World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris meeting advances socialist platform for European workers

பாரிசில் பொதுக்கூட்டம் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு சோசலிச முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை வழங்குகின்றது
By Antoine Lerougetel
18 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஜூன் 8-ல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தனது வேலைதிட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த கூட்டத்தில் பிரதான பேச்சாளர்கள் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit-PSG) ஐரோப்பிய தேர்தல் வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள உல்றிச் றிப்பேட் (Ulrich Rippert) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர் ஆவர். இந்தக் கூட்டத்திற்கு அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பில் வான் ஓகென் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார்.

வாக்குப்பதிவு தினத்திற்கு 5-நாட்களுக்கு முன்னர் FIAP Jean Monnet நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள், மாணவர்கள், இளம் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர் குழு இந்தக்கூட்டம் பற்றி Jusseiu, St Denis மற்றும் Tolbiac பல்கலைக் கழகங்களிலும் மித்திரோன் நூலகத்திலும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சுரங்க பாதை போக்குவரத்து (மெட்ரோ) நிலையங்களிலும் மற்றும் பாரிஸ் பிராந்தியம் முழுவதிலும் தகுந்த விளம்பரங்களை செய்தன. பிரான்சிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் வந்ததிற்கு எதிராக நடத்தப்பட்ட போர் எதிர்ப்பு கண்டன பேரணியிலும், பாரிசில் நடைபெற்ற சமூக நலன்புரி பாதுகாப்பு பேரணியிலும் இந்தக்குழுகள் கலந்து கொண்டன. இந்தப் பிரச்சார இயக்கத்தின் மூலம் பல புதிய தொடர்புகள் ஏற்பட்டன, பிரான்சில் உலக சோசலிச வலைத் தள நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து தொடர்புகளை நிலைநாட்டிக்கொள்ள அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

Stephane Hugues கூட்டத்திற்கு தலைமை வகித்தார், பேச்சாளர்களை வரவேற்றார். இந்த கூட்டத்தின் சிறப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் பிரச்சாரங்களுக்கு அப்பால் சென்று கொண்டிருப்பதாக அவர் விளக்கினார். "ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பகுதியை மறுபடியும் கட்டி எழுப்புவதற்கான புதிய நடவடிக்கையை இந்த கூட்டம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்று கூறினார். 1953-ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த மிசேல் பப்லோ நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை சவால் விடுக்கின்ற வகையில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு அடிபணிதலையும், முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய ஸ்திரப்பாட்டை நியாயப்படுத்தவும் தத்துவார்த்த ரீதியான நிலைப்பாட்டை வளர்த்தெடுத்தார் என்று விளக்கினார்.

பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), LO மற்றும் OCI தற்போது PT என அழைக்கப்படும் கட்சிகள் அனைத்தும் போருக்கு பிந்தைய சமூக உறவுகளை ஏற்றுக்கொண்டன-- பழைய சமூக ஒழுங்கை தற்காத்து நிற்கின்றன. இதுதான் அவர்களது நேரடி மறைமுக ஆதரவு 2002- ஜனாதிபதி தேர்தலில் சிராக்கிற்கு- 2 வது சுற்றில் தெரிவிக்கப்பட்டதன் பொருள்'' என்று Hugues சுட்டிக்காட்டினார்.

உல்றிச் றிப்பேட் ஜேர்மன் மொழியில் பேசியபொழுது ஒரு மொழிப்பெயர்ப்பாளர் அவருடன் இருந்தார், ஐரோப்பிய அரசியல் அபிவிருத்திகளில் எப்போதுமே முன்னணியில் நிற்கின்ற ஒரு நகரத்தில் பேசுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்திற்கு, ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு, மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களுக்கும் இன்றைய தினம் அவர்களை எதிர்நோக்கியுள்ள பிரச்சனை ''தொழிற்சாலை மட்டத்திற்கப்பால் உயர்ந்து சென்று போராடுகின்ற மிக முக்கிய பிரச்சனையாகும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்....

