World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A travesty of democracy in Illinois

Democrats conspire against voters in bid to remove SEP from ballot

இல்லினோய்சில் ஜனநாயகத்தின் ஒரு கேலிக்கூத்து

SEP யை வாக்குப்பதிவிலிருந்து நீக்க வாக்காளர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் சதி

By Jerry White and Elisa Brehm
16 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மையான அரசு செயல்பாட்டை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் இந்தவாரம் இல்லினோய்சில் உள்ள சேம்ப்பைன் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற கேலிக்கூத்தான ஆதாரங்கள் மூலம் தெரிந்துகொள்ளமுடியும். கடந்த பல நாட்களுக்கு மேலாக மாநில மற்றும் உள்ளூர் ஜனநாயகக் கட்சி அலுவலர்கள் மாநில சட்டசபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வேட்பாளர் ரொம் மக்கமனை கலந்துகொள்ள விடாது தடுப்பதற்காக பொய்களையும், இடையூறுகளையும், மிரட்டல்களையும் கொடுத்து வந்தனர்.

சென்ற மாதம் ரொம் மக்கமனும் அவரது ஆதரவாளர்களும் 2,003 பேர்களின் கையெழுத்தை தாக்கல் செய்தனர். 103 வது மாவட்டத்தில் போட்டியிடும் தகுதியைப்பெற ஒரு வேட்பாளருக்கு 1325 வாக்காளர்கள் கையெழுத்திட்டால் போதுமானதாகும். இந்த மாவட்டத்தில் இரட்டை நகரங்களான சேம்பைன் மற்றும் ஹர்பனா உள்ளடங்கியுள்ளது. ஒருவாரத்திற்குள் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் ரொம் மக்கமனுக்காக தாக்கல் செய்யப்பட்ட கையெழுத்துக்களில் பாதிக்கு மேற்பட்டவற்றை ஆட்சேபித்து மனுக்களை தாக்கல் செய்தனர். ஜூலை 6 ல் கேம்பைன் கவுண்டி தேர்தல் வாரியம் ஆட்சேபிக்கப்பட்ட கையெழுத்துக்களை ஒவ்வொன்றாக ஆராயுமாறு கட்டளையிட்டது.

1,003 ஆட்சேபிக்கப்பட்ட கையெழுத்துக்களை தேர்தல் வாரிய ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ந்து ஒருவாரத்திற்கு பின்னர் ஏறத்தாழ 700 வாக்காளர்களை அடையாளப்படுத்தியுள்ளனர். அதில் மிகப்பெரும்பாலான பெயர்கள் SEP ன் மனுவில் இடம்பெற்றுள்ள கையெழுத்தை ஒட்டி வந்தன. அப்படியிருந்தும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் 611 கையெழுத்துக்களுக்கு தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பிக்கொண்டு இருந்ததோடு, அதில் 71 கையெழுத்துக்களை மட்டுமே ஏற்றக்கொண்டனர்.

இந்தவார நிகழ்ச்சிகள் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி செயல்பாட்டை அம்பலப்படுத்துகின்றன. புஷ் நிர்வாகத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இந்தக் கட்சி, 2000 ம் ஆண்டுத் தேர்தல்களில் புளோரிடாவில் குடியரசுக் கட்சிக்காரர்கள் கையாண்ட அதே ஜனநாயக விரோத முரட்டுத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அப்போது, குடியரசுக்கட்சிக்காரர்கள் வாக்காளர்களின் உரிமையை பறித்து அந்த தேர்தலையே திருடிச் சென்றனர். ஜனநாயகக் கட்சிக்காரர்களை பொறுத்தவரை போர், சமூக சமத்துவமின்மை மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கைத் தரத்தைப்பற்றி எந்தவித உள்ளார்வமிக்க விவாதத்தையும் நடத்தமாட்டார்கள்.

தேர்தல் வாரியம் பின்பற்றிவரும் நடைமுறை விதிகளின் கீழ், உள்ளூர் தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் காணப்படும் கையெழுத்தோடு ஆட்சேபனைக்குரிய கையெழுத்தை சரிபார்ப்பார். அப்போது SEP மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஒவ்வொரு பிரதிநிதி கூடவே உடனிருப்பர். இருகட்சியும் இணக்கம் தெரிவித்தால் பதிவு செய்த வாக்கு ஆட்சேபனை தள்ளுபடி செய்யப்படும். கையெழுத்திட்டவர் பதிவு செய்துகொள்ளவில்லை என்று இருதரப்பும் உடன்பட்டால் இந்த ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படும். இறுதியாக, தீர்மானத்திற்கு இரண்டு கட்சிகளும் சம்மதிக்கவில்லையென்றால் ''எந்த உடன்பாடுமில்லை'' என்று அலுவலர் பதிவு செய்வார்.

