World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The politics of opportunism: the "radical left" in France

Part seven: Lutte Ouvrière and the Fourth International

சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"

பகுதி ஏழு: லூத் ஊவ்றியேரும் நான்காம் அகிலமும்

By Peter Schwarz
4 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதிகள்

 

 

 

 

 


பகுதி 1: LO-LCR தேர்தல் கூட்டு

பகுதி 2: "முதலாளித்துவ எதிர்ப்பு இடதை"
LCR ஒன்று திரட்டல்

பகுதி 3: பப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாடு

பகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு

பகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்

பகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல்
 

பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு பகுதி கட்டுரை தொடரின் இறுதிப்பகுதி கீழே பிரசுரமாகியுள்ளது. முதல் பகுதி மே 15ம் தேதியும், இரண்டாம் பகுதி மே 17 அன்றும், மூன்றாம் பகுதி மே 19 அன்றும், நான்காம் பகுதி மே 22 அன்றும், ஐந்தாம் பகுதி மே 25 அன்றும், ஆறாம் பகுதி மே 26 அன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன.

லூத் ஊவ்றியேர் (LO) ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பு என்று கூறிக்கொண்டாலும், அது லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சோசலிச புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தில் ஒருபோதுமே இணைந்திருந்ததில்லை.

1988ம் ஆண்டு, நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ஒரு சிறு பிரசுரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை பின்வருமாறு அது நியாயப்படுத்துகின்றது: "ஒரு புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைப் பிரச்சினையான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்திற்கு எந்தவிதமான சமரசத்தையும் நிராகரிக்கும் கொள்கையை சுதந்திரமாக தொடரவும், பாதுகாக்கவும் லூத் ஊவ்றியேர் (Lutte Ouvriere) நான்காம் அகிலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பல்வேறு அமைப்புக்களிலிருந்தும் சுதந்திரமாக அமைக்கப்பட்டுள்ளது." (1)

கடந்த ஆண்டு ஒரு மாநாட்டுத் தீர்மானத்தில், லூத் ஊவ்றியேர் (LO) தான் நான்காம் அகிலத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை விளக்குகிறது: "பல ட்ரொட்ஸ்கிச இயக்கங்கள் சர்வதேசத்தன்மை என்ற போர்வையில் இருந்து, அத்தகைய போலிக்கருத்துக்களைப் புலப்படுத்துவதைத் தவிர, தத்தம் நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தினிடையே வேரூன்றுவதற்கு எவ்வித முயற்சியும் செய்வதில்லை --அதாவது, அவை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயலுவதில்லை." (2)

இந்த அறிவிப்புக்கள் லூத் ஊவ்றியேரின் (LO) வின் உலகப் பார்வையை சுருக்கமாக தெரிவிக்கின்றன -- அதாவது அது எவ்வளவு தூரம் தேசியவாதத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் ஆழ்ந்து வேரூன்றியுள்ளது என்பதை புலப்படுத்துகின்றன.

"பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனம்" என்பது முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பக்கக் கன்றுகளின் கருத்தியல், அரசியல், கட்சிகள் இவற்றிடமிருந்து சுயாதீனமாக இருப்பது என்றுதான் மார்க்சிஸ்டுகள் அறிந்துள்ளனர். இத்தகைய சுயாதீனம், தேசியத் தொழிலாளர்களின் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து விதமான சந்தர்ப்பவாத வடிவங்களுக்கும் எதிராக இடைவிடாமல் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவு ஆகும். அத்தகைய போராட்டம் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் மூலமும் சர்வதேச அமைப்பின் மூலமும்தான் வழிநடத்தப்படமுடியும். நான்காம் அகிலத்தைக் கட்டுவது என்பது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்திற்கான அடிப்படையும் முன்நிபந்தனையும் ஆகும்.

