World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Lessons from Detroit

German DaimlerChrysler workers face political tasks

டெட்ரோய்ட்டிலிருந்து படிப்பினைகள்

ஜேர்மன் டைம்லர்கிறைஸ்லர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அரசியல் பணிகள்

By Ulrich Rippert
29 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

கீழ்கண்ட அறிக்கை ஜூலை 23 ல் உலகசோசலிச வலைத்தள ஜேர்மன் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தொழிற்சங்க தலைமை டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகத்தின் ஊதியச்சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் குறைப்பு கோரிக்கைக்கு அடிபணிந்துவிட்டது. இந்த வாரத்திலேயே பின்னர் யூனியன் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்தது பற்றிய அறிக்கை வெளியிடப்படும்.

ஜூலை 15 இற்கு பின்னர் கண்டனப்பேரணிகளும், ஒற்றுமை தெரிவிக்கின்ற ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றும், 60,000 டைம்லர் கிறைஸ்லர் ஊழியர்கள் நிறுவனத்தின் பிரதான வேலைத்தளமான Stuttgart இலும், ஜேர்மனியில் இதர பல இடங்களிலும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். நிர்வாகம், தொழிலாளர்கள் மொத்தம் 500 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு ஊதியவெட்டு மற்றும் இதர சேமிப்புக்களுக்கு சம்மதிக்காவிட்டால் புதிய மெர்சிடஸ் C ரக கார்கள் உற்பத்தியை வேறு நாட்டிற்கு மாற்றப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர்.

இந்த பிரச்சனையில் தொழிலாளர்களுக்கு ஒரு வெளிப்படையான எச்சரிக்கையை விடுக்க வேண்டியது அவசியமாகும். தொழிலாளர்களது கடுஞ்சீற்றம் வெறுப்பும் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் இந்தத்தாக்குதலை முறியடிப்பதற்கு அவைமட்டுமே போதுமானவையல்ல.

டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகக் குழு தொழிலாளர்களை நெருக்குவது மிகவும் உண்மையானது. தொழிற்சாலை தொழிலாளர் குழு (Joint Management -Union Works Council) ஒரு உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கையில் IG Metall தொழிற்சங்கம் தனது எதிர்ப்பை கண்டனக் கூக்குரல் மற்றும் ஒரு சில தீவிர உரைகளோடு நிறுத்திக்கொள்வதையும், தொழிலாளர்கள் அனுமதிப்பார்களானால் அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கிவிடும். தற்போது நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கைகளோடு நின்றுவிடாமல் ஊதியங்களை விட்டுக்கொடுக்கும் கோரிக்கையையும் முன்னெடுத்து செல்லும். தொழிற்சாலை தொழிலாளர் குழு முன்வைத்த உடன்பாட்டை கருத்திற்கொள்ளாமல் நிர்வாகம் இதை ஒரு முன்னோடியாகக் கொண்டு நீண்ட நேரப்பணி, மேதிக ஊதிய குறைப்பு, நோயுற்ற காலத்திற்காக வழங்கப்படும் ஊதிய வெட்டு மற்றும் இறுதியாக ஆட்குறைப்பு போன்ற புதிய கோரிக்கைகளை நிர்வாகம் வற்புறுத்த தொடங்கும். இப்படி கீழ்நோக்கி செல்வது மிகவிரைவக்கப்படும்.

டைம்லர்கிறைஸ்லர் தொழிலாளர்கள் ஒரு உண்மையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கோரப்படுகிறார்கள். தங்களது அமெரிக்க சக-தொழிலாளர்களோடு இணைந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், எனவே அவர்கள் தங்களது அமெரிக்க சக தொழிலாளிகளின் கசப்பான அனுபவத்திலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க கார் தொழிலாளர்கள் தீவிரவாத தன்மையில், துணிச்சலில் அல்லது போராடுவதற்கு தயாராக இருப்பதிலும் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் கண்டன நடவடிக்கைகள், அடையாள வேலை நிறுத்தங்கள் மூலம் பல தொழிற்சாலைகளில் நிர்வாகத்தை எதிர்த்து போராடியதுடன் பல வேலைத் தளங்களின் உற்பத்தியை ஒரே நேரத்தில் வாரக்கணக்காக நிறுத்தியும் காட்டினர். வேலை நிறுத்தம் செய்துவரும் தொழிலாளர்களுக்கு எதிராக கூலிக்கு அமர்த்திய கருங்காலிகள் தொழிற்சாலையில் நுழைந்தபோது தடுத்து வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை போலீசார் தாக்கினர், கைது செய்து நீதிமன்றங்களில் நிறுத்தினர், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. அப்படியிருந்தும், அந்த தொழிலாளர்களை அச்சுறுத்த முடியவில்லை.

