World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush promises the Moon (and Mars) but offers only rhetoric

நிலா (மற்றும் செவ்வாயும் கூடத்) தருவதாக புஷ் உறுதிமொழி கூறுகிறார், ஆனால் அலங்காரச் சொற்களைத்தான் தருகிறார்

By Walter Gilberti and Patrick Martin
19 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 14ம் தேதி நிகழ்த்திய உரை ஒன்றில், அமெரிக்க விண்வெளி திட்டத்திற்கான தன்னுடைய திட்டங்களை அடிக்கோடிட்டும், நிலவில் நிரந்தர குடியிருப்பை அமைத்திடவும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை இறுதியில் அனுப்புவதற்கும் NASA தன்னை மறுஒழுங்கு செய்து கொள்ள அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நாசாவில் உரை நிகழ்த்தினார்.

நடையிலும் கருத்தாழத்திலும், புஷ்ஷின் உரை, தீவிர எதிர்மறைகளைக் கொண்டிருந்தது. அதேவேளை வெள்ளை மாளிகையின் சொற்பொழிவு எழுதுபவர்கள், "கண்டுபிடித்தலின் ஆர்வத்தைப்" பற்றி பூ தொடுத்தாற்போல் அலங்காரச் சொற்களால் வர்ணித்தனர் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியை, 200 ஆண்டுகளுக்கு முன்பு Lewis, Clark இருவரும் பின்னர் லூயிசியானா வாங்கப்படுதல் என்று அழைக்கப்பட்ட, பெரும் நிலப்பரப்பை ஆராய்ந்ததோடு ஓப்பிட்டுப் பேசினர்.

எவ்வளவுதான் செய்தி ஊடகம் வேறு விதமாக பாசாங்குடன் சித்தரித்துக் காட்டமுற்பட்டாலும், இத்தகைய சொற்கள், ஒரு பரிதாபத்திற்குரிய, குறுகிய, குறைவான நலன்களையே பெற்றுள்ள ஒரு நபரை, பெருநோக்கமுடையவராக மாற்றிவிட இயலாதவையாகும். வரலாறு, ஆராய்தல் இரண்டிலுமே, (புவியியல் அல்லது அறிவார்ந்த செயல்கள் எவையாயானும் சரி), சிறிதும் அக்கறையற்ற தன்மையை புஷ் கொண்டுள்ளது இழிபுகழைத்தான் அவருக்குக் கொடுத்துள்ளது. மனிதப்பிராயம் வந்தபின்னர், தன்னுடைய முப்பது ஆண்டுக்காலத்தில், அவர் வெள்ளை மாளிகைக்கு வருமுன்னர், செல்வமும் குடும்பச் சூழ்நிலையும் கணக்கிலடங்கா வாய்ப்புக்கள் கொடுத்தும் கூட, அவர் ஐரோப்பிய கண்டத்திற்கு சென்றதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓர் அமெரிக்க செய்தித்தாளின் பக்கங்களைக்கூட "ஆராய்வதற்கு" தூண்டுதல் இல்லாமல் இருந்தார்.

செவ்வாய் கிரகத்திற்கு அண்மையில் NASA அமைப்பு, செயற்கைக்கோள் அனுப்பி அற்புதமான வெற்றியைக் கண்டதின் பின்னணியை புஷ்ஷும் அவருடை அரசியல் பணியாளர்களும் தெளிவுடன் பயன்படுத்தினர். ஆனால் புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் சாராம்சம், சந்திரனுக்கு செல்லும் திட்டங்கள் மற்றும் செவ்வாய்க்கு மனிதனை ஏற்றிச் செல்லும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரிடையானதாகும். NASA வை இழுத்து மூடப்போவதாகவும், அங்குள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் வேறுவேலை தேடிக்கொள்ளலாம், அதிலும் குறிப்பாக பென்டகனின் விண்வெளித்தளத்திலிருந்து பாதுகாப்பு ஏவுகணைத் திட்டத்தில் சேரலாம் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தால், பொதுவாக புஷ் நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறையிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்டதாக இருப்பினும், அது நேர்மையான அறிவிப்பாக இருந்திருக்கும்.

