World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

York Times and Washington Post remain silent on murder allegations against Iraqi Prime Minister Allawi

ஈராக்கிய பிரதம மந்திரி அல்லாவிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுக்கள் பற்றி நியூ யோர்க் டைம்ஸும், வாஷிங்டன் போஸ்டும் மெளனம் சாதிக்கின்றன

By James Conachy
19 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிய பிரதம மந்திரி இயத் அல்லாவி, ஆறு கைதிகளுக்கு நீதிநெறிக்கு புறம்பாக கொலைத்தண்டனை நிறைவேற்றியதை பற்றிய நேரடிச் சாட்சிகளின் தகவல்களை வெளியிட்ட, விருது பெற்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Paul McGeough, ஆகஸ்ட் 12ம் தேதி Sydney Morning Herald பதிப்பில் இன்னும் கூடுதலான தகவல்களை கொடுத்துள்ளார்.

அல்லாவியின் கொலைகாரத்தன நடவடிக்கைகளை விவரிக்கும் இரண்டு பெயரிடாத ஆதாரங்களுடன், இரண்டு பகுதிகளாக இருந்த Paul McGeough வின் முதல் கட்டுரை, ஜூலை 17ம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் முக்கிய செய்தித்தாள்களில் இரண்டான Sydney Morning Herald, மற்றும் Age இவற்றில் வெளிவந்திருந்தன. ஜுன் மாதம் கடைசியில் நடந்ததாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சியில், அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்ற குற்றச் சாட்டும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

Paul McGeough வின் சமீபத்திய, "அவர்கள் எந்தக் கெடுதலையும் பார்க்கவில்லை, எந்தக் கெடுதலையும் கேட்கவில்லை, உறுதியாக எந்தக் கெடுதலைப் பற்றியும் பேசமாட்டார்கள்" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை, அல்லாவிக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கும் ஒன்றாகும். (See: http://smh.com.au/articles/2004/08/11/1092102321384 html)

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்: "விடுலையான ஈராக்கில் இரண்டு நிகழ்வுகளைப் பற்றி குழப்பத்திற்கு இடமின்றி சான்றுகள் உள்ளன --ஈராக்கிய கைதிகள் புதிய, அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட ஆட்சியினால் தவறாக நடத்தப்படுகின்றனர்; மற்றும் அமெரிக்கர்கள், கொள்கை என்ற பெயரில், அதைப்பற்றி எதையும் செய்ய மறுக்கிறார்கள்" என அறிவித்தார்.

ஜூன் 29ம் தேதி, பாக்தாதில் அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படையினரால் அல்லாவியின் உள்துறை அமைச்சக போலீசாரால் ஈராக்கிய கைதிகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தலையிட்ட நிகழ்ச்சியின்பொழுது, அவர்களுடைய தளபதிகள் பாதிக்கப்பட்டவர்களை அவர்களைச் சித்திரவதை செய்பவர்களிடமே விட்டுவிடுமாறு உத்தரவிட்டனர் என்ற நிகழ்ச்சியின்பால் கவனத்தை ஈர்த்தார். இந்தக் குற்றம் அல்லாவி பாக்தாதின் அல்-அமாரியா பாதுகாப்பு மையத்தில் ஆறு கைதிகளை கொன்றார் என்று கூறப்படுவதற்கு சில வாரங்களுக்குப்பின் நடைபெற்றது ஆகும். (See:" US Commanders stop troops from protecting Iraqi torture victims")

அமெரிக்க அரசாங்கம் அல்லாவியின் நடவடிக்கைகளை மூடிமறைத்தல் பற்றி ஆவணச் சான்றுகளை தயாரிக்கும்போது, தன்னுடைய ஆகஸ்ட் 12ம் தேதி கட்டுரையில், McGeough, அமெரிக்க அரசுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சார்ட் பெளச்சருக்கும் ஒரு நிருபருக்கும் இடையே வாஷிங்டனில் ஆகஸ்ட் 12ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலை சுட்டிக்காட்டுகிறார்.

