World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

ணிறீமீநீtவீஷீஸீ ணீறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ: யிஷீதீs ணீஸீபீ ஷிஷீநீவீணீறீ யிustவீநீமீணீ ஸீமீஷ் க்ஷீமீயீஷீக்ஷீனீவீst tக்ஷீணீஜீ யீஷீக்ஷீ நிமீக்ஷீனீணீஸீ ஷ்ஷீக்ஷீளீமீக்ஷீs

தேர்தல் மாற்றீடு: வேலைகளும் சமூக நீதியும் - ஜேர்மன் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சீர்திருத்தப் பொறி

By Ute Reissner
19 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

"தேர்தல் மாற்றீடு: வேலைகளும் சமூக நீதியும்" எனக் கோரி ஒரு புதிய அரசியல் உருவாக்கம் ஜூன் 20 அன்று பேர்லினில் தேசிய மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் திட்டம், சமூக ஜனநாயக கட்சியின் நீண்ட கால அங்கத்தவர்கள், மற்றும் அவர்களது இடது ஆலோசகர்களாால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு நேர்மையற்ற ஏமாற்று நடவடிக்கையாகும். இது, சமூக ஜனநாயக கட்சிக்கும் (SPD) அதன் தலைவரான ஜேர்மன் சான்சலரான ஹெகார்ட் ஷ்ரோடருக்கும் எதிராக பெருகிவரும் மக்கள் எதிர்ப்பைத் நசுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் புதிய அமைப்பின் முக்கிய நோக்கம் சமூக ஜனநாயக கட்சியுடன் அரசியல், வேலைதிட்டத்தில் கணக்குத் தீர்த்துவிடுதலை தடுத்தல் ஆகும். சமூக ஜனநாயக சீர்திருத்தவாதம் முற்றிலும் முடிவுற்ற நிலையை சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் நிருபித்து காட்டிய நிலையில், தனது திவாலான தன்மையை நிரூபித்த ஒரு முன்னோக்கினை புதிப்பிற்கும் நம்பிக்கையற்ற முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடவேண்டும் என தேர்தல் மாற்றீடு முன்மொழிகின்றது.

100 ஆண்டுகள் சமூக ஜனநாயகவாத கட்சியுடனான அனுபவத்தின் கெடுதலான விளைவுகளை எளிதல் நிராகரிக்கலாம் என இந்த அமைப்பு வெளிப்படையாக கருதுகின்றது.

தேர்தல் மாற்றுத் திட்டத்தை தொடக்கியுள்ளவர்கள் அனைவருமே சமூக ஜனநாயகக் கட்சி அல்லது அதன் தொழிற்சங்க சுற்றுக்குள் தசாப்தத்தின் நீண்டகாலமாக செயற்பட்டு வருவபவர்கள் ஆவர். ஒரே நேரத்தில் தனித்தனியே, ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இவ்வாண்டு மார்ச் மாதம் உருவாகிய பிரிவுகளிலிருந்து வந்தவர்கள். இவை இரண்டுமே சமூக ஜனநாயக கட்சி பாரிய இழப்புக்களை வாக்குகளிலும், உறுப்பினர் எண்ணிக்கையிலும் அடைந்ததை அடுத்து அதன் விளைவாக தோன்றியவை ஆகும். ஜூன் 20 மாநாடு இவை இரண்டும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக சேர்வதை உறுதி செய்யப்பட்டும், முறையாக அவை இரண்டு வாரங்களுக்கும் பின் ஒன்றாக இணைக்கப்படும்.

இரண்டு குழுக்களில் ஒன்றான "தேர்தல் மாற்று 2006" என்பது மேற்கு ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் இடதிலிருந்து வருகிறது; குறிப்பாக 1990 களில் முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த Oskar Lafontaine க்கு நெருக்கமாக இருந்தவர்களால் இது அமைக்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு சமூக ஜனநாயக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி "சிகப்பு-பச்சை" என்ற கூட்டு அரசாங்கத்தை அமைத்து அதிகாரத்தை கைப்பற்றியபோதும், பின்னர் மிகத்தீவிரமான முறையில் சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்களை கொண்டு வந்தபோது, இந்த சமூக ஜனநாயகவாதிகளில் சிலர் இராஜினாமா செய்துவிட்டு, முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஆட்சி செய்து வந்த பின்தோன்றலை சேர்ந்த ஜனநாயக சோசலிச கட்சியில் (PDS) சேர்ந்தனர். 2002 தேசிய தேர்தல்களில், ஜனநாயக சோசலிச கட்சி பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் பெறத் தகுதி இல்லாமல் போய்விட்டது, இதன்பின் இந்தப் பழைய சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள், மூழ்கும் கப்பலில் இருந்து நீங்கி விடுவதைச் சிறந்த பாதையெனக் கொண்டனர்.

இந்தப் பிரிவின் முக்கிய பிரதிநிதி ரல்ப் கிரேமர் (Ralf Krämer) ஆவார், இந்த ஆண்டு ஆரம்பத்தில் இவர் தேர்தல் மாற்று பற்றி அதிகாரபூர்வமல்லாத விவாதத்திற்கு திட்டத்தை தொழிற்சங்கங்களிடையே சுற்றறிக்கைக்கு விட்டார். 1960ல் பிறந்த கிரேமர், ஜேர்மனிய பொதுப்பணித்துறை தொழிலாளர் சங்கமான Ver.di இன் தேசிய நிர்வாகத்தின் பொருளாதாரத் துறைக்கு தலைமை தாங்கி வருகிறார். இவர் தன்னுடைய அரசியல் வாழ்வை வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் சமூக ஜனநாயக இளைஞர் பிரிவின் தலைவராகத் தொடங்கினார்; இம்மாநிலம் மேற்கு ஜேர்மனியிலேயே தொழிற்துறையில் மிகவும் பிரபல்யமான மாநிலம் ஆகும். பின்னர் இவர் சமூக ஜனநாயகக் கட்சியின் நிர்வாகியாக அம்மாநிலத்திலேயே சேர்ந்தார். 1999 இல், இவர் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்த பின்னர், ஜனநாயக சோசலிச கட்சியில் (PDS) 2001ல் இணைந்தார்.

