World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Julie Hyland from the SEP in Britain addresses WSWS-SEP conference

"Blair-Bush alliance is an expression of the reemergence of naked imperialism and colonialism"

பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து ஜூலி ஹைலன்ட், WSWS-SEP மாநாட்டில் உரையாற்றுகிறார்

"பிளேயர்-புஷ் கூட்டு, அப்பட்டமான ஏகாதிபத்தியத்தினதும், காலனித்துவத்தினதும் மறு எழுச்சியின் ஓர் வெளிப்பாடு"

24 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மத்தியகுழு உறுப்பினரும், WSWS ஆசிரியர் குழு உறுப்பினருமான ஜூலி ஹைலன்ட், மார்ச் 13-14 தேதிகளில் மிஷிகன் அன் ஆர்பரில் WSWS மற்றும் SEP ம் இணைந்து "2004 அமெரிக்க தேர்தல்: ஒரு சோசலிச மாற்றத்துக்கான நிருபணம்" என்ற தலைப்பில் நடாத்திய மாநாட்டில் பேசிய கருத்துரையை கீழே பிரசுரம் செய்கிறோம்.

மாநாட்டின் சுருக்க கருத்துரை மார்ச் 15ல் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது; கீஷிகீஷி சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (ஷிணிறி) தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் நிகழ்த்திய ஆரம்ப உரை, மார்ச் 17லும் (ஆங்கிலத்தில்), ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகனுடைய உரை மார்ச் 18லும் (ஆங்கிலத்தில்), துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்சின் உரை மார்ச் 19லும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. வரவிருக்கும் நாட்களில் இந்த முக்கியமான அரசியல் நிகழ்வின் செய்தித் தொகுப்பை, ஏனைய சர்வதேச பிரதிநிதிகள் வழங்கிய உரைகளுடன், மாநாட்டு மண்டபத்திலிருந்து பங்களித்தவர்கள் வழங்கிய உரைகளையும் தொடரவுள்ளோம்.

பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து (SEP) இந்த மாநாட்டிற்கு உள்ளம் கனிந்த சகோரத்துவ வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; இதில் நடக்கும் கலந்துரையாடல்கள், அமெரிக்க வர்க்கப் போராட்டத்திற்கு மட்டுமல்லாது சர்வதேச ரீதியில் ஒர் முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

உங்கள் முன் இருக்கும் அறிக்கை, வரவிருக்கும் தேர்தல்களின் சர்வதேச முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இப்பொழுது எண்.10, டெளனிங் வீதியில் இருப்பவரைவிட, வேறு எவரும் இதை மிகக்கூர்ந்து கவனித்து வருகின்றனர் எனக்கூறுவது சரியே ஆகும். "ஒரே வண்டியில் தளையிடப்பட்டுள்ள கொலைகாரர்கள்" என்ற சொற்றொடர், ஜோர்ஜ் டபுள்யு புஷ் மற்றும் பிரதம மந்திரி பிளேயர் இவர்களுடைய விதியின் தொடர்பைவிட வேறு எதற்கும் மிகப் பொருத்தமாக இருந்ததில்லை.

உண்மையில், இவ் இருவரும் அரசியலில் பின்னிப் பிணைந்துள்ளது எவ்வாறு உள்ளது என்றால், புஷ் (தேர்தலில்) தோற்கடிக்கப்பட்டால், பிளேருக்கு என்ன ஆகும் என்ற ஊகங்கள் பிரிட்டனுடைய செய்தி ஊடகத்தில் முழுமையாகக் காணப்படுகின்றன. எந்த அரசியல் தலைவரையும் விட, பிளேயர் தன்னுடைய அரசியல் குறிக்கோளை, வாஷிங்டனுடன் இணைத்து வைத்துள்ளார்; தேவை ஏற்படுகையில் கெர்ரி (Kerry) ஜனாதிபதி மாறுதலுடன் அவரால் இயைந்து செல்ல முடியுமா என்ற அளவிற்கு இத்தன்மை உள்ளது.