கீழ்வருவன, வெளியுறவுத்துறை செய்திக் கூட்டம் பற்றிய குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; இதை http://www.state.gov./r/pa/prs/dpb/2004/34897.htm: என்பதில் காணலாம்.

கேள்வி: கூட்டணிப்படையின் இடைக்கால அரசாங்கம் ஈராக்கில் பொறுப்பைக் கொண்டிருந்த போது, ஜூன் மூன்றாம் வாரக் கடைசியில், பிரதம மந்திரி அல்லாவி, இச்செய்தியை அறிவித்த நேரில்பார்த்த சாட்சியம் உள்பட அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் முன்பாகவே, ஆறு கைதிகளை சுட்டுக் கொன்றார், ஏழு பேரை சுட்டுக் காயப்படுத்தினார் என்ற தகவலின் உண்மை அல்லது தவறான தகவலைப் பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க அரசாங்கமோ அல்லது அரசுத்துறையோ ஏதேனும் முயற்சி எடுத்தனவா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அப்படிச் செய்யவில்லை என்றால், குற்றச் சாட்டின் தீவிரத்தன்மையை காணும்போது, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ள இரு சுதந்திரமான சாட்சியங்களின் அடிப்படையில், அமெரிக்க படை அதிகாரிகள் இருந்தார்கள் என்ற கூற்று பற்றி, விசாரணைக்கு ஏற்பாடு செய்வீர்களா?

திரு. பெளச்சர்: இந்த விஷயம் பாக்தாத்திலும் இங்கும் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உட்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். பிரதம மந்திரி அல்லாவியே இந்த அறிவிப்புக்களில் உண்மை ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். அக்கைதிகளைப் பற்றிக் கேட்டபோது, அவர் நேரடியாகவே பதில் கூறிவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நடந்தததற்கான குறிப்புக்காட்டும் தகவல் எங்களிடம் ஏதும் இல்லை என்று நாங்கள் முன்னரே கூறியுள்ளோம்; இப்பொழுதும் எனக்கு அந்த நிலைப்பாடுதான்.

கேள்வி: என்னுடைய கேள்வி, அமெரிக்கர்கள் அப்பொழுது அங்கு இருந்ததாகக் கூறப்படுவது பற்றி நீங்கள் ஏதேனும் விசாரணை நடத்தினீர்களா என்பதே ஆகும்.

திரு. பெளச்சர்: அந்த அமெரிக்கர்கள் யாராக இருந்திருக்கக் கூடும் என்பது பற்றி எனக்குத் தெரியாது. பாக்தாதில் படைப் பிரிவுகளோ அல்லது மற்ற பிரிவுகளோ ஏதேனும் விசாரணை மேற்கொண்டார்களா என்றும் எனக்குத் தெரியாது; ஆனால் அமெரிக்க அரசாங்கம் இதைப் பற்றி கேட்டறிந்தது என்றும் இந்தத் தகவல்கள் உண்மை என்று குறிக்கும் வகையில் தகவல் ஏதும் இல்லை என்று மட்டும் எனக்குக் கூறப்பட்டது.

கேள்வி: எனவே இந்த அறிக்கைகளில் முற்றிலும் உண்மை இல்லை என்பதைப் பற்றி நீங்கள் திருப்தி அடைந்துள்ளீர்களா?

திரு. பெளச்சர்: இந்த அறிக்கைகள் உண்மையானவை எனக் குறிப்பிடுவதற்கு எங்களிடம் ஏதும் இல்லை. நான் ஒன்றும் இதற்காகச் சொற்றொடரை மாற்றப் போவதில்லை. எங்களுக்குத் தெரிந்த வரை உள்ள தகவல் பற்றி நான் உங்களிடம் கூறுகிறேன்; இதுதான் எங்களுக்குத் தெரிந்த தகவல்.