தேர்தல் மாற்றில், மற்றும் ஒரு முக்கியமாத தலைவரும் இதேபோன்ற பின்னணியில் இருந்துதான் வருகிறார். 1964ல் பிறந்த Uwe Hiksch, சமூக ஜனநாயக கட்சியில் 1982ல் சேர்ந்தார்; பல மட்டங்களிலும் கட்சிப் பதவிகளைக் கொண்டிருந்தார்; இறுதியில் பவேரிய சமூக ஜனநாயக கட்சியின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார். 1998ல், அவர் பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மையோடு தனது தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டு இவர் சமூக ஜனநாயக கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக சோசலிச கட்சியில் சேர்ந்து அதன் ஐரோப்பிய கொள்கைக்கு செய்தித் தொடர்பாளராக விளங்கினார். 2002 இலையுதிர்காலத்தில், ஜனநாயக சோசலிச கட்சி தேசிய பாராளுமன்றத்தின் மீண்டும் வரமுடியாமல் போனபோது, அவர் ஒரு குறுகிய காலம் அதன் பொதுச் செயலாளராக இருந்து, பின்னர் 2003 கோடையின்போது அவருடைய பதவியை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, 1944 ல் பிறந்த ஜோவாகிம் பிஷோப் (Joachim Bischoff) உள்ளார். இவர் Sozialismus என்ற செய்தித்தாளின் ஆசிரியர், ஹாம்பேர்க்கில் வெளியிடும் இப்பத்திரிக்கை, தொழிற்சங்கப் பிரச்சினைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்துகிறது. இவரும் ஜனநாயக சோசலிச கட்சியில் 1990 களில் சேர்ந்து, ஒரு குறுகிய காலம் அதன் தேசிய நிர்வாகக் குழுவிலும் இருந்தார். இப்பொழுதும் ஜனநாயக சோசலிச கட்சியில் "அடிப்படை வேலைதிட்டங்கள்" என்ற குழுவிற்குப் பொறுப்பாளராக உள்ளார்.

தேர்தல் மாற்றின் மற்றைய நிறுவும் உறுப்பினர்களில், Frieder Wolf என்றும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் பழைய பசுமைக்கட்சி உறுப்பினர், பிரேமனில் உள்ள கீன்சியப் பொருளாதாரப் புகழ் பெற்ற குழுவின் உறுப்பினரான Axel Troost மற்றும் அற்றாக் அமைப்பிலுள்ள (Attac) Sabine Lösing ஆகியோரும் உள்ளனர்.

தன்னை "வேலைகளுக்கும் சமுதாய நீதிக்கும் முன்முயற்சி எடுப்போர்" என்று அழைத்துக் கொள்ளும் இரண்டாம் குழு உறுப்பினர்களும் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து வருபவர்கள்தாம். ஏழு பேரில் ஆறு நபர்களான, Thomas Händel, Anny Heike, Peter Vetter, Klaus Ernst, Gerd Lobodda மற்றும் Günther Schachner ஆகியோர் IG Metall தொழிற்சங்கத்தின் பவேரியப் பிரிவுகள் பலவற்றின் உட்தலைவர்கள் ஆவர். Anny Heike யை தவிர மற்றவர்கள் சமூக ஜனநாயக கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்கள் (Peter Vetter சமூக ஜனநாயக கட்சி மூத்த உறுப்பினராக 43 ஆண்டுகள் இருப்பவர்). Gerd Lobodda, சமூக ஜனநாயக கட்சியில் 38 ஆண்டுகளாக இருப்பவர், இப்பொழுது திவாலாகிவிட்ட Nürnberg நகரிலுள்ள Grundig மின்னணு நிறுவனத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருந்தவர்; பல காலமும் IG Metall தொழிற்சங்க உயர்விடங்களில் பணியாற்றியவர்.

இம்முயற்சியில் கடைசி உறுப்பினர், 40 ஆண்டுகள் சமூக ஜனநாயக கட்சியில் இருந்தவர், ஹாம்பேர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரப் பேராசிரியாக இருக்கும் Herbert Schui ஆவார்.

Herbert Schui மற்றும் Schachner இருவரையும் தவிர, மற்ற "வேலைகளும் சமூக நீதியும்" நிறுவனர்கள் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர். Schachner ஐ பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

"தேர்தல் மாற்று: வேலைகளும் சமூக நீதியும்" அமைப்பின் இரு சேர்க்கைக் குழுக்களின் ஆரம்ப கட்டமே, உத்தியோகபூர்வமான அரசியலில் இருந்து பரந்த மக்கள் தட்டினர் அந்நியப்படுவது தொடர்பான அக்கறைதான். "வாக்காளர்கள் எண்ணிக்கை வாக்களிக்க வருவதில் குறைவு, தேர்தல் முடிவுகள், கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைதல் ஆகியவை பல குடிமக்களும் 2010 செயற்பட்டியலில் இருந்து (ஷ்ரோடரின் நலன்புரி அரசுத் தகர்ப்புத் திட்டம்) தாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்வதாலும், வேறு வழியே புலப்படாததாலும், தாங்கள் அரசியலில் இருந்தே விலகிநிற்கும் முடிவைத் தெரிவிக்கின்றன." என்று தேர்தல் மாற்று தன்னுடைய முதல் பொது அறிக்கையில் மார்ச் 15, 2004 அன்று எழுதியது, "இது செயலூக்கமிக்க தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் பெருகி வரும் பிரச்சினை அல்ல" என்றும் அறிக்கை கூறுகிறது.