LO இந்த அரசியல் அளவுகோலுக்கு சமுதாய அளவுகோல் ஒன்றைப் பதிலாய் வைக்கிறது. அதைப் பொறுத்தவரையில், "அரசியல் சுயாதீனம்" என்பது தேசிய தொழிலாளர் சமூக சூழலுடன் வேரூன்றி இணைத்துக் கொள்வது என்று உள்ளது. குட்டி முதலாளித்துவக் கருத்தியலுக்கு எதிரான போராட்டம் முற்றிலும் அமைப்பு ரீதியானதாக, "செயலாற்றும்" பணியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு 1966ம் ஆண்டு லூத் ஊவ்றியேர், அனைத்துலகக் குழுவிடம் கூறியதாவது: "பிரான்சில் போரின் ஆரம்பத்தின்போது, ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களை காரியாளர்களை சேர்க்கக் கூடியதாய், கல்வி பயிற்றக் கூடியதாய், லெனினிச மற்றும் ட்ரொட்ஸ்கிச அமைப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்தக் கூடியதாய், மற்றும் சந்தர்ப்பவாத நடைமுறைகளை மூடிமறைக்கும் 'போல்ஷிவிக் சொல்லாட்சி' யுடன் உள்ளடக்கம் இல்லாததாய் ஆக்கிய குட்டி முதலாளித்துவ சூழலுடனான அதன் சமூக ஜனநாயக நடைமுறைகளிலிலிருந்து உடலியல் ரீதியாக (Physically) பிரித்துக் கொள்வதற்கான திட்டவட்டமான தேவையில் எங்கள் அமைப்பு பிறந்தது." (3)

ஒரு அகிலம் என்பது, அரசியல் போக்குகளை "தங்கள் நாட்டின்தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றாமல்" தடை செய்துவிடும் "நகைப்பிற்குரிய சொல்லை ஊகிக்கும் விளையாட்டு" என லூத் ஊவ்றியேர் கருதுகிறது; இதையொட்டி அது "தொழிலாள வர்க்கம்" என்பதை தொழிற்சங்க சூழல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட பிரிவினர் என்று புரிந்துகொள்ளுகிறது. இவ்விதத்தில், "பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்" என்ற பெயரில், இது ஸ்ராலினிச அரசியல் கருத்துக்களுக்கருகே கணிசமான அளவு செல்லும் நிலைப்பாட்டின் தேசிய நோக்குநிலையை நியாயப்படுத்துகிறதே ஒழிய, ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டை அல்ல.

தன்னுடைய காலத்தில் இருந்த லூத் ஊவ்றியேருக்கு உரையாற்றுகையில் ட்ரொட்ஸ்கி, ஒரு சர்வதேச நோக்குநிலை மற்றும் சர்வதேசக் கட்சியின் இன்றியமையாத தன்மையை மிக உறுதியாக வலியுறுத்தினார். ஸ்ராலினிசத்திற்கும் அதன் தேசியவாத வேலைத் திட்டத்திற்கும் எதிராக அவர் நடத்திய போராட்டத்தில் முக்கியமான படிப்பினைகளில் ஒன்றாக அவர் இதைக் கருதினார். அவர் வலியுறுத்திக் கூறியதாவது: "சர்வதேசியம் என்பது ஒரு அருவமான கோட்பாடு அல்ல, மாறாக அது உலகப் பொருளாதாரத்தின் தன்மை, உற்பத்தி சக்திகளின் உலக அபிவிருத்தி, வர்க்கப் போராட்டத்தின் உலகந்தழுவிய தன்மை இவற்றின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரதிபலிப்பாகும்."(4) இந்தச் சர்வதேசியம் அதன் அமைப்பு வடிவ வெளிப்பாட்டை நான்காம் அகிலத்தின் மூலம் காண்கிறது. எந்தத் தேசிய அமைப்பும் அது எவ்வளவுதான் உரத்த குரலில் சர்வதேசியத்தைப் பற்றி முழங்கினாலும், அது ஒரு சர்வதேச அமைப்பின் ஒழுங்கின் கீழ் வேலை செய்யவில்லை என்றால், கட்டமைப்புக்குள்ளே வேலை செய்யவில்லை என்றால் ஒரு புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்யவும் பேணவும் முடியாது என்று ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