ஆனால் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த ----ஒரு சொந்த சுயாதீனமான அரசியல் கட்சியில்லாததால்---- தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சியோடு முடிச்சுபோட்டு விட்டதால், மிகத்தீவிரமான போராட்டங்கள் கூட முறியடித்து விடமுடியும். டெட்ரோயிட் நகரில் உள்ள தொழிலாளர்களுக்கு அங்கு கிறைஸ்லர் மட்டுமல்ல போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார் தலைமை அலுவலகம் உள்ளன. அது முன்னர் தனது பிரமாண்டமான கார் தொழிற்சாலைகள் பற்றி பெருமையடித்துக் கொண்டது, இந்த தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு கீழ்படிந்து நடக்கின்ற நிலை உருவாக்கப்பட்ட காரணத்தினால் பேரழிவு விளைவுகளுக்குள்ளாக்கப்பட்டது.

இன்றையதினம் இவற்றில் பல வேலைத் தளங்கள் மூடப்பட்டுவிட்டன, அழிந்த தொழிற்துறைகளாக காட்சியளிக்கின்றன. உற்பத்தி நீடிக்கின்ற இடங்களில் கூட 1970 களில் மற்றும் 1980 களில் இருந்ததை விட வேலை நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. விடுமுறைக் காலம், ஓய்வு நேரங்கள், மற்றும் தொழிற்துறை பாதுகாப்புக்கள் ஆகியவை மிகக்கடுமையாக குறைக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்கள் தங்களது வீடுகளை விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது, அல்லது கடனில் மூழ்கிவிட்டனர். எந்த பணி கிடைத்தாலும் அதைச்செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தொழிலாள வர்க்கம் வாழ்ந்த வட்டாரம் இல்லாமலே போய்விட்டன.

எந்த ஜேர்மன் ஊழியரும் "Stuttgart Untertuerkheim மற்றும் Sindelfingen இல்'' அது நடக்காது என்று சொல்ல முடியாது. இதுதான் தீர்க்கமானது, என்ன நடக்குமென்றால்! அமெரிக்காவில் நடைபெற்ற அபிவிருத்திக்கும் இதற்கும், ஒரேயொரு நடவடிக்கையில்தான் வேறுபாடு: அது என்னவென்றால் இங்கு பல மடங்கு வேகமாக அது நடைபெறும்.

அமெரிக்காவில் உள்ள சகோதர சகோதரிகளை போல் ஜேர்மனியிலுள்ள டைம்லர்கிறைஸ்லர் தொழிலாளர்களும் அடிப்படையான அரசியல் பிரச்சனை எதிர்நோக்கியுள்ளது. பல அமெரிக்க தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் தங்கள் மீது நடத்திவருகின்ற தாக்குதல்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டம் அரசியல் போராட்டம் என்பதை கண்டுகொள்வது கடினமாகியுள்ளது, முதலாளித்துவ சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக இடைவிடாது போராடுவதற்கு ஒரு கட்சி மற்றும் அரசியல் வேலைதிட்டத்திற்கு அது கோர வேண்டும்.