Arno Klönne, என்னும் சமூக இயல் பேராசிரியர் இத்திட்டத்திற்குப் பரிவு உணர்வு காட்டி பின்வருமாறு எச்சரிக்கிறார்: "இன்னும் அதிகமான மக்கள் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் பங்கு பெறவில்லை என்றால் இடதுகளுக்கு அது உபயோகமாக இருக்காது."

பவேரியர்களுடைய வேலைகள் மற்றும் சமூக நீதிக்கான முயற்சி பற்றிய முதல் பிரகடனம், தேர்தல் மாற்றுக்குச் சில நாட்கள் முன்னால் வெளியிடப்பட்டது. அது "மிக அதிக சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ராஜிநாமாவும், சமீப காலத்தில் வாக்காளர்கள் பெரிய அளவில் சமூக ஜனநாயக கட்சிக்கு வாக்கு அளிக்காமல் இருப்பதும், பெரும்பாலான மக்கள் அரசியலை புறக்கணிக்கிறார்கள் என்றும், தாங்கள் சமூக ஜனநாயக கட்சியினால் காட்டிக்கொடுக்கப்படுவதாக உணர்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது; ஆனால் வேறு எந்த அரசியல் கட்சியையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்த வகையான வளர்ச்சி ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று நாங்கள் கருதுகிறோம்" என குறிப்பிட்டது.

இந்த வேலைகள், சமூக நீதிக்கான முயற்சியின் அறிக்கை, சமூக ஜனநாயகக் கட்சி அதிதீவிரமாக வலதுபுறம் திரும்பியுள்ளதைக் குறிக்கிறது. "சமூக ஜனநாயக கட்சி தன்னுடைய கொள்கைகளைக் கைவிட்டு விட்டது,'' இதன் முன்னோடிகள் பின்பற்றிய நவீன-தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்று என்று இதனுடைய 1998, 2002 தேர்தல் உறுதிமொழிகளுக்கு மாறாக, இது சமூக நல வெட்டுக்கள், கீழிருந்து செல்வம் சமுதாயத்தின் மேற்தட்டிற்குச் சென்றடையும் வகையில் நடந்து கொள்ளும் வகையில் அது வெளிப்பட்டுவிட்டது." சமூக நீதிக்கான முயற்சி அத்தகைய தாக்குதல்களை நீண்ட பட்டியலிட்டு எவ்வாறு சமூக நிலைமைகளின் பிரிவுகளான தொழிலாளர் உறவுகள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு இவற்றில் பாதிப்பு என்பதைக் காட்டியுள்ளது.

சமூக ஜனநாயக கட்சி தன்னுடைய முந்தைய சீர்திருத்த கொள்கைகளை கைவிட்டதற்கு இத்தகைய தொழிற்சங்கத்தினர் காட்டும் பிரதிபலிப்பு தங்களுக்கு கீழே இருப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகாரத்துவத்தட்டின் பயத்தினை காட்டுகின்றது. அவர்கள் தொழிலாளர்களை தற்போது உள்ள சமூக அமைப்புடன் தத்துவார்த்த ரீதியாக பிணைத்துவைப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். சமூக சீர்திருத்த கொள்கைகளுக்கு அடித்தளமாக இருந்த சமூக சலுகைகளுக்கான சடத்துவ அடித்தளம் இல்லாது போய்விட்டபோதிலும் அவர்கள் இவ்வாறு நடந்த கொள்ளுகின்றனர்.

"வாக்கு அளிப்பதில் இருந்து விலகி நிற்பதும், ஒரு வகையான உட்புறப் புலம் பெயர்தலும், விடைகள் ஆகா. (அழுத்தம் மூலப்பிரதியிலுள்ளது) சமூக ஜனநாயக கட்சியுடைய போக்கு மாறியதால், முக்கியமாக இதனால்தான் நம்முடைய சமுதாயத்தை நவீன- தாராளவாத மறுசீரமைப்பதற்கு எதிராக ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் குழு இல்லாதுள்ளது. இதனால்தான் நாங்கள் நம்முடைய நலன்புரி அரசை பாதுகாக்க அரசியலில் தீவிரமாக ஈடுபட முற்படுகிறோம்." என்று அறிக்கை தொடர்கிறது.

அனைத்து அரசியல் சக்திகள், தனி நபர்கள், தீவிரமாள நலன்புரி அரசைக் காத்து விரிவடையச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்களுடன் உடன்பாடு காண விரும்புகிறோம்; இந்தமுறைக்கு நாடு சமூகத்தால் நியாயமான முறையில் நிதி ஒதுக்கீட்டு முறைக்கு உட்படவேண்டும்."

