World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's constitutional coup thrusts JVP to political prominence

இலங்கையின் அரசியலமைப்பு சதி ஜே.வி.பி யை அரசியல் முக்கியத்துவத்தை நோக்கித் தள்ளியுள்ளது

By Nanda Wickramasinghe and K. Ratnayake
12 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்து ஒரு வாரம் ஆவதற்கு முன்னரே இந்த அரசியல் நெருக்கடியில் உண்மையான வெற்றியாளன் அவரது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) அன்றி, மக்கள் நலன்சார்ந்த வாய்வீச்சுக்களையும் மற்றும் சிங்கள பேரினவாதத்திற்கு அழைப்புவிடுப்பதையும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி) ஆகும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது.

ஐ.தே.மு. அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் உடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாட்டை காட்டிக் கொடுப்பதகாவும் வெளிநாட்டு நிதி நலன்களுக்கு இழுபட்டுச் செல்வதாகவும் பல மாதங்களாகவே குற்றம்சாட்டி வந்த ஜே.வி.பி தலைவர்கள், அதை பதவி விலக்குவதற்காக குமாரதுங்க தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என கோரி வந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு ஜனாதிபதி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ஜே.வி.பி தலைமையை உற்சாகமூட்டியதோடு, நடைமுறையில் உள்ள சக்திகளை அதிகரித்தளவில் அவருடைய கட்டுப்பாட்டுக்கு அப்பால் இட்டுச் சென்றுள்ளன.

நவம்பர் 4 அன்று மூன்று முக்கிய அமைச்சுக்களின் பொறுப்புக்களை அபகரிக்கவும் பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கவும் குமாரதுங்க எடுத்த தீர்மானத்தை வரவேற்பதிலும் மற்றும் அவர் மேலும் முன்செல்ல வேண்டும் என வலியுறுத்துவதிலும் ஜே.வி.பி முதலாவதாக இருந்தது. இந்தக் கட்சி ஸ்ரீ.ல.சு.க வுடன் ஒரு கூட்டுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்த போதிலும், அது தனக்கு மிகவும் சாதகமான ஒரு விடயத்தில் மட்டுமே தங்கியிருந்தது. அது ஜே.வி.பி யின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றான முன்கூட்டிய பொதுத் தேர்தலாகும்.

சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு வகைசெய்வதற்காக அரசாங்கத்துடன் சமரசத்திற்கு செல்லக்கோரும் பெரும் வியாபாரிகள் மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தங்களையிட்டு எச்சரிக்கையாக இருந்த குமாரதுங்க, உண்மைகளை மறைத்துவிட்டார். அவரது சொந்த கட்சியினுள்ளேயே, ஜே.வி.பி உடனான கூட்டை விரும்பாத மற்றும் விக்கிரமசிங்கவுடனான கூட்டுக்கு பரிந்துரைக்கும் குறிப்பிடத்தக்க பகுதியினருடன் ஆழமான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய முன்னணியில் ஸ்ரீ.ல.சு.க வின் முன்னைய பங்காளிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும் (ல.ச.ச.க) கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இதை எதிர்த்தன. ஸ்ரீ.ல.சு.க வின் வீழ்ச்சியை நிலை நிற்துவதற்கான ஒரேவழி ஜே.வி.பி யுடனான கூட்டே என ஏனைய தட்டினர் வாதாடினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு) எனப்படும் புதிய கூட்டணி ஜனவரி 20ம் திகதி அமைக்கப்பட்டது. ஜே.வி.பி தலைமைத்துவம் உடனடியாக ஒரு பொதுத் தேர்தலுக்கான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தது. ஜனவரி 29 அன்று கொழும்பில் நடந்த கூட்டணியின் முதலாவது கூட்டத்தில், ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் எதிர்காலத் தேர்தல்கள் தொடர்பாக தெளிவற்றுப் பேசினர். ஆயினும், ஜே.வி.பி தலைவர்களான சோமவன்ச அமரசிங்கவும் விமல் வீரவன்சவும் விரைவில் ஒரு பொதுத் தேர்தல் நடைபெறும் என வலியுறுத்தனார்.

