World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Rumsfeld fails to forge new security pact

US-Latin American tensions over "war on terror"

ரம்ஸ்பெல்ட் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யத் தவறிவிட்டார்

''பயங்கரவாதத்தின் மீதான போர்'' மீதாக அமெரிக்க-லத்தீன் அமெரிக்க பதட்டங்கள்

By Bill Van Auken
23 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலத்தீன் அமெரிக்க நாடுகள் மீது தனது மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான பூகோள ரீதியான ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' ஆதரவு தந்து ஊக்குவிப்பதற்கான வாஷிங்டனின் முயற்சி, ஈக்குவடார் நாட்டிலுள்ள குவிட்டோவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் சிக்கலுக்கு உள்ளானது.

அமெரிக்காக்களுக்கு இடையிலான பாதுகாப்பு வாரியத்தை அமெரிக்கா தலைமையிலான ஒரு பயங்கரவாதத்திற்கு-எதிரான யுத்தத்தின் அரைவாசி புவிக்கோளம் முழுவதிலும் ஒரு ஒருங்கிணைப்பாளராக மாற்றுவதற்கான உடன்படிக்கையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரம்ஸ் பெல்ட் கவர்வதற்குரியதாக்க தவறிவிட்டார்.

இந்த பிராந்தியத்தில் எந்த நாட்டிலும் தலையிடுகின்ற வல்லமையுள்ள பல்தேசிய படைகளை உருவாக்க வேண்டும் என்று ரம்ஸ்பெல்ட் திட்டம் கேட்டுக்கொண்டது. 1960-களில் இருந்து 1980-கள் வரை ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் கொடூரமான இராணுவ சர்வாதிகாரங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த பல கொள்கைகளையும் உறவுகளையும் மீண்டும் உயிர்த்துடிப்போடு இயங்கச்செய்வதற்கு அத்திட்டம் வகை செய்கிறது.

அந்தக் காலகட்டத்தில், Rio ஒப்பந்தம் என்றழைக்கப்படும் 1947- அமெரிக்காக்களுக்கிடையிலான பரஸ்பர உதவி ஒப்பந்தம் என்கின்ற ஒரு கம்யூனிச எதிர்ப்பு குடையின்கீழ் அந்த பூகோள ஆயுதப்படைகளுக்கிடையே அமெரிக்கா பிராந்திய ஒருங்கிணைப்பை உருவாக்கிற்று. அந்த ஒப்பந்தம், முதலாளித்துவதற்கும், அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் எதிராக தோன்றுகின்ற எந்த சவாலையும் ஒடுக்கும் ஒரு ''கூட்டு பாதுகாப்பை'' ஒழுங்கமைத்தல் என்ற சாக்காக ''சோவியத் ஆக்கிரமிப்பு'' என்ற அச்சுறுத்தலை கொணர்ந்தது.

''21-ம் நூற்றாண்டு எதிர் நோக்கியுள்ள புதிய அச்சுறுத்தல்களுக்கு எல்லைகள் இல்லை,'' என்று ரம்ஸ்பெல்ட் இராணுவ உச்சிமாநாட்டில் அவரது தொடக்க உரையில் அறிவித்தார். ''பயங்கரவாதிகள், போதைப்பொருட்களை கடத்துவோர், பிணைக்கைதிகளை பிடிப்போர் மற்றும் கிரிமினல் கும்பல்கள் ஒரு சமூக விரோத கூட்டணியாக உருவாகி சிவில் சமுதாயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த பெருமளவில் முயன்று வருகின்றனர். இந்த எதிரிகள் அடிக்கடி எல்லை பிராந்தியங்களையும் அல்லது அரசாங்கத்தின் அதிகாரவீச்சு தொடமுடியாத பகுதிகளையும் தங்களது புகலிடங்களாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து கொண்டு கண்காணிக்கிறார்கள், ஆராய்கிறார்கள், பலவீனமான பகுதிகளை, தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பகுதிகளை, நம்முடைய கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவும் குறைகளை பயன்படுத்திக் கொள்ள முடியுமென்று கருதுகிறார்கள்'' என்றார்.

2001-செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை, உள்நாட்டு போலீஸ் பணிகளிலும், உளவுத்துறைகளிலும் ஆயுதப்படைகளை பயன்படுத்திக்கொள்வதற்காக அரசியல் சட்ட தடைகளை உடைப்பதற்கு நியாயப்படுத்த ரம்ஸ்பெல்ட் விளக்கமளித்தார், இந்த நடைமுறை அமெரிக்காவிலேயே தற்போது மிகப்பெருமளவிற்கு முன்னேறியுள்ளது.

