World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

World economy: No smooth path to growth in 2004

உலகப் பொருளாதாரம் : 2004 இல் வளர்ச்சிக்கு சுமூக பாதை இல்லை

By Nick Beams
3 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

மிக அண்மையில் வெளிவந்த சுட்டிகாட்டிகளின்படி கடந்த ஐந்தாண்டுகளில் எந்த ஒரு காலத்திலும் பார்க்க, உலகப் பொருளாதாரத்திற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாக உள்ளன. பங்குச் சந்தைகள் உயர்ந்து கொண்டு வந்துள்ளன. 1996 க்குப் பின், வோல் ஸ்ரீட், அதன் சிறந்த ஆண்டைக் கொண்டாடுகின்றது மற்றும் ரோக்கியோ, 1986 க்குப் பின் அதன் சிறந்த ஆண்டையும், ஐக்கிய அமெரிக்க அரசுப் பொருளாதாரம் மீழ்வையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்க அரசுப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அடுத்த வருடத்தில் 3 முதல் 4 சத வீதம் வரை வளரும் என்று முன் கூறப் பட்டுள்ளது. ஜப்பானிய பொருளாதாரம் விரிவடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றது. மற்றும் ஐரோப்பாவில் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து விடுபடும் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன.

அண்மையில் வெளிவந்த ஃபினான்ஷல் டைம்ஸ்(Financial Times ) பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் "தங்க முடிப் பொருளாதாரத்திற்குத்" ("Goldilocks economy") திரும்பும் சாத்தியக் கூறைக் கூட முன்வைத்தது - 1990 ஆண்டுகளின் பிந்திய காலப் பகுதியில் வளர்ச்சியானது "மிகச் சரியானதாக இருந்தது" என்று கூறப்பட்ட காலப் பகுதி. அதாவது, பணவீக்கம் கொண்டுவரக் கூடியளவு, அளவுக்கு அதிகமாக இல்லாதும், ஆனால் வேலைச் சந்தை விரிவாக்கம் அடைய உத்தரவாதம் செய்யக் கூடியளவு போதுமான அளவு பெரியதாகவும் இருந்ததாகக் கூறப் பட்ட காலப் பகுதிக்குத் திரும்பும் சாத்தியக் கூறை முன்வைத்தது.

பங்குச் சந்தைகளின் செயல்கள் மற்றும் உடனடிப் பொருளாதார ஆதாரக் கூறுகளின்(data) அடியில் ஒருவர் துருவிப் பார்ப்பாராயின், உலகப் பொருளாதாரமானது ஒரு சுமூகமான வளர்ச்சிப் பாதையில் செல்லுவதற்கு எவ்வளவோ மாறாக, ஒரு பிரமாண்டமான நடுநிலை அமைதிக் குலைவுக்(disequilibrium.) காலப் பகுதியினுள் காலடி எடுத்து வைத்துள்ளது என்பது துல்லியமாகின்றது.

இந்த நடுநிலை அமைதிக் குலைவின் மையத்தில் இருப்பது, ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இக்கடனின் வளர்ச்சி வேகம் 2003 இல் முடுக்கி விடப் பட்டுள்ளது. நடப்புக் கணக்கின் வருட பற்றாக் குறை, முந்தைய உச்ச எல்லையைக் கடந்து சென்று 55,000 கோடி டாலர்களை ($550 billion), எட்ட இருப்பதாக எதிர்பார்க்கப் படுகின்றது. இது உள்நாட்டு மொத்த உற்பத்தியின்(gross domestic product) 5 சத வீதத்திற்குச் சமமாகும். இது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வெளிநாட்டுக் கடனை 3,00,000 கோடி டாலருக்கு (3 டிரில்லியன் டாலர்கள்) , அல்லது உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 30 சத வீதத்திற்கு நெருக்கமாக இட்டுச் செல்லும்.