ஸ்ரீ.ல.சு.க தலைமைகளுக்கிடையிலான கசப்பான மோதல்கள் பெப்பிரவரி 1ல் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் தீர்த்து வைக்கப்பட்டன. அதை அடுத்து, பெப்ரவரி 5 அன்று அமைப்பாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பெப்பிரவரி 6 அன்று, குமாரதுங்க அரசாங்கத்தை பதவி விலக்கப் போகிறார் என்ற வதந்திகளுக்கு மத்தியில் இந்தக் கூட்டணி ஒரு அரசியல் கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்டது. மறுநாள் நள்ளிரவு குமாரதுங்க விக்கிரமசிங்கவிற்கோ மற்றைய அரசாங்கத் தலைவர்களுக்கோ அறிவிக்காது பாராளுமன்றத்தை கலைத்தார்.

அன்றில் இருந்து ஜே.வி.பி குமாதுங்கவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆதரிப்பதிலும், ஐ.தே.மு அரசாங்கத்திற்கு எதிராக அவர் மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோருவதிலும் முன்னணியில் நின்றது. ஜே.வி.பி யின் உத்தரவின் பேரில், ஜனாதிபதி நேற்று 39 உப அமைச்சர்களை பதவிநீக்கியதோடு, அவர்களது அலுவலகம், வாகனங்கள், ஏனைய உபகரணங்கள் மற்றும் சலுகைகளையும் அபகரித்தார். "பொதுச் சொத்தை சட்டவிரோதமாக கையாடிய குற்றவாளிகள்" என அவர்கள் மீது குற்றம் சுமத்தியதோடு, அவர்களுக்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நடவடக்கைகளை எடுப்பதாகவும் அச்சுறுத்தினார். மேலும் முன்னேறிய ஜே.வி.பி, "நேர்மையற்ற" அமைச்சரவை அமைச்சர்களையும் பதவி விலக்குமாறு குமாரதுங்கவுக்கு அழைப்புவிடுத்தது.

தனது கட்சியின் பத்திரிகையில் இருந்து மேற்கோள் காட்டிய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, "மோசடி" என்ற பதத்தை பற்றிக்கொண்டு, நான்கு வருடத்திற்குள் ஒரு மூன்றாவது தேர்தலை நடத்துவதற்கான செலவுகளையிட்டு விமர்சனம் செய்த ஆளும் வட்டாரத்தில் உள்ளவர்களை இழிவாகப் பேசினார். "ஒரு தேர்தலுக்கு 450 மில்லியன் ரூபாய்கள் செலவுசெய்யப்பட வேண்டும் என அரசாங்கம் சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் வஞ்சனையாலும் மோசடியாலும் எவ்வளவு இழக்கப்படும்?" என அவர் பிரகடனப்படுத்தியிருந்தார். "இந்த அரசு கள்ளர்களை பாதுகாக்கின்றது ஆனால் உண்மையான வியாபாரிகளுக்கு இடமளிக்கப்படவில்லை... மில்லியன் கணக்கான ரூபாய்களை வீணடிக்கிறது. எனவே உடனடி பொது தேர்தல் ஒன்று அவசியமாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

