World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China: riot in Guangdong province points to broad social unrest

சீனா: குவாங்டொங் மாகாண கலவரம் பரந்த சமூக கொந்தளிப்பை சுட்டிக்காட்டுகிறது

By John Chan
30 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு குவாங்டொங் மாகாணத்தைச்சேர்ந்த Jieyang நகரத்தில் நவம்பர் 10 இல் 30,000 மக்கள் ஈடுபட்ட கலவரங்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சர்வாதிகார ஆட்சிக்கும் பொருளாதார வரிவிதிப்புக்களுக்கும் சீன மக்களின் பரந்த தட்டினரிடையே விரோதப்போக்கு பெருகிவருவதை எடுத்துக்காட்டுகின்றது.

ரேடியோ ப்ரீ ஏசியா தந்துள்ள தகவலின்படி ஒரு கிராமப்பெண்மணிக்கும், ஒரு சுங்கச்சாவடியிலுள்ள ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் காரணமாக அந்தக்கலவரம் வெடித்தது. Xianqiao நகரமைப்பிற்கும் Rongcheng மாவட்டத்திற்கும் இடையில் ஒரேபால இணைப்பில் அந்த சுங்கசாவடி உள்ளது. அந்தப்பெண் தனது மோட்டார் சைக்கிளுக்கு இரண்டு யான்கள் கட்டணம் வசூலித்தார்கள் என்று புகார் கூறியதும் அந்த சாவடி ஊழியர்கள் அவரைத்தாக்கினர்.

இந்த நிகழ்ச்சி மிகவேகமாக ஒரு ஆவேசக்கண்டனத்தை தூண்டிவிட்டது. சீனா முழுவதிலும் சாலைகள் மற்றும் பாலங்களில் உள்ளூர் அரசுகள் தங்களது வருமானத்திற்கு உறுதுணையாக சுங்கத்தீர்வைகளை வசூலிப்பதை பெருமளவில் பயன்படுத்திக் வருகின்றனர். இது ஏற்கெனவே பல்வேறு வகைப்பட்ட கடுமையான வரி விதிப்புக்கள் மற்றும் தீர்வைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளுடனான மோதல்களுக்கு வழி வகுக்கும் ஓர் அடித்தளமாக உள்ளது.

அந்தப்பெண் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் விவசாயிகள் திரண்டு சென்று அந்த சுங்கசாவடியில் புகுந்து சொத்துக்களை சூறையாடி, பெட்ரோல் ஊற்றிக்கொளுத்தினர். அந்த சுங்கச்சாவடியை காப்பாற்றுவதற்காக விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வாகனங்களை பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனங்கள் திரும்பிச்செல்லும்போது தற்செயலாக ஒரு வயதானவர் கொல்லப்பட்டும், இரண்டு குழந்தைகள் காயமும் அடைந்தனர், அதனால் மேலும் மோதல்கள் தூண்டிவிடப்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டன மற்றும் ஏழு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

நள்ளிரவில் உள்ளூர் கட்சித்தலைவர் ஒருவர் தலைமையில் வந்த நூற்றுக்கணக்கான போலீசாரும், இணை இராணுவப்பிரிவுகளும் அந்தக்கூட்டத்தை கலைத்து விரட்டின. இந்த மோதலில் பலர் காயமடைந்தனர் மற்றும் டசின் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த கலவர தலைவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் போலீஸ் அலுவலகம் மறுநாள் எச்சரித்தது.

அண்மை மாதங்களில் சீனாவில் வெடித்துள்ள பெருமளவிலான வன்முறை மோதல்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். Sichuan மாகாணத்தில் ஒரு புனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுப்பதற்காக கட்டாயமாக தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 100,000 விவசாயிகள் மேற்கொண்ட ஒரு கிளர்ச்சி மற்றும் Wenzhou அரசாங்க கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புகுந்து கண்டனப்பேரணி நடத்தியது ஆகியவை இந்த நிகழ்ச்சிகளில் அடங்கும். இந்த இரண்டு கண்டனப் பேரணிகளும் பாதுகாப்புப்படைகளின் கொடூராமான அடக்குமுறைகளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. நடைபெற்ற கண்டப்பேரணியில், 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி பெருகிவரும் கண்டனப்பேரணிகளுக்கு பின்னணியாக அமைந்திருப்பது என்னவென்றால் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட பரவலான பொருளாதார மறுசீரமைப்பினாலும், பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளின் பாய்ச்சலாலும் ஏற்பட்ட தாக்கங்களால் ஆகும். அரசாங்கத்திற்கு சொந்தமான தொழிற்துறைகளிலிருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் சமூக ஏற்றத்தாழ்வுகள் பாரியளவிற்கு வளர்ந்துள்ளன, விவசாயிகள் முதலாளித்துவ சந்தையில் போட்டியிட்டு சமாளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, பெருகிவரும் வரிகளை கட்டவேண்டியிருக்கிறது மற்றும் சீனாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மலிவுக்கூலி தொழிற்கூடங்களில் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த கிராம்ப்புற மக்கள் தொழிலாளர்களாக பணியாற்றுகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை உயர்ந்து கொண்டுவருவதாலும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், சீனா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டுமே தங்களது இலாப வரம்புகளுக்காக, ஊதியங்களை வெட்டவும் வேலை நிலைமைகளை கடுமையாக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இறக்குமதிகள் பெருகிவருவதாலும், ஊகபேரக்கடன்கள் குவிந்து கொண்டிருப்பதாலும் பண வீக்கம் அதிகரித்து மில்லியன் கணக்கான மக்களது வாழ்க்கைச்செலவினம் பெருகியுள்ளது.