கேள்வி: உங்கள் அறிதலின் விஸ்தரிப்பை விரிவாக்கும் முயற்சி ஏதும் செய்யப்போவதில்லையா?

திரு. பெளச்சர்: எங்களுக்கு வந்துள்ள தகவலை நன்கு சரி பார்த்தோம்; இந்த அறிவிப்புக்களில் ஏதேனும் உண்மை இருப்பதாக எங்களுக்கு எந்தக் குறிப்பும் இல்லை .

கேள்வி: நீங்கள் மேலதிக விசாரண ஏதும் செய்வதாகக் கருத்திற்கொள்ளவில்லை...

திரு. பெளச்சர்: எந்தக் கூடுதலான தகவல் அல்லது விசாரணை மேற்கொள்ளுதலுக்கு நாங்கள் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறோம்.

கேள்வி: நன்றி.

இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தில் முதல் விஷயம், தன்னுடைய விடைகளைப் பெரும் கவனத்துடன் கூறிய பெளச்சர், அல்லாவியைப் பற்றிய குற்றச்சாட்டின் உண்மையை மறுக்கவில்லை என்பதாகும். இரண்டாவதாக அமெரிக்க அரசாங்கம் இந்த நிகழ்வைப் பற்றி விசாரிக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதும் ஆகும்.

இத்தகைய குறிப்பிடத்தகுந்த உரையாடலில் இருந்து, மிகவும் நியாயமான முடிவுக்கருத்தைத்தான் McGeough எடுத்துள்ளார்: "வாஷிங்டனுடைய ஆதரவு இருந்தால், நீங்கள் கொலை செய்த பின்னரும் தப்பித்துக் கொள்ளலாம் என்று அதுபடுகிறது."

அமெரிக்கச் செய்தி ஊடகம் அமெரிக்க அரசாங்கத்தின் இந்த மூடிமறைத்தலுக்கு துணையாகத்தான் உள்ளது. McGeough வெளியிட்டுள்ள, அல்லாவியின் குற்றங்கள் பற்றிய அறிக்கை அநேகமாக அது பெரும்பகுதியைத் தகவலாக அளிக்காமல்தான் இருக்கிறது.

இதேபோல், பெரும்பாலான செய்தி வெளியிடும் அமைப்புக்களும் அமெரிக்க அதிகாரிகள், தேசிய ஈராக்கிய உள்துறை அமைச்சக போலீசின் சித்திரவதைக்குட்பட்டிருந்த, ஈராக்கிய கைதிகளுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதையும் மறைத்துவிட்டன.

செய்தித்தாள்களை பொறுத்தவரையில் இந்தத் தகவல்களை வெளியிட மறுப்பவை நியூ யோர்க் டைம்ஸ், மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகும்.

செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்ந்தவற்றை McGeough தெரிவித்துள்ளதில் இருந்து, அல்லாவியைப் பற்றிய குற்றச் சாட்டுக்கள் செய்தி ஊடக, அரசாங்க வட்டங்களில் சூடான விவாதங்கள் இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. டைம்ஸ், போஸ்ட் போன்ற செய்தித் தாள்களை வெளியிடுவோர், வாஷிங்டனால் பொறுக்கி எடுக்கப்பட்ட இடைக்கால பிரதம மந்திரி நடாத்திய கொலை பற்றிய சாட்சியங்கள், வெறும் ஒதுக்கப்பட்ட பிரச்சினை இல்லை என்றும் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன என்பதையும் நன்கு அறிவர்.

டைம்சும் போஸ்ட்டும், பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்த போதிலும்கூட, தங்கள் மெளனத்தை தொடர்கின்றன. பாக்தாத்தில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இக்குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அல்லாவியே ஆளானார்.

