World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Berger affair: Kerry campaign cowers before Republican provocation

பேர்கர் விவகாரம்: குடியரசுக் கட்சி ஆத்திரமூட்டலுக்கு முன் கெர்ரி பிரச்சாரம் கூனிக்குறுகியது

By Patrick Martin
22 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

கிளின்டன் நிர்வாகத்தில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றவந்த சாமுவேல் (Sandy) பேர்கர், கெர்ரிக்கு முறைப்படி அமையாத பிரச்சார ஆலோசகராக பணியாற்றி வந்ததை திங்களன்று இராஜிநாமா செய்தார், இரகசிய ஆவணங்களை தவறான முறையில் கையாண்டு வந்ததற்காக அவர் FBI புலன்விசாரணைக்கு ஆளாகியுள்ளதாக புஷ் நிர்வாகம் இரகசிய தகவலை ஊடகங்களுக்கு கசியவிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் அவர் இவ்வாறு செய்தார்.

எந்தக் குற்றமும் பேர்கர் மீது சுமத்தப்படவில்லை, சென்ற கோடைகாலத்தில் அந்தத் தவறு நடந்ததாக கூறப்படுகிறது, சென்ற அக்டோபர் முதல் FBI விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, ஆனால் திடீரென்று ஊடகங்கள் நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்களாலும் புஷ் நிர்வாக பேச்சாளர்களாலும் மடைதிறந்த வெள்ளம்போல் வெளிப்படுகின்ற விமர்சனங்களை 24- மணி நேரமும் வெளியிடத்தொடங்கியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களில் பரபரப்பான அம்சங்களும் அடங்கியுள்ளன. கிளின்டன் நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்த தகவல்களை 9/11 விசாரணை கமிஷனில் இருந்து மறைத்தார் மற்றும் கெர்ரி பிரச்சாரத்திற்கு அரசாங்க இரகசியங்களை பேர்கர் தந்தார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இதில், வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியான அவர் இரகசியத்தகவல்களை தேசிய ஆவணக்காப்பகத்திலிருந்து தனது காலுறைகளில் கடத்தினார் என்ற ஆதாரமற்ற கூற்றுக்களும் கூட இடம்பெற்றுள்ளன.

பேர்கர் புரிந்ததாகக்கூறப்படும் குற்றச்சாட்டின் உண்மையான கருப்பொருள் ஊடகங்கள் நடத்திய பிரச்சாரத்தின் தீவிரத்தன்மையோடு ஒப்பிடும்போது மிக அற்பமானதாகும். கிளின்டனின் முன்னாள் உதவியாளரான அவரை 9/11 விசாரணைக்கமிஷன் கோரிய தேசிய ஆவண காப்பகத்திலுள்ள கிளின்டன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு விஷயதானங்களை மறுஆய்வு செய்யுமாறு நியமிக்கப்பட்டார். அவர் ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2003-ல் தேசிய ஆவண காப்பகத்திற்குச் சென்று அங்கு சிறு குறிப்புக்களை எழுதிக்கொண்டார். பாதுகாப்பு விதிகளை மீறி அவர் அவற்றை ஆவணக்காப்பக ஊழியர்களுக்கு காட்டாமல் கொண்டு வந்துவிட்டார். லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை குண்டுவீசித்தாக்கும் முயற்சி முறியடிக்கும் விளைபயனாக, 1999 டிசம்பரில் கிளிண்டன் நிர்வாகம் மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கெதிரான முயற்சியின் படிப்பினையை ரிச்சார்ட் கிளார்க் தொகுத்துவைத்த நினைவு குறிப்புகளின் பல பிரதிகளை அவர் கடத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இப்படி அந்தக்குறிப்புக்கள் நீக்கப்பட்டது தற்செயலாக கவனக்குறைவாக நடந்துவிட்டதென்றும், ஆவணக்காப்பக ஊழியர்கள் அறிவிப்பு செய்ததும், பல பிரதிகளை திரும்ப கொடுத்துவிட்டதாகவும், அதில் ஒரு பிரதி தவறிவிட்டதென்றும் வெளிப்படையாகவே ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது என்றும் பேர்கர் குறிப்பிட்டிருந்தார். பேர்கரை விமர்சிப்பவர்கள் அவரது இந்த நடவடிக்கைகள் எப்படி 9/11 கமிஷன் பணிகளை பாதித்திருக்கக்கூடும் என்று விளக்கவில்லை, ஏனென்றால் கிளார்க்கினால் தயாரிக்கப்பட்ட மூலக் குறிப்பு பல பிரதிகளோடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது, விசாரணைக் கமிஷனுக்கான பேச்சாளர் ஒருவர், சம்மந்தப்பட்ட ஆவணங்கள் கமிஷனுக்கு கிடைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், அந்தக்குறிப்பு பயங்கரவாத தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக சீர்குலைத்ததுடன் சம்மந்தப்பட்டது---- 2001 செப்டம்பர் 11- க்கு முந்திய எட்டு மாதங்களில் புஷ் நிர்வாகம் செயல்பட்டதோடு குறிப்பாக ஒப்புநோக்கும் வகையில் மாறுபாடாக அது அமைந்திருக்கிறது.

