World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

What price an American Empire?

Colossus: The Rise and Fall of the American Empire by Niall Ferguson, Penguin Press, 2004, ISBN 0-713-99615-3

அமெரிக்க பேரரசே உன் மதிப்பு என்ன?

நயல் பெர்கூசன்: கலாசஸ் : அமெரிக்கப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும். பெங்குயின் பதிப்பகம், 2004, ISBN 0-713-99615-3

By Ann Talbot
8 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3

இது மூன்று-பகுதி ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும்

ஒழுங்கமைக்கப்பட்ட பாசாங்குத்தனத்தின் வரலாறு

நயல் பெர்கூசனுடைய சிறந்த மேலாதிக்க முறை பிரட்டிஷ் பேரரசு ஆகும்; இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அமெரிக்கா மிகவும் நல்ல முறையில் இயங்கியதில்லை என்று அவர் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிமுறையை அமெரிக்காவினால் பின்பற்றி அவ்வாறு செயலாற்ற முடியவில்லை; ஏனென்றால் பெர்கூசனுடைய கருத்தின்படி, ஒரு பேரரசை ஆட்சி செய்வதற்கு தேவையான பிரிட்டிஷார் பெற்றிருந்த குணநலன்களை, அமெரிக்கார்கள் கொண்டிருக்கவில்லை என்பதாகும். "அமெரிக்காவில் உயர்கல்வி அமைப்புக்களில் பயில்பவர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்" என்று அவர் கூறியுள்ளதோடு கீழைத்தேச நாடுகளின் மொழிகளை அறிவதற்கு பதிலாக திரைப்பட கல்லூரிகளின் மீது நாட்டம் கொண்டுள்ளனர் என்றும், பிரிட்டிஷ் கல்வி முறை தன்னிடத்தில் பயின்றவர்களிடம் புகட்டியிருந்த ஏகாதிபத்திய உணர்வை இவர்களிடம் காண்பதற்கில்லை. T.E. லாரென்ஸ் அல்லது John Buchan நாவல்களில் வரும் "மெக்காவில் ஒரு மொரக்கர் போலவே, பேஷாவரில் ஒரு பதன் போலவோ செயல்படும் கதாநாயகர்கள் போல், அமெரிக்காவில் ஒப்பிட்டுப்பார்க்கும் வகையில் ஒருவரும் இல்லை" அவர் தெரிவிக்கிறார்.

இளைய அமெரிக்க உயர்குழுவினர், பேரரசை அமைக்கக் கூடியவர்கள் என்ற முறைக்கு போதிய அளவிற்கு குளிர் தண்ணீர் குளியல், பிரம்படிபடுதல் மற்றும் இழிவாக நடத்தப்படுதல் ஆகியவற்றைப் பெறவில்லை என்று நாம் கருதவேண்டும் போல் உள்ளது.

ஈராக்கில், அல்லது அப்பொழுது மெசபதேமியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் முயற்சியை, தளபதி மவுட் (General Maude) எடுத்துக் கொண்டபோது பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிரமிப்பாகர்ளாக வந்துள்ளனரே ஒழிய, விடுதலை செய்பவர்களாக வரவில்லை என்று 1917ல் நிகழ்த்திய உரையில் அவர் உறுதிமொழியளித்தார். கிட்டத்தட்ட இதேபோன்ற உணர்வுகளைக் கொண்ட உரை ஒன்றை 2003ல் ஈராக்கிய மக்களுக்கு புஷ் வழங்கியதை பெர்கூசன் ஒப்பிட்டுக்காட்டுகிறார். பெர்கூசனை பொறுத்தவரையில், இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால், "முற்கூட்டி குறிப்பிடமுடியாத எதிர்காலம்வரை ஈராக்கில் கட்டுப்படுத்த இருக்கவேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது."

