World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Schröder resigns as party chairman

ஜேர்மனி: கட்சித்தலைவர் பதவியிலிருந்து ஷ்ரோடர் ராஜிநாமா

By Peter Schwarz
12 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

நாடாளுமன்றத்தில் SPD- குழுவிற்கு தலைவராக Franz Muentefering வருவதற்கு ஆதரவாக ஜேர்மனியின் அதிபர் ஷ்ரோடர் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். சென்ற வெள்ளியன்று அவசரமாக அழைக்கப்பட்ட நிருபர்கள் கூட்டத்தில் இந்த வியப்பூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தநாள், கட்சியின் செயற்குழு புதிய தலைவராக Muentefering-யை உறுதி செய்தது. கட்சியின் சிறப்பு மாநாட்டில் மார்ச் 21-ல் அவர் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

சமூக ஜனநாயகக் கட்சித் தலைவராக ஷ்ரோடர் ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகிறார். Oskar Lofonitaine- இடமிருந்து தலைவர் பதவியை ஷ்ரோடர் ஏற்ற பின்னர் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் மொத்த வாக்குகளிலும் கடுமையான சரிவு ஏற்பட்டது. சென்ற ஆண்டில் மட்டும் SPD- தனது உறுப்பினர்களில் ஏறத்தாழ 10 சதவீதம் பேரை இழந்துவிட்டது- மொத்தம் 63,000 பேர். 1990-ல், பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, அப்போது கட்சிக்கு 9,50,000-பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இன்றைய தினம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6,50,000-ஆக குறைந்துவிட்டது. வாக்குப் பதிவில் SPD வரலாற்றிலேயே மிகக் குறைந்தளவிற்கு 24 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. சென்றமுறை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்நடைபெற்ற நாடாளுமன்ற (Bundestag) தேர்தலில் 38.5-சதவீத வாக்குகளை கட்சி தக்கவைத்துக்கொண்டது.

சென்ற வாரம், Frankfurter Rundschau பன்னிரண்டு உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை பிரசுரித்திருந்தது. ஜனவரி மாதத்தில் இவர்கள் விலகியிருப்பது கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி ஆழ்ந்த பார்வையை கொண்டுள்ளது: ஷ்ரோடரின் நலன்புரி வெட்டு கொள்கை உள்ளடக்கிய ''செயற்பட்டியல் 2010'' என்று அழைக்கப்படுவதன் மேலான ஆத்திரத்தையும் கடுஞ்சினத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

''கடந்த 33 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இருந்த நான் ராஜினாமா செய்திருக்கிறேன், ஒரு காலத்தில் கட்சி சமுதாயத்தின் பலவீனமான பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது.'' என்று ஒரு கடிதம் குறிப்பிட்டது. "கோலையும் (முந்திய பழமைவாத ஜனாதிபதி) அதிபர் ஷ்ரோடர் மிஞ்சும் வகையில் படுமோசமாகவிட்டார்; மற்றவர்களெல்லாம் மாறக்கூடிய பிழைப்புவாதிகள், Brandt, Wehner அல்லது ஏனைய நேர்மையான சமூக ஜனநாயகவாதிகளின் கருத்துக்களை கைவிட்டுவிட்டார்கள். 1977 ஜனவரி 21-ல் நான் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு உந்துதலாயிருந்த கொள்கைகள் அனைத்தையும் SPD- தற்போது கைவிட்டுவிட்டது'' என்று மற்றொரு சமூக ஜனநாயக கட்சியாளர் எழுதியிருக்கிறார்.

மற்றொரு முன்னாள் உறுப்பினர் எழுதுகிறார்: நான் ஒரு மாணவனாக இருந்தபோது SPD- கட்சியின் உறுப்பினரானேன் இன்றையதினம் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கிற நான் அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். நான் இனி ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு, கட்சியின் அரசியல் முடிவுகள் சென்று கொண்டிருக்கின்றன.'' மற்றொருவர் எழுதுகிறார்: ''இன்று கட்சியின் குறிக்கோள்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் நான் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அவர்களது சீர்திருத்தங்கள் ஒரு மோசடியாய் இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலாளி மற்றும் வரி செலுத்துவோரின் கன்னத்தில் அறைவது போன்றுள்ளது. ஜனாதிபதி, மற்றும் கட்சியினுடைய வேலை இப்போது நாசம் விளைவிப்பவையாக ஆகிவிட்டன.''

இப்படி எழுதிய விலகல் கடிதங்கள் அந்தப் பத்திரிகையின் ஒருபக்கம் முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கின்றன.

