World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian budget: pro-business agenda dressed up in a pro-poor disguise

இந்திய பட்ஜெட்: வர்த்தகருக்கு ஆதரவான செயற்திட்டம் ஏழைகள் ஆதரவு வேடத்தில் வந்திருக்கிறது

By Deepal Jayasekera
24 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கம் ஜூலை 8-ல் கொண்டுவந்திருக்கும் பட்ஜெட் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளை ஏமாற்றுகின்ற வித்தையாகும். அவர்களில் பலர் மே மாதம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். முந்திய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.

நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெருவர்த்தக நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் உறுதியளிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. முந்திய பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம் அப்படியே நீடிக்கும் என்கிற வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி செய்யாவிட்டால் பங்குச்சந்தைகளில் தாறுமாறான போக்குகள் ஏற்படும் என்பது சிதம்பரத்திற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெளிவாகவே தெரியும்.

சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் முன்னாள் நிதியமைச்சர்கள் அவர்கள் 1990களில் பொருளாதார சீரமைப்புத்திட்டத்தை முன்னின்று செயற்படுத்தியவர்கள் அவற்றால் இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையே மகத்தான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின. தேர்தல் முடிந்ததும் பங்குச் சந்தைகளில் பங்குகள் விலை படுவீழ்ச்சி அடைந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒதுங்கிக்கொண்டு வர்த்தகர்களது, நம்பிக்கையை வளர்க்கிற ஒரு தலைவரை பிரதமராக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் மன் மோகன்சிங் பிரதமராக்கப்பட்டார்.

அதே நேரத்தில் சிதம்பரம் தனது பட்ஜெட்டை வாக்களார்களை திருப்திப்படுத்துவதற்காக ஏழைகளுக்கு, கிராமப்புறங்களுக்கு ஆதரவு தருவதை போன்று அலங்கரித்துக்காட்ட வேண்டும் இதை அவர் பல்வேறு வகையான வெற்று சமிக்கைகள் மூலம் காட்டியிருக்கிறார். அவை காங்கிரஸ் தேர்தலில் தந்திருக்கும் குறைந்த பட்ச வாக்குறுதிகள் அல்லது ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) மற்றும் இடதுசாரி அணியுடன் கூட்டணி பங்காளிகள் உருவாக்கிய குறைந்தபட்ச செயற்திட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக அமையவில்லை. உயிர்நாடியான பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிசெய்து தருவதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தலைமையிலான இடதுசாரி அணியைதான் சிறுபான்மை அரசாங்கம் நம்பியிருக்கிறது.

முந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச்சட்டத்தில் கண்டுள்ள கட்டுப்பாடுகளை இந்த பட்ஜெட் ஏற்றுக்கொண்டிருப்பதுதான் இந்த பட்ஜெட்டின் நடுநாயகமான அம்சமாகும். இந்த கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் சென்ற ஆண்டு 4.6 சதவீதமாக இருந்த துண்டுவிழும் தொகையை தற்போது 4.4 சதவீதமாக குறைத்திருப்பதாகும். பற்றாக்குறையை குறைத்துவிட்டு இராணுவ செலவினத்தை மிகப்பெருமளவில் உயர்த்தியிருப்பது மிக அதிகமான தேவைப்படுகின்ற சமுதாயத்திட்டங்களுக்கு செலவை அதிகரிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