லூத் ஊவ்றியேரைப் போல் பிரிட்டனிலும், அடிப்படையான சர்வதேசப் பிரச்சினைகளை, தேசியப் பணிகளின் தந்திரோபாய தேவைகளுக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்ற கருத்து உடைய, மத்தியவாத போக்கு உடைய ஒரு சுதந்திரமான தொழிற் கட்சியைப் (Independent Labour Party) பற்றி எழுதிய கட்டுரையில், ட்ரொட்ஸ்கி கூறினார், "அகிலம் என்பது முதலில் ஒரு வேலைத்திட்டம் மற்றும் அதிலிருந்து பாயும் மூலோபாய, தந்திரோபாய மற்றும் அமைப்பு ரீதியான வழிமுறைகளின் ஒரு முறை.... ஒரு மார்க்சிச அகிலம் இல்லாவிடின், தேசிய அமைப்புக்கள், மிகவும் முன்னேறிய தேசிய அமைப்புக்கள்கூட குறுகிய மனப்பான்மை, ஊசலாடும் தன்மை, ஏதும் செய்ய இயலாமை இவற்றினால் அழிவிற்கு உள்ளாகிவிடும்." (5)

தன்னுடைய தனித்த அமைப்பாக இருக்கும் நிலையை விடுத்து, கன்னை வேறுகாட்டுக் காரணங்களால் இங்கிலாந்தில் இருந்த மற்ற ட்ரொட்ஸ்கிசப் போக்குகளுடன் சேர்ந்து நான்காம் அகிலத்தில் சேர மறுத்திருந்த Lee-Group என அழைக்கப்ட்டதற்கு எழுதிய கடிதத்திலும் இதே கருத்தை, பின்னர் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புரட்சிகர அரசியல் குழுவை பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அபிவிருத்தி செய்து பராமரிக்க முடியும்." நான்காம் அகிலம் மட்டுமே இத்தகைய கோட்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது மற்றும் பொதிந்து வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அதன் சக சிந்தனையாளர்களுடன் ஒரு பொது அமைப்பில் உறுதியாக இணைந்து கொண்டு, அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் கொள்கையளவில் அவர்களோடு ஒத்துழைக்கும்பொழுதே, ஒரு தேசிய குழுவானது தொடர்ச்சியான புரட்சிகர போக்கை பராமரிக்க முடியும். நான்காம் அகிலம் அத்தகைய ஓர் அமைப்பு ஆகும். சர்வதேச அமைப்பு, கட்டுப்பாடு, கட்சி ஒழுங்கு இவற்றை நிராகரிக்கும் அனைத்தும், முழுமையான தேசிய குழுக்கள் அனைத்துமே, சாராம்சத்தில் பிற்போக்கானவை ஆகும்."(6)

லூத் ஊவ்றியேரின் தோற்றம்

Lee Group, நான்காம் அகிலத்திடமிருந்து ஒதுங்கியிருந்தலையும், பாட்டாளி வர்க்க உட்சேர்க்கையையும், தன்னுடைய அமைப்பு வேலையின் சக்தியையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பு ரீதியான சுயாதீனத்தை பேணுவது தொடர்பான அதன் வலியுறுத்தலையும் நியாப்படுத்தியது - இன்று LO வின் வாதங்கள் அக் காரணங்களை நினைவுபடுத்துகின்றன. LO வைப் பொறுத்தவரையில் இந்தக் காரணங்கள்கூட பின்னர்தான் புனைந்து கூறப்படுகின்றன. LO வின் முன்னோடி அமைப்பு பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் 1939ல் பிரிந்த பொழுது அத்தகைய வாதங்கள் எந்த பங்கையும் ஆற்றவில்லை. இந்தப் பிளவு முற்றிலும் அகநிலையான, ஒரு குறுகிய குழுக் கருதிப்பார்த்தல்களின் காரணமாக ஏற்பட்டது.

தன்னுடைய தோற்றத்திற்கு காரணமாக, 1933ல் பிரான்சின் இடது எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் ருமேனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தீவிரமாக செயற்பட்ட, ஒரு ருமேனியரான டேவிட் கோர்னர் (என்ற பார்டா) இருந்தார் என்று LO கூறுகிறது. 1939ம் ஆண்டு, Daladier அரசாங்கம் அனைத்து ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களுக்கும் தடை விதித்தது, விரைவில் அதைத் தொடர்ந்து பார்டாவும் அவருடைய மூன்று நெருங்கிய நண்பர்களும் பிரான்சில் அப்பொழுது இருந்த இரு ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளில் ஒன்றான சர்வதேச தொழிலாளர் கட்சி (Parti Ouvrier Internationaliste) யிலிருந்து வெளியேறினர். "முற்றிலும் அரசியல் கலப்பில்லாத காரணங்களுக்காக" இதை அவர் அப்பொழுது செய்தார் என, நீண்டகால LO தலைவராக இருந்த ரொபேர்ட் பார்சியா (ஹார்டி என்றும் அழைக்கப்பட்டவர்), இவரைப்பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார். (7) ஒரு துண்டுப்பிரசுர வெளியீட்டை தடை செய்ததாக அவர் மீது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டதால், அவர் பெரும் கோபமுற்று கட்சிக் கூட்டத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

