World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush's Iraq commission and the "intelligence failure" fraud

புஷ்ஷினுடைய ஈராக் கமிஷனும் ''புலனாய்வுத் தோல்வி'' மோசடியும்

By Barry Grey
7 February 2004

Part 1 | Part 2 | Part 3

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று பகுதிகளாக உள்ள கட்டுரையின் முதல் பகுதி இது.

ஈராக்குடனான யுத்தத்தை நியாயப்படுத்த செய்யப்பட்ட பொய்களின் பெரும் கூட்டமைவு சிதைந்து ஒன்றுமில்லாமல் போன நிலையில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் சார்ந்த அமைப்புகளும், பழைய பொய்களை ஒரேடியாக மறைத்து புதிய பெரும்பொய் உருவாக்க முனைப்புடன் செயல்படுகின்றன. அதாவது "புலனாய்வுத் தோல்வி" என்ற ஒரே விஷயம்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற தவறான முடிவுக்கு வர ஒரே காரணம் என்று பழிபோட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி புஷ் வெள்ளிக்கிழமையன்று அவரால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பிரச்சினையை கவனிக்கும் கமிஷனின் உறுப்பினர்களை அறிவித்தார். அதே நேரத்தில் ஏதோவொரு விதத்தில் 'சுதந்திரமானவர்கள்' என்கிற அடைமொழிக்கும் பொருத்தமான -கமிஷனின் ஏழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஆளும் செல்வந்தத் தட்டை பாதுகாப்பதில் மிகுந்த தீவிரமான நம்பிக்கையுடையவர்கள். கமிஷனின் இணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற ஓய்வுபெற்ற மத்திய நீதிபதி லோரன்ஸ் சில்பர்மேனின் நியமனமே இந்தக் கமிஷன் நடத்தவிருக்கும் விசாரணையின் மோசடித்தன்மையை (மேற்பூச்சு) வெளிச்சம் போட்டக்காட்டுபவையாக உள்ளது.

சில்பர்மான் வலதுசாரி குடியரசுக் கட்சிக்கு நீண்ட-கால அபிமானி, குடியரசுக் கட்சி நிர்வாகத்தில் நடந்த பல குற்றங்களை பூசிமெழுகுவதில் வல்லவராக இருந்தவர். றேகன் அரசாங்கத்தால் வாஷிங்டன் D.C-க்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட இவர், 1990-ல் ஈரான் கொன்ட்ரா விவகாரத்தில் இவரும் சக குடியரசுக்கட்சி ஆதரவாளருமான டேவிட் சென்டலியும் சேர்ந்து லெப்டினென்ட் கேர்னல் ஒலிவர் நோர்த் மற்றும் அட்மிரல் ஜோன் பொயின்டெக்ஸ்டர் ஆகியோரின் மீது விழுந்த நிரூபணமான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தார். ஈரான்-கொன்ட்ரா விவகாரத்தின் மையமான விஷயமே றேகன் அங்கீகரித்து உத்தரவிட்ட இரகசிய செயல்திட்டம் மற்றும் அந்த உத்தரவும் அதற்கான நிதி ஒதுக்கீடும் அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானவை. கொன்ட்ராவின் கொலைப்படை நிகரகுவாவில் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இது பற்றி ஈரான்-கொன்ட்ரா சுதந்திர விசாரணையின் வழக்கறிஞர் லோரன்ஸ் வோல்ஷை விசாரிக்க முடியாமல் சதி செய்து நிறுத்தியது சில்பர்மானின் தலையீடுதான்.

ஈராக்கில் செயல்பட்ட பேரழிவு ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளரான டேவிட் கேயின் ராஜிநாமாவும் அதைத் தொடர்ந்து அவர் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இல்லை என அறிவிப்பு செய்ததையும் வேறு வழியில்லாமல் புஷ் அரசாங்கம் மிகுந்த தயக்கத்துடன் கமிஷனை நியமித்தது. இந்தக் கமிஷனும் வெளிப்படையான மோசடியானது. அமெரிக்காவின் பெரும்பான்மை மக்களுக்கும் உலகின் ஏனைய பகுதியினருக்கும் இதன் மேல் நம்பிக்கை இருக்கப்போவதில்லை. இந்த கமிஷன் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறதோ, அதன் நோக்கத்தை உறுதிப்படுத்துவது -அதாவது உண்மைகளை மறைக்கவும், உண்மையான யுத்தம் குறித்த ஆழ்ந்த விவாதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் செய்வது- கமிஷனின் விசாரணை முடிவுகளின் அறிக்கை 2004 நவம்பருக்கு பின்னர் அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர்தான் வெளியிடப்படும் என்பதாகும். இந்த ஒரு அம்சமே இந்நடவடிக்கையின் முற்றிலும் ஜனநாயக விரோத சாராம்சத்தை தெளிவாக்குகின்றது.