இத்தகைய ஊகத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன; அவற்றுள் மிக முக்கியமான ஒன்று, ஒரு கெர்ரி வெற்றி, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தன்னுடைய நலன்களைக் கருத்திற்கொண்டு பெரும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சித்திரிப்பது போல் இராது. WSWS சுட்டிக் காட்டியுள்ளதுபோல், பயங்கரவாதத்தின்மீதான போர் என்று கூறப்பட்டு, அதன் அனைத்துப் பிற்போக்கான விளைவுகளுடனும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செயல்படுத்த நினைப்பவர்களான இரண்டு பெரும் செல்வந்தர்களான, ஏல் (Yale) பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தான் நவம்பர் மாதம் அதிகாரபூர்வமாக தெரிவு செய்யப்படவுள்ளனர்

மேலும், புஷ்ஷின் வெற்றி கிரிமினல் முறைகளால் வெற்றியீட்டிய போதிலும் கூட, தன்னுடைய மிக நெருங்கிய நண்பர் என்று பிளேயர் விவரித்திருந்த கிளின்டனுடைய ஜனநாயக நிர்வாகத்திலிருந்து, புஷ், மற்றும் குடியரசுக் கட்சியினரிடம், கிட்டத்தட்ட தையலில் தெரியாமல் இருக்கும் நூல் போல மாறுதலை ஏற்றுக் கொண்டார்.

ஆனால் பிளேயரும் அவருடைய ஆதரவாளர்களும், புஷ் நிர்வாகத்திற்கு எதிராக இந்த தேர்தல்களில் வெளிப்பட இருக்கும் மக்கள் விரோதப் போக்கின் பரப்பிலும், அளவிலும், அமெரிக்க முதலாளித்துவம் அதைத் தகர்த்து இறுதியில் தலையை கொய்யக் கொள்ளும் பல முறைகளை கண்டும் கவலை கொண்டுள்ளனர்

ஈராக்கிற்கெதிராக போர் நடாத்துவதற்கு அரசாங்கம் ஆதரவு அளிப்பதற்கு எடுத்த முடிவுற்கெதிராக, ஐக்கிய இராச்சியம் போல வேறு எங்கும் அத்தனை அளவு எதிர்ப்பு இருந்ததில்லை. அமெரிக்க தலைமையிலான போருக்கு பிளேயரின் ஆதரவு, பிரிட்டிஷ் வரலாறு காணாத போர் எதிர்ப்புக்கள், கடந்த பெப்ரவரி மாதம், சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட, எதிர்ப்பு அலைகளின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன.

அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்ட போருக்கான எதிர்ப்பு, மக்களுடைய அமைதியின்மையை முடிவிற்கு கொண்டுவந்து விடவில்லை. மாறாக, விரைவில் ஈராக்கியப்போர் வெற்றியில் முடிவடைந்தால், "ஒரு காரியம் நல்ல முறையில் செய்யப்பட்டுவிட்டது" என்ற களிப்பில் அனைத்து எதிர்ப்புக்களும் கரைந்துவிடும் என்று பிளேயர் நம்பி இருந்தார். அமெரிக்காவும் பிரிட்டனும் காலை சேற்றுக்குள் விட்டதுபோல மக்கள் எதிர்ப்பு நிலைக்கு மேலும் தள்ளப்பட்டதுடன் அவர்களுடைய ஆக்கிரமிப்பிற்கு பரந்தளவு எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், பிளேயர் அரசாங்கம் போரில் ஈடுபட நியாயப்படுத்தியிருந்த ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கட்டுக்கதைகள், மிகப் பரந்த முறையில் அம்பலப்படுத்தப்பட்டு, அமெரிக்க, பிரிட்டிஷ் நடவடிக்கைகளின் கிரிமினல் குணாம்சத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.

ஓர் ஆண்டுக்குள், அரசாங்கம் இப்பொழுது நான்காம் முறையாக விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாகி விட்டது; இம்முறை போருக்கு முன் உளவுத்துறை தகவல்கள் கொடுத்தது பற்றியதாகும். ஆரம்பத்திலிருத்தே, பிரொக்வெல் பட்லர் பிரபு (Lord Butler of Brockwell), தலைமையிலான இந்த சமீபத்திய விசாரணை, மற்றயதைவிட மிகுந்த மதிப்புக் குறைவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பட்லர் பிரபு முந்தைய அரசாங்கங்களின் தவறுகளையெல்லாம் பூசி மெழுகும் தன்மை அனைவரும் அறிந்த சான்றுகளைக் கொண்டுள்ளது; உதாரணத்திற்கு, ஈராக்கிற்கு சட்டவிரோதமாக ஆயுதம் விற்றது பற்றி ஸ்கொட் (Scott) விசாரணை; இவருடன் இணைந்து பங்கு பெறுபவர்களில் ஒருவர் ஈராக்கில் மிக அதிக அளவு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையவர். மேலும், இதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரையறை மிகக் குறைவு; எந்த முக்கியத்துவ தகவலையும் இது வெளிக்கொண்டு வரமுடியாது; வலதுசாரி எதிர்ப்பாளர்களான கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் மட்டுமல்ல, லிபரல் ஜனநாயவாதிகளும் கூட, இதில் பங்கு பெற மறுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு தொடங்கிய வருடத்திலிருத்து நிகழ்வுகள் எப்படி வெளிப்பட்டன என்று நினைத்துப் பாருங்கள். முதலில் பிளேயர் அரசாங்கம் தன்னுடைய கோரிக்கையில் பொய் கூறியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது; தனது பாதுகாப்பு அறிக்கை என அழைக்கப்பட்டு செப்டம்பர் 2002 வெளியிடப்பட்டதில், ஈராக், ஆபிரிக்காவில் இருந்து அணுவாயுத மூலப் பொருட்கள் வாங்க முயற்சியை மேற்கொண்டது எனக்கூறப்பட்டது.