ஒராண்டிற்குப் பின்னர், பார்டா பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளை அவர்களுடைய தேசிய கருத்துக்களுக்காக குற்றம் சாட்ட தலைப்பட்டார். இந்தக் குற்றச் சாட்டுக்களை தீவிரத்துடன் எடுத்துக் கொள்ள முடியாது; ஏனெனில் அவர்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் துரத்திக்கொண்டிருந்த மிகக்கடினமான சூழ்நிலையில் பணியாற்றி வந்தனர்; அவர்கள் எதிர்ப்பு இயக்கத்திலும், ஜேர்மானிய வீரர்கள் மத்தியிலும் கடுமையாக உழைத்தனர். பார்டாவின் கருத்துக்கள், ஏகாதிபத்திப் போரை எதிர்த்ததால் நீதிமன்றத்தில் 1942ல் போராடிக் கொண்டிருந்த சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) இன் ஜேம்ஸ் பி. கனன் மற்றும் அவருடைய தோழர்களின் நடவடிக்கை பற்றி, ஸ்பானிய ட்ரொட்ஸ்கிஸ்ட் Grandizio Munis கடுமையாக தாக்கிய தன்மையைத்தான் நினைவுகூர வைக்கிறது. (8)

போர்க்காலத்தில் பார்டாவின் குழு எத்தகைய அரசியல் பணியையும் மேற்கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய முக்கிய பணிகளில் ஒன்றாக வாசகர் வட்டங்களை நடத்தும் பணி இருந்தது; இவற்றில் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் நூல்கள் வாசிக்கப்பட்டன. போரின் இறுதிக்காலத்தில் இக்குழுவுடன் தொடர்பு கொண்டிருந்த ஹார்டி, தான் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பது முதலில் தனக்குத் தெரியாது என்று கூறினார்; அவர்களை கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள் என்று அவர் நினைத்திருந்தார். ஆயினும் கூட இக்குழுவை துன்புறுத்துதல் ஸ்ராலினிஸ்டுகளால் கைவிடப்படவில்லை. விடுதலையைத் தொடர்ந்து, ஓர் உறுப்பினர், Mathieu Bucholz ஸ்ராலினிஸ்டுகளால் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்டு விட்டார்.

1944ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் முதல் ஐரோப்பிய அகல்பேரவையில், பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒன்றாக ஓர் அமைப்பில் இணைந்த பொழுது, அது சட்டவிரோத நிலைமைகளின் கீழ் இடம் பெற்றது, முதலில் போரின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசியவாத தவறுகள் பகுப்பாயப்படவேண்டும் என்று வாதிட்டு பார்டா இதில் பங்கு கொள்ள மறுத்துவிட்டார். தன்னுடைய சொந்தக் கட்சியாகிய Union Communiste ஐ இவர் நிறுவினார்.