"உண்மையான வியாபாரிகளுக்கான" அமரசிங்கவின் அழைப்பு ஒரு குறிப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறிய விவசாயிகளுக்கும் அழைப்பு விடுப்பதன் பேரில், ஜே.வி.பி 1960களில் அது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்னமும் சில சந்தர்ப்பங்களில் மா ஓ வாத மற்றும் காஸ்ட்ரோவாத வாய்வீச்சுக்களை பிரயோகித்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தின் மிக புத்திநுட்பமுள்ள தட்டினருக்கு ஜே.வி.பி ஒரு உண்மையான சோசலிச கட்சியாக இருந்தது கிடையாது என்பது நன்கு தெரிந்திருந்தபோதிலும், அது தன்னை தனியார்மயத்திற்கும் "வெளிநாட்டு கோப்பரேஷன்களுக்கும்" எதிரானதாக காட்டிக்கொள்வதானது பொருளாதார மறுசீரமைப்பை நடைமுறைபடுத்துவதற்கு மேலதிகத் தடையாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவே அமரசிங்கவின் குறிப்புக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அது விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்வதற்காகவே அவர் கூட்டணி ஒரு "மோசடியற்ற" சூழலை உறுதிப்படுத்தும் என கூறத் தள்ளப்பட்டார். "ஒரு கூட்டணி அரசாங்கம் அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்தி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் என்பதை நான் தெளிவாக இங்கு குறிப்பிடுகிறேன். முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என யாரும் குழப்பமடைய தேவையில்லை." என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

ஜே.வி.பி தலைவர்கள் ஸ்ரீ.ல.சு.க உடனான கூட்டையும் தேர்தல் பிரச்சாரத்தையும் தம்மை அரச அதிகாரத்திற்கு ஒரு படி அருகில் கொண்டுவருவதற்காக பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர். இந்தக் கட்சி, முன்னைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசினாலும் ஐ.தே.மு அரசினாலும் அமுல்படுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பினால் மோசமாக பாதிப்பிற்குள்ளான வறிய கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள் மற்றும் இளம் தட்டினருக்கும் நேரடியாக அழைப்பு விடுக்கின்றது. சாதாரண மக்கள் ஜே.வி.பி யின் நச்சு இனவாத அரசியலுக்கு இணங்காத போதிலும், இரு பிரதான கட்சிகளுக்கும் ஒரு மாற்றீடாக அதை கருதுகின்றனர். முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதற்காக உறுதிபூண்டுள்ள ஜே.வி.பி, இந்த அமைப்பில் நடைமுறைப்படுத்த முடியாத முற்றிலும் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அதேவேளை, இந்த அதிருப்திகளை மிகைப்படுத்துவதன் மூலம் சந்தர்ப்பவாதமான முறையில் அதை சுரண்டிக்கொள்கிறது.

ஜே.வி.பி, பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முந்திய வாரங்களில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிரான அதனது ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்தியது. புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம், சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரச்சாரம் மற்றும் தொழிற்துறை சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதில் அது முன்னணி பாத்திரம் வகித்தது. ஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ் உரத்தின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் கடந்த வாரம் கொழும்பில் ஒரு கண்டனப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். தேர்தல் அறிவித்தவுடனேயே இந்தக் எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்த ஜே.வி.பி, எதிர்கால "கூட்டணி அரசாங்கம்" இத்தகைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என பிரகடனப்படுத்தியது.

கூட்டணிக்குள் தனக்கு அடக்கியாளும் சக்தி இருக்கும் என ஜே.வி.பி கணக்கிடுகிறது. ஸ்ரீ.ல.சு.க பழமைவாய்ந்த, பெரிய மற்றும் மிகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கட்சியாக இருந்த போதிலும், 1994 முதல் 2001 வரையிலான எட்டு வருட ஆட்சியில் ஆழமான அதிருப்திக்குள்ளாகியுள்ளது. ஜே.வி.பி கூட்டணி மேடைக்கான அரசியல் அடித்தளத்தை ஆளுமை செய்கிறது. அது, ஐ.தே.மு வெளிநாட்டவரின் நலன்களுக்கும் மற்றும் விடுதலைப்புலிகளுக்கும் நாட்டை காட்டிக் கொடுப்பதாக கண்டனம் செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. ஐ.தே.மு வுக்கு எதிரான கூச்சலிடும் பேரினவாத பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுவதோடு இதில் ஜே.வி.பி யின் பேச்சுவன்மையுள்ள பிரசங்கிகள் முக்கிய பாத்திரம் வகிப்பர் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆழமான அரசியல் நெருக்கடி

