World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Analysts warn China on verge of economic crisis

சீனா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் விளிம்பில் உள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை

By John Chan
18 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

சீனா இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது, அது தவிர்க்க முடியாத அளவிற்கு பூகோள தாக்கங்களைக் கொண்டதாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கைகளுடன் இந்த ஆண்டு திறந்திருக்கிறது. சீனா ஆட்சி சென்ற ஆண்டு 9.1 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டு வந்தாலும் ஆய்வாளர்கள் இதர பொருளாதாரங்கள் கடுமையான சரிவுகளை சந்திக்கும் முன்னர் நிலவிய பரவலான ஊக பேரங்களும் மிதமிஞ்சிய கொள்திறனையும் சீனா எட்டியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, நியூயோர்க் டைம்ஸ் ஜனவரி 18 அன்று எச்சரிக்கை விடுத்தது: ''2004 ஆரம்பத்தில் சீனப்பொருளாதாரம் முந்திய காலங்களில் ஜப்பான், தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்க பொருளாதாரங்களைப் போன்று பலவீனம் எதுவுமில்லாத தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் அண்மையில் மிதமிஞ்சிய பொருளாதார நடவடிக்கைகள் காணப்படுகின்றன - தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவது படுவேகமாக நடந்துகொண்டிருப்பது முதல் வங்கிக் கடன்கள் வழங்கப்படும் தொகைகள் பெருகுவதற்கு ஊக பேரங்கள் மூலம் வருகின்ற ரொக்கம் வங்கிகளின் பணப்புழக்கத்தை பெருக்கிவருவது வரையிலான இவையெல்லாம் தற்போது குறிப்பாக பொருளாதார முதலீடுகளில் நீர்க்குமிழி போன்ற வளர்ச்சிதான்.''

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, சீனாவில் குறைந்த ஊதியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிகளுக்கு கிடைத்தமை, சீனா நாணயம் அமெரிக்க டாலரோடு முடிச்சு போடப்பட்டிருந்தமை இவையிரண்டும் சேர்ந்து சீனாவில் மலிவாகவும் மற்ற நாடுகளோடு போட்டி போடுகின்ற அளவிலும் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் உலகின் பிரதான நேரடி முதலீட்டுக்கான முதன்மை இடமாக சீனா உயரமுடிந்தது. சென்ற ஆண்டு சீனா 53 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈர்த்தது. லாபங்களை மிக அதிகமாக குவித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையாலும், பெரிய கம்பெனி இலாப பங்கீட்டுத் தொகைகளை அதிகமாக பெறவேண்டுமென்ற விறுவிறுப்போடும் சீனாவில் முதலீட்டுப்போக்குகள் படுவேகமாக நடைபெற்றதால் பல்வேறு கடுமையான பிரச்சனைகளுக்கு இடமளித்து விட்டது.

சீனாவின் ஏற்றுமதிகளின் வெடிக்கும் தன்மைய வளர்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்திக் கொள்திறன் சந்தையின் தேவைகளுக்குமேல் பெருகியது. அமெரிக்காவிலிருந்து பிரசுரிக்கப்படும் Foreign Affairs இதழில் டிசம்பர் மாதம் ஓர் ஆய்வு வெளியிடப்பட்டது. அது சீனாவின் அசையா சொத்துக்களில் முதலீடு 2003 முதல் ஆறுமாதங்களில் 31 சதவீதம் வளர்ந்திருப்பதாகவும், 2000- நிலவரத்தோடு ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு வளர்ச்சியென்றும், ஆனால் அதே காலகட்டத்தில் வீடுகளில் நுகர்வோர் செலவீனம் 8.8 சதவீதத்திலிருந்து 10.1 சதவீத அளவிற்கே உயர்ந்திருக்கிறதென்றும் விவரித்தது.