9/11 கமிஷன் அறிக்கை வெளியிடப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், போஸ்டனில் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்- ஊடகங்களுக்கு இந்தத்தகவல் கசியவிட்ட நேரம்-----தெளிவாகவே ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் நடவடிக்கையை கோடிட்டுகாட்டுவதாக உள்ளது. அந்த கசியவிட்ட முறையும் அவ்வாறு அமைந்திருக்கிறது: தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத நீதித்துறை அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை தேர்தெடுக்கப்பட்ட சில நிருபர்களுக்கு தந்திருக்கிறார், இந்த நிருபர்களில் வாஷிங்டன் போஸ்ட் டின் Sue Schmidt ஒருவர், அவர்தான் லெவின்ஸ்கி விவகாரத்தில் Whitewater சுதந்திர சபை கென்னத் ஸ்டாரிடமிருந்து கிளிண்டனுக்கு எதிரான இரகசியத் தகவலைப் பெற்ற முக்கியமானவர்.

அதைத்தொடர்ந்து ஊடகங்களில் முழுவீச்சில் ஆவேசம் கிளம்பியது. (முதல் 24 மணிநேரத்தில் yahoo செய்திக்கு பேர்கர் விவகாரத்தில் 1000 கதைகள் பதிவாயின). இந்தச் செய்திகள் பரபரப்புவது கெர்ரி பிரச்சாரத்தை இருளாக்க மட்டுமல்லாமல், 9/11 கமிஷன் அறிக்கை தொடர்பான செய்திகள், ஈராக்போர் தொடர்பான செய்திகளையும் பின்னுக்குத்தள்ளுவதாகும். பேர்கர் விலகிக்கொண்ட மறுநாள், ஈராக்கில் மடிந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 900- ஆக உயர்ந்தது, அது பற்றி ஊடகங்களில் எந்தக்குறிப்பும் காணப்படவில்லை. ஈராக் பிரதமர் அயத் அல்லாவி சென்ற மாதம் பாக்தாத் தடுப்புக்காவல் முகாமில் 6-கைதிகளை நேரடியாக சுட்டுக்கொன்றார் என்ற செய்திகள் குறித்து ஊடகங்கள் எந்தக் கவலையும் தரவில்லை.

புஷ் பிரச்சாரம் மற்றும் நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்கள் திரும்பத்திரும்ப பேர்கர் மீதான, கெர்ரி பிராச்சாரம் மற்றும் கிளின்டன் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டை திரும்பக்கூறிவந்ததால் அவை ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டன. கீழ்சபை சபாநாயகர் Dennis Hastert பத்திரிகை மாநாடு ஒன்றை நடத்தி 9/11 கமிஷன் அறிக்கை சமரசப்படுத்தும் வகையில் பேர்கர் நடவடிக்கை அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். ''பல தசாப்தங்களாக இரகசிய தகவல்களை கையாளுகின்ற அனுபவம் பெற்ற ஒருவர் நாட்டின் மிக முக்கியமான இரகசிய ஆவணங்களை களவாடினார் என்பது ஆபத்து என்ற தகவல் சங்கடம் உண்டாக்கக்கூடியதாக இருக்காதா?'' என்று அவர் கேட்டார்.

டெக்சாஸ் மாநிலத்தேர்தல் சட்டத்தை மீறினார் என்பதற்காக தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் கீழ் சபை பெரும்பான்மைத் தலைவர் Tom DeLay--- இந்த சம்பவத்தை ''முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்கது'' வாட்டர் கேட்டுடன் அதனை ஒப்பிட்டார். பேர்கர் தனது செயல்கள் கவனக்குறைவானவை என்று கூறியதை நிராகரித்து, De Lay, ''இது தற்செயலாக நடந்துவிட்டதல்ல, நான் நினைக்கிறேன் இது கடுமையானது, அவர் செய்தது கடுமையானது, அதை அவர் செய்திருப்பாரானால் அது தேசிய பாதுகாப்பிற்கு, நெருக்கடியாகும்'' என்று கூறினார்.

