World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Ukraine Supreme Court orders new presidential run-off election

உக்ரைனின் உச்ச நீதிமன்றம் ஒரு புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு உத்தரவு இடுகிறது

By Peter Schwarz
4 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐந்து நாட்கள் விவாதங்களுக்கு பின்னர், வெள்ளியன்று மாலை, பூசலிற்குட்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தலில், உக்ரைனின் உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. இப்பொழுது பிரதம மந்திரியாக இருக்கும் விக்டர் யானுகோவிச் வெற்றி பெற்றார் என்று நாட்டின் தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்த, நவம்பர் 21 அன்று நடந்த தேர்தலின் வாக்குகளை நீதிமன்றம் பிழையானவை என்று கூறிவிட்டு, யானுகோவிச்சிற்கும், அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவு பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், முந்தைய பிரதம மந்திரியாகவும், மத்திய வங்கியின் தலைவராகவும் இருந்த விக்டர் யுஷ்செங்கோவிற்கும் இடையே யார் பிரதமராக இருப்பது எனத் தீர்மானிக்க புதிய தேர்தலும் வாக்களிப்பும் நடைபெற வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளது. முக்கியமாக யுஷ்செங்கோ முகாமில் இருந்தும் அதன் மேலைநாட்டு ஆதரவாளர்களும் தெரிவித்திருந்த பரந்த முறையிலான தேர்தல் மோசடிகளை மேற்கோளிட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைக் கொடுத்துள்ளது.

டிசம்பர் 26ம் தேதி புதிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

ஒரு புதியதும் இருவருக்கிடையேயான தேர்தல் மட்டுமே நடத்தப்படவேண்டும் என்றும், யானுகோவிச் மற்றும் ஜனாதிபதி லியோனிட் குச்மா கோரியிருந்த ஆரம்ப கட்டத்தில் இருந்து புதிய வேட்பாளர்களும் பங்கு பெற வகை செய்யும் தேர்தல்கள் தேவை என்ற ஆலோசனைகளுக்கு எதிராக, கீவ்வில் பெரும் மக்கட்தொகுப்பின் எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்த எதிர்க்கட்சியின் செயல்பட்டியலுக்கு பெரிதும் ஒத்துப்போகும் வகையில் இந்த முடிவு உள்ளது. இவ்வகையிலான யானுகோவிச் மற்றும் யுஷ்செங்கோவிற்கிடையே மட்டும் நடக்கும் புதிய தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்றுள்ளது.

வாஷிங்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் "ஜனநாயக" எதிர்க்கட்சி என அழைக்கபடுவோரின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளன; இந்த எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்து மிகப் பெரிய அளவில் நிதி உதவி கொடுத்ததும் இவையே ஆகும். மேலும் ஒரு முற்றிலும் புதிய தேர்தல் வேண்டும் என்பதை யுஷ்செங்கோவ் எதிர்ப்பதற்கும் இவை உதவின.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினோ, யானுகோவிச்சிற்காக பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததோடு, மறுவாக்கிற்கான நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டனத்திற்கு உட்படுத்தியும் உள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, உக்ரைனுடைய ஜனாதிபதி மாஸ்கோவிற்கு விமானம் மூலம் சென்றிருந்தார். அங்கு புட்டினுடன் சேர்ந்து தொலைக்காட்சி புகைப்படக் கருவிகளுக்கு முன் பேட்டியளித்த அவர், மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கருத்திற்கு எதிராகக் கடுமையாக கருத்து தெரிவித்தார். ஒரு புதிய தேர்தல் நடத்தப்பட்டு, "ஒருவர் மூன்று, நான்கு அல்லது இருபத்தி ஐந்து தடவைகள் கூட, ஒரு கட்சி தனக்கு இணக்கமான வாக்குகளைப் பெறும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் போலும்" என்று புதிய தேர்தலுக்கான கோரிக்கை பற்றி புட்டின் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ரஷிய டுமா, (பாராளுமன்றம்), ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பியப் பாதுகாப்பு, ஒத்துழைப்பிற்கான அமைப்பு (OSCE) ஆகியவற்றை தோன்றியுள்ள அமைதியற்ற நிலையைத் தூண்டிவிடும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டும் தீர்மானம் ஒன்றை மிகப் பெரிய பெரும்பான்மையுடன் இயற்றியது. இந்த அமைப்புக்களின் தலையீடு "மிகப் பெரிய ஒழுங்கின்மை, குழப்பம், நாடு பிளவு பெறுதல்" போன்றவற்றிற்கு வழிகோலும் என்றும் "இதனால் உக்ரைனுக்கு மட்டும் இல்லாமல் ரஷ்யாவிற்கும், ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் சர்வதேச சமூகம் முழுவதிற்குமே தீவிரமான எதிர்மறை விளைவுகள் ஏற்படும்" என்றும் அது அறிவித்துள்ளது.

