World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

The victims of Operation Condor

காண்டர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்

By Bill Van Auken
14 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

நீதிபதி ஜுவான் குஜ்மன், காண்டர் நடவடிக்கை தொடர்பாக முன்னாள் சர்வாதிகாரி ஒகுஸ்டோ பினோசேக்கு எதிராகத் தொடுத்துள்ள குற்றச்சாட்டில், சர்வாதிகாரியினால் உத்தரவிட்டு காணாமற்போனவர்கள் மற்றும் கொலையுண்டவர்களான பத்து சிலியர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் அடங்கியுள்ளது.

பினோசேயின் 17 ஆண்டுகால ஆட்சியில் கொலைக்குட்பட்டவர்கள், சித்ரவதைக்கு உட்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் இந்தப் பத்துப் பேர் மிகச் சிறிய பகுதிதான் என்றாலும், இந்தக் குற்றவியல் நடவடிக்கை சர்வாதிகாரியுடைய குற்றங்களின் பெரிய நிலைப்பாட்டைக் காட்டுவதோடு அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இராணுவ ஆட்சியினால் கொல்லப்பட்டவர்கள் எத்தன்மையானவர்கள் என்பது பற்றிய உட்பார்வையையும் அளிக்கிறது.

"நிரந்தரமாகக் கடத்தப்பட்டவர்கள்" என்று குற்றச்சாட்டில் விவரிக்கப்பட்டவர்களில் ஓர் இருபத்தியெட்டு வயதான சமூகவியல் வல்லுனர் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடுபவரும், 1973-ம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்றபோது வடபுறப் பல்கலைக் கழகம் என்ற ஆன்டோபகஸ்டாவில் இருந்த யிஷீக்ஷீரீமீ மிsணீணீநீ திuமீஸீtமீs கிறீணீக்ஷீநீரஸீ-ம் ஒருவராவார். மே 1975ல் அர்ஜென்டினாவில் இருந்து எல்லையைக் கடக்க முற்படுகையில் பராகுவேயின் பாதுகாப்புப் படைகளால் இவர் சிறைபிடிக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குப் பிறகு இவர் DINA விடம் ஒப்படைக்கப்பட்டு, வில்லா க்ரிமால்டியில் உள்ள பினோசேயின் சித்ரவதை அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டார், 1976ம் ஆண்டிற்குப் பிறகு மறுபடியும் பார்க்கப்படவே இல்லை.

திuமீஸீtமீs கிறீணீக்ஷீநீரஸீ புரட்சிகர இடது இயக்கத்தில் (Movement of the Revolutionary Left - MIR) உறுப்பினராக இருந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த நாட்களில், கன்செப்ஷன் பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இவர் காணாமற்போன நேரத்தில், இவருக்குத் திருமணமாகி நான்கு வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது.

"விளையாட்டுக்களில் நல்ல திறமை, எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பவர், பாடும் திறனும் கிட்டார் வாசிக்கும் திறனும் உடையவர் என்று அவருடைய குடும்பத்தினர் அவரை நினைவு கூர்கின்றனர். ''ஒற்றுமையைப் பரப்பவேண்டும் என்ற கருத்தும், நல்ல கொள்கைப் பிடிப்பு மற்றும் உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அவர் செயல்பட்டுவந்தார்" என்று குற்றத்தாக்கல் பத்திரிகை கூறுகிறது.

செப்டம்பர் 11, 1973 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் அவருடைய அரசியல் நடவடிக்கைக்காக சர்வாதிகார ஆட்சி அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றது; முதலில் அர்ஜெண்டினாவிற்கும் பின்னர் பிரான்சுக்கும் அவர் தப்பிச் சென்றிருந்தார். MIR-க்காக வெளிநாட்டில் செய்திகளை எடுத்துச்செல்பவராக பணிபுரிந்த இவர் இந்த பிராந்தியத்திற்கு மீண்டும் வந்தபோது, பராகுவே-அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

22 வயது நிரரம்பிய மானுவல் ஜீசஸ் டமயோ மார்டினெஜ் என்பவர் மாணவர் தலைவராகவும், சிலியன் சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நேரத்தில் இருந்திருந்தார். இவர் மார்ச் 1976-ல் அந்நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றவதற்குச் சில வாரங்கள் முன்புதான் அகதியாக ஓடிவிடுவதற்குக் கட்டாயச் சூழ்நிலையில் தள்ளப்பட்டார். அவர் மென்டோஜா நகரத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் அகிதிகளுக்காகக் கட்டியிருந்த இல்லத்தில் வசித்து வந்தார்: அப்பொழுது DINA மற்றும் அர்ஜெண்டினா இராணுவம் நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கையை அடுத்து, ஒரு தெருவில் இவர் சிறைபிடிக்கப்பட்டார்.

இவருடன் 27 வயதான, சோசலிசக் கட்சியில் உறுப்பினராக இருந்த லூயி கோன்ஜாலோ ம்யூனோஜ், மற்றும் 23 வயதான, சோசலிச இளைஞர் பிரிவின் உறுப்பினரும் தொழில்துறை, தொழில்நுட்பக் கல்விக்கூடங்களின் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவருமாக இருந்திருந்த ஒரு லேத் இயக்கும் ஜுவான் ஹம்பெர்ட்டோ ஜேப்பும் சேர்ந்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் வில்லா கிரிமால்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் காணாமற்போய்விட்டனர்.

