World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

BBC vindicated on charge that government "sexed-up" Iraq dossier

ஈராக் பற்றிய ஆவணத் தொகுப்பை அரசாங்கம் "கவர்ச்சிகரமானதாக ஆக்கியது" என பிபிசி கூறிய கருத்து நிரூபிக்கப்பட்டுவிட்டது

By Chris Marsden
16 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் இருந்திராத "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய அரசாங்கத்தின் பொய்களுக்கான அதன் வக்காலத்து வாங்கல்களுக்கு இடையில், பட்லர் பிரபுவினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை, சைப்ரசில் உள்ள பிரிட்டிஷ் இலக்குகளை நோக்கி 45 நிமிஷத்திற்குள் பேரழிவு ஆயுதங்களை ஈராக் ஏவ முடியும் என்ற கூற்றையும் ஆராய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியது.

தொழிற்கட்சி அரசாங்கம் போர் தொடுப்பதற்கு ஆதரவாக வாதிட முயற்சித்த, ஈராக் பற்றிய செப்டம்பர் 2002ல் தயாரிக்கப்பட்டிருந்த, உளவுத்துறை கோப்பில் காணப்பட்ட, பின்னர் இழிவிற்கு ஆளாகிய கூற்று பற்றி மிகச் சாதுர்யமான முறையில் பட்லர் நடந்து கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை காக்க வேண்டும் என்ற அக்கறையும், பாதுகாப்பு துறைகளின் ஒருமைப்பாட்டையும் காக்கவேண்டும் என்ற கவலையும் அவரிடத்தில் தெளிவாக உள்ளது; ஆயினும்கூட, ஏன் இத்தகைய இழிவிற்குட்பட்ட கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டன என்பதையும் விளக்கவேண்டிய கடமை அவருக்கு உள்ளது. எனவே ஈராக் 45 நிமிடத்தில் இரசாயன, உயிரியல் ஆயுதங்களை ஏவமுடியும் என்ற கூற்று, அது போர்க்கள ஆயுதங்களை பற்றியது எனவும் கூறப்பட்டிருந்தால் "இன்னும் துல்லியமாக" இருந்திருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். உளவுத்துறை கூட்டுக் குழு (Joint Intelligence Committee), தான் எதைப்பற்றி குறிப்பிட்டுள்ளது என்று விளக்காமல் இதை "கூறியிருக்கக் கூடாது" என்றும், மாறாக அது நான்கு முறை இதனைக் குறிப்பிட்டது "கண்ணை பறிக்கும் வகையிலும், சந்தேகத்திற்குட்பட்ட வகையிலும்" இது தோன்ற காரணமாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

போருக்குப் பின், 45 நிமிஷம் பற்றிய கூற்றை தயாரித்த "அறிவிப்புத் தொடர்" அதன் உண்மை "ஐயத்திற்குரியது" எனக் கூறிவிட்டது; இது அதனை "மதிப்பீட்டு முறையில் பொதுவாக காணப்படாத வகையிலானதாக" செய்துவிட்டது.

இத்தகைய நேர்த்தியான, மிக சாமர்த்தியமான பகுதிகளுக்கு விடையிறுக்கும் வகையில், கிரெக் டைக்கும், ஆண்ட்ரூ ஜில்லிகனும், செப்டம்பர் 2002 ஆவணத் தொகுப்பு கவர்ச்சியாக்கப்பட்டு இருந்தது என்று BBC "Today" நிகழ்ச்சியில் கூறப்பட்டது நிரூபணமாகிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

"Today" நிகழ்ச்சியின் நிருபரான ஜில்லிகன், BBC இன் இயக்குனர்-தலைவரான டைக், மற்றும் BBC இன் தலைவர் Gavyn Davies ஆகியோர், அரசாங்கம் ஒரு பழிவாங்கும் வேட்டையை தொடக்கி, ஜில்லிகனின் கருத்திற்கு ஆதாரமான, தலைமை ஆயுத ஆய்வாளர் டாக்டர் டேவிட் கெல்லி பெயரை வெளியிட்டு, அவர்களை ராஜிநாமா செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. கெல்லியின் மரணத்திற்குப் பிறகு, அதையொட்டி ஹட்டன் பிரபுவினுடைய விசாரணை நடந்து, அது அரசாங்கத்தை "ஒருவேளை தவறாக இருக்கக்கூடும்" என்று தெரிந்தே அதைச் சேர்த்திருக்கலாம் என்ற ஜில்லிகன், ஒரு காலை நிகழ்ச்சியில் தன்னைடைய அறிக்கையில் எழுதப்படாத, ஆனால் வாய்மொழியினால் சாட்டியிருந்த குற்றத்திலிருந்து அரசாங்கத்தை விடுவித்தது.

