World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: victims seek prosecution of Union Carbide officials over Bhopal disaster

இந்தியா: யூனியன் கார்பைட் அதிகாரிகள் மீது வழக்கு தொடர போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்

By Neil Hodge
21 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்த மாத இறுதியில், போபால் முதன்மை நீதித்துறை நீதிபதி, 1984-ல் விஷப்புகை கசிவு ஏற்பட்டு 60,000க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் பாதிக்கப்பட்டதற்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர யூனியன் கார்பைட்டின் முன்னாள் அதிகாரிகளை இந்திய நீதிமன்றத்திற்கு அனுப்ப Dow இரசாயன நிறுவனத்தை தான் கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து முடிவு செய்யும்.

இந்த பேரழிவில் மேலும் தனக்கு எந்த பொறுப்பும் இல்லை என்று Dow மறுத்திருக்கிறது, மற்றும் 15-ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய சட்டப்படி இழப்பீடுகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறது. என்றாலும், 1992 முதல் யூனியன் கார்பைட் நீதிமன்றத்திலிருந்து தலைமறைவாகியிருப்பது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது ஏனென்றால் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற, துயரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் - யூனியன் கார்பைட் கார்ப்பொரேஷன், யூனியன் கார்பைட் ஈஸ்டர்ன் மற்றும் மூல கம்பெனியின் தலைவர் வாரன் ஆண்டர்சன் ஆகியோர் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இந்திய நீதிமன்றங்களின் விசாரணைகளை முடக்கிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் போபால் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட், அது பிறப்பிக்கும் சம்மன்களை அமெரிக்காவின் மிகப்பெரிய இரசாயன பொருட்கள் தயாரிப்பாளரான Dow ஏற்றுச் செயல்படுத்த, உறுதிசெய்து தர அமெரிக்க அரசு நீதித்துறையிடமிருந்து சர்வதேச நீதி உதவி கோரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மே மாதம், அந்த நிறுவனத்தின் கம்பெனி பங்குகளில் 40- மில்லியன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு சதவீத பங்குகளை வைத்திருப்போரின் ஆதரவை சிறிய மத பங்குதாரர்குழுக்கள் வெற்றிகரமாகப் பெற்றனர், அவர்கள் Dow போபால் பேரழிவிற்கு சட்டப்பூர்வ, தார்மீக மற்றும் நிதி தொடர்பான பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். போபால் பேரழிவின் விளைவாக கம்பெனியின் எதிர்கால பொறுப்புகள் பற்றி கோடிட்டுக்காட்டும் அறிக்கைகளையும் கம்பெனி தரவேண்டும் என்று சிறுபான்மை பங்குதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்தத் தீர்மானம், மே 13-ல் நடைபெற்ற கம்பெனியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. போபால் துயரத்திற்கு பின்னர் உயிர்தப்பியவர்கள் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சனைகள் குறித்து Dow நிறுவனம் எடுத்துள்ள புதிய முயற்சிகளை விளக்குகின்ற அறிக்கையை கம்பெனி தயாரிக்குமாறு அந்த தீர்மானம் கேட்டுக்கொள்கிறது (ஆனால் அந்தத் தீர்மானம் கம்பெனியை கட்டாயப்படுத்த முடியாது). தீர்மானத்தை ஆதரிக்கும், அறிக்கையும் போபால் துயரத்தில் சம்மந்தப்பட்ட நிதி மற்றும் கம்பெனி செல்வாக்கு பாதிப்பு பற்றி விவரம் தருமாறு கேட்டுக்கொள்கிறது. போபாலில் வரலாற்றிலேயே படுமோசமான இரசாயன விபத்து நடைபெற்றது----அதில் குறைந்த பட்சம் 14,400 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் குறைந்த பட்சம் 50,000 பேருக்கு நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டது.

Dow கம்பெனி நிர்வாகக் குழு பங்குதாரர்களை எதிராக வாக்களிக்குமாறு ஏகமனதாகக் கேட்டுக் கொண்ட பங்குதாரரின் தீர்மானம், Boston Common Asset Management (BCAM) நிறுவனத்தினால் Brethren Benefit Trust, Sisters of Mercy, Detroit Sistersof Holy Cross, Natre Dame ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவை Dow கம்பெனி பங்குகளில் 5,821- பங்குகளைத்தான் வைத்திருக்கின்றன. இது Capital Research Management என்கிற 81-மில்லியன் பங்குகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவாகும். CRM- பங்குகள் ஏறத்தாழ 8-சதவீதமாகும்.

