World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

ஜிலீவீக்ஷீtஹ் ஹ்மீணீக்ஷீs sவீஸீநீமீ tலீமீ றிஷீக்ஷீtuரீuமீsமீ ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீறிணீக்ஷீt 2

போர்த்துக்கல் புரட்சியில் இருந்து முப்பது ஆண்டுகள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By Paul Mitchell
16 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று-பகுதி கட்டுரை தொடரின் இரண்டாம் பகுதியை கீழே காணலாம். முதல் பகுதி ஜூலை 15 அன்று (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது.

1974 ஏப்ரல் 25 இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடந்த பின்பு, தொழிலாள வர்க்கத்தின் வெடிக்கும் இயக்கம் போர்த்துக்கலில் ஒரு புரட்சியை நடத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியது.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பிற்கு இராணுவப் படை இயக்கம் (MFA, Movimento das Forcas Armadas) தலைமை வகித்தது, இது தளபதி கிஸீtரஸீவீஷீ பீமீ ஷிஜீணஸீஷீறீணீ வை ஜனாதிபதியாகவும், ஓர் ஏழுபேர் அடங்கிய குழுவிற்கு தலைவராகவும் நியமித்தது.

சீர்திருத்தவாத போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சி (PSP, Partido Socialista Português), ஸ்ராலினிச போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP) மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாத குழுக்களின் உதவியுடன், ஆளும் செல்வந்த தட்டினர் புரட்சியைத் தடுக்கவும், முதலாளித்துவம் மூச்சு இழுக்க இடம்கொடுத்து பாதுகாக்கவும் முடிந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து, தொழிலாளர்கள் ஆலைகள், அலுவலகங்கள், கடைகள் இவற்றை தங்கள் அதிகாரத்தில் கொண்டுவந்தனர், விவசாயிகள் பண்ணை நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அரை மில்லியன் மக்கள் ஒரு வாரம் கழித்து மே தினத்தன்று லிஸ்பனில் அணிவகுத்து நடந்தனர். புரட்சிகர சூழ்நிலை படையினரிடையேயும் பரவத் தலைப்பட்டது; இராணுவத்தினரும் கடற்படையினரும் தொழிலாளர்களுடன் இணைந்து, சோசலிசத்திற்கு அழைப்புவிடும் பதாகைகளை தாங்கி அணிவகுத்துச் சென்றனர்.

முதல் இடைக்கால அரசாங்கம்

1974, மே 16ம் தேதி, ஸ்பினோலா முதல் இடைக்கால அரசாங்கத்தை நியமித்தார்; இதில் ஏழு இராணுவ மந்திரிகள், மற்றும் PCP (போர்த்துக்கல் கம்யூனிச கட்சி), PSP (போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சி) அரை-பாசிச மக்கள் முன்னணி ஜனநாயகக் கட்சி (PPD) என்பவற்றிலிருந்து இரண்டு மந்திரிகள் என நியமிக்கப்பட்டனர். Salazar Caetano ஆட்சியின் கடைசி சில ஆண்டுகளில், பாசிச மக்கள் முன்னணி ஜனநாயகக் கட்சி அரை-அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டது. அதன் தலைவர், திக்ஷீணீஸீநீவீsநீஷீ ஷிஊ சிணீக்ஷீஸீமீவீக்ஷீஷீ, போர்த்துக்கல் கம்யூனிச கட்சியை இடைக்கால அரசாங்கத்தின் சேர்த்துக்கொள்ள உடன்பட்டார்; தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கண்காணிக்கும் முக்கிய பணியை அது செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

புரட்சிக் காலம் முழுவதும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு சாதனங்களில், MFA (இராணுவப் படைகளின் இயக்கம்) மூலம் தொற்றிக் கொண்டு இருந்தது, இதையொட்டி தொழிலாள வர்க்கம் ஆளும் செல்வந்த தட்டினருடன் பிணைத்திருந்தது.

