World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Chile's ex-dictator Pinochet tied to multi-million-dollar payoffs

சிலி நாட்டின் பழைய சர்வாதிகாரி பினோசே பல மில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் பிணைந்துள்ளார்

By Bill Van Auken
11 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

ரிக்ஸ் வங்கிக்கு (Riggs Bank) எதிராக பல பணமாற்றங்கள், ஊழல் குற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த அமெரிக்க விசாரணைகளில் இருந்து வரும் தொடர் வெளிப்படுத்தல்கள், சிலியின் பழைய சர்வாதிகாரியான ஒகுஸ்டோ பினோசே, பல மில்லியன் டாலர்கள் பெறுமான பல சட்டவிரோத பணப்பட்டுவாடா பெற்றதை மறைமுகமாகச் சுட்டுகின்றன.

டிசம்பர் 7ம் தேதி நியூ யோர்க் டைம்சில், பினோசே $12.3 மில்லியனை "அன்பளிப்பாகவும்", "பணிநிதியாகவும்" அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டார் என்று வெளியிட்டிருந்த அறிக்கையை அடுத்து, சிலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், ஓர் அதிகாரபூர்வ விசாரணைக்கு உத்தரவு இட்டது. அந்த நாளிதழ், சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சால்வடோர் அலன்டேயை அகற்றிய இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பிற்கு மறு ஆண்டான 1974ம் ஆண்டிலேயே இத்தகைய பணங்களை அவர் பெறத்தலைப்பட்டு விட்டார் என்றும், இப்பழக்கம் அவர் அதிகாரத்தை துறந்து 7 ஆண்டுகளான பின்னர் 1997 வரையில் தொடர்ந்திருந்தது என்றும் கூறியுள்ளது. 1998 வரை அவர் சிலியின் இராணுவப் படைகளின் தலைவராக இருந்து வந்தார்.

சிலியின் பாதுகாப்பு அமைச்சகம் ரிக்சிற்கு கொடுத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் தன்னுடைய அறிக்கை உள்ளதாக டைம்ஸ் கூறியிருக்கிறது; வங்கி கணக்குகளில் பழைய சர்வாதிகாரி பலவித வங்கிக் கணக்குகளை கொண்டிருந்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. வாஷிங்டனை தளமாக உடைய ஒரு செல்வாக்குடைய வங்கியை பற்றி செனட்டு மன்றத்தின் விசாரணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது ரிக்ஸ் இவற்றை அதற்குக் கொடுத்திருந்தது.

இந்த ஆவணங்கள் பழைய சர்வாதிகாரி "அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து 1976ல் 3 மில்லியன் டாலர்களைப் பெற்றார் என்றும் மற்ற ஆண்டுகளில் பராகுவேயில் இருந்து 1.5 மில்லியன் டாலர்கள், ஸ்பெயினில் இருந்து 1 மில்லியன் டாலர்கள், சீனாவில் இருந்து 2.5 மில்லியன் டாலர்கள், பிரிட்டன், மலேசியா, பிரேசில் ஆகியவை இணைந்து அளித்த 3 மில்லியன் டாலர்கள் ஆகியவற்றைப் பெற்றார்" என்று காட்டுவதாகச் செய்தித்தாள் கூறியுள்ளது.

ரிக்ஸ் வங்கிக்கு அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பியிருந்து, செனட் குழுவால் பெறப்பட்ட ஒர் அறிக்கையில், 1974க்கும் 1976க்கும் இடையில் அமைச்சரக வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து வெளிநாட்டுப் "பயணச் செலவுகளுக்காக" பினோசே 6 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகப் பெற்றுக்கொண்ட குறிப்பைக் காட்டிய அறிக்கை முதுபெரும் சிலி நாட்டு பத்திரிகையாளர் பாட்ரீசியா வெர்டுகோவால் வெளியிடப்பட்டதை அடுத்து டைம்ஸ் அறிக்கை வந்தது.