புஷ்ஷின் கமிஷன் குறித்து மூன்று முக்கியமான விஷயங்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. முதலாவது: அதன் பரப்பெல்லை மற்றும் கட்டமைப்பு பற்றி தெரிவித்து இருக்கும் விஷயமே சர்வாதிகாரப் போக்கும், அரசியல் உள்நோக்கமும் கொண்டது. எந்த விசாரணையும் நடைபெறுவதற்கும் முன்னரே, அறிவிக்கப்பட்ட விஷயம் என்னவென்றால் ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்து புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், வொல்போவிட்ஸ், பவெல், ரைஸ் ஆகியோர்களின் அறிவிப்புக்களுக்கும் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய, ''புலனாய்வு தோல்வி'' என்ற உண்மை நிலைக்கும் இடையிலான முழு வேறுபாடுகளுக்குமான காரணத்தை விசாரிப்பதற்கு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கமிஷனின் விசாரிப்புக்கு உரிய விஷயமே புஷ் அரசாங்கத்தின் செயல்களை மேற்பூச்சினால் மறைக்கவும், வேண்டுமென்றே புனையப்பட்ட தவறான தகவல்களை முகாந்திரமாகக் காட்டி நாட்டை தூண்டிவிடப்படாத ஒரு யுத்தத்தில் ஈடுபடச் செய்த அரசியல் குற்றத்தினின்று முக்கியமான நபர்களை விடுவிக்கவும் ஏற்ற வகையில் இருக்கிறது.

இரண்டாவதாக: புஷ் மற்றும் அவர் கூட்டாளிகளுடைய மனோநிலை இந்த விஷயத்தில் எவ்வாறு இருந்தது, எந்தளவுக்கு அவர்கள் மேண்டுமென்றே பொய் சொன்னார்கள் அல்லது ''தவறாக வழிநடத்தப்பட்டனர்'' என்பது இரண்டாம் பட்சமாகத்தான் கருதவேண்டும். எதையும் இம்மாதிரியாகப் பார்க்க வேண்டும் என்றால், என்ரோனின் தலைவர் கென்னத் லே யையோ அல்லது அவரைப் போன்ற கோர்ப்பொரேட் குற்றவாளிகளை கூட இதேபோல விடுவிக்கலாம். ஏனென்றால் அவர் பொதுமக்களுக்கு வெளியிட்ட மோசடித்தனமான விபரங்களை அவர் உண்மையாகவே நம்பியிருக்கலாம்.

மூன்றாவதாக: எல்லாவற்றிற்கும் மேலாக பேரழிவு ஆயுதங்களான இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள், சதாம் ஹூசைன் கைகளில் இருக்கிறது அதுவும் உடனடி அச்சுறுத்தல் இருக்கிறது என மக்களை நம்பவைக்கும் அரசியல் பொறுப்பு, கடமை சி.ஐ.ஏ-யின் ஆய்வாளர்களையோ, ஏன் சி.ஐ.ஏ-யின் இயக்குநர் ஜோர்ஜ் டெனட்டையோ சாராது. புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தின் முக்கியஸ்தர்கள் ஆகியோரைத்தான் சாரும். இந்த அரசியல் தலைவர்கள்தான் மேற்கொண்ட விஷயங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்து, அதன்படியே நடந்து ஆக்கிரமிப்பிற்கான ஒரு யுத்தத்தை நடத்தினார்கள், இதனால் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் 500-க்கு மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களும் தங்களது வாழ்வை இழக்க காரணமாகவும், இதுவரையிலும் இந்த போருக்கான செலவீனமாக 160-பில்லியன் டாலர்களையும் விழுங்கியிருக்கிறது.

''புலனாய்வுத் தோல்வி'' யுத்தத்தை நியாயப்படுத்த புதுவிதக் காரணம்

கடந்த மாதத்தில்தான் புலனாய்வுத் தோல்வி என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் மற்றும் ஊடங்கங்களிலும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பு செய்த அந்த சமயத்தில்தான் சதாம் ஹூசைன் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பெருமளவில் குவித்து வைத்திருப்பதாகவும் அணு ஆயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் அமெரிக்காவுக்கு உடனடி ஆபத்து என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் ஒவ்வொன்றாக சிதைந்து எதுவும் உண்மையில்லை என்ற நிலை உருவானது.

