World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Marlon Brando, 1924-2004

மார்லன் பிராண்டோ, 1924 -2004

By David Walsh
3 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

தன்னுடைய தலைமுறையிலேயே ஒருவேளை மிகப் பெரிய அமெரிக்க நடிகர் என்றிருந்திருந்த மார்லன் பிராண்டோ, லொஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு 80 வயது ஆகியிருந்தது.

பல காலம் அவருக்கு தொழில் ரீதியிலோ, விமர்சன ரீதியிலோ வெற்றியில்லாததை அடுத்து, பிராண்டோவின் வாழ்க்கைத்தொழில் "தடைபட்டிருந்தது", "சீராக இல்லாமல் இருந்தது" என்று இரங்கற் குறிப்புக்கள் தவிர்க்கமுடியாமல் குறிப்பிடலாம். தன்னுடைய திறமையை அவர் வீணடித்து விட்டார், தன்னைமட்டும் கருத்திற்கொள்ளும் தன்மை அவரிடம் கூடுதலாக இருந்தது, அவர் நடிப்பை இயக்குவது கடினம், அவருடைய முடிவு வருந்தத்தக்கது என்றெல்லாம் கூறக்கூடும்.

பிராண்டோவின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தொழில் தனிப்பட்டமுறையில் ஒரு சோகக் கூறுபாடு இருந்தது என்பது உண்மையே; ஆனால் அதைவிடப் பெரிய சோகம் அமெரிக்க திரைப்பட துறையானது அவருக்கிருந்த மிக அசாதாரணமான மென்மையுணர்வுகள், ஆற்றல் இவற்றை வெளிப்படுத்தி, தக்கமுறையில் அவர் நடிக்க வாய்ப்பை தொடர்ந்து கொடுக்காததேயாகும். கடந்த 30 ஆண்டுகளில், இன்னும் சொல்லப்போனால் 40 ஆண்டுகளில், அவருடைய முதிர்ந்த வாழ்வின் பெரும்பகுதியில் முக்கிய வேடங்களில் பங்கு பெற அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் போனதே அமெரிக்க திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் ஒருவர் கூறக்கூடிய கடுமையான குற்றச்சாட்டு எனலாம்.

இறுதியில், இவருடைய தனிப்பட்ட குணநலன்கள், மன அமைதியற்ற தன்மையின் காரணமாகத்தான், அவை எப்படி உண்மையாக இருந்தபோதிலும்கூட, வர்த்தக ரீதியிலான திரைப்படத் தொழில்துறையுடன் இவருடைய பொருந்தாத் தன்மை இருந்தது எனக் கூறுவதற்கு இல்லை. தங்கள் வாழ்க்கைத் தொழிலை விரைவில் சுருக்கிக் கொண்ட அல்லது சோகமான முடிவிற்கு வந்திருந்த Orson Welles, Marilyn Monroe, ஆகியோரைப் போலவே, போருக்குப் பிந்தைய ஏனைய நபர்களைப் போலவே, பிராண்டோவும் இயல்பிலேயே ஊழல், நேர்மையற்ற தன்மை இவற்றுடன் ஒவ்வாதவராகத்தான் இருந்தார். மனித ஆளுமை, நிலைமை இவற்றை ஆழ்ந்து அலச வேண்டும் என்று சீர்படுத்தமுடியாத அளவிற்கு தன் திறமையை அர்ப்பணித்துக் கொண்டிருந்த பிராண்டோவால், எவ்வாறு கடந்த சில பத்தாண்டுகளில் திரையுலகில் ஒரு வசதியான சிறு இடத்தை தனக்கென கொண்டிருக்க முடியும்?

1924ம் ஆண்டு, நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாகா நகரில் ஒரு நடிகை தாயாருக்கும், விற்பனையாளரான தந்தைக்கும் பிராண்டோ பிறந்தார். பல குறிப்புக்களின்படியும், குடும்ப வாழ்க்கை மிகக் கடினமாக இருந்தது; அவருடைய தாயார், தன் கணவர் அவருடைய தொழில் போக்கை அழித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஒருமுறை தன்னிடம் "என்னுடைய தகப்பனார் பல ஊர்களுக்குச் செல்லும் விற்பனையாளர், தாயோரோ குடிகாரி; 19 வயதிலேயே எனக்கு பெரும் நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டது. நான் வெகு எளிதில் ஒரு குற்றவாளியாகியிருக்கக் கூடும். பத்து ஆண்டுகள் தீவிரமான மனவியல் ஆய்விற்குப் பின்தான் என்னால் தெளிவாக இருக்க முடிந்தது" என்று கூறியதாக பொப் தோமஸ் என்னும் கட்டுரையாளர் பிராண்டோவை மேற்கோள் காட்டியுள்ளார்.