அத்தகைய நிலைகள் சமூக கொந்தளிப்புக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி சென்ற ஆண்டு கண்டனப்பேரணிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து 58,000 இற்கு மேற்பட்ட தனித்தனி சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அதில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர். சீனாவின் மிக வேகமாக வளரும் ஏற்றுமதி மண்டலமான---- குவாங்டோங் மாகாணத்தில் அண்மையில் நடந்துள்ள கலவரம்-- சமூக கொந்தளிப்பு பின்தங்கிய உள்நாட்டு மாகாணாங்களில் மட்டுமல்ல ஒப்புநோக்கும்போது செல்வச் செழிப்புள்ள கடற்கரை பகுதிகளிலும் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது.

குவாங்டோங் மாகாணத்தில் தொழிலாளர்களிடையே பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றது தொடர்பான செய்திகள் வந்திருக்கின்றன. நவம்பர் ஆரம்பத்தில், Dongguan பகுதியிலிருந்து இயங்கும் ஒரு வீட்டு பாவனைப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையைச்சேர்ந்த ஏறத்தாழ ஆயிரம் ஊழியர்கள் தொழிற்சாலையின் கதவை மூடிவிட்டு வாரத்தில் ஒருநாள் விடுமுறையும், ஊதிய உயர்வும் கோரினர்.

நவம்பர் 12 இல் ஒரு Shenzhen பகுதியிலிருந்து இயங்கும் ஒலிபெருக்கி தயாரிக்கும் நிறுவன தொழிலாளர்கள் திவாலாகிக் கொண்டிருக்கும் அந்த நிறுவன தொழிலாளர்களது சம்பள பாக்கியான 200000 யான்களை தரமுடியுமா என்ற அச்சத்தின் காரணமாக தங்களது ஹொங் கொங் நாட்டு முதலாளிகள் இருவரை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டனர். Shenzhen இல் உள்ள ஒரு எலக்ரோனிக் நிறுவனத்தில் நடைபெற்ற வேலைநீக்கத்தை கண்டித்து தொழிலாளர்கள் நடத்திய ஒரு கண்டனத்தில் பாதுகாப்புக்காவலர்களோடும், போலீசாரோடும் மோதுகின்ற நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஒரு பிரதான தைவான் காலனி தாயரிப்பு நிறுவனமான ஸ்டெல்லாவில் நடைபெற்ற ஒரு கண்டனம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற விசாரணையில் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டது உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரின்ன் உணர்வுகளை எதிரொலிப்பவை. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வந்துள்ள ஒரு செய்தியின்படி அந்தத்தொழிலாளர்களுக்கான வக்கீல் Chen Nanliu நீதிமன்றத்தில் தமது தரப்புவாதத்தை எடுத்துவைக்கும்போது செலுத்தப்படாத ஊதியம் மற்றும் மோசமான பணிநிலைகளுக்கு எதிரான எதிர்ப்பு நியாயமானவைதான் என்று எடுத்துரைத்தார். ''நமது அரசாங்கம், நமது சமூகத்தில் இன்றையதினம் மிக அப்பட்டமான சமூக அநீதியை அனுமதிப்பதுடன், ஊக்குவிக்கிறது. எனவே மிகத்தெளிவான மற்றும் மிக நெருக்கடியான சமூகக்காரணம் ஒன்று இருந்தாதல்தான் நாங்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கையில் இறங்கினோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் சென் தமது தரப்பு இறுதிவாதத்தை எடுத்துவைக்கும்போது காலணி செய்யும் தொழிலாளர்கள் இன்றையதினம் சந்தித்துக்கொண்டிருக்கிற நிலைப்பாடுகள் 1949 புரட்சிக்கு முன்னர் கோமின்டாங் ஆட்சியில் சீன தொழிலாளர் நிலையோடு ஒப்புநோக்கினார். ''கடந்தகாலத்தைபோலல்லாது, இன்றையதினம் கம்யூனிஸ்ட்க் கட்சி இரத்தவெறிகொண்ட முதலாளித்துவவாதிகளோடு தோளோடு தோள்சேர்ந்து கொண்டு தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்'' என்று சென் அறிவித்தார். இப்படி பகிரங்கமாக நீதிமன்றத்தில் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது ஸ்ராலினிச ஆட்சிக்கு தொழிலாளர்களிடையே நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பை எடுத்துக்காட்டுகின்ற ஓர் அளவுகோலாகும்.

சீனாவில் பெருகிவருகின்ற கண்டனங்கள் பெய்ஜிங்கில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் கவலைகளை அதிகரித்துள்ளது. பன்னூறு பில்லியன் டொலர்களை சீனாவிலுள்ள மலிவு உழைப்பு ஆலைகளில் தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்வதற்காக வெளிநாட்டு முதலீடு செய்திருப்பவர்கள் அந்த நாட்டில் மிகப்பரவலாக உருவாகிக்கொண்டுவரும் சமூக மாற்றங்களில் வெடித்துச் சிதறும் விளைவுகள் குறித்து பீதி கொண்டிருக்கின்றனர். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்குள்ளேயே, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான புதிய சமூக அடித்தங்களை எங்கு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக மிகக்கடுமையான விவாதங்கள் மிகப்பெருமளவில் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

பெய்ஜிங்கோ அல்லது அதன் வெளிநாட்டு ஆதரவாளர்களோ சீனாவின் கோடிக்கணக்கான மக்களை எதிர்நோக்கியுள்ள, ஆழமாகிக்கொண்டுவரும் சமூக பிரச்சனைகளுக்கு பலாத்கார போலீஸ் ஒடுக்கு முறையைத்தவிர வேறு எந்த பதிலையும் தரமுடியாது.

Top of page