* ஈராக் யுத்தம் ஆரம்பித்தவுடன் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஆராய்ச்சி செய்யும் கூட்டுக்குழு'' என்ற பெயரில் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட 400- இராணுவத்தினர் அடங்கிய குழு ஒன்று ஜனவரி மாத ஆரம்பத்தில் இரகசியமாக திரும்பப்பெறப்பட்டது என்ற செய்தி ஜனவரி மாத இறுதியில் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தது. இந்தக் குழுதான் பேரழிவு ஆயுதம் என்று கூறப்படுவதை தயாரிப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து றேகன் காலத்திய பென்டகனின் அதிகாரியும், ஐ.நா-சார்பில் அனுப்பப்பட்ட ஆயுதக் கண்காணிப்பு ஆய்வாளரும், கடந்த வசந்த காலத்தில் பிரதான பேரழிவு ஆயுதம் பற்றி வேட்டையாடும் குழுவான 1400 பேர் அடங்கிய ஈராக் ஆய்வுக் குழுவின் தலைவராக சி.ஐ.ஏ-யினால் நியமிக்கப்பட்டவருமான டேவிட் கே, இறுதி அறிக்கை ஏதும் தாக்கல் செய்யாமலே தன் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

* ஜனவரி மாதம் 7-ந்தேதி வாஷிங்டன் போஸ்ட் ஒரு புலனாய்வுத் தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதன் இறுதியில் போருக்கு முன்னர் ''லண்டன் மற்றும் வாஷிங்டனில் வெளியிடப்பட்ட இரு பெரும் அச்சங்களான ஈராக்கில் பேரழிவு ஆயுதக் குவியல் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது மற்றும் இதே மாதிரியான புதிய ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டங்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்ற இரண்டிற்கும் ஆய்வாளர்கள் எந்த விதமான ஆதாரமும் இல்லையென உறுதியாகத் தெரிவிப்பதாக அக்கட்டுரையில் காணப்பட்டு இருந்தது.

* ஜனவரி 8-ம் தேதி, வாஷிங்டனை மையமாக வைத்து இயங்கும் ஆலோசகர்கள் அடங்கிய குழுமமான, சர்வதேச அமைதிக்கான கார்னேக் கட்டளை (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பு பல காலமாக வெளிவிவகார கொள்கையின் ஒரு அங்கமாக செயல்படும் அமைப்பாக இயங்கிவருகிறது. அது ''அரசுத்துறை நிர்வாக அதிகாரிகள் ஈராக்கிலிருந்து இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் வெகுதூர ஏவுகணைத் திட்டங்கள் பற்றி திட்டமிட்ட ரீதியில் வேண்டுமென்றே எப்படி தவறான முறையில் செய்திகளை பரப்பினார்கள்'' என விவரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

* ஜனவரி-10ம் தேதியன்று CBS இன் ''60-நிமிடங்கள்'' என்ற செய்தி நிகழ்ச்சியிலும் டைம் இதழில் வெளியான பேட்டியிலும், ஒரு வருடத்திற்கு முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் நிதிதுறைச் செயலர் போல் ஓநெய்ல் (Paul O'Neill) என்பவர் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி ஈராக்கின் மீது படையெடுப்பது பற்றியும் அதை ஆக்கிரமிப்பது பற்றியும் 2001 ஜனவரி மாதத்திலேயே புஷ் பதவியேற்ற பொழுதே உயர்மட்ட அளவில் ஆலோசனை நடந்ததாக தெரிவித்தார். அவர் இந்தப் பேட்டிகளிலும் எழுதி வெளியிட்டிருக்கும் ஒரு புத்தகத்திலும் சதாம் ஹூசைனை பதவியிலிருந்து தூக்கி எறிவது என்ற "Topic A" விஷயமானது புதிய நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முதல் கூட்டத்தின் முதல் அம்சமாக விவாதிக்கப்பட்டது என்ற பல விவரங்களை தெரிவித்து இருக்கிறார். புதிய அரசாங்கத்தின் ஆரம்ப நாட்களில் இருந்தே ஈராக்கை அமெரிக்கப்படைகளின் ஆக்கிரமிப்பில் வைத்து நிர்வகிப்பது அதன் எண்ணெய் வளங்களை எப்படி வெளியே கொண்டுவருவது ஆகியனபற்றி பலவிதமான திட்ட நகல்கள் வெளியிடப்பட்டு இருந்ததைப் பற்றி அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் டைம் இதழில் குறிப்பிட்டதாவது, ''நான் அங்கே பதவியில் இருந்த 23 மாதங்களில், பேரழிவு ஆயுதங்கள் குறித்து நான் ஆதாரமாகக் கருதக்கூடிய ஒரு ஆவணத்தையும் பார்க்கவில்லை.''

இந்த விஷயத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதக் கண்காணிப்பாளர்கள் ஒன்பது மாதங்களாக ஆயுதங்களை தேடியும் ஒரேயொரு ஆயுதத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. இல்லாத பேரழிவுக்கான ஆயுதத்தேடல் குறித்து இராணுவத் தலைமை பொறுமை இழக்க ஆரம்பித்தது. அதுவுமின்றி பிடிவாதமான கொரில்லா கிளர்ச்சி நடவடிக்கைகள் வளர ஆரம்பித்தன மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அமைதியின்மை பெருகிக் கொண்டே வந்தது. அதனால் கே யுடைய ஈராக் ஆய்வுக் குழுவிலிருந்து இராணுவ வீரர்களை வெளியே எடுத்து அதைவிட முக்கியமான பணிகளுக்கு அதாவது "படைப் பாதுகாப்பிற்கு" மற்றும் தலைமறைவாக இயங்கும் ஈராக் போராட்டத் தலைவர்களை தேடுவதற்கு பயன்படுத்த ஆரம்பித்தது இராணுவத் தலைமையகம்.