பிராண்டோ தம்பதியினர் இல்லிநோய்ஸ் மாநிலத்தில் குடியேறினர்; மின்னசோட்டாவில் ஓர் இராணுவப் பயிற்சிக்கூடத்திற்கு மார்லன் அனுப்பப்பட்ட போதிலும், படிப்பு முடிவதற்கு முன்பே கல்லூரியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். 1943ம் ஆண்டு பிராண்டோ நியூயோர்க் நகரை வந்தடைந்தார்; ஸ்கேண்டிநேவியாவில் இருந்து குடியேறியவர்களைப் பற்றிய I Remember Mama என்ற 1944ல் நடத்தப்பட்ட அரங்க நாடகத்தின் மூலம் நெல்ஸ் என்று நல்ல முறையில் அடையாளம் கண்டுகொள்ளப் பட்டார்.

நியூயோர்க்கில், சமூக ஆய்விற்கான புதிய பள்ளி என்ற கூத்துப் பட்டறையில், பிராண்டோ நடிப்பை கற்றார். அங்கு இவர் ஸ்டெல்லா ஆட்லெர் என்ற நடிப்பு ஆசிரியையின் மாணவராக இருந்தார். ஸ்டானிஸ்லாவிஸ்கியின் இயற்கை வழிமுறைகளில் இருந்து எளிதாக தொகுக்கப்பட்ட வகைகள் அப்பொழுது நடிப்பில் நவீன உத்தியாக இருந்தது; அதுதான் "சரியான வழி" எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால் உணர்வுகள், சூழ்நிலைகள் இவற்றில் உண்மையை வலியுறுத்தவேண்டும் என்ற கருத்தை பிராண்டோ கொண்டிருந்ததால் எந்தக் குறிப்பிட்ட வழிவகையையும் அவர் கடந்து நின்றார் என்றே கூறவேண்டும்.

ஆட்லெரை பற்றிக் குறிப்பிடுகையில் பிராண்டோ எளிமையாகக் கூறினார்: "நடிக்கும்பொழுது நிஜமாக இருக்கவேண்டும் என்றும், நான் சொந்தமாக உணராத உணர்வுகளை நடித்தெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்." Harry Belafonte, Shelley Winters மற்றும் Rod Steiger ஆகியோர் இவருடன் பயின்றவர்களாவர். இது ஒரு இடதுசாரி சூழ்நிலை; இங்கு கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான செல்வாக்கை செலுத்தியிருந்தது.

டெனெஸ்ஸி வில்லியம்ஸ் என்பவருடைய "A Streetcar Named Desire" என்று 1947ல் வெளிவந்த நாடகத்தில் தன் நடிப்பின் மூலம் பிராண்டோ புகழ் பெற்றார்; இதில் இவர் பண்பற்ற, மிருகத்தனமான ஸ்ரான்லி கோவல்ஸ்கியாக நடித்திருந்தார். போரில் பலகாலம் இருந்திருந்த படைவீரர்களைப் பற்றிய The Men (மனிதர்கள்) என்று Fred Zinnemann ஆல் இயக்கப்பட்ட திரைப்படத்தின்மூலம், முதன் முதலாக திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பிராண்டோ, வில்லியம்சின் உண்ர்ச்சியைத் தூண்டும் நாடகம், எலியா கசானால் திரைப்படமாக இயக்கப்பட்டதில் 1951ம் ஆண்டு புதுவித மாற்றத்துடன் தன் பங்கைச் செய்தார்.

1999 அகாடமி விருதுகள் கொடுக்கும் விழாவில் கசான் கெளரவிக்கப்பட்டபோது, அவருடைய இயக்கத்தில் பிராண்டோ நடித்திருந்த மூன்று படங்கள் பற்றி நான் வர்ணனை கொடுத்திருந்தேன். 1952ம் ஆண்டு அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிப்பவர் என்னும் முறையில் கசான் இகழ்வுக்குரியவராயிருந்தார்.

"அதற்குப்பின் தன்னுடைய நான்கு படங்களில் மூன்றை பிராண்டோவைக் கொண்டு கசான் இயக்கியிருந்தார்: அவை A Streetcar Named Desire (1951), Viva Zapata! (1952), மற்றும் On the Waterfront (1954) ஆகியவையாம். வில்லியம்ஸ்-ஆர்தர் மில்லர்-ஸ்ராஸ்பேர்க்-கசான் வகையிலான நாடகம், நடிப்பு பற்றி சற்று பரிவுணர்வு காட்டாத எதிர்ப்புத்தன்மை என்னிடம் இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். இக்குழுவின் முக்கியமானவர்களிடம் சிறிது குறுகிய, முழுவளர்ச்சியற்ற தன்மை இருந்ததாகத்தான் நான் எப்பொழுதுமே நினைத்து வந்தேன். அவர்களுடைய படைப்புக்களில் பெரும்பாலானவை, ஓரளவு போலியான 'ஆழ்ந்த தன்மை' கொண்டிருந்ததாக எனக்கு தோன்றியது; ஒரு விதமான குழம்பிய மன இயல்பிற்கேற்ப பொருள்விளக்குதல், எந்த அளவிற்கு சிலவற்றை வெளிப்படுத்தியதோ அதேபோல் மறைக்கவும் செய்தது என்று இருந்ததாக எனக்குத் தோன்றியது. உண்மையில் ஒரு சிறப்பு ஆய்விற்கு இது உட்படுத்தப்பட வேண்டிய பொருள்தான்.

