World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The "Stop Dean" campaign and the divisions in the American political establishment

"டீனை நிறுத்துக" என்ற பிரச்சாரமும் அமெரிக்க அரசியல் நிறுவனங்களில் பிளவுகளும்

By David Walsh
14 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

அயோவாவில் (Iowa) கடந்த ஞாயிறு இரவு நடைபெற்ற இறுதி விவாதத்தில், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் உட்பிரிவுக் குழுக்களுக்கான தேர்தல் வெள்ளோட்டங்களில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கு பெற்றனர். மொத்தம் 9 வேட்பாளர்களில் எட்டு பேர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். இராணுவத்தின் பழைய தளபதியான வெஸ்லி கிளார்க், அயோவா உட்பிரிவுத் தேர்தலில் போட்டியிடாததால், இக்கூட்டத்திற்கு வரவில்லை.

ஜனவரி 19ம் தேதி, இம்மாநிலத்தில் உள்ள 1,993 சிறு கிளைகளிலும் தொடர்ந்து நடக்கவுள்ள, குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவை உறுதியளிக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உட்பிரிவின் குழுவிற்கான தேர்தல்கள் நடத்தப்படும். இப்பிரதிநிதிகள் அடுத்தமாதம் நடக்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் மாவட்டக் கூட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அயோவா ஒரு அதிக மக்கள் பெருக்கம் உடைய அல்லது பொருளாதார அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் இல்லை. என்றாலும், இந்த நிகழ்ச்சி மக்கள் கருத்தைக் கணிக்கும், கிட்டத்தட்ட ஒராண்டு காலம் நீடிக்கும் தேர்தல் வழிமுறையின் முதல் கட்டமாக இருக்கும் என்பதோடு, 1972 லிருந்து செய்தி ஊடகத்தின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ள மையமாக விளங்கி வருகிறது.

இந்த அயோவாப் போட்டியைத் தொடர்ந்து (ஜனநாயக் கட்சியினரும், தனிப்பட்டோரும் ஜனநாயகத் தேர்தலில் நேரடியாக ஒரு வேட்பாளருக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும்) முதல் தொடக்கக் கூட்டம் புதிய ஹாம்ப்ஷையரில் (New Hampshire) ஜனவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. பெப்ருவரி 3ம் தேதி, "குட்டிச் செவ்வாய்க்கிழமை" அன்று ஜனநாயகத் தொடக்கக் கட்டத் தேர்தல்கள், தெற்குக் கரோலினா, மிசூரி, அரிசோனா, ஒக்லஹோமா, கலிபோர்னியா, நியூயோர்க், ஓஹையோவிலும், மற்றும் 7 மாநிலங்களில் அடுத்த கட்டத்தேர்தல்கள் "உயர்ந்த செவ்வாய்" எனப்படும் மார்ச் 2ல் நடைபெறும். எந்த வேட்பாளர் கட்சியின் நியமனத்தைப் பெறுவார் என்பது, அதாவது யார் தேசிய மாநாட்டின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வெற்றிகொள்ளுவார் என்னும் முயற்சி, ஜூலை மாதம் கடைசியில் பாஸ்டனில் நடைபெற இருக்கும் கூட்டம் வரை உறுதியாகச் சொல்ல முடியாமல்தான் இருக்கும்.

ஜனநாயகக் கட்சியில் நடைபெறும் போட்டி, அமெரிக்க ஆட்சி உயர்சிறு குழுவிற்குள் இருக்கும் ஆழ்ந்த பிளவுகளை அதுவும் குறிப்பிடத்தக்க வகையில், வெர்மான்டின் (Vermont) முன்னாள் கவர்னராக இருந்து இப்பொழுது முன்னணி வேட்பாளராக இருக்கும் ஹோவர்ட் டீனுக்கு (Howard Dean) எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சாரம் கூர்மையான வடிவத்தில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