அதிகக் கடுமையான விமர்சனம் என்று இல்லாமலேயே, இதுவரை உக்ரைன் உச்ச நீதிமன்றம் அதன் அரசியல் சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது எனக் கூறுவதற்கு இல்லை. பெரும்பாலான நீதிபதிகள் தங்களுடைய நிலைப்பாட்டை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி குச்மாவின் தயவில்தான் கொண்டுள்ளதுடன், அவருடைய ஆட்சிக்கு விசுவாசமிக்க ஆதரவாளர்களாகத்தான் பணிபுரிந்துள்ளனர். இப்பொழுது அவர்கள் தங்களுடைய எஜமானருக்கு எதிராகத் திரும்பிவிட்டனர் என்பது, உக்ரைனின் ஆட்சி உயர் சிறுகுழுவிற்குள்ளேயே, கடந்த இரு வாரங்களில் நடந்துள்ள மிகக் கடுமையான பூசலின் பிரதிபதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைத்தான் குறிப்பிடுகிறது.

யானுகோவிச்சிற்கு ஆதரவாக உக்ரைன் தேர்தல் குழு தீர்ப்புக் கொடுத்தால் ஏற்க மாட்டோம் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த கொலின் பெளலும் பல ஐரோப்பிய அரசாங்கங்களும் பிழைக்கு இடமின்றித் தெளிவுபடுத்தியபின்னர் நாட்டு ஆட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கட்சி மாறிவிட்டனர். இவர்களில் இராணுவத் தலைவர்கள், உளவுத்துறை உயர் அதிகாரிகள், யானுகோவிச்சின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியிருந்த மத்திய வங்கியின் தலைவர் செர்ஜி டிஜ்போகோ போன்ற மற்ற மூத்த அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.

அதே நேரத்தில், அரசாங்க முகாமிற்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் தோன்றின. நாட்டின் கிழக்குப் பகுதியும், யானுகோவிச்சிற்கு வலுவான கோட்டை போல் இருந்த பகுதியுமான டான்பாஸ், யுஷ்செங்கோவ் ஜனாதிபதியானால் நாட்டில் இருந்து பிரிந்து சென்றுவிடுவதாக அசுறத்தல் கொடுத்தவுடன், தனக்குப்பின் வரவேண்டும் என்று கருதியிருந்த நபருக்கான ஆதரவைக்கூட ஜனாதிபதி குச்மா வெளிப்படுத்தப்பட்ட வகையில் குறைத்துக் கொண்டு விட்டார்.

நாடு துண்டாடப்படுவதை குச்மா தீவிரமாக எதிர்க்கிறார். அவருடைய தளமே Dnepropetrovsk என்னும் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில் நகரத்தில் உள்ளது; இங்கு உள்ள வணிக உயர் சிறு குழுவினர் டான்பாஸ் நகரத்தாருடன் போட்டியிடுபவர்கள் ஆவர். யானுகோவிச்சிற்கான ஆதரவை விலக்கக் கொண்டு அவர் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்; ஆனால் தன்னுடைய ஆதரவு சக்திகளைத் திரட்டிக் கொண்டு மறு அமைப்புச் செய்து கொள்ளுவதற்குப் போதுமான சூழ்நிலை வந்த பின்னர் அவ்வாறு மறுதேர்தல் வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

பெளலுடன் கூடவே, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவரான ஜோஸ் மானுவல் பர்ரோசோவும், ஐரோப்பிய ஒன்றிய குழு தலைவர் பீட்டர் பால்கென்டேவும் தங்களுடைய எதிர்க்கட்சிக்கான ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் கீவிற்கு ஒரு சமரசத் தூது குழுவை அனுப்பியுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெறியுறவு பிரதிநிதியான ஜேவியர் சோலானா மற்றும் போலந்து, லித்துவானியா நாடுகளின் ஜனாதிபதிகளான அலெக்சாந்தர் க்வாஸ்நீவ்ஸ்கியும், வால்டாஸ் ஆடம்குஸ் இருவரும் அடங்கியுள்ளனர்; இவர்கள் இருவரும் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான தொடர்புகள் வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தும் முக்கியஸ்தர்களாவர்.