பின்னர் இரண்டாம் உளவுத்துறையின் பெப்ரவரி 2003ன் அறிக்கையில், 12 வருடங்கள் பழமையான டாக்டர் பட்டத்திற்கு எழுதப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையிலிருந்து பலபகுதிகளை திருடியுள்ளது என்றும், ஈராக் இராசயன, உயிரியில், அணு ஆயுதங்களை கொண்டு பிரிட்டிஷ் இலக்குகளை 45 நிமிஷத்திற்குள் மிகக் கடுமையாக தாக்கமுடியும் எனக்கூறியது அனைத்தும் பொய்களாகும். அறிக்கையில் கோரப்பட்டது போல ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்பது உண்மையில் போர்க்கள ஆயுதங்கள் எனவும், அதாவது சாதாரண வெடிமருந்துகளைத்தான் குறிக்கின்றன என்றும் பின்னர் பிளேயரே ஒப்புக்கொண்டார்.

பிளேயர் ஈராக் பற்றிக் கூறியவை தொடர்பாக உளவுத்துறையில் பரந்த அமைதியின்மை இருந்தது என்ற செய்திக்கு ஆதாரமூலம் அவர்தான் என்று "தகவல் வெளிப்படுத்தப்பட்டபின்னர்", பிரிட்டனுடைய முன்னனி ஈராக் ஆயுத வல்லுனர், டாக்டர் டேவிட் கெல்லியின் தற்கொலை போன்ற மரணம் இருந்தது - இக்கூற்று பின்னர் நிகழ்ந்த கண்துடைப்பு விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் மிகவும் அண்மையில், போருக்கு முன்பு பிரிட்டன், ஐ.நா. தலைமைச் செயலாளர் கோபி அன்னன் (Kofi Annan) பற்றி உளவு செய்ததாகவும், சந்தேகமற்ற முறையில் அமெரிக்க தூண்டுதலுடன் தவிர்க்க முடியாத படி தாக்குதலை தொடங்கும் பின்னணி இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு எதிரான போர் இப்படியான கிரிமினல் மற்றும், ஊழல் நடத்தை என்பனவற்றுடன் பூரணப்படுத்தப்பட்டு இருந்தது. வாஷிங்டனுடைய ஒருதலைப்பட்ச, சட்டவிரோதப் போர் ஆக்கிரமிப்புச் செயலுக்கு, பிளேருடைய ஆதரவு சட்டநெறி கொடுக்க மையமாக இருந்தது என்பதை கூறத் தேவையில்லை. ்ஸ்பெயின், இத்தாலிய அரசாங்கங்கள் போருக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், "விருப்பமுடையோர் கூட்டணி" என்பதில் பிரிட்டன் தன்னுடைய முக்கியத்துவத்தை கொண்டிருந்தது; மிகுதியாக சேர்ந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வாஷிங்டன் பணம் கொடுத்து வரவழைத்தது.

பிளேயர் இந்த நிலைப்பாட்டை மக்கள் எதிர்ப்பையும் மீறி கொண்டிருந்தது மட்டுமின்றி, பிரிட்டனின் தலைவிதியை வாஷிங்டனுடையதுடன் கூடுதலாகப் பொறுப்பற்ற, இறுதியில் உறுதியை குலைக்கும் வகையிலான ஒரு காரியத்தில் பிரதம மந்திரி இணைத்துவிட்டார் என்று ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவினரும் கணிசமான கருத்துவேறுபாட்டை தெரிவித்தனர்.

பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சட்ட ஆலோசகரும், அரசாங்கம் போரில் ஈடுபடுவதை குறித்து சட்ட ரீதியாக தீவிர மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர் என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது; அட்மைரல் சேர் மைக்கல் போய்ஸ், ஈராக்கின் தலைமை தளபதியாக இருப்பவர், பிரிட்டஷ் வீரர்கள் சண்டையை தொடக்குமுன் அவருக்கு "சந்தேகத்திற்கு இடமில்லாத முறையில்" சட்டபூர்வமான காப்பு தேவை என்று வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது; இதையொட்டி, பூசல்கள் அதிகாரபூர்வமாக ஐந்து நாட்கள் தொடங்குவதற்கு முன்பு தலைமை வழக்குரைஞரிடம் இருந்து ஓர் ஒற்றை-வரி உறுதி அனுப்பப்பட்டது.

