World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

NATO expansion and the political crisis in Europe

Part two

நேட்டோ விரிவாக்கமும் ஐரோப்பிய அரசியல் நெருக்கடியும்

பகுதி 1 | பகுதி 2

By Niall Green
11 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

இது, ஜூன் 10 தொடங்கிய நேட்டோ விரிவாக்கம் பற்றிய இரு கட்டுரை தொடரின் முடிவு பகுதியாகும்

அட்லான்டிக் பிளவு

உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பெரும் பகுதியில், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே அமெரிக்காவிற்கெதிரான ஒப்பீட்டு ரீதியான தங்கள் வலுவற்ற தன்மையைக் கடக்கும் வகையில் ஒற்றை ஐரோப்பிய சந்தை, நாணயமுறை, வர்த்தக கூட்டு என்பதை தோற்றுவிக்க முயன்றன; சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பா உறுதியாக இருக்கும் என்ற கருத்தில் இது அமெரிக்காவால் பரந்த அளவில் ஊக்கப்படுத்தப்பட்டு வந்தது.

பனிப்போர் காலத்தில் USSR க்கு எதிரான பொது விரோதப்போக்கில், அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும், சிற்சில நேரம் தங்களுள் கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், அவ்விரோத நலன்களுள்ளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டனர். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) என்பது இதன் ஆரம்ப வெளிப்பாடுகளுள் ஒன்றாகும்; இது அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான ஒரு சக்திமிக்க இராணுவ அமைப்புக் கூட்டாக செயல்படுவதாகும்.

ஆனால், NATO ஒரு சோவியத் எதிர்ப்புக் கூட்டாக நிறுவப்பட்டிருந்தபோதிலும், 1991ல் சோவியத் தகர்ப்பிற்குப்பின் இது ஒருபோதும் சுறுசுறுப்பாக இயங்காதிருந்திருக்கிறது இதற்குப் பின் வந்த ஆண்டுகளில் எல்லாம், தொடர்ந்து, தீவிர இராணுவ நடவடிக்கைகளில், முன்பு தன்னுடைய செயல்முறைகளுக்கு அப்பாலான இடம் எனக்கருதிய ஆப்கானிஸ்தான் உட்பட, அது ஈடுபட்டு வருகிறது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முன்னர் கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தி, உலக முதலாளித்துவத்திற்குப் புதிய பகுதிகளைத் திறந்துள்ளது. இது மேற்கு பெருவர்த்தகம், வங்கிகள் இவற்றிற்கு பெரும் அளிப்பு போல் கிடைத்து, அவை அப்பகுதியின் பழைய ஸ்ராலினிச குண்டர்கள் தட்டுடன் இணைந்து, கடந்த பத்தாண்டுகளாக ஈவிரக்கமற்று சுரண்டுகின்றன. அதே நேரத்தில், சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, நேட்டோ போன்ற போருக்குப் பிந்தைய நிறுவனங்கள் கட்டுப்படுத்த முயன்ற ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான மோதல்களை மீண்டும் எழச்செய்வதற்கான சூழல்களையும் உருவாக்கி இருக்கிறது.

1990கள் முழுவதும் நேட்டோ, முன்பு மூடப்பட்டிருந்த பகுதிகளில் அதன் முக்கிய உறுப்பினர்களின் பொருளாதார, புவிசார் அரசியல் நலன்களைக் காக்கும் முறையில் தீவிரமாய் செயலில் இறங்கியது, இதன் உச்சகட்டம் 1999ல் அது சேர்பியாவின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியதில் நிகழ்ந்தது. ஆனால் நேட்டோ சக்திகளின் நிலைப்பாடு அதிகமாக வெவ்வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கிறது: இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையும், இராணுவ வெறியும்தான், வாஷிங்டன் ஒருபுறமும், வலுவற்ற பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் மறுபுறம் இருக்கும் நிலைதான் இந்த அடிப்படையைக் கொடுத்துள்ளது.

