World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Tsunami death toll rises to 60,000 amid warnings of epidemics

தொற்றுநோய் பரவும் அபாயங்களுடன், சுனாமியினால் இறந்தோர் எண்ணிக்கை 60,000 க்கும் மேல் உயர்கிறது

By Peter Symonds
29 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு பெருந்துயர நிகழ்வு வங்காளவிரிகுடாவின் விளிம்பை சுற்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கான மக்களுடைய உயிர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள், ஞாயிறு காலை கடற்கரையோரப் பகுதிகளை தாக்கிய மாபெரும் அலைக் கொந்தளிப்பால் சிதறுண்டு கிடக்கின்றனர். இறந்தோர் எண்ணிக்கை 60,000த்தையும் தாண்டியிருக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன; உதவி, மீட்புப் பணியாளர்கள் இப்பகுதி முழுவதும் உள்ள சேதமுற்ற, நாசமுற்ற, கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள் என்று எல்லா இடங்களிலும் சல்லடையிட்டு தேடிய பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அவசரகால அளிப்பாக உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் பேரழிவிற்குட்பட்ட பகுதிகளை அடையவில்லை என்றால் இந்த எண்ணிக்கை இருமடங்காகும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO உடைய நெருக்கடி நடவடிக்கைகள் பிரிவின் தலைவரான டேவிட் நபரோ, "சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் விளைந்துள்ள பீதி, பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களின் நீண்ட காலக் கஷ்டங்களை நினைத்துப் பார்க்கும்போது, மிகச் சிறிய அளவு என்ற தன்மையைக் கொள்ளக்கூடும்" என்று தெரிவித்துள்ளார். வயிற்றுப் போக்கு தொந்திரவுகள், மற்றும் மலேரியா, மூச்சுத் திணறல் போன்றவை தொற்றுநோய்களாகும் அபாயத்தைப் பற்றியும் WHO பெரிதும் கவலை கொண்டுள்ளது.

மோசமான பாதிப்பிற்குட்பட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள நிழற்படங்களும், பேட்டிகளும் அழிவு, துயரங்கள் இவற்றின் பரிணாமத்தின் அளவைப்பற்றிய பார்வையை அளிக்கின்றன. முழுச்சமூகங்களும் தலைகீழாக சாய்க்கப்பட்டுள்ளன: வீடுகளும், குடிசைகளும் அழிக்கப்பட்டுள்ளன; கார்களும் மற்ற வாகனங்களும் ஒருபுறத்தே சரிந்துள்ளன; அடிப்படை கட்டுமானங்கள் நொறுக்கப்பட்டுள்ளன; தெருக்களில் சடலக் குவியல்கள் மலிந்துள்ளன; ஏராளமான உடல்கள் ஒரே நேரத்தில் புதைக்கப்படும் நிகழ்வுகள் காணப்படுகின்றன; மருத்துவமனைகளில் பெருங்குழப்பங்களை காண்கிறோம்: தங்களுக்கு பிரியமானவர்களை பெரும் கவலையுடன் உறவினர்கள் தேடியலைந்த வண்ணம் இருக்கிறார்கள்; எஞ்சியவர்கள் மடிந்தவர்களைப் பற்றிய பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து என்று கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ள நான்கு நாடுகளிலும், சடலங்கள் இன்னும் ஏராளமான எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்தும், தொடர்புகளும் பெரிய துண்டிப்பிற்கு ஆளாகியுள்ளன. சுனாமி தாக்கிய நான்கு நாட்களுக்குப் பின்னரும் சில தொலைவிலுள்ள கிராமங்களையும் பகுதிகளையும், நெருக்கடிக் குழுக்கள் இன்னும் சென்று அடையவில்லை. இப்பகுதி முழுதும் உதவிப் பணியாளர்களும் நிறுவனங்களும் மிகக் கடுமையான உணவு, மருந்து, நல்ல குடிதண்ணீர் இவற்றிற்கான தட்டுப்பாட்டினால் இன்னும் கூடுதலான மரணங்கள் என்ற அலை வந்துவிடக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளன.