MSNBC கேபிள் இணையத்தின் ஆதரவில், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் பற்றிய முக்கியமான பிரச்சினைகளுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுப்பதால் (Brown and Black Presiddntial Forum) ''பழுப்பு நிறத்தவர், கறுப்பர் ஜனாதிபதி மன்றம்" என்ற பெயரைக் கொண்டிருந்த, Des Moines ல் நடத்தப்பட்ட ஜனவரி 11 ம் தேதி விவாதத்தில், மரியாதைக்குரிய அல் ஷார்ப்டன் (Al Sharpton) டீன் மீதான மிகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். "இந்தப் பிரச்சாரத்தின்போதுதான்" டீன், "கறுப்பர்களையும், பழுப்பு நிறத்தவரையும் கண்டுபிடித்திருக்கிறார்" என்று குற்றஞ்சாட்டிய ஷார்ப்டனுடைய பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பேசப்படும் வன்மையான உரை, டீனை வியப்புடையச் செய்தது. 96,8 சதவிகிதம் வெள்ளையர்களைக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்த டீன், தன்னுடைய ஆறுபேர் அடங்கிய அமைச்சர்குழுவில் ஒரு பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தவரையோ ஏன் கொள்ளவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ஒரு பாசாங்குக்காரரும் பழைய, FBI க்கு தகவல் தெரிவிப்பவர், செய்தி ஊடகத்தால் தவறாமல் "குடியுரிமை நலன்களை நாடுபவர்" என்று குறிப்பிடப்படும் ஷார்ப்டன், டீனுக்கு அறிவுரை கூறத் தலைப்பட்டார். அவர், "இந்தப் பிரச்சாரத்தில் நீங்கள் இனப்பிரச்சினையை எழுப்பியது குறித்த உண்மைக்காக நான் உங்களை மதிக்கும்போதிலும், நீங்கள் வரம்பைத் தாண்டி எப்பொழுதாவது உங்களுடைய மாநிலத்தில் இனப் பிரச்சினை பற்றி ஏதாவது செய்திருக்கிறீர்களா? என்றும் கறுப்பர்களுடனும், பழுப்பு நிறத்தவர்களுடனும் (வெறும் நண்பர்களாக உங்கள் கல்லூரி நாட்களில் இருந்திருக்கக் கூடும், அவ்வாறில்லாமல்) சமதரத்தில் வேலை செய்திருக்கிறீர்களா என்பது பற்றி நீங்கள் கட்டாயமாக, தடையில்லாமல், வெளிப்படையாகப் பேசவேண்டும்" என்றார்.

ஜனநாயகக் கட்சியில் எப்படியும் டீனை நிறுத்திவிடவேண்டும் என்ற கருத்துடைய பிரிவின் சார்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஷார்ப்டன் ஞாயிறு இரவு நடந்துகொண்டார். New York Times ல் ஜனவரி 10 ம் தேதி ஒரு கட்டுரையில் "இவருக்குப் (ஷார்ப்டனுக்கு) பிரச்சாரம், ஆயிரக்கணக்கில் டொலர்களைக் குவித்துக் கொடுக்கவும், ஆடம்பர விடுதிகளில் தங்கவும், நாடு முழுவதும் தன்னுடைய திரைப்படத் தயாரிப்பாளரோடு செல்லவும் வாய்ப்பளித்துள்ளது. இந்த வேட்பாளரின் சமீபத்திய அறிக்கை, செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பல பிழைகள், மீறுதல்கள் என்பன நிறைந்துள்ளன என்பது பரிசீலனையில் தெரியவரும்" என்று செய்தி வந்திருந்ததைப் பற்றி செய்தி ஊடகத்திலிருந்தோ, சக வேட்பாளர்களிலிருந்தோ, இவரை எவரும் அநாகரிகமாகக் கேள்வி கேட்வில்லை.

