World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New US torture revelations

Former prisoners demand release of Guantanamo Bay videotapes

புதிய அமெரிக்க சித்ரவதை அம்பலம்

குவாண்டநாமோ வளைகுடா வீடியோ சுருள்களை வெளியிட முன்னாள் கைதிகள் கோரிக்கை

By Richard Phillips
21 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குவாண்டநாமோ வளைகுடாவில் கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்ட இரண்டு முன்னாள் பிரிட்டிஷ் கைதிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் ஈராக் அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெற்ற வக்கிரமான சித்தரவதைகளுக்கும் ஆப்கானிஸ்தானில் அதன் ஆரம்பம் இருந்தது என்பதற்கும் மேலும் ஒரு கண்டனத்திற்குரிய ஆதாரத்தை வழங்கியிருக்கிறது. குவாண்டநாமோ வளைகுடா சிறைமுகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கைதிகளான டேவிட் ஹிக்ஸ் மற்றும் Mamdouh Habib ஆகியோர் தாக்கப்பட்டார்கள் முறைகேடாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கு புதிய சான்று கிடைத்திருக்கிறது.

மே 13-ல் Shafiq Rasul மற்றும் Asif Iqbal, இரண்டு பிரிட்டிஷ் கைதிகளும் மார்ச்-சில் விடுதலையாகி, அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிற்கும், செனட் ஆயுத சேவை குழுவிற்கும் அனுப்பிய ''பகிரங்கக் கடிதம்'' ஒன்றில், காவலில் கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது குறித்த விவரங்களையும், குவாண்டநாமோ வளைகுடா சித்தரவதைகளை வாஷிங்டன் மறுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைமை பாதுகாப்பு அமெரிக்கச் சிறையில் புலன் விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட முழுவீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் பொது மக்களது பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். (See: http://www.ccr-ny.org/v2/reports/docs/ltr to Sentate 12may04v2.pdf).

குவாண்டநாமோ சிறைமுகாமில் இரண்டாண்டுகளுக்கு மேல் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அமெரிக்க ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Rasul-ம், இக்பால்-ம் தாங்கள் நீண்ட நாட்கள் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தவறான முறையில் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தருவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், முறைகேடாகவும், மன உளைச்சல் தருகின்ற வகையிலும் நடத்தப்பட்டதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தானில் அவர்கள் இருவரும் தாக்கப்பட்டாதகவும் தங்களது தலைக்கு நேராக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் துப்பாக்கியைக் காட்டி கொன்றுவிடுவதாக அச்சுறுதிதயதாகவும் தெரிவித்துள்ளனர்.

''குவாண்டநாமோ வளைகுடாவிற்கு நாங்கள் கொண்டு செல்லப் பட்டது முதல் (அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே கூட) நாங்கள் வெளிப்படையாக இழிவு படுத்தப்பட்டோம். இப்போது அமெரிக்க அதிகாரிகள் மறுத்து வருவதாக நாங்கள் பத்திரிகையில் படிக்கின்ற அதே முறைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தப்பட்டோம்'' என்று இருவரும் தங்களது கடிதத்தில் எழுதியுள்ளனர்.

அவர்களது கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ள புலனாய்வு முறைகளில் அடங்கும் நடவடிக்கைகள்: கைதிகளை தரையில் அமரச் செய்து அவர்களது கால்களுக்கு நடுவில் கைகளை சங்கிலிகளால் கட்டி தரையில் நீண்ட நேரம் புலன்விசாரணையின் போது அமரச் செய்தார்கள், தரையில் சங்கிலிபோட்டு கைதிகளை நிர்வாணமாக இருக்கச் செய்துவிட்டு அந்த அறைக்கு பெண்கள் கொண்டுவரப்பட்டனர்; அதிக ஒளியுள்ள விளக்குகள், அதிக இரைச்சலில் இசை, பனிபோல் உறையவைக்கும் காற்று ஆகியவற்றை பயன்படுத்தி கைதிகள் உயிர்வாழ்வதற்கு சங்கடத்தை உண்டாக்கினார்கள், கைதிகளை பயமுறுத்துவதற்கு நாய்களைப் பயன்படுத்தினார்கள்.