''வர்க்கப் போராட்டம் என்பது வேலைநிறுத்தம் மற்றும் வெகுஜன கண்டனப் பேரணிகளோடு மட்டுப்படுத்தப்படுவது என்று எவராவது நினைப்பார்களானால் அவர்கள் ஒரு பெரிய தவறை செய்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக வர்க்க போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டமாகும், இன்றைய தினம் தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி என்னவென்றால் மாறிவருகின்ற அரசியல் சூழ்நிலைகளை, மாற்றங்களை தெளிவாக புரிந்து கொள்வதுதான். அப்படிச்செய்யாமல், எந்த அரசியல் நிலைநோக்கையும் கொள்வது இயலாத காரியம்'' என்று Rippert குறிப்பிட்டார்.

ஈராக் போர், ஐரோப்பாவின் நிலைமையில் மிக ஆழமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ''இதற்கு முன்னர் அமெரிக்கா சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருந்தது. இன்றைய தினம் அமெரிக்கா உலகில் மகத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறிவிட்டது'', அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அக்கறையான எதிர்ப்பை உருவாக்குகின்ற வல்லமை ஐரோப்பிய அரசாங்கத்திற்கு இல்லை'' என்று Rippert அறிவித்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், மேற்கில் அமைதிப்போக்கு கடைபிடிக்கப்பட்டதால் அமெரிக்க முதலாளித்துவம் விரிவடைவதற்கு அது உதவிற்று, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மேற்கத்திய சக்திகள் வலுப்படுத்தப்பட்டன. அப்படியிருந்தும், சர்வதேச அளவுகளில் திட்டவட்டமான ஒரு ஸ்திரத்தன்மையும் எதிர்கால போக்குகளை ஓரளவிற்கு முடிவுசெய்கிற நிலையையும் சர்வதேச உறவுகளில் உருவாகிற்று.''

புதிய அமெரிக்க கொள்கை வழியான, தற்காப்புப்போர் மற்றும் ஈராக்கை அடிமைப்படுத்தியமை அமெரிக்க மூலதனத்தின் தேவைக்கேற்ப உலகை புதிய உருவமாகச் செய்யும் (Remodelling) நடவடிக்கையின் முதல் அடியெடுத்துவைக்கும் செயலாகும். அமெரிக்க இராணுவம் சந்தித்து வருகின்ற எதிர்ப்பு எதிர்பாராததாகும்.

ICFI "இந்தப்போர், அமெரிக்க மற்றும் சர்வதேச மூலதனம் சந்திக்கின்ற மகத்தான நெருக்கடிக்கு அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் எதிர் விளைவே என்று ஒரே கட்சிதான் வலியுறுத்தி கூறிவருகிறது'' என்று Rippert கூறினார். ''எனவேதான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி மாறுவதால், அமெரிக்கக் கொள்கையின் அடிப்படை உந்துதல் மாறாது ---இதை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் போருக்கு வழங்கி வரும் ஒருமனதான ஆதரவு மூலம் எடுத்துக்காட்டிவிட்டனர்'' என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த பொருளாதார வல்லரசாக விளங்கியது, இன்றைய தினம் அதிக அளவில் கடனாளியாக உள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காவே ஈராக் போர் தொடுக்கப்பட்டது. மத்திய கிழக்கில் இராணுவ தளங்களை நிறுவி தனது ஆசிய மற்றும் ஐரோப்பிய போட்டியாளர் நாடுகளுக்கெதிராக புவியியல் மூலோபாய மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் உள்நாட்டில் பெருகிவரும் சமூக அரசியல் பதட்டங்களிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காகவும்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே நிலவுகின்ற மிகப்பெரிய இடைவெளியால் இது வெளிப்படுகிறது.

''அமெரிக்க தொழிலாள வர்க்கம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ராட்சதனைப்போல் உள்ளனர். அவர்கள் அரசியல் அடிப்படையில் விழிப்புணர்வு பெறுகின்றபொழுது மிக வலுவான எதிரிகளாக உருவாவார்கள். இரண்டு கட்சிகளையும் உயர் நிதி குழு ஆதிக்கம் செலுத்துவதால், குடியசுக்கட்சியும் ஜனநாயகக்கட்சியும் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் மிகப்பெரும் சங்கடத்தை சந்தித்துக்கொண்டுள்ளன'' என்று Rippert சுட்டிகாட்டினார்.