இறப்புக்கள், அழிவுகள் இவற்றுடன் பெருந்தைரியம், பெருந்தன்மை வெளிப்படல் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. சாதாரண உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும், பெரிய உத்தியோகம் பார்ப்பவர்களும், எளிய கிராமவாசிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களும், அவற்றை திகைப்புடன் தொலைவிலிருந்து காணபவர்களும் இச்சோகத்திற்கு விடையிறுக்கும் வகையில் தங்கள் நேரத்தையும், பணத்தையும் வாரி இறைத்து பாதிப்பாளர்களுக்கு உதவுகின்றனர்; சிலசமயம் தனிப்பட்ட தியாகங்களை செய்தும் பிறருக்கு உதவுகின்றனர்.

இதற்கு முற்றிலும் எதிரிடையான முறையில், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அரசாங்கங்களின் எதிர்கொள்ளும் தன்மை மெதுவாகவும், போதுமானதாக இன்றியும் உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசாங்கங்கள், சுனாமிக்கு உந்துதல் கொடுக்கக் கூடிய, பெரிய நிலநடுக்கங்கள் பற்றிய பரப்பளவு, இடம், ஏற்படக்கூடிய நேரம் இவை பற்றி 15ல் இருந்து 30 நிமிஷங்கள் வரை முன்கூட்டி அறிந்துருந்தும்கூட, எத்தகைய அவசர எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. எந்த முன் நடவடிக்கையும் இதையொட்டி எடுக்கப்படவில்லை. பசிபிக் பெருங்கடலில் உள்ளதைப்போல் அன்றி, இந்தியப் பெருங்கடலில் பரந்த வகையில் சுநாமி பற்றிய எச்சரிக்கை முறை ஏதும் அமைக்கப்படவில்லை.

பெரும் அலைக் கொந்தளிப்பிற்கு பின்பு, அதிகாரபூர்வ உதவி, மீட்பு முயற்சிகள், பேரழிவிற்கு முன்பு மிகச் சிறியனவாயின. இத்தகைய மகத்தான பேரழிவை எதிர்கொள்ளுவதற்கு தயார்நிலையில் அரசாங்கங்கள் இல்லை. திட்டமிட்டுச் செயலாற்றுதல், வளங்கள் குறைவு, பணியாளர்கள் குறைவு ஆகியவையும் நன்கு வெளிப்பட்டுள்ளன. அவசரகாலப் பணியாளர்கள் மிகவும் அதிகமாக உழைத்துள்ளபோதிலும், அவர்களும் பற்றாக்குறைக் கருவிகள், தேவைகள் இவற்றினால் மிகவும் பாதிப்பிற்குட்பட்ட பகுதிகளை அடைவதில் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய போதுமான பணம், பணியாட்கள், தொழில்நுட்பம், சிறப்பு அனுபவம் இவற்றைக் கொண்டுள்ள நாடுகள் பெரிய அலட்சியப் போக்கை காட்டியுள்ளன. வாஷிங்டன், டோக்கியோ, லண்டன் மற்றும் கான்பெர்ரா ஆகியவை பதின் மடங்கு அல்லது நூற்றின் மடங்கில் பில்லியன் கணக்கான டாலர்களை சட்டவிரோதப் படையெடுப்பு, மற்றும் ஈராக்கை ஆக்கிரமித்தல் இவற்றிற்காகச் செலவழித்துள்ளன. ஆனால் ஆசியாவில் மில்லியன் கணக்கான மக்களை தாக்கியுள்ள பேலழிவை எதிர்கொள்ளும் முறையில், இவர்களுடைய இணைந்த உதவித்தொகை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகத்தான் வருகிறது; இந்தத் தொகையினால், மகத்தான மறுசீரமைப்பு என்பது ஒரு புறம் இருக்க, உடனடி அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளுக்கும், நன்கொடைகளின் மிகச்சிறிய அளவிற்கும் இடையே உள்ள பெரிய பிளவின் தன்மை வெளிப்படையாக இருக்கும் தன்மை, ஐ.நா.வின் நெருக்கடி உதவி ஒருங்கிணைப்பாளர் ஜோன் எகிலாந்தை எச்சரிக்கை கலந்த கடிந்துகொள்ளும் குறிப்பு ஒன்றை வெளியிடுமாறு கட்டாயத்திற்குட்படுத்தியது. "நாம் ஏன் இவ்வளவு கருமித்தனமாக இருக்கிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் இது வியப்பு. மேற்கு நாடுகள் பலவற்றிற்கேனும் கிறிஸ்துமஸ் காலம் நாம் எந்த அளவிற்குப் பணக்காரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்தியிருக்கும். வளர்ச்சியடைந்துள்ள உலகப் பொருளாதாரத்தில் முன்பு இருந்ததை விட சில நன்கொடையாளர்கள் மிகவும் குறைந்த பெருந்தன்மையுடன்தான் உள்ளனர்" என்றார் அவர். "சமீப வரலாற்றிலேயே மிகக் கடுமையான பேரழிவு" என்று அவர் விவரித்துள்ள அழிவை எதிர்கொள்ள குறைந்தது 15 பில்லியன் டாலர்களாவது தேவை என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

