World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

UN Security Council rubberstamps Washington's continuing subjugation of Iraq

ஈராக்கின் மீதான வாஷிங்டனின் அடிமைப்படுத்தலை நீடிக்க ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகாரம்

By Peter Symonds
11 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்கல் செய்த தீர்மானம் செவ்வாயன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை என்பது ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒப்புதல் தருகிற மிக இழிவான இல்லம்தான் என்பதை மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளது. ஒரு ஜனநாயக, சுதந்திர ஈராக்கை அமைப்பது பற்றி அழகான வார்த்தைகளில் விளக்கம் தரப்பட்டாலும் பிரான்சு, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து வளர்ந்து வரும் பொதுமக்களது கிளர்ச்சியையும் மீறி அந்த நாட்டில் நவ-காலனித்துவத்தை தொடர்வதற்கு தங்களது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.

''முழு இறையாண்மையின்'' பொருள் பற்றியும் பல்வேறு சிறிய திருத்தங்கள் பற்றியும், வாக்குவாதங்கள் நடைபெற்ற பின்னர், சென்ற வாரம் அமெரிக்க ஆதரவு கும்பலை புதிய இடைக்கால அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஈராக் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கின்றது என்ற மிகப் பெரிய பொய்யை 15 நாடுகள் அடங்கிய அனைத்து வாக்களிப்பவர்களும் ஏற்றுக் கொண்டனர். மிகப்பெரும்பாலான ஈராக் மக்களுக்கு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதிலோ அல்லது ஆட்சி தொடர்பாக ஒன்றும் கூறமுடியாத நிலையில், 160,000 அமெரிக்கா தலைமையிலான துருப்புக்களின் ஆதரவோடு ஈராக்கின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்க அலுவலர்களின் மேலாதிக்கம் நீடிக்கும்.

அனைத்து புதிய அமைச்சர்களும் ஈராக் மீது அமெரிக்கா சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்திருப்பதை ஆதரித்துள்ளமை, அவர்களை வாஷிங்டன் மிக கவனமாக சோதித்து தேர்ந்தெடுத்திருக்கிறது. பல ஆண்டுகள் அமெரிக்கா கொடுத்த பணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆவர். சிலர் அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கப்பட்டவர்கள். பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Ayad Allawi 1970 கள் முதல் MI6 உடனும், அதற்கு பின்னர் CIA உடன் பணியாற்றியவர், அவர் குறைந்த பட்சம் 15 புலனாய்வு சேவைகளோடு ''தொடர்பு இருந்தது'' என்று கூறிக்கொள்வதில் தான் வெட்கப்படவில்லை என்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

