World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democrats withdraw objections to SEP petitions: Tom Mackaman to be on the ballot in Illinois

ஜனநாயகக் கட்சியினர் சோசலிச சமத்துவக் கட்சியின் மனுக்களுக்கு ஆட்சேபனைகளை திரும்பப் பெறற்றனர்: ரொம் மக்கமன் இல்லினோயில் வாக்குச்சீட்டில் இடம்பெறுவார்

By Jerry White
30 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ரொம் மக்கமன் சோசலிச சமத்துக்கட்சியின் சார்பில் இல்லினோய் 103-வது மாவட்டத்தில் சட்டசபைக்கு போட்டியிடுவதற்கான அனுமதி கோரி தாக்கல் செய்த வேட்பாளர் மனுக்கள் மீதான தங்களது ஆட்சேபனைகளை ஜனநாயகக் கட்சி திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரொம் மக்கமனின் வழக்கறிஞர் வியாழன் பின்நேரம் தகவல் பெற்றார். இந்த அபிவிருத்தி பற்றிய ஆரம்பக்கட்ட செய்தி கீழே தரப்படுகிறது. மேலும் செய்திகளும், விமர்சனங்களும் தொடர்ந்துவரும்.

சோசலிச சமத்துவக் கட்சி மாகாண சட்டசபைக்கு ரொம் மக்கமன்னை நியமனம் செய்யக்கோரும் மனுக்களுக்கு தனது ஆட்சேபனைகளை எழுப்பிய சாம்பைன் கவுண்டி ஜனநாயகக்கட்சி அதிகாரி வியாழனன்று தனது ஆட்சேபனைகளை சம்பிரதாய முறையில் திரும்பப்பெற்றுக் கொண்டமை, நவம்பர் தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொள்வதற்கு தேவையான கையெழுத்துக்களுக்கு மேற்பட்ட அளவில் SEP வேட்பாளர் செல்லுபடியாகும் வாக்களார் கையெழுத்துக்களை பெற்றிருப்பதாக ஒப்புக்கொள்கிறது.

மக்கமன்னை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிடுவதற்காக SEP மனுக்களில் கையெழுத்திட்ட சட்டபூர்வமாக பதிவுசெய்த நூற்றுக்கணக்கான வாக்காளர்களின் வாக்குகளை பறிக்க ஒரு மாதகாலமாக மாகாண மற்றும் உள்ளூர் ஜனநாயகக்கட்சி அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி இதன்மூலம் ஒரு முடிவிற்கு வந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் அந்தஸ்தை மறுக்கும் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் இந்த முயற்சி ஜூன் 22-ல் தொடங்கியது. வாக்குப்பதிவில் கலந்து கொள்வதற்கு தேவைப்படும் 1325- வாக்குகளுக்குமேல் SEP வேட்பாளர் 2003 கையெழுத்துக்களை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்த மறுநாள் இந்த முயற்சி தொடங்கியது.

மாகாண சட்டசபை ஜனநாயகக்கட்சி சபாநாயகர் Michael Madigan- ன் அரசாங்க ஊழியர்கள் மக்கமன்னின் நியமன மனுக்களை பிரதி எடுத்தனர் மற்றும் ஆராய்ந்தனர். வரி செலுத்துபவர் செலவில் அரசாங்க ஊழியர்கள் ஒரு கட்சிக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லினோய் தேர்தல் நெறிமுறை மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான தார்மீக நெறிமுறை சட்டத்தை மீறுவதாகும்.

ஜூன் 28-ல் சாம்பைன் கவுண்டி ஜனநாயகக் கட்சி துணைத்தலைவர் Geraldine Parr, SEP வேட்பாளர் தாக்கல் செய்த கையெழுத்துக்களில் பாதிக்கு மேற்பட்டவை 1,021 கையெழுத்துக்கள் செல்லாது என்று குற்றம் சாட்டி தனது ஆட்சேபிப்பவர் மனுவை தாக்கல் செய்தார்.