தோற்றத்தில் சுதந்திரமான அரசாங்கங்கள் என்ற போர்வைக்குப் பின் ஈராக்கில் பிரிட்டன் தன்னுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட வகையைப்பற்றி பெர்கூசன் பெரும் வியப்பை தெரிவித்துள்ளார். சுருங்கக்கூறின், "பாக்தாதில் இடைவெளியின்றி நாற்பது ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இராணுவ, சிவில் பிரதிநிதிகள் இருந்தனர். ஈராக்கிற்குப் பிரிட்டிஷார் சென்று அவர்கள் அங்கு தங்கிவிட்டனர் என்பது பொருளாகும். அமெரிக்கர்கள் அத்தகைய பங்கை பாக்தாத்தில் 2043 வரை வகிக்கமுடியுமா? அதிக வலியுறுத்தல் இல்லாமல் கூறினாலும், அத்தகைய நீட்டிப்பு மிகவும் இயலாதசெயல் என்றுதான் கூறமுடியும்" என்று அவர் எழுதியுள்ளார்.

ஈராக் ஒன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிகுந்த வெற்றியைக் காட்டும் உதாரணம் அல்ல என்பதை பெர்கூசன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பேரரசில் மிகக் கடைசியாகச் சேர்க்கப்பட்ட இப்பகுதி மிகக் குறைவான செலவில்தான் ஆட்சி செய்யப்பட்டு வந்திருந்தது. இதைவிட நல்ல உதாரணமாக எகிப்து உள்ளது என்பது அவருடைய கருத்தாகும். எகிப்தில் கைப்பாவைகளை எப்பொழுதும் முன்வைத்து நடத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து புஷ் நிர்வாகம் நிறையக் கற்றுக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். "நீங்கி விடுகிறோம் என்று உறுதிமொழி கூறுவதில் பல நன்மைகள் எப்பொழுதுமே உண்டு - ஆனால் அவ்வாறு உண்மையில் செய்யும் திட்டம் எதுவும் உங்களிடம் இருக்கக் கூடாது."

பெர்கூசனைப் பொறுத்தவரையில், பேரரசு என்ற கருத்து "முறையான பாசாங்குத்தனம்" ஆகும்; 1882ல் இருந்து பிரிட்டன் எகிப்தில் நடத்திய ஆட்சிமுறை ஈராக்கில் அமெரிக்கர்கள் ஆட்சி செய்வதற்குத் தக்க படிப்பினையாக இருக்கும் என்பதாகும். அமெரிக்கப் படைகள் மிக விரைவாக ஈராக்கைக் கைப்பற்றிதை, எகிப்திய தேசிய படைகளுக்கு எதிராக பிரிட்டன் கொண்ட வெற்றியுடன் இவர் ஒப்பிட்டுக் காண்கிறார். அமெரிக்காவைப் போன்றே, பிரிட்டனுக்கும் எகிப்தில் சூயஸ் கால்வாய் என்ற வகையில் பொருளாதார நலன்கள் இருந்தன. அமெரிக்கர்களைப் போலவே அவர்களும் விரைவில் நாட்டைவிட்டு வெளியேறி விடுவதாக உறுதி மொழி கொடுத்து வந்தனர். 1922ம் ஆண்டு அவர்கள் எகிப்து சுதந்திரம் அடைந்து விட்டது என்ற அறிவிப்பையே கொடுத்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு நீங்கி விடவில்லை. 1954ம் ஆண்டு கூட கால்வாய் பகுதியில் 80,000 க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டிருந்த பிரிட்டிஷ் படை இருந்தது. இது முற்றிலும் நியாயமனதே என்று பெர்கூசன் கருதுகிறார். "இதற்குப் பாசாங்குத்தனம் என்று பெயர், தாராளக் கொள்கையுடைய பேரரசுகள் சிலநேரம் இந்த முறையைத்தான் கையாளவேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார்.

