World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Japan stakes its claim to Iraqi oil and gas

ஜப்பான் ஈராக் எண்ணெய் எரிவாயுவில் பங்கு கோருகிறது

By Joe Lopez
26 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் எண்ணெய் எரிவாயு வயல்களில் இருந்து வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் பங்கெடுத்துக் கொள்வதற்காக, அந்நாட்டு எண்ணெய் எரிவாயு அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் ஜப்பான் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. ஈராக் மக்களுக்கு மனித நேய அடிப்படையில் அமெரிக்கப்படைகள் தருவதில், தகுந்த உதவிகளைச் செய்வதற்காக ஜப்பான் துருப்புக்களையும், நிதியையும் வழங்குகிறது என்று பிரதமர் கொய்சுமியின் கூற்றை அம்பலப்படுத்துகிற வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எண்ணெய் வளமிக்க ஈராக்கில் தனது வர்த்தக மற்றும் அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் உருவாக்குவதற்காக ஆரம்பத்திலிருந்தே டோக்கியோ, அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமித்ததை ஆதரித்து வருகிறது.

டெள ஜோன்ஸ் நியூஸ்வயர் (Dow Jones Newswire) ஜனவரி 5-ல் வெளியிட்டுள்ள தகவலின்படி தெற்கு ஈராக்கில் உள்ள அல்-காரிஃப் எண்ணெய் வயல்களில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு உற்பத்தித்திறனைப் பெருக்குவதற்கான ஒப்பந்தத்தை ஜப்பான் மிட்சுபிஷி கார்ப்பொரேஷன் தலைமையில் அமைந்த (consortium) குழுவினர் பெறுவதற்காக, உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.

ஜப்பானுக்கு இந்த அக்கறை 1980 களின் கடைசியில் உருவானது. அப்போது ஈராக் ஜப்பானுக்கு எரிபொருள் வழங்கிய முக்கியமான நாடுகளில் ஒன்றாகவும், மிகப்பெரும் வர்த்தக பங்குதாரர் நாடுகளில் ஒன்றாகவும் இருந்தது. 1991 வளைகுடாப்போர் அதனைத் தொடர்ந்து ஐ.நா விதித்த பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றின் விளைவாக, அல் கராப் பேரமும் ஜப்பானின் வர்த்தக உறவுகளும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலைக்கு வந்தது. தற்போது அமெரிக்கா தலைமையில் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் ஜப்பான் கம்பெனிகள் ஈராக்கில் மீண்டும் தங்களது செல்வாக்கை உயிர்பித்துக் கொள்வதற்கு வாய்புக்களை வழங்கி வருகின்றனர்.

சென்ற ஆண்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக் அரசாங்க எண்ணெய் விற்பனை அமைப்புடன் கச்சா எண்ணெய்க்கான ஒப்பந்தத்தில் மிட்சுபிஷி நிறுவனம் கையெழுத்திட்டது. ஒரு நாளைக்கு 40,000 பீப்பாய்கள் லைட் குருடு ரக கச்சா எண்ணெய்யை பாஸ்ராவிலிருந்து அந்தக் கம்பெனி இறக்குமதி செய்து வருகிறது.

தெற்குப் பகுதி எண்ணெய் வயல்களின் எதிர்கால உற்பத்தி வாய்ப்புகளுக்காக ஜப்பான் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருந்தாலும், மேற்கு ஈராக்கிலுள்ள அக்காரா எரிவாயு சுரங்கங்களை மேம்படுத்துவதற்கு, உற்பத்தியை பெருக்குவதற்கு ஹாலிபர்ட்டன் கம்பெனியின் பொறியியல் மற்றும் கட்டுமான துணை நிறுவனமான KBR- என்ற அமெரிக்க கம்பெனியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

சென்ற ஜூலை மாதம் ஈராக்கின் இடைக்கால அரசாங்கத்துடன் மிட்சுபிஷி, மிட்சு, மரபெனா, ட்டோசு, டோமென், சியோடா, JGC மற்றும் டோயோ தலைமையிலான ஜப்பானிய கம்பெனிகள் குழு, ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டிருப்பதாக டிசம்பர் 18 ல் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