"எவ்வாறாயினும்கூட, A Streetcar Named Desire படத்தை வெளிப்படையான சிக்கல் வாய்ந்ததாகத்தான் நான் எப்பொழுதும் கருதினேன். சமீபத்தில் அதைப் பார்த்தது என்னுடைய விரோதப் போக்கை ஓரளவு குறைத்துவிட்டது. சில அழுத்தந்திருத்தமான கணங்களும், உண்மையான உணர்வுகளும் இப்படத்தில் உள்ளன. பிராண்டோவும், கிம் ஹன்டரும் அதைப் பார்க்குமாறு வைத்துள்ளபோதிலும், அதிலும் குறிப்பாக பிராண்டோவின் நடிப்பு இருந்தபோதிலும்கூட, என்னால் முழுமையாக அதை ஏற்க முடியவில்லை. பிராண்டோவின் நடிப்பிற்கு எந்த அளவு கசானுக்கு மதிப்பீடு கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியாது; ஆனால், சுற்றியும் ஏராளமான கூச்சலுக்கு இடையே, அந்த நடிப்பின் நிதானம் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். பிராண்டோவின் Kowalski பாத்திர நடிப்பு, முதல் சில காட்சிகளிலாவது, வியத்தகு முறையில் மனத்திற்கு ஓய்வு கொடுப்பதாகவும், களிப்பைக் கொடுப்பதாகவும் இருந்தது. அதன்பின்னர், விமர்சகர் Manny Farber கூறியபடி, 'மன நோய் மருத்துவமனைக் கூடத்தில் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மனநோய்வாய்ப்பட்ட தெற்கத்திப் பெண்ணின் கதை' தூள்தூளாகச் சிதறிப் போய்விடுகிறது.

"Viva Zapata" திரைப்படம் அதனுடைய அதிகப்படியான பகுதிகளையும், மிக அபத்தமான கணங்களையும் கொண்டுள்ளது; ஆனால் என்னுடைய கருத்தில், இது கசானுடைய மிகவும் ஏற்கக் கூடிய படைப்புக்களில் ஒன்றாகும். பிராண்டோ, ஒரு மெக்சிக புரட்சியாளராக மிக அருமையாக நடித்துள்ளார்; ஜோன் ஸ்டீன்பெக் திரைவடிவு கொடுத்துள்ள படம் முற்றிலுமே ஒரு முறையான தந்திர உத்தியுடனும் புத்திசாலித்தனத்துடனும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு புரட்சியாளர் அதிகாரத்தை செலுத்தும்போது அதிலுள்ள பெரும் உத்தியோகமுறையிலான தடைகள் அவரை அதிர்ச்சியுறச் செய்த முறையில் அதைத் துறந்து அவர் சென்றுவிடும் திரைக்காட்சி முழுமையான மனநிறைவைத் தராவிட்டாலும் பார்க்கும்படியாக உள்ளது. சமூகஅரசியல் கண்ணோட்டத்தில், இது காசனின் ஒரு திரைப்பட்டம், ஒரு குறுகிய முறையில் வேறுபடுத்திக் காட்டலாம் என்றால், அதனை ஸ்ராலினிச-எதிர்ப்பு , கம்யூனிச-எதிர்ப்பு அல்ல என குறிப்பிடமுடியும்.