எகிப்தில் பிரிட்டிஷ் நடந்து கொண்ட முறையைப் பற்றி பெர்கூசன் குறைகாண்பதற்குப் பதிலாக, வெளிநாட்டுக் கடன்கள் பற்றி எந்தத் தவறும் ஏற்பட வாய்ப்பு இல்லாத உத்தரவாதத்தை அளிப்பதால் எகிப்தியர்களுக்கு அது நன்மையையே பயத்தது என்று பிரிட்டனின் எகிப்திய ஆக்கிரமிப்பைப் பற்றி அவர் கருதுகிறார். இதன் விளைவாக எகிப்து நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்திற்காகக் கணிசமான முதலீடு செய்யப்பட்டது. ஆயினும்கூட, குழந்தைகள் இறப்பு உண்மையில் 1917 இல் இருந்து 1934 க்குள் அதிகமாயிற்று என்று பெர்கூசன்கூட ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. "பிரிட்டிஷ் ஆட்சியினால், எகிப்தில் ஒரு பொருளாதார அதிசயம் (Wirtschaftswunder) நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எகிப்தைத் தொடர்ந்து ஆண்டுவந்திருந்த ஆட்சியாளரின் பொறுப்பற்ற தன்மையையினால் விளைந்திருக்க் கூடிய ஒரு பொருளாதாரப் பேரழிவையும் அது காணவில்லை." என்று கூறி பிரிட்டனின் ஆக்கிரமிப்பை தன்னளவில் நியாயப்படுத்தியுள்ளார்.

Colossus இல் பிரிட்டிஷ் பேரரசைப் பற்றிப் பெர்கூசன் கொடுத்துள்ள தோற்றம் இவருடைய முந்தைய புத்தகமான பேரரசு: தற்கால உலகை பிரிட்டன் எவ்வாறு உருவாக்கியது (Empire: How Britain made the modern World) என்பதைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்தப் புத்தகத்தில் பிரிட்டிஷ் பேரரசின் உலகந்தழுவிய முறை எவ்வாறு நலம் தரும் வகையில் இருந்தது என்றும் ஜேர்மனி, ஜப்பான் என்ற மிக ஒடுக்குமுறையான பேரரசுகளை எதிர்த்து அது போரிடநேரிட்டபோதுதான் அது தோல்வியடைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் பேரரசில் அட்டூழியங்கள் நடந்தன என்பதை அவர் மறுக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்த அட்டூழியங்கள் இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மோசமானவையாக இருந்தன என்று மன்னித்து விடுகிறார்.

ஆங்கில மொழி, ஆங்கில வகைகளிலான நில உரிமை வரம்புகள், ஸ்காட்லாந்து- இங்கிலாந்து வங்கிமுறை, பொதுச் சட்டம், புரடஸ்தாந்திசம், குழு விளையாட்டுக்கள், மிகக் குறைந்த "பாதுகாப்பை மட்டும் கவனித்துக் கொள்ளும்" ஆட்சி முறை, பிரதிநிதித்துவமன்றங்கள், விடுதலை பற்றிய எண்ணம் பொன்ற பல நன்மைகளை பிரிட்டிஷ் பேரரசு அளித்ததாகப் பெர்கூசன் தெரிவிக்கிறார். பிரிட்டிஷ் பேரரசிற்குள் இருப்பது என்றால் "நல்ல முறையில் நாடு நடந்து கொள்ளுகிறது என்ற ஒப்புதல்" கிடைத்ததாகவும், அதையொட்டி லண்டன் நிதியச் சந்தைகளில் குறைந்த வட்டிவிகிதத்திற்கு கடன்கள் வாங்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார். பெர்கூசனை நம்பினால், பிரிட்டிஷ் பேரரசிற்குட்பட்டிருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் மிகப் பெரிய அளவில் இருக்கும் தன்மையில், துரதிருஷ்டவசமாக இதற்கு வெளியே இருப்பவர்கள் ஏன் வரிசையில் நின்று அதில் சேர்ந்துகொள்ளவில்லை எனக் கேட்க வைக்கும்.

பெர்கூசனுடைய கருத்தில், "பிரிட்டனுடைய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்தவர்கள், பிரிட்டனின் காலனித்துவ நாட்டு மக்களிலேயே மிகச் சிறந்த நிலையில் இருந்தவர்களாவர்."

