World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Huge abstention rate in Sri Lankan provincial council elections

இலங்கை மாகாண சபை தேர்தலில் வாக்கு புறக்கணிப்பு வீதம் விசாலமாகியுள்ளது

By Wije Dias
14 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் எட்டு மாகாண சபைகளில் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் ஜூலை 10ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தல், முழு அரசியல் ஸ்தாபனத்தை பற்றியும் வாக்காளர்கள் மத்தியில் பரந்த அதிருப்தி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் 55 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான வாக்களிப்பு வீதமான 75-80 வீதத்திலும் பார்கக் மிகவும் குறைவானதாக இருப்பதோடு, இது 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையில் வெளியான பெறுபேறுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். சற்றே மூன்று மாதத்திற்கு முன்பு, ஏப்பிரல் 2ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 76 வீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

இந்த வீழ்ச்சி, எந்தவொரு பிரதான கட்சியும் வாக்களிப்பை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள்விடுத்தன் விளைவு அல்ல. உண்மையில், கட்சிகளும் ஊடகங்களும் மக்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்தி வந்தன. தேர்தல் தினத்தன்று டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், "வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று நாட்டுக்காக உங்கள் சிறப்பான தேர்வை வெளிப்படுத்துங்கள்," என அழைப்புவிடுத்திருந்தது. இல்லாவிடில் "பெரும் செலவிலான இந்த நடவடிக்கையின் பெறுபேறுகள் பெறுமதியற்றதாகவும் மற்றும் எந்தவொன்றுக்கும் பயனற்றதாகவும் இருக்கும்," என அது வேதனைப்பட்டது.

இந்த வேண்டுகோள்களை புறக்கணித்த வாக்காளர்களில் சுமார் அரைவாசி பேர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றையிட்டு தமது பரந்த வெறுப்பை வெளிப்படுத்தினர். இந்த வீழ்ச்சியின் பின்னணியில், வாழ்ககைதரத்திலான தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள யுத்த நிறுத்தத்தின் எதிர்காலம் பற்றி வளர்ச்சிகண்டுவரும் நம்பிக்கையீனம் ஆகியவை இருந்துகொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மையை வென்றுள்ளது. ஆயினும், உயர்ந்த புறக்கணிப்பு வீதமானது, சுதந்திரக் கூட்டணியின் வாக்குகள் ஏப்பிரல் தேர்தலிலும் பார்க்க வீழ்ச்சிகண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. முழு வாக்காளர் தொகையுடன் ஒப்பிடும்போது, சுதந்திர முன்னணிக்கான வாக்குகள் சற்றே மூன்று மாதங்களுக்கு முன்னர் அது பெற்ற 45.6 வீதத்தில் இருந்து 28 வீதம் வரை குறைந்துள்ளன. சுந்திர முன்னணிக்கான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமை 2.87 மில்லியன் வரை 1.35 மில்லியனால் குறைந்துள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் வேறு சில சிறிய கட்சிகளையும் உள்ளடக்கிய சுதந்திர முன்னணி, வாக்காளர்களை கவருவதற்காக ஒரு தொகை மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை வழங்கி, ஏப்பிரல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. இவை, பத்தாயிரக் கணக்கான வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அரச ஊழியர்களுக்கு 70 வீத சம்பள உயர்வு, உர விலையை குறைப்பது உட்பட மற்றும் பல வாக்குறுதிகளை உள்ளடக்கியிருந்தன. இவற்றை அதிகாரத்திற்கு வந்து மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக கூறப்பட்டிருந்தன.

யூரியா உரத்திற்கு மீண்டும் விலை மானியம் வழங்கியதை தவிர வேறெந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நடவடிக்கை சிறு விவசாயிகளின் நிலையற்ற நிதி நிலைமையை மிக மிகச் சிறியளவில் மட்டுமே முன்னேற்றியது. கிராமப்புறங்களில் அதிருப்தி வளர்ச்சிகாண்பதை கண்ட விவசாய அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, மாகாணசபை தேர்தலுக்கு சற்றே மூன்று நாட்களுக்கு முன்னர், உரம் மீதான 15 வீத பெறுமதி சேர்ப்பு வரியை நீக்குவதாக பிரகடனம் செய்தார்.

அதிகரித்து வரும் விலைவாசி, வாழ்க்கைத் தரத்தை தொடர்ச்சியாக கீழறுக்கின்றது. கொழும்பு நுகர்வோர் சுட்டெண் ஏப்பிரலில் 3,471.3 வரை 45 புள்ளிகளால் அதிகரித்ததுடன், பின்னர் மே மாதம் மேலும் 126.9 புள்ளிகளாலும், அதைத் தொடர்ந்து ஜூனில் 76.4 புள்ளிகளாலும் அதிகரித்துள்ளது. ஐக்கிய சுந்திர முன்னணி அரசாங்கம், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதன் பேரில், விலை உயர்வுக்கான காரணம் எதிர்க் கட்சியான ஐ.தே.மு வுக்கும் அரிசி வியாபாரிகளுக்கும் இடையிலான சதியென குற்றச்சாட்ட முனைகிறது.