"டெரி மல்லோய் (பிராண்டோ), கடலோரப்பகுதியில் வசித்துவரும் முன்னாள் குத்துச் சண்டைவீரர், ஒரு குற்றம் பற்றிய விசாரணைக் குழுவிடம் தனக்குத் தெரிந்திருந்த உள்ளூர் தொழிற்சங்க தலைமையின் ஊழல் மலிந்த, கொலைகார நடவடிக்கைகள் பற்றி அனைத்தையும் இறுதியில் கூறிவிடுவதைப் பற்றிய திரைப்படக் கதைதான் On the Waterfront ஆகும். HUAC க்குத் தகவல் கொடுப்பவராக இருந்த மற்றொரு திரைப்பட எழுத்தாளர் Budd Schulberg உம், கசானும், பெரும்பாலும் தங்களுடைய செயல்களை நியாயப்படுத்தும் வகையில் இப்படத்தை எடுத்துள்ளனர். தன்னுடைய சுயசரிதையில் பிராண்டோ இரண்டு முக்கியமான கூற்றுக்களை முன்வைக்கிறார்: முதலாவது, 'On the Waterfront என்பது ஓர் உவமை வாதம், தங்களுடைய நண்பர்களை காட்டிக்கொடுத்ததை நியாயப்படுத்த கசானும், ஷல்பெர்க்கும் எடுத்தது என்று எனக்கு அப்பொழுது தெரியாது'; இரண்டாவதாக, முழுப்படத்தையும் பார்த்தபின் 'என்னுடைய நடிப்பு பற்றி நான் மிகவும் சோர்ந்துபோய்விட்டதால், நான் திரையிடப்பட்ட அரங்கிலிருந்தே வெளியேறிவிட்டேன்.' ஆனால் இதன் பிற்போக்கான, தன்னலவாத தன்மையிருந்தபோதிலும், படம் நன்கு உள்ளது; இதற்கு காரணம் பிராண்டோ, ஈவா மேரி சென்ட் இவர்களின் நடிப்பும் மற்றும் பொதுவான துடிப்பும் இதில் உள்ளது. மேலும் லியோனார்ட் பேர்ன்ஸ்டினின் மிகச்சிறந்த பங்கும் இதில் உள்ளது.

"இப்படம் ஏதோஒரு வகையில் தகவல் கொடுத்தவர் எதிர்கொண்ட சங்கடத்தைக் கூறுகிறது என்ற கருத்து விசித்திரமானது போலவே On the Waterfront கம்யூனிஸ்ட் கட்சியுடன் கசானுடைய உறவைப் பற்றிய உண்மையை ஒருபுறமும், HUAC பற்றி மறுபுறமும் உவமையாகச் சித்தரிக்கிறது என்ற கருத்து விசித்திரமானது ஆகும். பல இடங்களில் கசான் குறிப்பிட்டுள்ள மலோயின் நிலைப்பாட்டில் ஒழுக்க நெறியிலான தெளிவின்மை எங்கு இருக்கிறது? பிராண்டோவின் பாத்திரம் அதிகாரிகளிடத்தில் பேசி, அவர்கள் பாதுகாப்பை நாடவில்லை என்றால் அழிக்கப்பட்டு விடுவார். அவர் தன்னுடைய உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கையில், படத்தயாரிப்பாளர்கள் குறித்துள்ள வடிவமைப்பில், தன்னுடைய பழைய கூட்டாளிகளிடம் உதவிகோருவதைத் தவிர, வேறு எந்த விருப்பமும் இல்லை. கசானும், ஷல்பெர்க்கும் தங்களுக்கு ஆதரவாகவே படம் முழுவதையும் சித்தரித்துள்ளனர்.

On the Waterfront இன் கற்பனை சூழ்நிலை எந்த அளவிற்கு அமெரிக்காவில் 1950களின் முற்பகுதியில் இருந்த உண்மையை ஒத்திருந்தது? ஒரு தகவல் தெரிவிப்பவராக மாறிய வகையில், அரசியல்முறையில் அடித்து நொருக்கவேண்டும் என்று கருதிய ஒரு குழுவில் கசான்தான் சேர்ந்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஸ்ராலினிச தலைமை மற்றும் வேலைத்திட்டத்துடன் முற்றிலுமாக இணைந்திருக்கவில்லை. அதில் பெரும் பற்றும், தன்னையே அழித்துக்கொள்ளும் தியாக உணர்வு பெற்ற நபர்கள், முற்போக்கு மிகுந்த சமுதாய மாற்றங்களுக்காகப் போராடுகிறோம் என்று உணர்வு பெற்றிருந்த தனிமனிதர்களும் இருந்தனர். டெரி மலோயின் மனத்தை பாதிக்கும் அனுபவங்கள், கரும்பட்டியலை எதிர்கொண்டிருந்த நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்களுடைய உளப்பாங்கோடு கூடுதலாக ஒத்திருந்ததே ஒழிய, அதை ஏற்று அதிலிருந்து இலாபம் ஈட்டியவர்களுடையதோடு ஒத்திருக்கவில்லை.