அமெரிக்க நாட்டிற்குள்ளே செயல்படும் சில அரசியல் மற்றும் செய்தி ஊடக அமைப்புக்கள் புஷ் நிர்வாகத்தின் மழுப்பல் வேலைகள் குறித்து கவலை தெரிவிக்க ஆரம்பித்தன. இம்மாதிரியான முயற்சிகள் ஏற்கனவே மோசமாக இருக்கும் சூழ்நிலையை மேலும் சீர்கெட்டுப்போகச் செய்யும் என்று கவலைப்பட்டன. போருக்கு முந்தைய கூற்றுக்கள் நிரூபணமாகவில்லை என்பதை ஒரு வகையில் அரசாங்கம் உறுதிப்படுத்த மறுத்ததானது உள்நாட்டில் போருக்கு எதிராக மற்றும் புஷ்க்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிடவே செய்தது, அதேநேரத்தில் வெளிநாடுகளில் எஞ்சியிருந்த வாஷிங்டனின் நம்பகத்தன்மை அழியவும் காரணமாக அமைந்தது.

இம்மாதிரியான சரிவுகளை பாதிப்பு ஏற்படாத வகையில் ஈடுகட்ட முயற்சி செய்ய வேண்டிய கட்டாயமும் பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்கின்ற மறுக்க முடியாத உண்மையை திரும்ப ஏற்றுக்கொள்ளவும், அதே சமயத்தில் ஈராக்குக்கு எதிரான யுத்தத்தை நடத்துவதற்கான உந்தலில் மையமாக இருந்த அரசியல் சதியையும் அரசாங்கத்தின் தவறான தகவல் பிரச்சாரத்தையும் தொடர்ந்து மறைக்கவும் திட்டமிட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது புஷ் நிர்வாகம். இந்த இழிந்த பணியை நியூயோர்க் டைம்ஸ் ஏற்றுக்கொண்டது. வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு தலையங்கத்தை இந்தப் பத்திரிகை ஜனவரி 11-ம் நாளன்று ''ஆயுதக்குவிப்பு பற்றிய தவறான மதிப்பீடுகள்'' என்ற தலைப்பில் வெளியிட்டது.

புஷ் நிர்வாகத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து இதுவரையிலும், அமெரிக்காவில் தாராளவாதம் என்று அடையாளப்படுத்தப்படும் பொய்யான மற்றும் திவாலான நிலைப்பாட்டை டைம்ஸ் சுருக்கமாகக் கொண்டிருக்கிறது -புஷ்ஷினுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த அவரது செய்கைகளை ஆதரித்தும் அவரது முடிவின்படி எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தும் அதேவேளையில் தந்திரோபாய விஷயங்களை விமர்சனம் செய்தும் தாராண்மை என்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனவரி 11-ம் தேதிய தலையங்கம் ஒரு உதாரணமாக திகழ்கிறது. அதில் புஷ் நிர்வாகம் ''ஈராக் யுத்தத்திற்காக காட்டிய அசாதாரணமான வேகத்தையும்'' ''ஈராக்கின் சர்வாதிகாரியை பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் மனப்பான்மையையும் கடுமையாக குறைகூறியது.'' ஈராக்கில் இருப்பதாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எப்போதும் இருந்ததில்லை என்பதை நிரூபிக்கும் தகவல்களை பற்றியும் அந்தத் தலையங்கத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் முடிக்கும் தறுவாயில் அரசாங்கத்தின் நிர்வாகமே தவறான தகவல்களினால் வழிநடத்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. ''துன்பகரமாக சரியான தகவல்களை திரட்ட முடியாத புலனாய்வுத்துறை" ஆல் புஷ் நிர்வாகமே பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது.

''ஆயுதங்கள் குறித்தான தவறான மதிப்பீடுகள்'' குறித்து ''நடுநிலையான'' விசாரணை நடக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தலையங்கம் முடிந்திருக்கிறது.