ஜூலை 19ம் தேதி இந்தக் கட்டுரையாளர், நியூ யோர்க் டைம்ஸ்-ன் பொது ஆசிரியருக்கும், வாஷிங்டன் போஸ்ட்டின் புகார் விசாரிக்கும் அலுவலருக்கும் (ஆம்பட்ஸ்மனுக்கும்), அவர்கள் செய்தித்தாள்களில் அல்லாவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெளியிடத் தவறியது பற்றி விளக்கம் கேட்டிருந்தார்.

வாஷிங்டன் போஸ்ட்டின் புகார் விசாரணை அலுவலர் மைக்கேல் கெட்லர் என்னுடைய வினாவிற்கு இதுகாறும் விடையளிக்கவில்லை.

நியூ யோர்க் டைம்ஸ்-ன் பொது ஆசிரியர் டானியல் ஒக்ரென்ட், ஜூலை 29ம் தேதி, குற்றச் சாட்டுக்களைப்பற்றி தனித்த விசாரணைக்குப் பின்னர் ஆதாரம் காட்டாமல், ஏற்பதோ மறுப்பதோ இன்றி, தகவல் வெளியிடுவது செய்தியாளர் தர்மத்திற்குப் புறம்பானது என்ற தவற்றினை ஏற்படுத்திவிடும் என்று பதில் எழுதியுள்ளார். (See": Murder allegations against Iraq's AllawiL an exchange of letters with the New York Times' public editor.")

ஒக்ரென்டின் வாதம் சிறிதும் எடுபடாது. எத்தனையோ விதமான, சரிபார்க்கப்படாத புரளிகள், வீண்பேச்சுக்கள் ஆகியவற்றை, கிளின்டன் காலத்தில் நடைபெற்றவை, வலதுசாரிப் பிரிவின் தலைமையில், தனித்த வக்கீல் கென்னத் ஸ்டார் ஊக்கத்தில் கூறப்பட்டவைகளை, மிக முக்கியத்துவம் கொடுத்து டைம்ஸ் வெளியிட்டுள்ளது. போஸ்ட்டும் இதேபோல் செய்துள்ளது. இரண்டு செய்தித் தாள்களுமே அரசாங்க அதிகாரிகளின் ஆதாரமற்ற அறிக்கைகளை, பெயரிடாமல், பயங்கரவாதத் தாக்குதல்கள் அச்சுறுத்தல், ஈராக்கியப் போர் மற்றும் பல விஷயங்களில், அன்றாடத் தகவல்களை வெளியிட்டுள்ளன. புஷ் நிர்வாகத்தின் போலிக் கூற்றுக்களான ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றியும், சதாம் ஹுசைனுக்கும் அல் கொய்தாவிற்கும் இடையே இருந்ததாகக் கூறப்பட்ட ஒத்துழைப்பு பற்றியும், அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுப்பதற்கு முன்பு, எவ்விதமான திறனாய்வும் சுதந்திரமான விசாரணையும் மேற்கொள்ளாமலே நிறைய வெளியிட்டன.

குற்றச் சார்ந்த தன்மையுடனைய ஈராக்கின் மீதான அமெரிக்கத் தலையீடு பற்றிய சித்தரிப்பிலும், பாக்தாதில் வாஷிங்டனுடைய கையாள் ஒரு குண்டர், கொலைகாரர் என்பதை அம்பலப்படுத்தும் தகவல்களை வெளியிடாததற்கும், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டும் சாதிக்கும் மெளனத்திற்கு, நிரபராதி தன்மையான விளக்கம் ஏதும் இல்லை.

நியூ யோர்க் டைம்ஸ், மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டின் ஆசிரியர் குழுக்களும், தங்களின் பெயரால் கொலைகாரர்களும், சித்திரவதைப்படுத்துவோரும் ஈராக்கில் ஆள்வதற்கு கட்டளையிடப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்க மக்கள் அறியாமல் இருப்பதே சிறந்தது என்று முடிவு எடுத்துள்ளன போலும்.

Top of page