தற்போதைய சூழ்நிலையில் ஜே.வி.பி யின் முக்கியத்துவமானது, இலங்கை முதலாளித்துவ அரசியலின் அழுகிப்போன தன்மையினதும், தற்போதைய நெருக்கடியின் ஆழத்தினதும் மிகத் தெளிவான வெளிப்பாடாகும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்தக் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. 1980களின் கடைப்பகுதியில், உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கான இலங்கை முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினரின் முதல் முயற்சியான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான கொலைகார பிரச்சாரத்துக்கு அது தலைமை வகித்தது. நாட்டை பாதுகாத்தல் என்ற பெயரில், அதன் கொள்கைகளுடன் உடன்பட மறுக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்க அலுவலர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை ஜே.வி.பி யின் குண்டர்ப்படை கொலை செய்தது.

1994ல் குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் ஜே.வி.பியை மீண்டும் உத்தியோகபூர்வ அரசியலுக்கு கொண்டுவந்தார். ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள சில பிரிவினர், அதிகரித்துவரும் சமூக பதட்டநிலைமைகளுக்கு மத்தியில் இக்கட்சியை பயனுள்ள சாத்தியமான அழுத்தம் குறைக்கும் கதவாக கருதினர். ஜே.வி.பி தலைவர்கள் தாம் கூட்டுத்தாபன வட்டாரங்களின் கவனத்திற்குள்ளாவதைக் கண்டதோடு, அவர்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி 81,560 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது.

அடுத்து வந்த தசாப்தத்தில் நடந்த தேர்தல்களில் ஜே.வி.பி பெற்ற வெற்றியானது, சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியோ இலாயக்கற்றுப் போனதன் வெளிப்பாடேயாகும். ஜே.வி.பி கடந்த ஐம்பது ஆண்டு காலமாக இலங்கையில் உள்ள எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளாலும் பயன்படுத்தப்பட்ட அதே தமிழர் விரோத பேரினவாத அரசியல் சீட்டை சாதாரணமாகவும், குறிப்பாக தீவிரமான முறையிலும் விளையாடியது.

2000ம் ஆண்டில் குமாரதுங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக அரசியல் அமைப்பு திருத்தப் பிரேரணைக்கு அங்கீகாரம் பெற முற்பட்டபோது, ஜே.வி.பி விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க) சேர்ந்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு பேரினவாத பிரச்சாரத்தை மேற்கொண்டது. தற்போது விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், அவரது ஐ.தே.மு அரசாங்கம் ஜே.வி.பி யின் அரசியல் தாக்குதலின் இலக்காகியுள்ளது.

ஜே.வி.பி இரு கட்சிகளினுடைய, குறிப்பாக சிங்கள தேசியவாதத்திற்கு நேரடியாக அழைப்பு விடுப்பதன் மூலம் கிராமப்புறங்களில் தனது ஆதரவை கட்டியெழுப்பிய ஸ்ரீ.ல.சு.க வின் செலவில் பயனடைந்துள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் ஜே.வி.பி 518,774 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை வென்றது. 2001ம் ஆண்டில் குமாரதுங்கவின் அரசாங்கம் கவிழ்ந்தபோது இந்த பேரினவாதிகள் அதே ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில் தனது வாக்குகளை 815,353 ஆக அதிகரித்துக்கொண்டதோடு 16 ஆசனங்களை பெற்றனர்.

தற்போது ஜே.வி.பி பெரும் வெற்றிகளை எதிர்பார்த்துள்ளது. ஸ்ரீ.ல.சு.க உடனான கூட்டணிக்கு விலையாக எதிர்வரும் தேர்தலில் அது 42 தொகுதிகளை ஒதுக்கிக்கொண்டுள்ளது. இவை நிச்சயமாக ஜே.வி.பி யின் செல்வாக்கு பலமாக உள்ள பிரதேசங்களாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் அங்கு ஸ்ரீ.ல.சு.க இல்லாத சூழ்நியில் அப்பிரதேசங்களில் வெல்ல நினைக்கின்றது. இத்தகைய பெரும் பகுதியினுள், ஜே.வி.பி தலைமைத்துவம் விவகாரங்களில் அதிகரித்தளவில் செல்வாக்கு செலுத்துவதற்கான பலமான நிலைமையைக் கொண்டிருப்பதாக உணர்கின்றது.