''அமெரிக்காவில் நமது இராணுவத்திற்கும் நமது சட்ட அமலாக்க பொறுப்புக்களுக்கும் இடையில் நிலவுகின்ற உறவுகளில் ஒரு அடிப்படை மறு ஆய்வை நாம் நடத்தியாக வேண்டும். நாம் எதிர் கொண்டிருக்கும் இந்த புதிய சகாப்தத்தின் சிக்கலான சவால்களும் சீர் இல்லாத அச்சுறுத்தல்களும் அரசு மற்றும் சமூகத்தின் எல்லா சக்திகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை கொண்டிருக்கிறது. நமது குடிமக்கள் நமது பல்வேறு வகைப்பட்ட பாதுகாப்புப்படைகளின் பொறுப்புக்கள் கடமைகள், பங்களிப்புக்களை நாம் தெளிவாக வரையறை செய்வதற்கு நம்மை நம்பியிருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிபுணர்குழு, அமெரிக்காக்களுக்கான குழுவால் பென்டகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தயாரிக்கப்பட்ட ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிடுவதற்கு, அமெரிக்க பாதுகாப்பு செயலர் Quito உச்சி மாநாட்டையும் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த அறிக்கையின் மைய ஆய்வு, ''இந்த பிராந்தியத்தில் முதலீட்டு சூழ்நிலையை பாதுகாப்பாக அமைப்பதற்கு பிராந்திய முன்னேற்றத்தை வளர்ப்பது'' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலைதான் இலத்தீன் அமெரிக்க பொருளதார பிரச்சனைகளுக்கு திறவுகோல் என்றும் இந்த பிராந்தியத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு படுவீழ்ச்சியடைந்திருப்பதற்கு தீர்வு போலீஸ்- இராணுவ அடக்குமுறைதான் என்றும் அந்த அறிக்கை விளக்குகிறது.

வெளிநாட்டு முதலாளித்துவ முதலீட்டாளர்கள் இலத்தீன் அமெரிக்காவை தவிர்ப்பதற்கு காரணம், ''பாதுகாப்பு'' இல்லாத நிலைதான் என்று அது வாதிடுகிறது மற்றும் பகிரங்க சந்தை மேம்பாட்டில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் அரசாங்கங்கள் கருதிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது.

இந்த பிராந்தியத்தில் கொலை மற்றும் ஆட்கள் கடத்தப்படும் விகிதங்கள் அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது, சமூக கிளர்ச்சிதான் அடிப்படை கவலையாக அமைந்திருக்கிறது. ''இன்றைய தினம் இந்த பிராந்தியத்தில் ஜனநாயகம் தொந்தரவிற்கு உள்ளாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் கீழ் வருகின்ற திட்டவட்டமான பயன்களை பொது மக்கள் ஆட்சேபிப்பது அதிகரித்து வருகிறது. பொருளாதார மரபு கடைபிடிப்புகளும் மக்கள் முதன்மைவாதமும் மீண்டும் ஒரு காலூன்றுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது''

இந்த ஆவணம் ரம்ஸ்பெல்டின் ஆலோசனைகளை எதிரொலிக்கிறது, இந்த பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களிடம் போலீஸ் மற்றும் இராணுவம் ஆகிய ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமென்று ஆவணம் கேட்டுக்கொள்கிறது, ''எல்லைதாண்டிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும்'' கோரிக்கை விடுத்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளதார நெருக்கடிக்கு முதன்மை காரணமாக அமைந்திருப்பது குற்றச்செயல்கள் என்ற கருத்து முட்டாள்தனமான பிற்போக்குக் கருத்தாகும். இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அரசியல் ஸ்திரமின்மையும் கிளர்ச்சியும் முதலீட்டாளர்களது கவலைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. என்றாலும், கடந்த தசாப்தங்களில் செயல்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கைகளின் விளைவுதான் இந்தக் கொந்தளிப்பாகும்.

பெரும்பாலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வீழ்ச்சியடைவது இந்த பிராந்திய அரசாங்கங்கள் ஏற்கனவே அரசு தொழில்களை தனியார்மயமாக்கிவிட்டதன் தர்க்கரீதியிலான வெளிப்பாடுதான் இந்த நடைமுறை பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்யவில்லை. ஆனால் மாறாக பாரியளவில் வேலை வாய்ப்புக்கள் வெட்டப்பட்டுள்ளன. பல நாடுகளில் தனியார்மயமாக்குவதற்கு வேறு தொழில்களே அதிகமில்லை. அந்த நாடுகளில் பிராந்திய பொருளாதார வளங்களை, அவரச கோலத்தில் தொடர்ந்து விற்பதற்கு மக்களிடையே எதிர்ப்பு பெருகிவருகிறது.