நடந்ததை மறைப்பதற்கான புதிய சூத்திரம் இதுதான். புஷ் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் பேரழிவு ஆயுதங்கள் குறித்து அழகான முறையில் மாற்றி முதலில் ''ஆயுதங்கள் தயாரிப்பு'' என்பதிலிருந்து ''ஆயுதங்கள்'' என்று மாற்றி பேச ஆரம்பித்து அதன் மூலம் அர்தத்தையும் மாற்றி வந்துள்ளனர். இதுபோன்ற வார்த்தை விளையாட்டுக்களில் ஈடுபட்டு, அதற்கான பலனையும் பெறுவதால் டைம்ஸ் பத்திரிகையின் சூழ்ச்சி திட்டம் அரசியல் செல்வந்த தட்டுக்குள்ளே பிடித்திருந்தது. ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க காங்கிரசின் முன் தனது வருடாந்த பேச்சை புஷ் பேசுவதற்கு முன்பு மேற்படி வார்த்தைகளில் சித்து விளையாட்டு நகைப்புக்குரிய நிலையை அடைந்திருந்தது. புஷ்ஷின் உரையில் இதற்குள் சித்திரவதை அனுபவித்து பல மாற்றங்களுக்குள்ளான சொற்றொடர் ''பேரழிவிற்கான ஆயுதங்கள் தொடர்பான திட்டங்களுக்கான நடவடிக்கைகள்'' என்று பெரும் மாற்றத்துக்குள்ளானது.

போரை ஆதரித்த மற்றும் ஈராக்கில் படையை பயன்படுத்த காங்கிரஸ் அங்காகாரமளிக்க புஷ்ஷிற்கு ஆதரவாக வாக்களித்த, தற்போதைய ஜனாதிபதி பதவிக்கான இரு வேட்பாளர்களான ஜோசப் லைபர்மன் மற்றும் ஜோன் எட்வார்ட் என்கிற இரு செனட்டர்கள் உள்பட, முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மேற்படி சபையில் புலனாய்வு துறையின் தோல்வி எனக் கூறப்படுவது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர்.

ஜனவரி-23-ந்தேதி கே ஈராக் ஆய்வுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு அடுத்தடுத்து பல நேர்காணல்களை பத்திரிகை, தொலைக்காட்சி சானல்கள் ஆகியவற்றிற்கு அளித்தார். அதில் அவர், மார்ச் 2003-ல் அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குள் நுழைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே சதாம் ஹூசைன் பேரழிவு ஆயுதங்களை அழித்துவிட்டார். உண்மையில் யுத்தத்தின்போது அவரிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை எனக் கூறினார். வலதுசாரி குடியரசுக் கட்சியினரான கே- படையெடுக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தவராவார், கிளிண்டன் காலத்தில் நடந்த ஜ.நா- ஆயுதக்கண்காணிப்பு சோதனைக் குழுவின் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக தொடர்பாளராக இருந்தவர், அதன் அடிப்படையில்தான் அவர் 2002-கடைசியில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றார். அப்போது அவர் அரசாங்கத்தின் கருத்தினை அப்படியே எதிரொலித்தார், அதாவது ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் குவிந்து கிடக்கிறது மற்றும் அதனால் உடனடி அபாயம் இருக்கிறது என்பதை அவரும் தெரிவித்து இருந்தார்.

ஈராக் ஆய்வுக் குழுவிலிருந்து கே ராஜினாமா செய்த பின், ''நாங்கள் அனைவரும் தவறு செய்து விட்டோம்'' என்று அறிவித்த அதே நேரத்தில் புஷ் அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்துப் பேசினார். அரசாங்கம் புலனாய்வுத் துறையினரை எந்தவித நெருக்குதலுக்கும் ஆளாக்கவில்லை என்றும் புஷ் மற்றும் அவரது சகாக்கள் புலனாய்வுத் துறையினரால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் செனட் குறிப்பிடத்தகுந்த வேகத்தில் (9/11 தாக்குதல் பற்றிய பொது விசாரணையை பல்வேறு காரணங்களுக்காக ஒரு வருடம் தடுத்ததே செனட்தான்) ஜனவரி 28-ம் ம்தேதி இராணுவத்துறை கமிட்டியின் முன் கே ஆஜராகி விசாரணைக்கு உட்பட வேண்டும் என்பதை முடிவு செய்தது. இதன் தெளிவான நோக்கம் என்னவென்றால் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய விவகாரத்தை பூசி மறைப்பதற்கான செயலை சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான். ஜனநாயகக் கட்சியின் எட்வார்ட் கென்னடியும் ஹிலாரி கிளிண்டனும் உள்பட இரு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கே-யை மிகவும் பாராட்டினர். புஷ் நிர்வாகம் யுத்தத்திற்கு போக வேண்டும் என்ற உந்தலில் கே-யினுடைய அறிக்கைளும் பேச்சுக்களும்தான் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தன. கென்னடி என்ற ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்தான் இந்த விவகாரம் குறித்து அதிகப்பட்சமாக குற்றம் சொல்லிப்பேசியவர். அவரும் கூட புஷ் அரசாங்கம் புலனாய்வுத் துறையின் தகவல்களை யுத்தம் செய்வதை நியாயப்படுத்தும் வகையில் "திருத்தி அமைத்தது'' என்று கூறியவர். இவர் உட்பட எவரும் புஷ், செனி, ட்ரம்ஸ் பீல்ட் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரின் நடத்தைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவே இல்லை.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோன் மெக்கெய்ன் தான் ''சுதந்திரமான'' கமிஷன் அமைத்து புலனாய்வுத் துறையின் தோல்வி குறித்து நீதிவிசாரணை செய்யவேண்டும் என்று குரல் கொடுத்தார், கே உடனடியாக அதைப் பின்பற்றி ஆதரித்தார். ஐந்து நாட்கள் கழித்து ஆரம்பத் தயக்கம், மற்றும் நிர்வாகத்திற்குள் இழுபறி ஆகியவற்றிற்கு பின்னர் புஷ் மற்றவர்கள் கோரியபடி கமிஷன் அமைப்பதாக அறிவித்தார். அதனுடைய விசாரணை ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்தான புலனாய்வுத்துறை தோல்வி மட்டுமின்றி மற்ற நாடுகளான ஈரான், லிபியா, மற்றும் வடகொரியா, ஆகிய நாடுகளைப் பற்றிய தகல்களைப் பற்றியதான ''பரந்த'' விசாரணையாகவும் இருக்கும் என்று கமிஷனின் பணிகளைக் குறித்து விளக்கினார்.