இங்கே ஜேர்மனியில், அதே பிரச்சனை மற்றொரு வடிவத்தில் தலைதூக்கி நிற்கிறது. பல தசாப்தங்களாக மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சியை தங்களது நலன்களை -----குறைந்தபட்சம் சமுதாய பிரச்சனைகளிலாவது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கருதினர். முதலாவது உலகப்போரில் அந்தக் கட்சி மன்னர் கெய்சரை ஆதரித்தது முதல் அந்தக் கட்சி உண்மையான சோசலிச முன்னோக்கை கைவிட்டது என்பதை பலர் தெளிவாக புரிந்துகொண்டனர். ஆனால் பலர் அது ஒரு சீர்திருத்தவாதக் கட்சி என்பதனால், சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர் உரிமைகளை அழிப்பதை தடுக்கும் என்றும், தொழிலாளர் வாழ்க்கைத்தரம் குறைவதை தடுத்துநிறுத்தும் என்றும் அப்போது நம்பினார்கள். பல தசாப்தங்களாக---- அதற்கெல்லாம் மேலாக 1970களிலும் 1980களிலும், ஏன்? 1990களின் தொடக்கத்திலும் முதலாளித்துவம் சமுதாய முற்போக்கு முகத்தோடு தோற்றமளிக்கும் என்றும் ''சமூக சந்தை பொருளாதாரம்'' என்பது ஒரு பிரச்சார வார்த்தையல்ல என்ற கருத்தும் பல தொழிற்சாலைகள் நிலவியது.

பல பெரிய தொழில்துறை நிறுவனங்கள், குறிப்பாக டைம்லர் சமூக கூட்டு (Social Partnership) முன்னோக்கை வளர்த்தார். அந்த நிறுவனங்களோடு தொடர்புடைய அனைவரும் ---பயிற்சி பெறும் ஊழியரிலிருந்து அந்த நிர்வாகக் குழு தலைவர் வரை--- அனைவரும் ஒரே பெரிய ''குடும்பத்தின்'' உறுப்பினர்கள் என்ற கருத்தை வளர்த்தார்.

Edzard Reuter இருபதாண்டுகள் அந்த நிர்வாகத்தில் பணியாற்றிய பின்னர் 1980 கடைசியில் அந்த கம்பெனியின் தலைவரானார். அப்போதிலிருந்து இன்றைய தினம்வரை அவர் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினராக இருக்கிறார். ''சமூக ரீதியான பொறுப்புள்ள நிர்வாகம்'' என்ற ஒரு கற்பனையை பேணிக்காக அவர் முயன்று வருகிறார். அவர் Ernst Reuter இன் மகன், அவர் 1918இல் போல்ஷிவிக்குகளுடன் சேர்ந்தவர். வோல்கா பகுதியில் மக்கள் கமிஷனராக சில மாதங்கள் பணியாற்றிய பின் பேர்லின் திரும்பினார். பேர்லினில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதற்குப்பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்தார், இரண்டாம் உலகப்போருக்குப்பின் பேர்லின் மேயரானார், வில்லிபிராண்டின் நெருக்கமான நண்பரானார். ''சமூக பொறுப்பை'' அவர் வலியுறுத்தி வந்தார். அது அவரது மகனை ஜேர்மனியில் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பான மெர்ஷிடஸ் பென்சை உருவாக்குவதை தடுக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல் தொழிலாள வர்க்கத்திடம் கொடூரமாக கறந்தெடுக்கின்ற போக்கு ஆகியவை ''சமூக பொறுப்பு'' என்ற பாவனையை மட்டும் இறுதியாக முறித்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதனுடைய பாகமான நிர்வாகத்தின் சமூக கூட்டு என்கிற அந்தக் கொள்கையை எதிர்மாறாக மாற்றுவதற்கும் வந்திருக்கிறது. கடந்த காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முதலாளித்துவத்திற்கு ''சமுதாய முகத்தை'' தரமுடியும் என்று கூறிவந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சமூக ஜனநாயக அரசாங்கம்தான் கடந்தகால சமூக நலன்கள் மீது கூர்மையான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.

அதிபர் ஷ்ரோடர் அண்மையில் டைம்லர்கிறைஸ்லர் நிறுவனத்தில் நடைபெறுகின்ற மோதல்பற்றி கவலையையும், ''கொள்கைகளுடைய மோதல்'' பற்றி எச்சரித்தார். Financial Times Deutschland இற்கு ஷ்ரோடர் ''இந்த பிரச்சனையில் சிந்தாந்த போர்க்களத்தை உருவாக்குபவர்கள் மக்களை குழப்ப மட்டுமே செய்வார்கள் பொருளாதாரத்திற்கு தீங்கு செய்வார்கள். எனவே எனது ஆலோசனை என்னவென்றால் இந்தப் பிரச்சனைகளை தொழிற்சாலைகளுக்கு உள்ளேயே நெறிமுறைபடுத்திக் கொள்ளுங்கள் முடிந்தவரை மிகக்குறைவாக அதைப்பற்றி பேசுங்கள்.'' என்று குறிப்பிட்டார்.