பிரான்சும், ஜேர்மனியும் அமெரிக்க இராணுவத்தின் பங்கு பற்றி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் வாஷிங்டன்தான் ஈராக்கில் பொறுப்பு வகிக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. புஷ் நிர்வாகம் புதிய இடைக்கால அரசாங்கம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இரத்து அதிகாரத்தை பயன்படுத்த வகை செய்யும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பல்வேறு அர்த்தமற்ற திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அவை அமெரிக்காவிற்கும், ஈராக் இராணுவத்திற்கும் ''முழு கூட்டு பங்களிப்பிற்கு'' வகை செய்கின்றன. ஆனால் அமெரிகக்கப் படைகள் தங்களது விருப்பப்படி ஈராக் முழுவதிலும் சுற்றிவரவும், வீடுகளில் சோதனை இடவும், கைது செய்யவும் முழு அதிகாரம் கொண்டவையாக இருக்கும்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் இருப்பது தொடர்பாக மறு ஆய்வு செய்வதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு இத்தீர்மானம் அனுமதி தருகிறது. ஈராக் அரசாங்கம் அப்போது அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறுமாறு கோரலாம். ஆனால் ஐ.நா கட்டளை அந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தாலும், ஐ.நா பாதுகாப்பு சபையில் வாஷிங்டனுக்கும், லண்டனுக்கும் இரத்து அதிகாரங்கள் உள்ளன. தானும் தனது சக அமைச்சர்களும் முழுமையாக அமெரிக்க இராணுவத்தை நம்பியிருப்பதை தெளிவாக உணர்ந்து அவர்களது தயவு இல்லாவிட்டால் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று தெரிந்து அயத் அல்லாவி அமெரிக்கத் துருப்புக்கள் நீடிக்க வேண்டும் என்று ஐ.நாவிற்கு எழுதியுள்ளார். ஈராக் வெளியுறவு அமைச்சர் Hoshyar Zebari ஐ.நா பாதுகாப்பு சபை தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தமக்கு முழு மனநிறைவு தந்திருப்பதாக தெரிவித்துடன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்யா ''ஈராக் மக்களைவிட அதிகமாக ஈராக்கின் மீது அக்கறை கொண்டிருப்பதாக'' கண்டித்தார்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சுதந்திர ஜனநாயக தேர்தல்கள் நடத்தப்படும் என்ற கூற்றை எள்ளி நகையாடும் வகையில் அமெரிக்கா தலைமையில் மிகப்பெரிய இராணுவப்படை ஈராக்கில் நீடிக்கிறது. பெரும்பாலான ஈராக் மக்கள் அமெரிக்கா ஆக்கிரமிப்பிற்கு விரோதமாக உள்ளனர், இதன் விளைவாக முறையற்ற கைதுகள், சித்தரவதை மற்றும் மரணங்களும், அத்துடன் வேலையில்லாத் திண்டாட்டம் மிக பெருமளவிற்கு பெருகியும், மீதமிருந்த உள்கட்டமைப்புக்கள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவிற்கு பரவலான எதிர்ப்பு நிலவுவதை புரிந்து கொண்டு, வாஷிங்டன் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை ஐ.நா விடம் ஒப்படைத்துவிட்டு, அதன்மூலம் தனது நவ-காலனித்துவத்தை தொடர்வதற்கு ஜனநாயக முலாம் பூசும் நடவடிக்கையை வழங்கியுள்ளது.

ஈராக்கில் உண்மையான அரசியல் ஆதிக்க மையம் அமெரிக்க தூதரகமாக இருக்கும், அது உலகிலேயே மிகப்பெரியது; 4,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது ஐ.நா வில் அமெரிக்க தூதராக பணியாற்றி வரும் ஜோன் நெகரோபொன்ட் (John Negroponte) ஈராக் தூதராக தலைமை வகிப்பார், வலதுசாரி அரசியல் அடியாளான இவர் மத்திய அமெரிக்காவில் கறைப்படிந்த வேலைகளை மேற்கொள்வதில் நீண்ட சான்றைப் படைத்தவர். ஜூன் 30ல் சம்பிரதாய முறையில் ஈராக் இடைக்கால அரசாங்கத்திற்கு ''இறையாண்மை'' ஒப்படைக்கப்படுகின்ற நேரத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார்.

நெகரோபொன்ட் உண்மையான காலனித்துவ நிர்வாகியாக பணியாற்றுவார். கடந்த 12 மாதங்களுக்கு மேலாக அமெரிக்க ஆலோசகர்கள் அடங்கிய சிறிய இராணுவம் உருவாக்கியிருக்கும் அரசு நிர்வாக அதிகாரத்துவ அமைப்பிற்கு தலைமை வகிப்பார், அமெரிக்கா நியமித்த பல்வேறு கண்காணிப்பு அமைப்புக்கள் அந்த நிர்வாக இயந்திரத்தை கண்காணித்து வருகின்றன. எண்ணெய் வருவாய்கள் அனைத்தும் உட்பட ஒட்டுமொத்த அரசாங்கம் நிதிகள் முழுவதையும் அமெரிக்கா உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரநிதிகள் அடங்கிய ஒரு குழு சோதனை செய்யும். அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ஆணையம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் இடைக்கால அராங்கம் செயற்படுத்தும்.