அதற்கு அடுத்தநாள் அதாவது பெப்ரவரி3-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில் மேற்படி கமிஷனை ஆதரித்து ஆசியும் அளித்தது. அதிலும் கமிஷனின் கண்டுபிடிப்புக்கள், முடிவுகள், ஆகியன நவம்பர் மாதத்திற்குப் பின்னர்தான் வெளியிடப்படும் என்ற முடிவை குறிப்பிட்டு வரவேற்பதாக பாராட்டியிருக்கிறது.

முதல் பொய்: ''எந்தவிதமான அழுத்தமும் இல்லை''

புலனாய்வு தோல்வி என்ற மூடிமறைக்கப்பட்ட கதையின் அடிப்படையிலிருந்து பல்வேறு பெரிய பொய் கூறப்பட்டது. புஷ் நிர்வாகத்தினர் புலனாய்வு துறையையோ, அவற்றின் அங்கத்தினர்களையோ, போர்க் கொள்கைக்கு ஆதரவாக மதிப்பீடுகள் செய்யும்படி நெருக்குதல் கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இந்த அறிவிப்பானது சரித்திரத்தை மாற்றி எழுதும் நாகரீகமில்லாத முயற்சியாகும். ஈராக்கில் நுழைவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே துணை ஜனாதிபதி டிக் செனி, மற்றும் பென்டகனின் உள்ளும் வெளியிலும் இருந்த அவரது யுத்தம் வேண்டும் என்ற சக அலுவலர்களான பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ட்ரம்ஸ் பீல்ட் இணை பாதுகாப்புத்துறை செயலர் போல் வொல்போவிட்ஸ், பாதுகாப்புத்துறையில் மூன்றாவது முக்கிய இடத்தை வகிக்கும் டக்ளஸ் பெய்த்; பென்டகனின் ஆலோசகர் ரிச்சார்ட் பேர்ல் ஆகியோர் சி.ஐ.ஏ-வுடனும் உள்துறையுடனும் கசப்பான போராட்டமே நடத்தினர். ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாடான சதாம் ஹூசைன் மற்றும் அல்கொய்தா ஆகியோரிடையில் இந்த கூட்டு நெருக்கம், ஆகியவற்றை புலனாய்வுத்துறை சரியானது என்று ஏற்றுக்கொள்ளாமல் ஐயுறவாதம்கொள்வது போன்ற அவர்களின் ''மெத்தனமான'' அணுகுமுறை பற்றி கண்டனம் செய்தனர் என்பதெல்லாம் செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டது மற்றும் அனைவரும் நன்கு அறிந்ததே. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களை பெரும் கோபம் கொள்ளவைத்த விஷயம் என்னவென்றால் அமெரிக்கா நிதி உதவி செய்து தூக்கிப்பிடித்துத்து வந்த ஈராக் தேசிய காங்கிரஸ் என்கிற சதாம் ஹூசைனின் எதிர்ப்பாளர்களான (நாடுகடத்தப்பட்டு அங்கிருந்து செயல்படுபவர்கள்) வெளியிலுள்ளோர் அளித்த தகவலான ஈராக் அணு ஆயுத திட்டம் பற்றிய தகவலுக்கு சி.ஐ.ஏ- மற்றும் அரசுத்துறையின் ஆய்வாளர்கள் நம்பகத்தன்மை வழங்க மறுத்ததுதான்.