ஷார்ப்டனுடைய ஆவேசப் பேச்சு, தொடர்ச்சியான மிகப்பெரிய முறையில் தயாரிக்கப்பட்ட பல பிரச்சினைகளுள் ஒன்றுதான். வெர்மான்டின் கவர்னராக இருந்தபோது செய்த நிகழ்ச்சிகள், நான்கு ஆண்டுகள் முன்பு அயோவா உட்பிரிவு வழிவகைபற்றி இவர் பேசியது, புஷ்ஷின் வரி வெட்டுக்கள், பற்றியவை என்று பல இன்னும் கூறப்படுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள், வெறும் சேற்றையள்ளித் தூவுதல், அற்பக் கருத்து வேறுபாடுகளை உரத்த குரலில் கூவுதல் போன்ற கீழ்த்தர அரசியலைத் தாண்டக்கூட முடியாமல்தான் இருக்கின்றனர். டீனுக்கு எதிரான பெரும்பாலான தாக்குதல்கள் இத்தகைய பிற்போக்கான திருப்புவகையைத்தான் கொண்டிருக்கின்றன.

டீன்-எதிர்ப்புப் பிரச்சாரம், வெர்மான்ட்டின் முன்னாள் கவர்னருடைய வாழ்க்கைப் போக்கு, அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, குறிப்பிடத்தக்கவையாகத்தான் இருக்கிறது. "நிதியக் கருத்துக்களில் பழைமைவாதி" என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர் ஒரு செல்வம் கொழிக்கும் நியூயோர்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இவர், அமெரிக்காவிலுருக்கும் பொருளாதார நலன்களுடைய தன்மைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியவர் அல்லர். இவற்றைப்பற்றி நன்கே அறிந்துள்ள Walll Street Journal, டீனை "வோல் ஸ்ட்ரீட்டின் பிள்ளை, "ஜோன், ரொபர்ட் கென்னடி காலத்திற்குப்பிறகு உயர்மட்ட ஜனநாயக கட்சிக்காரர்களில் மிகக்கூடுதலான தொடர்புகளை வோல் ஸ்ரீட்டுடன் கொண்டுள்ளவர்" என்றே சமீபத்தில் இவரை விவரித்துள்ளது.

ஈராக் மீது ஆக்கிரமிக்கவேண்டும் என்ற முடிவை எதிர்த்துக் குறைகள் கூறியதால் வாக்குக் கணிப்புக்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்த போதிலும், டீன் இப்பொழுது தொடர்ந்து அந்நாட்டில் சட்டவிரோதமாக இராணுவத்தை வைத்திருப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் போருக்கும், உலக ஆதிக்கத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காக "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரிலிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய உந்துதலுக்கும் ஆதரவைத் தந்து வருகிறார். ஞாயிறு அன்று நடந்த விவாதத்தின் பொழுது, ஓகையோவிலிருந்து தேசிய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் Dennis Kucinich இடம், அவர் கேள்வியோன்றிற்குப் பதில் கூறுகையில், இப்பொழுது விருப்பச் செலவுகளில் பாதிக்கும் மேலான பகுதியைக் கொண்டுள்ள பாதுகாப்புச் செலவினங்களைத் தான் குறைக்கப்போவதில்லை என்று உறுதிமொழி அளிக்கவே கூடுதலான முயற்சியை கொண்டார். சமீப வாரங்களில், "வெளியாளாக இருந்த" டீன், பழைய துணை ஜனாதிபதி அல் கோர் மற்றும் அவரின் முக்கிய எதிர்போட்டியாளராக 2000 ஜனாதிபதித் தேர்தல்களில் இருந்த நியூ ஜெர்சியின் செனட் உறுப்பினர் பில் பிராட்லி, மற்றும் அயோவாவுடைய செனட் உறுப்பனர் டாம் ஹார்கின் ஆகியோருடைய ஆதரவை இவர் பெற்றிருக்கிறார்.