மிகப் பெரிய பண்ணைகள் கொண்டிருந்த, மிகக் குறைவான வரிகளைக் கொடுத்துவந்த பழைய இங்கிலாந்தில் இருப்பவர்களைவிடக் கூடுதலான கல்வி பயின்றிருந்த, செல்வம் கொழித்திருந்த புதிய இங்கிலாந்துவாசிகள்தான், "ஏகாதிபத்திய அதிகாரத்தின் தளைகளை முதலில் தூக்கி எறிந்தனரே ஒழிய வேர்ஜினியாவில் கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களோ அல்லது ஜமாய்க்காவில் இருந்த அடிமைகளோ அல்ல."

"காலனித்துவஆட்சியின் தளைகளுக்கு எதிராக, அதைத் தூக்கி எறியும் வகையில் டப்ளினில் இருந்து டெல்லி வரை ஆயுதமேந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு" பிரிட்டிஷ் பேரரசின் வீழ்ச்சி ஒரு வெற்றி என்ற எண்ணப் போக்கை பெர்கூசன் தவறான திசைதிருப்பும் கருத்து என்று நிராகரிக்கிறார். "இருபதாம் நூற்றாண்டு முழுவதும் பலவிதமான மாற்றுக்கள் இருந்தபோதிலும், முக்கிய அச்சுறுத்தல்கள் மற்ற பேரரசுகளே தவிர அந்நாடுகளில் இருந்த தேசிய விடுதலை இயக்கங்கள் அல்ல."

இந்தப் பேரரசுகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியை விடக் குறிப்பிடத் தக்க வகையில் கடுமையான வகையில் இருந்தவை ஆகும். "இந்த ஏகாதிபத்தியப் போட்டியாளர்களுடன் போரிடுவதற்காகச் செலவழிக்கப்பட்ட பாரிய தொகைகள்தாம் இறுதியில் பிரிட்டிஷ் பேரரசை அழித்துவிட்டன. வேறுவிதமாகக் கூறினால், இது பல நூற்றாண்டுகள் அடிமைப் படுத்தியிருந்ததால் இது தகர்க்கப்படவில்லை; இன்னும் கொடுமையான பேரரசுகளுடன் சில ஆண்டுகள் போரிட வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டதாலேயே இது தகர்ந்தது. செலவினங்கள் ஒரு புறம் இருக்கச் செய்யவேண்டிய சரியானவற்றையே இது செய்தது."

முதல் உலகப்போரில் தன்னுடைய போட்டி ஏகாதிபத்திய சக்திகளுடன் மோதியதில் பிரிட்டன் வலுவானமுறையில் வலிமையை இழுந்தது என்ற கருத்தில் ஓரளவு உண்மை உண்டு; ஆனால் ஒரு தன்னலமற்ற பிறருடைய உயர்விற்காக பிரிட்டிஷ் போர் முயற்சிகள் இருந்தன என்ற கருத்துப்படிவம் பல ஆண்டுகளாகக் கேட்கப்படாத ஒன்றாகும். வில்பிரெட் ஓவென் என்றும் கவிஞர் "உன்னுடைய நாட்டிற்காக உயிரை விடுதல் பொருத்தமானதும் இனிமையானதுமாகும்" என்ற பாடிய பொய்யைவிட நாம் இன்னும் சிறப்பாகக் கூறிவிடமுடியாது; அதே நேரத்தில்முதல் உலகப் போரினால் நேரடியாகப் அனுபவித்தவர்கள் பாதுகாப்புடன் பதுங்கு குழிகளுக்குள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதையும், முதல் உலகப்போர் உருவாக்கிய புரட்சி வரலாற்றிற்கு பாதுகாப்பான கொடுப்பனவு என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா, மற்ற ஏகாதிபத்திய சக்திகள் மீது இருந்த ஏகாதிபத்திய பேரவாக்களும் மற்ற தடைகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. வரலாற்றாசிரியர்கள் "1920களின் கடைசியில் எழுத்தாளர்களும், நாவலாசரியர்களும் போரைப் பற்றி என்ன கருத்தைக் கொண்டிருந்தனரோ, அதையே மீட்க வேண்டும் என்ற பார்வையில்தான் முயன்று வந்தனர்." இவ்வாறு Hew Sgrachan, முதல் உலகப் போர், ஒரு புதிய விளக்க வரலாறு (The First World War: A New Illusgrated History) (Simon and Schuster, 2003) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆனால் அவருடைய திருத்தல்வாத முறை, பிரிட்டிஷ் பழைமைவாத வரலாற்றாளர்களில் பெர்கூசன் தலைமுறையினருக்கு தக்க சான்றாக உள்ளது. 1918ம் ஆண்டு போரின் கடைசி வாரத்தில் ஓவன் இறந்து போனார் என்பது குறிப்பிடப்பட வேண்டும். அவருடைய கவிதைகள் நிகழ்காலத்திற்கு விளக்கத்தை கொடுப்பதுடன், அவற்றில் மிகத் தேர்ந்த இலக்கியச் சிறப்பைத் தவிர, எந்த வரலாற்றாசிரியரும் அவற்றை முதல் ஆதாரம் என்று எடுத்துக் கொள்ளுவர்.