கடந்த மூன்று மாதகால அரசியல் ஸ்தம்பித நிலையானது, ஆளும் வர்க்கம் முகம்கொடுத்துள்ள அடிப்படை தர்மசங்கடநிலையை பிரதிபலிக்கின்றது. கொழும்பில் உள்ள பெரு வர்த்தகர்களில் ஒரு பகுதியினர், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும் தீவை பூகோள உற்பத்தி போக்குடன் ஒருங்கிணைக்கவும் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டவும் விரும்புகின்றனர். ஆனால் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதில், முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும் அவர்களால் போஷித்து வளர்க்கப்பட்ட தசாப்தகால இனவாத அரசியலின் மரபுவழி பெறுபேற்றை எதிர்கொள்கின்றனர்.

தேர்தல் நெருக்கடியில் இருந்து விடுபட தேர்தல் எதுவும் செய்யப்போவதில்லை. ஐ.தே.மு மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் குமாரதுங்கவுக்கும் ஐ.தே.மு வுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்வதோடு உக்கிரமடையும். ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி வெற்றிபெற்றால் நாடு மீண்டும் யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வசதியான திருமணத்தில் அடங்கியிருக்கின்ற முரண்பாடுகள் உடனடியாக வெளிக்கிளம்பும். அரசியல் நிறுவனத்தில் உள்ள வெடிப்பின் ஆழமும், முதலாளித்துவ ஜனநாயக நுட்பத்தில் அழமடைந்துவரும் சமூக துருவப்படுத்தல்களால் தோற்றுவிக்கப்பட்ட பதட்டநிலைமைகளும் அவர்களையே களைப்படையச் செய்துள்ளன.

குமாரதுங்கவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு ஜே.வி.பி யின் உற்சாகமான ஆதரவானது, அது பாராளுமன்றத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு ஆட்சிக்கான ஆளும் வர்க்கத்தின் தேவைக்காக தனது சேவையை அர்ப்பணிக்கின்றது என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியான ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவின் கருத்துக்கள், ஜே.வி.பி ஜனநாயக உரிமைகளை அவமதிப்பதன் சுருக்கமாகும். ஜனாதிபதியின் நடவடிக்கையை ஆதரித்த அவர், "மக்களின் ஆணையும் பொதுமக்களின் அபிப்பிராயமுமே முக்கியமானதாகும், பாராளுமன்ற பெரும்பான்மை அல்ல" என மொட்டையாகப் பிரகடனம் செய்தார்.

வீரவன்சவின் கருத்துக்கள் அவர்களைப் பற்றிய பாசிச புகைச்சலைவிட மேலதிகமானதை கொண்டுள்ளது. அரசாங்கத்தை வெளியேற்றக் கோரி பரந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை. மேலும் கடந்த தசாப்தத்தில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் மக்களில் பெருந்தொகையானோர் சமாதானத்தை விரும்புவதையே வெளிக்காட்டியுள்ளது. அவர்கள் யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்புகின்றனர். இருப்பினும், ஜே.வி.பி "மக்களின் விருப்பம்" என கர்வமாக உச்சரித்து வலியுறுத்துகிறது.

ஜே.வி.பி வாக்குகளின் மூலம் வெற்றிபெறாவிட்டால், அது ஸ்ரீ.ல.சு.க உடனோ அல்லது தனியாகவோ வேறுவழிகளைப் பயன்படுத்த தயங்காது எனும் வீரவன்சவின் கூற்று தொழிலாளர் வர்க்கத்துக்கான தெளிவான எச்சரிக்கையாகும்.

See Also :

இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தை பதவிவிலக்கியதை அடுத்து மெளனம் சாதிக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்

ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது

Top of page