மேலும் யுத்த நிறுத்தத்தின் எதிர்காலம் பற்றிய விரக்தியும், அக்கறையும் ஏற்பட்டுள்ளது. ஏப்பிரல் தேர்தல் முதல், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவர்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு குமாரதுங்க முயற்சித்த போதிலும், இந்த நகர்வு சுதந்திர முன்னணிக்குள் கூர்மையான உடன்பாடின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள் ஆபத்தான முட்டுச் சந்தியில் உள்ளது. இராணுவத்தினர் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழுவை தமது காரியாளர்களை கொல்வதற்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய விடுதலைப் புலிகள் மீண்டும் மோதல் வெடிப்பதையிட்டு எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தமை, பாராளுமன்ற அமைப்புக்களையிட்டு பரந்த எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. வாக்களிப்பு வீத வீழ்ச்சி பற்றிய ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், "மக்கள் உண்மையாகவே எங்களுடைய அரசியல்வாதிகளையிட்டும், அண்மைய பாராளுமன்றத்தில் மக்களை அவமானப்படுத்தும் வகையிலான அவர்களின் அருவருப்பான மற்றும் வெறித்தனமான நடத்தையையிட்டும் அதிகரித்தளவில் அதிருப்தி அடைந்துள்ளார்கள். அத்துடன் மாகாண சபைகள், ஒன்றுமே செய்யாது, பொது நிதியின் பெரும்பகுதியை விழுங்கும் ஒட்டுண்ணியாக இருப்பது இன்னுமொரு காராணமாக இருக்கலாம்," என கருத்துத் தெரிவித்துள்ளது.

குமாரதுங்கவும் அவரது கூட்டணியினரும் உயர்ந்த பகிஷ்கரிப்பு வீதத்தைப் பற்றி கவலைப்படாமல், மாகாண சபைத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக பறைசாற்றிக்கொண்டனர். ஜனாதிபதி ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், "மீண்டும் எங்களை தெரிவு செய்வதில் மக்களின் நம்பிக்கையை மிகவும் பாராட்டுவதோடு, எல்லா நேரத்திலும் இதை கடைப்பிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்." "அண்மைய தேர்தல் முடிவுகள், பாராளுமன்றத்தில் எத்தகைய அதிகார சமநிலை இருந்தாலும், திரிபுபடுத்தப்பட்ட தேர்தல் முறையின் கீழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருப்பது தெளிவாகியுள்ளது.

தனது ஆட்சியின் ஜனநாயக விரோத பண்பை மூடிமறைப்பதன் பேரில், மூன்றில் ஒரு பகுதியிலும் குறைவான வாக்குகளை "முழுமையான அங்கீகாரம்" என்று குமாரதுங்க கூறிக்கொள்வது நகைப்புக்கிடமானதாகும். தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஐ.தே.மு அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த போதிலும், ஜனாதிபதி பெப்ரவரியில் அதை பதவி விலக்கினார். அவரது சொந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏப்பிரல் தேர்தலில் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறத் தவறியதுடன் ஒரு ஸ்திரமற்ற சிறுபான்மை பாராளுமன்றத்தில் தங்கியிருக்கின்றது.

குமாரதுங்க பாராளுமன்ற விதிகள் மற்றும் அரசியலமைப்பு தேவைகளையும் அதிகரித்தளவில் அப்பட்டமாக மீறிவருகின்றார். வழக்கமாக பராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கொள்கை அறிக்கையை அவர் தேசிய தொலைக் காட்சியில் வழங்குகிறார். இதன் மூலம் பேச்சின் மீதான விவாதத்தையும், வாக்கெடுப்பையும் தவிர்த்துக்கொள்கிறார். கடந்த மூன்று மாதங்களில் பாராளுமன்றம் நான்கு நாட்கள்தான் கூடியிருக்கின்றது. இது மாதத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை கூட வேண்டும் என்ற சட்டபூர்வமான வேண்டுகோளை மீறுவதாகும்.

சுதந்திர முன்னணி இப்பொழுது அரசியலமைப்பு மாற்றத்திற்கான திட்டங்களை மீண்டும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. இந்த திருத்தங்களுக்கான பிரதான காரணங்களில் ஒன்று, குமாரதுங்க தொடர்ந்தும் அரசாங்கத் தலைவராக இருப்பதை உறுதிசெய்வதாகும். தற்போதைய அரசியலமைப்பின்படி இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியும். ஆகையால் குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து மீண்டும் பாராளுமன்ற அமைப்பு முறைக்கு செல்வதன் மூலம், குமாரதுங்க பிரதமராக இருப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதி, "மக்கள் அங்கீகாரம்" என உரிமை கோருவதன் மூலம், அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் திருத்தங்களைக் கொண்டுவரும் அவரது முயற்சிகளை மூடி மறைக்கின்றார். எவ்வாறெனினும், எந்த ஒரு மாற்றத்திற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். குமாரதுங்கவுக்கும் சுதந்திர முன்னணிக்கும் சாதாரண பெரும்பான்மை கூட இல்லாத நிலையில், பாராளுமன்றத்தை ஒரு "அரசியலமைப்பு சபையாக" மாற்றி அதன் ஊடாக திருத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தோல்வி

மாகாண சபை தேர்தலில், சுதந்திர முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக மாற்றமடையவில்லை. ஐ.தே.மு ஏப்பிரலில் பெற்ற 2,930,894 வாக்குகள், கடந்த சனிக்கிழமை தேர்தலில் 1,091, 653 வாக்குகள் வரை 37.25 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், ஐ.தே.மு அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க, 25 வீதமான ஐ.தே.மு அங்கத்தவர்கள் கட்சியின் பிரச்சாரத்திற்கு உற்சாகமாக ஆதரவு வழங்கவில்லை என ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் ஏன் என்பதை அவர் விளக்கவில்லை.