இந்த சம்பவங்களை கருத்திற்கொண்டு, பிளேயர், புஷ்ஷிற்கு ஆதரவு கொடுத்ததின் காரணங்களை ஆராய்வது மிக முக்கியமானதாகும்.

போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த காலத்தில் பிளேயருடைய நிலை, அவர் வாஷிங்டனுக்கு அடிபணிந்து நிற்றல், அவர் புஷ்ஷின் விசுவாச நாய்க்குட்டி போன்று இருந்தார் எனச் சித்திரித்துக் காட்டப்பட்டது. உரையா ஹீப் போன்று மிகவும் தாழ்ந்து பிளேயர் நின்றது ஒருபுறம் இருந்தாலும், இது ஒரு புறத்துப்பிழையான சித்தரித்தலாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் முற்றிலும் தன்னுடைய தாழ்ந்த நிலையை, கூடுதலான ஆற்றல் பெற்ற நட்புநாட்டுடன் அறிந்திருந்தாலும், ஈராக்கை பொறுத்தவரை அதன் நிலைப்பாடு, தன்னுடைய கொள்ளை முறையை ஆக்கிரோஷத்துடன் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இதன் ஈராக்கிய நிலைப்பாடு இருந்தது.

முதலில், பிளேயர் அரசாங்கம், பிரிட்டிஷ் மூலதனத்தின் உடனடியான இலாபங்களை, ஈராக்கிய எண்ணெய், மறு சீரமைப்பு ஒப்பந்தங்கள் மூலம், பிரிக்கும் பங்கை அடைவதில் கண் வைத்திருத்தது.

மிகவும் முக்கியமாக நினைவில் எடுத்துக் கொள்ள வேண்டியதொன்று, பிரிட்டன் வாஷிங்டனுடன் கூட்டு கொண்டால், அதன் தாக்கம் உலக அரங்கில் கூடுதலான வலுவை, குறிப்பாக அதன் ஐரோப்பிய போட்டியாளர்களைவிட இருக்கும் என்பதாகும்.

இந்தப் பார்வையில், பிரிட்டனுடைய ஈராக்கிய கொள்கை, பிரிட்டனின் நீண்டகால வாஷிங்டன்-பிரஸ்ஸல்ஸ் (Brussels) தொடர்பை சமநிலையில் தொடர்ந்துவைக்கும் செயலாகக் கொள்ளமுடியும். ஆனால், இது மரபுவழிக் கொள்கையை முறித்துக்கொள்ளும் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரோஷமான முறையில் தன்னை உலகின் ஒரே வல்லமை படைத்த நாடு என்று நிலைநிறுத்துக் கொள்ள உந்துதல், அதன் ஆதிக்கத்தை வலிமையற்ற, பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளான ஈராக் போன்றவற்றில் செலுத்த இயலும் என்பதில்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக அதன் சக்தி வாய்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஜப்பான் மீதும் செலுத்த முடியம் என காட்ட முனைகிறது.

டொனால்ட் ரும்ஸ்பெல்ட் (Donald Rumsfeld) ன், இகழ்வுடன் பிரான்சையும், ஜேர்மனியையும் "பழைய ஐரோப்பா" என்று குறிப்பிட்டது, ஐரோப்பிய கண்டத்தை தன்னுடைய நீண்டகால உடன்பாட்டு நாடுகளின் நேரடி எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ஐரோப்பாவை பிரிக்கும் வகையில் தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கும் செல்வாக்கு மண்டலம் என்று ஒரு பகுதியை கூறியது, அமெரிக்க ஏகாதிபத்திய கருத்துக்களைத்தான் வெளிப்படையாக குறிக்கிறது. இந்த இலக்கு, மிக இழிந்த முறையில் ஹெகார்ட் ஷ்ரோடரும், ஜாக் சிராக்கும், நிபந்தனையற்ற சரணடைந்த பின்னரும் கூட மாறாமல் உள்ளது.

இந்த அமெரிக்க சக்தியின் வெடிக்கக் கூடிய தன்மை வெளிப்படுத்தப்பட்டபின், பிரிட்டிஷ் பூர்சுவாசி வேறு வழியின்றி, வரக்கூடிய உலக மாற்றங்களில் செல்வாக்குப் பெறவேண்டும் என்றால் வாஷிங்டனுடன் இணைந்துதான் செயலாற்றவேண்டும் என்று பிளேயர் கருதினார்; இதனால், தன்னுடைய ஐரோப்பிய நட்பு நாடுகளை பகைத்துக்கொண்டாலும், தன்னுடைய அரசாங்கத்தின் கூறப்பட்ட இலக்கான ஐரோப்பிய இணைப்பை கடினமாக்கினாலும், இல்லாவிடின் சாத்தியப்படாமல் செய்தாலும், இந்த நிலைப்பாடுதான் வேண்டும் என்று கருதினார்.