"On the Set ஐ, ஒரு நல்ல ஊதியம் பெறும், வெற்றிகரமான இயக்குனர் எவ்வாறு இழிநிலையில் வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு அடிபணிகிறார் என்று கசான் சித்தரித்திருந்தால், இப்படம் அதே சிறப்பைக் கொண்டிருக்குமா? (கசான் ஒரு தகவல் தெரிவிப்பாளர் என்பதற்கும் தன்னுடைய பாத்திரத்தின் நடவடிக்கைக்கும் தொடர்பை விளங்கிக் கொள்ள முடியாமல் பிராண்டோ நின்றது, இயக்குனரின் உண்மையான நிலையுடன் திரைப்படத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலை மாறுபட்டிருந்ததால்தான். உண்மையில், திரைப்படத்தின் வலிமையினால் அதை ஒருவர் கோழைத்தனம், சந்தர்ப்பவாதம் இவற்றிற்கு ஆதரவு கொடுப்பதாயுள்ளது என்று வரலாற்றுரீதியான மற்றும் தனிப்பட்ட உண்மைகளை தெரிந்திராமல் கருதமாட்டார்.)"

இன்னும் கசான், பிராண்டோ பற்றி: "தன்னுடைய சுயசரிதையான A Life என்ற நூலில், On the Waterfront படத்தில், வாடகைக்கார் காட்சியில் பிராண்டோ, 'மிக அற்புதமான ஒலிக்குறிப்பில் கடிந்து கொள்ளுவதை நேசத்துடனும் வருத்தத்துடனும்' வெளிப்படுத்தியது பற்றி பாராட்டி கசான் எழுதியிருப்பது அவருடைய கெளரவத்தைக் குறிக்கிறது. அவர் எழுதுகிறார்: "நான் அதை இயக்கவில்லை; பலமுறை நடந்தது போலவே இக்காட்சி எவ்வாறு நடிக்கப்படவேண்டும் என்பதை மார்லன் காட்டினார்... எப்பொழுதுமே இதுபோன்ற சிறு அற்புதங்களை மார்லன் என்க்குக் கொடுத்திருக்கிறார்; பலமுறையும் என்னைவிடச் சிறந்த முறையில் அவர் உணர்ந்துள்ளார்; அதற்காக நான் அவருக்கு நன்றியறிதலைத்தான் காட்டமுடியும்." இது ஒரு அடிப்படை உண்மையைத்தான் காட்டுகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு; இதைப்பற்றி கசான் வெட்கப்படவேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால், திரை நடிப்பை பொறுத்தவரையில், பிராண்டோ கூடுதலான முக்கியத்துவம் கொண்ட நபராக இருந்தார், திரை இயக்கத்தில் கசானுடைய முக்கியத்துவத்தை விட அதிகம்தான் பெற்றிருந்தார். "

ஜோசப் மான்கிவிக்சிற்காக ஜூலியஸ் சீசர் படத்தில் பிராண்டோ மார்க் ஆன்டனியாக நடித்தது கசானுடைய முயற்சிகளுக்கு நடுவில் அமைந்தது ஆகும்; ஆனால் நடிகரின் பெரும்பாலன பணி 1950 களின் நடுப்பகுதி, கடைசிப்பகுதிகளில் பல சுமாரான படங்கள் (Desiree, Cuys and Dolls, The Teahouse of the August Moon, The Young Lions) ஆகியவற்றில் இருந்தது. அத் தசாப்தத்தின் இறுதியில் அவருக்கு ஏற்பட்டிருந்த போதுமான திருப்தியற்ற நிலை அவரை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, அவரே 1961ல் ஒரு பழிவாங்கி மனநிறைவு கொள்ளும் மேற்கத்திய படமான One-Eyed Jacks என்பதை தயாரிக்க மற்றும் அதில் நடிக்க வைத்தது.

ஆண்ட்ரூ சாரிஸ் என்னும் விமர்சகர் இந்தப் பிந்தைய படத்தை, "ஓர் ஒழுங்கற்ற முறையாயினும், மிக விரும்பத்தக்க முறையில் இப்படம் உள்ளது; பிராண்டோவுடைய மேற்கு கதாநாயகன் Hopalong Cassidy ஐ விட Heathcliff க்கு நெருக்கமாக உள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பிராண்டோ, படங்களை இயக்குவது ஒரு "கடினமான வேலை" என்று விவரித்தார்.

இவர் அரசியலில் தொடர்ந்தும் இருந்தார். 1959ல் SANE அணுக் கொள்கை பற்றி ஹாலிவுட்டில் நிறுவப்படவிருந்த ஒரு கிளை பற்றிய கூட்டத்திற்கு, Henry Fonda, Marilyn Monroe, Arthur Miller, Harry Belafonte, Ossie Davis இவர்களுடன் கலந்து கொண்டார். மே 1960ல் ஷர்லி மக்லெய்ன் இன்னும் சிலருடன் சேர்ந்து San Quentin சிறைக்கு வெளியே, முடிவிற்கு காத்திருந்த கற்பழிப்பாளர் Caryl Chessman மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டார், இது நாட்டின் மனச்சாட்சியை பாதித்த நிகழ்வு ஆகும். பின்னர் அதே கோடைகாலத்தில், பிராண்டோ ஜனநாயகக் கட்சி, ஜோன் எப். கென்னடியை வேட்பாளராக நிறுத்திய தேசிய மாநாட்டின் தொடக்க இரவன்று பங்கு கொண்டார்.