நாணயக் கொள்கை பற்றி நவம்பர் 20 ம் தேதி அமெரிக்க மத்திய ரிசேவ் வங்கியின் தலைவர் அலன் கிறீன்ஸ்பான் சொற்பொழிவு ஒன்றை நடத்தினார். அப்பொழுது அவர் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை பற்றியும், மற்றும் வளரும் வெளிநாட்டுக் கடன் சுமைக்கு " மேலும் மேலும் நிதி செலுத்துவது கஷ்டமானதாக மாறக் கூடும்" என்பது பற்றியும் "வளர்ந்துவரும் கவலை" யைச் சுட்டிக் காட்டினார்.

உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும், வெளிநாட்டுக் கடனுக்கும் இடையிலான விகிதாசாரம் வருடத்திற்கு 5 சத வீத புள்ளிகள் தற்போது உயர்ந்து வருகின்றது. கடனுக்கு நிதி செலுத்தல் சம்பந்தமாகக் " குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எவையும் நடந்திராதது போலத் தோன்றினாலும்", தொடர்ந்தும் அது உயர்ந்து கொண்டிருக்குமாயின் "எதிர்கால சரிப்படுத்திக் கொள்ளல்கள்" செய்யவேண்டிவரும். "தொடர்ந்தும் எவ்வளவு தூரம் தேசிய சேமிப்புகளை எல்லைகளைக் கடந்து நகர்த்தச் சர்வதேச நிதி தலையீடல் உலக நிதியின் அளவை நீட்ட முடியும் ? " என்று அவர் கேட்டார்.

நிதிச் சந்தைகள் மையம் வெளியிட்ட அறிக்கை, இந்த நடவடிக்கைகளின் அளவை எடுத்துக் காட்டுகின்றது. 2002 இல் ஐக்கிய அமெரிக்க அரசுகளினுட் சென்ற அசல் மூலதன நிதியோட்டங்கள் (inflows) 52,800 கோடி டாலர்களாகும் ($528 billion). உலகின் மற்றைய பகுதிகளுக்குச் சென்ற அசல் மூலதன நிதியோட்டங்களின் 75.5 சத வீதத்தை இது பிரதிநிதித்துவம் செய்கின்றது. கடந்த 12 மாதங்களில் அகன்று வரும் நடப்புக் கணக்குப் பற்றாக் குறையை எடுத்துக் கொண்டால், அதன் 2003 ஆம் ஆண்டிற்கான தொகை, இதைவிடப் பெரியதாகத்தான் இருக்கும்.

ஜென் நாணயத்தைச் ஸ்திரப் படுத்தும் நோக்குடன் நாணயச் சந்தைகளில் ஜப்பானிய அரசாங்கம் செய்த தலையிடல்களுக்கான தொகைகள் பற்றித் தரப்பட்ட எண்கள் நிதியோட்டங்களின்(financial flows) அளவை எடுத்துக் காட்டுகின்றன. டாலருக்கு எதிராக ஜென் உயரும் வேகத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதிச் சந்தையை பாதுகாக்கும் முயற்சியினால், நிதி அமைச்சகம் முந்தைய உச்சநிலையையும் தாண்டி 20,05,700 கோடி ஜென் (20,057 billion yen) [18,000 கோடி டாலர்களுக்கும் ($180 billion)அதிகமாக] இந்தாண்டு செலவிட்டுள்ளது. இது 1999 ம் ஆண்டு நிலைநாட்டிய முந்தைய உச்ச நிலையையும் விட, இரண்டரை மடங்கிலும் அதிகமானது.

நிதி அமைச்சகம் மார்ச் மாதம் முடிவடையும் நிதியாண்டுவரை தான் நாணயத் தலையீடு செய்வதற்காக கடன்வாங்கும் பணத் தொகையை 21,00,000 கோடி ஜென்னில் இருந்து 1,00,00,000 கோடி ஜென்வரை உயர்த்துவதாக அறிவித்ததையடுத்து, மேலும் தலையீடுகள் திட்டமிடப் பட்டுள்ளன. ஏப்பிரலில் ஆரம்பிக்க இருக்கும் நிதி ஆண்டிற்குக் கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பு 61,00,000 கோடி ஜென்னில் இருந்து 1,40,00,000 கோடி ஜென்னாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த உயர்வு ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடப்புக் கணக்குப் பற்றாக் குறைக்கு அளவில் கிட்டத்தட்ட சமமானதாக உள்ளது.