இது ஒரு மூன்றவாது காரணியுடனும் பிணைந்துள்ளது. மங்கிய நிலைக்குப் போய்விட்டாலும், பிரிட்டன், ஏகாதிபத்திய முறையை பொறுத்தவரையில் பெரும் இரைக்கு ஆர்வம் கொண்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் சரிவு, ஒரு புதிய காலனிகளுக்காக உலகைப் பிரிக்கும் முயற்சிகளையும் கொடுத்துள்ளது; இதில் பின்தங்கி விடுவதற்கு உறுதியாக ஐக்கிய இராட்சியம் தயாராக இல்லை.

இந்த ஈராக் கொள்ளையையொட்டி, புஷ் நிர்வாகம் ஒரு புதிய முன்னோடியான திட்டத்தை, ஏகாதிபத்திய புதுப்பித்தலுக்கு கொண்டுவருகிறது என்பதை பிளேயர் உணர்ந்து, இதை பிரிட்டனின் முதலாளித்துவம் தன்னுடைய இலக்குகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருதினார். கடந்த வாரம் தன்னுடய Sedgefield தொகுதியல் ஒரு கூட்டத்தில் பேசுகையில் வெளிப்படையாக இத்தகைய கருத்தைக் கூறினார்.

ஈராக்கின் படிப்பினைகளை பற்றிக் குறிப்பிடுகையில், அவர், ஒரு "புதிய முறையிலான போர்" வளர்ந்து வருகிறது, இது தற்காலப் பார்வையான "தன்னலம்" என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது என்பது அறியப்படவேண்டும் என்றார். மக்கள் இந்த புதிய போர்முறையை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கருதினால், பின் அத்தகைய சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

உலக ஒழுங்கு தற்பொழுது ஒரு புதிய உலகளாவிய அமைப்பின் கீழ் கட்டப்படுகிறது "ஒரு மறு சிந்தனை" இப்பொழுது தேவை என்றும், "பல வசதிகள் பாதிக்கப்படாமலும், அத்தகைய அச்சம் எங்கோ தொலைவில் இருக்கிறது அல்லது பொய் தோற்றமாக கூட தெரிந்தாலும், அத்தகைய மாறுதல் நம்மை கட்டாயப்படுத்தி செயல்படுத்தவைக்கிறது" என்று அவர் வலியுறுத்தினார்.

பிளேயருடைய பேச்சு, அடிப்படையில் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை வலியுறுத்தியதுதான்; அது வேறு விதத்தில் போலித்தனமான லிபரல் கொள்கை முகமூடி அணிந்திருந்த போதிலும்கூட, தவிர்க்கமுடியாமல் போரை பாதுகாப்பதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் முயல்கிறது.

பிரதம மந்திரி இதைத் தொடர்ந்து வாதிட்டுத்தான் வந்துள்ளார்; முந்தைய அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முயற்சிகள் பால்கன் பகுதிகளில் நடைபெற்றதை முன்னோடியாக மேற்கோளிடுகிறார். உலக மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மிதித்தல் என்று வரும்பொழுது, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பே, பெரிய வல்லரசுகள் தாங்கள் நினைத்தவாறே நடந்து கொண்டிருந்தனர் என்று அவர் கூறியதில் ஆக குறைத்த உண்மையுள்ளது.

பிளேயர், புஷ்ஷுடன் கூட்டு உடன்படிக்கையின், அடிப்படை உணர்வின் வெளிப்பாடு என்னவெனின், அப்பட்டமான ஏகாதிபத்தியத்தினதும், காலனித்துவத்தினதும் மறு எழுச்சியும், ஒரு கிரிமினல் உயர் வர்க்கம் தடையின்றி எதையும் செய்யலாம் என்பதாகும்.

இது வெளிநாட்டு உறவு பிரச்சினைகளுடன் நின்றுவிடவில்லை. புஷ்ஷையும், பிளேயரையும் ஒன்றுபடுத்தும் மற்றோரு பெரிய பிரச்சினை, அவர்கள் வலுவுடன் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்திற்கெதிரான விரோதப் போக்கும், கடந்த 100 ஆண்டுகளாக வென்றெடுத்த மிகுதியாகவுள்ள சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் போன்றவற்றை உடைப்பதற்கான நோக்கமுமாகும்.