தொழிலாளர்களிடையே ஒழுக்கநெறியை நிலைநிறுத்தவும், இராணுவப் படைகளின் இயக்கத்தின் "உற்பத்திக்கான போர்" திட்டத்தில் கடுமையான சிக்கனத்தை மேற்கொள்ளுவதற்கும், போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் றுறீஸ்ணீக்ஷீஷீ சிuஸீலீணீறீ துறை இல்லாத ஒரு மந்திரியாக நியமிக்கப்பட்டார்; போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் Avelino Gonçalves தொழிலாளர்துறை மந்திரியானார். பின்னால் வந்த இடைக்கால அரசாங்கத்திலும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி இதே பதவியை கொண்டிருந்து, தொழிலாளர்களை "தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியதோடு, தொழிலாள வர்க்கம் சுதந்திரமாகச் செயல்படும் எந்த வெளிப்பாட்டையும் கண்டனத்திற்கு உட்படுத்தியது.

இராணுவப் படைகளின் இயக்கத்தின் ஆளும் சபையிலும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி பங்கு பெற்றிருந்தது

நாட்டின் மிகவும் முக்கியமான முடிவெடுக்கும் அமைப்பாக இராணுவப் படைகளின் இயக்கம் வெளிவந்தது. இராணுவப் படைகளின் இயக்கத்தின் தலைமை இருபதுபேர் சபையில் இருந்தது, இதன் முடிவுகள் பொதுவாக பொதுமன்றத்தில் உள்ள 240 உறுப்பினர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இருபது பேர் குழுவின் ஜனாதிபதி, JSN லிருந்து ஆறு உறுப்பினர்கள், ஐந்து இராணுவ மந்திரிகள் (பிரதம மந்திரி, இரண்டு துறை ஒதுக்கப்படாத மந்திரிகள் மற்றும் உள்துறை மந்திரி, தொழிலாளர் மந்திரி) மற்றும் COPCON "ஆயுதத் தலையீட்டாளர்கள்" பிரிவுகளின் தளபதியான Otelo Saraiva de Carvalho ஆகியோரும் இருந்தனர். புரட்சிக்காலம் முழுவதும் COPCON உடைய தலைவர்கள் அவர்கள் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு ஆயுதம் கொடுப்பதாக ''முடிவாக'' உறுதிமொழி கொடுத்தனர், ஆனால் அவர்களுடைய உண்மையான பங்கு மக்கள் விழிப்புணர்வு குழுக்கள் அல்லது தொழிலாளர்களின் போராளிக்குழுக்கள் வளர்ச்சியடைவதை தடுத்தலே ஆகும்.

இராணுவப் படைகளின் இயக்கத்தின் அரசியல் திட்டம் அரசியலமைப்பு சாசனத்தை இயற்றுவதற்காக ஒரு அரசியல் அமைப்பு மன்றத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான்.

இராணுவப் படைகளின் இயக்கம் வளர்ச்சி பெற முக்கிய காரணம் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு எனக் கூறமுடியும், ஏனெனில் இது "இராணுவப் படைகளின் இயக்கத்தினதும் மக்களுடைய கூட்டு" என்ற கருத்தை வளர்த்து, இராணுவத்தின் இடதுசாரி என்று அழைக்கப்படும் தளபதிகளான Carvalho, Vasco Gonçalves போன்றோரைப் பெருமைப்படுத்தியிருந்தது. போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி கூறியதாவது: "இராணுவப் படைகளின் இயக்கத்தின் நம்முடைய புரட்சிக்கு உந்து சக்தியாகவும், உறுதியளிப்பதாகவும் உள்ளது.... மக்கள் இயக்கத்திற்கும் இராணுவப் படைகளின் இயக்கத்திற்கும் இடையே உள்ள கூட்டு முக்கியம் என்று போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது, அது ஜனயாயக ஆட்சி ஸ்தாப்பிப்பதற்கு தீர்க்கமான காரணியாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்றும், புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் வளர்ச்சிக்கு முக்கிய உறுதியளிப்பதாகவும் இருக்கும்'' என்று கூறுகிறது.