கடந்த வருடத்தில் வொல்போவிட்சின் நெருங்கிய சகாவும் மற்றும் செனியின் தலைமைப்பணியாளர் ஐ. லூயிஸ் லிப்பிக்கு நெருக்கமானவருமான லாரி மாய்லோரி, புஷ் எதிராக பெல்ட்வே: பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தடுக்க சி.ஐ.ஏ-வும் உள்துறையும் எப்படி முயற்சித்தன (Bush vs. the Beltway: How the CIA and the State Department Tried to Stop the War on Terror.) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை உற்சாகமாக ஊக்கப்படுத்தியவர் பேர்ல் ஆகும். புத்தகத்தின் அட்டையில் உள்ள விளம்பர வாக்கியத்தில், ''ஈராக் பேரழிவு ஆயுதங்களை உடைமையாகக் கொண்டிருக்கிறது என்ற சர்ச்சைக்கிடமில்லாத ஆதாரம் உள்பட, சதாமின் ஆட்சியைப் பற்றிய புலனாய்வுத் தகவல்களை சி.ஐ.ஏ-வும் - உள்துறையும் எவ்வாறு திட்டமிட்ட ரீதியில் பொய் என்று நிரூபித்தன என்பதைப்பற்றி மைலோரி விளக்கியிருக்கிறார்" என்றுள்ளது.

''நெருக்குதல்கள் இல்லை'' என்ற நிலைப்பாடு தற்போதைய மற்றும் முன்னாள் புலனாய்வுத் துறையினரின் அறிக்கைகளோடு எந்த அளவுக்கு முரண்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஈராக் மீது படை எடுத்தல் மற்றும் ஆக்கிரமித்தலுக்கான நிர்வாகத்தின் பொதுமக்கள் மத்தியிலான பிரச்சாரம் 2002 ஆகஸ்ட் இறுதியில்தான் ஆரம்பித்தது. துணை ஜனாதிபதி டிக் செனி முன்னாள் போர் வீரர்களின் இரண்டு கூட்டமைப்புக்களில் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட உரையில்தான் இந்த பிரச்சாரம் ஆரம்பம் ஆனது. ''வெளிநாடுகளில் போர் புரிந்த இராணுவத்தினருக்கான மாநாடு ஆகஸ்ட்டு 26-ல் நடந்தபோது அதில் செனி ஈராக் இரசாயனம், உயிரியல் ஆயுதங்கள் வைத்திருப்தாகவும், அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். ''சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், சதாம் ஹூசைனிடம் இப்போது பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவைகளை நமது நண்பர்களுக்கு எதிராகவும், நேச நாடுகளுக்கு எதிராகவும் மற்றும் நமக்கு எதிராகவும் உபயோகப்படுத்தத்தான் சதாம் ஹூசைன் குவித்து வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை'' என்றார்.

செய்தி ஊடகம் செனியின் உரையை ஈராக்கிலுள்ள ஆயுதங்கள், அமெரிக்க மக்களுக்கு எதிராக இருக்கும் பெரும், உடனடி அச்சுறுத்தல் என்கிற கருத்துக்கு மக்களை உடன்பட வைக்கும் இடைவிடா பிரச்சாரத்திற்கான ஒரு சமிக்கையாக எடுத்துக்கொண்டன.

செனியின் உரையானது ஈராக்கினுள் படையெடுத்து நுழைவதற்கு முன்னால் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், உட்பட பிறநாடுகளின் கோரிக்கையான ஐ.நா-வின் ஆயுதக் கண்காணிப்பை தொடரவிட வேண்டும் என்றும் அதன் பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் ஐ.நாவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் எனவும் புஷ்ஷை வலியுறுத்திக்கொண்டிருந்த நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதிருப்தியாளர்களை குறிவைத்து நடத்திய முன்கூட்டிய தாக்குதலாக இருந்தது. இதற்கான பதிலாக செனி கூறியதாவது: ''கண்காணிப்பாளர்கள் மறுபடியும் அங்கே போவதினால் மட்டும் அவர் (சதாம் ஹூசைன்) ஐ.நா-வின் தீர்மானங்களின்படி நடந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.''

துணை ஜனாதிபதியின் எச்சரிக்கைகள் அதற்கு முன்னால் இருந்த புலனாய்வுத் துறையின் தகவல்களிலிருந்து மிகவும் வேறுபட்டுச்செல்வதை குறித்தது. ஈராக்கின் பேரழிவு ஆயுதக் குவியல்கள் பற்றி திட்டவட்டமான உறுதிப்பாடுகளோ, ஈராக்கின் அணு ஆயுதத் திறமைகளை குறித்தான நிச்சயமான தகவல்களோ ஏதும் இல்லை. கார்னேஜ் அறக்கட்டளை மற்றும் பிற ஆய்வுகளின்படி செனியின் உறுதிப்படுத்தல்கள் எந்தவிதமான புதிய புலனாய்வுத் துறையின் தகவல் முக்கியத்துவத்தையும் அடிப்படையாக கொண்டவை அல்ல.