இந்த அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்கு அரசாங்கங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அமெரிக்காக்களுக்கான கவுன்சில் அறிக்கை வலுவாக ஆலோசனை கூறியுள்ளது. ''மின்சாரத்தை போல், வெளிநாட்டு முதலீடு எப்போதுமே எதிர்ப்பு குறைவாகவுள்ள வழியைத்தான் தேடும்'' என்று அது குறிப்பிடுகிறது. இந்த ''பாதைக்கு'' சீனா தலை சிறந்த எடுத்துக்காட்டாகும், இன்றையதினம் உலகிலேயே மிகப்பெரிய அளவிற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கின்ற மிகப்பெரிய காந்த சக்தியாக விளங்குகிறது, அங்கே தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை போலீஸ் அரசு நடவடிக்கைகள் மூலம் சந்தித்து வருகிறார்கள்.

உள்நாட்டு போலீஸ் பணிகளில் ராணுவத்தை மிகப்பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்திருப்பது லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் ஆபத்தானதொரு முன் உதாரணத்தை நிலைநாட்டியுள்ளது. கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் ''தேசிய பாதுகாப்பு'' அரசுகள் என்று அழைக்கப்படும் அமைப்பு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், மற்றும் இந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்ட மற்றவர்கள் கொலை, சித்திரவதை மற்றும் சிறையில் அடைக்கப்படல் என ஒட்டுமொத்த அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டது. அப்போதும் கூட, வாஷிங்டனுக்கும், லத்தீன் அமெரிக்க ஆட்சிகளுக்குமிடையே ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு "பயங்கரவாதித்திற்கு" எதிரான ஒரு போர் என்று தான் வர்ணிக்கப்பட்டது.

ஒவ்வொரு இலத்தீன் அமெரிக்க நாட்டிலும் இந்தக் குற்றங்கள் இன்னமும் ஒரு வெடித்துச்சிதறும் அரசியல் சிக்கலாகவே உள்ளது. தங்களது சொந்த மக்களுக்கெதிராக இராணுவத்தை பயன்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டுமென்று ரம்ஸ்பெல்ட் விடுத்திருக்கும் கோரிக்கையை பகிரங்கமாக தழுவிக்கொள்வது லத்தீன் அரசுகளுக்கு ஒரு கடுமையான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பிரேலிசின் துணை ஜனாதிபதியும் தற்காலிக பாதுகாப்பு அமைச்சருமான Jose Alencar ரமஸ்பெல்டின் முன்மொழிவுகளை மிக விரிவான அடிப்படையில் நிராகரித்தார். அவர் ஐந்து நிமிடங்களே பேச வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஈராக் மீது அமெரிக்க படையெடுத்ததை நேரடியாக மறுதலித்த அவரது குறிப்புக்கள் உள்பட, அவர் இருபது நிமிடங்கள் உரையாற்றினார். ''ஐ.நா. உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் ஒத்துழைப்பு சர்வதேச அரங்கில் தன்னிச்சையாக படைபலத்தைப் பயன்படுத்துவதை ஒரு கண்டிக்கத்தக்க செயலாக ஆக்கியிருக்கிறது'' என்று Alencar கூறினார்.

Alencar ஒரு பணக்கார நெசவுத்தொழில் அதிபர் மற்றும் ஒரு வலதுசாரிக்கட்சியின் தலைவர், அவர் தொழிலாளர் கட்சித் தலைவர் Luis Inacio "Lula" da Silva-வினால், Lula அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய (IMF) கட்டளைப்படி பொருளாதாரக் கொள்கையை நிறைவேற்றும் என்று பிரேசில் மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ வாதிகளுக்கு உறுதியளிப்பதற்காக அரசாங்கத்திற்கு கொண்டுவரப்பட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு அவர்களது நலன்கள் அதிக அளவில் மாறுபட்டதாக பார்க்கும் லத்தீன் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்காக அவர் பேசுகிறார்.

''பயங்கரவாதத்தையும் சர்வதேச அளவில் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதைத்தடுக்கவும் சிலர் படையை பயன்படுத்துவதை ஆதரிக்கின்றனர். எங்களைப்போன்ற, மற்றவர்கள் கடுமையான வறுமை, பசி மற்றும் ஏற்றத்தாழ்வுகளில் ஏற்படுகின்ற வளர்ச்சி, கட்டுக்கோப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பைப் பேணுகின்றனர்'' என்று Alencar கூறினார்.