"இத்தகைய உடன்பாட்டில் இருந்து, அடுத்த பொதுத் தேர்தலுக்காக ஒரு மாற்றுச் சமுதாய அமைப்பு செயல்படக்கூடிய முறையில் வெளிப்படலாம். அவ்வகை மாற்றத்தை நாங்கள் வெளிப்படையாக விரும்புகிறோம்." இம்முயற்சியாளர் தங்கள் எல்லையையும் மீறி அது சமூக ஜனநாயக கட்சியை பாதிப்பிற்கு உட்படுத்த விரும்பவில்லை என்றும் அதற்கு அழுத்தம் கொடுக்கத்தான் விரும்புவதாகவும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இதே நிலைநோக்குதான் தேர்தல் மாற்றினாலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது; அது ஒரு புதிய தேர்தல் உடன்பாடு, "அது ஒரு தடையை சமூக ஜனநாயக கட்சி இயக்கம் வலதுபுறம் செல்லாமல் இருப்பதற்கு ஏற்படுத்தப்படவேண்டும்" எனக் கூறியுள்ளது. தன்னுடைய ஆரம்ப அறிவிப்பில் அது கூறியுள்ளதாவது; "சமூக ஜனநாயக கட்சி-க்கும், (பசுமைகளுக்கும்) தேர்தல் முடிவுகள் கூடுதலான அழிவைக் கொடுத்துள்ளன என்றாலும், உட்கட்சி உணர்வும் சமீபகாலத்தில் முதலாளித்துவ- நிலைநோக்குடைய சக்திகளின் ஆதிக்கத்தையும் குறைத்துள்ளது; கூடுதலான வற்புறுத்தல் [கிறிஸ்துவ ஜனநாயக கட்சி (CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU), தாராளவாத ஜனநாயக கட்சி (Free Democratic Party) இவைதான் சமூக ஜனநாயக கட்சிக்கும் பசுமைக்கட்சிக்கும் பாராளுமான்றத்தில் போட்டிக் கட்சிகளாகும்] இவற்றை எதிர்க்கும் சமூக கொள்கைகள்மீதும் காட்டப்படவேண்டும்; பாராளுமன்றத்திற்குள் சமுதாயத்தின் அழுத்தம் கொண்டுவந்தால் இந்த நிகழ்ச்சி போக்கு உதவும்''.

புதிய அமைப்பை ஆரம்பித்தவர்கள் சமூக ஜனநாயக கட்சியின் அரசியல் திவால் தன்மையில் இருந்தோ அதன் வரலாற்று வளர்ச்சியில் இருந்தோ எந்தப் படிப்பினையையும் கொள்ள மறுக்கின்றனர் என்பதை இச்சொற்றடர்கள் தெளிவாக்குகின்றது. அவர்கள் எந்த இடத்திலும் தங்களுடைய அரசியல் வரலாற்றை விளக்கவோ, ஜனநாயக சோசலிச கட்சியில் இவர்கள் பங்கை விமர்சனத்திற்குட்படுத்தி விளங்கப்படுத்தவோ தயாராக இல்லை. அவர்கள் எந்த இடத்திலும் சமூக சீர்திருத்தங்கள் தோல்வியுற்தற்கான புறநிலை மற்றும் வேலைதிட்ட காரணங்களை அவர்கள் சிரத்தையுடன் ஆராயவில்லை.

இதற்கு மாறாக, அவர்களுடைய முழுத் திட்டமும் இந்த வினாக்கள் தொழிலாளர்களால் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்கும், தொழிலாளர்களின் கவனத்தை அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதாகவும்தான் உள்ளது. உண்மையைப் பற்றி அவர்கள் வரையும் சித்திரம் பொய்யாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருக்கிறது; ஏனெனில் அவர்களுடைய வாதமே 1970 களின் முற்பகுதியில் இருந்த சீர்திருத்தக் கொள்கைகள் புறம், ஒரு கற்பனாவாத கருத்திற்கு மறுபடியும் திரும்பவேண்டும் என்பதுதான்.

இந்த நிலைநோக்கு தன்மைதான், "சில கேள்விகளுக்கும் எதிர்வாதங்களுக்கும் நம்முடைய விடை" என்ற தலைப்பில் வந்துள்ள ஏப்ரல் 22 ஆவணத்தில் உள்ளது; இப்பொழுது இது கூட்டு வலைத்தளமாக முயல்வோர் மற்றும் தேர்தல் மாற்று இரண்டின் கருத்துக்களையும் கூறுகிறது. கீழேயுள்ள மேற்கோள்கள் அனைத்தும் இந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.

ஒரு "ஒரு அரசியல் சக்தி முதலாளித்துவத்தை அகற்றப் பாடுபடுகிறதா என்பது தீர்க்கமான பிரச்சனை அல்ல; இப்பொழுது, இங்கு எந்தக் கொள்கை, நலன்கள் முன்னேற்றுவிக்கப் பாடுபடுகிறது என்பதுதான்." முதன்முதலில் தேர்தல் மாற்று ஒரு முக்கியமான பகுதியில் கூறிய கருத்தைத்தான் இது எதிரொலிக்கிறது: "தற்போதைய பிரச்சினை "சீர்திருத்தமா அல்லது புரட்சியா" என்பது அல்ல, சமூக சீர்திருத்தவாதமா அல்லது ஆழமடைந்துவரும் புதிய-தாராளவாத பிற்போக்கிற்கும் இடையே உள்ள போராட்டமா என்பதே ஆகும்."

இவ்விதத்தின் விடயங்களை முன்வைப்பது யதார்த்தத்தை திரித்துக் கூறுவதுதை அடித்தளமாக கொண்டதாகும். மேலதிகமாக நோக்கும்போது இது தெளிவாகின்றது. சமூக ஜனநாயக கட்சி ஏன் வெளிப்படையாக உழைக்கும் மக்களுடைய நலன்களை "இங்கும் இப்பொழுதும்" பிரதிநிதித்துவபடுத்த மறுக்கிறது? இதற்குக் காரணம் உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி தீவிரமடைந்துள்ளவேளையில் சமூக ஜனநாயக கட்சி அதற்குக் கொடுக்கும் அடிப்படை பாதுகாப்பு, சமூக சீர்திருத்தங்களுடன் இயைந்து செயலாற்ற முடியாது என்பதுதான்.