இருவருமே, ஏற்கனவே செல்வத்தை ஏழைகளிடமிருந்து செல்வ சீமான்களுக்கு மறுபங்கீடு செய்வதில் முன் ஒரு பொழுதும் இல்லாத முறையில் விரிவுபடுத்திக்கொண்டு இருக்கின்றனர். முந்தைய டோரி ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து, பிளையர் தொடர்ந்து வந்து, தொழிற் கட்சியின் கீழ் வருமான சமத்துவமின்மை வளர்ந்து வருகிறது. மக்கள் தொகையில் மூன்றில் இருபங்கினருக்கு மேல் தேசிய சராசரி ஆண்டு வருவாய் 25,000 பவுன்ஸ்களை விடக் குறைவான வருமானத்தைத்தான் ஈட்டுகின்றனர். இத்தகைய தலைகீழ் புள்ளிவிவரங்கள், மிகச்சிறிய சிறுபான்மைதான் பெரும் செல்வத்தின்மீது ஏகபோக உரிமை கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

ஒரு சமீபத்திய அறிக்கை, பிரிட்டனின் 300 செல்வச் சீமான்களினுடைய கூட்டுவருமானம், 147.3 பில்லியன் பவுன்கள், கிட்டத்தட்ட 28 சதவிகிதம் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது என குறிப்பிடுகிறது. இப்பொழுது பிரிட்டனில் 29 பில்லியனர்கள் உள்ளனர்; இது 2003 ஐ விட 10 கூடுதலாகும், 2 மில்லியன் மக்களுக்கு 1 பில்லியனர் என்ற முறையில், இந்த விகிதம் பெருமிதத்துடன், "அமெரிக்காவை விடக்கூடுதலான தன்மையுடையது" எனக்கூறுகிறது; ஏனெனில் அங்கு 3 மில்லியன் மக்களுக்கு ஒரு பில்லியனர் என்ற நிலை உள்ளது.

இதே அறிக்கை, பிரிட்டனில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான மிக வசதி படைத்த 300 வெளிநாட்டு செல்வந்தர்கள், வரியே செலுத்துவதில்லை என்றும் பெருமையுடன் பறை சாற்றுகிறது. ஆறில் ஒரு பங்கினர், தங்கள் செல்வத்தை பணமாகவும், எளிதில் மாற்றக்கூடிய சொத்துக்களாகவும் கொண்டுள்ளனர். இவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் நாடுகடத்தப்பட்ட ரஷ்யநாட்டு பில்லியர்களான ரோமன் அப்ரமோவிச், மற்றும் பெரிஜோவஸ்கி, பழைய சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து லாபத்தை தேடினர்கள் என்று கூறும்போது, இதில் நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை. வேறுவிதமாகக் கூறினால், இந்த பில்லியனர் அதிகாமாகி இருக்கும் கணக்கு பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றமோ அல்லது உயர்நிலை வெளிப்பாடோ அல்ல, மாறாக எப்படி பெருவணிகம், உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான பிளேயரின் கொள்கை நாட்டை அதி உயர் பணக்காரர்களுக்கு பாதுகாப்பாகச் செய்துள்ளது என்பதை குறிக்கிறது.

உயர் மட்டத்தில் இருப்போர்மீது வரிவிகிதம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அண்மையில் நிராகரித்த பிளேயர், அவ்வாறு அதிகரித்தாலும் அவர்கள் செலுத்த மாட்டர்கள் என்று கூறி நிராகரித்துவிட்டார். தன்னுடைய ஆதரவாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.

வெளிநாடுகளில் காலனித்துவ வெற்றியும், நாட்டில் பிரகடனப்படுத்தாத உள்நாட்டு போருமே, பண முதலைகளினதும் கிரிமினல்களினதும் விரும்பத்தக்க கொள்கையாகும்; இந் நிதிமூலதன ஆளும்தட்டு தான் வாஷிங்டனிதும், லண்டனினதும் இவற்றின் அரசியல் வாழ்வை நிர்ணயிக்கின்றது.

இந்த சமூக துருவப்படுத்துதல், இந்த அப்பட்டமான ஆட்சியாளர் ஆளப்படுவோரிடையே உள்ள முரண்பாடுகள், பிளேயரின் இறுமாப்பான பேச்சு போன்றவையே பொதுக் கருத்தை அவர் பொருட்படுத்துவதில்லை என்பதின் பின்னணி ஆகும். தன்னுடைய அரசாங்கத்தை எவ்வித ஜனநாயகமுறை கட்டுப்பாடுமின்றி விடுவித்துக் கொள்ளும் முயற்சி, ஒரு சிறு குழுவின் நலன்களான அதன் நடவடிக்கைக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்று உறுதிப்படுத்துவதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது; இவை பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும்.