இயல்பான பழைமைவாத அரசியலைக் கொண்டிருந்தபோதிலும், டீன், செய்தி ஊடகத்திலும், ஜனநாயகக் கட்சி அரங்குகளிலும் மிகத்தீவிரமான பிரச்சாரத்தை எதிர்த்து நிற்கும் நிலையில் இருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் மற்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் டீனைத் தாக்கிப் பேசும் முயற்சிகளில், கனெக்டிகட்டின் ஜோசப் லிபர்மன், மாசாசூஸட்ஸின் ஜோன் கெரி என்ற இரு செனட் மன்ற உறுப்பினர்களும் முன்னிலையில் இருக்கின்றனர். அமெரிக்கர்கள், சதாம் ஹுசேன் கைப்பற்றப்பட்ட பிறகு, "பாதுகாப்பான நிலையில்" இல்லை என்று, ஈராக்கில் பின்னர் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பார்க்கும்போது, டீன் நியாயமான முறையில் தெரிவித்த கருத்து, அவருக்குப் பெரும் அவமதிப்புத்தரும் இழிசொற்களை பெருமழைபோல் கொண்டு சேர்த்தது. புஷ்ஷின் ஈராக்கியக் கொள்கையையும், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களை அடக்குவதையும் ஆதரிக்கும் வலதுசாரியான லிபெர்மன், டீன் "தானே தோற்றுவித்துக்கொள்ளும் மறுத்தல் என்ற வலைக்குள் சிக்கியிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

செய்தி ஊடகத்தின் போக்கு டீனை நடத்துவதில் அவர் ஒரிரு நட்டுக் (screws) கழன்ற தீவிரவாதியை நடத்துவது போல் இருக்கிறது. "Inside the Mind of Howard Dean" என்ற தலைப்பில், பழைய கவர்னருடைய சிந்தனை வழிவகைகள் அறிவதற்கு மிகக் கடுமையானவை என்பதுபோல் டைம் இதழ் ஒரு முக்கிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒத்தாற்போல் நியூஸ்வீக் பத்திரிகை ஒரு தலைப்புக் கட்டுரையை, (Doubts about Dean--Behind the Demorcats' Battle to Sop Him) "டீனைப் பற்றிய சந்தேகங்கள், ஜனநாயகக் கட்சியில் அவரைத்தடை செய்வதின் பின்னணி" என்ற தலைப்பில் வெளியிட்டது. New York Times, தன்னுடைய ஜனவரி 9ம் தேதி கட்டுரையில், டீனைப் பற்றிய "இரண்டாம் எண்ணங்கள், ஜனநாயகக் கட்சியினருக்கு பெரும் அலை போல் எழுகின்றன" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளது.

மிகுந்த வியப்பை அளிக்கக்கூடிய கட்டுரைகளுள் ஒன்றாக, Washington Post உடைய கட்டுரையாளர், டேவிட் பிரோடர் எழுதிய "டீன்: ஆதிக்கம் செலுத்துபவரா அல்லது வெடிமருந்து போன்றவரா" (Dean: Dominator or Detonator) என்று இருக்கிறது. பொதுவாக, வண்ணப்பூச்சு இல்லாமல் "மிதவாதியாக" இருக்கும் பிரோடர், டீன் பிரச்சினையில் கிட்டத்தட்ட நரம்புத் துடிப்பினால் அவதியுறும் அளவிற்கு, "(ஜனநாயகக்) கட்சி அடித்தளப் பணியாளர்கள், காங்கிரசில் ஜனநாயகக் கட்சியினரின் நடவடிக்கைகளினால் வெறுத்துப்போய், "ஜனாதிபதி புஷ்ஷுடைய, மற்றும் அவருடைய வாஷிங்டன் நிர்வாகத்திற்கு, கோட்பாட்டளவு எதிர்ப்பு அல்லது மக்கள் கவனத்தினை ஈர்க்கும் வகையில் குறைகூறுபவர் கருத்திற்கு பெரும் ஆதரவுதர தயாராக உள்ளனர்" என்று எழுதியுள்ளார்.

"மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்", "கோட்பாட்டளவிலும்" டீன் புஷ்ஷிற்கு எதிர்ப்பாளர் என்பது உண்மையல்ல என்றாலும், இக்கருத்து புலப்படுத்தும் உண்மை சிந்தனைக்குரியது ஆகும். டீன் இத்தகைய கருத்து உடையவராகக் கருதப்படுகிறார் என்றுதான் லிபர்மன்னும் அவரைக் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளார். "நாம் புஷ் நிர்வாகத்தின் தீவிரத்தை, நம்முடைய தீவிரமான கோபத்தால் தோற்கடிக்கப் போவதில்லை." என்று ஜனவரி 5ம் தேதி அயோவா விவாதத்தில் கன்னக்டிக்கட் செனட் உறுப்பினர் கருத்துத் தெரிவித்தார். புஷ்ஷை எதிர்ப்பது என்பது அரசியலில் "வெறுப்புடன் ஆற்றப்படும் உரைக்கு" சமம் என்பதுதான் குடியரசுக் கட்சியினர் மற்றும் கணிசமான அளவு ஜனநாயகக் கட்சியினரின் நினைப்பாகும்.

வாக்கெடுப்புக்களில், டீனுடைய எழுச்சிக்குப் பின்னணியில், செய்தி ஊடகத்தையும் அரசியல் நிறுவனங்களையும் தூண்டும் அளவிற்கு என்ன இருக்கிறது? வெர்மான்டின் பழைய கவர்னருடைய தெரிந்துள்ள ஆளுமை, கண்ணோட்டத்தைவிட, அவரைப்பற்றிச் சட்டென்று தெரியாத, எதிர்பார்க்க முடியாத கூறுபாடுதான் தேர்தல் வழிவகையில் ஒரு திருப்பத்தைக் கொடுத்துள்ளது.

புஷ் நிர்வாகம், 2000 ம் ஆண்டுத் தேர்தலைக் கடத்திச் சென்று வென்றபின், அதற்கு கோரேயின் முகாம் நிபந்தனையின்றி அடிபணிந்ததும், அதன் பின்னர் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல்களுக்குப் பிறகு, தன்னுடைய பிற்போக்கு நோக்கங்களுக்காக அமெரிக்காவில் எதையும் உறுதியாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை வலதுசாரிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. ஜனநாயகக் கட்சியின், ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுத்தல் வழிமுறையும் அவ்வாறே பொதுவான வலதுசாரிப் போக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று, லிபர்மன், கெரி, மிசூரியிலிருந்து தேசிய சட்டமன்றத்தில் இருக்கும் ரிச்சர்ட் ஜெப்ஹர்டுட் ஆகியோர் பார்வையில், தோராயமாக புஷ்ஷை விட ஒரு டிகிரி இடதுபுறம் இருக்கும் நபரை விரும்பினர். புஷ்ஷிற்கு எதிரான அடையாளங்களான, கடந்த பெப்ருவரி மாதம் நிகழ்ந்த மக்களுடைய போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அரசியல் அரங்கிற்கு அப்பால் வைக்கப்படவேண்டும்.

அமெரிக்க முதலாளித்துவ முறைக்கு இவரால் அச்சுறுத்தல் இல்லையென்றாலும், அரசியலில் உயர் ஆட்சி சிறுகுழுவினரிடையே கவலையை ஏற்படுத்துயுள்ள நிகழ்வாக டீன் இருக்கிறார். இவருடைய பிரச்சாரத்திற்கான பெரும் ஆதரவு, இணையதளத்தின் மூலமாகக் கல்லுரி மாணவரிடையே பரந்து வளர்ந்துள்ளது. மிக வசீகரமானவர் என்றோ, தன்வயப்படுத்தும் ஆற்றல் உடையவர் என்றோ இவரைப் பார்த்தால் கூறமுடியாது. ஆனால் "போர்-எதிர்ப்பு" வேட்பாளர் என்ற பெயரைக் கொண்டே இவர் பெரும் புகழை அடைந்துள்ளார். நியூஸ்வீக்கில், இதைப்பற்றி Howard Fineman என்பவர் "டீனுடைய உடைத்துப் பேசும் குணம், பூசலிடத் தயார் நிலையில் இருப்பது, ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் ஈராக்கியப் போருக்கு இவருடைய எதிர்ப்பு, ஆகியவை இணையதளத்தின் மூலம் ராக்கட் வேகத்தில் இவரை மேலே அழைத்துச் சென்றுள்ளது" என்று கூறியுள்ளார். இது ஒன்றே செய்தி ஊடகத்தையும், அரசியல் உயர் ஆட்சிக் குழுவினரையும் பயமுறுத்துகிறது.