ஆட்சியை இழந்தது முதல், சுதந்திர முன்னணியின் கொள்கைகளையோ அல்லது அது வாக்குறுதிகளை அமுல்படுத்தத் தவறியதை பற்றியோ எந்தவொரு சவாலும் விடுப்பதில் ஐ.தே.மு தோல்விகண்டுள்து. ஜனாதிபதியால் ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட போதிலும், சிறுபான்மை அரசாங்கத்தை கவிழ்ப்பதில் நாட்டம் இல்லை என ஐ.தே.மு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. அதன் பலவீனமான நிலை, நாட்டின் ஆழமடைந்துவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையைப் பற்றிய ஆளும் கும்பலின் பீதியை பிரதிபலிக்கின்றது.

தனியார்மயமாக்கம், அரசாங்க மானியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை குறைத்தல் உட்பட்ட, தொழில்களை ஒழித்துக்கட்டி வாழ்க்கை தரத்தை கடுமையாக கீழறுத்த தொடர்ச்சியான பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.தே.மு அரசாங்கமே பொறுப்பாகும் என வாக்காளர்கள் கருதுகிறார்கள். தேசிய மட்டத்தில் அல்லது மாகாண ரீதியில் மேலும் ஒரு ஐ.தே.மு நிர்வாகத்தை அமைப்பதால் எந்தவொரு முன்னேற்றமும் இருக்கும் என பெரும்பான்மையானவர்கள் நம்பவில்லை.

இந்த தேர்தலில் நன்மைகளைப் பெற்ற ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மாத்திரமேயாகும். சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக போட்டியிட்ட போதிலும், அதன் வேட்பாளர்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்றதுடன் கூடுதலான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளார்கள். ஜே.வி.பி, 1999 தேர்தலில் ஆறு மாகாண சபைகளிலும் வென்ற 22 ஆசனங்களைப் பார்க்கிலும் இம்முறை 72 மாகாண சபை ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுதந்திர முன்னணியின் மொத்த ஆசனத் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலாக ஜே.வி.பி பெற்றுள்ளது. 2 வேட்பாளர்கள் மட்டுமே ஆசனங்களை வெல்ல தவறியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள், ஐ.தே.மு அரசாங்கத்திற்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ஜே.வி.பி புகழ்பாடியுள்ளது. "மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தோர் தொகை குறைந்தது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை." "எதிர்க்கட்சியான ஐ.தே.க வும், பல பிரதான குழுக்களும் மற்றும் அவற்றை சூழ்ந்துகொண்டுள்ள ஊடகப் பட்டாளங்களும் இந்த மக்கள் தீர்ப்புக்கு முன்னால் மண்டியிட வேண்டும், என ஜே.வி.பி யின் அறிக்கை பிரகடனம் செய்துள்ளது.

ஜே.வி.பி யின் அறிக்கை தொடர்கின்றது: "இந்த தீர்ப்பை அவர்கள் தானாகவே ஏற்கத் தயார் இல்லையாயின், இந்த நாட்டின் தேசப் பற்றுள்ள மக்கள் சக்திகள் பலவந்தமாக அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு முன்னோடி நடவடிக்கை எடுக்கும்." இந்த பயமுறுத்தல் கலந்த எச்சரிக்கையானது, வெறுமனே வலதுசாரி ஐ.தே.க வுக்கு மட்டும் எதிரானதல்ல மாறாக அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் எதிர்ப்புக்கும் எதிரானதாகும். 1980களின் இறுதியில் ஜே.வி.பி யின் கொலைப் படை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிக்கு எதிரான ஜே.வி.பி யின் "தேசப்பற்று" பிரச்சாரத்தில் இணைய மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் கொன்றுதள்ளியது.

ஜே.வி.பி தேர்தலுக்கு பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது அழைப்பு விடுப்பதையும் எதிர்த்து, நாடு பூராகவும் சுவரொட்டி பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்தகைய நிர்வாகம் விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழ கோரிக்கைக்கு சரணடைவதற்கு சமனானதாகும் என ஆத்திரமூட்டும் வகையில் பிரகடனம் செய்துள்ளது. இந்த வெளிப்படையான இனவாதப்பிரச்சாரம் விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கக் கூடாது என குமாரதுங்கவை நெருக்கும் இந்த வெளிப்படையான பேரினவாத பிரச்சாரம், மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் அபாயத்தை மட்டுமே உக்கிரப்படுத்தும்.

Top of page