பினோசேயின் குற்றங்களையே ஆய்வு செய்திருந்ததில் தன்னுடைய வேலையின் பெரும் பகுதியை கழித்திருந்த வெர்டுகோ அம்மையார், தான்தான் டைம்ஸ் செய்திக்கு ஆதாரம் என்பதை மறுத்து, வெளிநாட்டு அரசாங்கங்கள் பணம் கொடுத்தது பற்றிய செய்தித்தாளின் குற்றச்சாட்டு தான் சான்டியாகோவில் பகிரங்கப்படுத்தியிருந்த ஆவணம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

டைம்ஸூக்கு ஏதேனும் புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளனவா என்பது உடனடியாக தெளிவாகத் தெரியவில்லை அல்லது அதன் அறிக்கையில் சில பகுதிகளாவது வெர்டுகோவினால் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்ட ஆவணத்தை திரித்ததில் சம்பந்தப்பட்டிருந்தனவா என்றும் தெரியவில்லை. வெளிநாட்டு பணம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் கொடுத்துள்ள சில புள்ளிவிவரங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் பயணச்செலவு தொகைகளுக்காக 1974 முதல் 1976 வரை, சிலி அரசாங்கம் செலவு செய்ததாகக் காட்டிய தொகைகளுடன் மிகச் சரியாக பொருந்துகின்றன. ஆனால் டைம்ஸின் அறிவிப்போ சர்வாதிகாரி அத்தகைய பணவரவுகளை 1997 வரை பெற்றுக் கொண்டுவந்தார் எனத் தெரிவிக்கிறது.

இதன் தன்மை எப்படியிருந்தாலும், சமீபத்திய வெளிப்பாடுகள் இன்னும் கூடுதலான முறையில் வாஷிங்டன் உதவியுடன் சிலியில் நிறுவப்பட்டிருந்த கம்யூனிச விரோத சர்வாதிகாரத்தின் குற்றஞ் சார்ந்த தன்மையை அம்பலப் படுத்தியுள்ளன. பினோசேயின் வலதுசாரி ஆதரவாளர்கள் அவரை சிறிதும் ஊழலுக்குட்பட்டிராத கொள்கை பிடிப்புடைய நபர் என்று எப்பொழுதும் ஆதரித்துள்ளபோதிலும், வெளிவந்துள்ள ஆவணங்கள் அவர் ஒரு கொலைகாரர் என்று மட்டுமில்லாமல் ஒரு வெட்கங்கெட்ட பணம் கையாடல் செய்பவர் என்றும் தெளிவாக்கியுள்ளன.

சிலி அரசாங்கம் பினோசேயின் வெளிநாட்டுச் செலவினங்களுக்கு கொடுத்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த வாரம் அளித்தபோது, வெர்டுகோ, "இந்தப் பணத்தில் எவ்வளவு வங்கிகளுக்கு சென்றன, எந்த அளவு குற்றங்களை நடத்தக் கொடுக்கப்பட்டன?" என்ற கேள்விக்கு இன்னும் விடை வரவில்லை என்று தெரிவித்தார்.

சிலி நாட்டு செய்தியாளர் பிரேசில், ஸ்பெயின், ஆர்ஜென்டினா ஆகியவற்றிற்கு மூன்று குறுகியகாலப் பயணங்களுக்கு 1974ல் இருந்து 1976வரை பினோசே $2.3 மில்லியன் செலவழித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினுக்குச் சென்றிருந்தபோது, சர்வாதிகாரி ஸ்டேபனோ டெல்லே ஷியேயி என்ற இத்தாலிய பாசிசக்குழுத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்; அவர் ஒரு பழைய துணை ஜனாதிபதியாகவும் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த சில தலைவர்களுள் ஒருவருமான பெர்னர்டொ லேடன் மற்றும் அவருடைய மனைவியை கொலை செய்யும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தவராவார். அவர் ரோமில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்.