சீனாவின் பிரம்மாண்டமான ஏற்றுமதித்துறை பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களால் நடாத்தப்படுகிறது, சென்ற ஆண்டு ஏற்றுமதிகள் 35 சதவீதம் உயர்ந்து அது 430 பில்லியன் டாலர்களை தொட்டது. மொத்த வெளி வர்த்தகம் 840 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது, இதில் உலகிலேயே நான்காவது வரிசையில் சீனா உள்ளது. தொழிற்துறை உற்பத்தி 1995-லிருந்து மிகதிக அளவாக 17 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு உலகின் கை தொலைபேசிகளில் (Cellular phones) 35 சதவீதத்தையும் சீனா தயாரித்தது. வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளில் 40 சதவீதத்தையும் உலகிலுள்ள கம்பியூட்டர் திரைகளில் (Monitors) 55 சதவீதத்தையும் சீனா தயாரித்தது.

இந்த உற்பத்தி அளவை இறுதியாக சந்தை ஈர்த்துக்கொள்ள முடியாதென்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நியூயோர்க் டைம்ஸ் இதுபற்றி வெளியிட்டுள்ள கருத்து வருமாறு: ''உண்மையிலேயே பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சலவை இயந்திரங்களிலிருந்து கை தொலைபேசிகள் வரை, உற்பத்தி அளவு உள்நாட்டு சந்தை தேவைகளுக்கும் அதிகமாகவே ஆகிவிட்டன. இப்படி அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முழுவதையும் ஏற்றுமதி கிரகித்துக்கொள்ள இயலாத காரணத்தினால், விலைகள் படுவேகமாக வீழ்ச்சியடைந்து விட்டன.... வர்த்தக நிர்வாகிகளும், பொருளாதர நிபுணர்களும் அடிக்கடி கூறிவருகின்ற புகார் என்னவென்றால் சீனாவில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை போன்று மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தாமல் அல்லது எல்லா தொழிற்சாலைகளும் ஒரே நேரத்தில் ஒரே வகையான பொருட்களை உற்பத்தி செய்தால் எந்த அளவிற்கு விலைகள் வீழ்ச்சி ஏற்படும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா இடங்களிலும் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டார்கள்'' என்பதாகும்.

உலக வங்கியின் முதலீட்டு கூறான, சர்வதேச நிதிக்கழகம் (IFC) சீனாவின் உற்பத்தித்துறைக்கு கடன் தருவதை நிறுத்திவிட்டது. ஏற்கனவே உற்பத்தித்துறையில் ''அளவிற்கதிகமாக முதலீடு செய்யப்பட்டுவிட்டதாக'' அறிவித்தது.

இத்தகைய படுவேகமான வளர்ச்சி சீனாவின் உள்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைக்குமளவிற்கு சென்றுவிட்டது. எடுத்துக்காட்டாக மின்சார உற்பத்தி தேவைகளுக்கும் மிகக்குறைவான அளவிலேயே உள்ளது. மின்சாரப்பற்றாக்குறை அளவு 40 Giga watts அளவிற்கு உள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் அளவிலான மின்சாரம் சீனாவில் தேவைப்படுகிறது. ஷாங்காய் பகுதியில் டிசம்பர் மாதம் மின்சார நெருக்கடியை தளர்த்துவதற்காக பல உற்பத்தியாளர்கள் இரவில் உற்பத்தியை நடத்துமாறு கட்டளையிடப்பட்டனர்.

பல தொழில்களில் விலைவாசிகள் படுமோசமாக வீழ்ச்சியடையும் போக்கு உற்பத்திக் கொள்திறன் மிதமிஞ்சிய அளவிற்கு இருப்பதால் விலைவீழ்ச்சி இலாபத்தன்மையை வெகுவாக பாதித்து தொழிற்சாலைகள் திவால் ஆகும் நிலை உருவாகிவிடுமென்ற அச்சம் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக சீனாவின் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில், பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் மிகப்பெருமளவில் முதலீடுகளை பெருக்கிக்கொண்டே சென்றதால், சீனாவில் ஆண்டிற்கு 2.8- மில்லியன் வாகனங்ள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.8 மில்லியன் வாகனங்கள் மட்டுமே உண்மையில் விற்கப்படுகின்றன. அதேபோன்று எஃகு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளிலும் நிலவரம் நீடிக்கிறது.