"கடந்த கால்நூற்றாண்டில், விண்வெளியில் மனிதன் ஆய்வு நடத்துவதற்கு, அமெரிக்கா ஒரு புதிய வாகனத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அதுபற்றி சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு, இப்பொழுது அமெரிக்காவிற்கு நேரம் வந்துவிட்டது. விண்வெளியை ஆராயவும் நமது சூரிய மண்டலத்தில் மனிதன் நடமாட்டத்தை விஸ்தரிக்கவும் இன்று விண்வெளி ஆய்வில் நான் ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளேன். இருக்கும் திட்டங்களையும் பயிற்சிபெற்றவர்களையும் கொண்டு நம்முடைய முயற்சியை விரைவில் தொடங்குவோம். நாம், ஒரு திட்டம், ஒரு பயணம், ஒரு தளமிறங்குதல் என்று நிதானமாக முன்னேறுவோம்" என்று புஷ் அறிவித்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜோன் எப். கென்னடி 1960களின் இறுதிக்குள் மனிதனை நிலவிற்கு அமெரிக்கா அனுப்பிவைக்கும் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மேம்போக்காக நினைவிற்கு கொண்டுவந்தாலும், பார்த்தால் பரந்த தன்மையுடன் இருப்பதாய் மறைக்கப்பட்டிருக்கும் அதன் நிலைப்பாடு, புஷ்ஷின் திட்டத்திலிருக்கும் தெளிவற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. அவை அவநம்பிக்கையுடன்கூட, அவசர அவசரமாக பொதுமக்கள் தொடர்பிற்காக, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்திருக்கும் அரசியல்/இராணுவ நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், நிர்வாகம் வருங்காலத்தைப்பற்றிய சீரிய பார்வை கொண்டிருக்கிறது என்பதை மக்களிடையே காட்டிக் கொள்ளுவதற்காகவும் கையாளப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.

புஷ் நிர்வாகத்தின் திடீர்விருப்பமான "இதுவரை எவருமே சென்றிராத இடத்திற்கு நாம் தைரியமாகப் போவோம்" என்னும் கருத்திலுள்ள நாடகத்தனம், அவருடைய திட்டங்களிலிருப்பது ஆராயும்பொழுது நன்கு தெரியவரும். அவருடைய உரையில் மூன்று இலக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலில், இப்பொழுது முடமாகியிருக்கும் விண்வெளிக்கலத் திட்டத்தை 2010ம் ஆண்டுக்குள் முற்றிலும் அகற்றிவிட விரும்புகிறார். இதற்கிடையில் எஞ்சியுள்ள, பழையதாகவும் சிதைந்தும் போய்விட்டு, தெரியாத பேரழிவுகளை கூடத் தரவல்ல விண்கலங்கள், "எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு" சர்வதேச விண்வெளி நிலையம், முழுவதுமாக முடிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டை ஒட்டி, ஒரு புதிய விண்வெளிக்கலத்தை தயாரித்து சோதனைக்கு உட்படுத்தும் திட்டம் ஒன்றை, புஷ் முன்வைத்தார். ரிச்சார்ட் நிக்சனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் விண்வெளியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் கலங்கள் பற்றிய திட்டம் விளக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது போலன்றி, இந்தப் புதிய வாகனம் முற்றிலும் விளக்கப்படாத தன்மையுடையதாகவே இருக்கிறது. "விண்கலம் செலுத்துவோர் பயன்படுத்தும் ஆய்வுக்கலம், ஓய்வு கொடுத்த பின்னரும்கூட விண்வெளி வீரர்களையும் விஞ்ஞானிகளையும் ஒரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும் திறனுடையதாக இருக்கும். ஆனால் இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம், விண்வெளி வீரர்களை நம்முடைய கோள் பாதைக்கும் அப்பால் மற்ற உலகங்களுக்கு ஏற்றிச் செல்லுதல் என்பதாகும்" என்று புஷ் அறிவித்தார்.