சிலிய இரகசியப் போலீஸ் DINA, பினோசே ஆட்சி மற்றும் ஆர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இருந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கிடையில் நாடுகடத்தப்பட்டிருந்த அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்லுவதற்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்த Operation Condor என்று அழைக்கப்பட்டிருந்த ஒரு CIA ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கை காலகட்டத்தில்தான் இப்பணத்தின் ஒருபகுதி வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறைந்தது 200 சிலி நாட்டவர்களாவது இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டதுடன், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

அர்ஜென்டினாவில் செலவிடப்பட்ட பணத்திற்கான காரணத்தைப் பற்றியும் வெர்டுகோ வினா எழுப்பியுள்ளார்: "இப்பணத்தை ஜெனரல் பிராட்ஸை கொல்லுவதற்கு பினோசே பயன்படுத்தினாரா?". முன்னாள் சிலிய இராணுவத்தின் தலைவரான பிராட்ஸ் செப்டம்பர் 11, 1973 நிகழ்ந்திருந்த இராணுவத்தின் மூலமான ஆட்சிக் கவிழ்ப்பு, பின்னர் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருந்தது ஆகியவற்றை எதிர்த்திருந்தார். செப்டம்பர் 1974 அன்று, பிராட்சும் அவருடைய மனைவி சோபியா கட்பெர்ட்டும் அவர்களுடைய காருக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு வெடிப்பினால் கொலைசெய்யப்பட்டுவிட்டனர்.

இத்தாக்குதலில் பங்கு பெற்றிருந்த ஒரு முன்னாள் DINA இரகசியப் போலீசின் பணியாளர், விசாரணைக்குட்படுத்தப்பட்டு, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, அர்ஜென்டினாவில் ஆயுட்காலத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 2000ம் ஆண்டில், அர்ஜெண்டினா நீதிமன்றம் இக்கொலையில் தொடர்பு கொண்டிருந்த இன்னும் ஆறு DINA பணியாளர்களை கொண்டுவர வேண்டும் என்றும், கொலைச் சதியை, பினோசேதான் "அறிவுபூர்வமாக தீட்டியவர்" என்றும் கூறியது; முன்னாள் சர்வாதிகாரியையும் தங்கள் நாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அது கூறியது. சிலியத் தலைமை நீதிமன்றம் ஒரு வாழ்நாள் செனட் உறுப்பினர் என்ற முறையில் எந்தக் குற்றச் சாட்டில் இருந்தும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நாட்டில் இருந்து அனுப்பமுடியாது என்றும் கூறிவிட்டது.

ஆயினும், சாந்தியாகோவின் முறையீட்டு நீதிமன்றம் பினோசேக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை இந்த மாதத் ஆரம்பத்தில் விலக்கிவிட்டது; இதையொட்டி பழைய சர்வாதிகாரிமீது பிராட்ஸ் மற்றும் அவர் மனைவியை கொன்ற வழக்கில் அரசிற்கு இருந்த விசாரணை செய்யும் அதிகாரம், மற்றும் குற்றவியல் வழக்குத் தொடுக்கும் அதிகாரம், ஆகியவற்றிற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுவிட்டன.

"இதன் மூலம் குற்றம்பற்றி ஒருபுதிய வகை விசாரணை நடத்துவதற்கு வகை வந்துள்ளது; தளபதி பினோசே மற்றும் இதில் தொடர்புடையவர்கள் எந்த அளவிற்கு உண்மையான பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்பதை இதன் மூலம் நாம் அறிய முடியும்" என்று பிராட்ஸின் குடும்ப வக்கீலான பமேலா பெரைரா தெரிவித்தார்.

பினோசே தன்னுடைய பாதுகாப்பு கவசத்தை இழந்துவிட்ட மூன்றாம் வழக்காகும் இது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிலி நாட்டுத் தலைமை நீதிமன்றம் ஓர் ஒற்றை-வாக்குப் பெரும்பான்மையின் மூலம் Operation Condor நிறுவப்பட்டதில் அவருக்கு இருந்த பங்கு பற்றிக் குற்றம் சாட்டப்படலாம் என்று தீர்ப்புக் கொடுத்தது. சர்வதேச கொலை ஏற்பாட்டுத் திட்டத்தில் எந்தப் பொறுப்பையும் தான் கொள்ளவில்லை என்று பினோசே மறுத்துக் கூறினார்; சிலியின் ஆட்சியாளர் என்ற முறையில், "சிறு விஷயங்களை பற்றி கவலைப்படுவதற்கு எனக்கு நேரமில்லை" என்று செய்தி ஊடகத்திற்கு அவர் அறிவிப்புக் கொடுத்தார்.

