World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US budget deficit to hit half a trillion dollars

அமெரிக்க வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை அரை டிரில்லியன் டாலர்களுக்குமேல்

By Nick Beams
4 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

2004-நிதியாண்டில் 521 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை கொண்ட வரவு செலவுத் திட்டத்திற்கு திட்டமிட்டிருப்பதாக புஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது - டாலர் கணக்கில் பற்றாக்குறையிலேயே நிலைச்சான்றாக இருக்கும் இந்த அளவானது, உலக நிதி அமைப்பிற்கு அமெரிக்க கடன் பெருக்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிய மேலும் எச்சரிக்கைகளை நிச்சயமாகக் கொண்டுவர இருக்கிறது.

வளர்ந்து வரும் அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறைகளின் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கும் உலகின் ஏனைய பொருளாதாரத்திற்கும் ''முக்கியத்துவம் வாய்ந்த ஆபத்துக்கள்'' உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சென்ற மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கையை எதிரொலிக்கின்ற வகையில் அமெரிக்க பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ஜனவரி தொடக்கத்தில் முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் றொபர்ட் ரூபினை இணை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் எதிரொலித்தது.

இந்த ஆய்வு அறிக்கையை ரூபினும் பிரபல பொருளாதார நிபுணர்களான Brookings Institute சேர்ந்த peter orszag மற்றும்-Decision Economics அமைப்பைச் சேர்ந்த Allan sinai ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். அவர்கள் அமெரிக்க கூட்டாட்சி பட்ஜெட் ''தாக்குப்பிடிக்க முடியாத பாதையில் சென்று கொண்டிருக்கிறது'' மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் வரவு செலவுப் பற்றாக்குறை அளவு 5-டிரில்லியன் அளவிற்கு உயர்ந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

''நாட்டின் திட்டமிடப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெருமளவிற்கு உள்ளதால் அதனால் ஏற்படும் கடுமையான பாதக விளைவுகளை, அவை எப்பொழுது ஏற்படும் என்பதை இப்போதே சொல்வதற்கு முடியாத போதிலும், அவை மிகக் கடுமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்."

புஷ் நிர்வாகம் 2009-அளவில் பற்றாக்குறை பாதியாக குறைக்கப்படும் என்று உறுதிமொழிகளை தருவதன் மூலம் அத்தகைய கவலைகளை தணிப்பதற்கு விழைந்திருக்கிறது. ஆனால் 2004-நிதியாண்டில் பற்றாக்குறை அளவு 14 பில்லியன் டாலர்களாகவே இருக்கும் என்று திட்டமிட்டிருப்பதாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது, எனவே இப்போது வழங்கும் உறுதிமொழிகள் பற்றாக்குறையை பெரிதும் குறைக்காது.

Rubin-orszag sinai ஆய்வு அறிக்கையில் முக்கிய விவாதங்களுள் ஒன்றாக எடுத்துக்கொண்டிருப்பது காலப்போக்கில் பட்ஜெட் பற்றாக்குறைகள் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும், திடீரென்று பற்றாக்குறை ஏற்பட்டுவிடாது என்ற ''சம்பிரதாய முறையிலான கண்ணோட்டம்'' சரியான கருத்தாக இருக்க முடியாது என்பதுதான்.

''எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு கணிசமான பற்றாக்குறைகள் உருவாகும்'' என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அவற்றால் சந்தை எதிர்ப்பார்புகளில் அடிப்படை மாற்றம் உருவாகும். அதோடு தொடர்புடைய நம்பிக்கை இழப்பும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாகும். இப்படி பற்றாக்குறைகளால் உருவாகி வரும் பாதகமான விளைவுகள் பற்றாக்குறை ஆய்வுகளில் நிலவுகின்ற சம்பிரதாய கண்ணோட்டத்திலிருந்து விடுபடமுடியாவிட்டாலும், முழுவதுமாக இல்லாவிட்டாலும் மிகப்பெருமளவிற்கு விளைவுறும். இப்படிப்பட்ட குறைபாடு பற்றாக்குறைகள் சிறிய அளவிலும் தற்காலிகமாகவும் ஏற்படும் போதுதான் அதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பற்றாக்குறைகள் மிகப்பெருமளவிலும், நிரந்தரமாகவும், உருவாகின்ற சூழ்நிலையில் சம்பிரதாய பொருளாதார கண்ணோட்ட பற்றாக்குறை ஆய்வுகள் ஏற்கமுடியாதவை. நடப்பு பற்றாக்குறைகள் கணிசமான அளவிற்கு சென்று கொண்டிருக்கும்போது அவை எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் மிகக்கடுமையாக பாதிக்கும் முறையில் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த விளைவுகள் தன்னைத்தானே இயக்கிக் கொள்ளுகின்ற எதிர்மறை பொருளாதார ''சூழற்சியை'' நிதிபற்றாக்குறை, நிதி சந்தைகள் மற்றும் உண்மையான பொருளாதாரம் இவற்றின் அடிப்படைகள் மத்தியில் ஏற்படுத்திவிடும்" என்று அவர்கள் எழுதுகிறார்கள்.

இப்படிப்பட்ட எதிர்மறையான பொருளாதார சுழற்சியினால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழப்பார்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் டாலர் அடிப்படையில் அமைந்த சொத்துக்களை உதறிவிட்டு முதலீடுகளை வேறு நாணயத்திற்கு மாற்றிக்கொள்வார்கள். இதன் மூலம் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் வட்டிவிகிதங்கள் உயரும். அது பங்கு விலைகளில் வீழ்ச்சிக்கும், மற்றும் குடும்பச் சொத்துக்களில் குறைவிற்கும் இட்டுச்செல்லும். இதன் விளைவு மேலும் நம்பிக்கை இழப்புக்கு வழிவகுக்கும், இப்பொழுதே தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரச்சனை மேலும் சிக்கலாகும். மற்றும் "எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிதிவருவாய் கொள்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுகின்ற சாத்தியக்கூறுகளை அதிகமாக்கும்" என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

நிதி வருவாய் திட்டங்களின் மீதான இதர ஆய்வுகள் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்ற அளவுகளைவிட பிரச்சனை மிக அதிகமானது என்பதை விளக்குகின்றன.

ஜனவரி 6-ல் நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (CBO) பற்றாக்குறை தொடர்பாக புதிய மதிப்பீடுகளை வெளியிட்டது. 2004-மற்றும் 2013- ஆண்டுகளுக்கிடையில் வளர்வீத பற்றாக்குறை அளவு 2.3 டிரில்லியன் டாலர்களை தொடும் என்று குறிப்பிட்டது. இது குறைந்த மதிப்பீடு செய்யப்பட்டது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வரவு-செலவுத் திட்டம் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் தொடர்பான அமைப்பு நடத்திய ஆய்வு பெப்ரவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. ஏற்கனவே CBO- மதிப்பீடுகளில் விடுபட்ட சில செலவினங்களையும் சேர்த்துக் கொண்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை 5.2-டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது.

இப்படி பட்ஜெட் பற்றாக்குறை பெருகிக் கொண்டு போவதற்கு காரணம் உள்நாட்டில் அரசாங்கம் செலவினங்களை அதிகரித்ததால் அல்ல, மாறாக புஷ் செய்த வரி வெட்டுக்களின் விளைவாகும். அவை பிரதானமாக பணக்காரர்களுக்கு சலுகைதருவது மேலும் இராணுவத்திற்கும் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் அதிக அளவில் செலவிடுவதை நோக்கங் கொண்டது. வரி வெட்டுக்களின் விளைவாக 2004-ல் வரி வசூலிப்பு அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP-ல்) 15.8 சதவீதமாக இருக்கும், இது 1950-க்கு பின்னர் மிகக்குறைந்த வரி வசூல் அளவாகும். வரும் பத்து ஆண்டுகளில் வரி வசூல் அளவு சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.1-சதவீதமாக இருக்கும். 20-ம் நூற்றாண்டில் 2-வது பாதியில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் வசூலான வரி வருவாய் அளவுகளைவிட இது குறைவாகும்.