சிலிய-அர்ஜெண்டினிய கூட்டு அதிரடி நடவடிக்கையில் ணிபீரீணீக்ஷீபீஷீ ணிஸீக்ஷீணஹீuமீக்ஷ் ணிsஜீவீஸீஷீக்ஷ்ணீ என்ற 34 வயது MIR முக்கிய உறுப்பினர் ஒருவரும் ப்யூனோஸ் ஏர்சின் தெருக்களில் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டார். அவரை அர்ஜெண்டினிய காவல், சித்ரவதை மையங்கள் பலவற்றில் சாட்சிகள் பார்த்துள்ளனர். அவரும் வில்லா கிரிமால்டிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக நம்பப்படுகிறது. அவரும் இதன்பின்னர் எங்கும் காணப்படவில்லை.

அலெக்சி விளாடிமிர் ஜாக்கர்ட் சீக்லெர், 1977ம் ஆண்டு மே மாதம் பாதுகாப்பு படைகளால் ப்யூனோஸ் ஏர்ஸின் கடத்தப்பட்டார். பல்கலைக் கழக மாணவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின்பால் பரிவுணர்வும் கொண்டிருந்த இவர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு நாட்டை விட்டு ஓடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, 1973 ன் இறுதியில் ஸ்விட்சர்லாந்தை அடைந்தார். அங்கு அவர் கல்வியைத் தொடர்ந்து சிலியில் இருந்து புலம் பெயர்ந்திருந்த சிலி மாணவி ஒருவரை மணந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய தந்தையைக் காண்பதற்காகச் சிலிக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவர் அர்ஜெண்டினாவில் சிறைபிடிக்கப்பட்டார். அவருடன் கூட மற்றும் மூன்று சிலிக் குடிமக்களும், சிலி நாட்டிற்கு ஒருமைப்பாடு காட்டியிருந்த ஒரு குழுவின் ஐந்து அர்ஜென்டினியக் குடியினரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைருமே இப்பொழுது காணாமற் போனவர்கள் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்.

ஜாகோபோ ஸ்டெளல்னம் போர்ட்நிக் மற்றும் அவருடைய மனைவியார் மாடில்தே பெசா மோயியும் இந்தக் குற்றத்தாக்கல் ஆவணத்தில் இடம் பெற்றுள்ள பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் மே 1977 ல் ப்யூனோஸ் ஏர்ஸில் எஜெய்ஜா விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இருந்து இறங்கும்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டனர், அதன்பின்னர் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு வெற்றிகரமான வங்கியாளரான போர்ட்நிக், சிலிக்குள் எதிர்ப்பாளர்களுக்கு அனுப்பப்படும் பணங்களை செலுத்துவதற்கு உதவியதாக சர்வாதிகாரத்தால் சந்தேகிக்கப்பட்டார்.

ஜூலியோ வல்லதேரெஸ் காரோக்கா, ஜூலை 1976-ல் பொலிவியாவில் இரகசியப் போலீசாரால் பிடிக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் சிலிய எல்லைப்புறம் அழைத்துச் செல்லப்பட்டு DINA உடைய பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார், இதற்குப் பிறகு அவர் தென்படவே இல்லை. சோசலிச கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் காணாமற்போனபோது 29 வயதுதான் ஆகியிருந்தது. இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு, விவசாயச் சீர்திருத்த பெருநிறுவனத்தில் அவர் ஒரு கணக்காளராக இருந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த இவர் ஆட்சி மாற்றத்தின்போது கியூபாவில் விவசாயப் பொறியியலைக் கற்றுவந்தார். இவர் சிலிக்குத் திரும்பவும் முடியவில்லை, இவர் குடும்பத்துடன் தபால் மூலமே தொடர்பு கொள்ள முடிந்தது.

இவ்வறிக்கையில் மே 1977-ல் சான்டியாகோவில் பாதுகாப்பு ஊழியர்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுப் பின்னர் கொலையுண்டவருமான ரூய்டெர் கோர்ரியா அர்சே என்பவரும் இறந்தவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சடலம் மாபோசோ நதியருகே கண்டுபிடிக்கப்பட்டது. 1915ல் பிறந்திருந்த இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். தந்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த இவர் சால்வடோர் அலெண்டே அரசாங்கத்தில் போக்குவரத்துத் துறையில் நிர்வாகியாகச் சேர்வதற்கு முன்பு, அத்தொழிலாளர்களின் சங்கத்துடைய பிரதிநிதியாக இருந்தார்

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின் ஒரு செய்தித்தாள் விற்பனைக் கடை ஒன்றை இவர் நடத்தினார், இது கம்யூனிஸ்ட் கட்சி இரகசியமான முறையில் கடிதங்களைப் பறிமாறிக்கொள்ளும் இடமாகவும் செயல்பட்டிருந்தது. கடையில் இருந்து வீட்டிற்கு மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் தெருவில் பற்றியிழுக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

See Also :

சிலியில் "கான்டொர்" கொலைகளில் பினோசே கைதுசெய்யப்பட்டுள்ளார்

சிலி நாட்டின் பழைய சர்வாதிகாரி பினோசே பல மில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் பிணைந்துள்ளார்

Top of page