2001ம் ஆண்டில் (Caravan of Death) மரண வரிசை ஊர்வலம் என்ற வழக்கையொட்டி தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பில் இருந்து அவர் விலக்கை இழந்தார். இந்தச் செயல்பாட்டில் சிலிய இராணுவ அதிகாரிகள் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து நாடு முழுவதும் சென்று அரசியல் கைதிகளைக் கொன்று குவித்திருந்தனர்.

மரண வரிசை ஊர்வலம் வழக்கில் பின்னோச்செட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அவர் வழக்கு விசாரணையை, வயது மூப்பினால் ஏற்பட்ட மூளைக் கோளாற்றினால் எதிர்நோக்கத் தகுதியில்லை என்ற வாதத்தை ஏற்று, நீதிமன்றங்கள் தற்காலிகமாக குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தன.

இந்த முன்னாள் சர்வாதிகாரி இதே காரணத்தைக் காட்டி 2000ம் ஆண்டில் ஸ்பெயினுக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் தவிர்த்திருந்தார்: அப்பொழுது இங்கிலாந்தில் இல்லக்காவலில் ஒன்றரை ஆண்டு இவர் கழித்து வந்திருந்தார். கொலை, ஆட்கள் காணாமற்போனது, சித்திரவதை என்று ஸ்பானிய, சிலியக் குடிமக்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களுக்காக ஸ்பெயின் நாட்டு நீதிபதி பால்டசார் கார்ஜன், பினோசேயின் மீது மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் விசாரணையை கொண்டுவந்தார். இக்குற்றச் சாட்டுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன; பினோச்சேயிற்கும் அவருடைய மனைவிக்கும் எதிராக ஒரு புதிய குற்றச்சாட்டையும் கார்ஜன் கொடுத்துள்ளார்; அது ரிக்ஸ் கணக்குகள் பற்றிய பல மில்லியன் டாலர்களுடன் தொடர்புடையது; அந்த வங்கிக் கணக்குகள் ஓய்வு பெற்ற தளபதியின் சொத்துக்களை சர்வதேச சட்டத்தின்படி முடக்கப்படவேண்டும் என்பதை நடைமுறையில் மீறி இருந்தன.

பினோசே தான் தன்னுடைய நுட்பமான செயல்பாட்டை வாஷிங்டனைத் தளமாகக் கொண்டுள்ள வங்கியில் கொண்டிருந்தார் என்ற வெளிப்பாடு, பல்லாயிரக்கணக்கான சிலி மக்களை தன்னுடைய மிருகத்தனமான 17 ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொன்றதற்காகவும், சித்திரவதைக்கு உட்படுத்தியதற்காகவும் விசாரணை வேண்டும் என்று கூறுபவர்களுடைய கோரிக்கைக்கு எரியும் தீயில் மேலும் எண்ணெய் வார்த்தது போல் ஆயிற்று.

"இந்த நிலைபற்றி விசாரணைக்கான நீதிபதிதான் முடிவெடுக்கவேண்டும்" என்று பிராட்சின் குடும்ப வக்கீல் கூறினார். "பினோசே கிறுக்கரோ, மனநோயாளியோ அல்ல என்றுதான் நாங்கள் எப்பொழுதும் கூறிவந்துள்ளோம். அவருடைய தரப்பு வக்கீல்கள் இதில் அவர் பொறுப்பு பற்றி நாம் நன்கு தெரிந்துள்ளதால் இந்த வகையைக் கையாள்கின்றனர்... மிகச் சிக்கலான நிதிச் செயற்பாடுகளை அவரால் செய்யமுடியும் என்று தெளிவாக நிறுவப்பட்டுள்ளது."