பெருந்துன்பத்தின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான பரிவுணர்வு காட்டுவது என்பதில் உதவியளித்தலைவிட அரசியல் விளைவுகளை பற்றிய அச்சம் கூடுதலாகவே உள்ளது. 1923ல் நிகழ்ந்த பெரும் நிலநடுக்கத்தை போன்றே, இத்தன்மையுடைய பேரழிவுகள் அரசியலில் உறுதியற்ற தன்மையையும் எதிர்ப்பையும் மிகப் பெரிய அளவில் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இந்தவார நிகழ்வுகளுக்கு முன்பே இப்பகுதியில் உள்ள அரசாங்கங்கள் இவற்றின் பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கை மற்றும் சீரழிந்துவரும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்காக பரந்த விரோத மனப்பான்மை மற்றும் கோபம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன. சுனாமியின் தாக்கம் இந்த செல்வந்தர், வறியவர் இவர்களுக்கு இடையே உள்ள பெரும் இடைவெளியை அதிகப்படுத்தி, சமுதாய நலனுக்கு என்றில்லாமல், இலாப அடிப்படையில் இயங்கும் ஒரு பொருளாதார ஒழுங்கின் குறைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கை

நேற்று இரவு வரையிலான அதிகாரபூர்வ இறந்தோர் பட்டியல் 18,700க்கும் அதிகமான எண்ணிக்கையை காட்டியது. ஆனால் அதிகாரிகள் இறந்தோர் எண்ணிக்கை 25,000க்கு உயரும் என எதிர்பார்க்கிறார்கள். தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகள் பேரலை கொந்தளிப்பின் முழுச்சீற்றத்தையும் எதிர்கொண்டன; தலைநகரம் கொழும்பு உட்பட அனைத்துமே தாக்குதலுக்குட்பட்டன. முழுமையாக பல கிராமங்கள் தரைமட்டமாயின. சிற்றூர்களும், கால்லே, மாத்தறை, ஹாம்பன்தோட்டா போன்ற தென்புற நகரங்களும், கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் திரிகோணமலை போன்ற இடங்களும் கடுமையாகத் தாக்குண்டன.

பல பகுதிகளையும் நேரில் சென்றடைய முடியாத தன்மையினால் நேரடித் தகவல் அறிதல் கடினமாயுள்ளது. கால்லேயில், பேரழிவு பற்றியும் அடிப்படைப் பொருட்கள் குறைந்த நிலை பற்றியும் ஒரு BBC கட்டுரை விவரித்துள்ளதாவது: "ஒரு சிறிய வண்டி வந்து நின்றவுடன் உடனடியாக ஒரு மக்கள் கூட்டம் திரண்டு, தேங்காய், வாழைப்பழங்கள், உறையிடப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்படுகின்றன. இது ஒன்றும் அரசாங்க வாகனமோ, சர்வதேச உதவிப்பணி முயற்சியினாலேயோ நடைபெறவில்லை; உள்ளூர் வணிகர்களுடைய தனி முயற்சிகளினால் நிகழ்கிறது. உள்ளுர் அமைப்புக்களும், சமூக மையங்களும் தங்களால் இயன்ற அளவிற்குப் பாடுபட்டபோதிலும், அவற்றால் சமாளிக்கமுடிவதில்லை."