ஏனைய கிழக்கு ஆசிய பொருளாதாரங்களுக்கு முக்கிய வளர்ச்சி உந்துவிசையாக சீனாவின் ஏற்றுமதி செழுமைகள் விளங்கிவந்த சூழ்நிலையில், சீனாவில் பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லுமானால் இந்த பிராந்தியம் முழுவதுமே சமூகரீதியிலும், அரசியல்ரீதியிலும் பேரழிவுகளை சந்திக்க வேண்டிவரும்.

சீனாவிற்கு இதர ஆசிய நாடுகளிலிருந்து மொத்த ஏற்றுமதி 1995-ல் 72.1-பில்லியன் டாலர்களாக இருந்தது. 2002-ல் 160-பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இவற்றில் பாதிக்குமேல் சீனாவில் மறு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. 1997-98-ல் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியிலிருந்து அவை முற்றிலும் சீரான நிலைக்கு இன்னும் வந்துவிடவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இன்னமும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகவே உள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில் சீனா இறக்குமதி செய்யும் அளவு குறையுமானால் அது தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

பூகோள ஸ்திரமின்மை

சீனாவில் ஏற்படுகின்ற நெருக்கடி கடுமையான பூகோள நிதிக்கொந்தளிப்பை எழுப்பிவிடும் தன்மைகொண்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா வெளியிட்டு வருகின்ற முதலீட்டு கடன்பத்திரங்களை மிகப்பெருமளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்ற நாடுகளில் ஒன்று சீனா. இது அமெரிக்க வர்த்தகத்தில் துண்டுவிழும் தொகை மலையளவிற்கு வளர்ந்து கொண்டு போகின்ற நிலையில் அதை சரிக்கட்டுவதில் அதிக பங்களிப்பு செய்துவருகிறது. ஜப்பான் மற்றும் சீனா உட்பட கிழக்காசிய நாடுகள் இன்றையதினம் 1.7-டிரில்லியன் டாலர் அளவிற்கு வெளிசெலாவணி கையிருப்பை வைத்திருக்கின்றன. அவற்றில் பாதி அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள எல்லா வகையான பங்குப்பத்திரங்களும் அடங்கும்.

ஆசியா டைம்ஸ் பத்திரிகை ஜனவரி 22-ல் ''சீனா-அமெரிக்கா: இரண்டு நீர்க்குமிழிகளும் முட்டிமோதும் ஆபத்து'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுதந்திர ''வளர்ச்சி எஞ்சின்களும்'' உலக பொருளாதாரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சிக்கல்களை உருவாக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. ''அமெரிக்கப் பொருளாதாரம் சுருங்கிவிடுமானால், சீனப்பொருட்களை வாங்குவதை நிறுத்திக்கொள்ளுமானால் அது அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியைக் கடுமையாக்கும், முதலில் அமெரிக்க பங்குப்பத்திரங்களை வாங்குவதை சீனா நிறுத்திக் கொள்ளும். சீனா இவற்றை வாங்கியதால்தான் அமெரிக்கா நீர்குமிழி போன்ற பொருளாதார பூரிப்பை பெற்றது. அடுத்து சீனா தன்வசமுள்ள அமெரிக்க பத்திரங்களை பங்குச்சந்தைகளில் விற்க ஆரம்பிக்கும். அதற்கு மாறாக, சீன பொருளாதாரம் குளறுபடிக்கு உள்ளாகி சீனா தன்வசமுள்ள டாலர்களை மறுசுற்றுக்கு விட்டு அது அமெரிக்க பொருளாதாரத்தில் ஈர்க்கப்படுமானால் அப்போது எந்த வகையிலும் பொருளாதார செழுமைக்கு முற்றுப்புள்ளிதான் வைக்கப்படும்'' என்று எழுதியுள்ளது.

அமெரிக்காவில் சீனப் பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் அதன் மூலம் எதிர்காலத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுவிடக் கூடும். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சீனாவிலிருந்து குறைந்த கூலிக்கான தொழிலாளர்கள் போட்டியினால்தான் அமெரிக்காவில் வேலையில்லாத்திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாக கூச்சலிட்டு வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் புஷ் நிர்வாகம் குறுகியகால தேர்தல் கண்ணோட்டங்களால் உந்தப்பட்டு ஜவுளிகள், வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மேஜை நாற்காலிகள் போன்ற பலவகைகளைச் சார்ந்த சீன இறக்குமதிகளுக்கு வர்த்தக தடைகளை கொண்டுவந்திருக்கிறது.