அமெரிக்காவிற்கு இடையிலான பாதுகாப்பு வாரியம் கூட்டு இராணுவ ஆணையகத்திற்கு திரும்ப வேண்டும் என்று அழைப்புவிடுப்பதை Alencar புறக்கணித்தார், தொழில்நுட்ப இராணுவ பிரச்சினைகள் மீதாக அமெரிக்க அரசுகள் அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் குழுவாக மட்டுமே தொடர்ந்து இருக்கவேண்டும் என்று பிரேசில் நம்புகிறது என்று குறிப்பிட்டார்.

''பயங்கரவாதத்திற்கு'' எதிராக ஒரு ஒருங்கிணைந்த கூட்டு இராணுவ நடவடிக்கைக்கான அமெரிக்க ஆலோசனைக்கெதிராக, பிரேசில் அதிகாரி, ''தனது சொந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை உரிமையுண்டு அது இயற்கையானதும் அவசியமானதுமாகும்'' என்று கூறினார்.

உள்நாட்டு பணிகளில் நடவடிக்கைகளில் லத்தீன் அமெரிக்க இராணுவம் பெருமளவிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று ரம்ஸ்பெல்ட் விடுத்த வேண்டுகோளையும் அதே போன்று Alencar தள்ளுபடி செய்தார். ''ஆயுதபடைகள் இறையாண்மையையும் நாட்டு எல்லையில் ஒருமைப்பாட்டையும், காக்கின்ற பங்களிப்பு செய்பவை,'' என்று அறிவித்தவர், மேலும் ''ஒவ்வொரு நாட்டின் போலீஸ் படைகளும் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயங்கரவாதத்தையும், ஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்களையும் எதிர்த்துப்போரிட நடவடிக்கை எடுத்தாக வேண்டும்'' என்று கூறினார்.

அமெரிக்காவின் கொள்கைக்கு மிகவும் திட்டவட்டமான மறுப்பு கொலம்பியா தொடர்பாக எழுந்தது, அந்த நாட்டில் அரசாங்கத்திற்கும், கிராமங்களில் இருந்து செயல்படுகின்ற கொரில்லா இயக்கங்களுக்குமிடையில் 40 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் வாஷிங்டன் தன்னைப் பெருமளவிற்கு ஈடுபடுத்திக் கொண்டுவருகிறது. சென்ற மாதம், இரகசியமாய் அமெரிக்க நாடாளுமன்றம் கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புக்களையும், இராணுவ "ஆலோசகர்களையும்" இரட்டிப்பாக்கி 800- ஆக உயர்த்தியுள்ளது. 2002 முதல், வாஷிங்டன் கொலம்பியாவிற்கு 3.3 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவி வழங்கியுள்ளது.

அந்த நாட்டின் ஜனாதிபதி, Alvaro Uribe Velez பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார், அவர் Quito கூட்டத்தில் கலந்துகொண்டார். கொலம்பியா உள்நாட்டுப்போரில் பிராந்திய பங்களிப்பு மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் இணைந்து ''பயங்கரவாத அமைப்புக்கள்'' பற்றிய ஒரு பட்டியலை தயாரித்து, அந்த அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு விசாக்கள் மறுக்கப்பட வேண்டும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, இந்த கொள்கை இரண்டு பிரதான இடதுசாரி கொரில்லா இயக்கங்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டுமென்று விரும்பினார், அவை FARC (கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படைகள்) மற்றும் ELN ( தேசிய விடுதலை இராணுவம்) ஆகும்.

இந்த இரண்டு ஆலோசனைகளுமே வெளிப்படையாக தள்ளுபடி செய்யப்பட்டன, இதனால் Uribe "நிலைகுலைந்துவிட்டது தெளிவாகத்'' தெரிந்தது என்று பத்திரிகை செய்திகள் வர்ணித்தன.

Ecuador ஜனாதிபதி Lucio ஆரம்ப உரையாற்றினார், அது பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக வாஷிங்டனின் நிலைப்பாட்டோடு சாய்ந்து கொண்டிருப்பதாக அமைந்தது ----''நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடு நம்மை இந்த அரைப்பூகோளத்திற்கு ஒரு புதிய பாதுகாப்புக் கட்டுக்கோப்பை உருவாக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்''---- அந்த நாட்டின் இராணுவம் கொலம்பியா மோதலில் ஈடுபடுவதில் தனக்கு அக்கறையில்லை என்று தெளிவுபடுத்திவிட்டது.