இந்தப் புதிப்பிக்கப்பட்ட அதிகாரத்திற்கான போராட்டத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மிகப்பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் அடர்த்தியாக இருக்கும் மத்திய கிழக்கையும், மத்திய ஆசிய பகுதியையும் கட்டுப்பாட்டிற்குள் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான். 1997ம் ஆண்டு, ஜனாதிபதி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) "ஆசியாவிற்கான புவி மூலோபாயம்" என்ற கட்டுரையை எழுதி, அதில் அப்போதைய அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்:

"உலகின் ஒரே பெரும் சக்தி என்று அமெரிக்கா வெளிப்பட்டுள்ளது இப்பொழுது, ஒரு ஒருங்கிணைந்த, பரந்த யூரேசியக் கட்டாய மூலோபாயத்தைக் கடைப்பிடிக்க வைக்கிறது; இப்பணி, கருணையுடன் கூடிய அமெரிக்க மேலாளுமையை, வலுவற்ற ஐரோப்பிய நாடுகள் மீது நீடித்து, அவை அமெரிக்கா, யூரேசிய கண்டத்தை ஆதிக்கம் செலுத்த உதவினால் அவற்றிற்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கப்படவேண்டும்" என்று அவர் எழுதினார்.

இந்நோக்கத்திற்காக, நேட்டோ, "யூரேசிய முக்கிய பகுதியில் ஒரு தயார்நிலையில் இருக்கும் அமெரிக்க அரசியல், இராணுவச் செல்வாக்கு சக்தியாக விளங்கும்" என்றும், இது தேவைக்கேற்ப பழைய ஸ்ராலினிச அரசுகளை சூழ்ந்து கொள்ள விரிவாக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறு அது அமெரிக்காவின் நிலையை அது உயர்த்தும் என்றும் ஆலோசனையாக பிரிஜேஜென்ஸ்கி தெரிவித்தார்.

ஐரோப்பிய சக்திகள் கிழக்குப் புறம் செல்வாக்கைப் பெருக்குவதை, அதே நேரத்தில் நேட்டோ கூட்டு விரிவுபடுத்தப்படுதலால் தடுக்க முடியும் என்றும் பிரிஜேஜென்ஸ்கி தெரிவித்தார். "ஒரு பரந்த ஐரோப்பாவும், விரிவாக்கப்பட்டுவிட்ட நேட்டோவும் அமெரிக்கக் கொள்கையின் குறுகிய கால, நீண்ட கால நலன்களுக்கு உகந்ததாக இருக்கும். ஒரு பரந்த ஐரோப்பா, அமெரிக்கச் செல்வாக்கையும் விரிவுபடுத்தும்; அதேநேரம் ஒரு ஐரோப்பா அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து அமெரிக்காவிற்கு சவால் விடமுடியாத அளவிற்கும் இது பாதுகாப்பைத் தரும்."

ஐரோப்பிய ஐக்கியத்தின் விரிவைக் கீழறுக்கும் தந்திரோபாயம் யூரேசியாமீது அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவுதலுக்கு சவால் விடும் தன்மை, 2003 ஈராக் போர் ஆரம்பமாவதற்கு முன்தான் "பழைய ஐரோப்பா", "புதிய ஐரோப்பா" என பிளவுற்று அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. வாஷிங்டனுக்கு, நேட்டோ சார்புடைய, EU உறுப்பு நாடுகள், குறிப்பாக பிரிட்டன், துணை நின்றன. இவை அமெரிக்கா ஆதரவு அளித்த மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் EU வில் வேட்புமனுக்கள் கொடுத்திருந்த நாடுகளும் ஆகும். தன்னுடைய செல்வாக்கை ஐரோப்பாவில் முழுவதுமாக படரவிட வாஷிங்டனால் முடிந்தது; பிரான்ஸ் - ஜேர்மனி இரண்டும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவுமாறும் செய்ய முடிந்தது. அவ்விரு நாடுகளும் மத்திய கிழக்கில் கட்டுப்பாட்டிற்கு நடக்கும் போட்டியில் ஐரோப்பிய தலைநகரங்கள் பின்தங்கிவிடக் கூடாதென்று முயன்றிருந்தன.

எனவே, பனிப் போர்க்க்காலத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு, நேட்டோ, அமெரிக்கா தன்னுடைய விருப்பத்தை ஐரோப்பா மீது வலுவுடன் சுமத்தும் கருவியாகப் போய்விட்டது. இந்நிலைக்கு ஐரோப்பிய கண்டத்தின் சக்திகள் இதற்கு எவ்வாறு பதிலளித்துள்ளன?