ஏப்ரல் மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சியிடம் 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கூடக் கிடையாது. அடுத்த ஆண்டிற்குள் உறுப்பினர் எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது-- இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்மட்ட (வெள்ளை ஆடை) தொழிலாளர்களும், தொழிலாளர்களும் ஆவர். போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளால் கீழ் நிலையிலிருந்து அதன் வளர்ச்சி பெருகியது; இதைத் தவிர மேற்கத்திய வல்லரசுகளும் இதற்கு ஆதரவை அளித்துவந்தன.

இராணுவப் படைகளின் இயக்கத்தினுடனான கூட்டுழைப்பினால் தொழிலாள வர்க்கத்தை அது பிளவுபடுத்தி, போர்த்துக்கல் நாட்டின் வலதுசாரி பிரிவை போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்தியது. இதற்காக அது போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சியின் செய்தித் தாளான Republica வை கையகப்படுத்தி, அதன் கூட்டங்களை சரீரரீதியாக தாக்கவும் செய்தது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களைக் கண்டனத்திற்குட்படுத்துதல், தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் ஒரே தொழிற்சங்கத்திற்கு அழைப்புவிடுதல், இராணுவப் படைகளின் இயக்கத்தினுடைய இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுத்தல் ஆகியவற்றின்மூலம் போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Mario Soares ஐ ஒரு கூடுதலான தீவிரவாதிபோலவும், ஜனநாயகவாதி போலவும், சொல்லப் போனால் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Cunhal ஐ விட ஒரு மார்க்சிசவாதி போலவும் காட்டிக்கொள்ள போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதித்தது.

மேற்கத்திய வல்லரசுகள், நேட்டோ (NATO) உடன்படிக்கையின் நிறுவன உறுப்பு நாடுகளில் ஒன்றான போர்த்துக்கல் ஒரு புரட்சியை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டு அச்சத்திற்குள்ளாகின. அமெரிக்காவின் அரசுத்துறை செயலகம், ஹென்றி கிஸிங்கர் Soares இடம் "அவர் போர்த்துக்கல்லின் கெரென்ஸ்கி போல் ஆகிவிடக்கூடும் (கெரென்ஸ்கி, போல்ஷிவிக் புரட்சிக்குப் முன் ஒரு குறுகிய காலத்தில் ரஷ்யத் தலைவராக ஆட்சி செய்தவர்) என்று கூறினார். இதன் விளைவாக வெளிநாட்டு நிதி உதவி, குறிப்பாக பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி, பிரான்சின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றிலிருந்து அவ்வமைப்பிற்கு வந்தது. பெப்ரவரி 1975ல் எட்வார்ட் கென்னடி போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி தலைவர்களுடன் ஒரு வட்டமேசை மாநாட்டில் கலந்துாெண்டார்.

டிசம்பர் 1974 ல் நடைபெற்ற முதல் போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி மாநாடு உலகெங்கிலும் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து சகோதரத்துவ வாழ்த்துக்களைப் பெற்றது. இதில் சிறப்புப் பேச்சாளராக Santiago Carillo என்னும் ஸ்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அழைக்கப்பட்டிருந்தார்.

வேலை நிறுத்தங்களுக்கு எதிரான சட்டங்கள்

ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின், பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டன. குறைந்த பட்ச ஊதியம், பாசிச ஆதரவாளர்கள் கைது செய்யப்படல், தொழிலாளர்மீதான கட்டுப்பாடு, சோசலிசம் இவற்றைக் கோரிய குழுக்களை தொழிலாளர்கள் நியமித்தனர். 1974 மே 15ல், 8,400 தொழிலாளர்கள் Lisnave கப்பல் செப்பனிடும் தளங்களை ஆக்கிரமித்தனர். ஜூன் மாதம் 3ம் தேதி Timex தொழிலாளர்கள், 1973-லிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்தனர். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் 25,000 CTT தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அஞ்சல், தொலைபேசி துறைப் பணிகளை செயலிழக்கச்செய்தனர். செய்திப் பத்திரிகைகள் கைப்பற்றப்பட்டு, கட்சிகளின் அறிக்கைகள் அவற்றின் பக்கங்களை நிரப்பின.