வியாழன் பிற்பகலில் SEP ன் அட்டர்னி Andrew Spigel அலுவலகங்களுக்கு ஒரு சட்ட அறிக்கை Fax மூலம் வந்தது. Geraldine Parr -ன் வழக்கறிஞர் அவரது மனு விலக்கிக்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவித்தார். கையெழுத்துக்களை ஆட்சேபித்ததில் பாதி நிரூபிக்க இயலாததன் காரணமாக திரும்பப்பெறப்பட்டன அல்லது சாம்பைன் கவுண்டி தேர்தல் வாரியத்தால் ஆட்சேபனைகள் தள்ளுபடி செய்யப்பட்டன. குறைந்த பட்சம் 1524- கையெழுத்துக்களை தேர்தல் வாரியம் ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அங்கீகரித்தது, இது கிட்டத்தட்ட தேவையான எண்ணிக்கையைவிட 200 கூடுதலாகும். அந்த சட்ட அறிக்கையானது, ஆட்சேபித்தவர், ''வேட்பாளர் குறைந்தபட்சம் செல்லுபடியாகும் கையெழுத்துக்களை தாக்கல் செய்திருக்கிறார் என்று திருப்தியடைவதால் வேட்பாளரின் நியமன பத்திரங்களுக்கு தனது ஆட்சேபனையை திரும்பப் பெறவிரும்புகிறார்.' என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆட்சேபித்தவர் மனுவை திரும்பப்பெறுவதற்கான சட்ட அறிக்கையில், ஜனநாயகக் கட்சியினர் "சில ஆட்சேபனைகள் (உண்மையில் 1021 ஆட்சேபிக்கப்பட்ட கையெழுத்துக்களில் 508) தொடர்பான தகவல்களை ஆட்சேபித்தவர் மனுவை தாக்கல் செய்தபின்னர் பெற்றதன் அடிப்படையில் அவை திரும்பப்பெறப்பெற்றனர்" என்ற அறிக்கையும் உள்ளடங்கும். இந்த அறிக்கை, ஜனநாகக் கட்சிக்காரர்கள் எந்தவிதமான முறையையும் பின்பற்றாமல் நூற்றுக்கணக்கான வாக்காளர்களை தகுதியற்றவர்களாக ஆக்குவதற்கு அவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்களா? இல்லையா? என்பதைக்கூட சரிபார்க்காமல் ஆட்சேபனைகளை தாக்கல் செய்தார்கள் என்று SEP நீண்டநாட்களாக கூறிவருகின்ற கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் மனுவை சோதனை செய்தவர்கள் பூர்வாங்க விசாரணையில் கவுண்டி கிளார்க் அலுவலகம் வாக்காளர் பதிவுபட்டியல்களை தந்த பின்னரும், கையெழுத்திட்டவர்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டவர்கள்தான் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்கள் தங்களது ஆட்சேபனைகளை திரும்பப்பெறுவதற்கு மறுத்துவிட்டனர். இப்படி நடந்துகொண்டிருந்தபோது, இல்லினோயின் ஜனநாயகக் கட்சி தலைமை அதிகாரிகளில் ஒருவரான Madigan-சார்பில் குரல்தரவல்ல பேச்சாளர் ஒருவர், SEP மீது தவறான ஒரு குற்றச்சாட்டை அவதூறு செய்கிற வகையில் அவை "போலிமனுக்கள்" என்று கூறினார்.

இப்படி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இடையூறு செய்வது வாரக்கணக்காக ஜூலை 27- செவ்வாக்கிழமை வரை நீடித்தது. அன்றைய தினம் Champaign County தேர்தல் வாரியத்தில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இறுதியாக அவர்கள் கையெழுத்துக்களை ஆட்சேபிப்பதை நிரூபித்தாக வேண்டும், அப்போது ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒட்டுமொத்த ஆட்சேபனைகளுக்கு எந்தவித நம்பத்தக்க நியாயத்தையும் எடுத்துக்காட்ட முடியவில்லை. மாறாக முகவரி, கட்டிட இலக்கம் மாறியிருக்கிறது, நடுப்பெயர் மாறியிருக்கிறது. அல்லது திருமணம் ஆவதற்குமுன் வழங்கிய பெயர் என்பது போன்ற பயனற்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் கையெழுத்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டுமென்று வாதிட்டார். 6-மணிநேர விசாரணைக்குப் பின், 60-சதவீதத்திற்கு மேற்பட்ட போலி ஆட்சேபனைகளை தேர்தல் வாரியம் தள்ளுபடி செய்தது.