ஜோர்ஜ் டெனட், ஜேம்ஸ் பாவிட் ராஜினாமா செய்தது அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள ஆழமான மோதலை நிரூபித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று ரிப்பேர்ட் மேற்கோள் காட்டினார். ''அமெரிக்க நிர்வாகத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி ஐரோப்பிய அரசாங்கங்களிடையே மகத்தான அதிர்ச்சியை உருவாக்கிவிட்டுள்ளது. ஐரோப்பிய முதலாளித்துவம் தனது சொந்த நலன்களை கடைப்பிடித்துவந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலும் இராணுவ வலிமையும் உலகம் முழுவதுமான முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரத்திற்கு உத்தரவாதம் செய்து தருவதாக ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்டம் காணுகிற நேரத்தில் தங்களது ஆட்சிக்கும் ஆபத்து என்று கருதுகின்றனர்'' எனவேதான் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பால் உருவாகியுள்ள சில பாதிப்புக்களை சரிக்கட்டுவதற்கு உதவுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஐரோப்பா முழுவதும் ஜனநாயக உரிமைகளையும், சமூக தேட்டங்களையும் பறிப்பதற்கு நடைபெற்றுவருகின்ற, இடையறாத தாக்குதல்களை Rippert கோடிட்டுக்காட்டினார், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஜேர்மன் அதிபர் ஷ்ரோடரின் "செயற்திட்டம் 2010"- என்று சுட்டிக்காட்டினார். ''EU ஒரு ஐரோப்பிய போலீஸ் அரசை உருவாக்குவதற்கு ஒரு வழியாக மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார். ஈராக் போருக்கெதிராக வெகுஜனம் அணிதிரண்டிருப்பது வரவிருக்கின்ற மிகப்பெரும் வர்க்கப் போராட்டத்திற்கான ஆரம்ப கட்டந்தான்.

ICFI, ஐரோப்பிய அரசியல் சட்டத்தையும், EU- விரிவாக்கப்படுவதையும் நிராகரிக்கிறது என்று Rippert குறிப்பிட்டார். ''எல்லா ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு அந்த கண்டத்தில் கிடைக்கின்ற சட ரீதியான செல்வங்கள் அனைத்தையும் எல்லோருக்கும் பொதுவாக பயன்படுத்திக் கொண்டால்தான் வறுமையையும் பின்தங்கிய நிலையையும் சமாளிக்க முடியும்'' என்று அவர் அறிவித்தார்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஐக்கியப்படுவதால்தான் சாத்தியமாகுமென்று அவர் குறிப்பிட்டார். ''EU கொள்கையை முடிவு செய்கின்ற முதலாளித்துவ நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலும், துருக்கியிலும் உள்ள உழைக்கும் மக்கள் முக்கிய கூட்டு சேர வேண்டும். தேசியவாத, பிராந்தியவாத பிரிவினை போக்குகளை அவர் ஒதுக்கித் தள்ளினார். ICFI ன் வரலாறு மற்றும் பாரம்பரியங்களில் பொதிந்து கிடக்கும் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகளால் வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பீட்டர் சுவார்ட்ஸ் பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார். ஈராக்கிற்கு எதிரான போர் இருபதாம் நூற்றாண்டில் தீர்வு காணப்படாத அனைத்து கேள்விகளையும் எழுப்பிவிட்டுள்ளது --- ஏகாதிபத்தியப்போர், காலனித்துவம், சமூக மோதல்---- இந்தப் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளே சீர்திருத்தவாத தீர்வுகள் எதுவுமில்லை.

2002 ஏப்ரல் 21-ல் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்று வாக்குப்பதிவில் ட்ரொட்கிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட வேட்பாளர்களுக்கு 3 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பதை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார். ''இது பெரும் முக்கியத்துவம் நிறைந்ததாகும். பிரான்சு நாட்டில் இன்னமும் புரட்சிகர பாரம்பரியம் நீடிக்கிறது, நிலைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடாக அது அமைந்தது. ட்ரொட்ஸ்கி தனிப்பட்ட முறையில் பிரான்சில் மேற்கொண்ட பணிகளின் விளைவு அது, அதற்கெல்லாம் மேலாக மக்கள் முன்னணியின் - முதலில் இரண்டாவது உலகப்போருக்குப் பின் ஜெனரால் டு கோல் உடன் கூட்டணி வைத்துக்கொண்டும் அதற்குப் பின்னர் மித்திரோன் மற்றும் ஜொஸ்பன் அரசாங்கங்களோடும் கூட்டணி வைத்துக்கொண்ட ஓர் அங்கமாக முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாத்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசத்தோடு ஏற்பட்ட எல்லா அனுபவங்களின் வெளிப்பாடாகும். ''