Bulldog Durmmond அல்லது "Sapper என்று அறியப்பட்டிருந்த H.C.McNeile ஐ தோற்றுவித்திருந்த Biggles நூல்கள்தாம், முதல் உலகப் போர் பற்றிய Strachan விரும்பும் இலக்கிய வெளிப்பாடுகள் ஆகும். இந்தச் சிறுவர்களுடைய தீரச் செயல்கள் நிறைந்த புத்தகங்களில் இராணுவமுறையை பற்றிய கற்பனை காப்பாற்றப்படுகிறது; உண்மையில் முள்வேலிகளால் சூழப்பட்டுள் எவருக்கும் சொந்தமில்லாத நிலத்தில் அவை இறந்து விடுகின்றன. இத்தகைய விருப்பத்தில் Strachan னுக்கு மட்டும் ஈடுபாடு என்று இருந்தால் அது ஒரு தனித்தன்மை வாய்ந்த சிறப்பு என்று விட்டுவிடலாம்; ஆனால் பெர்கூசனும் கூட இத்தகைய நாட்டுப் பற்று நிறைந்த இலக்கியத்தையும் தீரங்கள் நிறைந்த கதைகளையும் புகழ்கிறார். போரின் துன்பம் (Pity of War- Penguin Press, 1988) என்ற அவருடைய நூலில் அவர் முதல் உலகப்போர் பற்றிய குறை கூறிய கவிஞர்களை இடித்துரைக்கிறார். இத்தாலிய எதிர்காலவாதிகளை வொற்றிஷிட்டுகளையும், அவர்கள் "முழுப் போரின் அருங்கலை பற்றி மகிழ்பவர்கள்" என்று முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

போரைப் பற்றிய அவருடைய பார்வையும் இவ்விதத்திலேயே இருந்தது எனக் கூறலாம். வேறு ஏதேனும் ஒரு புத்தகத்தில் படுகொலைகள் பற்றிய ஆதாரபூர்வமான தீவிர, விவாதங்கள் பல படைகள் அவற்றின் உட்பிரிவுகளிலும் காணப்படும் பழக்க வழக்கங்கள் பற்றிய ஒப்புமை, குறிப்பிட்ட படுகொலைகளை பற்றிய பின்னணி ஆய்வு போற்றவற்றை, Pity of War புத்தகத்தில் ஒரு பகுதி சிறைக்கைதிகள் படுகொலைகள் பற்றிய வினாக்களை ஆராயும் போது, மனித மிருகத்தனம் இழிவு இவற்றின் காட்சிகளை உவப்புடன் சுற்றுலாவில் காட்டுவது போன்ற வகையில் உள்ளன. இந்தக் கொடுமைகளைக் கதைபோல் கூறவோ, விளக்கவோ பெர்கூசன் முற்படாமல் அவற்றைப் பற்றிப் பெருமித உணர்வுடன் எழுதுகிறார். உணர்வுகள் நிறைந்த, பகுத்தறிவிற்குப் பொருந்தாத அலங்காரவகைகளைக் கொண்டு போர் நன்மையையும் இறப்பையும் கொண்டுள்ளது என்றும் பிறர்மீது சுமத்தினாலோ, அதைக் கண்டாலோ, அதைப் பற்றிய அனுபவத்தைக் கொண்டாலோ, பேருவகையைத் தருகிறது என்று கூறுகிறார். முதல் உலகப் போர் பெரும் வேடிக்கை, ஒரு திகிலான அனுபவம், "ஒரு பெரிய களிப்பூட்டும் தீரச்செயல்" என்றும் நமக்கு அவர் தெரிவிக்கிறார். "மக்கள் விரும்புவதால்தான்" அவர்கள் தொடர்ந்து போரிடுகின்றனர் என்றும் அவர் காரணம் காட்டுகிறார்.