இந்தப் பிரமாண்டமான ஜப்பானிய தலையீடு, சர்வதேச நிதி அமைப்பில் மேலாதிக்கம் செய்யும் அம்சமாக மாறியிருக்கும் மாற்றுப் போக்கினை, மிகத் தெளிவான வரை வடிவத்தில் எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேசச் சந்தைகளில் டாலர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப் படும் பொழுது - அது இந்த வருடம் சராசரியாக 11 சத வீதம் வீழ்ச்சியுற்றுள்ளது - ஆசிய நாட்டு மத்திய வங்கிகள் தமது ஏற்றுமதிச் சந்தைகளைக் காக்கத் தமது நாணயங்கள் பெறுமதியில் உயர்வதைத் தடுக்கும் முயற்சியில் தலையிடுகின்றன. அமெரிக்க ஐக்கிய அரசுகளின் டாலர்களை இவை வாங்குவது, மறுபுறம் அமெரிக்க ஐக்கிய அரசுகளின் மத்திய அரசாங்கத்தின் அன்னிய செலாவணிப் பற்றாக் குறையையும் மற்றும் 50,000 கோடி டாலர்களைத் தாண்ட இருக்கும் பட்ஜெட் பற்றாக் குறையையும் அடைப்பதற்கு நிதி வழங்குகின்றன.

பூகோள பொருளியல் நிபுணர் டேவிட் ஹேல், டிசம்பர் 29 ம் தேதிய அவுஸ்திரேலிய ஃபினான்ஷல் றிவியூ இதழிற்கு எழுதிய கட்டுரை ஒன்றில், ஆசிய மத்திய வங்கிகள் இப்பொழுது அயல் நாட்டு நாணயமாற்று சேமிப்பு நிதியங்களின் (foreign exchange reserves) 70 சத வீதத்தை வைத்திருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இது 1,70,000 கோடி டாலர்கள் ஆகும். அவர்கள் இந்த சேமிப்பு நிதியிலிருந்து 80 முதல் 90 சத வீதத்தை ஐக்கிய அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் நடைமுறையில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வரவு செலவுப் பற்றாக் குறைக்கு நிதி வழங்கியுள்ளனர். இதுவரை இந்த நிதி வழங்கல், சார்பு ரீதியாகச் சுமூகமாக நடந்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய அமெரிக்க அரசுகளால் தொடக்கப் பட்டுள்ள பாதுகாப்புவாத நடவடிக்கைகள் போன்ற அரசியல் காரணங்கள் காரணமாக, அல்லது டாலர் நாணயம் பொறிந்து விடும் என்ற அச்சத்தின் காரணத்தினால் மத்திய வங்கிகள் விரைவாக தமது நிதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுவனவாயின், மிகப் பெரும் நிதி நெருக்கடி ஏற்படும்.

டிசம்பர் 28 ம் தேதி வெளியான "தலை கீழான தர்க்கம்" என்ற தலைப்பிடப் பட்ட கட்டுரை ஒன்றில் இந்த மாற்றுப் போக்கை ஆராய்ந்த ஃபினான்ஷல் டைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளரான (columnist) ஜோன் பிலென்டர், உலகப் பொருளாதாரம் இப்பொழுது "முன் என்றும் இல்லாதபடியான உயர்- கம்பிப் பரிசோதனையில்" ஈடுபட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