ஈராக்கின் மீது போர்தொடுப்பதற்கு ஒப்புதல் கொடுத்ததால், கெரி, லிபர்மன், வட கரோலினாவின் செனட்டர் ஜோன் எட்வர்ட்ஸ், ஜெப்ஹர்ட், மற்றும் காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர், ஒரு சட்டவிரோதப் போரோடு தொடர்பு உடையவர்கள் என்பது மட்டும் அல்லாமல் ஒரு போர்க்குற்றத்திற்கும் துணை நின்றவர்களாவர். இது ஒரு சிறிய விஷயமல்ல. மேலும், மிகப்பெரிய அளவில் செல்வந்தர்களுக்கு, புஷ் வரிகுறைப்புச் செய்தது, தீயதன்மை மிகுந்த Patriot Act, மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இதில் தன் பங்கு பற்றி லிபர்மன் பூரித்துப் போகிறார்), மருத்துவ வசதிகள் குறைப்பைச் சீர்திருத்தம் என்ற பெயரில் குறைத்திருப்பதைத் தடுக்காமல் இருப்பது ஆகியவற்றில் இவர்கள் அனைவைருமே பங்கு கொண்டுள்ளவர்கள் ஆவார்.

"வாஷிங்டன் ஜனநாயகவாதிகள்" என்று இவர்களைப்பற்றி டீன் குறைகூறியுள்ளது, புஷ் நிர்வாகத்தின், ஈராக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் அமெரிக்க மக்கள் இவர்களுக்கெதிரான சதித்திட்டத்தில் ஜனநாயகக் கட்சியினரின் பங்குபற்றிய கவனத்தைக் குவித்துக் காட்டுகிறது. இது அவர்களால் ஏற்கமுடியாதது ஆகும்.

மேலும், டீன் திரட்டமுடிந்துள்ள ஆதரவு, அமெரிக்க அரசியிலின் இரு தற்கால கட்டுக் கதைகளை அழிக்கவும் அச்சுறுத்துகிறது. ஈராக்கில் போருக்கு செல்வாக்கு, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு மக்களிடையே செல்வாக்கு என்பவையே அவை.

செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரை அது இயலா நிலைப்பாட்டில் இருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வாக்காளார்களைப் பொறுத்தவரையில், நாடு முழுவதும் டீன்தான் முன்னணி வேட்பாளராக இருக்கிறார். "எல்லோரும் போரைப் பாராட்டியிருக்கும்போது" இதை எவ்வாறு விளக்க முடியும்? "உண்மையில் நம்புவர்களைத் தன்பால் ஈர்த்துவிட்டால்", எட்டு போட்டியாளர்களைச் சந்திக்கும் டீன் எளிதில் வெற்றிபெறமுடியும் என்று பிரோடர் வாதிடுகிறார். மரபுவழி அறிவின்படி, டீன் ஜனநாயகக் கட்சியின் கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்டுள்ளார் என்பதும், இவரைப்பற்றி விட்டுகொடுக்காத தாராளக் கொள்கையாளர் என்றும் கிட்டத்தட்ட சமுதாய அடுக்கில் இடது ஆகவும் இருக்கிறார் என்றும் இன்னும் பரந்த அளவு ஆதரவு அவருக்குத் தேடாமலேயே வரும் என்பதாகும்.