போபால் துயர நிகழ்ச்சி தொடர்பாக Dow இரசாயன கம்பெனி பங்குதாரர்கள் முதல் தடவையாக இப்போது தீர்மானம் தாக்கல் செய்திருக்கின்றனர். யூனியன் கார்பைட் பேரழிவு காரணமாக, அதை 2001-ல் Dow நிறுவனம் வாங்கிக்கொண்டது. 1989-மற்றும் 1990-ல் போபால் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பங்குதாரர் தீர்மானங்களுக்கு முறையே 6.2- சதவீதம், மற்றும் 3.9-சதவீதம் ஆதரவு பங்குதாரர்களிடையே கிடைத்தது. அந்தத் தீர்மானங்கள் போபால் துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் தொடர்பானதாகும்.

Dow கெமிக்கல், மிச்சிகனில் உள்ள மிட்லாண்டில் செயல்பட்டு வருகின்ற மிகப்பெரிய அமெரிக்க இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கும் நிறுவனமாகும், 2003-ல் அதன் மொத்த விற்பனை 33 பில்லியன் டாலர்களாகும்.

அமெரிக்க பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை நிதி ஒழுங்கமைப்பு சபையின் விதிகளின்படி, முதல் தடவையாக தாக்கல் செய்யப்படும் பங்குதாரர் தீர்மானத்திற்கு மொத்த பங்குதாரர்களில் குறைந்த பட்சம் மூன்று சதவீத பங்குதாரர்கள் ஆதரவு தருவார்களானால், அடுத்த ஆண்டு நடைபெறும் கம்பெனியின் ஆண்டு இறுதி பொதுக் குழு கூட்டத்தில் அந்தத் தீர்மானம் கட்டாயம் இடம்பெறும் என்பதை தானாகவே உறுதிப்படுத்தும்.

அமெரிக்க கம்பெனி பங்குதாரர்கள் சேவைக்குழு ''As you sow" அமைப்பு Dow நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 125- தலைமை முதலீட்டாளர்களை அணுகியது. மினனஞ்சலில் மேலும் 5,000-பேருக்கு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்தது மற்றும் பல்வேறு பிரதான முதலீட்டாளர்களுக்கும் கோரிக்கை விடுத்தது. கலிபோர்னியாவின் பொதுத்துறை பணி ஓய்வு முறை (California Public Employees' Retirement System-CALPERS) நியூயோர்கின் பொதுத்துறை பணி ஓய்வு முறை (New York City Employees' Retirement System-NYCERS) ஆகிய இரண்டும் Dow நிறுவனத்தில் 7.5-மில்லியன் பங்குகளை வைத்திருக்கின்றன. கம்பெனி Proxy Voting Service பெரு நிறுவன நிர்வாக அமைப்பு, நிறைவு பொது கூட்டத்தில் "ஆதரவு" வாக்களிக்க பரிந்துரை செய்தது. கலிபோர்னியா அரசு ஆசிரியர் பணி ஓய்வு முறை (CalSTERS), 34வது பெரிய முதலீட்டாளர் ஆகும். Dow நிறுவனத்தில் அதற்கு 3.24 மில்லியன் பங்குகள் உண்டு மற்றும் அதேபோல் Connecticut மாகாண கணக்கு தணிக்கையாளர்கள் அலுவலகத்திற்கும் (8,80,000- பங்குகள்) உண்டு பல மத அமைப்புகளும் அதில் முதலீடு செய்துள்ளன.

BCAM- தலைமை நிர்வாக அதிகாரி Lauren Compere இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். ''Dow தொடர்ந்து போபால் துயரத்தில் உயிர்பிழைத்தவர்களுக்கு தனது பொறுப்பை மறுத்தே வருகிறது. போபால் நிறுவனம் இருந்த இடத்தில் தலையிடவும், மறுத்து வருகிறது. ஆனால் அதில் கணிசமான சட்டபூர்வ ஆபத்துக்கள் இருப்பதாகவும் உயிர் பிழைத்தவர்களுக்கு மேலும் உதவுவதில், அந்த ஆபத்துக்கள் உண்டு என்றும் கம்பெனி கூறி வருகிறதே தவிர அவற்றின் தன்மையை விளக்கவில்லை. யூனியன் கார்பைடை வாங்கிவிட்ட காரணத்தால் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர் கொள்வதில் தங்களுக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை என Dow நிறுவனம் சொல்வது தெளிவான தவறாகும்'' என்று Laurean Compere குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் மேலும் தகவல்களை தரவேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் ஆனால், போபால் துயத்திற்கான பொறுப்பை கம்பெனி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது போபாலில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது மூலம் அப்பகுதி சமுதாயத்திற்கு கம்பெனி நிதி உதவி அளிக்க வேண்டுமென்றோ அவர்கள் விரும்புகிறார்கள் என அர்த்தப்படுத்தாது. CALPERS சார்பில் பேசவல்ல பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, ''போபால் பாதிப்பிற்கு இலக்கானவர்கள் தொடர்பாக கம்பெனி தார்மீக அல்லது நிதி மற்றும் எந்தவகை சட்ட கடமையும் பெற்றிருக்கிறதா என்பதுபற்றி எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதில் நாங்கள் இன்னும் முடிவிற்கு வரவில்லை. நாங்கள் எதிர்கால பொறுப்புக்கள் பற்றியும், அவற்றால் பங்குதாரர்களுக்கு கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றியும் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