1990 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரதானமாக தனியார் மூலதனத்தில் தங்கியிருந்தது. இதன் பின்னர், ஐக்கிய அமெரிக்க அரசுகள் இப்பொழுது ஜப்பான், சீனா மற்றும் மற்றைய மேலெழும் (emerging) ஆசியப் பொருளாதாரங்களில் இருந்து வரும் உத்தியோக ரீதியான நிதியோட்டங்களில் அதன் பண ஊதாரித்தனமான . டாலர் மேலாண்மை கொண்ட கண்காட்சியைச் சாலையில் வைத்திருக்கத் தங்கியிருக்கின்றது. இது 1914 ம் ஆண்டிற்கு முன்னர், சுதந்திரமான நிதியோட்டத்தின் முந்தைய கிளைக் கதையின் பொழுது, பூகோள மூலதனம் நடந்து கொண்ட முறைக்கு நேர் எதிரானதாகும். அப்பொழுது பிரிட்டன், அதன் அயல் நாட்டுக் கணக்கில் பிரமாண்டமான தொகைகளை உபரியாக வைத்திருந்தது. அது வளர்ச்சியுறும் நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்தது. இன்று, உலகின் அதி செல்வந்த நாடு, இந்தத் தர்க்கத்தைக் குப்புற, அதன் தலையின் மேல் திருப்பிவிட்டுள்ளது. எனவேதான் ....ஒருதலைபட்சவாதம் பக்கம் சாயும் (unilateralist-inclined) அமெரிக்கா, அதன் உயர் உள்நாட்டு நுகர்வுக்கும், மற்றும் தலையீட்டுவாத வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கும், சீன மக்கள் குடியரசு போன்ற பொருத்தமாகத் தோன்றாத நண்பர்களின் தாராண்மையிற் தங்கியிருக்கும் புதிர் ஒன்று நம்மிடம் இருக்கின்றது.

உலகப் பொருளாதாரத்தின் சமநிலையின்மை (disequilibrium), நிதிப் புள்ளி விபரங்களில் பிரதிபலிப்பதோடு அல்லாமல், அவை வளர்ச்சி எண்களிலும் பிரதிபலிக்கின்றன. மோகன் ஸ்டான்லியின் பூகோள பொருளியல் வல்லுணரான ஸ்டீபன் றோச்சின் படி, 1995 - 2002 காலப் பகுதியினூடு உலகப் பொருளாதாரத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பங்கு 32 சத விகிதமாக இருந்த பொழுதும், உலக மொத்த உள் நாட்டு உற்பத்தியின் திரள் குவி அதிகரிப்பில் (cumulative increase) இதைப் போல் மூன்றுமடங்காக - 96 சத வீதமாக அதன் பங்கு இருந்தது

"அடிப்படை ரீதியான சமநிலை இன்மையிற்தான் அதிகமாக இருக்கின்றது" என்று உலகப் பொருளாதாரத்தை வர்ணித்த றோச் "முன்னொரு பொழுதும் இல்லாத அளவு ஏற்றத் தாழ்வுகள்" நடப்புக் கணக்குப் பற்றாக் குறையுள்ள நாடுகளுக்கு இடையில் தோன்றியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இது பிரதானமாக ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் மற்றும் உபரிகள்(surpluses) உள்ள நாடுகளுக்கும் - ஆசியாவிற்கும்., குறைந்த அளவு ஐரோப்பாவிற்கும் இடையில் தோன்றியுள்ளன, என்றுள்ளார். இப்படியான பூகோளச் சமனின்மை தொடர்ந்தும் பேண முடியாதவை மட்டுமல்லாது, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் " என்றும் வீழ்ச்சியுறும் சேமிப்பு விகிதங்கள், என்றும் விரிசல் அடைந்துகொண்டு போகும் நடப்புக் கணக்கு மற்றும் என்றும் உயர்ந்து கொண்டே போகும் கடன் சுமைகள் என்பனவற்றின் அத்திவாரத்தில் நிலைத்து நிற்கும் பொருளாதார மீட்பைக் கட்ட முடியாது".

இந்தச் சமனின்மைகள்(imbalances)மற்றும் இவை உண்டுபண்ணும் மனத்தாக்கலைவு (tensions) 2004 ஆண்டிலும், அதற்கு அப்பாலும், எப்படி சிக்கவிழப் (unravel) போகின்றன என்பதை முன் கூட்டியே கூற முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயத்துடன் கூற முடியும்: அதாவது, உலகப் பொருளாதாரம் எவ்வளவுக்கு எவ்வளவு நீண்ட காலத்திற்கு இன்றைய பாதையிற் தொடர்ந்து செல்லுகின்றதோ, அவ்வளவு பெரியதாகக் கீழ் இருக்கும் சமநிலையின்மையும் மற்றும் மிகப் பெரும் நிநி நெருக்கடியும் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

Top of page