ஆட்சியில் இருப்பவர்கள், மக்களுக்குப் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற அவருடைய வலியுறுத்தல், பகுதிச் சர்வாதிகாரத்தன்மை உடையதாகும்; இத்தன்மையான முறையைத்தான், சட்டபூர்வமாக பயங்கரவாதத்தின்மீதான போர் என்ற பெயரில் அரசாங்கம் செயல்பட முயலுகிறது.

அதேநேரத்தில், பிளேயர் உண்மையான அரசியல் எதிர்ப்பு எதையும் எதிர் நோக்கவில்லை. தொழிற்சங்க காங்கிரஸ், போர் நடக்கும் காலத்தில் "எமது போர் வீரர்களுக்கு" ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கூறி போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு, பின்னணியில் நிற்க மறுத்துவிட்டது. லேபர் அரசாங்கத்திற்கு எதிரான எந்தப் போராட்டத்திற்கும் அது நிச்சயமாக விரோதமாக நிற்பதுடன்; இந்த அரசாங்கம் டோரிகளைவிட (Tories) குறைந்த தீமையுடையதுதான் என்றும் சித்தரிக்கிறது.

உண்மையில், மிகவும் நீண்ட காலத்திற்கு முன்பு இல்லாமல் ஒருகாலத்தில் சோசலிசத்திடம் ஏதோ தொடர்புகொண்டுள்ளதாகக் கூறிக் கொண்ட, ஒரு தொழிலாளர் கட்சிக்கு பிளேயர் தலைமை தாங்குவதாகக் கூறப்படுவதை, மக்களிடம் அடிக்கடி நினைவுபடுத்தல் அவசியமாயிருந்தது. 1997 லிருந்து தொழிற்கட்சி அதிகாரத்தைச் செலுத்தியுள்ள முறை, மக்கள் விரோதப் போக்கினால் புஷ் பதவியைவிட்டு அகற்றப்பட்டால் ஜனநாயகக் கட்சி அழைக்ப்படுமாயின் அது எந்தப் பங்கினைச் செய்யுமோ, அதைத்தான் தொழிற்கட்சி அங்கு செய்துவருகிறது என்பதால் அவ்வாறு கூறவேண்டியுள்ளது.

பிளேயர் தன்னுடைய பழைய குறைகூறுவோரை அளந்துதான் வைத்துள்ளார். இடதுசாரி என்று கூறி பிளோயருடைய ஈராக்கின் கொள்கையை விமர்சித்தவர்களை மிகவும் நோக்கியதாக இருந்தது அண்மையில் Sedgefield ல் நடாத்திய உரை. ஏதேனும் ஒரு விதத்தில் சில கருத்து வேறுபாடுகள் இப்படியான திட்டங்களில் இருந்தபோதிலும், அவர்கள் மிக அடிப்படைப் பிரச்சினைகள் இத்துடன் பிணைந்துள்ளது எனவும் தன்னை பாதுகாக்க முன்வர உணரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

அவருடைய அழைப்பு, அண்மையில் ஜோன் கெர்ரியை (John Kerry) ஜனநாயக வாதிகள் தெரிவு செய்வதற்கு குரலை உயர்த்திக் கூவிக் கொண்டிருந்த தன்மையை காட்டுகிறது. இதற்கு சாதகமான பதிலும் கிடைத்தது. The Guardian, பிளேயருடைய தனக்கு ஆதரவான நயமான வனப்பும், அப்பட்டமான பொய்களும் நவ காலனித்துவ செயல்பட்டியலுக்காக எடுத்துரைத்ததை, இதுவரை பிரதம மந்திரிகள் உரையாற்றியதில் ஒரு "சிந்தனைக்கு உரியது"ம் "சீரான தன்மையுடையது"ம் என்று புகழாரம் சூட்டியது. "புத்திஜீவிகளின் கோரிக்கை", இது அரசியலை முக்கியமாகக் கருதுபவர் அனைவரும் மரியாதையுடன் உற்றுநோக்கவேண்டும்" என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இதிலிருந்து என்ன முடிவுகளை எடுத்துக் கொள்ளுவது? ஆளும் வட்டங்களில், ஜனநாயகம் பற்றிய உண்மையான அக்கறை இல்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. இவர்களையோ அல்லது