ஒரு கொழும்பிற்கும் கால்லேக்கும் இடையே பயணித்த இரயில் வண்டி முற்றிலுமாக வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. இறந்தவர்களில் பலரும் அலைகளில் இருந்து தப்புவதற்காக வண்டியின் கூரைமீது பரபரப்புடன் ஏறிப் பயணித்தவர்கள் ஆவர். பிரிட்டிஷ் தளத்தைக் கொண்ட Telegraph இல் வந்துள்ள அறிக்கை இக்காட்சியைப் பற்றி விவரிக்கிறது: "செவ்வாய்க் கிழமையன்று, துருப்பிடித்த எட்டு ரயில் பெட்டிகள் சிதைந்த நிலையில், கீழே விழுந்திருந்த பனை மரங்களின் இடிபாடுகளுக்கிடையே நீரில் ஆழ்ந்து கிடந்திருந்தன. அலைகள் சில பெட்டிகளின் சக்கரங்களை பெயர்ந்திருந்ததுடன், தண்டவாளங்களையும் சிதைத்திருந்தன. பெரும்பாலான சடலங்கள் அகற்றப்பட்டுவிட்டன; ஆனால் அழுகிப்போன 15 உடல்கள் இன்னும் காணப்படுகின்றன. பெட்டி, படுக்கைகள் தடம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. ...அருகிலுள்ள ஒரு பள்ளிக்கூடம் கடுமையான சேதத்திற்குட்பட்டுள்ளது."

நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும், நிலைமை, குறிப்பாக LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில், இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. Telegraph தகவலின்படி, திரிகோணமலையில் கிட்டத்தட்ட 30,000 மக்கள் வீடுகளை இழந்து, "உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உறைவிடங்கள் வருவதற்கான அறிகுறி ஏதும் காணோம்." மட்டக்களப்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரான எஸ். ஜெயானந்தோமூர்த்தி தமிழ் வலைத் தளத்திற்கு தெரிவித்தார்: "புதிதாகக் கட்டப்படுள்ள மருத்துவமனை, பொதுக் கட்டிடங்கள், பள்ளிகள், அரசியல் அலுவலகங்கள், இல்லங்கள், திருச்சபைகள், ஆலயங்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கடலின் கொந்தளிப்பால் அழிக்கப்பட்டுவிட்டன."

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வ துக்கதினம் என்று அறிவித்துள்ளார்; அவருடைய அரசாங்கம் சுனாமியினால் இடம் பெயர்ந்தோருக்கு ஒரு சமைக்கப்பட்ட உணவும், மற்ற உணவுப் பொருட்கள் வாரம் ஒரு முறையும் அளிக்கப்படும் என்று உறுதிமொழியளித்துள்ளது. இந்த அடிப்படை உதவிகூட பல பகுதிகளிலும் முற்றிலும் கிடைக்கவில்லை. LTTE கூற்றின்படி அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அங்கு கிட்டத்தட்ட 8,000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 500,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் உள்ளது.

(See Also: Sri Lankan tsunami victims speak to the WSWS)

இந்தோனேசியா

நேற்று இரவு வரை, அதிகாரபூர்வ இறப்புப் பட்டியல், சுமத்ரா மாநில வட முனையிலுள்ள ஏஸ்ஸே மாநிலத்தில், 7,000 என்று எண்ணிக்கையை காட்டுகிறது. ஆயினும், துணை ஜனாதிபதியான ஜோசப் கல்லா இந்த எண்ணிக்கை 25,000யும் கடந்துவிடும் என்ற எச்சரிக்கையை நேற்று விடுத்தார். முழு மாநிலமும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கடந்த மே மாதம் முதல் இருந்துவந்தபோதிலும்கூட, நேற்றுத்தான் ஒரு இராணுவ விமானம் மிகவும் மோசமாக மேற்குக் கடற்கரையில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதிப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