தன்னுடைய பெருநிறுவனத் தொழிற்சங்கங்கள் மூலம் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியிருந்த பழைய பெருநிறுவன தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தங்களை "பொறுப்பற்றைவை" என்ற கண்டனத்திற்கு உட்படுத்தியதோடு அவற்றின் கோரிக்கைகள் "ஏற்க இயலாதவை" என்று கூறியும் அவற்றிற்கு எதிராக லிஸ்பனில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. Timex வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்பட்டது, ஆலை, அதன் இயந்திரங்களைக் காப்பது அதன் பொறுப்பாயிற்று. நாடகக் குழுவான Comuna வின் கத்தோலிக்க திருச்சபையை தாக்கிய ஒரு கலாச்சார திருவிழாவின் ஒலிபரப்பு "உயர் அதிகாரிகளின்" உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டது.

போர்த்துகேயத் தொழில் துறையின் கூட்டமைப்பு (சிமிறி-சிஷீஸீயீமீபீமீக்ஷீணீஃஏஷீ பீணீ மிஸீபீஸstக்ஷீவீணீ றிஷீக்ஷீtuரீuமீsணீ), "தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைகள் தேசிய பொருளாராத்திற்கு ஆபத்தானவை" என்று எச்சரித்தது. மேற்கத்திய நாடுகளின்-மாதிரி ஜனநாயகம் வேண்டும் என்றும் போர்த்துகேய தொழில் துறையின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது, ஆனால் அதன் உறுப்பினர்கள் பலர் பாசிச கட்சிகள் அமைப்புக்களுக்கு நிதியளித்தனர்: இதில் ஒன்று சலாசரினாலேயே நிறுவப்பட்டிருந்த ---கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (Christian Democratic Party -PDC) ஆகும். டி மெலோவின் குடும்பத்தின் CUF ஏகபோகநிறுவனம் CDS எனப்பட்ட ஜனநாயக சமூக மத்திய கட்சிக்கு (Democratic and Social Centre Party) நிதியுதவி அளித்தது; இது இன்றைய கூட்டணியில் உள்ள வலதுசாரி மக்கள் முன்னணியின் முந்தைய பெயராகும்.)

கேடனோவின் பழைய ஆலோசகரான Freitas do Amaral-ஆல் நிறுவப்பட்டு, Catholic Opus Dei ஆல் ஆதரவு அளிக்கப்பட்டதுதான் ஜனநாயக சமூக மத்திய கட்சியாகும். எவ்வாறாயினும், இந்த அமைப்புக்களுக்கு மக்களிடையே அதிக ஆதரவு கிடையாது. ஜனவரி 1975ல் நடைபெறுவதாக இருந்த முதல் ஜனநாயக சமூக மத்திய கட்சி மாநாடு வெளியே கலகங்கள் ஏற்பட்டதால் கைவிடப்படவேண்டியதாயிற்று. அதற்குப் பிந்தைய மாநாடுகள் இரகசியமாகத்தான் நடைபெற்றன.