என்றாலும், தீவிர இடது அமைப்புகளான LO, LCR, மற்றும் PT ஆகியவற்றிற்கு ட்ரொட்ஸ்கிச பாரம்பரியங்களுக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என அவர் வலியுறுத்தினார். பிரான்சில் ட்ரொட்ஸ்கி போரிட்ட இடைநிலைவாத பாரம்பரியத்திற்கு அவர்கள் நெருங்கி வருகின்றனர். குறிப்பாக Marceau Pivert- ன், Parti Socialist Ouvrier et Paysan (PSOP) இடைநிலைவாத மரபுகளோடு அவர்கள் நெருங்கி வருகின்றனர்.

1936- ல் பொதுவேலை நிறுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, Pivert பிரெஞ்சு புரட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். அவர் எழுதினார்: ''நாம் கற்பனை செய்து கொண்டிருப்பதற்கு மேலாக மக்கள் முன்னேறியிருக்கிறார்கள்.... முதலாளித்துவ உலகம் மரண வேதனையில் உள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள். நாம் நெருக்கடியை பாசிசத்தை மற்றும் போரை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் புதியதொரு உலகத்தை அமைக்கவேண்டியது அவசியமாகும்.'' ஆனால் அவர் இந்த வார்த்தைகளை எழுதிய நேரத்தில் கூட Pivert, Blum-ன் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இருந்தார். அந்த அரசாங்கம் புரட்சிகர இயக்கத்தின் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தது. அப்போது ட்ரொட்ஸ்கி, சுட்டிக்காட்டியது என்னவென்றால் Pivert அன்றைய இதர எல்லா இடைநிலைவாதிகளையும் போல் -பிரிட்டனில் ILP, ஜேர்மனியில் SAP- ஸ்பெயினில் POUM- "இடது" சீர்திருத்தவாத குழுவிலிருந்தும், உத்தியோகபூர்வ பொதுக் கருத்திலிருந்தும் முறித்துக்கொள்வதற்கு மறுத்துவிட்டார்.

ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்: "இப்போது பிரான்சு சென்றுகொண்டிருக்கும் ஒரு சகாப்தத்தில் மிக, மிக சங்கடமானதும், மிக மிக முக்கியத்துவமானதுமான ஒன்று முதலாளித்துவ பொதுக்கருத்தின் தாக்கத்திலிருந்து நம்மை தனிமைப்படுத்திக்கொள்வது தான். அந்தப் பொதுக்கருத்திலிருந்து உள்ளப்பூர்வமாக வெட்டிமுறித்துக் கொண்டுவர வேண்டும், கூக்குரலைக் கண்டு பயந்துவிடக்கூடாது, பொய்கள், மற்றும் அவதூறுகளைக் கண்டு பயந்துவிடக்கூடாது, அதே போல புகழுரைக்கும் அதன் முகஸ்துதிகளுக்கும், பலியாகிவிடாது அவற்றை வெறுத்து ஒதுக்கவேண்டும். அந்த நிலைக்கு வந்தால் மட்டுமே செயல்படும் சுதந்திரத்தை உறுதி செய்துகொள்ள முடியும். அப்போதுதான் தக்க தருணத்தில் மக்களது புரட்சிக் குரலை கேட்கும் வினைத் திறம் பெற முடியும் மற்றும் முடிவான தாக்குதலுக்காக அந்த மக்களுக்கு தலைமை தாங்கிச்செல்ல முடியும்'' (1)

போர் தொடங்கிய நேரத்தில் PSOP சிதைந்தது. ஆனால் அதன் இடைநிலைவாத பாரம்பரியம் LO- MTM, LCR- ல், மற்றும் PT- ல் நீடித்துக்கொண்டேயிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மாதிரியான இடைநிலைவாதம், அதிகாரபூர்வமான முதலாளித்துவ பிழைப்புவாத அரசியலில் பதவியைப் பெறுவதற்கான ஒரு இடைக்காலக்கட்டம் தான். இவர்களில் மிகப் பிரபலமானவர் ஜொஸ்பன், இவர் OCI -(Organisation Communiste Internationaliste)-ல் ஒரு உறுப்பினராக இருந்தவர், தற்போது அது PT ஆகிவிட்டது, 20-ஆண்டுகளாக அதில் உறுப்பினராகயிருக்கிறார்.