பிரான்சும், ஜேர்மனியும் ஐரோப்பாவில் இப்பொழுது இருக்கும் பொருளாதார ஒருங்கிணைப்பின் கட்டமைப்பிற்கு இராணுவத் திறனை சேர்க்க மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளை செய்திருக்கின்றன, இதன் மூலம் ஐரோப்பாவை தளமாகக் கொண்ட மூலதனம், அதன் அமெரிக்காவுடனான பேரத்தில் மிகவும் வலிந்த முறையில் ஐரோப்பிய மூலதனத்தின் நலன்களை உறுதிப்படுத்த உதவும் என அவை நம்பின. இது அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள நேட்டோ அமைப்பினின்றும் தனித்த முறையில் திறமையுடன் இயங்கும் என்று கருதப்பட்டது, ஆனால் இது சாதிக்கக் கூடியது அதிக கடினமானது என்பதை நிரூபித்திருக்கிறது.

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி மித்திரோனும், ஜேர்மன் அதிபர் கோலும், மிகுந்த எச்சரிக்கையுடன் 1991 EU மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் மூலம் ஒரு பொதுவான ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பிற்கு வழிவகை செய்ய முற்பட்டனர். அக்கால கட்டத்தில் இருந்து, EU விற்குள்ளேயே ஐரோப்பிய இராணுவ செயல்திட்டம் பற்றி உடன்படுவதில் போராட்டம் ஏற்பட்டுள்ளன. பிரிட்டன் பலமுறையும் நேட்டோவிலிருந்து விலகிச் செல்வதற்குத் தடைபோட்டு வருகிறது.

2000ம் ஆண்டில், சேர்பியாவின்மீது நேட்டோ போர் தொடுத்தபின், பல ஐரோப்பிய கருத்தாய்வாளர்களும் EU தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தை தங்கள் கொல்லைப்புற பிரச்சினைகளின் தீர்விற்கு நம்பியிருக்கவேண்டிய நிலை பற்றி கவலைப்பட்டார்கள்; ஐரோப்பிய பாதுகாப்பு அமைச்சர்கள் 60,000 பேர் கொண்ட ஐரோப்பிய விரைவு விளைவுப் படை (European Rapid Reaction Force) ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால், ஐரோப்பிய சக்திகள் நேட்டோவைப் பொறுத்தவரையில் இதன் தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர இயலவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவு அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் இப்பொழுது போராட்டம் நிகழ்ந்து வருகின்றது; இதில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பலப்படுத்தப்படுவதற்கு வகை காணப்படுவதுடன், அதேவேளை ஒரு புதிய இராணுவ கட்டுப்பாட்டு அமைப்பு, பாதுகாப்புப் பிரிவு நிறுவப்படுகிறது. இந்த ஆவணம் "பொது பாதுகாப்பாகவும் போகக் கூடிய ஒரு பொது பாதுகாப்புக் கொள்கை" ஒன்றை வடிவமைக்கும் அதேவேளை, ஒரு புதிய ஐரோப்பிய வெளியுறவு அமைச்சருடன் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் உருவாக்கப்பட முயற்சிக்கின்றது.

மீண்டும் வாஷிங்டன் தன்னுடைய நட்பு நாடுகளின் உதவியுடன், முக்கியமாக பிரிட்டன் உதவியுடன், இந்த ஐரோப்பிய இராணுவத்திட்டத்தை கருச்சிதைக்க முயற்சிக்கிறது. அமெரிக்க, பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தில் உள்ள சில கூறுகள் பிரிட்டனில் ஒரு வாக்கெடுப்பு EU பற்றி நடத்தப்படவேண்டும் என்று பிளேயரைக் கட்டாயப்படுத்தின; இதை ஒட்டி ஐரோப்பா அமெரிக்காவில் இருந்து சுதந்திரமாக இருக்கக் கூடிய தன்மை நாசத்திற்குட்பட்டுவிடும் என்று இவை கருதுகின்றன. EU வின் அரசியல் அமைப்பு அனைத்து EU உறுப்பினர்களாலும் ஏற்கப்பட்டாலும், அமெரிக்க கூட்டு கொண்டுள்ள நாடுகளான பிரிட்டன் போன்றவை, "புதிய ஐரோப்பாவின்" தலைமை என்ற முறையில் கீழைப்பகுதியில் இருந்து சேர்ந்துள்ள நாடுகளுடன் சேர்ந்துகொண்டு நேட்டோவிற்கு எதிராக ஐரோப்பிய பாதுகாப்பு சக்தி பலவீனம் அடைய செயல்படும்.

ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவசக்தி நிறுவப்பட்டால், அது EU உறுப்பினர்களின் "முக்கிய" உறுப்பினர்களைக் கொண்டு, வாஷிங்டனுடைய நெருங்கிய உறவுநாடுகளை தள்ளி வைத்துவிட்டு, முக்கியமாக பிரெஞ்சு ஜேர்மனியப் படைகளைத்தான் கொண்டிருக்கும். எப்படிப்பார்த்தாலும் அமெரிக்கா தன்னுடைய முக்கியத்துவம் நிறைந்த பங்கை, அதாவது ஐரோப்பாவின் பெரிய இராணுவ அமைப்பு நேட்டோ என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டு விடும்.

அமெரிக்காவைத் தொடர்ந்து நம்பியிருக்கவேண்டிய நிலை

இதன் விளைவாக EU வின் இராணுவக் கொள்கை தவிடுபொடியான நிலையில் இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை பேரவாவுடனான திட்டங்களைக் கொண்டு, நேட்டோவிலிருந்து சுதந்திரமாக இருக்கவேண்டும் என்ற கருத்து நிறைவேறாத நிலையில், அவை பிரிட்டனுடன் சேர்ந்து, 2007 ஐ ஒட்டி 1500 பேர் அடங்கிய பிரிவு வீதம் அரை டசின் பிரிவுகளை, "ஐரோப்பிய போர்க் குழுக்கள்" என்ற பெயரில் அமெரிக்க, நேட்டோ நலன்களுக்கு புறத்தே, ஆபிரிக்கா போன்ற இடங்களில் தலையிடுவதற்கு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இப்போதுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ மேன்மையைவிட, அது இதைக்கொண்டு மற்றவர்களை மிரட்டவும் அடிபணியவும் பயன்படுத்துகிறது என்றாலும், ஐரோப்பிய சக்திகள் நேட்டோவின் தளையில் இருந்து தம்மை அகற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு இன்னும் இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, ஐரோப்பாவை தளமாக கொண்ட மூலதனம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத்தான் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இரக்கமற்ற புதிய சுரண்டலை மேற்கொள்ளுவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறது. இது 1990ல் பழைய யூகோஸ்லாவியாவில் நிரூபிக்கப்பட்டது; ஐரோப்பியர்கள் நாட்டை உடைப்பதற்கும் இறுதியில் சேர்பியாவை அடிபணிய வைப்பதற்கும் அமெரிக்க ஒத்துழைப்பைத்தான் நாடினர். ஜோர்ஜ் புஷ் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை உலகம் முழுவதும் நவீன- காலனித்துவ சாகச வாதத்திற்கான இடக்கரடக்கலாக அறிவித்தவுடன், ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் ஆரவாரத்துடன் இதன்பின் சேர்ந்து கொண்டது; 9/11 தாக்குதல்கள் கொடுத்த திறனின் அடிப்படையில் அமெரிக்க தாக்குதல்களின் நிழலில் அவை தங்களுடைய நலன்களையும் விரிவாக்கிக் கொள்ளலாம் என்றுதான் கருதின.

பிரிட்டனில் இருக்கும் முதலாளித்துவம் அமெரிக்க இராணுவ வாதத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்து தன்னுடைய கொள்ளை முறையை தொடரமுடியும்போது, அவற்றின் ஜேர்மனிய, பிரெஞ்சு சரிநேர் இணையர்களும் தாங்களும் ஏன் அவ்வாறு அமெரிக்க நவீன-காலனித்துவ கொள்ளையினால் நன்மை பெறக் கூடாது என்றுதான் நினைக்கின்றன. அக்டோபர் 2003ல், சிராக்கும், ஷ்ரோடரும் அமெரிக்கா ஈராக்கின்மீது நடத்திய படையெடுப்பை விமர்சித்த சில மாதங்களிலேயே, இரு நாடுகளும், ஆக்கிரமிப்பு நாடான அமெரிக்காவிற்கு ஈராக் நாட்டின் கட்டுப்பாட்டை அளிக்கும் ஒரு ஐ.நா தீர்மானத்தில் கையெழுத்திட்டன. பிரான்ஸ், ஜேர்மனிய முதலாளித்துவ வர்க்கங்கள் குறுகிய நலன்களை மட்டுமே ஈராக்கில் இருந்து இப்பொழுது பெறுவது பற்றி தொடர்ந்து பிளவுபட்டுள்ளன மற்றும் அமெரிக்காவானது ஐரோப்பிய நலன்களுக்கு எதிராக தன்னுடைய மேலாளுமையை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு அதை நிறைவேற்றும் என்பதை அவை உணர்ந்துள்ளன.