SEP சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்ட்ரூ ஸ்பீகல், ''துரதிருஷ்டவசமாக விசாரணையின் போது அவர்கள் செய்ததைப்போல் முதலில் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்த நேரத்திலேயே வாக்காளர் பட்டியல்களை கவனமாக நெருக்கமாக ஆராயவில்லை அப்படி செய்திருப்பார்களேயானால் எங்களுக்கு மிகப்பெரும் அளவில் துன்பம் ஏற்படுவதை தவிர்த்திருக்க முடியும்'' என்று கூறினார்.

ஜனநாயகக் கட்சிக்காரர்கள், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரால்ப் நாடெர் தாக்கல் செய்துள்ள 32,000 கையெழுத்துக்களில் 20,000 கையெழுத்துக்களை ஆட்சேபித்துள்ளதற்கு எதிராக அவருக்காகவும் வாதாடுகின்ற வழக்கறிஞர் ஸ்பீகல், ''இதுபோன்ற ஒரு அனுபவத்தை கடந்துவருகிற ஒவ்வொரு நேரத்திலும், அமெரிக்காவில் தற்போது நடைமுறையிலுள்ள வாக்குப்பதிவில் கலந்து கொள்வதற்கான தகுதியை தருகின்ற சட்டங்கள் மாறியாக வேண்டும் என்ற உணர்வே ஏற்படுகிறது. அமெரிக்க மக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்ற உரிமை படைத்தவர்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் அரசியல் அதிகார தரகர்கள் அவர்களது தேர்வு செய்யும் உரிமையை வாக்குச்சீட்டில் இருந்து நீக்கிவிடுவார்களானால் அவர்கள் விருப்பப்படி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாது'' என்று கூறினார்.

SEP வேட்பாளர் ரொம் மக்கமன் பின்வருமாறு கூறினார்: ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது போலியான ஆட்சேபனைகளை திரும்பப்பெற்றுக் கொண்டிருப்பது ஜனநாயக உரிமைககளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தில் ஓர் அடி முன்னெடுத்து வைப்பதாகும். வாக்காளர்களின் உயிர்நாடியான சுதந்திரத்தை, தாங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு ஜனநாயகக் கட்சி அப்பட்டமாக மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக நின்று வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

''மெலெழுந்தவாரியாக பார்க்கும்போது, ஜனநாயகக் கட்சிக்கும் SEP க்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் பொருத்தமில்லாத ஒன்றாக தோன்றும். ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு, வலிமையான ஊழல் மிக்க அரசியல் நிர்வாக இயந்திரம் அவர்கள் கையில் இருக்கிறது, மில்லியன் கணக்கான டாலர்கள் பணம் இருக்கிறது, உயர்ந்த கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்கள் அவர்கள் கைவசம் உள்ளனர். மேலும் அவர்களுக்கு அரசு ஊழியர்களின் சட்டவிரோதமான சேவை கூட இருக்கிறது. இத்தனை தடைகளையும் மீறி SEP எப்படி வெற்றியை நிலைநாட்ட முடிந்தது?

''ஜனநாயகக் கட்சிக்காரர்களின் சவாலைக்கண்டு நாங்கள் பின் வாங்கிவிடவில்லை. எங்களை வாக்குப்பதிவிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழிலாள வர்க்கம் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும், ஈராக் போருக்கான எதிர்ப்பு, ஜனநாக உரிமைகள் பறிப்பிற்கு எதிர்ப்பு, வாழ்க்கைத்தரம் குறைப்பிற்கு எதிர்ப்பு, ஆகிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது ஆழமாக உணருகின்ற அக்கறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்களிப்பு வாய்ப்பு உருவாகாது தடுப்பதன் மூலம், கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்தும் இராணுவமய ஜனநாயகக் கட்சியுடன் தொழிலாளர்களை பிணைத்து வைக்கின்ற தீவிர முயற்சியாகும் என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