''இந்தப் பேரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டால் இதர ஜப்பானிய நிறுவனங்களும் ஈராக்கின் ஒப்பந்தங்களை போட்டிபோட்டு பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் மற்றும் முக்கிய பேரங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான் தரப்படுகின்றன என்ற கவலையையும் தளர்த்துவதாக அமையும். ஜப்பான் அரசாங்கம் ஈராக் போருக்கு ஆதரவு காட்டியதற்கு கைமாறாக வர்த்தக அடிப்படையில் ஜப்பான் நிறுவனங்கள் வெகுமதி கோருகின்றன என்பதை கோடிட்டு காட்டும் முதல் நடவடிக்கையாக இது அமையும்'' என்று அந்த செய்திப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

ஜப்பான் அரசாங்கம் தனது துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு உறுதியளித்ததுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஈராக்கிற்கு சீரமைப்பு மற்றும் மனிதநேய உதவித்தொகையாக 5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தருவதற்கு சென்ற ஆண்டு புஷ் நிர்வாகத்துடன் இணக்கம் தெரிவித்தது. டிசம்பரில், புஷ்ஷின் சிறப்புத்தூதர் ஜேம்ஸ் பேக்கருக்கு கொய்ஸூமி, ஈராக் ஜப்பானுக்கு தரவேண்டிய 7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடனை ரத்து செய்யவும் சம்மதம் தெரிவித்தார்.

ஜப்பான் அதற்கு முன்னர் இப்படி கடன்களை ரத்து செய்ய முடியாது என்று கூறிவந்தது. எதிர்கால எண்ணெய் ஏற்றுமதி வருவாயிலிருந்து ஈராக் தனது கடனை அடைக்க முடியும் என்றும் ஜப்பான் கூறிவந்தது. இப்போது உதவித்தொகை வழங்கவும் கடனை ரத்து செய்யவும் ஜப்பான் இணங்கி வந்திருப்பதால் ஈராக்கின் வளங்களை கூறுபோடுவதற்கான ஒப்பந்தங்களை தருவதில் நடைபெறும் பேரங்களில் ஜப்பானின் பெரிய கம்பெனிகள் வலுவான அடிப்படையில் உற்சாகத்துடன் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

அல் கராப் மற்றும் அக்காரா பேரங்களில் நிதி உதவிகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசு முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக் எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர் டெள ஜோன்ஸ் நியூஸ் வயருக்கு ''ஜப்பானிய அரசாங்கம் அத்தகைய முதலீட்டிற்கு நிதியுதவி தரும் எனவே அப்படி செய்தவற்கு ஏன் ஊக்குவிக்க கூடாது'' என்று கூறியிருந்தார்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் கொய்ஸூமி மிகப்பெரிய அரசியல் ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தார். தெற்கு ஈராக் நகரான சமாவாவிற்கு ஜப்பானிய தற்காப்பு படைகளைச் சேர்ந்த (SDF) சுமார் 1,000 துருப்புக்களை அனுப்புவதற்கு ஜப்பானில் குறிப்பிடத்தக்க அளவிற்கு எதிர்ப்பு எழுந்தது. பிப்ரவரி வாக்கில் ஜப்பான் ஈராக்கிற்கு படைகளை அனுப்பியுள்ள 38 நாடுகளில் எட்டாவது வரிசையில் இடம்பெறும் (Koizumi sends Japanese troops to Iraq" - ஈராக்கிற்கு கெளஸ்மி ஜப்பான் துருப்புக்களை அனுப்புகிறார்'' என்ற கட்டுரையை பார்க்க)

கியாடோ செய்தி அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மக்களில் 51 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு SDF- துருப்புக்களை அனுப்புவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். துருப்புக்கள் அனுப்பப்படுவதற்கு போதுமான விளங்கங்களை கொய்ஸூமி தரவில்லை என்று 82 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

