World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Power struggle in Ukraine continues

உக்ரைனில் அதிகாரப் போராட்டம் தொடர்கின்றது

By Peter Schwarz
8 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 21-ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முதலில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து உக்ரைன் உச்சநீதிமன்றம் அந்த தேர்தலை இரத்து செய்தது, டிசம்பர் 26-ல் மறு வாக்குப்பதிவிற்கு கட்டளையிட்டிருப்பதை தொடர்ந்து எதிர் முகாம்களுக்கிடையேயான மோதல்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

வாரக்கடைசியில் எதிர்கட்சி தலைவர் விக்டர் யுஷ்செங்கோ, தனது ஆதரவாளர்கள் தலைநகரில் தங்கியிருக்க வேண்டுமென்றும் தங்களது ஆர்பாட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார், கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கண்டனப்பேரணிகளை நடத்திவருகின்றனர். பிரதமர் யனுகோவிச்சின் அரசாங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஒரு புதிய தேர்தல் குழு அமைக்கப்பட்டு, ஒரு புதிய தேர்தல் சட்டம் நிறைவேற்றப்படுகின்றவரை கண்டனப்பேரணிகள் தினசரி நடந்து கொண்டேயிருக்கும் என்று அவர் அறிவித்திருக்கிறார். வாக்காளர்கள் தாங்கள் வாழும் இடத்திலேயே வாக்களிக்கின்ற ஏற்பாட்டை செய்யவேண்டும் என்பது யுஷ்செங்கோவின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

யுஷ்செங்கோவின் ஆதரவாளர்கள் பல்வேறு அரசாங்க கட்டடங்களைத் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். சென்றவாரம் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த யனுகோவிச்சின் அரசாங்கத்தை, ஜனாதிபதி லியோநிட் குஸ்மா இதுவரை பதவிநீக்கம் செய்ய மறுத்தே வருகிறார். அரசாங்கத்தரப்பு முகாமின் ஜனாதிபதி வேட்பாளர் யனுகோவிச் ஆவார்.

எதிர்கட்சி கோரிவரும் தேர்தல் சட்டமாற்றத்திற்கு இதுவரை குஸ்மா மறுத்தே வருகிறார். எதிர்கால ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு உடன்பாடு ஏற்படுமானால் அவர் அதற்கு உடன்பட தயாராக உள்ளார்.

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக்கொள்கை தலைவர் Javier Solana, போலந்து ஜனாதிபதி Alexander Kwasinewski, லித்துவேனிய ஜனாதிபதி Valdas Adamkus ஆகியோர் தலையிட்டு ஒரு சமரச உடன்பாடு காண்பது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்வது, ஒரு புதிய தேர்தல் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் அரசியல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது ஆகியவற்றை இணைத்து, அனைத்து தரப்பும் இணக்கம் தெரிவிக்கின்ற ஒரு திட்டத்தை உருவாக்குவது என்ற வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

எப்படியிருந்தபோதும் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திங்களன்று கட்சிகள் தனித்தே நின்றன மற்றும் குஸ்மா ஒரு புதிய தேர்தல் குழுவை அமைக்கத்தயாராக இருப்பதாக அறிவித்தார். ஒரு சமரசத்தை உருவாக்குவதற்காக ஒரு ''சமரச இணக்க குழு'' நியமிக்கப்பட்டிருக்கிறது.

தகராறுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அணிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. பகிரங்கமாகவும், மறைமுகமாகவும், பேச்சுவார்த்தைகள் மற்றும் பேரங்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உக்ரேனில் நடைபெற்றுக்கொண்டுள்ள அதிகாரப் போராட்டத்திற்கும், ஜனநாயகம் அல்லது சுதந்திர தேர்தல்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என்பதை வலியுறுத்திக்காட்டுகின்ற வகையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கின்றன. மாறாக ஆளும் செல்வந்த தட்டினரின் பல்வேறு பிரிவுகளுக்கிடையிலும் மற்றும் அவற்றை ஆதரிக்கின்ற வல்லரசுகளுக்கிடையிலும், நடைபெற்றுக்கொண்டிருக்கிற மோதல்களை எதிரொலிப்பதாகத்தான் பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முழு ஆதரவை யுஷ்செங்கோ பெற்றிருக்கிறார், அவர் வெற்றிபெறுவாரானால், அவைகள் உக்ரைன் மீது தங்களது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும்- அதுதான் வாஷிங்டனின் குறிப்பான நோக்கமாகும். ரஷ்யாவும் அதன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனும், யனுகோவிச்சை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.

சென்ற வெள்ளிக்கிழமை எதிர்கட்சிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்பளித்த பின்னர், யனுகோவிச் மிகப்பெருமளவில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி குஸ்மாவின் ஆதரவு அடித்தளம் தொழிற்துறை நகரமான Dnepropetrovsk வில் அடங்கியிருக்கிறது, எனவே அவர் தனது முன்னாள் ஆதரவாளர் பக்கத்திலிருந்து தெளிவாக தன்னை விடுவித்து கொண்டிருக்கிறார். நியூயோர்க் டைம்ஸிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், யானுகோவிச் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூட கூறியிருக்கிறார், புதிய வாக்குப்பதிவை இழிவுபடுத்துகிற வகையில் யுஷ்செங்கோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வகைசெய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

குஸ்மாவின் மகளை திருமணம் செய்து கொண்டிருக்கும் ஒருசிலவராட்சியில் ஒருவரான Victor Pinchuk, குஸ்மாவின் சொந்த நகரமான Dnepropetrovsk-ல் ஒரு முன்னணி தலைவராவார். அவர் எண்ணெய் குழாய்கள் எஃகு மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் அடங்கிய ஒரு சாம்ராஜியத்தையே தன்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரது சொத்துக்களின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள், உக்ரைனிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் என்று கருதப்படுகிறார். இதுவரை Pinchuk, யானுகோவிச்சை ஆதரித்து வருகிறார், அதே நேரத்தில் எதிர் அணியை ஆதரிக்கவும் முயன்று வருகிறார்.

Der Spiegel செய்தி சஞ்சிகை வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி, நவம்பர் 21 தேர்தலுக்கு முன்னர் Pinchuk அழைப்பை ஏற்று உக்ரைன் நிலவரம் தொடர்பாக தங்களது சொந்த மதிப்பீட்டை செய்யும் நோக்கத்தோடு ஹென்றி கிஸிங்கர், மூத்த ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் சொரஸ் மற்றும் Zbigniew Brzezinski ஆகியோர் வந்திருந்தனர். யுஷ்செங்கோவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் சொரஸ் ம், Brzezinski-ம் தீவிரமாக ஈடுபட்டனர். சொரஸ் பிந்தைய பிரச்சாரத்திற்கு ஓரளவு பண உதவியும் செய்தார்.

தனது தொலைக்காட்சி அலைவரிசைகள் எதிர்கட்சி ஆர்பாட்டங்களை ஒளிபரப்புவதற்கு Pinchuk அனுமதித்தார் மற்றும் எதிர்கட்சி பேரணிகளுக்கு நேரில் விஜயம் செய்தார். அதே நேரத்தில், அவரது மாமனார் குஸ்மா எதிர்கால ஜனாதிபதி யுஷ்செங்கோவின் அதிகாரங்களை கட்டுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று குஸ்மா தற்போது கோரி வருகிறார். அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புள்ளதாக இருக்கவேண்டுமே தவிர ஜனாதிபதிக்கு கட்டுப்பட்டதாக செயல்படக்கூடாது என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் குஸ்மாவின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக எதிர்கட்சிகள் எழுப்பின. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் எதிர்கட்சி தேர்தல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தையும் மாற்றுவதற்கு தயாராகி இருப்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது யுஷ்செங்கோ ஜனாதிபதி பதவியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருப்பதால் அவர் தனது முந்திய நிலைப்பாடுகளை கைவிட்டுவிட்டார். நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றம் தனக்கு தடைக்கல்லாக செயல்படக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.