பினோசேயின் மனப்பாதிப்பினால் இயலாமை என்ற கூற்றை ஒரு மியாமி தொலைக்காட்சி நிலையத்திற்குச் சமீபத்தில் அவர் கொடுத்த வீடியோ நேர்காணல் குறைமதிப்பிற்குட்படுத்துகிறது; இதில் அவர் தன்னுடைய ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பை மிகத்தெளிவுடன் மறுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ரிக்ஸ் வங்கி பினோசே மற்றும் அவருடைய குடும்பத்திற்காக 4 மில்லியன் டாலர்கள் முதல் 8 மில்லியன் டாலர்கள் வரையிலான கணக்குகளை இரகசியமாக வெளிநாடுகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது; இவற்றில் சில வேறு பெயர்களான "டேனியல் லோபெஸ்", "டெட் பாக்ஸ்" போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ளன. செனட் மன்றக் குழுவின் விசாரணை ரிக்ஸ் சட்டவிரோதமாக முன்னாள் சர்வாதிகாரியுடனான தன்னுடைய தொடர்பை மறைத்துவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது; இந்த மூடி மறைந்தல் விவகாரத்திற்கு ஓர் உயர் நிலையில் உள்ள கூட்டாட்சி வங்கி ஆய்வாளரான ஆர்.ஆஷ்லே லீ இருந்தார் என்றும் இவர் பின்னர் அரசாங்க வேலையை விட்டுவிட்டு வங்கியில் ஒரு மூத்த நிர்வாகியாகச் சேர்ந்தார் என்றும் தெரியவருகிறது.

இந்த வங்கியின் நிர்வாகம், புஷ் நிர்வாகத்துடனும் வாஷிங்டனுடைய நடைமுறையுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் சித்தப்பாவால் இயக்கப்படும் பண நிர்வாக நிறுவனத்தின் உரிமையாளராக இந்த வங்கி உள்ளது. இந்த வங்கியே புஷ்ஷின் குடும்பத்துடன் மிக நெருக்கமுடைய டெக்சாஸ் குடும்பமான ஆல்பிரிட்டன்களுக்கு சொந்தமானது. பினோசேயின் பணத்தை மறைப்பதற்காக நிறுவப்பட்ட போலி நிறுவனங்களுள் ஒன்றின் பெயர் ஆல்பிரிட்டன் நிதியம் என்பதாகும்.

முதலில் பினோசே இந்தக் கணக்குகளை 1996ல் தொடங்கினார் என்று கூறப்பட்டாலும், அவருடைய இந்த வங்கியுடனான உறவு, அவர் சிலியின் இராணுவ சர்வாதிகாரியாக இருந்த 1980 களின் நடுப்பகுதிக்கு பின் செல்லுகிறது என்றும் தெரியவருகிறது. நவம்பர் மாதத்தில் பத்து புதிய கணக்குகள், மொத்தத்தில் 16 மில்லியன் டாலர்கள் மதிப்புடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொலை, சித்திரவதை குற்றச்சாடுக்களைத்தவிர, பினோசே இப்பொழுது பண மாற்றுக் குற்றங்களும் தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்களை மறைத்து தவிர்த்ததற்கான குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளுகிறார். இத்தகைய குற்றங்களில் பெரும் பழக்கம் உடைய சிலி நாட்டு உயர் நிதிக்குழுவினரையே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

பினோசேயின் மொத்த தனிச்சொத்துக்களின் மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக இருக்கக்கூடும் என்று ரிக்ஸ் மதிப்பீடு செய்துள்ளது. எங்கிருந்து அவருக்கு இவ்வளவு பணம் வந்தது? ஒரு சிலிய தளபதியின் ஊதியத்தில் இவ்வளவு செல்வம் சேர்ப்பது என்பது முடியாத செயலாகும்.

நாட்டின் கருவூலத்தை சூறையாடியதை அடுத்து, பினோசே குரோஷியாவிற்கு சட்ட விரோதமாக ஆயுதங்கள் அனுப்பப்பட்டதிலும், போதைப்பொருள் கடத்தலிலும், தொடர்பு படுத்தப்படுகிறார். 1990களில் முன்னாள் இராணுவ காப்டனாக இருந்த இவர் மகன் ஓர் ஆயுதத்தயாரிப்பு தொழிற்சாலையை சட்ட விரோதமாக இராணுவத்திற்கு 3 மில்லியன் டாலர்களுக்கு விற்றதையொட்டிய விசாரணையில் இலக்காக இருந்தார். "தேசிய பாதுகாப்பு" என்ற காரணம் காட்டப்பட்டு, இந்த விசாரணை நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்கம் 1995ல் உத்தரவிட்டது

இதைத் தொடர்ந்து பினோசே சர்வாதிகாரம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய "கறைபடிந்த போரில்" கிடைத்த கொள்ளைப்பொருட்கள் உள்ளன. அந்த ஆட்சி பல பேரைக் கொன்று, சித்திரவதை செய்து, எதிரிகளை சிறையிட்டது மட்டும் அல்லாமல் அவர்களுடைய சொத்துக்களையும் திருடி அவற்றை மூத்த அதிகாரிகள் பங்கும் போட்டுக் கொண்டது.