ஷ்ரோடர் அந்த தகராறு பரவி இதர நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்று பயப்படுகிறார். MAN மற்றும் பல பெரிய தொழிற்துறைகள் சீமன்ஸ் மற்றும் டைம்லர்கிறைஸ்லர் முன்மாதிரியை தாங்களும் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஷ்ரோடருக்கு அவரது அரசாங்கம் மிக வேகமாக நிறைவேற்றிவருகின்ற சமூக வெட்டுக்களால் ஏற்படுகின்ற படுமோசமான பாதிப்புக்கள் அவற்றின் தொடர்பு இப்போது தொழிற்சாலைகளில் நடைபெறுகின்ற தாக்குதல்கள் வரை சென்றிருக்கிறது என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும். அவரது அரசாங்கத்தின் ''2010- செயற்திட்டம்'' தான் அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு வெட்டுத்திட்டங்கள்தான் முதலாளிகள் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் ஊதியம், வேலை நிலைமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளை மடைதிறந்த வெள்ளம்போல் ஊக்கித்துள்ளது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் அவர் ''கொள்கைகளுடைய மோதல்'' பற்றி எச்சரிப்பது ஏனெனில், இது அவரது பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கத்தின் மீது திருப்பிவிடப்படும் என்பதாலாகும்.

ஆனால் அத்தகைய கொள்கை அடிப்படையிலான அரசியல் மோதல்தான் தீர்க்கமாக இப்போது அவசியமாகும்.

டைம்லர் கிறைஸ்லர் தொழிலாளர்கள் மற்றும் இதர எல்லா ஜேர்மன் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள், சமூக ஜனநாயக சீர்திருத்தவாத கொள்கைகளால் ஏற்பட்ட அரசியல் நிலுவை கணக்கை வரைய வேண்டிய கட்டத்தை எதிர்நோக்கியும் சோசலிச முன்னோக்கை மேற்கொள்ள வேண்டியுமுள்ளனர். இதற்கு அரசாங்கம் மற்றும் முதலாளிகள் தொடுத்திருக்கும் தாக்குதல்களின் புறநிலைக்காரணங்களை புரிந்து கொள்வது அவசியமாகும்.

இது மிக சாதாரணமாக நிர்வாகத்தின் ''மித மிஞ்சிய இலாபத்தின் பேராசையல்ல,'' என டைம்லர் கிறைஸ்லர் தொழிற்சங்க பிரசுரம் ஒன்று ''நிர்வாகத்தின் காதில் இறுகிப்பிடி போட வேண்டும்!" என்ற சலிப்புடனான தலையங்கத்தில், இந்த சர்வதேச அளவிலான கடுமையான போட்டியின் அதிகரிப்பே அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களின் பின்னணியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தின் பொறுப்பை Jürgen Schrempp எடுத்துக்கொண்டார். அவர் சர்வதேச அளாவிைல் இந்த நிறுவனத்தை உற்பத்தி மற்றும் விநியோக பெருநிறுவனமாக வளர்ச்சியடையச் செய்தார். வரலாற்றிலேயே இந்த பெரிய தொழிற்துறை கிறைஸ்லரோடு 1998- ஆண்டு வசந்த காலத்தில் இணைந்தது. இதனுடைய நோக்கம் உந்துசக்தி என்னவென்றால் பூகோள அளவில் இந்த தொழிற்சாலை இயங்க வேண்டும், உலகின் எல்லா முக்கிய சந்தைகளையும் பிடிக்க வேண்டும் குறிப்பாக உலக முதலாளித்துவத்தின் மிக முக்கியமான மூன்று மையங்களான: வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவை பிடிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த நேரத்தில் ஜேர்மனியிலும், டெட்ரோய்ட்டிலும் உள்ள இந்த நிர்வாகம், உலகின் எல்லா இடங்களிலும் இந்த நிறுவனம் வளரும் என்று அறிவித்தது. ஆட்குறைப்பு செய்யமாட்டோம், கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாக்கித்தருவோம் என்று கூறிற்று. ஆனால் அண்மைய ஆண்டுகளில் உண்மை முற்றிலும் மாறுபட்டதாகயிருக்கிறது. 2001 குளிர்காலத்தில் டெட்ரோய்ட்டில் டைம்லர் கிறைஸ்லர் 26,000 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்தது. பல அமெரிக்க வேலைத்தளங்களில் பணிமுறைகள் முழுவதுமே இரத்துசெய்யப்பட்டன. டெட்ராய்ட்டிலும் இதர நகரங்களிலும் இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன.