இப்பொழுது செய்தி ஊடகத்திற்கு ஜில்லிகன் கூறியுள்ளதாவது: "பட்லர் பிரபுவின் அறிக்கை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நான் ஏற்கனவே கூறியிருந்த, ஆனால் அரசாங்கம் மறுத்திருந்த, பல விஷயங்களை ஏற்றுள்ளது. வேண்டுமேன்றே வனப்புரையாகவும், தவறான நோக்கத்துடனும் இதை அரசாங்கம் செய்ததற்கான சான்றுகள் இல்லை என்று பட்லர் கூறியுள்ளபோதிலும், உண்மையைப் பற்றி அவர் கண்டறிந்துள்ள பலசான்றுகள் அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கவேண்டும் எனத் தெளிவாக்கியுள்ளன...

"பட்லர் பிரபு, அது சுமக்கக் கூடியதை விட அதிக பொறுப்பை உளவுத்துறையிடம் வைத்துவிட்டதாகவும், உளவுக் கூட்டுக் குழுவின் நடுநிலைமையும், பொதுநிலையும் கோப்பு விவகாரத்தால் பெரும் பாதிப்பிற்குட்பட்டுவிட்டதாகவும், இக்குழுவின் தலைவர் எச்செல்வாக்கிற்கும் கட்டுப்படாதவராக இருத்தல் வேண்டும் என்றும் கூறியுள்ளார். உளவுத்துறை அறிக்கையின் தரம், அளவு, உறுதிப்பாடு இவை பற்றி மந்திரிகள் பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் தவறான முறையில் கூறிவிட்டனர் என்றும் பட்லர் தெரிவித்துள்ளார்.

"முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகவும், BBC க்கும் அரசாங்கத்திற்கும் இடையே முக்கியமான பிரச்சினைக்கு காரணமாக இருந்த 45 நிமிஷ விவகாரம் இத்தகைய வடிவத்தை பெற்றிருக்கக் கூடாது என்றும் அதனால் "அதன் கண்ணைப் பறிக்கும் தன்மையினால் அது சேர்க்கப் பட்டுவிட்டது என்ற சந்தேகம்" வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்."

"சானல் நான்கு செய்திக்கு" டைக் கூறியதாவது: "தொடக்கத்தையே ஆராய்ந்தீர்கள் என்றால், டாக்டர் கெல்லி, ஆண்ட்ரூ ஜில்லிகனிடம் இந்த ஆவணம் கவர்ச்சி ஆக்கப்பட்டு இருந்திருந்தது என்றும், கவர்ச்சிகரமானதாக ஆக்குதலுக்கு இது ஒரு உதாரணம் என்றும், 45 நிமிஷம் பற்றிய கூற்று அத்தகைய கருத்திற்கு மிக முக்கியமான உதாரணம் என்று தெரிவித்திருந்தார்."

"இப்பொழுது, இன்று நமக்கு ... 45 நிமிஷக் கூற்று ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட தடுப்புகள் இன்றி இணைக்கப்பட்டிருக்க முடியாது என்றும், முந்தைய ஆவணங்களில் இருந்த அவை பின்னர் மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பொழுது எழும் கேள்வி அத்தடுப்புக்களை கொண்டுவந்தது யார்? பட்லர் நமக்குக் கூறவில்லை: வேறு எவரும் அதைக் கூறவும் தயாராக இல்லை. BBC, டாக்டர் கெல்லியினுடைய கவலைகள், குற்றச்சாட்டுக்களைப் பற்றி தகவல் கொடுத்தது முற்றிலும் சரியேயாகும்."

"எனவேதான் நான் இப்பொழுது BBC யில் இல்லை, எனவேதான் கவின் டேவிஸ் இன்று BBC யில் இல்லை; அந்த முடிவை எப்பொழுதும் காப்பதற்கு நான் தயாராக உள்ளேன்."