சீன நாணயமான யுவான் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்று அமெரிக்க அரசியல்வாதிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளும் நிர்பந்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இப்படிச் செய்வதால் சீனா தனது ஏற்றுமதிகளுக்காக அதிகம் செலவிட வேண்டிவரும். அமெரிக்காவின் கோரிக்கைகளை இறுதியாக ஏற்றுக்கொள்ளுமென்ற எதிர்பார்ப்பில், சீனாவிற்குள் உலக முதலீடுகள் மிகப்பெருமளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. முதலீட்டாளர்கள் சீன நாணய மதிப்பு அடிப்படையில் அமைந்த சொத்துக்களை வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்கள். சீன நாணயம் மறுமதிப்பீடு செய்யப்படும்போது சொத்துக்களின் விலை உயரக்கூடுமென்ற எதிர்பார்ப்பில் இது நடந்துகொண்டிருக்கிறது.

இப்படி யுவான் நாணயத்திற்கு தேவைகள் பெருகிக்கொண்டே வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து கடன்கள் வழங்கப்படுவதும் எளிதாக நடந்து வருவதால் சீனாவின் பெரிய நகரங்களில் சொத்துக்கள் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி 2003 முதல் 11-மாதங்களில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் 99.82 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 32.5 சதவீதம் அதிகமாகும். இப்படி அறிவுக்குப்பொருத்தமற்ற சொத்துக்கள் வியாபாரம் எந்த அளவிற்கு உயர்ந்துகொண்டு சென்றதென்றால் நவம்பர் மாதக்கடைசியில் வர்த்தக கட்டடங்களில் காலியாக இருந்த அலுவலகங்கள் அளவு 100 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இது 6.5-சதவீத உயர்வாகும்.

1997-98 ஆசிய நெருக்கடிக்கு முந்திய காலத்தைக் கொண்டும் மற்றும் அமெரிக்காவின் 2000-ம் ஆண்டின் உயர் தொழில் நுட்ப பங்குக் குமிழிகள் திடீரென்று வீழ்ச்சியடைவதற்கு முன்னரும் ஊகங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடுகள் பங்கு விலைகளையும் சொத்துவிலைகளையும் மிகப்பெருமளவிற்கு உயர்த்திக்காட்டியதைப்போன்று இப்போது சீனாவில் இதுபோன்ற பங்குகள் விலை மிகப்பெருமளவிற்கு உயர்ந்துகொண்டே போகிறது. எனவே உற்பத்தியில் மந்த நிலைப்போக்கு நிலவும்போது பங்குச்சந்தைகளில் சொத்துக்கள் துறையிலும் பணவீக்க நெருக்குதல்கள் ஏற்பட்டுவருகின்றன. எடுத்துக்காட்டாக ஹாங்காங்கிலுள்ள சீன Green Holding நிறுவனம் வெளியிட்ட ஆரம்பப் பொது விற்பனைப் பங்குகளை (IPO) வாங்குவதற்கு அந்த நிறுவனம் வெளியிட்ட பங்கு அளவிற்குமேல் 1600-மடங்கு கூடுதலாக மனுக்கள் வந்தன. இது ஒரு காய்கறி விற்பனை. ஹாங்காங் வரலாற்றிலேயே இதற்கு முன்னர் ஒரு IPO- விற்கு இவ்வளவு மிதமிஞ்சிய மனுக்கள் வந்து குவிந்ததில்லை. பொதுமக்களுக்கு தெரியாத இந்தக் கம்பெனியின் பங்கு விலைகள் இப்படி வான்முட்ட உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஊக அடிப்படையிலான முதலீடுகளுக்கு பலன் கிடைக்காதென்று அரசாங்க அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் திரும்பத்திரும்ப எச்சரிக்கை செய்து வருகின்றனர். பங்குச் சந்தைகளில் மற்றும் சொத்துக்களின் மதிப்பில் தவிர்க்கமுடியாத அளவிற்கு சரிவு ஏற்படும்போது சீனாவின் நிதிக்கட்டுக்கோப்பிற்கு அதைவிட அதிகமான நிர்பந்தங்கள் வரத்தான் செய்யும். ஏற்கனவே வராக்கடன்களின் அளவு 384-முதல் 864-பில்லியன் டாலர்கள் வரை இருக்குமென்று நம்பப்படுகிறது. இப்படி உருவாகிக்கொண்டுள்ள நெருக்கடியைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சீனாவின் நான்கு பெரிய வங்கிகளில் வராக்கடன்களின் அளவைக் குறைப்பதற்காக 1998-1999-ல் 170 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடன்களை அரசாங்கம் சொத்துக்கள் நிர்வாக நிறுவனங்களுக்கு மாற்றியது. புதிய முதலீடுகளுக்காக வங்கிகளுக்கு அரசாங்கம் 32-பில்லியன் டாலர்களை வழங்கியது மற்றும் வங்கி நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. டிசம்பரில் சீன அரசாங்கம் மேலும் 45 பில்லியன் டாலர்களை இரண்டு வங்கிகளான சீன கன்ஸ்ட்ரக்சன் வங்கிக்கும், சீன வங்கிக்கும் அவற்றின் முதலீட்டு அடிப்படையை உயர்த்துவதற்காக வழங்கியது.