''சீர்திருத்தங்களின்'' தீவிரப்போக்கு

எவ்வாறாயினும், ஷ்ரோடர் ராஜிநாமா நடவடிக்கை, போக்கின் மாற்றத்தை அல்லது ஆழமாய் மக்கள் ஆதரவை இழந்துவிட்ட ''சீர்திருத்தங்கள்'' தொடர்பான விரிவான விவாதங்களை தொடக்கிவைப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு மாறாக கட்சியில் எந்தவித விவாதத்தையும் அடக்கி ஒடுக்குவதற்காகவே Muentefering தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

ஷ்ரோடர் தனது நடவடிக்கை போக்கிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தவித சிந்தனையுமில்லாதவர். தான் ராஜிநாமா செய்ததை அவர் நியாயப்படுத்தினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில் அரசாங்க தலைவர் என்ற முறையில் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் தான் உறுதியோடு இருப்பதாக விளக்கினார். சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் சங்கடங்கள் ஏற்படக்கூடுமென்பதால் ''பணிகளை பிரித்துக் கொள்ளுகின்ற'' நோக்கில் Muentefering-யை தலைவராக்கிட தான் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். ''சீர்திருத்தங்களின் அவசியம் மற்றும் அதன் உள்ளடக்கம்'' தொடர்பாக தனக்கும் Muentefering- க்கும் ''ஒரே சிந்தனைதான்'' என்றும் குறிப்பிட்டார்.

''எந்த வகையிலும் பின்னோக்கிச் செல்லக்கூடாது, செல்ல முடியாது என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருக்கிறோம். அப்படியே முடிவும் செய்துவிட்டோம்'' என்று Muentefering உறுதிப்படுத்தினார். ''சீர்திருத்தங்களுக்கு ஆதரவு திரட்டுவதில் தனது பங்களிப்பைத்தர'' அவர் விரும்புவதாகக் கூறினார். கட்சிக்குள் சீர்திருத்தங்கள் பற்றி நடைபெற்றுவரும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் கோரினார். ''ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

திடீரென்று உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பீதிகொண்டுள்ள கட்சி செயல்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்காக அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு ஐந்து மாநிலத் தேர்தல்களும் எட்டு உள்ளாட்சி தேர்தல்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல்களும் நடைபெறவிருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளே வரும் தேர்தல்களிலும் உறுதிப்படுத்தப்படுமானால் SPD- கட்சிக்கு அழிவு ஒன்று அச்சுறுத்தும், பல தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை இழக்க வேண்டிவரும், அத்துடன் தொடர்ந்து வந்த சலுகைகளையும் இழக்க வேண்டிவரும். ஷ்ரோடர் கடைப்பிடித்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் பிராந்திய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கும் புகார்கள் அண்மை வாரங்களில் அதிகரித்து வருகிறது.

ஜனவரியில் தலைமை மாற்றம் தொடர்பாக Muentegering- உடன் ஏற்கனவே விவாதித்திருப்பதாக ஷ்ரோடர் கோடிட்டுக் காட்டினார். கட்சி செயற்குழு கூட்டத்தில் பெப்ரவரி மாதம் நடுவில் அறிவிப்பு வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் வாக்குப்பதிவுகளில் சரிவு ஏற்பட்டதும், பத்திரிகைகளில் பாரதூரமான தலைப்புக்கள் வெளியிடப்பட்டதும் மற்றும் கட்சிக்குள் பலத்த குரலில் கண்டனங்கள் அதிகரித்ததும் ஆகிய இவற்றின் விளைவாக ஷ்ரோடர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார். சென்ற வெள்ளியன்று அவசரமாக நிருபர் கூட்டம் அழைக்கப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்னர் அவர் மிக முக்கியமான செயற்குழு உறுப்பினர்களுக்கும் பசுமைக் கட்சி துணைத்தலைவர் ஜோஸ்கா பிஷ்ஷருக்கும் தகவல் கொடுத்துவிட்டார்.

ஷ்ரோடரின் அணுகுமுறை முழு அமைப்பின் முழுமையான ஜனநாயக விரோத குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கட்சியின் மிக முக்கியமான பதவியை மாற்றுகின்ற தனது திட்டம் தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்கவில்லை. சம்பவம் நடந்த பின்னர் தனது முடிவிற்கு ஆராயாது அங்கீகரிக்கும் முத்திரை குத்துவதற்குத்தான் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். எந்த வகையான விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அதில் முழு அரசியல் போக்கு குறித்தும் விவாதம் நடந்திருப்பது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக்கூடும். எனவேதான் அதனை எப்படியும் தடுத்தாக வேண்டும் என்று ஷ்ரோடர் விரும்புகிறார்.