செப்டம்பர் 2002 ஆவணத் தொகுப்பின் முக்கிய மையஸ்தானத்தை 45 நிமிஷக் கூற்று கொண்டிருந்தது; இது ஒரே ஒரு ஆதாரத்தைத்தான் கொண்டிருந்து, வரைவு தயாரிப்பில் அதன் சரியான தன்மை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தபோதிலும் அது சேர்க்கப்பட்டது."

செப்டம்பர் 16ம் தேதி தயாரிக்கப்பட்ட வரைவு, ஒரு நிர்வாகச் சுருக்கக் கருத்தைக் கொண்டிருந்தது; அதில் ஈராக்கிடம் "இரசாயன, உயிரியில் ஆயுதங்கள் தயாரிக்க இராணுவத் திட்டம் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்த ஆணை கிடைத்ததும் அவை 45 நிமிஷத்திற்குள் தயாரித்து உபயோகப்படுத்தக் கூடும் " என்று அரசாங்கத்தை தீர்மானிக்க வைத்தது.

"ஈராக்கிய இராணுவம் ஒரு கட்டளை வந்து 45 நிமிஷத்திற்குள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களை உபயோகப்படுத்தலாம்." என முக்கிய ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் 17, மின்னஞ்சல் "இது ஒற்றை ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சற்று வலுவான கருத்து என்பதைக் காட்டிலும், "உளவுத்துறை கருத்துரைக்கிறது என்று கூறமுடியும்....." என வார்த்தையை குறிப்பிட்டதுடன், புலனாய்வு கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள் இத்தகைய வற்புறுத்தலின் உறுதியான தன்மையைப் பற்றி வினா எழுப்பினர்.

இதற்கு மாறுபட்ட முறையில், பிரதம மந்திரி டோனி பிளேயரின் செய்தித் தொடர்புகள் இயக்குனரான அலெஸ்டர் காம்ப்பெல், JIC தலைவரான கோப்பின் பெயரளவு "தயாரிப்பாளர்" ஆன ஜோன் ஸ்கார்லெட்டுக்கு, "இருக்கலாம்" என்று முக்கிய ஆவணத்தில் இருக்கும் சொல், "சுருக்கத்தில் இருப்பதைவிட பலவீனமாக உள்ளது" என்ற ஆலோசனையை கூறினார். ஸ்கார்லெட் இதற்கு பதில் அளிக்கும் வகையில் முக்கிய ஆவணத்தில் சொல்லாட்சி "இறுக்கமாகப் போடப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.

ஆவணத் தொகுப்பு இறுதி வடிவத்தில் செப்டம்பர் 24, 2002 அன்று வெளியிடப்பட்டது; இதற்கு ஒரு முன்னுரை கொடுத்திருந்த பிளேயர் 45 நிமிஷக் கூற்று பற்றி ஒரு குவிப்பைக் காட்டினார்; இந்த உறுதிப்பாட்டைத்தான் பின்னர் பிளேயர் பாராளுமன்றத்தில் மீண்டும் கூறுகிறார்.

2003 மார்ச் மாதம், இந்த ஆவணத் தொகுப்பை தயாரிக்கும் பணியில் இருந்த கெல்லி, ஜில்லிகனுக்கு நிரலில் இல்லாத பேட்டி ஒன்றைக் கொடுத்தார்; அது மே 29 அறிக்கையில் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் கோப்பை பற்றி குறிப்பிடத்தக்க வகையில் அதிருப்தி உள்ளது என்றும், அதனை மேலும் "கவர்ச்சிகரமானதாக" ஆக்கியதற்கு காம்ப்பெல் காரணம் என்றும் பெயர்குறிப்பிடா தகவல் கூறியது என்ற செய்தி வெளிவந்ததற்கு ஆதாரமாக ஆனது.

அதற்கு எதிர்த் தாக்குதலாக அரசாங்கம் BBC மீது தாக்குதல் நடாத்தியது; அது பொய்கூறுவதாகக் கூறி, ஜில்லிகனின் ஆதாரம் என்ன என்று வெளியிடச் சொல்லி வற்புறுத்தியது. அரசாங்கத்தால் கெல்லிதான், கில்லிகனுடைய அறிக்கைக்கு ஆதாரம் என்று வெளியிடப்பட்டு, இரண்டு பாராளுமன்றக் குழுக்கள் விசாரணையில் அவர் சாட்சியம் கூற வற்புறுத்தப்பட்டார். 2003 ஜூலை 18ல் கெல்லி அவருடைய வீட்டருகில் மரங்கள் இருந்த பகுதிகளில் இறந்த நிலையில் கிடந்தார்.