எவ்வாறாயினும், சொத்துக்கள் சந்தையில் செழுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து 21.4 சதவீதம் கூடுதலாக கடன்களை வங்கிகள் கடந்த வருடத்தில் வழங்கின. ரியல் எஸ்டேட் குமிழி புஷ்வாணமாகும் போது வங்கிக்கடன்களை திரும்பச்செலுத்த முடியாதவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமென்ற அச்சம் நிலவுகிறது.

Far East Economic Review தனது ஜனவரி இதழில் வெளிப்படையாக சீன வங்கிகள் ''செய்தாகவேண்டிய நடவடிக்கைகளை'' பட்டியலிட்டிருக்கிறது. ''அரசியல் காரணங்களுக்காக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை வெட்டுவதுதான்'' வங்கி சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமென்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதை வேறு வகையில் விளக்குவதென்றால் அராசங்கத்திற்கு சொந்தமான கம்பெனிகள் தங்களது ஊழியர்களுக்கு சுகாதார வசதிகள், கல்விச் சலுகைகள் மற்றும் இதர மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளைத் தருகின்றபோது அத்தகைய கம்பெனிகளுக்கு வங்கிகள் கடன்களை வழங்கக்கூடாது. இந்த நடவடிக்கை ஏற்கனவே சீனாவில் நிலவிக்கொண்டுள்ள சமூக பதட்டங்களுக்கு மேலும் தூபம் போடவே உதவும்.

சமூக பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்பாக நிச்சயமற்ற நிலை வளர்ந்து கொண்டுபோகிறது. எனவே சில ஆய்வாளர்கள் நாட்டின் ஆழமான சமூக சமத்துவமின்மைகளில் கடுமையான கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படியான எந்த ஒரு கீழ்நோக்கி திரும்புதலும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை கண்டனப்பேரணி மற்றும் அரசியல் கொந்தளிப்பிற்கு பொறுப்பேற்க வித்திடும். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி சிறுபான்மையினராக உள்ள அராசங்க அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பயனடைவதற்கு உதவியது. சீன மக்கள்தொகையின் மிகப் பெரும்பான்மையினருக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.

சிங்கப்பூரிலிருந்து பிரசுரிக்கப்டும் Strait Times ஜனவரி 27-ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னால் வெடித்துச்சிதறும் ஆபத்துமிக்க சமூக முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று எச்சரித்துள்ளது. ''சீனாவின் கடற்கரையோர மண்டலங்களை ஒட்டிய பகுதியில்தான் மிகப்பெரும்பாலான பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றும் உட்பகுதிகளில் திட்டுதிட்டாகத்தான் அந்த வளர்ச்சிகள் காணப்படுகின்றன. சீனாவின் பிராந்தியங்களுக்கிடையே நிலவுகின்ற இடைவெளிகளை குறைப்பதற்கோ அல்லது கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையே நிலவுகின்ற வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கோ அல்லது கிராம ஏழைமக்களின் துயரங்களைத் தணிப்பதற்கோ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை'' என்று எழுதியுள்ளது.