''கொலம்பியாவின் பிரச்சனை அந்நாட்டின் மக்களின் பிரச்சனையாகும். ''பயங்கரவாதத்தால் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முடியாது'' என்று, ஈக்குவடாரிய பாதுகாப்பு அமைச்சரின் பேச்சாளர் கேப்டன் Jorge Grosss கூறினார்.

அந்தக் கூட்டமுடிவில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கெதிரான மொழியில் அமைந்திருந்தது. ''ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை அடையாளப்படுத்துகிற இறையாண்மை உரிமை பெற்றவை'' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

''மனிதனது கண்ணியத்திற்கு முழுமையான மரியாதை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவை ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தின் கட்டுக்கோப்பிற்குள் வரும்போது, மனிதனது பாதுகாப்பு நிலைமைகள், முன்னேறும்'' என்று அந்த அறிக்கை தொடர்கிறது. பாதுகாப்பு நிலை நாட்டப்படுவது ''பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை வளர்ப்பதன் மூலமும் வறுமைக்கெதிரான போராட்டத்தை நடத்துவதன் மூலமும் தான் சாத்தியமாகும்'' என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மண்டல பாதுகாப்பு தொடர்பான வாஷிங்டனின் கட்டளைகளை எதிர்த்து நிற்க விருப்பத்துடன் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவம் ஈராக்கில் சிதறுகின்ற அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் அதன் டாலர் உலகச்சந்தைகளில் படுவேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது என்ற உணர்வுகளால் பெருமளவிற்கு இலத்தீன் அமெரிக்க நாடுகள் செயல்பட்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு காலத்தில் அமெரிக்காவில் கொள்கை வகுப்பவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளை ''நமது புழக்கடை'' என்று வர்ணித்து வந்தார்களோ அந்த அளவிற்கு இனி அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தமுடியாது.

ஈக்குவடாருக்கு ரம்ஸ்பெல்ட் விஜயம் அதற்குப்பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் சிலி நாட்டிலுள்ள சாண்டியாகோவில் நடைபெற்ற APEC கூட்டத்தில் கலந்துகொண்டது ஆகிய நிகழ்ச்சிகளை மங்கச்செய்கிற அளவிற்கு, உடனடியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் சீன ஜனாதிபதி Hu Jintoo 12- நாள் சுற்றுப்பயணத்தைத் தொடக்கினார்.

500- சீன வர்த்தக மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஒரு தூதுக்குழுவாக புடைசூழ பயணம் செய்த Hu, அர்ஜன்டீனா, பிரேசில், சிலி மற்றும் கியூபா நாடுகளில் பில்லியன் கணக்கான டாலர்களுக்கு புதிய முதலீட்டு ஒப்பந்தங்களை அறிவித்தார். சீனா அந்த பிராந்தியத்து கச்சாப்பொருட்களை பெறுவதிலும் துறைமுகங்கள், ரயில் தண்டவாளங்கள், தொலைபேசி தகவல் தொடர்புகள் ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வதிலும் பிரதானமாக கவனம் செலுத்திவருகிறது- அவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியான திட்டங்களாகும்.

இதற்கிடையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் Joschka Fischer-ம் அந்த பிராந்தியத்திற்கு விஜயம் செய்தார். சென்ற வாரம் பிரேசில் அதிகாரிகளையும், Sao Paulo வில் வர்த்தகர்களையும் சந்தித்துப் பேசினார். ஐரோப்பாவிற்கும், நான்கு நாடுகள் சேர்ந்த தென் அமெரிக்க Mercosur வர்த்தக அணிக்கும் இடையில் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னமும் இராணுவ வலிமையில் மிகப்பெருமளவிற்கு முன்னணியில் இருந்தாலும், இந்த அரைக்கோளத்தில் கம்யூனிசத்திற்கெதிரான ஒரு பூகோள போராட்டம் என்ற பெயரால் தென் அமெரிக்க பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்களை உருவாக்கிய காலத்தில் வாஷிங்டனுக்கு இருந்த சார்புரீதியான பொருளாதார வலிமை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த நாட்களில் அமெரிக்க முதலாளித்துவம் பூகோள ஏற்றுமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்புச்செய்தது. இன்றைய தினம் அதன் பங்கு 13-சதவீதத்திற்கும் குறைந்துவிட்டது. இந்த மாறிவிட்டட பொருளாதார உறவுகள், இந்த பிராந்தியத்து ஆளும் செல்வந்த தட்டினர் ''பயங்கரவாதம்'' தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்று அர்த்தமாகும் .

Top of page