''ஒன்றை நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் புலன்விசாரணை நடக்கும் பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இன்றைக்கும் அவை அங்குள்ளன என்பதில் சந்தேகமில்லை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட தகவலை மறுக்கின்ற சான்றுகள் உள்ளன. எங்களுக்கு தெரியும் CCTV காமிராக்கள், வீடியோ டேப்புகள் மற்றும் புகைப்படங்கள் அங்குள்ளன நாங்கள் அங்கு இருந்தபோது புலன்விசாரணையின்போது வழக்கமாக படம், புகைப்படங்கள் எடுக்கப்பட்டன, மற்ற நேரங்களிலும் அவ்வாறு நடந்தது.''

சித்திரவதை முறைகேடுகள் பொதுவாக இங்கு எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என்று அந்த கடிதம் தொடர்கிறது. ''தனிப்பட்ட முறையில் சிறைகொட்டடிகளுக்கு செல்லுகின்ற போர்வீரர்கள் எங்களிடம் கூறியது, அவர்கள் இரும்புக் கம்பிகளால் கைதிகளை அடிப்பதை மேலதிகாரிகளுக்கு தகவல் தருவதில்லை. 'நாங்கள் விரும்புகின்ற எதையும் செய்வோம் என்று இராணுவ வீரர்கள் எங்களிடம் கூறினார்கள்.

ஒரு முறை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு கைதி தனது கூண்டில் படுத்திருந்தபோது Extreme Reaction force (ERF) என்று அழைக்கப்படுகின்ற குழுவை சார்ந்த எட்டு அல்லது ஒன்பது காவலர்கள் அந்த அறையில் புகுந்து அந்தக்கைதியை கடுமையாகத் தாக்கினர். ''அவருடைய கழுத்தில் இடித்தார்கள், முன்னர் ஒரு அறுவை சிகிச்சையினபோது உலோக கம்பி பொருத்தப்பட்டிருந்த அவரது வயிற்றில் எட்டி உதைத்தார்கள், அவரது தலையை பிடித்திழுத்து முகத்தைத்தரையில் மோதினார்கள்'' என்று அந்தக் கடிதம் தெரிவித்தது.

''அந்த அறைக்குச் சென்று அவரை உதைக்குமாறும், அடிக்குமாறும் ஒரு பெண் அதிகாரிக்கு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அந்த பெண் அதிகாரி செய்தார், அவரது வயிற்றில் உதைத்தார். இதை 'ERFing" நடவடிக்கை என்று கூறப்படுகிறது. ஏமனிலிருந்து வந்த மற்றொரு கைதி மிகமோசமாக தாக்கப்பட்டதால் அவர் இன்னமும் 18-மாதங்களுக்குப் பின்னரும் மருத்துவ மனையில் இருக்கிறார் என்று அறிகிறோம். அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று கூறப்பட்டது. இது உண்மையான சம்பவமல்ல.

''இந்த மற்றும் இதர சம்பவங்களும் எல்லாவிதமான கொடுமைப்படுத்துகிற இழிவு படுத்துகிற நடவடிக்கைகளும் அதிகார பூர்வமான கொள்கைகள் மற்றும் கட்டளைகளின் விளைவாக நடைபெறுகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்''.

தற்போது ஈராக்கில் அமெரிக்கா நடத்துகின்ற காவல் முகாம்களில் தளபதியாக உள்ள Geoffrey Miller, குவாண்டநாமோ வளைகுடாவில் பணியாற்றும் போது எல்லா கைதிகளின் முடிகள் நீக்கப்பட்டன, அவர்களது தாடிகள் நீக்கப்பட்டன, புலன் விசாரணை காலத்தில் ஒத்துழைக்கத் தவறிவிட்டார்கள் என்பதற்காக முடி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. கைதிகள் ''ரோமியோ'' பிளாக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறைமுகாம் விதிகளை மீறியதற்காக அவர்கள் அங்கு நிர்வாணமாக வைக்கப்பட்டனர், அவர்களது அறைகளில் ஒரு பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இரண்டு கப்புகளை வைத்திருந்தார்கள் அல்லது அளவிற்கு அதிகமாக டாய்லட் பேப்பர்களை வைத்திருந்தார்கள் என்பதே குற்றச்சாட்டாகும்.

''சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த புகார்கள் அனைத்தையும் பதிவு செய்து நிர்வாகத்தின் கவனத்திற்கு இவை அனைத்தையும் நிச்சயம் கொண்டுவந்திருக்ககும் எபதில் சந்தேகமில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே பகிரங்கமாக இன்றைய தினம் மூத்த அதிகாரிகள் குவாண்டநாமோ வளைகுடா நிலவரங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி இத்தகைய பொய்களை கூறுவது அசாதாரணமானது என்று தோன்றுகிறது. பதிவேடுகளும், புகைப்படங்களும் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம், அவை அனைத்தையும் உங்கள் நாட்டு மக்களுக்கும் எங்கள் நாட்டு மக்களுக்கும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் விரைவாக நீங்கள் அப்படி செய்தால்தான் பொது மக்கள் தங்களது சொந்த நீதி நியாயங்களை முடிவு செய்ய முடியும்''

Tarek Dergoul

இந்த ''பகிரங்க கடிதம்'' பிரசுரிக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மார்ச் மாதம் குவாண்டநாமோ வளைகுடாவிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மற்றொரு கைதியான Tarek Dergoul, Rasul, மற்றும் இக்பால்-ன் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிற வகையில் பிரிட்டனின் செய்திப்பத்திரிகையான ஒப்சர்வருக்கு உறையவைக்கும் பேட்டி ஒன்றை தந்திருக்கிறார். 26-வயதான Dergoul இரண்டாண்டுகள் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த போது மிகப்பெருமளவிற்கு முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி சென்ற ஞாயிற்றுக்கிழமை வரை தனது அனுபவத்தைப் பற்றி பகிரங்கமாக விளக்க முடியா அளவிற்கு இருந்துவந்தார். இன்னமும் அவருக்கு அந்த மன பிராந்தி உண்டு, திடீரென்று நினைவாற்றலை இழந்து விடுவார், தலைவலியும், வரும் சித்தரவதைக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிலையத்தில் இன்னும் சிகிச்சை பெறுகிறார்.

அபு கிரைப் சிறைச்சாலையில் பயன்படுத்தப்பட்ட நடைமுறைகள் பாலியல் இழிவு படுத்துதல் உட்பட குவாண்டநாமோ வளைகுடா நடவடிக்கைகளை எதிரொலிப்பவைதான் என்று Dergoul கூறினார். அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தன்னை வேறு நாடுகளுக்கு ''மாற்றிவிடப்போவதாகவும்'' அங்கே மோசமான சித்தரவதை தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சுறுத்தினர். ஒரு கைதிக்கெதிராக தீவிர எதிர்தாக்குதல் படை (Extreme Reaction Force- ERF) ஏவி விடப்படும்போதுதான் அவர்களது நடவடிக்கைகள் ராணுவ அதிகாரிகளால் டிஜிடல் வீடியோவில் பதிவு செய்யப்படதாக தெரிவித்தார். அத்தகைய டேப்புகள் இருக்கின்றன என்றும் அவை குவாண்டநாமோ வளைகுடா ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் ஊடகத்திற்கு குவாண்டநாமோ கூட்டு நடவடிக்கை படைப்பிரிவின் பிரதிநியான லெப்டினட் கர்னல் Leon Sumpter தெரிவித்தார்.

Dergoul ஆப்கானிஸ்தானிய வடக்கு கூட்டணிப்படைகளால் கைது செய்யப்பட்டார் மற்றும் 5,000 டாலர்கள் ரொக்க பரிவர்த்தனைக்குப்பின் அவர் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கும் தாலிபானுக்கும் அல்லது ஒசமா பின்லேடனுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை அமெரிக்கப் போர் விமானங்கள் ஒரு வீட்டின் மீது குண்டு வீசி தாக்கியபோது அவர் காயமடைந்தார் அந்த வீட்டில் அவர் தங்கியிருந்தார். அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெறும் வன்முறை, பாலியல் முறைகேடுகள், அங்கு வழக்கமான நடைமுறைகள்தான் என்று அவர் கூறினார்.