"இறுதிப் ஆய்வில் அனைத்துப் மோதல்களும் தொடர்ந்து இருப்பதற்கான மிகச் சிறப்பான விளக்கம், இப்படித்தான் போலும்: ஓ அழகிய போரே, உண்மையில் நீ அழகுதான்." என்று பெர்கூசன் எழுதுகிறார்.

கடிதங்கள், நாட்குறிப்புக்கள், நினைவுக் குறிப்புக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முதல் உலகப்போரில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு இறப்பு, பால் உணர்வு, வன்முறை இவற்றால் பெரும் ஈர்ப்பிற்கு உட்படுகின்றனர் என்ற கண்ணோட்டத்தைப் புலப்படுத்துகிறார். இத்தகைய கருத்துக்கள் எப்பொழுதுமே இருந்துள்ளன என்ற பார்வையைத்தான் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் தெளிவாக்கப்படவேண்டிய வினா எந்த அளவிற்கு ஒரு பகுத்தறிவு உடைய பொதுநோக்குப் படைத்த வரலாற்றாளர் அவற்றை வலியுறுத்த வேண்டும் என்பதாகும். இந்த உளவியல்ரீதியான சிதைந்த கருத்துக்களை வலியுறுத்தி, போர்க்காட்சியை மனித உள்ளங்களின் மன உடல் பார்வையில், ஏதோ ஒரு முற்கால மரண உணர்வைத் தூண்டிவிடும் வகையில் நீட்ஷியத் (Nietzschian) தோற்றத்தையும் உற்பத்தி செய்கிறார்.