ஜனவரி 17 ல் ஆசியா டைம்ஸ் ஆன்லைன் விமர்சனங்களின் படி ஹோக்காய்டோ தீவில் இரண்டாவது பெரிய நகரான அசாகிகாவா மக்களின் கருத்துக்களை பிரசுரித்திருக்கிறது. அந்த நகரம் SDF ன் பிரதான தளமாகும். அசாகிகாவாவிலிருந்து 150 இராணுவத்தினர் ஈராக்கிற்கு அனுப்பப்படவிருக்கின்றனர். அங்கு வாழுகின்ற இசுமி கரசாவா ஜப்பானில் பரவலாக நிலவுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர். ''நாம் ஏன் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்ப வேண்டும்? ஜப்பானிய அரசியல் சட்டப்படி போர் மண்டலத்திற்கு துருப்புக்களை அனுப்புவது சட்ட விரோதமாகும். கொய்ஸூமி அரசியலமைப்பை வன்முறையாக நடத்துவதை குறித்து நான் கோபப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

ஜப்பானிய முதலாளித்துவத்தின் மத்திய கிழக்கு மூலோபாய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கொய்ஸூமி தனது நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளார். ஜப்பான் தற்போது தனது எரிபொருள் தேவைகளில் 83 சதவிகித்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது தனது எண்ணெய் தேவைகளில் பெரும்பகுதியை ஜக்கிய அரபு எமிரேட்டுகள், செளதி அரேபியா மற்றும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யா அல்லது மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து புதிய எண்ணெய் சப்ளையை ஜப்பான் பெறாவிட்டால் மிகவிரைவில் தனது எரிபொருள் தேவைக்கு 100 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகும் என்று சில ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.

1990-91 வளைகுடா போரைத்தொடர்ந்து ஜப்பானிய ஆளும் செல்வந்த தட்டு திட்டவட்டமான முடிவுகளுக்கு வந்தனர். முதல் ஈராக் மோதலில் ஜப்பான் இராணுவ பங்களிப்பு எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு மற்றும் அரசியல் கட்டுத்திட்டங்களின் காரணமாக இவ்வாறு நடந்துகொண்டது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னர், அமெரிக்கா வகுத்தளித்த ஜப்பானின் அரசியல் சட்டம் தற்காப்பிற்காக மட்டுமே படைகளை பயன்படுத்தவேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அமெரிக்காவிற்கு ஜப்பான் 13 பில்லியன் டாலர்களை போர் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று அமெரிக்கா நெருக்குவாரம் கொடுத்தும் வந்தது. அதே நேரத்தில் ஜப்பான் ஈராக்கில் தனது எண்ணெய் தேவைகளை பெறுகின்ற வாய்ப்பையும் இழந்தது. மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் செல்வாக்கு பலவீனம் அடைந்தது.

இதன் விளைவாக 1990 களில் தனது பூகோள - அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை வெளிநாடுகளில் நிலைநாட்டுவதற்காக பசிபிக் அரசியலமைப்பை மற்றும் இராணுவத்தை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக மக்கள் அங்கீகரிப்பதற்காக தொடர்ந்து வந்த ஜப்பானிய அரசுகள் பிரச்சாரத்தை நடத்தி வந்தன.

இந்த அரசியல் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தனது முன்னாள் பிரதமர்களுக்கு மேலாக கொய்ஸூமி நடவடிக்கை எடுத்திருக்கிறார். 2001 செப்டம்பருக்கு பின்னர் அவரது அமைச்சரவை ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்று கூறப்படுவதை சாக்காக வைத்து ஜப்பானிய துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் மற்றும் ஈராக்கில் அமெரிக்க படையெடுப்புகளுக்கு ஆதரவாக அனுப்பப்படுவதை நியாயப்படுத்தியது. வட கொரியாவிற்கு எதிராக புஷ் நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான நிலைப்பாடுகளுக்கு ராஜியத்துறை மற்றும் இராணுவ ஆதரவை ஜப்பான் வழங்கியது. மற்றும் வடகொரியா ஜப்பானை அச்சுறுத்துகிற வகையில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்ற குற்றச்சாட்டுக்களையும் கொய்ஸூமி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்

உடனடியாக, கொய்ஸூமி அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவு காட்டுவதன்மூலம் மத்திய கிழக்கில் தனது எண்ணெய் வள ஆதாரங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்பாக பயன்படுத்திக் கொண்டதானது, மத்திய கிழக்கில் லாபம் தருவதற்கான வர்த்தக ஒப்பந்தங்களை பெற முடிந்திருக்கிறது. மேலும் ஜப்பான் ஒரு இராணுவ வல்லரசுதான் என்ற அடிப்படையை மீண்டும் வலியுறுத்தி நிலைநாட்ட முடிந்திருக்கிறது.