ஜனநாயகக் கட்சி அனுப்பியுள்ள போலி நபர்களும் அதிகாரிகளும், கையெழுத்துக்களை ''சோதித்து'' உண்மையை கண்டுபிடிக்க அனுப்பப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. 10 மாறுபட்ட மனு சோதனையாளர்களில் ஒருவர் உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாவர். தெளிவாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் கையெழுத்தை அவர் சிரித்துக்கொண்டே ஆட்சேபித்தார். சவ விசாரணை அதிகாரி பதவிக்கு முயன்று கொண்டிருக்கும் உள்ளூர் ஜனநாயகக் கட்சி அமைப்பின் தலைவர் ஒருவர், ''கம்யூனிஸ்ட்டுகளை வாக்குப்பதிவில் கலந்துகொள்ளாமல் தடுப்பதில்'' தமக்கு பிரச்சனை எதுவுமில்லை என்றும் கூறினார். அப்போது பல்கலைக்கழக தொழில்சார்ந்த ஒரு நிர்வாகியும் கூடவே இருந்தார்.

வாக்காளர் பட்டியலை சோதனையிடுவதில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவியாக வந்த சில ஓய்வுபெற்ற ஊழியர்கள்தான் உண்மையிலேயே இதுபற்றி அக்கறை எடுத்துக்கொண்டனர். அவர்களிடம் எந்தக் கையெழுத்துக்களை ஆட்சேபிக்கிறார்கள் என்ற விபரம் கூட முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. (அதில் ஒருவர், பசுமைக்கட்சிக்காரர்கள் அல்லது நாடேரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்துக் கொண்டிருப்பதாக கருதினார்)

பெரும்பாலும் இந்தக் காரணத்தினால்தான் ஜூலை 12 திங்களன்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சோதனையாளர்கள் 218 ஆட்சேபணைகளில் 54 மட்டும் சரியான கையெழுத்துக்கள் என்று ஒப்புக்கொண்டனர். இதுகூட ஜனநாயகக் கட்சி தலைவர்களிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்திவிட்டது. இரண்டாவது நாள் உடனடியாக அனுப்பப்பட்ட ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி சோதனை ஊழியரும், தவறு என்று தெளிவாகத் தெரிந்தாலும் ஆட்சேபனைகள் அத்தனையையும் சரியென்று சாதிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு அனுப்பப்பட்டனர்.

''வழிகாட்டி நெறிமுறை'' என்று தலைப்பிடப்பட்ட அரைக் காகிதத் துண்டுடன் ஜனநாயகக் கட்சியின் ஒவ்வொரு சோதனையாளரும் அங்கு வந்தனர். அதில் அடங்கியிருந்த கட்டளைகள் வருமாறு:-

1) நீங்கள் தேர்தல் அலுவலக ஊழியர்களுக்கு பக்கத்தில் உட்கார வேண்டும்.

2) யார் கையெழுத்திட்டார்கள் என்று ஊழியர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவதுடன், வெறுமனே கவனித்துக்கொண்டிருந்தால் போதும்.

3) ஊழியர் வாக்காளர் அடையாள அட்டையை கண்டுபிடித்துவிட்டால், அல்லது கண்டுபிடிக்காவிட்டால் அவர்கள் ஒரு முடிவு செய்து ஆட்சேபனையை ஏற்றுக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஆட்சேபனையில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று பொருள். இல்லையென்றால் அவர்கள் நமது ஆட்சேபனையை ''தள்ளுபடி'' செய்வார்கள். அப்படி என்றால் நாம் தோற்றுவிட்டோம் என்று பொருள்.

4) ஒவ்வொரு முறையும் நமது ஆட்சேபனைகளை அவர்கள் ''தள்ளுபடி'' செய்கையில், பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதற்காக அந்த முடிவை "ஆட்சேபிக்கின்றோம்" என்று கட்டாயம் அவர்கள் அறியத்தர வேண்டும். நீங்கள் அவர்களின் முடிவை ஆட்சேபிப்பதாகவும் அவர்கள் உங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்யுமாறும் நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும் என்பது மிக முக்கியமானது.