ஆகஸ்ட் 27ல், இடைக்கால அரசாங்கம் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சி இரண்டின் உதவியுடன் வேலை நிறுத்த-எதிர்ப்புச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. "இராணுவப் படைகளின் இயக்கத்தின் வேலைதிட்ட எழுச்சியின்" அடிப்படையில் இருப்பதாகக் கருதப்பட்டால்தான் வேலைநிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டன. ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 30 நாட்களுக்கு அமைதிக்காலம் கடைபிடிக்கப்பட்ட பின்னர்தான் வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். இன்றியமையாத பணிகளில் வேலை நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை, அரசியல் காரணங்கள், ஒற்றுமை நோக்கக்காக நடத்தப்படும் வேலைநிறுத்தங்கள் போன்றவை தடைக்குட்பட்டன. மறுநாள் COPCON உட்பட மற்ற இராணுவப் பிரிவுகள், அரசாங்க விமான போக்குவரத்து தொழிலாளர்கள் (TAP) கைப்பற்றியிருந்த, லிஸ்பன் விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டன. இராணுவத்தினரின் உத்தரவைக் கேட்க மறுத்த தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு, "எந்த அரசியல் நடவடிக்கையிலும் இனி ஈடுபடமாட்டேன்" என்ற நிபந்தனையில்தான் மீண்டும் பதவியில் இருத்தப்படுவர் என்று கூறப்பட்டனர்.

மேலும் இரண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்கள்

சமூக ஜனநாயக கட்சிகள், மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் நடவடிக்கைகள் இரண்டாம் முறை இப் பிற்போக்கிற்கு இடமளித்தன. 1974 செப்டம்பர் 10ல், ஷிஜீணஸீஷீறீணீ "அமைதி பெரும்பான்மையினர் ... எழுச்சியுற்று தீவிரமான சர்வாதிகார ஆட்சியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டங்கள் தயாராயின. படைகள் நடமாட்டம் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்படுதற்கு விடையளிக்கும் வகையில், தொழிலாளர்கள் எங்கும் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினர் முயன்ற ஆட்சிக்கவிழ்ப்பை தகர்த்தனர். ஆனால் ஜனாதிபதி தலைவர் பதவியில் இருந்து ஷிஜீணஸீஷீறீணீ இராஜிநாமா செய்ய அனுமதிக்கப்பட்டு, அவருடைய பழைய மேலதிகாரி ஜெனரல் கோஸ்டா கோம்ஸ் ஜனாதிபதியாக்கப்பட்டார்.

ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் ஸ்பினோலா மற்றும் JNS உடைய மூன்று உறுப்பினர்கள் இல்லாமல் அமைக்கப்பட்டு, இது 1975 மார்ச் மாதம் நடைபெற்ற வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு வரை நீடித்தது.

தொழிலாளர் குழுக்களின் கூட்டமைப்பு ஒன்று Inter-Empresas என்பது Timex, TAP, Lisnave மற்றும் பல நிறுவனங்களையும் கொண்டு ஜனவரி 1975ல் அமைக்கப்பட்டது. இதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்று நேட்டோ கப்பல்கள் லிஸ்பன் துறைமுக தளத்திற்கு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஆகும். இடைக்கால அரசாங்கம் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்தது, போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தை அமைத்தவர்களை தாக்குதலுக்கு உட்படுத்தியது. ஆனாலும் 40,000 மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேஜர் எர்நெஸ்டோ அகஸ்டோ மெலோ அன்ட்யூன்ஸ் என்ற, இராணுவப் படைகளின் இயக்கத்தின் அதிகாரிகளில் "ஒன்பதுபேர் குழுவில்" உறுப்பினராக இருந்தவருடைய பொருளாதாரத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றது, இத்திட்டத்திற்கு இராணுவப் படைகளின் இயக்கத்தினுடைய பொதுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் "முதலாளித்துவ நிர்வாக கட்டுப்பாடு சமூக ஜனநாயகத்திடம் இருந்து அகற்றப்பட்டது... ஆனால் ஒரு பன்முக சமுதாயம் ஒதுக்கப்படவில்லை. ... இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம் நடுத்தரவர்க்கம் வகிக்கக்கூடிய மாற்றுப் பங்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்." என்று கூறப்பட்டது.