செய்தித்தாட்களில் வரும் தகவல்கள், மிகப்பெரிய நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த பேரலைக் கொந்தளிப்பு மாநிலத் தலைநகரான பண்டா ஏஸ்ஸேவைத் தாக்கியது பற்றித் தெரிவிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஆஸ்திரேலியச் செய்தித்தாள் நிலைமையே நேற்று விவரித்தது: "தெருக்களில் அழுகிய பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அழுகிய உடல்களின் துர்நாற்றம் எங்கும் நிறைந்துள்ளது. மையப்பகுதியில் இருந்த கட்டிடங்களை எவையுமே சேதத்தில் இருந்து தப்பவில்லை. சிறிய இறந்த மீன்கள், நகரத்தை பேரழிவிற்குட்டபடுத்திய கடலலையால், நடைபாதை முழுவதும் வீசியெறியப்பட்டுள்ளன. ...உணவும், நீரும் தட்டுப்பாட்டிற்குள்ளாகிவிட்ட நிலையில், மின்சாரமும் எரிபொருளும் இல்லாத நிலையில் பெருந்திகைப்பு உச்சநிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது."

கடந்த ஆண்டு நெருக்கடி ஆட்சிக்கு மாநிலம் உட்படுத்தப்பட்ட பின்னர், இராணுவம் பிரிவினை கொரில்லாக்கள், உள்ள மக்கள் மீது எடுக்கப்பட்டுவரும் கொடுமையான அடக்குமுறைகள் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக செய்தி ஊடகம் மற்றும் வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் மீது, கடுமையான தடைகளைச் சுமத்தியது. மாநிலத்தில் இழிந்த நிலைமை பல இடங்களில் இருந்தபோதிலும்கூட, இராணுவம் நேற்றுத்தான் உதவிப்பணியாளர்கள்மீது இருந்த தடையை அகற்றியுள்ளது. பண்டா ஏஸ்ஸாவில் இருந்து வரும் செய்தி ஊடகத் தகவல்கள், பேரழிவை இராணுவம் எதிர்கொண்டுள்ள விதம் மிகக் குறைந்த வரம்பைக் கொண்டதாகவும், எந்தத் திட்டமும் இல்லையென்றும், சில இடங்களில் சிறிதும் அக்கறையற்றும் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இந்தியா

இந்தியாவில் அதிகாரபூர்வமான இறந்தோர் பட்டியல் நேற்று 11,500-ஐ எட்டியது; இதில் பாதிக்கும் மேலானவர்கள், நிலநடுக்கத்திற்குப் பின்னர் வரும் நில அதிர்வுகளினாலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ள, குறைந்த நிலமட்டமான அந்தமான், நிக்கோபர் தீவுகளில் இருந்தனர். Sydney Morning Herald ல் வந்துள்ள தகவல்படி, "குறைந்தது 7,000 பேராவது இத்தீவுகளில் மடிந்துள்ளனர். ஆனால் இன்னும் 6,000 மக்கள் இருக்கும் இரண்டு தீவுகளுடன் தொடர்பு கொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட 30,000 பேர் இந்தத் தீவுகளில் இன்னும் காணமற்போனவர்கள் பட்டியலில் உள்ளனர்."

இந்தப் பேரழிவுகள் பற்றி ஒரு நேரடியான ஆஸ்திரேலியத் தகவல் கூறுகிறது: "நிக்கோபர் தீவான செளத்ராவில் வசிக்கும் 1,500 மக்களில் 1,000 பேர் மாண்டுவிட்டனர். கடலோரப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், "45,000 மக்கள் வாழும், ஒரு சிறிய 24 சதுர கிலோமீட்டர் தீவான கார் நிக்கோபரில் குறைந்தது 10,000 பேராவது உயிரிழந்திருக்கக் கூடும். இருக்கும் கட்டிடங்களில் 80 சதவிகிதம் தரைமட்டமாயின. முற்றிலும் இடிந்துவிட்டதால் மக்கள் எங்கும் வசிக்க இயலவில்லை. உயிர் தப்பியவர்களில் பலருக்குப் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன; எனவே இப்பொழுது சரியான இறப்பு எண்ணிக்கை கணிக்கப்பட இயலாது, ஆனால்... அறிவிக்கப்பட்டுள்ளதைவிட இது கூடத்தான் இருக்கும்." என்று கூறினார்.