CBO- 2001-ஜனவரியில் வெளியிட்ட மதிப்பீடுகளின் படி 2011 வரையிலான 10 ஆண்டுகளில் பொருளாதார உபரிகள் மூலம் 5 டிரில்லியன் டாலர்கள் சேர வேண்டும். தற்போது அதே 10 ஆண்டுகளில் பற்றாக்குறை அளவு 4.3 டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. பட்ஜெட் ஆய்வுநிலைய அறிக்கையின்படி இதில் 9.3 டிரில்லியன் டாலர்கள் புஷ் நிர்வாகம் கொண்டுவந்த வரி வெட்டுக்களால் குறைந்துவிட்ட வருவாயாகும். மேலும் 28-சதவிகிதம் கூடுதல் செலவினங்களால் ஏற்பட்ட வருவாய்க்குறைவாகும். இந்த கூடுதல் செலவினங்களில் மூன்றில் இரண்டு பங்கு இராணுவ செலவு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக'' செலவிடப்பட்ட தாகும். புதிய செலவினங்களில் 25-ல் ஒரு பகுதி உள்நாட்டு பாதுகாப்பிற்கும் வெளியில் உள்நாட்டு சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டதாகும். 2001-ல் CBO- அளவிற்கதிகமான நம்பிக்கையோடு மதிப்பிட்டதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது. இப்படி பெருகிக்கொண்டு வருகின்ற பட்ஜெட் பற்றாக்குறைகளின் காரணமாக உருவாகின்ற ஆபத்துக்களோடு அந்நியச்செலாவனி செலுத்துகைச் சமநிலையில் ஏற்படுகின்ற பற்றாக்குறையும், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை செயல்பாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் Sherle R.Schwenninger ''அமெரிக்காவின் சூயஸ் நேரம்''என்ற தலைப்பில் Atlantic Monthly-TM நடப்பு பதிப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் தந்துள்ள விளக்கங்களின் படி இராணுவ வலிமையில் அமெரிக்காவிற்கு நிகரான நாடு இல்லை. ஆனால் அமெரிக்க பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளை நம்பியே உள்ளது. இப்போது சீனாவும், ஜப்பானும், மிகப்பெருமளவிற்கு அமெரிக்காவின் கடன் பத்திரங்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றன. அதன் மூலம் "அமெரிக்க வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெருமளவிற்கு தளர்வை ஏற்படுத்த நெம்புகோலியக்கமாக்க" முடியும். வட கொரியா மீது படையெடுப்பதென்று அமெரிக்கா முடிவு செய்துவிடுமானால், அத்தகைய குறிப்பான கொள்கை முயற்சிகளுக்கு சீனா உடன்படவில்லையென்றால் அமெரிக்காவின் கருவூல பத்திரங்கள் மற்றும் சீனா வசமுள்ள டாலரை அடிப்படையாகக்கொண்ட சொத்துக்கள் ஆகியவற்றை சந்தையில் விற்பனைக்கு குவிக்க ஆரம்பிக்கும், அப்போது டாலரின் மதிப்பு மிக கடுமையான அளவிற்கு வீழ்ச்சியடையும். அதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் "பெரிய நெருக்கடி" ஏற்படும்.

