2001 மார்ச் முதல் ஓகியோ 223,700 வேலைகளை, மாநிலத்தின் மொத்த வேலைகளில் 4 சதவீதத்தை இழந்துள்ளது. 41 வயதான நதேனியல் ஜோன்ஸ் கடந்த டிசம்பரில் போலீசாரால் கொல்லப்பட்டது - ஆறு போலீசாரால் அடிக்கப்படது போலீஸ் ஒளிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருப்பது - போலீஸ் கொடூரம் தொடர்ந்து குறையாதிருக்கிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது.

பிரச்சார நாள் முழுவதும் டேவிட் லோரன்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியானது இரண்டு பெரு முதலாளிகளின் கட்சிகளுக்கும் போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வாழ்க்கை தரங்கள் ஆகியவை பற்றிய அவர்களது கொள்கைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.

மனுவில் கையெழுத்திட்ட இரு இளம் மின்னாளர், சமத்துவமின்மையும் வறுமையும் 2001ல் கலவரத்தை விளைவித்தன. அதன் பின்னர் ஒன்றும் மாறி இருக்கவில்லை. நாத்தானியல் ஜோன்ஸ் விவகாரத்தில் போலீசாரால் கறுப்பர்கள் நடத்தப்படும் விதத்தை நீங்கள் கவனிக்கலாம். அதே போலீஸ் தலைவர்தான் போலீசார் நல்லவர்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

"பள்ளிகள் இடிந்து விழுகிற பொழுது மற்றும் மக்கள் ஒரு மணி நேரத்திற்கு 6 டாலர்கள் வெட்டப்படும்பொழுது புஷ் 86 பில்லியன் டாலர்கள் ஈராக் போருக்காக செலவிட்டுக் கொண்டிருக்கிறார். வெள்ளையரும் கறுப்பருமாய் - உழைக்கும் மக்கள் தமது சொந்த நலன்களுக்காக போராடுவதற்கான நேரம் இது."

Top of page