"எந்த கொள்கைகளையும் நலன்களையும்", "இங்கும் இப்பொழுதும்" ஒரு கட்சி முன்வைக்கின்றது என்பது கட்சி முதலாளித்தவத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதா இல்லையா என்பதால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே "சீர்திருத்தம் அல்லது புரட்சி" என்ற கேள்வி, மிக முக்கியமான, உடனடியான வேலைதிட்ட பிரச்சினையாகவுள்ளதால், சமூக ஜனநாயக கட்சியின் தோல்விக்கு விடை தேடுவோரால் மிகவும் கவனத்துடன் ஆராயப்படவேண்டியது ஆகும்.

இவ்வாறான முடிவானது தேர்தல் மாற்று, வேலைகள், சமூக நீதி அமைப்போடு தொடர்புடைய அனைவராலும் கடுமையாக மறுக்கப்படுகிறது. இந்தச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்களுடைய நிலைநோக்கை பிரேமன் (Bremen) அடிப்படையை தளமாகக் கொண்ட குழுவின் மாற்று பொருளாதாரக் கொள்கையில் (Alternative Economic Policies) வைத்துள்ளனர்; அது Axel Troost இன் பிரதிநிதித் தன்மையைக் கொண்டுள்ளது. இக்குழு முதலாளித்துவத்தின் கீழ் பூகோளமயமான உற்பத்தி முறை நவீன-தாராளவாதக் கொள்கையின் ஆதிக்கத்திற்குத்தான் இட்டுச் செல்லும் என்று கூறமுடியாது என்று தெரிவிக்கிறது. மாறாக, Axel Troost உம் அந்த கோஷ்டியும் முக்கியமான கேள்வி, எப்படி இலாபங்கள் தேசியப் பொருளாதாரத்தால் ஒரு நாட்டின் குறிப்பிட்ட நாட்டு மக்களிடையே வழங்கப்படுகிறது என்பதாகும் என்கின்றனர். உற்பத்தித் துறையில் இப்பிரச்சினை இல்லை என்றும் பங்கீட்டுத் துறையில்தான் இருக்கிறது என்றும் இதற்குத்தீர்வு போருக்குப் பிந்தைய கீன்சியப் (Keynesian) பொருளாதாரக் கொள்கைக்கு திரும்புவதுதான் என்கின்றனர்.

உற்பத்தியையும் பங்கீட்டுமுறையையும் பிரிப்பது செயற்கையானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும். இப் பிரச்சினை இக்கட்டுரையில் விரிவாக விவாதிக்க முடியாது என்றாலும், உற்பத்திமுறை உலகமயமாக்கப்பட்டது, இருக்கும் தேசிய அரசியல் அமைப்பு நிறுவனங்களின் மதிப்பைக் குறைத்துள்ளது என்பது உண்மையே ஆகும். நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கேற்ப முதலாளித்துவ தேசிய அரசாங்கங்களுக்கு கட்டளைகளை இட முடிகிறது. இந்த உண்மை, பல ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் அன்றாட அனுபவத்தில் உணர்ந்திருப்பது, இன்னும் "இடது" பேராசிரியர்களின் படிப்பறைகளுக்குள் நுழையவில்லை போலும்.

தேர்தல் மாற்று புலம்பும் "புதிய-தாராள சமுதாயச் சீரமைப்பு" என்பது சமூக ஜனநாயக கட்சி தலைவர்களுடைய அழுகிய மோசமான சிந்தனைகளில் வேறூன்றியிருக்கவில்லை; மாறாக இது உலகப் பொருளாதாரத்தின் புறநிலை வளர்ச்சியில் உள்ளது; முன்னைய சீர்திருத்தக்கட்சி ஒவ்வொன்றும் இதற்கு தீவிரப் போக்கு மாற்றம் வேண்டும் எனக் கூறியிருந்தது. வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான பொதுத் தாக்குதலும், முன்பு பெற்றிருந்த உரிமைகள், தொழிலாளர் வர்க்கத்தின் நன்மைகள் இவற்றிற்கு எதிரான தாக்குதல்கள், உழைக்கும் மக்கள் சமூகசீர்திருத்ததிலிருந்து அரசியல் ரீதியாக உடைத்துவெளியே வந்து, தங்களுடைய வரலாற்றுச் சுமையான சமூக ஜனநாயக கட்சியை உதறித்தள்ளி, முதலாளித்துவத்தை இல்லாதொழிக்கும் புரட்சிகர மார்க்சிச கொள்கைகளுக்குத் திரும்பி வந்தால்தான் இயலும்.

இருபதாம் நூற்றாண்டு, முதலாளித்துவ முறையை சமூகசீர்திருத்த அரசியலால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது. வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான திருப்புமுனையிலும், சமூக ஜனநாயகவாதிகள் இருக்கும் சமுதாய அமைப்பை பாதுகாக்க முற்பட்டு, இருக்கும் அதிகாரத்தை மிகப் பிற்போக்கான சக்திகளுக்கு, தங்கள் முந்தைய சீர்திருத்ங்களை கைவிட்டுவிட்டு கொடுத்துவிட்டன. இப்படிப்பினைகள், உழைக்கும் வர்க்கத்தின் பேரழிவைத்தான் விரிவாக எழுதியுள்ளன; அவை பாசிசக் காட்டுமிராண்டித்தன்மையை புலப்படுத்தியுள்ளன; இரண்டு உலகப் போரின் கொடூரமான இரத்த சிந்தலை வெளிப்படுத்தியுள்ளன; இக்கருத்துக்கள்தான் உழைக்கும் வர்க்கத்தின் பரந்த அடுக்குகளுள் எடுத்துச் செல்லப்படவேண்டியவை ஆகும்; சமூக ஜனநாயகத்துடன் வெறும் அமைப்புரீதியாக மட்டுமல்லாது அரசியல்ரீதியாகவும் முறிப்பது இதற்கு இன்றியமையா தேவையாகும். இது ஒன்றுதான் முக்கிய தடுப்பியக்கத்திற்கும், உண்மையான புரட்சிகர இயக்கத்தின் மறுதோற்றத்திற்கும் அடிப்படையும் ஆகும்.