அந்தக்கட்டுரை மேலும் சுட்டிக்காட்டுவதாவது: ''சீனாவும், ஜப்பானும் திட்டமிட்ட பொருளாதார சிதைவு ஏற்படுத்த வேண்டும் என்ற நனவுபூர்வமான விரோதத்தால் நடவடிக்கை எடுக்காமல் கூட இருக்கலாம் ஆனால் தற்செயலாக நடக்கின்ற ஒரு சம்பவத்தின் மூலம் அந்த நாடுகள் நாணய நெருக்கடியை ஏற்படுத்திவிட முடியும். அந்நாடுகள் மேற்கொள்கின்ற தவறான கொள்கை முடிவுகள் காரணமாகவோ அல்லது தங்களது சொந்த பொருளாதாரங்களில் ஏற்படுகின்ற குழப்பத்தின் காரணமாகவோ, இந்த விபத்து நடந்துவிடலாம். இந்த இரண்டு நாடுகளுமே பலவீனமான வங்கிக்கட்டுக்கோப்பு உள்ளவை. வராக்கடன்கள், சுமை அதிகமாக உள்ள வங்கிகள் தான் அவ்விரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. அந்த வராக்கடனை திரும்ப எப்போதும் வசூலிக்க முடியாது. ஜப்பானின் வங்கி நிர்வாக கட்டுக்கோப்பு சீர்குலைந்துவிடுமானால் அது அமெரிக்காவின் மிக்ப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் நீண்ட காலமாகவே ஒரு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றனர். அதே போன்ற கடுமையான பிரச்சனைகள்தான் சீன வங்கி நெருக்கடியாலும் உருவாகும்.''

Schwenninger ஏகாதிபத்திய மேலாதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளை தனது கட்டுரையில் நினைவுபடுத்தியுள்ளார். இன்றைக்கு அமெரிக்கா உள்ள நிலைக்கு நேர்மாறாக பிரிட்டன் நிகர முதலீடுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது. அப்படியிருந்தும் இந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தது, 1956-ல் வல்லரசு நிலையிலிருந்து அது தள்ளப்பட்டு விட்டது சூயஸ் கால்வாய் பற்றிய மோதலில் அமெரிக்காவுடன் பிரிட்டன் மோதிக் கொண்டதில் தெளிவாகியது. ''அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்கள் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பிரிட்டன் மண்டியிட்டது அதன் இராணுவ தோல்வியால் அல்ல, பொருளாதார தோல்வியால்தான். குறிப்பாக அமெரிக்கா பிரிட்டனின் பவுன் நாணயத்திற்கு ஆதரவுதர மறுத்துவிட்டது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டது. எகிப்து சூயஸ்கால்வாயை தேசியமயமாக்கிய பின்னர் பிரான்சு மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து தவறான அடிப்படையில் நடத்திய இராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சர்வதேச கடன் வளரும் பொது அமெரிக்கா என்றுமில்லாத வகையில் தனது சொந்த சூயஸ் தருணத்திற்கு அதிக அளவில் இலக்காகின்ற நிலை ஏற்படும்.''

Schwenninger, வெளிநாட்டு கொள்கை அணுகுமுறையில் அதிக அளவில் பல்நோக்கு நடைமுறைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். பெருகிக்கொண்டு வரும் பொருளாதார சங்கடங்களால் புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெளிவாக அவர் நம்புகிறார். அத்தகைய நம்பிக்கைகள் தவறானவை அதற்கு மாறாக பொருளாதார சங்கடங்களை சமாளிப்பதற்கு மேலும் அதிகளவில் ராணுவ வலிமையை பயன்படுத்துகின்ற அளவிற்குத்தான் அமெரிக்கா செல்லும். வாஷிங்டனில் எந்த நிர்வாகம் இருந்தாலும் இதுதான் நிலை என்பதை தர்க்கரீதியாக 70 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி 1920-களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி பற்றிய தனது ஆய்வில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொருளாதார சிக்கல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு கட்டுத்திட்டத்திற்குள் கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை குறித்து அவர் எழுதும்போது, அத்தகைய நம்பிக்கையை மிக அப்பட்டமான தவறுகளாகவே ஆகிவிடும் என்றார். ''அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு நெருக்கடி ஏற்படுகின்ற காலகட்டத்தில் அமெரிக்கா முழுமையாகவும், பகிரங்கமாகவும் மற்றும் பொருளாதார செழுமைக் காலத்தைவிட அதிக கொடூரமாகவும் செயல்படும். அமெரிக்கா தனது சங்கடங்களிலிருந்து விடுபடுவதற்கு தனது எதிரிகளை பலியிடும், இது ''அமைதியான முறையிலும் நடக்கலாம் அல்லது போர் மூலமும் நடக்கலாம்''.

Top of page