டீன் மக்களை எழுப்பும் ஆற்றலைக் கொண்டிருப்பது, போரைப் பொறுத்தவரையில் அவருடைய தீவிரவாத நிலையோ, வேறு எந்தப் பிரச்சினையும் அல்ல. மாறாக, இவருடைய பொதுவான பிற்போக்குக் கருத்துக்கள் இருக்கும் சமுதாய அமைப்பைப் பாதுகாக்கவேண்டும் என்ற நினைப்பு, இவரை, நாட்டின் இருப்புக்களை பேராசையுடன் சுரண்டி ஏகபோக உரிமை கொண்டாடும் செல்வந்தர்களைத்தான் ஈர்க்குமே ஒழிய, மக்கட்தொகையில் பரந்த அடுக்குகளில் இருக்கும் வேலையற்றோர், தகுதிக்கேற்ப வேலை இல்லாமல் குறைந்த வேலையில் இருப்போர், குறைந்த ஊதியம் பெறுவோர், வறுமையில் வாடுவோர், வீடுகள் இல்லாதவர்கள் ஆகியோர்களை அல்ல. அந்த வகையில் பல மில்லியன் கணக்கில் இருக்கும் மக்களை நேரடியான, ஒளிவுமறைவற்ற முறையீட்டைச் செய்யமுடியாமல்தான் வைத்துள்ளது.

புஷ்ஷைத் தாக்குவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்ற கருத்தையும் டீனுடைய பிரச்சாரம் தவறாக்கி விட்டது. சற்று ஆதாரத்துடன் பழைய வெர்மன்ட் கவர்னர், ஜனநாயக வேட்பாளர்கள் சிலரில் "தான் புஷ்ஷை எதிர்ப்பவன்" என்று கூறும்பொழுது, அவருக்கு உடனடியாக ஒரு மரியாதை, பண உதவி, மக்கள் ஆதரவு ஆகியவை உடனே கிடைக்கின்றன.

செய்தி ஊடகத்தினுடைய நிர்வாகம் தற்பொழுது புஷ் மிகவும் மகத்தான நபர், அநேகமாகத் தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற எண்ணத்தில்தான் செல்கிறது. டீனைப்பற்றி கட்டுரை எழுதும் பொழுது, Newsweek உடைய ஆசிரியர்கள் புஷ்ஷின், முகம் இறுகி, சிறப்பு இல்லாத தனிப்புகைப்படம், தனியாக இருக்கும் தோற்றத்தில் ஆகாயத்தைப் பின்னணியாகக் கொண்டு, கீழ்க் கண்ட தலைப்புடன் வெளியிட்டுள்ளது: "பெரிய அளிவில் நிற்பது: சதாமைக் கைப்பற்றியதாலும், நல்ல பொருளாதாரத் தகவலாலும், புஷ் எப்பொழுதும் போலவே அசைக்கமுடியாத இலக்காக இருக்கிறார்."

மேலே கூறப்பட்டுள்ள New York Times கட்டுரை, இந்தப் பொன்மொழியையும் கொண்டுள்ளது: "ஜனாதிபதி புஷ்ஷிற்கு எதிராக விரோதம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கு ஈடாக அவர் தோல்வியுற மாட்டார் என்ற உணர்வு, பல ஜனநாயகவாதிகள், வேட்பாளர்களிடையே இருக்கும் பூசல், ஒரு நம்பிக்கையற்ற காரணத்தை மேலும் நம்பிக்கையற்றதாக்கிவிட்டது என்ற கருத்தைக் கொள்ளுமாறு செய்து விட்டது'' என்று எழுதியுள்ளது.

ஒரு தரத்தில், டீனின் வேட்பாளர் தன்மைபற்றிய விவாதம், ஜனநாயகக் கட்சி, முற்றிலுமாகக் குடியரசிக் கட்சியுடன் போட்டியிடாமல் நின்றுவிடுமோ என்ற கேள்வியைக் கூட எழுப்பியிருக்கிறது. உதாரணமாக ஜனநாயகக் கட்சியில் ஒரு பிரிவு புஷ், செனி, ரம்ஸ்பெல்டு என்னும் குற்றஞ்சார்ந்த குழுவை அகற்றும் முயற்சி கூடாது என்று கூறும் பிரிவின் சார்பாகத்தான் லிபர்மன் பேசுகிறார்.