இந்தப்பிரச்சனை சோசலிஸ்ட் கட்சித்தலைவர் அலெக்சாண்டர் மோரோஸுடன் நேரடியாக, பகிரங்கமாக மோதலில் ஈடுபடுகின்ற நிலையை உருவாக்கிவிட்டது. மோரோஸ் முதல் சுற்றுவாக்கு பதிவில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார், யுஷ்செங்கோ மற்றும் யானுகோவிச்சிற்கு அடுத்து மூன்றாவதாக வந்தார். இரண்டாவது சுற்று போட்டியில் அவர் தனது ஆதரவாளர்களை யுஷ்செங்கோவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் மோரோஸ் ஆதரவாளர்கள் குறிப்பாக நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியில் வாக்களித்ததால் யுஷ்செங்கோ கணிசமான அளவிற்கு பயனடைந்தார்.

தற்போது மோரோஸ், யுஷ்செங்கோ தனது முந்தைய உறுதிமொழிகளை கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ''இதன் பொருள் என்னவென்றால் அரசியல் சட்டத்திருத்தங்கள் எதுவும் வராது, உக்ரைனில் மன்னராட்சி வடிவம் நீடிக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

குஸ்மா, Pinchuk மற்றும் மோரோஸ் ஆகியோரின் கட்சி முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவானதாகும், உக்ரைனில் புதிய பணக்காரர்கள் பிரிவை சார்ந்தவர்கள் இந்தத் திடீர் பணக்காரர்கள் ரஷ்யாவிற்கும், மேற்கு நாடுகளுக்குமிடையில் ஒரு நடுவழியை பின்பற்ற பாரம்பரியமாக முயன்றுவருகின்றனர். குஸ்மா ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் நெருக்கமான உறவுகளை நிலைநாட்டிவருகிறார், ஆனால் அதே நேரத்தில் உக்ரைனை நேட்டோவுடன் இணைக்க முயன்று வருகிறார் மற்றும் போலந்து படைப்பிரிவின் ஓர் அங்கமாக ஈராக்கிற்கு உக்ரைன் துருப்புக்களை அனுப்பினார்.

உக்ரைனில் உருவாகியுள்ள புதிய சொத்துடைமை வர்க்கங்களை சேர்ந்த பிரிவுகளால் யுஷ்செங்கோ ஆதரிக்கப்பட்டு வருகிறார், இவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை நோக்கி உக்ரைன் நடைபோட வேண்டுமென்று விரும்புகின்றனர். யுஷ்செங்கோவிற்கு மிகப்பெருமளவில் நன்கொடைகளை வழங்கிவருகின்ற Pyotr Poroschenko, Ukrprominvest கம்பெனியின் தலைவர் இந்தக் கம்பெனி உணவு விடுதிகள், துறைமுகத்துறைகள், பொறியியல் தொழிற்துறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவனமாகும். அவருக்கு நிதியளிக்கின்ற மற்றொரு வளமான David Schwania, அவர் அணுமின்சாரம நிலையதொழிலில் ஈடுபட்டிருப்பவர். யுஷ்செங்கோவுடன் சேர்ந்து எதிர்கட்சிக்கு தலைமை வகித்து நடத்தும் Yulia Tymoshenko இயற்கைவாயு வர்த்தகத்தின் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதித்தவர்.

அமெரிக்காவிடமிருந்து பாரியளவு, ஆதரவு திரண்டுவருவதால் யுஷ்செங்கோ, வலுவடைவதாக உணர்ந்து தனது நிலையை மாற்றிக்கொண்டு தனக்கு ஏகபோக அதிகாரம் வேண்டுமென்று கோருகிறார். அப்படிச்செய்வதன் மூலம் நாட்டையே துண்டாடுவதாக அவர் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்.