ஆனால் இது எத்தகைய வாகனம்? ஆற்றைக்கடக்க உதவும் ஒரு சிறிய படகு, பெருங்கடலில் பயணிக்க உதவியாக இருக்காதது போல், விஞ்ஞானிகளும் விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து முன்னும் பின்னும் அழைத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறையின் ஒரு விண்கலம், "மற்ற உலகங்களுக்கு" எவரையும் அழைத்துச் செல்லும் திறனை கொண்டிருக்காது. மூன்றாவதும், புஷ்ஷின் உரையில் மிக வனப்புடன் எடுத்துச் சொல்லப்பட்டதுமான இலக்கு, செவ்வாய் கிரகத்தை மனிதனுள்ள கலத்தைக் கொண்டு ஆராய்வதற்கும் மற்றும் அங்கு குடியேறுவதற்கும் முதற்கட்ட செயல்பாடு ஆக 2020ம் ஆண்டு அளவில், நிரந்தரமாக நிலவில் மனிதன் இருப்பை ஏற்படுத்துவது ஆகும்.

இந்த திட்டங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்பட உள்ளது என்ற அவருடைய விளக்கத்தில்தான் இதன் தலையாய கூறுபாடே இருக்கிறது. NASA அடுத்த மூன்று ஆண்டுகள் ஆண்டு ஒன்றுக்கு அற்பத்தொகையான 1 பில்லியன் டாலர்கள் என புதிய நிதி ஒதுக்கீட்டை பெறும். இந்ந நிதியைத்தவிர, 11 பில்லியன் டாலர்கள் இப்பொழுது இருக்கும் NASA திட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும். NASA உடைய பல முக்கியமான சாதனைகளின் தகர்ப்பு நிகழ்ச்சிப்போக்கு ஏற்கனவே தொடங்கி விட்டது. வெள்ளியன்று, NASA அதிகாரிகள், Hubble Space Telescope எனப்படும் மிக நேர்த்தியான தொலைநோக்கியை பழுது பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டனர்; இது ஆழ்ந்த அண்டவெளியின் அருமையான, திகைப்பூட்டும் நிழற்படங்களை எடுத்திருக்கின்ற கருவியாகும்.

NASA வை, புஷ்ஷின் திட்டங்களின்படி மறு ஒழுங்குசெய்தால், Hubble Telescope க்கு மாற்று தொலைநோக்கியை பயன்படுத்துவது தொடர்பான நிதி இருக்காது என்பதுடன், மற்ற முக்கியமான, இதேபோன்ற ஆய்வுப் பணிகளிலும் தடையை ஏற்படுத்தும். உதாரணமாக, சமீபத்தில் மனிதனில்லாத விண்வெளி ஆய்வுக் கலமான கலிலியோவின் புறக்கோள்கைளைப் பற்றிய ஆய்வுகளும், கடந்த வாரம் "அருகில் சென்ற" வால் நட்சத்திரத்தின் வால்பகுதி ஊடாகப் பின்பற்றிச் சென்ற ஆய்வு போன்றவை அனைத்தும் நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டப்பட்டு கைவிடப்படும். சுருக்கமாக இதன் விளைவு, உண்மையான விஞ்ஞான ஆய்விற்கான திட்டங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் அல்லது புஷ்ஷின் திட்டங்களுக்கேற்ப குறைந்த அளவில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