வேறுமோர் பகுதி முதலாளித்துவத்திற்கு அழுத்தத்தை கொடுத்து இடது சாரித்தனத்திற்கு கொண்டுவரும் வேலைத்திட்டம் முட்டுச் சந்திக்கு பாதை வகுத்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் வரலாற்றிலேயே 18 ஆண்டுகள் மிகுந்த வலதுசாரித்தன்மை கொண்ட அரசாங்கத்திற்கு பிறகு, ஐக்கிய இராச்சியத்தில் உழைக்கும் மக்கள் ஒரு மாறுதல் தேவை என ஆவலுடன் இருந்தனர். அவர்களுக்குக் கிடைத்தது பிளேயரும் அவருடைய புதிய லேபர் அரசாங்கமும்தான். இங்கு அமெரிக்காவில், உங்களுக்கு புஷ்ஷை அகற்ற நல்ல தருணம் கிடைத்து அதன் பயனாக கெர்ரி நன்மையடைகின்றார். ஆனால் இது காலத்தின் சோதனையில் வெற்றி பெறாது. பிளேயர் 1997ல் போற்றப்பட்டு, இன்று தூற்றப்படுகிறார். அந்த புஷ்-எதிர்ப்பு உணர்வு திறனாயும் தன்மைகளை மழுங்கவைக்கவும், எதிர்ப்புக்களை ஜனநாயகக் கட்சியின் பின் தள்ளவும்தான் பயன்பட்டுள்ளது. ஆனால், இந்த எதிர்ப்பு உணர்வில் உள்ள சமுதாய, அரசியல் விரோதங்கள், வெறும் புஷ்ஷின் விதிமட்டும் அல்ல, கெரியுடையதும்தான்.

இரு-கட்சி அரசியல் அமைப்பு பிடிக்குள் அமெரிக்கா தன்னுடைய தொழிலாள வர்க்கத்தை எல்லைக்குள் வைத்திருந்தமை புறநிலை ரீதியாக முடிவடைந்துவிட்டது. இதை உணர்வு ரீதியாக நன்கு அறிந்து, அதை முடிவிற்கு கொண்டு வர வேண்டியது எங்களுடைய பொறுப்பும் அத்துடன், இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமுமாகும்

இறுதியாக, நீங்கள் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்வது முக்கியமாகும். இது தனியே நவம்பர் தேர்தல்களுடன் தொடர்புடையது மட்டுமல்ல, மாறாக இது மிகவும் அடிப்படையான ஆயத்தப்படுத்தலின் குணாம்சத்தை கொண்டுள்ளது.

இந்தப் பிரச்சாரத்தின் மிக முக்கியமான பகுதி இதனைத்தான் உள்ளடக்கியுள்ளது: அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு உலகெங்கிலும் முன் வைக்கப்படும் மாற்று வழி, ஐ.நா. வாக இருந்தாலும், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஏகாதிபத்திய சக்திகளாக இருந்தாலும் அல்லது முற்றிலும் நெறியிழந்த, சிதைந்த பார்வையுடைய தனிநபர் பயங்கரவாதம், சமீபத்தில் ஸ்பெயினில் அன்னமயில் நாம் கண்டது போல எதுவானாலும் சரி, அவை பொதுவாக, பிற்போக்குத் தன்மையைத்தான் கொண்டு இருக்கின்றன.

இதற்கு மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க கூடிய முற்போக்கான தனி சமூக சக்தியை அடித்தளமாக கொண்டதுதான் எமது வேலைத்திட்டம். அதாவது அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினை அரசியல் உணர்வு பூர்வமாக்குவதாகும்.

இது சர்வதேச ரீதியில் பதின்மடங்கு மில்லியன் மக்களையும் ஈர்க்கும் சக்தியாக வெளிப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க வழிகாணும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த தேர்தல் பின்னணியில் ஒரு சிறப்பு உறவைப்பற்றிப் பேசுவது பொருத்தம் என்றால், பின் நம்முடைய பிரச்சாரம் அமெரிக்க தொழிலாளர்களை, உலகெங்கிலும் உள்ள அவர்களுடைய சகோதர, சகோதரிகளுடன் இணைக்கும் முறையில்தான் அமையும்.

See Also :

போருக்கு எதிரான போராட்டமும் 2004 அமெரிக்க தேர்தல்களும்

சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்கின்றது

உலக சோசலிச வலைத் தளம் - சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் ஆரம்ப அறிக்கை
2004 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் மூலோபாயம்

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென் WSWS-SEP மாநாட்டில் பேருரையாற்றுகிறார்
"2004 அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான குரல்"

சோசலிச சமத்துவக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ், WSWS-SEP மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து பீட்டர் சுவார்ட்ஸ், WSWS-SEP மாநாட்டில் பேருரையாற்றுகிறார்
"எமது கட்சி ஐரோப்பிய தேர்தலில் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து பங்கு கொள்ளுகின்றது"

Top of page