ஜேர்மனியில் இந்த நிறுவனம் உற்பத்தித்திறனை இடைவிடாது உயர்த்தியது. ஆசியாவில் கிழக்கு ஐரோப்பாவில் மற்றும் ரஷ்யாவில் புதிய சந்தைகளை உருவாக்கிற்று. என்றாலும், சர்வதேச அளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் ஐரோப்பாவிலும், ஜேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. நிர்வாகம் குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் கிடைக்கின்ற பகுதிகளுக்கு தனது உற்பத்திப்பிரிவுகளை மாற்றுவதற்குரிய சாத்தியக்கூறுகளை பயன்படுத்திக்கொள்ள முயன்றது. அதைப் பயன்படுத்தி தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களது பணி நிலைகளில் விட்டுக்கொடுப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஜேர்மனியிலுள்ள டைம்லர் கிறைஸ்லர் நிர்வாகம் ஜப்பானின் கார் தயாரிப்பாளரான மிட்சுபிசிக்கு அவசரமாக தேவைப்பட்ட நிதி ஆதரவு தரப்போவதில்லையென்று அறிவித்தது. டைம்லர் கிறைஸ்லர் அந்த நிறுவனத்தில் சம்மந்தப்பட்டிருந்தாலும், இந்த அறிவிப்பு வந்தது. சில விமர்சகர்கள் கூறியிருப்பதை போல் ஆசியன் சந்தைகளிலிருந்து இந்த நிறுவனம் பின்வாங்க தொடங்கியிருப்பதை இது காட்டவில்லை. மாறாக டைம்லர் கிறைஸ்லர் சீனாவில் தனது திட்டங்களை விரிவுபடுத்தும் முடிவோடு சம்மந்தப்பட்டதாகும். இதன் பொருள் என்னவென்றால் ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும், உள்ள டைம்லர் கிறைஸ்லர் தொழிலாளர்கள் சீனாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விரோதமாக திருப்பிவிடப்படுகின்றனர். சீனாவில் ஜப்பானைவிட ஊதிய விகிதங்கள் குறைவாக உள்ளன.

தேசிய சீர்த்திருத்தவாத வேலைதிட்ட அடிப்படையில் தொழிலாளர் வேலைநிலைமைகள், ஊதிய அளவை தொழிற்சங்கத்தால், பூகோள ரீதியாக இயங்கும் மற்றும் தொழிற்துறை உற்பத்தியின் நிலைமையின் கீழ் பாதுகாப்பது இயலாது. இதுதான் தொழிற்சங்கங்களினதும் சமூக ஜனநாயக கட்சிகளினதும் முற்றிலுமான மாற்றத்திற்கான காரணமாகும். கடந்த காலத்தில், தொழிலாளர்களின் சலுகைகளுக்காக நிறுவனங்களின் மீது அதிக அழுத்தங்களை கொடுக்க கூடியதாக இருந்தது, ஆனால் தற்பொழுது தொழிலாளரிடம் அந்த அழுத்தத்தை கொடுத்து வேறொரு நாட்டிற்கு உற்பத்தி மாற்றப்படுவதை தடுக்க, ஊதிய வெட்டையும் நீண்ட நேர வேலைகளையும், சமூக சீர்திருத்தத்தை அழிப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என கட்டளையிடுகின்றனர்.