வாஷிங்டனில் குடியுரிமைக்காக ஆகஸ்ட் 1963ல் நடந்த பெரும் அணியில், மார்ட்டின் லூதர் கிங், இளையவர் உரையாற்றிய நிகழ்ச்சியில் பிராண்டோவும் முக்கிய பங்கைப் பெற்றிருந்தார். 1964ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றிருந்தபோது, தென்னாபிரிக்க தூதரகத்திற்கு வெளியே, தென்னாபிரிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய ஒரு விழிப்புக் கூட்டத்தில் பங்கு கொண்டு, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் ஆகியவர்களுக்கு தங்கள் படைப்புக்களை இனப் பாகுபாடு உள்ள பார்வையாளருக்கு காட்டுதலை தடைசெய்யும் விதிகளை தங்கள் எதிர்கால ஒப்பந்தங்களில் சேர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

1960களின் ஆரம்பத்திலிருந்து, பிராண்டோ அமெரிக்க பூர்விக குடிமக்களின் உரிமைகள் இயக்கத்துடனும் தொடர்பு கொண்டு, 1963ல் வாஷிங்டன் மாநிலத்தில் அமெரிக்க பூர்விகக்குடிகள் மீன்பிடிக்கும் உரிமைகளை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு, அமெரிக்க இந்திய இயக்கத்தின் தலைவரான டெனிஸ் பாங்ஸ் சான்பிரான்சிஸ்கோவில் கைதுசெய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமீன் உதவிக்குச் சென்றார்.

நடைமுறையை ஒட்டிய பாத்திரங்களில் நடிப்பதற்காக அவருக்கு வாய்ப்புக்கள் பெருகிய முறையில் வந்தபோது, அவருடைய தீவிர சமூக பார்வைகள் அவரை மகிழ்ச்சி அற்ற நிலைக்கு உட்படுத்தின. Mutiny on the Bounty (1962) படத்தின் இயக்குனரான லூவிஸ் மைல்ஸ்டோன் உடன் தீவிர கருத்து வேறுபாடுகளையொட்டி, இப்படத்தில் பிராண்டோ இயக்குனரின் உத்தரவுகளை கேளாவகையில் காதில் பஞ்சு வைத்துக் கொண்டதாக, இயக்குனர் மைல்ஸ்டோன் குற்றஞ்சாட்டினார், நடிகர் கையாளப்படுவதற்கு "கடினமானவர்" என்ற பெயரை எடுத்து விட்டார்.

பிராண்டோ தீரம் மிகுந்த, சுதந்திரமான படைப்புகளில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்; இதற்காக ஆர்தர் பென்னுக்காக The Chase (1966), குறைமதிப்பிற்குட்பட்ட A Countess from Hong Kong (1967) ல் சார்லி சாப்ளினுக்காக, Refldctions in a Golden Eye (1967) ல் ஜோன் ஹூஸ்டனுக்காக, Burn! (1970) ல் இத்தாலிய இடதுசாரி கில்லோ பொன்டெகோர்வோ இற்காக என்ற வகையில் அவர் இவற்றில் நடித்தார்.

ஒரு சமீபத்திய பேட்டியில் WSWS இன் Maria Esposito பொன்டெகோர்வோவை பிராண்டோவை பற்றிக் கேட்டார். இயக்குனர் விடையிறுத்தார்: "திரைப்பட உலகில் ஓர் உண்மையான மேதை என்று பிராண்டோவை நான் மதிக்கிறேன்; படங்களில் பெருந்திறமையுடன் நடித்த சில நடிகர்களில் அவர் தலைசிறந்தவராவார்; ஆனால் அவர் மனம் மாறும் தன்மையிருந்ததால் இயக்குவதற்கு மிகக் கடினமானவர். பெரும் உணர்வுநிறைந்திருக்கும் ஒரு பந்தயக் குதிரை போன்றவர் அவர். அவரோடு உழைப்பது கஷ்டம் என்றாலும், தொழில்தன்மை அதிகம் உடையவராதலின், என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறோமோ, அதை இறுதியில் செய்துவிடுவார்."