சோசலிச சமத்துவ கட்சியால் முன்வைக்கப்படும் இந்த முன்னோக்கு தேர்தல் மாற்றுவாதிகளுக்கு பெரும் பீதியை உண்மையில் ஏற்படுத்துகின்றது. அவர்கள் "இடது" என்ற சொல்லைக்கூட பயன்படுத்துவதை தவிர்க்க நினைக்கிறார்கள்.

இப்புதிய சீர்திருத்தவாதிகள் எழுதுகிறார்கள்; "இந்த [அவர்களுடைய முயற்சி] முயற்சி சமூக ஜனநாயக கட்சி, ஜனநாயக சோசலிச கட்சி இவற்றிற்கிடேயே ஒரு புதிய இடது கட்சியை ஏற்படுத்துவது அல்ல; ஜனநாயக சோசலிச கட்சிக்கு இடதுசாரியான ஒரு கட்சியை அமைப்பதும் இல்லை; மாறாக மற்றவர்களுக்கு எதிராக ஒரு புதிய, வித்தியாசமான, பரந்த அமைப்பை உருவாக்குவதல்ல, மாறாக மிகப்பரந்த அளவில் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் கவர்ச்சிகரமான நிலைப்பாடுகளை எங்கள் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பது ஆகும். ஒரு இயக்கத்தை வடிவமைக்க கொள்கைகளை புதிதாக வகுப்பது எங்கள் நோக்கம் அல்ல."

இக்கடைசிக் கருத்து மார்க்சிச அரசியலுக்கும் தேர்தல் மாற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு சித்தரித்துத் தெளிவாகக் காட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து ஒரு மேற்கோளைக் குறிப்பிடுவதை வேண்டிநிற்கின்றது.

"தொழிலாள வர்க்கமும் கம்யூனிஸ்டுகளும்" என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் 1848 ல் எழுதினார்: "அவர்கள் [கம்யூனிஸ்டுகள்] எந்தக் குழுவாத கொள்கைகளையும் தங்களுடையதாக நிறுவவில்லை; தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒழுங்கமைக்கவும் வடிவமைக்கவுமே உருவாக்கினர்..... கம்யூனிஸ்டுகளின் தத்துவார்த்த முடிவுகள் இந்த அல்லது பொதுச் சீர்திருத்தவாதியினால் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கைகள், சிந்தனைகள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை அல்ல. அவை அப்போது இருக்கும் வர்க்கப் போராட்டத்தில் எழுச்சி பெற்றுள்ள உண்மை உறவுகளில் எழுந்தவை; ஒரு வரலாற்று இயக்கம், நம் முன்னால் நடைபெறுவதிலிருந்து தோன்றியவை."

இந்தக் கருத்து, தேர்தல் மாற்று முன்வைக்கும் திட்டத்திற்கு முற்றிலும் எதிரிடையானது; தேர்தல் மாற்று பிடிவாதத்துடன் உண்மையான வரலாற்று வளர்ச்சியைக் காண மறுக்கிறது. அது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மிகப் புரட்சிகரமான முறையில் வளர்ந்துள்ள நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ள உலகளாவிய உற்பத்தி முறையை மதிப்புக் குறைவிற்கு உட்படுத்தி சமூக ஜனநாயகம் அதற்குக் காண்பிக்கும் விளைவை கட்சித்தலைமையின் அகநிலையான தவறு என விளக்கம் காட்ட முறைபடுகிறது; தலைமை கீழிருந்து வரும் அழுத்தத்தினால் திருத்தப்பட முடியும் என்றும் நம்புகிறது.

இப்படி தவறாக ஒரு முறையை எடுத்துக் கொள்ளுவதின் பிழை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவத்தால் அடிக்கோடிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அனைத்து சமூக ஜனநாயக கட்சிகளும் கீழிருந்து வந்த அழுத்தத்தினால் இடது புறம் செல்லவில்லை; மாறாகக் கூடுதலான ஆக்கிரோஷத்துடன் வலதுபுறம்தான் சென்றுள்ளன.

தேர்தல் மாற்று, தற்போதைய சமூக ஜனநாயக கட்சியின் நெருக்கடிக்கு உந்து சக்திகளின் புறநிலையாக ஆய்வு செய்யாதது தற்செயல் நிகழ்வு அல்ல. அத்தகைய ஆய்வை தவிர்ப்பதன் மூலம்தான் அது "புதிய தாராளக்கொள்கை"க்கு அரசியல் அளவில் மிகக் கீழ்மட்ட எதிர்ப்பை தடுக்க நினைக்கிறது. அடிப்படை செயல்திட்டத்தின்மீது விவாதத்தை அடக்கும் பொருட்டு, இக்குழு தொடர்ச்சியாக "பொது அரசியல் நடைமுறையின்" தேவை பற்றி வலியுறுத்துகிறது; இது "சமுதாய உறவுகளை உழைக்கும் மக்களினதும், சமுதாயத்தில் சலுகை அற்றவர்கள் பக்கமும் திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது."