காங்கிரசில் புஷ்ஷுடைய நண்பர்கள் உட்பட, எவரும் ஜனாதிபதியின் திட்டமிடப்படுள்ள செலவினம் அத்தகைய மாபெரும் திட்டத்திற்கு போதுமானது என்று கருதவில்லை. ஆயினும் கூட, முதலில் வெளிவந்த திட்டத்தைப் பற்றிய கருத்துக்கள் பொதுவாகவே சாதகமானவையாக இருந்தன. நாசாவின் வரவுசெலவுத் திட்டத்தை கண்காணிக்கும் மன்ற விஞ்ஞானக் குழுவின் தலைவரும், நியூயோர்க் தொகுதியின் குடியரசுக் கட்சி சார்ந்த, பிரதிநிதிகள் மன்ற உறுப்பினருமான Rep. Sherwood Boehlert, திட்டங்கள் "நடைமுறைக்கு ஏற்றவை, சாதிக்கக்கூடியவை" என்று கருத்துக் கூறியிருப்பதாக Houstom Chronicle மேற்கோளிட்டுக் கூறியிருக்கிறது; புளோரிடாவின் செனட் மன்ற உறுப்பினரும் 1986ல் ஒரு விண்கலத்தில் அண்டவெளியில் பயணம் செய்திருந்தவருமான ஜனநாயகக் கட்சியாளரான பில் நெல்சன், நிதிமுறையைப் பற்றி நம்பிக்கையின்மை தெரிவித்தாலும், "ஜனாதிபதி வழிகாட்டினால், தேசியச் சட்டமன்றம் அவரைப் பின்பற்றி ஆதரவு கொடுக்கும்" என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

ஆனால் விஷயமறிந்த கருத்துரையாளர்கள், புஷ்ஷின் திட்டம் பற்றி தங்கள் எண்ணங்களைச் சீற்றத்துடன்தான் கூறியிருக்கின்றனர். GlobalSecurity.org என்ற வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட இராணுவ, அண்டவெளிப் பொருட்களைப்பற்றிய ஆய்வுக்குழுவின் இயக்குனரான ஜோன் இ. பைக் என்பவர், புஷ்ஷின் முன்மொழிவுகள், தேர்தல் ஆண்டில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆபத்தான தன்மையைக் கொண்டவை என்று தெரிவித்துள்ளார். நியூயோர்க் டைம்ஸிற்கு அவர் கூறியதாவது; "செலவு ஒதுக்கீட்டில், அவர்கள் கூறியுள்ள மிகக்குறைவான தொகைகள், வெறும் கலை வேலைப்பாட்டை தயாரிக்கத்தான் போதுமானவையாக இருக்கும். அடிப்படையில், மனிதன் இயக்கும் விண்கலத்தைப் பார்த்து அவர்கள், 'நாம் இப்பொழுது அதை இழுத்து மூடிவிட்டு, சீனர்கள் நிலாவிற்குப் போகாமல் இருக்க ஏதேனும் வழிசெய்வோம்' என்று கூறுவது போல் உள்ளது. விண்கலத்திலும், நிலையத்திலும் மாற்றுவதற்கு கலை வேலைப்பாட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை."

தேர்தல் பார்வைகள் நிச்சயமாகப் பிரச்சினை தரக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை; அதிலும் தேர்வுக் குழுக்களில் நான்கில் மூன்று என முக்கியமானவையாக இருக்கும் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பெரிய மாநில நிறுவனங்களுக்கு, விண்வெளி செலவினங்களில், அதிகபட்ச பணம் செல்லுகிறது என்னும்பொழுது, அவற்றைக் குறைத்து மதிப்பிடமுடியாது.

ஆனால் வேறு பல அழுத்தமான அக்கறைகளும் இருக்கின்றன. நிர்வாகத்திற்குச் சாதகமாக இருக்கும் நிறுவனங்களுக்கு கொழுத்த ஒப்பந்தங்கள் வழங்கப்படும். ஏற்கனவே, Petroleum News ல் வந்துள்ள அறிவிப்பின்படி, NASA, ஹாலிபர்ட்டன், பேகர்-ஹக்ஸ், ஷெல் ஆயில், (Halliburton, Baker-Hughes, Shell Oil) மற்றும் சில பெருநிறுவனங்களோடு இணைந்து செவ்வாய் சுற்றுப்புறச் சூழ்நிலையில் துளையிடும் தொழில் நுட்பம் வளர்க்கும் வகையில் செயலாற்றி வருவதாகக் கூறப்படுகிறது; இது வெளியே "சிகப்புக் கிரகத்தில்" உயிரினம் இருக்கிறதா என்பதுபற்றிய ஆய்வு எனப்படுகிறது. (இது பரம்பரைக் கலம் Stem Cell), பூகோளம் சூடேறிப்போதல் பற்றியோ அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்துவதுபற்றி எதிர்க்கும் ஒரு நிர்வாகத்திலிருந்து வருவதாகும்.)