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்குமிடையே எப்போதுமே இந்த வகையில் கருத்து ஒற்றுமை நிலவுவது இல்லை. மத்திய கிழக்கில் ஜப்பானின் சுதந்திரமான பொருளாதார நலன்களை கொய்ஸூமி வலியுறுத்தி வருகிறார். எனவே அது புஷ் நிர்வாகத்துடன் மோதல் போக்கை உருவாக்கும் ஒரு அடிப்படையாக அமையக்கூடும்.

ஜப்பான் ஈரானில் தனக்கு லாபம் தருகின்ற பெரிய எண்ணெய் வளத்திட்டத்தை மேற்கொள்தற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புஷ் நிர்வாகம் ஈரானை ''தீய அச்சு'' பட்டியலில் சேர்த்திருப்பதால் எதிர்காத்தில் ஜப்பானுடன் மோதுகின்ற வாய்ப்புக்கள் உருவாகக்கூடும். உலகிலேயே மிகப்பெருமளவிற்கு இதுவரை துரப்பணம் செய்யப்படாத எண்ணெய் வளம் இருப்பதாக கருத்தப்படும் ஈரானின் அசாடிகன் எண்ணெய் வயல்களை தோண்டுவதற்கான 2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஈரானுடன் கையெழுத்திடுவதற்கு ஜப்பான் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

ஈரான் இந்தத்திட்டத்தில் ஜப்பானை ஈடுபடுத்துவதற்கு விரும்புகிறது. புஷ் நிர்வாகம் அந்த பேரத்தை கைவிடுமாறு டோக்கியோவை வற்புறுத்தி வருகிறது. ஏனெனில் ஈரானிடம் உள்ளதாக கூறப்படும் அணு ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டத்தை அந்நாடு கைவிடச் செய்யவேண்டும் என்று புஷ் நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது. வாஷிங்டனின் உண்மையான ஆட்சேபனைக்கு அடிப்படைக் காரணம் ஜப்பான் ஈரானில் சம்மந்தப்படுவது மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் ஆசியாவிலும் எண்ணெய், எரிவாயு வளங்கள் அனைத்திலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அமெரிக்காவின் அபிலாஷையை ஜப்பான் தலையீடு வெட்டி முறிப்பதாக அமைந்துவிடும் என்று அமெரிக்கா கருதுகிறது. இந்த உண்மை ஜப்பானுக்கு தெளிவாகவே தெரியும்.

சென்ற ஜூலை Asahi Shimbun தனது தலையங்கத்தில் ஜப்பான் ஆளும் வட்டாரங்களில் இந்தப் பிரச்சனை தொடர்பாக நிலவுகின்ற வெறுப்புணர்வை வலியுறுத்தி எழுதியிருந்தது. ''ஈரானின் எண்ணெய் வயல்களை தோண்டுவதில் ஜப்பான் ஈடுபடுவது குறித்து ஜப்பான் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதில் தனது எண்ணெய் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எங்கு, எப்படி எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்வது என்ற முடிவை ஜப்பான் தனது சொந்த நலன் கருதியே முடிவு செய்யவேண்டும்'' என்று அறிவித்திருக்கிறது.

ஈரான் தொடர்பாக ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பகிரங்கமாக தகராறு வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நீண்டகால அடிப்படையில் ஜப்பான் முதலாளித்துவம் தனது எண்ணெய், எரிவாயு உயிர்நாடியை தனது மிகப்பெரும் பொருளாதார எதிரியான அமெரிக்கா முடிவு செய்வதற்கு அனுமதித்துவிட முடியாது.

Top of page