லூத் ஊவ்றியேரும் அனைத்துலகக் குழுவும்

நான்காம் அகிலம், அதன் சமூக உட்சேர்க்கையில் குட்டி முதலாளித்துவ தன்மையை கொண்டு, தொழிலாள வர்க்கத்தினுள் "வேரூன்ற" முடியாத நிலையில் அது உள்ளது என்ற பார்வையினால், லூத் ஊவ்றியேர் அதன்பால் மாறாத எதிர்ப்பைக் கொண்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் 50 வது ஆண்டுநிறைவை ஒட்டிய ஒரு சிறு பிரசுரத்தில் லூத் ஊவ்றியேர் கூறுவதாவது: "இப்புதிய அகிலத்தின் முக்கிய வலுவற்ற தன்மை அதன் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையினால் அல்ல, அது ஈர்க்கும் உறுப்பினர்களுடைய அரசியல் நிலப்பாட்டின் தன்மையாகும்: அதாவது, அவர்களுடைய சமூக மற்றும் அரசியல் வேர்கள், அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள், அவர்கள் தொழிலாளர்களுடனும், தொழிலாளர் இயக்கத்துடனும் கொள்ளும் உறவின் தன்மை..... அவர்களில் பெரும்பாலானவர்கள், சமூக ஜனநாயகக் கட்சி அணிகளில் தங்கள் கடந்தகால அரசியலை கொண்டுள்ள அறிவுஜீவிகள் ஆவர்; மூன்றாம் அகிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து அவர்கள் வரவில்லை." (9)

இந்த அறிக்கைகள் உண்மையிலிருந்து பிறழ்ந்தவை என்பது மட்டுமின்றி, அரசியல் அவநம்பிக்கையையும் காட்டுபவையாகும். இத்தகைய வாதங்களை முன்னர் அறிவுஜீவிகளாக இருந்திருந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ், ரோசா லுக்சம்பேர்க், லெனின், ட்ரொட்ஸ்கி இன்னும் பல மார்க்சிஸ்டுகளுக்கும் எதிராகக் கூட பயன்படுத்தப்படமுடியும். நான்காம் அகிலம் பெரும்பாலும் தங்களுடைய நோக்கங்களுக்கு விசுவாசமாக, உண்மையாக இருந்த உறுப்பினர்களையே கொண்டது ஆகும். பிரான்ஸ், அமெரிக்கா, இலங்கை இன்னும் பலநாடுகளில் அவ் உறுப்பினர்களில் பலர் மிகவும் சிறந்திருந்த தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருந்தனர். நான்காம் அகிலத்திற்கு பெரும் மக்கட்திரளினர் உறுப்பினராக இருந்ததில்லை; மாஸ்கோ விசாரணைகளின் போது ஒரு தலைமுறை புரட்சியாளர்கள் முற்றிலுமாகப் படுகொலை செய்யப்பட்டது உள்பட ஸ்ராலினிசம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஏற்படுத்தியிருந்த பெரும் அழிவு தரும் தோல்வியின் விளைவாகும் இது.

உண்மையில், லூத் ஊவ்றியேரின் விரோதப்போக்கு, நான்காம் அகிலத்தின் சமூக உட்சேர்க்கையின் மீது இல்லை, மாறாக திரித்தல்வாதத்திற்கு எதிராக அது நடத்திய சமரசத்திற்கிடமில்லாத போராட்டத்தின்பால் மற்றும் அது தொடர்ந்து அனைத்துலகக் குழுவின் தலைமையில் தற்போதைய உருவில் நடத்தப்படுவதன்பால் கொண்டிருக்கிறது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து உடலியல் ரீதியாய் சித்தரித்துக் காட்டுதல் என்ற பெயரில், லூத் ஊவ்றியேர், குட்டி முதலாளித்துவப் போக்குகளின் மூலம் ஏகாதிபத்தியம், புரட்சிகர கட்சியின் மீது செலுத்தும் கருத்தியல் மற்றும் அழுத்தங்களை எதிர்த்துப் போராட லூத் ஊவ்றியேர் மறுக்கிறது. 1966ம் ஆண்டு லண்டனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய மூன்றாம் உலக காங்கிரசிற்கு, பார்வையாளராக அது பங்கு பெற்றபோது இது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்தது.