''நான் [பாக்ராமிற்கு] தலைச்சுமையோடு வந்தபோது,'' என்னை நிர்வாணமாக்கி 15-அல்லது 20- MPs (ராணவப் போலீசார்) உள்ள ஒரு பெரிய அறைக்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் புகைப்படங்களை எடுக்கத் துவங்கியும், உடல் முழுவதும் துருவித்துருவி ஆராய்ந்தனர். அப்போது அவர்கள் மிக அருகிலிருந்து (close-ups) புகைப்படங்களையும் எடுத்தனர், என்னுடைய அந்தரங்க உறுப்புக்களிலும் கவனம் செலுத்தினர்'' என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் சிறைக்காவலர்கள் துப்பாக்கிகள் தரைப்பந்து பேட்டுகளை (baseball bats) காட்டி கைதிகளை மிரட்டிக் கொண்டிருந்ததை Dergoul பார்த்தார், அல் கைய்டா உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டதால், அமெரிக்க விமானத்தளத்தில் 20 முதல் 25 முறைவரை அவரிடம் புலன்விசாரணை நடைபெற்றது.

''பனி வெடிப்பினாலும், இதர காயங்களினாலும் நான் மிகுந்த வேதனையில் இருந்தேன் மற்றும் நான் எழுந்து நிற்க முடியாதளவிற்கு பலவீனமாக இருந்தேன். அப்போது உறைபனி குளிரில் ஒரு சலவை இயந்திரத்தைப் (washing machine) போல் ஆடிக்கொண்டும், நடுங்கி கொண்டும் இருந்தேன்.துப்பாக்கி முனையில் என்னை விசாரித்தனர். நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் மட்டுமே வீடு திரும்ப முடியும் என்று கூறினார்கள். இறுதியாக நான் சம்மதித்தேன், நான் டோரா-போராவில் (Tora Bora) இருந்திருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன்-- நான் எப்போதுமே பில்லேடனை சந்திக்கவில்லை, என்பதை மட்டும் நான் வலியுறுத்திக் கூறினேன், நான் அவரை சந்தித்ததாக ஒப்புக்கொள்ளவில்லை''

''ஏற்கெனவே என்னை அவர்கள் என்னை சோதித்தும், எனது அறையிலும் இரண்டு முறை சோதனை நடத்தினர், என்னுடையது ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை, எனது திருக்குரானைத் தொட்டார்கள், எனது மூடிய அந்தரக பாகங்களை தொட்டார்கள், மீண்டும் என்னை ஆத்திரமூட்டுவதற்காக சோதனையிடப் போகிறோம் என்று கூறினார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன், ஏனென்றால் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதற்கு ''நான் பிணமல்ல''

''ஒரு காவலர் தனது ரேடியோவில் ''ERF", ''ERF", ''ERF",- என்று அழைத்தார் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும்--- தீவிர எதிர் தாக்குதல் படையை (Extreme Reaction force) சேர்ந்தவர்கள். ஐந்துபேர் கலவர தடுப்புக் கவசங்களோடு (riot gear) எனது அறைக்கு வந்தார்கள் அந்த ஐவரையும் கோழைகள் என்று நான் அழைப்பேன். மிளகுப்பொடியை என் முகத்தில் தூவினார்கள், நான் வாந்தி எடுக்கத் துவங்கினேன் ஐந்து கோப்பைகள் நிறைய வாந்தி எடுத்தேன். என்னை கீழே தள்ளினார்கள், தாக்கினார்கள், விரல்களால் கண்ணில் குத்தினார்கள், எனது முகத்தை கழிப்பறை நீர் தொட்டியில் முக்கிக்கழுவினார்கள். ஒரு மிருக்த்தைப் போல் என்னை கட்டினார்கள், அதன் பிறகு மண்டியிடச் செய்தார்கள், என்னை எட்டி உதைத்தார்கள், குத்தினார்கள். இறுதியாக என்னை வெளியிலுள்ள சிறைக்கூண்டிற்கு இழுத்து சென்றார்கள் எனது தாடி, தலைமுடி, கண் புருவங்கள் ஆகியவற்றை சவரம் செய்து விட்டார்கள்''

ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் Kandahar சிறை முகாமிற்கு மாற்றப்பட்டார். அவரது கால்களில் பனிவெடிப்பு ஏற்பட்டதற்கு சிகிச்சையளிக்காததால் அது புண்ணாகி அவரது கட்டைவிரலை, வெட்ட வேண்டி வந்தது. துப்பாக்கி குண்டு காயத்தினால் அவரது கையில் ஒரு பகுதியும் வெட்டி எடுக்கப்பட்டது.

குவாண்டநாமோ வளைகுடாவுக்கு சங்கிலியால் பிணைக்கப்பட்டு கண்கள், கட்டப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னர் கன்டஹாரில் மூன்று மாதங்கள் சிறையிலுருந்த போது இரண்டு முறைதான் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஒப்சர்வருக்கு அவர் தெரிவித்தார். ஓராண்டிற்கு மேலாக Camp Delta தனிமைச்சிறையில் ''எந்தவிதமான வசதியும்'' இல்லாமல் வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறைக்கைதிகளின் வேலைநிறுத்தம் மற்றும் கண்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர் என்பதால் அவரை ERF குறிவைத்தது.

சென்ற ஆண்டு ஒரு மாதம் வரை ஒவ்வொரு நாளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு விசாரணை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு எட்டு மணி நேரம்வரை தனியாகவிடப்பட்டார். அங்கு குளிர் சாதன (air condition) இயந்திரம் அதிகுறைந்த வெப்பநிலையில் (உறைபனிநிலையில்) முடுக்கவிடப்பட்டதால், மலம் கழிக்க முடியவில்லை. வெட்டி எடுக்கப்பட்ட தனது உடல்பகுதியில் குளிர் காற்றுபட்டது அவருக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இறுதியாக அவர் சில மணி நேரம் அவரது அறைக்கு கொண்டு செல்லப்படுவார் மீண்டும் உறைபனி நிலை புலன் விசாரணை அறைக்கு கொண்டுவரப்படுவார். ''இப்படி அவர்கள் செய்தது தகவல்களை பெறுவதற்காக அல்ல. உறுதியைச் சிதைப்பதற்காக'' என்று அவர் கூறினார்.

லண்டனிலே பிறந்து லண்டனிலே வளர்ந்த Dergoul தான் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதற்கு முன்னர் ''அரசியல் சார்பற்றவராக'' இருந்ததாக குறிப்பிட்ட அவர்: ''இப்போது நான் அமெரிக்காவை ஒரு பயங்கரவாத அரசாகவே பார்க்கிறேன், ஏனென்றால் அதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். நம்மை பயங்கரமாக பயமுறுத்தியிருக்கிறார்கள் அதற்கு பங்களிப்பு செய்துள்ள பிரிட்டனை கண்டிக்கிறேன்'' என்று அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஹிக்ஸ் மற்றும் ஹபிப் சித்தரவதை

மேலும் மேற்கொண்டவற்றில், ஆஸ்திரேலியாவின் கைதியான டேவிட் ஹிக்சின் வழக்கறிஞர் ஸ்டீபன் கென்னி சென்ற வாரம் அளித்த ஒரு பேட்டியில் தனது 28-வயது கட்சிக்காரர் சிறையில் திட்டமிட்டு ''முறைகேடாக நடத்தப்பட்டு'' வருவதாக குறிப்பிட்டார் குவாண்டநாமோ வளைகுடா சிறை முகாமில் குற்றச்சாட்டு எதுவுமில்லாமல் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக ஹிக்ஸ் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