போர் பற்றிய விசாரணையை நிராகரித்து, அரசாங்கம் மிகக் குறைவான வரம்பிற்குட்பட்ட கெல்லி மரணம் பற்றிய விசாரணை ஒன்றிற்கு உத்தரவு இட்டது; இதன் நோக்கம் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாதது பற்றிய கவனத்தை திசை திருப்புதல் ஆகும் மற்றும் அதற்கும் மேலாக BBC- ஆல் தவறாக செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் காட்டுதலாகும்.

ஜனவரி மாதம் ஹட்டனுடைய அறிக்கை ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாதது இதற்கு தொடர்பற்றது என்று அறிவித்தது. பிளேயர் தெரிந்துதான் தவறான உளவுத்துறை கூற்றுக்களை பயன்படுத்தினாரா என்பதுதான் முக்கியம் என்றும்; அதற்கான சான்றுகளை அவர் காணவில்லை என்றும்; ஆனால் அத்தகைய எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தது என ஜில்லிகன் சந்தேகம் கொண்டிருந்தார் என்பது, ஈராக் 45 நிமிஷத்தில் பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் "அநேகமாய்" அறிந்திருந்தது என்று குறிப்பாக ஜில்லிகன் கூறிய கூற்றால் தெரிகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

M16 இன் தலைவர் ஸ்கார்லெட், சேர் ரிச்சார்ட் டியர்லவ் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஜெப் ஹூன் ஆகியோர் ஹட்டன் விசாரணையில், 45 நிமிஷக் கூற்று "போர்க்கள பீரங்கிக் குண்டுகள், சிறிய தன்மை ஆயுதங்களைத்தான்" குறிக்கின்றன எனக் கூறிய பின்னரும், ஹட்டன் அறிக்கை வேறுவிதமாக இருந்தது.

அக்கால கட்டத்தில் ஜில்லிகன் கூறியிருந்தார்: "இவ்வளவும் இரண்டு பிழையான சொற்றொடர்கள், ஒரு விடிகாலைப் பேட்டியில் இருந்து வந்தன, என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது, அச்சொற்கள் மீண்டும் கூறப்படவில்லை, ஒருவேளை அரசாங்கத்திற்கு 'தெரிந்திருக்கலாம்' என்று நான் கூறியது 45 நிமிஷம் என்ற குறிப்பு என்பது தவறாக இருக்கலாம் என்பதாகும். இதை டேவிட் கெல்லி கூறியதாகத் தெரிவித்தேன்; உண்மையில் அது என்னுடைய அனுமானம்தான்."

அவர் "45 நிமிஷக் கூற்று பற்றிய கருத்து உண்மையில் உளவுத்துறையை அடிப்படையாகக் கொண்டது" என்பதை "வெளிப்படையாகத் தெளிவாக்கியிருந்தார்". திரும்பவும் கூறுகிறேன் அரசாங்கம் திரித்துக் கூறுகிறது என்று நான் கூறவில்லை; அது மிகைப்படுத்திக் கூறுகிறது என்றுதான் நான் பலமுறையும் கூறினேன். அந்நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன், அதில் மாறுதலுக்கு ஏதும் இல்லை.

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 45 நிமிஷம் பற்றிய கூற்றுக்கு ஆதாரம் என்னும் ஈராக்கிய தேசிய உடன்பாட்டிற்காக (INA) பணியாற்றும் ஒரு ஒற்றரான Lieutenant Colonel al Dabbagh தான் என்பதும், அந்த அமைப்பு MI6ஆல் முதல் வளைகுடாப் போருக்குப்பின் அமைக்கப்பட்டது என்பதும், பின்னர் CIA இன் ஆதரவு அதற்கு கிடைத்தது என்பதும், CIA சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்கு இந்தப் போர், வகை செய்யும் என்ற திட்டத்தை கொண்டிருந்தது என்பதும் தெரிய வந்தன.

Top of page