விவசாயிகள், வேலையற்றிருப்போர், மற்றும் கிராமப்புற ஏழைகள் ஆகியோருக்கு உதவுகின்ற வகையிலும், கல்வியையும், சுகாதாரத்திட்டத்தை ஊக்குகிக்கின்ற வகையிலும் புதிய திட்டங்களும், நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. என்றாலும் பெரும்பகுதி கானல் நீர் எடுத்துக்காட்டாக அடுத்த மூன்றாண்டுகளில் வேளாண்மைக் கடன்களை இரட்டிப்பாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மண்டல கிராமப்புற வங்கிகள் அதை செய்வதற்குரிய வல்லமை படைத்தவையா என்பதில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பட்ஜெட்டில் வேளாண்மை பாசனம் மற்றும் குடிதண்ணீர் வசதி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுகாதார காப்பீடு திட்டங்களுக்கு மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றாலும் வரிவருவாய், வசூல் அதிகரிப்பதைப் பொறுத்துத்தான் இதுபோன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க முடியும். எதிர்பார்க்கும் அளவிற்கு வரிவசூல் என்பது முற்றிலும் நம்பிக்கைக்குரியதல்ல என்று பொருளாதார விமர்சகர்கள் கருதுகின்றனர். திட்டமிட்ட வரிவருவாய் வசூலிக்க முடியவில்லை என்றால் வரிவிதிப்பு தொடர்பான கட்டுபாட்டு சட்டத்தை மீற வேண்டியிருக்கும். பங்குசந்தைகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். புதிய வரிகளை விதிக்கவேண்டும் அல்லது திட்டங்ளை வெட்ட வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்காவது குறைந்த பட்சம் 100- நாட்கள் வேலைவாய்ப்பு தருவதாக தேர்தல் நேரத்தில் தந்த உறுதிமொழியை அரசாங்கம் கிடப்பில் போட்டுவிட்டது. இப்படி வேலை வாய்ப்பு தேவைப்படுகின்ற குடும்பங்கள் இந்தியாவில் 30- முதல் 40- சதவீதம் இருக்கலாம். இந்த உறுதிமொழியும் இதர உறுதிமொழிகளும் மதிப்பீட்டிற்காக திட்டக்கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூடுதலாக 100- பில்லியன் ரூபாய் (2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இது அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல.

பட்ஜெட்டில் 150- பின்தங்கிய மாவட்டங்களில் ''பணிக்கு உணவு'' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதற்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை. அந்த 150- மாவட்டங்களிலும் செலவிடப்படும் தொகை இதர பகுதிகளில் இதே திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் வர வேண்டும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறைந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க ஒரு புதிய சமுதாய நடவடிக்கை 2 சதவீத சிறப்புவரி விதிக்கப்பட்டிருப்பதுதான். இதன் மூலம் ஆண்டிற்கு 40- முதல் 50- பில்லியன் ரூபாய் வசூலாகும். என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அடிப்படை பொதுக்கல்வி மேம்பாட்டிற்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எல்லா பள்ளிக்குழந்தைகளுக்கும் நன்பகல் சத்துணவு வழங்கப்படும்.

இதுபோன்ற திட்டங்கள் உண்மையிலேயே செயற்படுத்தப்பட்டால் கூட இந்தியாவின் பெரும்பாலான மக்களை எதிர்நோக்கியுள்ள பிரமாண்டமான சமுதாய பிரச்சனைகளில் அவற்றின் தாக்கம் மிகக்குறைந்த அளவிற்கே இருக்கும். 2001-ல் அரசாங்கம் தந்துள்ள புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் கல்விகற்றோர் அளவு 65.4 சதவீதமாகும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற கிராமப்புற மக்களது தொகை அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி 193.2 மில்லியனாகும். நகர்புற குடிசைப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் 30- மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சராசரியாக இந்தியாவில் ஆண்கள் வாழும் வயது 64-ஆகவும், பெண்கள் வாழும் வயது 67- ஆகவும் உள்ளது.

என்றாலும் அரசாங்க இராணுவச் செலவினத்தை 653 மில்லியன் ரூபாயிலிருந்து 770- மில்லியனாக 17.9- சதவீதம் உயர்த்துவதற்கு தயங்கவில்லை. இதில் பெரும்பகுதி முதலீட்டு செலவினங்கள்: அதிநுட்ப புதிய ஆயுதங்கள் அவற்றில் புதிய பட்ஜெட் போர்பயிற்சி, விமானம் விண்ணில் நடமாடும் மூலோபாய ராடார் மற்றும் விமானந்தாங்கி கப்பல் ஆகியவை அடங்கும். இவை இந்தியா மூலோபாய அடிப்படையில் மண்டல மேலாதிக்கம் செலுத்தும் நோக்கங்களை ஈடுசெய்வதாகும். காதுகாப்பு செலவினங்கள் கடுமையாக அதிகரிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் மண்டல எதிரி நாடான பாகிஸ்தானோடு கொந்தளிப்பை தணிக்க தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளின் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

சந்தை சீர்திருத்தங்கள்

மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக கொண்டுவருவதில் உள்ள சிக்கலை தெளிவாக உணர்ந்து சிதம்பரம் மிகுந்த விழுப்புணர்வோடு செயல்பட்டிருக்கிறார். முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் கவர்ச்சிகரமான சூழ்நிலையை உருவாக்குவதுதான் தமது நோக்கமென்று பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார். அந்த நோக்கத்திற்காக முதலீட்டு கமிஷனை அமைத்திருக்கிறார். நிதி நிர்வாக பொறுப்புணர்வு பற்றி மேலும் உறுதிமொழியளித்திருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும், வர்த்தக தரப்பினருக்கு பயன்தரும் வகையிலும் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்.