ஓராண்டிற்கு முன்னர், ஈராக் மீது அமெரிக்க தலைமையில் போர் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில் பிரான்சும், ஜேர்மனியும் படையெடுப்பு நியாமற்றது, சட்டவிரோதமானது என அறிவித்தன. இரண்டு மாதங்களுக்கப் பின்னர் அமெரிக்க அழுத்தங்களுக்குப் பணிந்து ஐ.நா பாதுகாப்பு சபையின் இதர உறுப்பினர்களோடு சேர்ந்து ஈராக் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முத்திரை அங்கீகாரம் வழங்கின. தற்போது அந்த இரண்டு நாடுகளும், ரஷ்யா மற்றும் சீனாவோடு சேர்ந்து பாக்தாத்தில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க பொம்மை ஆட்சிக்கும், தொடர்ந்து அந்நாடு அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் அங்கீகார முத்திரையை வழங்கியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தீர்மானத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார், ''மிகைப்படுத்துவதற்கு இடமில்லாத வகையில், நான் இது முக்கிய முன்னேற்ற நடவடிக்கை என்று கூறுவேன்'' என்று அறிக்கை விடுத்தார். புட்டின் அளவிற்கு ஆர்வத்தோடு இல்லாவிட்டாலும் இதர ஐரோப்பிய அரசுகள் அவரைப்பின் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தன. ஜேர்மனியின் ஐ.நா தூதர் Gunter Pleuger பிரிட்டனும், அமெரிக்காவும் காட்டியுள்ள ''ஆக்கபூர்வ நீக்குப்போக்குள்ள அணுகுமுறையை'' வரவேற்றார். வாக்களிப்பதற்கு முன்னர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Michel Barnier "இந்தத் துயரத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு ஆக்கபூர்வமான வழி காண உதவியுள்ளது'' என வரவேற்றார்.

படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு வாஷிங்டன் எடுத்து வைத்த காரணங்களும் பொய்கள், கற்பனை என்று அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் ஐரோப்பிய அரசுகளின் நிலைப்பாடு போலி நடிப்பாக உள்ளது. பேரழிவுகரமான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, சதாம் ஹூசைன் மற்றும் அல்கொய்தாவுக்கு இடையில் தொடர்புகள் எதையும் நிரூபிக்கப்படவில்லை. ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறி வந்ததை முற்றிலும் இழிவுபடுத்துகிற வகையில் அபு கிரைப் சிறைச்சாலையில் திட்டமிட்டு ஈராக் கைதிகளை சித்ரவதை செய்தது அமெரிக்காவை அம்பலப்படுத்திவிட்டது.

அமெரிக்கப் படையெடுப்பிற்கு பிரான்சும், ஜேர்மனியும் எதிர்ப்புத் தெரிவித்தது எந்தக் காலத்திலுமே ஈராக் மக்களைப்பற்றிய கவலையால் எழுந்ததல்ல. இரண்டு நாடுகளுமே முதலாவது வளைகுடாப்போரை ஆதரித்தன. 1990கள் முழுவதிலும் ஐ.நாவின் தடை நடவடிக்கைகளை இவ்விரு ஆட்சிகளும் ஆதரித்ததால் அரை மில்லியன் ஈராக் மக்கள் மடிந்தார்கள். ஈராக் மீது போர் தொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் இதர நாடுகளோடு சேர்ந்து இவ்விரு நாடுகளும் ஐ.நா 1441-வது தீர்மானத்தை ஆதரித்தன, இந்தத் தீர்மானம் மிகத்தீவிர ஆயுதங்கள் சோதனைக்கு வழிசெய்தது அதன் மூலம் போருக்கும் வழிவகுக்கப்பட்டது.