சிலி மக்களை அச்சுறுத்துவதற்காக பினோசே ஆட்சி ஏற்படுத்தியிருந்த முறையான திட்டங்கள், சர்வாதிகாரத்தின் கீழ் திறம்பட செயல்படுத்தப்பட்ட கொடுமைகள்தான் என்று (National Commission on Torture and Political Prisoners) சித்திரவதை, மற்றும் அரசியல் கைதிகள் பற்றிய தேசிய குழுவின் நீண்ட நாட்கள் தாமதப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டதை அடுத்து, தேசியவாத விவாதங்கள் எழுந்தபோது, பினோசே தவறாக சேகரித்திருந்த பெரும் செல்வக்குவிப்பு பற்றிய புதிய வெளிப்பாடுகள் வந்தன. கிட்டத்தட்ட 35,000 குடிமக்கள் தாங்கள் சித்திரவதைக்குட்பட்டது பற்றி சாட்சியம் அளிக்க முன்வந்தனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த துன்பங்களின் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்; பல காரணங்களால் அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இந்த அறிக்கை, இராணுவத்தின் மூன்று பிரிவுகள், போலீஸ் மற்றும் அரசியல் அமைப்பு நிறுவனங்கள், தற்போதைய பொறுப்பு தங்களுக்கு ஏதும் இல்லையென்றும், நடந்த குற்றங்களுக்கு வருத்தை தெரிவித்தும் முறையாக தொடர்ந்து அறிக்கைகளை தூண்டிவிட்டுள்ளன.

சாண்டியாகோவின் முன்னாள் அரசியல் கைதிகள் குழு இதற்கு விடையிறுக்கும் வகையில் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது; கிட்டத்தட்ட சிலி பாதுகாப்புத் துறைகளில் உள்ளவர்கள் மற்றும் சிவிலியன்களில் இப்பொழுதுள்ள மற்றும் முன்பிருந்த 2,000 நபர்களை தாங்கள் பட்ட சித்திரவதைக்கு பொறுப்பாவார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

"தப்பிப் பிழைத்த நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்" என்ற தலைப்பில் உள்ள இந்த அறிக்கை இராணுவத்தை மட்டும் அல்லாமல், முழுச் சிலிய சமுதாயத்தையும், ஆட்சியின் சித்திரவதை அறைகளில் மறைந்துவிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு வழக்கையும் கிட்டத்தட்ட தள்ளுபடி செய்த நீதிபதிகள் உட்பட பலரையும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று சர்வாதிகார ஆட்சி மொழிந்தவற்றை கிளிப்பிள்ளை போல் பரப்பிய செய்தி ஊடகத்தையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி ரிக்கார்டோ லாகோசுடைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இந்த ஆவணத்தை பற்றிக் கூறுகையில், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்திய உண்மைகளுடன் சர்வாதிகாரியுடைய குற்றங்களை பண்பாடற்ற வகையில் சம்மத்தப்படுத்துகின்றது: "சர்வாதிகாரத்தில் இருந்து சிலி எந்தப் படிப்பினையை கற்றுக் கொண்டது?" என்று La Moneda எனும் ஜனாதிபதி அரண்மனையின் செய்தி தொடர்பாளராகிய பிரான்சிஸ்கோ விடால் கேள்விகேட்டுள்ளார். "செய்தி ஊடகத்தில் மக்கள் மீது அவதூற்றினை அள்ளிவீசக்கூடாது. தக்க காரணம் இருந்தால், நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை பயன்படுத்தி பினோசே ஆட்சியில் இருந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை என்ற எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Top of page