டீனும் அவருக்கு ஒப்புதல் அளிப்பவர்களும், கோர், பிராட்லி, ஹார்கின் போன்றவர்கள், ஆட்சிப் பிரிவின் சற்று கூடுதலான தொலைநோக்குடைய பிரிவின் சார்பில் இருந்து, உண்மையலேயே, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுடைய போக்கைப்பற்றி உண்மையான கவலையுடையவர்களாக இருக்கின்றனர். இக்கவலைகளும், ஈராக்கில் எளிதான வெற்றி என்ற நிலை சரிந்துவிட்டதை அடுத்து அதிகமாகத்தான் போயுள்ளன. மற்றும் அப்பகுதியில் தொடரும் பூசலின் உட்குறிப்புக்கள், புஷ்ஷின் பொறுப்பற்ற "தவிர்க்கமுடியாத போர்" என்ற கருத்தின் தன்மை, இன்னும் கூடுதலான அதிக செலவைக் கொடுக்கும் போர்கள், உண்மையான இராணுவப் பேரழிவு நேர்ந்தால் என்ன ஆவது என்ற கவலை, உலகப்போருக்குப் பின் ஏற்படுத்தப்பட்டிருந்த ஏகாதிபத்திய உறவுகள், குறிப்பாக ஐரோப்பாவில் சரிந்துவிட்ட நிலை, பொதுவாக உலகில் இருக்கும் எல்லா ஆட்சிகளிடத்திலுமே போர்ப்போக்கைக் காட்டிவரும் புஷ்ஷின் நிர்வாகம், நிர்வாகத்தின் உள்நாட்டுக் கொள்கைகள் என்பன மக்களிடையே தீவிர உணர்வைத் தங்கள் பக்கம் திருப்ப முடியாநிலையை அவை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது, அதுவும் ஜனநாயகக் கட்சியே தன்னை மிகவும் இழுவுபடுத்திக் கொண்டுள்ள நிலையில், என்றெல்லாம் கவலைகள் உள்ளன.

இந்த அக்கறைகள் இப்பொழுது பொருளாதாரத்திலுள்ள கவலைகொடுக்கும் தன்மையினாலும் அதிகமாகி, வேலை வளர்ச்சி டிசம்பர் மாதம் முற்றிலும் அப்படியே நின்று போய்விட்டதாலும், வாஷிங்டனில் பட்ஜெட் பற்றாக்குறை மலைபோல் குவிந்ததாலும், டொலரின் மதிப்பு யூரோவிற்கு எதிராக மிகவும் குறைந்துள்ள நிலையும் மேலும் கவைலையை கொடுக்கின்றன. அமெரிக்கா மிகவும் கடினமான பொருளாதார நீரில் மிதக்கிறது என்ற கவலையும் இருக்கிறது. கடந்த வாரம், முந்தைய கருவூல மந்திரியான ரொபர்ட் ரூபின் எழுதிய கட்டுரை ஒன்றில், மிகப் பெரிய பட்ஜெட் வணிகப் பற்றாக்குறை அமெரிக்காவில் இப்பொழுது இருப்பது ஆர்ஜன்டினாபோல் பேரழிவை ஏற்படுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார்.

தான் பெரிதும் அக்கறை கொண்டுள்ள அரசியல் நடைமுறைக்கு அடிப்படையில் சவால் விடவேண்டும் அல்லது அதைத் தூண்டிவிடவேண்டும் என்ற கருத்து டீனுக்குக் கிடையாது. கோர் போன்றவர்களின் ஆதரவைக் கொண்டிருக்கும் அவருடைய நோக்கம், ஜனநாயகக் கட்சியை காலம் கடப்பதற்கு முன்பு சீராக்கவேண்டும் என்பதுதான். ஆனால் டீனின் இது ஒரு அச்சுறுத்தல் என்ற உணர்வு, மிகவும் விரோதமடைந்துவிட்ட, தனித்து ஒதுங்கிவிட்ட, பிரிந்து நிற்கும் அமெரிக்க அரசியல் முறைக்கு சிறிது அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளதோடு, அதன் வளைந்து கொடுக்காத தன்மை, குறுகிய பார்வை, உண்மையான எதிர்ப்புக்கு தயாராக இல்லாத நிலை ஆகியவற்றை குறிக்கிறது.

Top of page