இதன் விளைவாக முதல் உலகப் போர் பற்றியோ, அல்லது நன்கு ஆராயப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அதைத் தொடர்ந்திருந்த போர்கள் பற்றிய உளரீதியான விளைவுகள் என்றில்லாமல், தற்கால வரலாற்றின் தன்மை பற்றியே ஓர் ஆழ்ந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், ரஷ்யப் புரட்சி பற்றிய அரசியல், சிந்தனைப் போக்குகளின் விளைவுகள், ஸ்ராலினுடைய ஆட்சியின் கீழ் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ இழிவு முறை இருந்தபோதிலும் உலகின் முதலாவது வெற்றியடைந்த சோசலிசப் புரட்சி மில்லியன்கணக்கான மக்களிடையே ஏகாதிபத்திய காட்டிமிராண்டித்தனத்திற்கு ஒரு மாற்று உள்ளது என்று அத்தகைய நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான் வலதுசாரி வரலாற்றாசியர்கள் கூட இயைந்து எழுத வேண்டியதாயிற்று. முதல் உலகப் போரில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றி இடித்துரைக்காதது சரியல்ல என்ற எண்ணம்தான் இருந்தது; இப்பொழுதோ, முந்தைய ஆராய்ச்சியாளருகளுடைய நிதானத் தீர்ப்பை திருத்துவதற்குப் பெருகிய ஆர்வம் காட்டும் ஒரு புதிய தலைமுறை வரலாற்றாசிரியர்கள் வந்துள்ளனர். சான்றுகள், மற்றும் வரலாற்று வழிவகை பற்றிய வெளிப்படை வன்முறை தோற்றத்தை காட்டாமலேயே அவர்கள் அவ்வாறு செய்யலாம். மேலாகப் பார்க்கும்போது, The Pity of War என்னும் நூலில் ஒரு வரலாற்றப் புத்தகத்தில் இருக்கவேண்டிய தன்மைகள் அனைத்தும் உள்ளன. அரசியல் மூதறிஞர்கள், தளபதிகள், அனைத்துப் புறத்தில் இருந்துள்ள படைவீரர்கள் ஆகியோரிடம் பெற்ற தற்காலத்திய நிகழ்வுக் குறிப்புக்கள்; பொருளாதார, இராணுவ, சமுதாயப் புள்ளிவிவரங்கள்; வீரர்கள் அணிவகுத்து நிற்றலுக்குப் பின் நிதானமாக இருப்பவை, போரின் கொடூரங்களை விளக்கும் தற்காலத்திய புகைப்படங்கள். மிகப் பரந்த முறையில் அடிக்குறிப்புக்களும் இருக்கின்றன. இந்நூலைப் படித்தவுடன் ஏற்படக்கூடிய உடனடி உணர்வு இது ஒரு பெரிய அறிவார்ந்த, அதேநேரத்தின் உணர்வுபூர்வமானதுமான புத்தகம் என்பதுதான். ஆனால் உற்று ஆராயும்போது முற்றிலும் மாறுபட்ட நூல்தான் வெளிப்பட்டுள்ளது. போரைப் பற்றிப் பெரும் புகழாரத்தை, மிகவும் கவனமாக மறைத்து வைத்துள்ள நூல்தான் இது.

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் செயல்படுவதற்கு துணைநிற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட பாசாங்கை, Colossus புத்தகத்தில் பெர்கூசன் பாராட்டும்போது, அதை ஒரு பின்பற்ற வேண்டிய கொள்கையாக வலியுறுத்துகிறார். வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய போக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள பாசாங்கின் பங்கினை விவரிக்கும்போதும், அதன் சமுதாய, அரசியல், பொருளாதார, பொருளாதார காரணங்களையும் அதன் தாக்கங்களையும் அவர் ஆய்வு செய்யலாம். ஐரோப்பாவில் அப்பொழுது வெளியே வரத்தலைப்பட்டிருந்த அரச உயர்மட்ட சான்றுகளை முதன் முதலாக ஆராயத் தொடங்கிய Ranke காலத்தில் இருந்து, வரலாற்றாசிரியர்கள் உண்மையான ஆதாரங்களைக் காணவேண்டும் என்ற விழைவுடன்தான் இருந்து வருகின்றனர். செய்தி ஊடக அறிக்கைகள், தன்னையே நியாயப்படுத்திக்கொள்ளும் நினைவுக் குறிப்புக்கள் என்று மட்டும் இல்லாமல் கொள்கை பற்றிய ஆவணங்கள், இரகசிய சுற்றறிக்கைகள் ஆகியவற்றையும் அவர்கள் காண விரும்புகின்றனர். அவர்களுடைய தொழில் தன்மை அரசாங்கம் நடைமுறையில் கொண்டுள்ள முறையான பாசாங்குத்தனத்தை அகற்றுவதாகத்தான் எப்பொழுதுமே இருந்ததே ஒழிய, அதற்காக வாதிடுவதற்கு அல்ல. ஆனால் அப்படிச் செய்வதை பெர்கூசன் ஒரு பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளார். வரலாற்றாசிரியர் பாசாங்குத்தனம் நியாயப்படுத்தப்படலாம் என்று நினைக்கையில், அவருடைய புத்தகம் எப்படி நம்பிக்கையான தன்மையைக் கொண்டிருக்கும்? இந்த அடிப்படையில் எழுதப்படும் நூல்கள் வரலாற்றுப் படைப்புக்களாக இல்லாமல் முற்றிலும் கருத்தியலானதாகத்தான் இருக்கும்.

தொடரும்...

Top of page