புஷ் நிர்வகத்தின் மற்ற ஒவ்வொரு கொள்கை முடிவைப் போலவே, போரும் இராணுவ வாதமும் NASA அமைப்பின் மறுஒழுங்கமைப்பில் உந்துதலாக உள்ளது. NASA அதிகாரிகள், தங்கள் திட்டத்தை ஒருங்கிணைந்து ஒரு புதிய ஏவு விண்கலத்தை பென்டகனுக்காக தயாரிக்க உத்திரவிடப்பட்டுள்ளனர். இதையே வேறுவிதமாகச் சொல்லவேண்டுமானால், 12 பில்லியன் டாலர்கள் கொண்ட NASA செலவுத்திட்டம், அமெரிக்காவின் முக்கியமான இராணுவ நலனுக்காக, தயாரிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு, அது பூமியின் புவி ஈர்ப்புத்தன்மைக்கும் அப்பால் இருந்தாலும் பாதுகாக்கப்படவேண்டும் எனப்படுகிறது.

Hubble Telescope விரைவில் ஒதுக்கித்தள்ளப்பட இருக்கையிலும், அத்துடன் வெளிக் கோள்கள் ஆய்வுப்பணியை கொள்ளும் கலிலியோ முயற்சியும் குறிப்பிடத்தக்க விலக்குகளாக இருக்கையில், NASA உடைய வளங்கள் வரவுசெலவுத்திட்டத்தில் வெட்டுக்களினாலும், வெளியே சென்றுவிடுவதாலும் கீழறுக்கப்படுகின்றன, அது ஏற்கனவே சோகம் ததும்பிய இரு விண்வெளி ஓடங்களின் இயக்கும் குழுவினரின் உயிர்கள் இழப்பை விளைவித்துள்ளன என்பதுடன், விண்வெளியில் இருக்கும் விண்வெளிநிலையத்தின் வருங்காலமும் உறுதியற்றதாக உள்ளது. வேறு எதுவும் இல்லை என்றாலும், NASA உடைய முன்னுரிமைகள் திடீரென்று திசைதிருப்பல், தெளிவற்று குழப்பத்துடன் உரைக்கப்பட்டுள்ளது, மேலும் சந்தேகத்திற்குரிய வகையில் நிதி உதவி கொடுக்கப் படுவது ஆகியவற்றுடன் புஷ் நிர்வாகத்தின் இயல்பான, பொறுப்பற்ற தன்மை நிறைந்து இருப்பதும் சேர்ந்து, வரக்கூடிய விண்வெளி வீரர்களுக்கு சற்று யோசனையைத்தான் தரும்.

NASA அதிகாரிகள், இரண்டு வாரங்களுக்கு முன்பு, செவ்வாயின் நிலப்பரப்பைக் காணத் தங்களுடைய 3-D கண்ணாடிகளை அணிந்தபோது, தங்களையும் அறியாமல் அறிவியல் மற்றும் அறிவியல் கட்டுக்கதை இரண்டும் இணைந்த பழைய நிலையை அவர்கள் வெளிப்படுத்தி மிகத் தொலைவில் இல்லாமல், மனித இனம் அதன் தொடுவானத்தை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் விரிவடையச் செய்யும் என்ற கருத்தை வெளிப்படுத்தியது போல் இருந்தது. ஆனால், மனிதன் நிலாவில் காலடி வைத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது என்பதுடன், அமெரிக்க முதலாளித்துவமானது, கென்னடி சகாப்தத்தில் அறிவியல் ஆய்விற்கும் அண்டவெளி ஆய்விற்கும் பெரும் முன்னேற்றம் கொடுத்த பார்வையையும் உறுதிமொழியையும் நிறைவேற்ற கூடியதாக இருந்த நிலையைவிடவும் மிகவும் குறைந்த ஆற்றலையே இன்று கொண்டிருக்கிறது.

Top of page