இந்தியத் தீபகற்பத்தில், தென் மானிலமான தமிழ் நாடு பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. திங்கள் இரவு வரை 3,720 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைப் போன்றே ஏழை மீனவர்கள் வசிக்கும் கிராமங்கள்தான் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. மாநிலத் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் செய்தி ஊடகத்திற்கு ஒரு மீனவர் கூறினார்: "நான் என்னுடைய மனைவி, என்னுடைய பெண்குழந்தை, என்னுடைய தகப்பனார் ஆகியோருடன் இருந்தேன். என்னுடைய சகோதரி என்னுடைய வலைகளில் இருந்து சிறு மீன்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். பின் அலைகள் வந்தன; இப்பொழுது என்னுடைய குடும்பத்தைக் காணோம்."

தாய்லாந்து

தாய்லாந்தின் அதிகாரபூர்வ மரணப்பட்டியல் 1,520 ஐக் காட்டுகிறது; ஆனால் குறைந்தது இன்னும் 1,400 பேராவது காணாமற் போனவர் பட்டியலில் உள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் புக்கெட்டும் பாங் இன்காவும் ஆகும்; இங்கு பாதிப்பிற்கு ஆளானவர்களில் பலர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆவர். செய்தி ஊடகத் தகவல்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதுகாப்பை நாடி ஒடும் பெருங்குழப்பம் நிறைந்த காட்சிகளையும், நாட்டை விட்டு விரைந்து அகலும் காட்சிகளையும் தெரிவிக்கின்றன. பலரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து தோற்றமளிக்கின்றனர். சிலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்துள்ளனர். மற்றவர்கள் காணாமற்போன குடும்ப உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.

இலங்கையை போலவே, இப்பேரழிவு தாய்லாந்து பொருளாதாரத்தில் உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தும்; இந்நாடு மிக அதிகமாக சுற்றுலாத்துறையை நம்பியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுற்றுலாத்துறை 6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. பறவை தொற்றுநோய், சார்ஸ் என்று இருந்திருந்தபோதிலும், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்து உயர்ந்திருந்தது. இப்பொழுது பல சுற்றுலா விடுதிகளும் அழிந்து நாசமாகி விட்டன.

கடலோரப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் மின்வசதி, தண்ணீர், உறைவிடம் போன்ற பல அடிப்படைத் தேவைகளும் இல்லாமல் முடங்கியுள்ளனர். மூத்த சுகாதார அதிகாரியான Vichai Tian Thavorn ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்: "முக்கியமான பிரச்சினைகள், இந்த உடல்களை அப்புறப்படுத்தும் மக்களுக்கு வியாதிகள் பரவக்கூடும் என்பதும், சுகாதாரக் கேடு, மூச்சுத்திணறல் நோய்கள் மற்றும் தோல் வியாதிகள், ஆகிய ஆபத்துக்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர் என்பதும் ஆகும்.

மற்ற நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. மலேசியாவில் குறைந்தது 65 பேராவது உயிரிழந்துள்ளனர்; அண்டை பர்மாவில் மற்றும் 90 பேர்கள் இறந்துள்ளனர். மாலத் தீவுகள் என்ற சிறிய தீவுநாட்டில், இறந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்தது 122 பேர் சோமாலியா, தான்சானியா, சேஷேல்ஸ் ஆகியவற்றில் ஆபிரிக்க கிழக்குக் கடற்கரைப்பகுதியை சுனாமி தாக்கியதில் இறந்து போய்விட்டனர்.

See Also :

தெற்கு ஆசியாவில் பேரழிவு அலைக் கொந்தளிப்பு 13,000 உயிர்களைக் கவர்ந்தது

Top of page