''இல்லினோய் வாக்குப்பதிவு தகுதிகோரி SEP- ம், WSWS- ம் நடத்திய போராட்டம் 2004- தேர்தலில் கட்சி தலையிடுவதன் மிக முக்கிமான ஒரு அங்கமாகும். வாக்குப்பதிவில் கலந்து கொள்வதற்கான எங்களது உரிமையை தற்காத்த, மற்றும் பொதுமக்கள் எங்களை வாக்குப்பதிவில் கலந்துகொள்ளச் செய்வதற்கான குடிமக்களின் உரிமையைப் பாதுகாத்த, எங்களது வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்த ஒவ்வொரு கட்டத்திலும் முழு உழைக்கும் மக்களும் அவசியமான அரசியல் படிப்பினைகளை பெறவேண்டுமென்று முயன்றுவந்தோம்.

''இத்தகைய படிப்பினைகளில் பிரதானமான ஒன்று ஜனநாயகக் கட்சியின் மற்றும் இருகட்சி முறை முழுவதன் ஆழ்ந்த பிற்போக்குத்தன்மை ஆகும். இந்த இரண்டு கட்சிகளுமே பெரிய வர்த்தகக் கட்சிகள், ஜனநாயக உரிமைகளை பறித்துவிட விரும்புபவை. குடியரசுக் கட்சிக்காரர்கள் 2000- தேர்தலை களவாடியபோது அதற்கு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அடிபணிந்தார்கள். அவர்கள் சோசலிஸ்டுகளையும், இதர போர் எதிர்ப்பு வேட்பாளர்களையும் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்கு எந்த ஒரு முயற்சியையும் விட்டுவைக்கமாட்டர்கள் என்பதை காட்டிக் கொண்டார்கள்.

''உலகம் முழுவதிலும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் தலையிட்டதால்தான் நாங்கள் இதில் பெருமளவிற்கு வெற்றிபெற முடிந்திருக்கிறது. அவர்களது மின் அஞ்சல்கள் உள்ளூர் அரசியல்வாதிகளை எச்சரிப்பதாக அமைந்திருந்தது, ஜனநாயகக் கட்சிக்காரர்களின் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கவனிக்கிறது மற்றும் எதிர்ப்பு வளரும் என்ற உணர்வு உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டது. எங்கள் சார்பில் கடிதங்களை எழுதிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களது முயற்சிகள் இந்த வெற்றிக்கு மையமானதாக அமைந்தன.

''உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் பிரச்சாரத்தில் தங்களது ஆதரவை இன்னும் கூடுதலாக தரவேண்டுமென நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தொண்டர்களாக பணியாற்றவும், நன்கொடைகள் வழங்கவும் முன்வரவேண்டும். இல்லினோயில் கிடைத்திருக்கின்ற வெற்றி மிகப்பெரும் செலவில் வந்திருக்கிறது, ஆனால் மாதக்கணக்கில் பிரச்சாரம் நம்முன்னே உள்ளது. ஏற்கனவே இந்த தொடக்க கட்டத்திலேயே சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை நாம் பார்த்திருக்கிறோம்.''

See Also :

இல்லினோய் சாம்பைன்- உர்பானாவை சேர்ந்த தொழிலாளர் மற்றும் மாணவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரிடமிருந்து பகிரங்கக்கடிதம்

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நிறுத்தப்படக்கூடாது என்ற இல்லினோய் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் வாதுரையை தள்ளுபடி செய்யக் கோரி தீர்மானம்

இல்லினோய்சில் ஜனநாயகத்தின் ஒரு கேலிக்கூத்து
SEP யை வாக்குப்பதிவிலிருந்து நீக்க வாக்காளர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் சதி

மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின் மீது ஜனநாகக் கட்சி தாக்குதலை நிறுத்து!
SEP வேட்பாளர் ''ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் சேர்த்துக்கொள்!

இல்லினோய் வாக்கு சீட்டில் கலந்து கொள்ள முடியாமல் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை தடுக்க ஜனநாயகக் கட்சி முயற்சி

Illinois- மாநில சபை பிரச்சாரத்திற்கான தகுதிபெற SEP மனு தாக்கல்

 

Top of page