வழக்கறிஞர் கெனி அமெரிக்க ராணுவத்துடன் செய்து கொண்ட சிறப்பு ஒப்பந்தப்படி குவாண்டநாமோ வளைகுடா சிறைமுகாமிற்குள் நிலவும் நிலவரங்களை வெளியிடக்கூடாதென்று சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார், அவர் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது ''நான் குறிப்பிடுவது திட்டவட்டமான சம்பவங்களைப் பற்றி தனிப்பட்ட காவலர்களை அல்ல, அமெரிக்கப் படைகளின் சங்கிலித்தொடர் போன்ற ராணுவ தலைமை ஓரளவிற்கு உயர்மட்ட அதிகாரி அங்கீகரித்துள்ள அனைவருக்கும் தெரிந்த நடவடிக்கையைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.'' என்று தெரிவித்தார். 2002-லேயே இந்த முறைகேடுகள் பற்றி ஹிக்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு புகார் கூறியுள்ளார் என்று தெரிவித்த அவர் இந்தத் தகவல் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றார்.

ஹிக்ஸ் நடத்தப்பட்ட விதம் குறித்து கூடுதல் விவரங்கள் மே 19-ல் வெளிவந்தன, குவாண்டநாமோ வளைகுடாவில் பக்கத்து அறையில் கைதியாக இருந்த ஷா முஹமதை ஆஸ்திரேலிய ஊடகம் பேட்டி கண்டது. அவர் முன்னாள் ரொட்டிக்கடைக்காரர் அவரை வடக்குக் கூட்டணிப்படைகள் பிடித்து அமெரிக்கப்படைகளிடம் ஒப்படைத்தன, அவர் கேம்ப் டெல்டா சிறைச்சாலையிலிருந்து சென்ற ஆண்டு விடுதலை செய்யப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஹிக்சை அமெரிக்கப் போர் வீரர்கள் மிகக்கொடூரமாக தாக்கினார்கள், சங்கிலியால் பிணைத்தார்கள், ஆப்கானிஸ்தானில் மூன்று முறை இரண்டு மணிநேர புலன்விசாரணைகளின் போது அவர் இவ்வாறு தாக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டதையும், புலன் விசாரணையும் படம் நாடா (videotaped) பிடிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கப் போர்வீரர்கள் ஹிக்சை அவரது இனப் பின்னணி காரணமாக திட்டமிட்டு குறிவைத்து தாக்கினார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். Sydney Morning Herald பத்திரிகை ஹிக்ஸ் ''மணிக்கணக்காக தாக்கப்பட்டும், தூங்க விடாது தடுக்கப்பட்டும், புலன்விசாரணைகளின் போது அவர் விளங்குகளால் பிணைக்கப்பட்டார்'' என்று அறிவித்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களில் அவர் மிக கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக நீண்ட நேரம் இவ்வாறு முறைகேடாக நடத்தப்பட்டார் என்று அந்தப் பத்திரிகை தெரிவித்தது.

ஸ்டீபன் கென்னி மற்றும் டெர்ரி ஹிக்ஸ், டேவிட் ஹிக்சின் தந்தை ஆகிய இருவரும் ஹோவார்ட் அரசாங்கம் இந்த சம்பவங்கள் தொடர்பாக தன்னிடமுள்ள எல்லாத் தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஹோவார்ட் அரசாங்கம், புஷ் மற்றும் பிளேயர் நிர்வாகங்களைப் போல் குவாண்டநாமோ வளைகுடா கைதிகள் ''மனித நேயத்தோடு'' நடத்தப்படுவதாக குறிப்பிட்டு கென்னிக்கு எந்த விவரத்தையும் தர மறுத்துவிட்டது. ஆஸ்திரேலிய புலனாய்வு ஏஜென்ஸி ஹிக்சை புலன் விசாரணை செய்த ஒலிநாடாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன ஆனால் அந்த விபரங்களையும் இதர ஆவணங்களையும் தருவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துவிட்டது. அவை வெளியிடப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுமென்று கூறிவருகிறது.