கட்சி எந்திரத்தின் ஒரு உருவாக்கம்

64-வயதான Muentgering கட்சி எந்திரம் உருவாக்கியுள்ள தலைவராவார். ஷ்ரோடர்-ஐ விட இவருக்கு கட்சி தொண்டர்களிடம் கணிசமான நம்பிக்கையுள்ளது. ஷ்ரோடர் எப்போதுமே கட்சிக்கு அன்னியப்பட்டவர் என்றே கருதப்பட்டு வந்தார். 2003-நவம்பரில் கட்சியின் முந்திய மாநாட்டில் மாநாட்டுப் பிரதிநிதிகள் (பெரும்பாலும் கட்சியின் மூத்த பிரமுகர்களை) நாடாளுமன்ற கட்சி குழுவின் தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் மோசமாக இருந்ததால் பல மந்திரிசபை உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டனர்.

தற்போது சமூக ஜனநாயகக் கட்சியில் சோசலிசம் என்பது ''வாய்சத்த சோசலிசம்'' என்ற கருத்துள்ளவர்கள் நிறைந்திருக்கிறார்கள், அவர்களை Muentegering- பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா (NRW) மண்டல கட்சிகளுக்குள் அவர் வளர்ந்து அரசியல் ஏணியில் உயர்ந்துவந்தார். 1995-ல் அவர் SPD- மத்திய வர்த்தக மேலாளராக ஆனபோது அவர் பிராந்திய கட்சி தலைவராக இருந்தார். வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா பிராந்திய அமைப்பு, சுரங்கத்தொழில் மற்றும் எஃகு தொழில்கள் சார்ந்த வர்த்தக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டது ஆகும்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஊழியர்கள், தொழிற்சாலைகளிலும், கம்பெனிகளிலும் நிர்வாக அளவில் பங்குபெறும் "ஊழியர் பிரதிநிதித்துவம்" ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தொழிற்சங்க தலைவர்களும் தொழிற்கூட ஆலோசனைக்குழு பெருந்தலைவர்களும் தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை பெற்றுத்தர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் தொழிற்சாலைகள், தொழிற்சங்கத் தலைவர்கள் நிலபிரபுத்துவ ஆதிக்க பிரபுக்களைப் போல் செயல்படத் தொடங்கினர். ரூர் பகுதி எஃகு தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் பணியாற்றிய ஏறத்தாழ 100-சதவீத ஊழியர்களும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் ஆனார்கள். ஏனெனில் அந்த பிராந்தியத்தில் உழைக்கும் மக்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான இயல்புகளை கொண்டவர்களாக இருந்தனர். எனவே சமூக ஜனநாயகக் கட்சி 90-விழுக்காடு வாக்குகளை சில தொகுதிகளில் பெற முடிந்தது. எந்தவிதமான ஜனநாயக பரிசீலனைகளையும் பற்றி கவலைப்படாமல் இந்த வெற்றிகள் சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்தன.

இப்படி உருவாகிய சமூக ஜனநாயக செயல்பாட்டாளர் ஆழமான கம்யூனிச எதிர்ப்பு உணர்வு கொண்டவராக இருந்தாலும், கிழக்கு ஜேர்மன் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரை போல் சாதாரண தொழிலாளர்களை அகந்தையோடு ஜனநாயக நடைமுறைகளை எள்ளி நகையாடுகிற வகையிலும் செயல்பட்டதுடன், ஒழுங்கையும் கண்ணியத்தையும், மிக கண்டிப்பாக உற்சாகத்துடன் பின்பற்றி வந்தனர்.

இந்தப் பள்ளியிலிருந்து சமூக ஜனநாயகக் கட்சிக்கு அதே உணர்வுகளோடு உச்சிமுதல் உள்ளங்கால் வரை தயாரிக்கப்பட்ட சிப்பாய்தான் Muentefering. நெருக்கடி ஏற்படுகின்ற நேரத்திலெல்லாம் சம்மந்தப்பட்ட பிராந்திய கட்சி தலைமைகளின் பின்புலத்தைக் காப்பதற்கு வேண்டி கட்சியின் முக்கிய பொறுப்புக்களை அவர் ஏற்றிருக்கிறார். மத்திய நிர்வாக மேலாளராக, பொதுச் செயலாளராக, நாடாளுமன்ற குழு தலைவராக மற்றும் சிறிதுகாலம் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றி உள்ளார். அவரை வர்ணிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் இரண்டு சொற்கள் ''கட்டுப்பாடு மிக்கவர்'' மற்றும் ''விசுவாசி'' என்பதாகும்.