இந்த நிலை, செனியும் பென்டகனின் சதியாளர்களும் மற்ற வழிகளில் முயற்சி செய்து முடியாது போனதால் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இந்தக் காலகட்டத்தில் செனியும் அவரது தலைமை பணியாளர் லிப்பியும் பலமுறை சி.ஐ.ஏ-வுக்கு சென்று ஈராக்கின் இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதத் தயாரிப்புத் திறன்கள் பற்றியும் திட்டவட்டமான இரத்தத்தை உறையவைக்கும் அளவுக்கு பயமுறுத்தும் அறிக்கைகளை தருமாறு ஈராக் பற்றிய ஆய்வாளர்களிடம் நெருக்குதல்களை தந்தனர் என்பது பற்றி எட்டு மாதங்களாக பத்திரிகைகளில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாயின. 2003-ஜூன் 5-தேதியிட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் ''ஏஜென்சியின் உயர் அதிகாரி'' ஒருவர் கூறியபடி, செனி மற்றும் லிப்பி ஆகியோரின் விஜயத்தால், "விரும்புகின்ற வகையில் குறிப்பிட்ட அறிக்கைகள் இங்கிருந்து வெளிவர வேண்டும் என்பதை குறிப்பாகவோ, சாதாரணமாகவோ, வலியுறுத்தும் நோக்கங்கொண்ட சமிக்கைகளை அனுப்பினர்'' என்று குறிப்பிடப்பட்டது.

அதே கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ''முன்னாள் மற்றும் தற்போதைய புலனாய்வு அதிகாரிகள் கூறியபடி செனி, லிப்பி மட்டும் தொடர்ச்சியான முரசொலித்து அழைப்புக்களில் ஈடுபட்டவர்கள் என்று சொல்ல முடியாது, துணைப் பாதுகாப்புத் துறை செயலர் போல் D. வொல்போவிட்ஸ், பேயத் ஆகியோரும் ஓரளவுக்கு சி.ஐ.ஏ- யின் இயக்குனர் ஜோர்ஜ் ஜே. ரெனட் ஆகியோரிடமிருந்தும் கூட ஈராக்கிற்கு எதிராக உடனடிப் போர் மிகவும் அவசியம் என்கிற அவசரத்தை நிர்வாகம் உணரும் வகையில் தகவல்களுக்காக தேடும் படியும் அல்லது அவ்வாறான புலனாய்வு அறிக்கையை எழுதும்படியும் வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.

வொல்போவிட்ஸ் மற்றும் ஏனையோர் பங்கு கொண்ட சில கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பவரான பாதுகாப்பு புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி, ''அவர்கள் அனைவருமே மிரட்டியே காரியம் சாதிக்க நினைப்பவர்கள்'' என்றார். தங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிற மதிப்பீடுகள் வேறு வகையிலான அணுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ''ஏஜென்சிகளுக்கு இடையிலான கூட்டங்களில் புலனாய்வுத்துறை ஆய்வாளர்களின் செயல்பாட்டை வொல்போவிட்ஸ் மிகவும் இழிவாகப் பேசுவார்'' என்றார் அவர்.

சி.ஐ.ஏ-வின் முன்னாள் ஆய்வாளர் பட் எட்வார்ட்ஸ் என்பவர் New Republic என்ற இதழில் கூறியதாவது, செனியின் வருகைகள் ஆய்வாளர்களிடையே ''பல உணர்வை'' ஏற்படுத்துவதாக இருந்தன. (ஸ்பென்ஸர் ஆக்கர்மேன் மற்றும் ஜோன் பி.ஜீடிஸ் ஆல் எழுதப்பட்ட ''இயக்குநர் ஜோர்ஜ் ரெனட் சி.ஐ.ஏ-வை பலவீனமாக்குகிறார்", செப்டம்பர் - 23,2003-) தொடர்ந்து எட்வார்ட் கூறியதாவது, ''நான் அங்கே இருந்த காலகட்டத்தில் 2001, 2002 மற்றும் 2003- ஆண்டுகளில் இருந்தாற் போன்ற மிக அதிகமான நெருக்குதல்களை நான் கண்டதேயில்லை''

செய்மூர் ஹர்ஷ் என்பவர் New Yorker என்ற பத்திரிகையில் 2003 அக்டோபர் 27 தேதியிட்ட இதழில் எழுதிய கட்டுரை நடத்த நிகழ்வுகளுக்கு இன்னொரு சாட்சியமாக விளங்குகிறது. சி.ஐ.ஏ வின் முன்னாள் அதிகாரி ஒருவர் ''அரசாங்கம் கடைசியில் அது விரும்பியதை அடைந்தது'' என்று கூறினார். 'சி.ஐ.ஏ-விலுள்ள ஆய்வுப்பணி நிபுணர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை குறித்து வாதாடிப் பிரயோஜனம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களை காப்பாற்றவேண்டிய இயக்குநர் ஜோர்ஜ் ரெனட் அவ்வாறு செய்யாதது குறித்து பழிக்கின்றனர். நான் இது போன்ற அரசாங்கத்தை கண்டதேயில்லை.' ''

(தொடரும்......)

Top of page