வியாழக்கிழமையன்று மொஹமத் அபீப் வழக்கறிஞர் Stephen Hopper பேட்டியளிக்கும் போது தனது கட்சிக்காரர் எகிப்தில் திட்டமிடப்பட்டு மின்சார அதிர்ச்சி தரப்பட்டு, அடித்தார்கள் கொன்று விடுவதாக, மிரட்டினார்கள் அதற்குப் பின்னர் குவாண்டநாமோ வளைகுடாவில் உடலாலும், உள்ளத்தாலும் முறைகேடாக நடத்தப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

 

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கு முன்னர் 2001 அக்டோபரில் பாக்கிஸ்தானில் அபீப் கைது செய்யப்பட்டார். அமெரிக்க ராணுவத்தின் கட்டளைப்படி ஆஸ்திரேலிய தூதரகஆதரவோடு அவர் எகிப்திடம் ''மீண்டும் ஒப்படைக்கப்பட்டார்.'' எகிப்தில் ஐந்து மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு 2002 மே மாதம் குவாண்டநாமோ வளைகுடாவுக்கு அனுப்பப்பட்டார். (See: "Howard government complicit in detention of Australian citizen by US military

நேற்றிரவு ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டியில், Tarek Dergoul, தான் குவாண்டநாமோ வளைகுடாவில் அபீப்பின் சிறை அருகில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு இந்தக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தினார். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர் Hopper இடமும், Habib-ன் மனைவி மஹாவிடமும் 48 வயதான நான்கு குழந்தைகளின் தந்தையான அபீப் தாக்கப்பட்டதையும் மிளகுப்பொடி தூவப்பட்டதையும் தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலத்திற்கு அபீப் தனிமைசிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வெப்ப நாடுகளில் உருவாகும் தோல் காய்ப்புகள் உள்ளன, அவர் நடப்பதற்கு இயலாத நிலையிலும், மனரீதியாக நிதானம் தவறிய நிலையிலும் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அபீப்பிடம் அடிக்கடி Dergoul தனது குடும்பத்தை அமெரிக்க ஏஜெண்டுகள் கொன்றுவிட்டார்கள் என்றும் அவரது குடும்பத்தினர் அனுப்பிய கடிதங்கள் உண்மையானவை அல்ல, போலியானவை என்று தெரிவித்தார். 18- மாதங்களுக்கும் மேலாக தனது கணவருடன் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மகா அபீப் (Maha habib) தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய குடிமகனை சித்திரவதை செய்ய ஆஸ்திரேலிய அரசாங்கம் ''குற்றத்திற்கு துணைபுரிந்தும், உதவியதையும்'' எகிப்திடம் அபீப்பை ஒப்படைப்பதற்கு யார் அங்கீகாரம் கொடுத்தார்கள், என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ஹோப்பர் கேட்டுக்கொண்டார். முறைகேடாக கைதிகள் நடத்தப்படுவது பற்றிய குற்றச்சாட்டுக்கள் தற்போது எண்ணிறந்தளவிற்கு வந்து கொண்டிருப்பதால் ஆப்கானிஸ்தான் மற்றும் குவாண்டநாமோ வளைகுடா கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டீபன் கென்னி கேட்டுக்கொண்டார்.

குவாண்டநாமோ வளைகுடா, அபு கிரைப் மற்றும் இதர அமெரிக்க ராணுவ சிறைச்சாலைகளில் நடைபெறும் பிறரை இழிவுபடுத்தி மகிழ்தல், பாலியல் இழிவுகள், இதர சித்தரவதை வடிவங்கள், புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்'' உண்மையான முகத்தை காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளோடு சட்ட விரோதமாக, எந்தவித ஆத்திர மூட்டலும் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் படையெடுத்தது ஜெனீவா ஒப்பந்தங்களின்படி போர் குற்றங்களாகும் மற்றும் இது ஹிட்லரது ஜேர்மனியின் நாஜி நடவடிக்கைகளுக்கு ஒப்பானது. இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அனைவரும் அரசாங்கத்தின் உச்ச நிலையிலிருந்து கடைசி ராணுவ வீரர்வரை இந்த நடவடிக்கைகளுக்கு காரணமான அனைவரும் குற்றவாளியாக நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Top of page