''இந்த மிகக்கடுமையான நிலை என்னவென்றால் சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் (இந்தக்கணக்கில் நகரப்பகுதிகளில் செயல்பட்டுவரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகளில் புதிதாக ஆட்குறைப்பு செய்யப்பட்ட புள்ளி விவரம் சேர்க்கப்படவில்லை) மிக அதிகமாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 2002-ல் 4 சதவீதமாக இருந்தது. அண்மையில் 4.7 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

1990-களின் இறுதியில் தொடங்கி இதுவரை அரசுக்குச்சொந்தமான தொழில்களில் 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர். சீனா டெய்லி ஜனவரி மத்தியில் வெளியிட்டிருந்த ஒரு தகவலின்படி அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்களில் மேலும் ''மறுசீரமைப்பு'' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, 2006-வரை ஒவ்வொரு ஆண்டும் மேலும் 3-மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் வட-கிழக்கு சீன பகுதியில் மட்டும் அரசிற்குச் சொந்தமான 400 பெரிய நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்று பெப்ரவரி மாதம் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான Xinhua தகவல் தந்தது.

வேலைதேடி போட்டிகள் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நகர மற்றும் கிராம பகுதி வருமானங்கள் தேக்கநிலை அடைந்துள்ளன. குவாங்டோங் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி, சீனாவின் பிரதான ஏற்றுமதி வளாகத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10-ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 10-சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வந்தது. ஆனால் அத்தொழிற்சாலையின் தொழிலாளர்கள் மிகப்பெரும்பாலோர் கிராமப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 50 முதல் 70 அமெரிக்க டாலர்கள் வரைதான் சம்பாதித்தனர். இது 1993-ல் நிலவிய அதே ஊதிய விகிதங்கள்தான் என்றாலும் தற்போது அவை குறைவானவற்றையே வாங்க முடியும்.

ஜனவரி 18-ல் நியூயோர்க் டைம்ஸ் எச்சரிக்கையை விடுத்திருந்தது: ''சீனாவில் தற்போது பெரும் சமுதாய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, விவசாய தொழிலாளர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட மாற்றங்களுக்கிடையில் சீனப் பொருளாதாரத்தில் கடுமையான சரிவு ஏற்படுமானால் அது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் செல்வச் செழிப்பு நிரந்தரமாக ஏற்படுவதை உறுதிசெய்து தந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நிற்க முடியும். பொருளாதார மந்த நிலை ஏற்படுமானால் அது அரசியலில் கடுமையான குழப்பத்தை உருவாக்கும். அது மிக கடுமையான சிக்கலாக சீனாவிற்கு மட்டுமல்ல எஞ்சிய உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்''.

"அரசியல் ஸ்திரமின்மை" என்றால் என்ன பொருள் என்பதை டைம்ஸ் விளக்கவில்லை. அதன் குறிப்புப் பொருள் தெளிவானதாக இருக்கிறது. உலக உற்பத்தித் தொழிற்துறையின் உற்பத்தியில் பெரும்பகுதி சீன தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டுவதை சார்ந்திருக்கிறது. குறிப்பாக சீனாவின் தொழிலாள வர்க்கத்தின் சமூக வலிமை, மற்றும் எண்ணிக்கையானது 1989-மே-ஜூன் எழுச்சியைவிட மிக மகத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், பெய்ஜிங் சர்வாதிகாரத்திற்கு எதிராக, சீனத் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்குவார்களானால் அது பூகோள முதலாளித்துவத்தின் ஸ்திரமின்மைக்கு ஏற்படும் ஆபத்து என அமெரிக்க ஆளும் வட்டங்களில் பார்க்கப்படும்.

Top of page