மேலே கூறப்பட்டுள்ள ஆவணத்தில் தேர்தல் மாற்று கூறுகிறது; "முதலாளித்துவத்தின் ஆதிக்கமிக்க பிற்போக்கான மூர்க்கத்தனமான அபிவிருத்தியை நிறுத்தவும், மாற்றுக் கொள்கை, மாற்றுப் பாதையை வலியுறுத்துவதும்தான் பிரச்சினை. இது சமூக உறவுமுறைகளில் புதிய உறவுமுறையை நிறுவதலின் மூலம்தான் இது அடையப்படமுடியும்; அப்பொழுதுதான் புதிய சமூகசமரசங்களை ஏற்படுத்த முடியும். முதலாளித்துவத்தின்கீழ் அவை எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டதாயும், பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் அத்தகைய சமரசங்களுக்கு இடம் உள்ளது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. முதலாளித்தவம் பற்றி அடிப்படை விமர்சனங்களும் விவாதங்களும், ஒரு சமுதாய மாற்றின் வடிவமைப்பிற்குள் கடப்பதற்கான விவாதத்தைக் கொள்ளமுடியும். ஆனால், நம்முடைய நடைமுறை அரசியலை அவை தடுத்து நிறுத்த தேவையில்லை."

''தற்போதுள்ள கட்சியின் பல தட்டுக்களில் இருந்து அந்நியப்படுதல், முதலாளித்துவத்தை பற்றி திருத்துவதற்கான தீவிரமான கோஷங்கள் மூலமோ தேவையற்ற விவாதங்கள் மூலமோ மக்களைப் பயமுறுத்தும் வகையில் கொள்ளப்பட வேண்டிய தேவை இல்லை" என்று இந்த ஆவணத்தின் வேறு பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துதான் பலமுறையும் பலவகைகளிலும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் மாற்று எதையும் ஏற்கத்தயாராக உள்ளது; "வார்த்தையில் தீவிரவாதம்", "இடதுசாரி குழுவாதம்" இவற்றைத் தவிர, அதாவது மார்க்சிச கொள்கைகள் தவிர என்ற பொருளில்.

முதலாளித்துவத்தை கடப்பதற்கான வழிவகைகள் விவாதிக்கப்படலாம், தெளிவற்ற, ஒரு இரண்டாம் பட்சமான கேள்வி என்ற முறையில், சமூக சீர்திருத்தவாதிகள் (சமூக ஜனநாயக கட்சி உட்பட) அனைவருக்கும் குட்டி முதலாளித்துவ ''இடது'' என்ற அடித்தளத்தில் பங்கு பெறும் புதிய திட்டத்திற்கான அழைப்பு ஆகும். இவர்களில் பலரும் ஏற்கனவே இதற்கு விடையிறுத்துள்ளனர்.

இந்த வாதம் தேர்தல் மாற்றினால் பல கட்டுரைகள், பேட்டிகள் அறிக்கைகள் இவற்றில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. முதலில் புதிய தாராளவாத கொள்கையாளர்களின் செல்வாக்கு பின்தள்ளப்படவேண்டும்; இதைச்செய்வதற்கு மக்களின் உடனடி தேவைகளுக்காக அவர்களை அணிதிரட்டுவதற்கான வழிவகை செய்யப்படவேண்டும். முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பது பற்றிய விவாதங்கள் தேவையற்றவை, பிற்போடப்படவேண்டும். மிகப்பெரிய அளவில் மக்கள் திரட்டப்பட்டால், சமூகசக்திகளின் உறவுகள் மாற்றமடையும்; அதன் விளைவாக சமூக சமரச கொள்கை மீண்டும் திரும்புவதற்கான சாத்தியத்தை உருவாக்கும்.

இவ்வாறான காரணத்தின் போக்கு அடிப்படையிலேயே பொய்யானதும், நப்பாசையான ஊகங்களையும் கொண்டது ஆகும். இத்தகைய அடிப்படையில் அமையும் கொள்கை அதன் இலக்குகளுக்கு நேர்மாறான விளைவுகளைத்தான் உருவாக்கும். "புதிய தாராளக் கொள்கையின் ஆதிக்கம்" சாதாரண மக்கள் திரட்டப்படாததில் விளைவு என வாதிடுவது தவறாகும்; அத்துடன் தங்களுடைய சமூக பிரச்சனைகளைப்பற்றி தொழிலாளர் அறியாமையில் இருக்கிறார்கள் என்று கூறுவது கேலிக்குரியது ஆகும். மாறாக உலகம் முழுவதும் ஈராக்கிற்கு எதிரான போர் மற்றும் சமூகநலன் வெட்டுக்களுக்கு எதிராக நிகழ்ந்த மகத்தான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அவர்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனால், "சக்திகளின் உறவுகளை" வளர்க்கவும், உண்மையில் மாற்றவும், இந்தச் சமூக எதிர்ப்பு உலக முதலாளித்துவ முறையின் நெருக்கடிபற்றிய தன்மை, அதன் தாக்கங்கள் பற்றிய அறிவினால் ஆயுதமயமாக்கப்பட வேண்டும். தங்களுடைய நலன்கள் தொடர்ந்த முதலாளித்துவ அமைப்புமுறையுடன் சமரசப்படுத்த இயலாது என்பதை தொழிலாளர்கள் இன்னும் முழு உணர்வுடன் அறிந்து கொள்ளவில்லை. ஏனைய சமூகசக்திகள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல மாறாக அரசியல் அதிகாரத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்ளுவதற்காக அவர்களுக்கு ஒரு புதிய கட்சி தேவை.