இரண்டாவதாக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சுற்றி தாழ்ந்த நிலையில் வருவதற்குக் காரணம் உள்நாட்டிற்குள் மிகக் கொந்தளிப்பான சமூக நிலைமை இருப்பதாகும். EU வின் சமூக-நலன்கள் எதிர்ப்புத் திட்டங்கள், அதன் உறுப்பு நாடுகள் தொழிலாள வர்க்கத்தை தாக்கும் நோக்கத்துடன் செயல்படும் வகை, கண்டம் முழுவதும் மகத்தான அளவில் போரெதிர்ப்பு உணர்வுடன் இணைந்திருக்கும் தன்மை, இவையனைத்தும் தோற்றுவித்த நிலைமையில், ஐரோப்பிய செல்வந்தத் தட்டு ஆபத்தான தன்மையில் அம்பலப்பபட்டு நிற்பதாய் உணர்கின்றது. 2003ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் காட்டப்பட்ட போர் எதிர்ப்பு இயக்கத்தினால், ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்காவுடனான எந்த மோதலும் இன்னும் கூடுதலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தை இயங்கச்செய்துவிடும் மற்றும் தங்கள் உயிர்வாழும் தன்மைக்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பதை நன்கு அறிந்துள்ளன.

மேலும், ஓர் எழுச்சியைக் காட்டியுள்ள மக்களிடையே அமெரிக்க ஆக்கிரமிப்பு தோல்வியுறுதல் உலக ஏகாதிபத்தியத்திற்கும், ஐரோப்பா வலுவற்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்ற திட்டத்திற்கும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். செப்டம்பர் 2003 ல் சான்ஸ்லர் ஷ்ரோடர், ஐ.நா. பொது மன்றத்தில் பேசுகையில், அமெரிக்காவிற்கு ஈராக்கை ஒட்டித் தங்களுடைய ஒத்துழைக்கும் கரங்களை நீட்டுவதாகக் கூறினார்; வாஷிங்டனுடைய நலன்களை ஒட்டித்தான் ஜேர்மனிய உதவி இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். "புதிய அச்சுறுத்தல்கள், இவை பற்றி உலகில் எந்நாடும் உயர்நிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ளமுடியாது, புதிய சர்வதேச ஒற்றுமையை முன் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகரித்திருக்கிறது." இதனால் தன்னுடைய நாடு மனிதாபிமானம் சார்ந்தவை, மற்றும் தொழில்நுட்பம், பொருளாதார உதவு, ஈராக்கியப் போலீசாருக்குப் பயிற்சி, இராணுவத்தினருக்கு பயிற்சி இவற்றில் உதவ முன்வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி சிராக்கும், இதேபோல் அமெரிக்கா பெரும் கிளர்ச்சி எழுச்சியை ஈராக்கில் எதிர்கொள்ளுகிறது என்று தெரிந்த அளவில், ஆக்கிரமிப்பிற்கு இயன்ற உதவியைத் தருவதாகக் கூறி, பிரான்ஸ் "அமெரிக்கர்கள் வெற்றியடைய பெரிதும் விழைகின்றது " எனவும் தெரிவித்தார்.

இந்த நிலைப்பாடு ஐ.நா.விற்குள் நடக்கும் விவாதமான, ஜூன் 30க்குள் ஈராக்கிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவது பற்றியும், பாரிசும் பேர்லினும், அமெரிக்காவிற்கு தான் பொறுக்கியெடுத்திருக்கும் குழுவிடம் அது கைப்பாவையாக இயங்கினாலும், "இறையாண்மை" ஈராக்கிற்கு வழங்குவதில் நம்பிக்கைப் பூச்சு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான ஆலோசனையை தெரிவிக்கும் நிலையிலும் தொடர்கிறது. ஆயினும்கூட, ஐரோப்பிய சக்திகள் தொடர்ந்து எப்பொழுது, எங்கெங்கு சாத்தியமோ அங்கு தங்களுடைய செல்வாக்கு பிராந்தியங்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ளுவதில் ஈடுபடும், இது, அவை ஒன்றோடொன்றும் அட்லான்டிக் கடந்த போட்டியாளருடனும் பூசல் கொள்வதை தவிர்க்க முடியாது.

See Also:

அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை

Top of page