அண்மை ஆண்டுகளில் அவரது முக்கியமான பணி மிரட்டி காரியம் சாதிப்பதும் அச்சுறுத்தல்களை விடுப்பதும்தான். இவற்றில் எப்போதுமே அவர் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கவில்லை. ஜேர்மன் ஆயுதப்படைகள் மேற்கொள்ளும் சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அல்லது சமூகநல திட்டங்களுக்கான வெட்டுக்கள் ஆகியவற்றை எதிர்க்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஓடுகாலிகளை கட்சி கொள்கைக்கு திரும்ப அழைத்துக்கொண்டு வருவது இவரது பணியாகும். கட்சித் தலைவர் என்ற முறையில் தற்போது இந்தப் பணியை நாடாளுமன்றக் குழுவில் மட்டுமல்லாமல் கட்சி முழுவதிலும் மேற்கொள்வார். அவரது பணி அரசியல் போக்கில் மாற்றத்தை கொண்டுவருவது அல்ல---- சிலர் அவர்களது அரசியல் கண்ணோட்டத்திற்கு ஏற்ப புதிய தலைவர் அரசியல் போக்கை மாற்றும் வகையில் செயல்படுவார் என்று அஞ்சுகின்றனர் அல்லது நம்புகின்றனர் அல்லது கட்சி உறுப்பினர் சரிவை தடுத்துநிறுத்துவார் என்று நினைக்கின்றனர். ஆனால் சீர்திருத்தங்கள் என்று கூறப்படுவதை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்கு கட்சி எந்திரத்தை ஒருங்கிணைப்பார் என்று கருதுகிறார்கள்.

Muentgering- சொந்த கொள்கை பிரகடனம்: ''அரசியல்தான் அமைப்பு அமைப்புதான் அரசியல்'' SPD- யை பொறுத்தவரை கடந்த 140-ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற கட்சியாகும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்னவென்றால் கட்சிக்கு மேலும் சரிவு என்பதைத்தான்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் முதல் 40-ஆண்டுகளில் கட்சிக்கு 3-தலைவர்கள் பணியாற்றி வந்தனர். Kurt Schumacher (1946-1952), Erich Ollenhauer (1952-1963) மற்றும் Willy Brandt (1964-1987) இந்த ஆண்டுகளில் கட்சி முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாத்து நின்றதுடன் நியாயமான சமுதாய சீர்திருத்தங்களையும் இணைத்தே செயல்பட்டு வந்திருக்கிறது.

1974-ல் அதிபர் Brandt- ராஜிநாமா செய்தபோது அவருக்கு பின்னர் பதவியேற்ற Helmut Schmidt- சமூகக் கொள்கையில் கூர்மையான வலதுசாரி திருப்பத்தை அறிமுகப்படுத்தினார். அவரே கட்சித் தலைவராகவும் இருந்தார். இரண்டு பதவிகளுக்கும் இடையில் நெருக்கடிகள் தோன்றினாலும் Brandt- தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சி கட்டுக்கோப்பை காப்பாற்றி Schmidt- யையும் பேணிக்காத்தார் இந்தப்போக்கு எட்டாண்டுகள் நீடித்தது. அதற்கு பின்னர் ஜேர்மன் மண்ணில் நடுத்தர அணுஆயுத ஏவுகணைகள் அமைக்கப்படுவது குறித்து SPD- கட்சிக்குள் ஆழமான பிளவுகள் உருவாகி Schmidt- ஆட்சி கவிழ வழிவகுத்தது.

Brandt ராஜினாமாவைத் தொடர்ந்து 17-ஆண்டுகளில் கட்சியில் 5-தலைவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். Hans - Jochen-vogel, Bjoern Engholm, Roudlf Scharping, Oskar Lafuntain- மற்றும் ஷ்ரோடர் தலைவர்களாகப் பணியாற்றியுள்னர் இந்தத் தலைவர்கள் எவரும் SPD- க்கும் பொது மக்களுக்குமிடையே வளர்ந்து கொண்டுவரும் அந்நியப்படலை தடுத்து நிறுத்தவோ அல்லது மாற்றவோ முடியவில்லை. 1970-கள் பாணியில் சீர்திருத்த அரசியல் புதிய பிரமையை வளர்க்க Lafontaine முயன்றார். ஆனால் நடப்பு சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக் கட்சி அரசாங்கம் செயல்படத்தொடங்கியதும் அவர் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஷ்ரோடருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பதவி விலக தள்ளப்பட்டார்.

Top of page