ஈராக்கை அடிமைப்படுத்தி அதன் மிகப்பெரும் எண்ணெய் வளத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளும் வாஷிங்டனின் முயற்சி அந்த பிராந்திய முழுவதிலும் ஐரோப்பிய நலன்களை நேரடியாக இல்லாதொழித்துவிடும் என்றே பாரிசும், பேர்லினும் கவலை கொண்டன. படையெடுப்பு நடைபெற்ற நேரத்தில் இரண்டு நாடுகளுமே அமெரிக்காவோடு நேரடியாக மோதுவதால் ஏற்படும் பொருளாதார, மற்றும் அரசியல் விளைவுகளை பற்றி பயந்தன. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கக் கிளர்ச்சிகள் உருவானதும் எல்லா பெரிய நாடுகளும் ஒன்றாக இணைந்து கொண்டு, மத்திய கிழக்கு முழுவதிலும் இதனால் ஏற்படுகின்ற அரசியல் தாக்கத்தினால் தங்களது நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்து ஒன்று சேர்ந்தன.

அப்படியிருந்தும், பதட்டங்களை தூண்டிவிட்டதற்கு அடிப்படையான பிரச்சனைகள் எதுவும் தீர்த்துவைக்கப்படவில்லை. இந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற G-8 உச்சிமாநாட்டில் இந்தக் கருத்து வேறுபாடுகள் வெளிவந்தன. தனது ஆக்கிரமிப்பை நிலை நாட்டுவதற்கு உதவி தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள புஷ் நிர்வாகம் நேட்டோவின் (NATO) தலைமையின் கீழ் ஈராக்கிற்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவதற்கு முயன்று வருகிறது. இன்று வரை பிரான்சும், ஜேர்மனியும் அந்த கோரிக்கையை ஏற்க பகிரங்கமாக மறுத்தும், சதாம் ஹூசைன் ஆட்சியில் 120 பில்லியன் டொாலர் வைத்திருந்த கடன் தொகையை இரத்து செய்துவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரான்சும், ஜேர்மனியும், கோடிட்டுக்காட்டி விட்டன.

இதர ஐ.நா பாதுகாப்புச்சபை உறுப்பினர்களை பொறுத்தவரை அவர்களது வாக்குகள் மறைமுக இலஞ்ச பேரங்கள் மற்றும் மிரட்டல்களால் பெறப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. அரபு முதலாளித்துவ வர்க்கம் மிக இழிவான முறையில் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து செல்கிறது என்பதை மேலும் எடுத்துக்காட்டுகின்ற வகையில் அல்ஜீரியா, ஈராக்கில் அமெரிக்க மேலாதிக்கம் தொடர்வதை ஆதரித்து வாக்களித்தது. அந்நாட்டின் அமெரிக்கத் தூதர் அப்துல்லாஹ் பாலி இந்த முடிவு ஈராக் மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவ மிக்க நகர்வு என்று பாராட்டியும் ஈராக் மக்கள் தங்களது சுதந்திரத்தையும், இறையாண்மையும், மேன்மையும் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பாக்கிஸ்தான், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஈராக்கிலுள்ள ஐ.நா ஊழியர்களை பாதுகாப்பதற்காக பாக்கிஸ்தான் ''போர்படை அளவிலான'' ஒரு இராணுவப்பிரிவை அனுப்பி புதிய தனது பங்களிப்பைச் செய்யும் என்று அறிவித்தது. தனது துருப்புக்களை அனுப்புமாறு பல மாதங்களாக இஸ்லாமாபாத்தை வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருகிறது. படைகளை அனுப்பினால் உள்நாட்டில் தனக்கெதிராக அரசியல் கொந்தளிப்பு வெடித்துவிடக்கூடும் என்று பயந்து பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷ்ராப் இதற்கு முன்னர் தனது துருப்புக்களை அனுப்ப மறுத்து வந்தார். தற்போது புதிய ஐ.நா தீர்மானம், பாக்கிஸ்தான் பங்களாதேஷ், மற்றும் பிற நாடுகள் ஐ.நா விற்கு உதவுகிறோம் என்ற போர்வையின்கீழ் பின் கதவுகள் வழியாக துருப்புக்களை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்கக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் இந்தச் செயல்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய முகமூடியையும் இன்னும் கிழித்தெறிவதற்கே உதவிசெய்யும்.

Top of page