யுஷ்செங்கோவின் கொள்கைக்கு Donbass பிராந்தியத்தில் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது, அங்குள்ள மக்களில் 40- சதவீதம் பேர் ரஷ்ய வம்சாவழியை சேர்ந்தவர்கள் Donetsk பகுதியில் கண்டனப்பேரணி நடத்தியவர்கள் ஏந்திச்சென்ற பதாகைகளில் ''நாங்கள் எங்களது ஆன்மாக்களை, புஷ்ஷிற்கு விற்கமாட்டோம்'' என்ற முழக்கங்கள் அடங்கியிருந்தன.

மேற்கு நாட்டு ஊடகங்கள் கூறுவதை போன்று அந்த நிலைப்பாடு நாட்டின் கிழக்கு பகுதியில் அதிகாரத்தில் இருப்பவர்களது பிரச்சாரத்தின் ஒரு விளைவு அல்ல. Donbass பிராந்தியம் முற்றிலுமாக நிலக்கரி மற்றும் எஃகு தொழிற்துறைகளை நம்பியிருக்கிறது மற்றும் ரஷ்யா தான் அத்தகைய பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தையாகும். யுஷ்செங்கோ பதவிக்கு வருவாரானால் தங்களது வேலைவாய்ப்புக்கள் பறிபோய்விடுமோ என்று பல தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

ஜனவரி ஆரம்பத்தில் அந்த பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமை தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அதில் ''ஆதரவாக'' மக்கள் வாக்களிப்பார்களானால் முன்னாள், யூகோஸ்லாவிய பிளவுபட்டதை போன்றதொரு நிலைமை இங்கும் உருவாகிவிடும்.

அதே நேரத்தில், இந்த பிராந்திய ஒருசிலவராட்சியர்கள் ரஷ்யாவுடன் அதிக நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர். சோவியத் ஒன்றியம் சிதைந்துவிட்ட நேரத்தில் இந்த பிராந்தியம் பிரிந்ததால் இவர்கள் செல்வந்தர்கள் ஆனார்கள் எனவே மாஸ்கோவுடன் மிதமிஞ்சிய நெருக்கமான உறவுகள் உருவாகுமானால் தங்களது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென்று அவர்கள் அஞ்சுகின்றனர். Rinat Achmetov உக்ரேனிலேயே மிகப்பெரும் பணக்காரர் அவர் நிலக்கரி மற்றும் எஃகு சாம்ராஜிய அதிபதி அவர் தனது ஆதரவாளரும் தனக்கு வேண்டியவருமான யனுகோவிச் தன்னாட்சி கோரிக்கையை விடுத்திருப்பது குறித்து மிக ஆவேசமாக எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கீவ் இல் ஆட்சி மாற்றம் ஏற்படுபோது தங்களது செல்வம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழியை பெறுவதற்கு ஒருசிலவராட்சியினர் விரும்புகின்றார்கள். இதுவேதான் Dnepropetrovsk-ன் ஒருசிலவராட்சியினருக்கும் பொருந்தும். இவர்களது நிபந்தனைகளுக்கு உடன்படுவது யுஷ்செங்கோவிற்கு அதிக சங்கடம் இருக்கப்போவதில்லை. Der Spiegel தனது நடப்புவார இதழில் எழுதியிருப்பதைப் போல் ''குஸ்மாவிற்கு பொதுமன்னிப்பு, அவரை சுற்றியுள்ளவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற ஒப்பந்தம் மற்றும் அவர்கள் குவித்துவிட்ட செல்வத்திற்கு ஒரு அரவம் காட்டாத உறுதிமொழி ஆகியவை, எதிர்கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்று கருதுவது அர்த்தமற்றது''.

Top of page