இது ஒரு பகுதி தேசியமயமாக்கலுக்கு அழைப்பு விடுத்தது, மிகப் பெரிய மற்றும் மோசமான முறையில் நடத்தப்பட்ட நிலைப்பண்ணைகள் அரசாங்கத்தால் ஏற்கப்படவேண்டும் என்றும் வெளிமுதலீடு அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

1975 மார்ச் மாதம் கிஸிங்கர் மற்றும் அமெரிக்கத் தூதர் Frank Carlucci இருவரும் ஒப்புதல் அளித்திருந்த மற்றொரு இராணுவக் கவிழ்ப்பை ஸ்பினோலா மேற்கொண்டார். ஆனால் இவருடைய படைகள் கடைசி நேரத்தில் இவரை எதிர்த்தே கலகம் செய்துவிட்டன. ஸ்பினோலா ஸ்பெயினுக்கு தப்பியோடி, அங்கிருந்து பிரேசிலுக்குச் சென்று விட்டார். இக்கவிழ்ப்பை திரைமறைவில் இருந்து ஆதரித்த பல வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர், இதில் போர்த்துகல்லுடைய பெரு வங்கிகள் ஒன்றிற்கு உரிமை பெற்றிருந்த Santo குடும்பத்தில் ஏழு பேரும், டி மெலோக்களும் அடங்குவர்; ஆனால் இவர்கள் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

JNS நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புரட்சி சபை என்ற அமைப்பு வந்தது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒட்டி, ஒரு நான்காம் இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது; அது வர்த்தக வங்கிகளை தேசிய மயமாக்கியது (அது மூன்று சர்வதேச வங்கிளை அவ்வாறு உருவாக்கவில்லை). பல நிறுவனங்களையும் வங்கிகள் கட்டுப்படுத்தி வந்ததால் அரசாங்கம் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து செய்தித்தாட்கள், காப்பீட்டு நிறுவனங்கள், உணவு விடுதிகள், கட்டிடம் அமைக்கும் நிறுவனங்கள் மற்றும் கிட்டத்தட்ட நாட்டின் மொத்த உற்பத்தியில் 70 சதவிகிதம் கொண்ட பலவிதமான வர்த்தக நிறுவனங்களையும் தேசியமயமாக்கியது. குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டு விவசாயச் சீர்திருத்தங்களுக்கான ஒரு வேலைத்திட்டம் உறுதிமொழியளிக்கப்பட்டது.

போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி ''மக்களுடைய சேவைக்காக வர்த்தகம் தேசியமயமாக்கப்பட்டது'' என்று கடமையுணர்வுடன் கூறியது, ஆனால் இது கூறிய முதலாளித்துவ தேசியமயமாக்கல் பெரும்பாலான மேலைநாடுகளில் இரண்டாம் உலகப்போருக்குப்பின் விரிவாக்கப்பட்டதிலிருந்து வேறுபட்ட முன்மொழிவாகும். முதலாளித்துவத்தின் கைகளிடம்தான் பொருளாதார மற்றும் அரசு அதிகாரங்கள் இன்னும் இருந்தன, இதை அவர்கள் சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மூலம் முன்போல் இல்லாவிட்டாலும் ஓரளவு அதிகாரங்களை பெற்றிருந்தவகையில் வெளிப்பட்டது. தனியார் முயற்சிகளுக்கு இன்னும் கூடுதலான உறுதிப்பாட்டை உடைய கட்டுமானம் கொடுப்பதையும் தொழிலாளர்கள் குழுக்களின் அதிகாரங்களை குறைப்பதின் மூலமும், மேலாளர்கள் நியமனம் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்குள் இருக்கும் என்ற வகையில்தான் இத்தேசியமயமாக்குதல் இலக்காகக் கொண்டு செயல்பட்டது.