1989-ம் ஆண்டு யூனியன் கார்பைட் போபால் இரசாயனக் தொழிற்கூடம் தொடர்பான சிவில் வழக்கை இந்திய அரசாங்கம் கொண்டு வந்தபோது, அந்த விஷப்புகை தாக்குதலுக்கு இலக்கான 500,000 மக்களுக்கு 470-மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க உடன்பட்டது. இந்த இழப்பீடு "தார்மீக" பொறுப்பிற்காக வழங்கப்படுகிறதே தவிர சட்டபூர்வமான பொறுப்பு எதுவுமில்லை. ஏனென்றால் இதனை யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் (UCIL) என்ற தனி இந்திய துணை நிறுவனம் இயக்கிவந்தது என்று யூனியன் கார்பைட், அமெரிக்க நிறுவனம் வாதிட்டது. அப்போது தரப்பட்ட இழப்பீடு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரி 500 டாலருக்கும் குறைவான தொகையை வழங்குவதற்குத்தான் வகைசெய்தது. இதில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கிரிமினல் அல்லது தண்டிக்கிற இழப்பீடுகள் தொடர்பான வழக்குகளில் பங்கெடுத்துக்கொள்ள யூனியன் கார்பைடும் Dow நிறுவனமும் மறுத்து வருகின்றன.

தற்போது யூனியன் கார்பைட் நிறுவனத்தின்மீது தெரிந்தே மனிதக்கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. யூனியன் கார்பைடின் முன்னாள் CEO வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் கைதுசெய்து இந்திய நிதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த இந்தியா முயன்று வருகிறது. அமெரிக்க நிறுவனம் UCIL- ல் 50.9- சதவீத பங்குளை வைத்திருந்தது. 1994-ல் UCIL- லுடன் தனது தொடர்புகளை துண்டித்துக்கொண்டது. UCIL- தனது பாக்கிகளை பைசல் செய்வதில் தனக்கு நிதி அல்லது இதர பொறுப்புக்கள் இல்லை என்று வாதிட்டது. ஆனால் இந்திய கம்பெனிகள் சட்டப்படி Dow நிறுவனம் யூனியன் கார்பைடின் சொத்துக்களை மட்டுமல்ல, கடன்களையும் பொறுப்புக்களையும் வாங்கியிருக்கிறது. எனவே இந்தியச்சட்டப்படி Dow நிறுவனம் அந்தப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.

தற்போது, Dow நிறுவனம் ஆஸ்பெஸ்டாஸை தயாரிப்பது தொடர்பான தொழிலில் மிச்சிகனில் அஸ்பெஸ்டாஸ், ஆரஞ்சு ஏஜண்ட் மற்றும் டையாக்சின் ஆகியவற்றை பயன்படுத்துவதில் ஆறுகளை அசுத்தப்படுத்துவது, சம்மந்தமாக மிக பெரிய நிதிப்பொறுப்பை ஏற்கவேண்டி வந்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் அந்தப்பொறுப்பிற்கு 2.2 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்தாக வேண்டும், உடனடியாக 828- மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தாக வேண்டும். 2003 முடிவுறுவதற்குள் சுற்றுப்புறச் சூழலைப் பரமரிப்பதற்காக Dow 381-மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தாக வேண்டும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் போபால் இரசாயனத் தொழிற்சாலை இருந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பொறுப்பு Dow நிறுவனத்திற்கு இல்லையென்று கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நியூயோர்க் அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூன் 30-க்குள் இந்திய அரசாங்கம் போபால் இரசாயனத் தொழிற்சாலை இருந்த இடத்தை Dow தூய்மைபடுத்துகின்ற திட்டத்தை ஆதரிக்கும் கடிதத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது.

ஏப்ரல் 15-ல் அமெரிக்காவிலேயே இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் நகரமான சான் பிரான்ஸிஸ்கோ இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று Dow-வை கோரியது. ''போபால் பேரழிவினால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்கள் யூனியன் கார்பைடும் அதன் புதிய சொந்தக்காரான Dow இரசாயன நிறுவனமும் செயல்பட மறுத்து சும்மா இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களே, மீண்டும் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருப்பது மன்னிக்க முடியாதது'' என்று சான்பிரான்ஸிஸ்கோ நகர சூப்பர்வைசர் (மேயர்) Aaron Peskin குறிப்பிட்டார்.

Top of page