1949ம் ஆண்டு பார்டா குழு சிதைந்தது, 1956ல் மீண்டும் Voix Ouvriere (Workers Voice- தொழிலாளரின் குரல்) என்ற பெயரில் மீண்டும் புதிதாய் அமைக்கப்பட்டது. (ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கள் எனக் கருதப்பட்டவை அனைத்துமே பிரெஞ்சு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பின்னர், Voix Ouvriere என்பதற்குப் பதிலாக Lutte Ouvriere என்ற பெயரை 1968ல் மேற்கொண்டது. VO இன் பணி, பாரிஸ் பகுதிகளில் தொழிற்சாலை தொடர்பு செய்தி ஏடுகளை வினியோகிப்பதில் கூடுதலாக இருந்தது. 1959ம் ஆண்டு, அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பகுதியான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internatioaliste -PCI) உடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. இந்த ஒத்துழைப்பு சில நடைமுறைச் செயல்களோடு நின்றிருந்தது. கூட்டுமுறையில் தொழிற்சாலை ஏடுகள் வெளியிடப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வந்தன. பார்டா விட்டுச் சென்ற பின்னர், குழுவினைத் தலைமை தாங்கி வழிநடத்திய ஹார்டி, தான் எப்படி ஒழுங்குமுறையாக PCI இன் தலைவரான பியர் லம்பேர் (Pierre Lambert) ஐ தன்னுடைய காரில் அரசியல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுவந்தார் என்பதை தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். வன்முறைச் செயல்களுக்கு இழிபெயர் பெற்றிருந்த ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக பொது தற்காப்பு சண்டையிலும் அவர்கள் இணைந்திருந்தனர்.

1966ம் ஆண்டில் Voix Ouvriere இலிருந்து குழு ஒன்று லண்டனில் அனைத்துலகக் குழுவின் மாநாட்டிற்கு பயணித்திருந்தது. அனைத்துலகக் குழு அதன் சொந்த வரலாற்றைக் கைவிட்டுவிட்டது என்று குழு உறுப்பினர்கள் தவறாகக் கருதியிருந்ததால், இம்மாநாட்டில் பங்கு பெற முடிவு செய்திருந்தனர். "அனைத்துலகக் குழுவின் அறிவிப்பின் உடன்பாடான முக்கிய விஷயம், நான்காம் அகிலத்தின் இருப்பு இனிமேலும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து, அது மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அது கொடுத்துள்ள அறிவிப்புத்தான் என்று நாங்கள் நம்புகிறோம்; இறுதி பகுப்பாய்வில் அது இவ்வாறு உணர்ந்துள்ளதுதான், எங்களை இந்த அனைத்துலகக் குழுவின் மாநாட்டில் பங்கு பெறத் தூண்டியுள்ளது" என்று அவர்கள் விளக்கம் அளித்தனர். (10)

லம்பேரின் PCI இந்த தவறான கருத்திற்கு சற்று பொறுப்பைக் கொண்டிருந்தது. 1960களில், PCI பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்த அளவில் கேள்விக்குரியதாக்கிக் கொண்டிருந்தது. அமெரிக்க SWP, 1963ல் மீண்டும் பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியம் செய்தபொழுது, PCI அமெரிக்க சோ.தொ.கட்சியுடனான சர்ச்சையில் செயலற்ற பங்கையே ஆற்றியது, இலங்கையில் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம், பிரதானமாக பிரிட்டிஷ் பகுதியான, சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஜெர்ரி ஹீலியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.

VO மிகவும் கவர்ச்சிகரம் எனக் கருதியிருந்த "நான்காம் அகிலத்தை திரும்ப கட்டியமைக்கும்" திட்டத்திற்கும் PCI தான் பொறுப்பாயிருந்தது. இந்த வழிவகையின் ஆழ்ந்த பொருள், ஒரு பொது அரசியல் மன்னிப்பு வழங்கியதை கொண்டிருந்தது. நான்காம் அகிலம் தோல்வியுற்றால், அது இதுகாறும் பப்லோவாதத்திற்கு எதிராக நடத்தியிருந்த அரசியல் போராட்டங்களின் விளைவுகள் பயனற்றும், முக்கியத்துவத்தை இழந்தும் விடும். ஒவ்வொருவரும் பிழைகள் இழைப்பது இயல்பு, நாம் கடந்தகால கருத்து வேறுபாடுகளை மறந்து, புதிய அமைப்பை தொடங்குவோம்.!