குடியரசுக் கட்சிக்காரர்களது தாக்குதல்கள் முற்றிலும் இறுமாப்பானவை. வெள்ளை மாளிகையும், நாடாளுமன்ற குடியரசுக்கட்சி உறுப்பினர்களும் 9/11 கமிஷன் நியமிக்கப்படுவதை எதிர்த்து வந்தார்கள், புஷ் நிர்வாகம் அந்த கமிஷனுக்கு ஆவணங்களை தாக்கல் செய்வதையும் அல்லது சாட்சியமளிக்க சாட்சிகளை அனுமதிப்பதிலும் திரும்பத்திரும்ப தாமதப்படுத்தும் போக்கை கடைபிடித்துவந்தது. கமிஷன் உண்மையிலேயே சில அதிகாரிகளை சாட்சியமளிக்க செய்வதற்கு பென்டகனைக் கட்டாயப்படுத்தும் வகையில் சம்மன் அனுப்பியது.

கமிஷன் விசாரணையை சீர்குலைப்பதற்கு குறிப்பாக Hastert முக்கிய பங்களிப்பு செய்தார். இப்போது அவர் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மூடிமறைப்பது பற்றி'' ஊளையிட்டு வருகிறார். Hastert கமிஷனின் அறிக்கையை வெளியிடும் ஏப்ரல் 26 காலக்கெடுவை நீட்டிப்பதை தடுப்பதற்கு முயன்றார். அவர் அவ்வாறு முயன்றதற்கு காரணம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொன்டோலீசா ரைஸ் கமிஷன் முன் பிரம்மாண வாக்குமூலம் தாக்கல் செய்வதை தவிர்ப்பதற்குத்தான் என்று இந்தப் பிரச்சனை குறித்து அறிக்கை குறிப்பிடுகிறது.

9/11 கமிஷன் பணிகளை பேர்கர் சீர்குலைத்தார் என்ற குடியரசுக் கட்சியினரின் குற்றச்சாட்டு ''எள்ளி நகையாடத்தக்கது'' என்று கமிஷனின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். Boston Globe-ற்கு பேட்டியளித்த விசாரணை குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் ''எங்களது பணி எதுவும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. [கிளார்க் குறிப்பு] குறிப்பின் பல பிரதிகள் எங்களிடம் உள்ளன'' என்று கூறினார்.

பேர்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மோசடித்தன்மை இருப்பினும் குடியரசுக் கட்சிக்காரர்கள் கற்பனையாக உருவாக்கிய அந்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றிய இட்டுக்கட்டும் தன்மை பற்றி தெளிவாக அறிந்திருந்தும், சில மணி நேரத்திற்குள் கெர்ரி பிரச்சாரம் சரணடைந்தது. கெர்ரி பிரச்சார பிரதிநியான Phil Singer தங்களது பிரச்சாரத்திற்கு பேர்கர், அங்கீகாரமற்ற இரகசிய தகவல்களை தந்தார் என்ற குடியரசுக் கட்சிக்காரர்களது குற்றச்சாட்டுக்களை மறுத்து, ''இந்தக் குற்றச்சாட்டு 9/11 கமிஷன் அறிக்கையில் இருந்து மக்களது கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சி'' என்று கண்டித்தார். அப்படிச்சொல்லி ஒரு நாளுக்குள் பேர்கர், ''தானே விரும்பி'' கெர்ரியின் பிரச்சாரத்தின் பிரதான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியை விட்டுவிட்டார். கெர்ரி அவரது பதவி விலகலை மிக அக்கறையின்றி ஏற்றுக்கொண்டு ''இந்த விவகாரம் புறநிலையாகவும், உண்மையாகவும் தீர்வுகாணப்படும் வரை'' அவரின் இராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இப்படி படுவேகமாக வலதுசாரி ஆத்திரமூட்டலுக்கு சரணாகதி அடைந்திருப்பது கெர்ரி பிரச்சாரத்தின் மையமான அரசியல் உண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இடதுகளிடமிருந்து வருகின்ற எந்த சவாலையும் அடக்குவதற்கு மிக கடுமையுடன் போராடி வருகின்றனர்---- அவர்கள் ரால்ஃப் நாடெரின் ஜனாதிபதி போட்டி பிரச்சாரத்தின் மீதும், இல்லினோய் SEP வேட்பாளர் ரொம் மக்கமன்னின் வேட்புமனு மீதும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நடத்திவருகின்ற வெட்ககேடான ஜனநாயக விரோத தாக்குதல்களை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் குடியரசுக்கட்சி வலதுசாரிகள் முன்னர் அவர்களது தாக்குதல்களை எதிர்கொள்ளும்போது, கிளின்டன் பதவி நீக்க விசாரணை படுதோல்வியின் போதும், 2000-ல் புளோரிடாவில் தேர்தலை திருடிய நேரத்திலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததுது போல, விழுகின்றனர்.

Top of page