பொருளாதாரத்தின் கேந்திர பிரிவுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான உயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது இவற்றில் தகவல் தொடர்புத்துறையில் உச்சவரம்பு 49-லிருந்து 74- சதவீதமாகவும், உள்நாட்டு விமானப்போக்குவரத்து 40-லிருந்து 49-சதவீதமாகவும் காப்பீட்டுத் தொழிலில் 26-லிருந்து 49 சதவீதமாகும் வெளிநாட்டு நேரடி மூதலீட்டு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற உயர்ந்த இலாபம் தருகின்ற தொழில்களில் தங்களுக்கு அதிக பங்களிப்பு இந்தியாவில் தரப்படவேண்டுமென்று சிறிதுகாலமாக சர்வதேச கார்பரேஷன்கள் வலியுறுத்தி வருகின்றன. கடன்பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் உச்சவரம்பு ஒரு பில்லியனிலிருந்து 1.75 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

குறுகியகால முதலீட்டு இலாபவரி 33 சதவீதத்திலிருந்து 10- சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையிலான முதலீட்டு இலாபத்திற்கு முற்றிலுமாக பட்ஜெட் விதிவிலக்கு தந்திருக்கிறது. பங்குசந்தைகளில் பங்குகள் பரிவர்த்தனைக்கு புதிய வர்த்தகத்திற்கு 0.15-சதவீதம் மட்டுமே வரிவிதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் பெருமளவில் வரி விதிப்பு சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும்போது பெருவர்த்தக நிறுவனங்கள் பயனடையும் என்று சிதம்பரம் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது தனியார்மயமாக்கும் செயற்திட்டத்தை தாமதமாக மேற்கொள்ளும் வகையில் அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய தனியார்மய திட்டம் தொழிலாளர்களிடையே பரவலான எதிர்ப்பை கிளறிவிட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தனியார் மயமாக்குவதைவிட இலாபத்தில் இயங்குகின்ற அரசாங்கத் தொழில்களில் ''தேர்ந்தெடுக்கப்படும் வகையில் பங்குகள்'' கைவிடப்படும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். அப்படி என்றால் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பதாகும் அத்தகைய நிறுவனங்கள் இன்னும் அரசாங்கத்திற்கு சொந்தமானவையாக இருந்தாலும் இலாப வரம்பை நிலைநாட்டுவதற்காக அவை சீரமைக்கப்படும் வேலைகளை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அரசாங்கத் தொழில் பங்குளை விற்பதன் மூலம் 40- பில்லியன் ரூபாய் வருவாய்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்தவகையில் இலக்கு 145 பில்லியனாக இருந்தது. ''அரசாங்க பங்குகளை விற்பதும், தனியார் மயமாக்குவதும் பயனுள்ள பொருளாதார கருவிகளாகும். நாங்கள் அந்தக் கருவிகளை தெரிந்தெடுக்கப்படும் வகைகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவோம்'' என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் வலியுறுத்திக்கூறினார்.

வர்த்தக தலைவர்கள் பொதுவாக பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து பிரசுரிக்கப்படும் பிஸ்னஸ் டைம்ஸ் ''சென்றவாரம் சிங்கப்பூரில் இந்திய மாநாட்டிற்காக திரண்டு வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்திய நிதியமைச்சர் தந்துள்ளவைப்பற்றி மனநிறைவு தெரிவித்தனர்'' என்று எழுதியிருந்தது. முன்னணி இந்திய நிதி நிறுவனத்தில் CEO வாக உள்ளவர் பட்ஜெட்டை பற்றி சரியான விளக்கம் தந்தார். ''பேச்சில் இடதுசாரி செயலில் வலதுசாரி'' என்று கூறினார். இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் ஏழைகளுக்கும் உதவுவதாக பேசிக்கொண்டே பட்ஜெட் உண்மையிலேயே வர்த்தகர்களுக்கு உதவுகிறது.