இத்தகைய கருத்தைத்தான் VO மாநாட்டில் துல்லியமாக முன்வைத்தது: "கலைப்புவாதம் என்ற வடிவில் பப்லோவாதம் அகிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்தின் முடிவுற்ற வெளிப்பாடு ஆகும். நான்காம் அகிலத்தின் தோல்விக்கும், மரணத்திற்கும் பப்லோவாதம் காரணம் ஆகாது: அது அதன் உற்பத்திப் பொருளாகும்" என்று VO விளக்கம் கொடுத்தது.(11) பிடெல் காஸ்ட்ரோவிற்கு விமர்சனமற்ற முறையில் ஆதரவு கொடுத்ததன் அடிப்படையில் அமெரிக்க SWP பப்லோவாதிகளுடன் இணைந்த மூன்று ஆண்டுகளின் பின்னரே, மற்றும் இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்டிக் கொடுப்பு நிகழ்ந்த இரண்டு ஆண்டுகளின்(12) பின்னர், VO வலியுறுத்திக் கூறியது: "பப்லோவாதத்திற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் முற்றிலும் வீண்பேச்சு ஆகும், அக்கறைகொண்ட பகுப்பாய்வு ஆகாது." (13)

அனைத்துலகக் குழு இக்கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், அதன் தவிர்க்கமுடியாத விளைவாக அதன் அரசியல் நிராயுதபாணியான தன்மையும், கலைப்பும் ஏற்பட்டிருக்கும்; எனவே இதை உறுதியுடன் மாநாடு எதிர்த்தது. பிரிட்டிஷ் குழுவின் வேண்டுகோளின் பேரில், மாநாடு வெளிப்படையாக நான்காம் அகிலம் தொடர்ந்து செயலாற்றும் என்பதை உணர்த்தியது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு குழு, தீர்மான வரைவு ஒன்றை இயற்றியது; அதில் கூறுப்பட்டதாவது: "நான்காம் அகிலம் சீரழிவை அடையவில்லை என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துகிறது. லியோன் ட்ரொட்ஸ்கியால், 1938ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் வரலாற்று தெடர்ச்சி, 1943-46களில் சீர்திருத்தப்பட்டு, 1950-53 ஆண்டுகளில் பப்லோவாதிகள் அதை அழிக்க முற்பட்டிருந்தபோதிலும், அனைத்துலகக் குழுவிற்குள் கூடியிருந்த ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தினால் 1953லிருந்து தொடர்ந்து நிலைபெற்று வந்திருக்கிறது."(14)

இதையொட்டி, VO மாநாட்டை விட்டு வெளியேறியது. எந்தச் சூழ்நிலையிலும் பப்லோவாத திரித்தலுக்கு எதிரான போராட்டத்தில் சேருவதற்கு அது விரும்பவில்லை. இம்மாநாட்டில் பங்கு பெறுவதற்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு வந்திருந்த ஹார்டி, 37 ஆண்டுகளுக்குப் பிறகும் இதைப்பற்றிக் கசப்பாகத்தான் தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில் எழுதியுள்ளார். "மீண்டும், கணக்கில் அடங்காத தடவையாக, மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த குழுக்கள் (Pierre Frank உடைய) சர்வதேச செயலகத்தை விசாரணைக்கு உட்படுத்தின. 'பப்லோவாதம்' பிரான்சில் 1953ம் ஆண்டு எழுதுவினைஞர்-தொழிலாளர் (Clerical workers) வேலைநிறுத்த தோல்விக்கு பொறுப்பாக்கப்பட்டது, கிழக்கு நாடுகளில் புரட்சிகர போராட்டங்களின் தோல்விக்கும் பொறுப்பாக்கப்பட்டது. இவை அனைத்துமே பப்லோவின் தவறுதான். அனைத்துமே மேலோட்டமான தத்துவார்த்த கருதிப்பார்த்தல்களை முட்டுக் கட்டை கொடுத்து நிலைநிறுத்தப்பட்டன. ஆனால் நான்காம் அகிலத்தின் தோல்விக்கான உண்மை வேர்கள் பற்றியும், சமுதாய மற்றும் அரசியல் வளர்ச்சிகளில் தலையீடு செய்வதற்கான அதன் இயலாமை பற்றியும் ஒரு சொல்கூட கூறப்படவில்லை" (15)