தேர்தல் மாற்று முன்வைத்துள்ள திட்டமும் கருத்துக்களும், இப்பிரச்சினைகளின் தெளிவுபற்றிய அபிவிருத்தியை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன; அவ்விதத்தில் அவை உள்ளிருந்து அல்லாமல் வெளியிலிருந்து சமூக ஜனநாயக கட்சிக்கு ஆதரவை அளிக்கின்றன. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு பரந்த இடது இயக்கம் தோன்றுவதையும் மற்றும் அவர்கள் ஒரு முற்போக்கான அரசியல் பாதையை கண்டுகொள்வதிலிருந்தும் தடுக்க முனைகின்றனர். அவர்களின் முன்னோக்கினதும், திட்டத்தினதும் தவிர்க்கமுடியாத விளைவு அதிகாரத்தில் உள்ளவர்களின் மீது எதிர்ப்பையும் அழுத்தத்தையும் காட்ட செய்து இறுதியில் அதனை பலமிழக்க செய்து உருவாகிக்கொண்டிருக்கும் அரசியல், சமூக எதிர்ப்பியக்கத்தை சீரழித்துவிடுவதாகும்.

இப்பின்னணியில் தேர்தல் மாற்று, தொழிலாள வர்க்கத்திடம் நேரடியாக அழைப்புவிடாததில் வியப்பு ஏதும் இல்லை; மாறாக அது தன்னை "தொழிற்சங்கங்களிலும் மற்ற நலக் குழுக்களிலும் இயங்குபவர்கள், இயக்கங்கள், அமைப்புக்கள், சமுதாய, அறிவியல், பண்பாட்டு முயற்சிகளினதும், திட்டங்களினதும் தொடர்புபடுத்தும் குழு " என்று அறிவித்துள்ளது.

இந்த விவரிப்பு முன்னாள் சமூகசமரச தலையீட்டாளர்களின் நலன்களுக்கும் நல்ல முறையில் உகந்ததாகத்தான் இருக்கிறது; அவர்களோ தங்கள் பழைய தளத்திலிருந்து சமூக ஜனநாயகத்துடன் கொண்டுள்ள விரோதப் போக்கினால் தங்களுடைய அரசியல் பங்கை இழந்து விடும் அபாயத்தில் மட்டும் இல்லாமல், தங்கள் வருமானங்களை இழக்கும் அபாயத்திலும் உள்ளனர். சற்று உற்று நோக்கினோமானால், இத்தகைய திரட்டு என அழைக்கப்படுதல், "சமுதாய உறவுகளில் மாறும் உறவு, புதிய சமூக சமரசத்திற்கு இடம் அளிக்கும்" என்று கூறப்படுவது நீண்ட நாட்களாக தேக்கம் அடைந்துவிட்ட அதிகாரத்துவ வாதிகள் நடைமுறை அரசியலில் கிடைக்கும் நலன்களுக்கு எப்படியும் மீண்டுவிடுவது என்ற அவாவைத்தான் உணர்த்துகிறது.

இந்த வகையில், தேர்தல் மாற்றின் அலுவலர்களின் சில கடந்தகால அறிக்கைகளைப் படித்தல் பயனுடையதாக இருக்கும். ஜனநாயக சோசலிச கட்சி 2002ல் தேர்தல் தோல்வியுற்ற பின், அக்கட்சி ஒரு நெருக்கடியை சந்தித்தபோது ஒரு கடுமையான விவாதம் எழுந்தது. தேர்தல் மாற்றின் முயற்சியாளரான Ralf Kramer, ஒரு கட்டுரை ஒன்றை உட்கட்சி விவாதத்திற்கு மே-ஜூன் 2003 இல் எழுதினார்; அதில் ஜனநாயக சோசலிச கட்சி, சமூக ஜனநாயக கட்சியுடன் பேர்லின் நகரமன்றத்திற்காக ஒரு கூட்டு வைத்துக் கொண்டதற்காக குறைகூறப்பட்டது.

தன்னுடைய கட்சியை "கை கடந்துபோன தவறுக்காக " என்று குற்றம் சாட்டினாலும், மற்றும் அதன் பல சமூகநல வெட்டுக்களை கண்காணாதுவிட்டாலும், இந்த அவருடைய எதிர்ப்பு, கொள்கை அளவில் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். "ஒரு தொழிற்சங்க வாதி என்ற முறையிலும், ஒரு பழைய இடதுசாரி சமூக ஜனநாயகவாதி என்ற முறையிலும், கொள்கையளவில் எதிர்ப்பு தெரிவிக்க நான் விரும்பவில்லை என்பதைத்தான் கூறுவேன். பெரும்பான்மைக்காகப் போராடுவதற்கும் நான் முழுமையாக தயாராக உள்ளேன்; அரசாங்க பொறுப்பை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். மற்ற கட்சிகள், சோசலிச நோக்கம் உடையவையுடன் கூட்டுக்கொள்ளுதலும் இதில் அடங்கும் என்பதைக் கூறத் தேவையில்லை; அதையொட்டி முதலாளித்தவத்தின் ஆதிக்க சக்திகளை பின்வாங்க வைக்க முடியும். "(What Kind of Party does the Socialist and Trade Union Left Need" என்ற நூலிலிருந்து மேற்கோளிடப்பட்டது; இது ரோசா லுக்சம்பேர்க் நிறுவனத்தின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது; அது ஜனநாயக சோசலிச கட்சி உடன் இணையப் பெற்றது ஆகும்.)

இந்தச் சார்பு, பசுமைக் கட்சியினர் முந்தைய காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை ஒத்ததுதான். இப்பொழுது பசுமைக்கட்சி ஜேர்மன் அரசாங்கத்தில் கொண்டிருக்கும் பங்கு நன்கு தெரிந்ததே. தேர்தல் மாற்று உண்மையிலேயே ஒரு கட்சி அமைத்தால், அது பசுமைக் கட்சியினரின் வழித்தடத்தில்தான் பின்பற்றும். அது, இப்பொழுது அறிவித்துள்ள சீர்திருத்த நோக்கங்களை கைவிடும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ, உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல்களில் பங்கு பெறும்.

Top of page