அரசியலமைப்பு நிர்ணயசபை

1975 ஏப்ரல் 25 அன்று, தேர்தல்கள், அரசியல்சாசனத்தை இயற்றுவதற்கான அரசியலமைப்பு நிர்ணயசபைக்காக நடைபெற்றன. கிட்டத்தட்ட 38 சதவிகித வாக்குகளை போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி பெற்றது, பாசிச மக்கள் முன்னணி ஜனநாயகக்கட்சி 26.4 சதவிகிதத்தையும், போர்த்துக்கல் கம்யூனிச கட்சி 13 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

தேர்தல்களை அடுத்து, உறுதியளிக்கப்பட்டிருந்த விவசாயச் சீர்திருத்தங்கள் வருவதற்கான அறிகுறிகளும் இல்லாத சூழ்நிலையில், நாடு முழுவதும் கிளர்ச்சி சூழ்நிலையில் கிராமப்புற மக்களும் நகரமக்களோடு சேர்ந்துகொள்ளும் நிலை உருவாகியது. நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் தெற்கே, தாங்கள் வேலை செய்து வந்திருந்த பெரும் விவசாயப் பண்ணைகளை கைப்பற்றி அவற்றை கூட்டு அமைப்பு முறையில், Alentejo-உடைய Red Committee என்ற பெயரில் வளர்க்கத் தலைப்பட்டனர். போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆக்கிரமிப்புக்களை "அராஜகவாதம்" என்று குறித்து, இனி இதுபோன்ற ஆக்கிரமிப்புக்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் எனக் கூறியது. (தொழிற்சங்கங்களை தாங்கள் கட்டுப்படுத்தலாம் என்று அவை நினைத்தன.)

1975 ஜூன், ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி, பாசிச மக்கள் முன்னணி ஜனநாயகக்கட்சி இரண்டும் நான்காம் இடைக்கால அரசாங்கத்தில் இருந்து Republica விவகாரத்தை ஒட்டி வெளியேறிய பின், போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் நாட்டின் பொறுப்பையும் மந்திரிகள் நியமிக்கும் அதிகாரமும் கொண்ட நிலை ஏற்பட்டது. கான்கால்விஸ்டுகள் (Gonçalvists) என்று அழைக்கப்பட்ட போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு, இராணுவப் படைகளின் இயக்கத்தினுடைய (MFA) புரட்சிக் குழுவில் ஆதிக்கம் செலுத்தியது.

இராணுவப் படைகளின் இயக்கம் மற்றும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும், புரட்சிகர ஐக்கிய அணி (்Front of Revolutionary Unity - FUR) என்ற அமைப்பைக் கொண்டு இராணுவப் படைகளின் இயக்கத்திற்கும் மக்களுக்கு இடையே இருந்த "உடன்பாட்டிற்கு" ''நிறுவனமயமாக்கும்'' வடிவைக் கொடுக்க முற்பட்டது. இதற்காக சிறுபகுதிகளின் மன்றங்கள் அமைத்தலும், நகரமன்றங்கள் ஏற்படுத்தப்படுதலும், இடைக்கால அரசாங்கத்திற்கு பதிலாக ஒரு தேசிய மக்கள் சபை அமைக்க வேண்டும் என்ற நிலையும் தோன்றியது. இராணுவப் படைகளின் இயக்கத்தினுடைய திட்டத்தின் நோக்கம் முதலாளித்துவ இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டை பெருக்குவது, அதிகளவில் பெருகியிருந்த தொழிலாளர்களின் குழுக்களுடைய சுதந்திர தன்மையை அழிப்பது, இரட்டை அதிகாரத்தை நோக்கிய சோவியத்துக்கள்/தொழிலாளர்கள் குழுக்களுடைய செயற்பாடுகளை தகர்ப்பதாக இருந்தது. மன்றங்கள் தங்கள் பணிகளை ''இராணுவப் படைகளின் இயக்கம் மதிப்பாய்வு செய்த'' பின்னர்தான் மேற்கொள்ள முடியும் என்றும், அவற்றின் ''சுதந்திரமாக எல்லா கட்சிகளிலிருந்து'' காப்பாற்றப்படுவதற்காக அவை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் எல்லா மட்டத்திலும் இருக்கும் என்றும் வரையறுக்கப்பட்டது. இராணுவப் படைகளின் இயக்கத்தை தவிர வேறு எந்த அரசியல் அமைப்பும் இராணுவத்தில் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுவிட்டது.

தொடரும்

Top of page