"Burn படம் தயாரிக்கும்போது மிகவும் கடினமானதாக இருந்தது. ஒரு தொடர்ந்த போராட்டமாகவே இருந்ததுடன், கடைசி மாதத்தில் அழுத்தம் மிகவும் அதிகமாயிற்று. அம்மாதம் முழுவதும் நானும் மார்லனும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை. [2001TM The Score படப்படிப்பின்போது இயக்குனர் Frank Oz இருக்கும்போது பிராண்டோ அங்கு வரமாட்டார்.] நான் அவர் என்ன செய்யவேண்டும் என்பதை என்னுடைய உதவி இயக்குனர் மூலம் தெரிவித்துவிடுவேன். படம் முடிந்தவுடன் நாங்கள் கைகுலுக்கிக் கொள்ளவும் இல்லை, முறையாக விடைபெற்றுக்கொள்ளவும் இல்லை; அந்த அளவிற்கு அழுத்தம் பெருகிவிட்டது."

"பின்னர் நாங்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டாம். சொல்லப்போனால் Burn வெளிவந்து ஒன்றரை ஆண்டுக்குப் பின், அவர் அமெரிக்க இந்தியர்களின் உரிமைகள் பற்றி ஒரு படம் எடுக்க விரும்பி, என்னால் அது முடியுமா என்று கேட்டார். நான் அவரைப் பார்த்தபொழுது கூறினேன்: "ஆக, நீங்கள் நான் நினைத்ததை விட கிறுக்கர். உங்கள் குணமும் மாறவில்லை, என்னுடைய குணமும் மாறவில்லை என்று எனக்கு தெளிவாகத் தெரிகிறது. எனவே நாம் ஒரு படத்தை தயாரிக்கத் தொடங்கினால், மீண்டும் மூன்று நாட்களுக்குள் சண்டைபோட்டுக் கொண்டுவிடுவோம்."

"அதற்கு அவர் கூறினார்: 'இல்லை, இல்லை, இல்லை. இதைப்பற்றி உண்மையிலேயே அரசியல், ஒழுக்கநெறிக் காரணங்களுக்காக அக்கறை கொண்டுள்ளேன். நீங்கள்தான் இதைத் தயாரிக்க மிகவும் உகந்தவர் என எனக்குத் தோன்றுகிறது; உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.' எனவே நான் கூறினேன், பார்க்கலாம், ஆனால் நான் ஒரு இருபது நாட்கள் அல்லது ஒரு மாதம் ஒரு இந்தியப் பகுதியில் வசித்து, அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள், வாழ்கிறார்கள் போன்றவற்றை அறிய வேண்டும் என்றேன்.

"அவர் அதற்கு இணங்கி, நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்தியர்கள் வாழும் பகுதியில் இருந்தேன்; அது மிகவும் வறிய நிலையில் இருந்தது. அது ஒரு ஆர்வமான அனுபவமாகும். துரதிருஷ்டவசமாக அப்படம் என்னுடைய, மார்லனுடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் எடுக்கப்படவில்லை. ஆனால் Sioux Indians உடன் தெற்கு டகோடா பகுதியில் இருந்த ஒரு மாத அனுபவத்தைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."

1960களின் கடைசிப்பகுதி, 1970களின் ஆரம்பப் பகுதி இவற்றின் தீவிரமயமாக்கல் போக்கு பிராண்டோவிற்கு கூடுதலான கதைக்கருத்துக்களை, Burn!, Last Tango in Paris (1972), The Godfather (1972), Apocalypse Now (1979) ஆகியவற்றை அளித்தது. The Godfather இல் Don Vito Corleone பாத்திரத்தை பிராண்டோ அமெரிக்க வர்த்தக, பெருநிறுவனப் பேராசையை விமர்சிப்பவர் என்ற முறையில், எழுத்தாளர் மரியோ புஜோவின் பாத்திரப்படைப்பிற்கு மாறான முறையில் அணுகினார்; இதில் அவருடைய நடிப்பு அக்கண்ணோட்டத்தில் காலத்தில் அழியாததாக உள்ளது. 1951ல் Kefauver குழு முன்பாக குற்றக் குழுக்களின் தலைவர் Frank Costello தோன்றியதை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய புகழ்பெற்ற குரலை வெளிப்படுத்தியிருந்தார் என்று கூறப்படுகிறது.

The Godfather க்காக பிராண்டோ அகாடமி விருது பெற்றபோது, அவர் தன்னுடைய பிரதிநிதியாக விருதைப் பெற்றுக்கொள்ள, ஒரு நடிகையை அனுப்பிவைத்தார்; அந்த அம்மையார் அமெரிக்க பூர்வீகக்குடிமக்களை நடத்தும் முறைபற்றிக் குறைகூறும் பிராண்டோவின் 15 பக்க அறிக்கை ஒன்றை படிக்க முற்பட்டார். அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதன் மிருகத்தனமான உள்நாட்டு, வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய உறுதியான விரோதியாக இருந்த பிரோண்டோ, "Huey விடுதலை செய்" ஆர்ப்பாட்ட அணிகளில், கறுப்புச்சிறுத்தைகளின் தலைவர் Huey P. Newton க்கு ஆதரவாகப் பங்கு பெற்றார்; நியூட்டன் 1968ல் கலிபோர்னியா, ஒக்லாந்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த நிகழ்வுகள் இவை.