ஜேர்மன் வெளியுறவு மந்திரியும் ஒரு புதிய தேர்தலுக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்; தலைமை நீதிமன்றம் தீர்ப்புக் கூற உள்ள நேரத்தில், ஐரோப்பிய பாராளுமன்றம், சர்வதேச பார்வையாளர்கள் பங்கு பெறும் ஒரு புதிய தேர்தல் ஒன்று, ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படவேண்டும் என்று ஒரு தீர்மானத்தையும் இயற்றியுள்ளது. முதல்தடவையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படலாம் என்ற கருத்திற்கான ஆதரவையும் தெரிவித்துள்ளனர்; இதுகாறும் அவர்கள் அத்தகைய கருத்திற்கு ஆதரவை ஒதுக்கித்தான் வைத்திருந்தனர்.

மிகக் கடுமையான உறையும் குளிர் சூழ்நிலையில், பல நாட்கள் கீவின் மத்திய பகுதியில் முகாமிட்டிருந்த யுஷ்செங்கோவிற்கு ஆதரவு கொடுத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பை "ஜனநாயகத்திற்கான வெற்றி" என்று பாராட்டி களித்தனர். ஆனால் யுஷ்செங்கோவிற்கான வெற்றியை கொடுத்த இம்முடிவு ஜனநாயகம் மலர்வதற்கு வகைசெய்யும் என்று உண்மையில் நம்புகிறவர்கள் மிக விரைவிலேயே அத்தகைய மாயையான தோற்றங்களில் இருந்து விடுவிக்கப்படுவர். பொருளாதாரத்தில், புதிய தாராளக் கொள்கைகள் நிறைந்த போக்கில், ஒரு முற்போக்கான "சீர்திருத்தம்" என்னும் யுஷ்செங்கோவின் திட்டம், உக்ரைனிய சமுதாயத்தில் ஒரு ஜனநாயக வளர்ச்சிக்கு அடிப்படை எதையும் கொடுக்கவில்லை.

போலந்து, ஹங்கரி இன்னும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், இதே போன்ற கொள்கைகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கைத் தரங்களைப் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதோடு மட்டும் இல்லாமல், உண்மையான ஜனநாயக விழைவுகளையும் பெரும் ஏமாற்றத் திகைப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இந்த நாட்டுத் தேர்தல் முடிவுகள் பொது நெருக்கடியில் இருந்து இலாபம் பெறக் கூடிய தீவிர வலது கட்சிகளுக்குத்தான் நன்மைகள் என்று அந்நாடுகளை ஆழ்த்தியுள்ளன.

உக்ரைனுடைய பொருளாதாரத்தில், பெரும் பிடிகளை இறுக்கிக் கொண்டிருக்கும் தன்னல உயர்குழுக்களை, யுஷ்செங்கோ எதிர்த்துப் போராடுவார் என்று நிலவி வரும் கருத்தும் இதேபோல் போலியான தோற்றத்தில் ஏற்பட்டதுதான். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவும் வகையில் இவரே அவர்களுக்கு, தான் மத்திய வங்கியின் தலைவராக இருந்த காலத்தில் பெரும் பங்கைக் கொண்டு செயலாற்றியிருக்கிறார்.

இதற்கு மாறாக, உக்ரைனில் ஒரு புதிய ஆட்சியை நிறுவுவதின் விளைவு, மேற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இணங்கி நடக்கும் தன்மையுடைய ஆட்சியை நிறுவதல், ஐரோப்பாவின் சமபலநிலை (balance of power) கருத்திற்கு மிக முக்கியமாக இருப்பதுடன், வெடித்து எழக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளதும் ஆகும்.

நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பு, டான்பாஸ் பகுதியின் ஆளுனர்கள் தன்னாட்சி பொறுப்பைக் கொள்ளும் தேவைகளுக்காக ஜனவரி மாதம் ஒரு வாக்கெடுப்பு நடத்தும் திட்டம் உள்ளது என்று அறிவித்தனர்; யுஷ்செங்கோ தேர்லில் வெற்றி பெறக்கூடுமானால், இந்த அச்சுறத்தலை அவர்கள் திரும்பப் பெறுவார்களா என்பது தெளிவாக இல்லை. இப்பொழுது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு உட்பட்டு இருக்கும் எழுச்சிப் பகுதியான டீரான்ஸ்நிஸ்ட்ரீன் பகுதி பற்றிய தீர்க்கப்படாத பூசலும் மீண்டும் வெடித்து எழக்கூடும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு, ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் கடுமையான எதிர்க் கருத்தைக் கொண்டுள்ளார். அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்களைக் கண்டனத்திற்குட்படுத்தி அவை ஷேச்சென் பகுதிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளதோடு, "அவை மிக இழிவான முறையில் இரட்டைவேட முறைகளைக் காட்டிவருகின்றன" என்றும் கூறியுள்ளார்.

நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியபோது புட்டின், புது தில்லியில் இருந்தார். Hindu செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் "பயங்கரவாதத்தின் தூதர்களுக்கு" இணக்கம் தரும் வகையில் நடந்து கொள்ளுகின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரு அசாதாரணமான, தீவிர முறையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஈராக் கொள்கையையும் அவர் தாக்கினார். முன்பு ஆப்கானிஸ்தானத்தில் இருந்ததுபோலவே, ஈராக் "பயங்கரவாதத்தை வளர்க்கும் இடமாக மாறிக்கொண்டு வருகிறது, புதிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சேர்பியா, ஜோர்ஜியா ஆகிய நாடுகளிலும் உக்ரைனில் பயன்படுத்தப்பட்ட வகைகளைப் போன்ற முறைகளைக் கொண்டிருந்த ஆட்சிமுறை மாற்றத்திற்காகக் கொள்ள நினைக்கும் வாஷிங்டனுடைய நடவடிக்கைகளையும், மத்திய ஆசியாவில் பழைய சோவியத் குடியரசுகளிலும் அமெரிக்கப் படைகள் குவித்து வைத்திருப்பதையும் தொடர்ந்து, மாஸ்கோ கூடுதலான அழுத்தங்களுக்கு தான் உட்பட்டுள்ளதை உணர்ந்துள்ளது. சமீப ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு நெருக்கமாகப் பழைய சோவியத் குடியரசுகளைக் கொண்டு வரும் முயற்சியில் புட்டின் கடுமையாக ஈடுபட்டுள்ளார். வெள்ளை ரஷ்யா, உக்ரைன், காசகஸ்தான் ஆகிய இடங்களில் இக்கொள்கையில் மையத் தானத்தைத்தான் புட்டின் காட்டியுள்ளார். ஆனால் கீவில் ஆட்சி மாற்றம் என்பது அவருடைய இந்தப் போக்கை தகர்த்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புவியியல்-அரசியல் மூலோபாய வல்லுனர்களில் மிக முக்கியமானவரான, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzsezinski, சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய வெளிநாட்டுக் கொள்கையில் உக்ரைன் கொண்டுள்ள மிக முக்கியமான பங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். பெரும் சதுரங்கப் பலகை: அமெரிக்க தலைமையும் அதற்கான புவி-அரசியல் மூலோபாயக் கட்டாயங்களும் (The Grand Chessboard: Americal Primacy and Its Geostgrategic Imperatives) என்ற புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது: "பால்டிக் நாடுகள், போலந்து ஆகியவை இல்லாவிடினும், உக்ரைன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு உறுதிப் போக்கு உடைய ஐரோப்பிய-ஆசியப் பேரரசின் (யூரேசியா) தலைமைத் தன்மையைக் பெற முயற்சிக்க முடியும். ...ஆனால் உக்ரைன், மற்றும் அதன் 52 மில்லியன் சக ஸ்லாவியர்களுடைய துணை இல்லாமல், யூரேசியப் பேரரசை மறுபடியும் அமைப்பதற்கு மாஸ்கோ மேற்கொள்ளும் எந்த முயற்சியும் ரஷ்யாவை ஸ்லாவ் அல்லாத, சமய எழுச்சி, தேசிய எழுச்சி கொள்ளக் கூடிய பகுதி மக்களுடன் நீண்ட காலப் பூசல்களுக்குள் பிணைத்துவிடக்கூடும்; அதையொட்டிய நிலைப்பாட்டில்தான் சேச்சேனியாவுடனான போர் ஒரு முதல் உதராணமாக இருக்கிறது என்று கூற முடியும்."

சமீபத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு மாஸ்கோ எந்தவகையில் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. சர்வதேச நெருக்கடிகளும் பூசல்களும் தீவிரமாக, வன்முறைப் பூசல்களுகான திறனைக் கொண்டு வெடிக்கும் தன்மையதாக இருப்பது தவிர்க்கமுடியாதது எனத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் அநேகமாக கீவில் ஏற்படக் கூடிய ஆட்சிமாற்றம் புஷ் நிர்வாகம் இன்னும் கூடுதலான தீரச்செயல் காட்டும் வகையில் தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையை செயல்படுத்தும் வகையைக்காண பெருக்கிக் கொள்ளலாம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைக்கருகே உள்ள ஈரான் அடுத்த இலக்காகவும் அமையக் கூடும்.

See Also :

உக்ரைனில் பூசலுக்குட்பட்ட தேர்தலையொட்டி பெரும் சக்திகளின் போட்டிகள் வெடிக்கின்றன

Top of page