LO விற்கும் அனைத்துலகக் குழுவிற்கும் இடையே எந்தவிதமான ஒத்துழைப்பிற்கும் இடமில்லை என்பதை அனைத்துலகக் குழுவின் மூன்றாம் மாநாடு முடிவு செய்தது. மனத்தளர்ச்சியுற்ற ஹார்டி, பப்லோவாதிகள் கரங்களில் தன்னை அளித்துக் கொண்டு, அவர்கள் பக்கம் சேர்ந்து, அனைத்துலகக் குழுவைவிட "இந்த வரலாறு நீண்ட மற்றும் வளமான நுண்ணிகழ்வுகளைக் கொண்டுள்ளது" என இப்பொழுதும் பகிர்ந்து கொள்கிறார். "சிதைவுகளையும் சமரசங்களையும்" நிறையக் கொண்டுள்ள வரலாறு இது; இதில் LO "அனைத்து சமரசங்களுக்கும் பொறுப்பானது; உண்மையில் அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு உடைவுக்கும் பொறுப்பாளர்கள்." (16).

பப்லோவாத Pierre Frank, மற்றும் LCR இன் Alain Krivine க்கும் அவர்கள் ஒரு தீவிர இடது கட்சியை ஒற்றுமையுடன் அமைக்கவேண்டும் என்று LO 1968ல் ஆலோசனை கூறியது; ஆனால் இதற்கு வெற்றி கிட்டவில்லை. 1969ம் ஆண்டு ஐக்கிய செயலகம் நடத்திய ஓர் உலக மாநாட்டிற்கு பார்வையாளர்களாக LO பங்குபற்றியது; அம்மாநாட்டில் இலத்தீன் அமெரிக்காவில் கிராமப்புற கொரில்லா தந்திரோபாயத்தைக் கையாளவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. LO வெளிப்படையாக இந்தப் போக்கை நிராகரித்தது எனினும், ஐக்கியச் செயலகத்தின் அடுத்த இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு LCR உடன் கூடுதலான ஒற்றுமைக்கான அழைப்புக்களை விடுப்பதையும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலையும் விட்டுவிடவில்லை. மேலும், Nahuel Moreno இன் Argentine MAS உடனும் LO உறவுகளைக் கொண்டிருந்தது; அவ்வமைப்பு அதன் சொந்த வகையிலான ஒரு பப்லோவாத சந்தர்ப்பவாதத்தைக் கொண்டிருந்து, இறுதியில் இது 1987 மொரேனோவின் இறப்பிற்குப்பின்தான் முடிவுற்றது

லூத் ஊவ்றியேரின் வரலாறு ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையான, "சர்வதேச அமைப்பின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கை நிராகரிப்பவர்கள் சாராம்சத்தில் பிற்போக்களார்கள்" என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகப் போருக்கு பிந்தைய வர்க்க சமரசத்தின் பொறிவையும் அதன் சர்வதேசிய எதிர்ப்பையும் சந்திக்கும்போது, அதுவும் தேசிய தொழிலாளர் இயக்கத்தில் வேரூன்றியுள்ள தேவை என்ற காரணம் காட்டி நியாயப்படுத்தும்போது, இதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரச்சினைகளுக்கு அலட்சியம் காட்டுதலும், திரித்தல்வாதம் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அதன் ஏளனமும், லூத் ஊவ்றியேரை தவிர்க்கமுடியாமல் வலதிற்குதான் அழைத்துச் செல்லும்.

(முற்றுப்பெற்றது)

Notes :

1) Cercle Léon Trotsky, "50 ans après la fondation de la IVe internationale," 1988, p. 28.

2) "Les fondements programmatiques de notre politique," Lutte de Classe, No. 77, Décembre 2003-Janvier 2004.

3) Trotskyism versus revisionism, Vol. 5, p. 71, London, 1975.

4) Leon Trotsky, The Permanent Revolution, p. 9.

5) Trotsky's Writings on Britain, Vol. 3, pp. 112-113.

6) Documents of the Fourth International, New York, 1973, p. 270.

7) Robert Barcia (alias Hardy), La véritable histoire de Lutte ouvrière, Paris, 2003, p. 84.

8) David North, The Heritage We Defend, Chapter 5.

9) "50 ans après la fondation de la IVe internationale," 1988, pp.19-20.

10) Trotskyism versus Revisionism, Vol. 5, p. 75, London, 1975.

11) ibid. p. 71.

12) See part 4 of this series.

13) Trotskyism versus Revisionism, Vol. 5, p. 73.

14) ibid. p. 30.

15) Robert Barcia, op. cit. p. 200.

16) ibid. p. 280.

Top of page