London Metal exchange ன் முன்னாள் தலைவர் Raj Bagri பிரபு இந்திய பட்ஜெட் பற்றி மனநிறைவு கொண்டார்: ''சீர்திருத்த நடைமுறை நீடிக்கிறது. இந்திய அரசாங்கம் வளர்ச்சிபாதையிலுள்ளது. அதுதான் நான் பெற்றிருக்கும் தகவல் அதையேதான் லண்டன் நகர நிதிப்புழக்க வட்டாரங்களும் தெரிவித்தன. இந்தியாவை கவனிப்பவர்கள் மிகுந்த வாஞ்சையோடு உள்ளனர்'' என்று அவர் கூறியுள்ளார்.

பம்பாய் பங்குசந்தையில் வரவேற்பும், இருந்தது. எதிர்ப்பும் நிலவியது. பங்கு பரிவர்த்தனைக்கான வரிபற்றிய செய்திவந்ததும், பம்பாய் பங்குச்சந்தைகளில் பங்குவிலை குறியீட்டு எண் 100- புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 4,855 ஆக நின்றது. முதலீட்டாளர்கள் குறைதீர்ப்பு அரங்கின் தலைவரான Kirit சோமையா, கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ''பங்குகள் பரிவர்த்தனையின் மொத்த தொகைக்கு வரி விதிக்கப்பட்டிருப்பது முதலீட்டு அங்காடியையே அழித்துவிடும். அத்துடன் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிது பங்கு வியாபாரிகள் அழிந்து விடுவார்கள்'' பங்கு சந்தைகளில் இருந்து வந்த நிர்பந்தங்களை தொடர்ந்து தனது வரிவிதிப்பு ஆலோசனை குறித்து மீண்டும் ஆராய்வதாக உடனடியாக சிதம்பரம் உறுதியளித்தார்.

கம்பனி ஆதிக்கக்குழுக்களை பொறுத்தவரை இந்த பட்ஜெட் முதல் நடவடிக்கைகளையும், வெட்டுவதற்கும் அரசாங்க சொத்துக்களை விற்பதற்கும் தங்களது விருப்பம்போல் தொழிலாளர்களை நியமிக்கவும் நீக்கிவிடவும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி வகை செய்யவும் சிங் அரசாங்கத்திற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு நிர்பந்தம் வந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த பட்ஜெட்டிற்கு முக்கியமான ஆட்சேபனைகள் எதையும் இடதுசாரி அணி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. CPI-M- அரசியல் குழு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தகவல் தொடர்புகள், காப்பீடு, மற்றும் விமானத்துறைகளில் அதிக வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் முடிவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களது கண்டனம் அந்த முடிவு தொழிலாளர்களை பாதிக்கும் என்ற அடிப்படையில் அமைந்ததல்ல மாறாக இந்திய கம்பனிகளில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பெருவர்த்தக நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு CPI-M- தலைவர்கள் மீண்டும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர். அரசியல் குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டிற்கு திருத்தம் கொண்டுவரப்போவதில்லை, அல்லது எதிர்க்கும் திட்டமில்லை என்று அறிவித்தார். கேரளத்திலும், மேற்கு வங்காளத்திலும் CPI-M-ம் அதன் இடதுசாரி சகாக்களும், பதவியில் இருக்கும்போது முதலீடுகளுக்காக பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்கள் தங்களது சொந்த பொருளாரா சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டார்கள்.

காங்கிரஸ் தனது பட்ஜெட் செயற்திட்டத்தை நிறைவேற்றத் தயங்கும்போது முந்திய BJP தலைமையிலான நிர்வாகத்தை போன்றே பெருகிவரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிங், அரசாங்கத்தின் சமூக அடிப்படையிலான பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு தவிர்க்க முடியாத அளவிற்கு எதிர்ப்பு உருவாகும்போது அதை ஒடுக்கவும், மட்டுப்படுத்தவும் இடதுசாரி அணியை நம்பிச்செயல்படலாம் என்று CPI-M- சமிக்கை காட்டுகின்ற வகையில் பட்ஜெட்டிற்கு கொள்கை அடிப்படையில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

Top of page