இப்படி பூகோள அளவில் செயல்படுகின்ற நிறுவனங்களை எதிர்கொள்ள தொழிலாள வர்க்கத்திற்கு தங்களது சொந்த சர்வதேச மூலோபாயம் தேவை; 1998 மே மாதம் கிறைஸ்லர் மற்றும் டைம்லர் பென்ஸ் இணைந்தபோது உலக சோசலிச வலைத் தளத்தில் இந்த மைய பிரச்சனையை சம்பந்தமாக பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தது:

டைம்லர், கிறைஸ்லர் இணைப்பு சர்வதேச அளவில் உருவாகும் முதலீடுகளின் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் மூலோபாயத்தை உருவாக்க வேண்டிய அவசர அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தொழிற்சங்க நிர்வாகிகளிலிருந்து மத்தியதர வர்க்கம், முன்னாள் தீவிரவாதிகள் வரை உழைக்கும் மக்களது போராட்டங்களை தேசிய எல்லை கட்டுக்கோப்பிற்குள் அல்லது வெறும் தொழிற்சங்க முறைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென்று கட்டுப்படுத்த விரும்பும் நடவடிக்கையின் பிற்போக்குத்தனத்தையும், மடைத்தனத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பழைய தேசிய அடிப்படையில் அமைந்த தொழிற்சங்க இயக்கங்கள் தொழிலாளர்களுக்கு பயனுள்ள போராட்டத்தை வழிகாட்டும் திறமையில்லாதவை என்பதையும் காட்டுகிறது.

''முதலாளித்துவ வர்க்கம் தங்களது நடவடிக்கைகளை பூகோள அளவில் நடத்திக்கொண்டு போகும்போது தொழிலாள வர்க்கமும் அதே வகையில் பதிலளிக்க வேண்டும். பூகோள அளவில் உற்பத்தி முறைகளை ஒருங்கிணைப்பது மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பது புறநிலையாக தீர்மானித்த நிகழ்வாகும். தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான மாற்றங்களால் இவை ஊக்குவிக்கப்படுகிறது, அதனுடைய உள்ளார்ந்த உந்துதல் தேசிய சந்தைகளின் மூச்சுத்திணறும் வரம்புகளை சமாளிக்கும் வகையில் உற்பத்தி சக்திகள் வளருகின்றன.

''பூகோளமயமாக்கலை எதிர்ப்பது புவிஈர்ப்பு சக்தியை 'எதிர்ப்பதை' விட சாத்தியமானது. எந்த அடிப்படையில், யாருடைய நலனுக்காக இவ்வாறு அந்த சர்வதேச நடைமுறை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது? பூகோளமயமாக்கல் முதலாளித்துவ அடிப்படையில், மேலேயிருந்து பன்னாட்டு நிறுவனங்களால் பல்வேறு தொழிற்துறை மற்றும் நிதியாதிக்க செல்வந்த தட்டுகளால் பல நாடுகளில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இது தொழிலாளர்கள் மீது இன்னும் அதிகமாக, கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதை அர்த்தப்படுகிறது.

''மாறாக, இன்னொரு வகையில், தொழிலாள வர்க்கம் தங்களது சக்திகளை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்தி இலாப முறைக்கு எதிராக புரட்சிகரமான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து உற்பத்தி சக்திகள் மீது தங்களது கட்டுப்பாடுகளை நிலைநாட்டுவார்களானால், பெரிய ஆற்றல்மிக்க பூகோள பொருளாதாரத்தை உலக மக்களின் ஜடரீதியான, மற்றும் கலாச்சார மட்ட நிலைகளை மிகப்பெருமளவில் உயர்த்துவதற்கு பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளபடும்.

''நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்று மட்டுமே சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடிப்படையிலான வேலைதிட்டத்தில் பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்த முயற்சிக்கிறது. டைம்லர், கிறைஸ்லர் இணைப்பு இந்த வகையில் உழைக்கும் மக்கள் முன்னோக்கி செல்வதற்கு சோசலிச சர்வதேச முன்னோக்கு மட்டும்தான் வழியை காட்டுகின்றது என்பதற்கு மற்றொரு வலுவான நிரூபணமாகும்''.

இந்த ஆய்வு இன்றைய தினம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. நிர்வாகத்தின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு விரைவான குறுக்குவழி எதுவுமில்லை. டைம்லர்-கிறைஸ்லர் தொழிலாளர்கள் நீண்ட அரசியல் போராட்டத்திற்கு தயாராகி, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் சக தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சியை கட்டியெழுப்பபட வேண்டும்.

See Also :

டைம்லர் கிறைஸ்லர் வேலை வெட்டிற்கு ஜேர்மன் கார் தொழிலாளர்கள் கண்டனம்

Top of page