5) உங்களுக்கு தந்திருக்கின்ற குறிப்பு புத்தகத்தில் ஒவ்வொரு வரிக்கு பக்கத்திலும், நமது ஆட்சேபனைகள் ''ஏற்றுக்கொள்ளப்பட்டதா'' அல்லது ''இரத்து செய்யப்பட்டதா'' என்பதை குறித்து வைக்கவேண்டும்.

இப்படி தெளிவாக தமது கட்சிக்காரர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறது. ---அதில் உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட வாக்காளர் பதிவு செய்யப்பட்டிருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கான கட்டளைக்கு ஒரு வார்த்தை கூட இல்லை--- இதனால், செவ்வாய்கிழமையன்று முதலில் சோதனை செய்வதற்கு சில சங்கடங்கள் எழுந்தன. ஒரு பதிவு செய்யப்பட்ட தாதியராக உள்ள ஒரு பெண், துவக்கத்தில் மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின் மீது ஓரளவிற்கு அனுதாபத்துடன் நடந்து கொண்டார். அவர் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்ட எட்டு ஆட்சேபனைகளில் மூன்றை தள்ளுபடி செய்ய அனுமதித்தார்.

''கிறிஸ்டின்'' என்ற பெயருடைய ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு வந்ததன் பின்னர் அவரது போக்கே மாறிவிட்டது. அதன் பின்னர் பல சோதனையாளர்கள் தாங்கள் இதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்தனர். அந்த நேரத்திலிருந்து அந்தப் பெண் ஒவ்வொரு கையெழுத்தையும் கம்பியூட்டர் திரையைக் கூட பார்க்காமல் ''நான் ஆட்சேபிக்கிறேன்'' என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

பின்னர் இந்தக் "கிறிஸ்டின்", நவம்பரில் நடக்கும் தேர்தலில் மக்காமனை எதிர்த்துப் போட்டியிடும் மாநில சட்டசபை ஜனநாயகக் கட்சி உறுப்பினரான நொமி ஜக்கோப்சனின் உதவியாளர் கிறிஸ்டன் பார் (Kristen Bauer) ஆக ஆனார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் மனுக்களை முன்னர் பிரதி எடுத்த மற்றும் சரிபார்த்த இரண்டு ஜனநாயகக் கட்சி பணியாளர்கள் லிஸ் பிரெளன் மற்றும் பிரெண்டன் ஹோஸ்டெட்லர் போன்று இந்த கிறிஸ்டினும் அரசு ஊழியர் ஆவார். ஆகவே, இவரும் பிரெளன் மற்றும் ஹோஸ்டெட்லர் போன்று பணி நேரத்தில் ஒரு தரப்பு அரசியல் நடவடிக்கையில் பங்கெடுத்துக் கொண்டிருப்பாராயின், அது இல்லினோய்ஸ் அரசாங்க ஒழுக்க சட்டத்திற்கும், மாநில தேர்தல் நெறிமுறைகளுக்கும் விரோதமானது ஆகும்.

அதற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி பரிசோதகரும் அதே இடையூறு நடைமுறைகளை பின்பற்றினர். அடுத்த இரண்டு நாட்கள் 15 மணிநேரம் சோதனையிட்ட பின்னர் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அவர்களது 785 ஆட்சேபனைகளில் 17 கையெழுத்துக்களை மட்டுமே ஒப்புக்கொண்டனர்.

எனவே, இதில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பொய் சொல்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. தற்செயலாக அந்த தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் மனுவில் உள்ள கையெழுத்துக்களை தேடும்போது அது தன்னுடைய கையெழுத்துத்தான் என்பதை கண்டுபிடித்ததோடு, ''இது நான்தான்'' என்று அந்த பெண் ஊழியர் சொன்னார். அத்துடன், மக்காமனின் மனுவில் தான் கையெழுத்திட்டிருப்பதையும் புரிந்து கொண்டார். அப்படியிருந்தும், அப்போது ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆய்வாளராக கலந்து கொண்ட கவுண்டி வாரிய உறுப்பினரான லான்ஜென்ஹெய்ம் என்பவர் ''நான் இதனை ஆட்சேபிக்கிறேன் அது சரியான முகவரியல்ல'' என்று கூறினார். அப்போது அவருக்கு முன்னாலேயே அமர்ந்திருக்கும் அந்த பெண் அலுவலக ஊழியரை சுட்டிக்காட்டி, எப்படி இதனை ஆட்சேபிக்கமுடியும் என்று கேட்டபோது, அவர் அசட்டுச் சிரிப்புடன் ''நான் ஏன்? ஆட்சேபிக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமுடியாது. எனக்கு மேலிடக் கட்டளையிருக்கிறது'' என்று கூறினார்.