பிரான்சிஸ் போர்ட் கோப்போலாவின் குறிப்பிடத்தகுந்த Apocalypse Now இல் பிராண்டோ-கூர்ற்ஸ் பாத்திரத்திற்குப் பிறகு, இதுவும் மிகத் தெளிவற்றதும், வலிமையற்றதுமாக இருந்தது என்பதை நாம் தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க முறையில் A Dry White Season (1989) தவிர வேறு ஏதும் இல்லை என்றுதான் கூறவேண்டும். இப்படம் நிறவெறி எதிர்ப்புப் படம்; இதற்காக பிராண்டோ மற்றொரு அகாடமி விருது பெற்றார்.

திறைப்படத் தொழில்துறை பற்றியும், தொழிலாக நடிப்பது பற்றியும் கூட தன்னுடைய பெருகிய வெறுப்புணர்வை பிராண்டோ வெளிப்படுத்தினார். அவர் கூறிய சில கருத்துக்களை கசப்புடன்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்; அவை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக கூறப்பட்டவை; ஆனால் அவருடைய உணர்வின் ஆழ்ந்த தன்மை ஐயத்திற்குரியது அல்ல.

அவர் பேட்டியாளர்களிடம் கூறுவார்: "நான் இங்கு, ஹாலிவுட்டில் இருக்கும் ஒரே காரணம், பணம் எனக்குத் தேவையில்லை என்று கூறக்கூடிய தார்மீக தைரியம் இல்லாததுதான்." அல்லது, "வயிறுக்கு ஒவ்வாதது ஏதேனும் ஒன்று உண்டு என்றால், அது தொலைக்காட்சியில் நடிகர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதைக் காண்பதுதான்." அல்லது, "அவரைப் பற்றிப் பேசவில்லை என்றால் கவனிக்காத நபர் என்பதுதான் ஒரு நடிகரின் போக்கு ஆகும்."

பிராண்டோவைப் போல் நடிப்பவர்கள், பலர் அதுபோல் தொடர்ந்து இருப்பர், அவரைப் பின்பற்ற அவருடைய மிக அசாதாரணமான உள்ளுணர்வைப் பெரிதும் தீவிரத்துடன் பின்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்; கடுமையான மன ஊசல்களை வெளிப்படுத்துதல், எடுத்துக்காட்டாக மற்றும் காரணமில்லாமல் அல்லது விளக்கப்படாத முறையில் ஒருதலைப்பட்சமாக சீற்றத்தை வெளிப்படுத்துதல் என்ற முறையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். அத்தகைய கணங்கள் பிராண்டோவின் நடிப்பில் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அவருடைய சிறந்த நடிப்பிலும் அதற்கும் மேலாகச் சில உள்ளன.

ஒரு நடிகரின் திறமை, நிச்சயமாக மனிதன் நடந்துகொள்ளும் முறை, ஆளுமை இவற்றைப் பற்றிய அநேகமாக அரை-நனவான உட்பார்வையுடன் மட்டுமே, மதிநுட்பத்துடன் பிணைந்துள்ளது. ஆயினும், ஒரு மிகப்பெரிய நடிகர் உலகத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் வேண்டும்; மேலும் மனித குலத்தின் மிகப்பரந்த அக்கறைகள் பற்றியும் அவ்வாறு உணர்ந்து, தெரிந்து கொள்ளவும் வேண்டும்; இதனையொட்டி மனிதகுலத்தின் மிகப் பரந்த நலன்கள் பற்றி கட்டாயம் பகிர்ந்தும் கொள்ளவும் வேண்டும். இறுதிப்பகுப்பாய்வில், பிராண்டோவின் தீவிரம் ஒரு தனிமனிதனின் அதிருப்தியிலும், கவலையிலும் மட்டும் அடிப்படையைக் கொள்ளவில்லை; மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிர்ப்பில்தான் உள்ளது. அவருக்குப் பின் வந்த எவரைக் காட்டிலும், இதுவே பிராண்டோ பெற்றிருந்த கூடுதலான அனுகூலமாகும்.

ஒரு பெரும் காந்தசக்தி பெற்றிருந்த நடிகர், சுதந்திரமான மனிதர், சமரசத்திற்கிடமின்றி வாழ்ந்தவர், ஒரு உண்மையான கிளர்ச்சிக்காரர் என்று அவர் எப்பொழுதும் நினைவில் கொள்ளப்படுவார்.

Top of page