இதே போன்று தன்னுடைய சொந்த முன்மொழிவு மனு மீது மக்காமன் இட்டிருந்த கையெழுத்தையும் சிடுமூஞ்சித்தனத்துடன் லான்ஜென்ஹெய்ம் நிராகரித்தார். SEP யின் பிரதிநிதி அந்தக் குறிப்பிட்ட வரியில் மக்காமனின் பெயரும் முகவரியும் சரியாக எழுதப்பட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், சட்டத்தின்படி, மாவட்டம் முழுவதிலும் சுற்றுக்கு விடப்பட்ட ஒவ்வொரு மனுவிலும் அது அச்சிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய போது லாங்ஜென்ஹெய்ம் மீண்டும் அசட்டு சிரிப்பு சிரித்தார்.

அதற்குப்பின்னர் மற்றொரு ஜனநாயகக் கட்சி நிர்வாகி வந்தபோது அவருக்கு லாங்ஜென்ஹெய்ம் கொடுத்த கட்டளையில், ''என்ன நடந்தாலும் ஆட்சேபணையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும், ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும்வரை விடக்கூடாது, ஒரேயொரு கையெழுத்தைத்தான் நான் அனுமதித்தேன்'' என்றார்.

இல்லினோய்சில் உள்ள முன்னணி ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் கட்டளைப்படிதான் மக்காமனை தேர்தலில் கலந்துகொள்ள விடாது தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதற்கு ஆதாரங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. மாநில சட்டசபை சபாநாயகரது ஊழியர் ஒருவரான மைக் மடிகன் என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சபாநாயகர் இல்லினோய் மாநிலத்தில் மிகுந்த செல்வாக்குள்ள ஜனநாயகக் கட்சித் தலைவராவர். மற்றொருவர் மாநில சட்டசபை உறுப்பினர் ஜாக்கோப்சனின் மாநில பிரச்சார மேலாளர் ஆவார். WSWS நிருபர் ஒருவர் ஜாக்கோப்சன் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு இத்தகைய அருவருக்கத்தக்க வகையில், மக்காமன்னை தேர்தலில் போட்டியிலிருந்து விலக்கி வைக்கும் தந்திரங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டதற்கு அவரது அலுவலகத்திலிருந்து பதில் எதுவும் இல்லை.

இல்லினோய்ஸ் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பெரிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இருகட்சி அரசியல் ஏகபோகத்திற்காக எந்த சவாலையும் எதிர்ப்பதற்கு தயாராகிவிட்டார்கள். அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் நாடேர் சேகரித்துள்ள 35,000 ம் வாக்காளர்கள் கையெழுத்துக்களில் 20,000 கையெழுத்துக்களை தள்ளுபடி செய்வதற்கும் முயன்று வருகிறார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் தகுதிக்கான போராட்டத்தின் அடுத்த கட்டம் தேர்தல் அலுவலக பூர்வாங்க விசாரணை முடிவில் அடங்கியிருக்கிறது. இதுவரை 688 வாக்காளர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருகின்றனர். இது மிக உயர்ந்த சதவீதமான செல்லும்படியான வாக்குகளை நிரூபித்துள்ளது. ஆகவே, SEP இன்னும் 258 ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்துவிட்டால், அதற்கு வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் தகுதி கிடைத்துவிடும்.

நாங்கள் மீண்டும் WSWS வாசகர்களையும் ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், கேம்பைன் கவுண்டி வாரியத்தின் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்து மக்காமனை வாக்குப்பதிவில் கலந்துகொள்ள செய்வதற்கான தகுதியை வழங்க வேண்டும் என்பதாகும். ஆகவே, தயவுசெய்து அனைத்து மின்னஞ்சல்களையும் இந்த விலாசத்திற்கு அனுப்பவும்: mail@champaigncountyclerk.com

தயவு செய்து இதன் மின்னஞ்சல் நகலை உலக சோசலிச வலைத்தளத்திற்கு அனுப்பவும்.editor@wsws.org

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிதி உதவியை வழங்குங்கள் donate online

See Also :

மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின் மீது ஜனநாகக் கட்சி தாக்குதலை நிறுத்து!
SEP வேட்பாளர் ''ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் சேர்த்துக்கொள்!

இல்லினோய் வாக்கு சீட்டில் கலந்து கொள்ள முடியாமல் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை தடுக்க ஜனநாயகக் கட்சி முயற்சி

Illinois- மாநில சபை பிரச்சாரத்திற்கான தகுதிபெற SEP மனு தாக்கல்

Top of page