சுவார்ட்ஸ் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் வரலாற்றை கோடிட்டுக்காட்டினார். அதன் பிரெஞ்சுப் பகுதிதான் LCR. மிசேல் பப்லோவின் திரிபுவாதத்திற்கு எதிராக பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசத்தை தற்காத்து நிற்பதற்காக 1953-ல் ICFI- நிறுவப்பட்டது. ''ட்ரொட்ஸ்கி நிலைநாட்டி வந்ததைப்போல் ஸ்ராலினிசம் எதிர்ப்புரட்சிகரமானதல்ல என்று பப்லோ கூறினார், ஆனால், புறநிலை சம்பவங்களின் நிர்பந்தத்தால் ஸ்ராலினிசம் ஒரு முற்போக்கு பாத்திரத்தை ஆற்ற முடியுமென்று பப்லோ'' கூறினார். சுவார்ட்ஸ், டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம்' (Haretage we Defend) என்ற நூலில், இருந்து பப்லோவின் சீரழிவை ஆய்வு செய்யும் பந்திகளை மேற்கோள் காட்டினார். பப்லோவின் கொள்கைகள் நான்காம் அகிலத்தின் சுயாதீனமான பங்களிப்பை மறுப்பதாகவும், அதை கலைப்பதை நோக்கமாகவும் கொண்டிருந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி வெளியிட்ட பகிரங்கக்கடிதம் 1953-ல் அனைத்துலக குழுவை அமைப்பதற்கு காரணமாக இருந்தது. அந்தப் பிரகடனத்தில் ''பப்லோவின் திரிபு வாதத்திற்கும் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையே நிலவுகின்ற இடைவெளிகள் மிக ஆழமானவை எனவே அரசியல் அடிப்படையிலோ அல்லது அமைப்பு ரீதியிலோ சமரசத்திற்கு வழியில்லை'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சுவாட்ஸ் 1960-èOTM ICFI-ன் பிரெஞ்சுப் பகுதி OCI, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியது என்று சுட்டிக்காட்டினார். ''1968-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் OCI- ஐ நோக்கிவந்தார்கள், Lambert-ன் கட்சி அவர்களுக்கு படிப்பினையை ஊட்ட முடியவில்லை மற்றும் விரைவாக அவர்களை சந்தர்ப்பவாத திக்கில் திருப்பியது. OCI-ஐ முன்னோடியாக கொண்ட PT தற்போது பிவேர்டிசத்தின் அனைத்து தரக் குறியீடுகளையும் கொண்டிருக்கிறது''

பிரான்சின் அதிகாரபூர்வமான பப்லோவாத அமைப்பான LCR- ன் இன்றைய கொள்கைகள், Pivert-ன் அமைப்பைவிட அதிக வலதுசாரி போக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவர்கள் "முதலாளித்துவ எதிர்ப்பு இடது முகாமில்" பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கம், சமாதான விரும்பிகள், சோசலிஸ்ட் கட்சியின் பகுதிகள், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை ஓர் அணியில் இணைக்கும் முயற்சி எந்தவிதமான புரட்சிகர நோக்குநிலையையும் முற்றிலும் ஒதுக்கித்தள்ளுவதாக அமைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

LCR-ன் பிரேசில் சகோதரக் கட்சியான Democracia Socialista (DS) அத்தகைய அரசியல் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் (PT) DS- பணியாற்றுகிறது, அதன் உறுப்பினர்களில் ஒருவரான Miguel Rossetto ஜனாதிபதி லூலா அரசாங்கத்தில் ஒரு உறுப்பினர். அண்மையில் PT யிலிருந்து தூக்கி எறியப்பட்ட முன்னணி DS உறுப்பினர் பிமீறீஷீணsணீ பிமீறீமீஸீணீ, லிசிஸி-ன் வாரப் பத்திரக்கையான Rouge-ற்கு அளித்த பேட்டியை சுவார்ட்ஸ் சுட்டிக்காட்டினார். ''போராட்டங்கள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. லூலாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்திவிட்டு விவசாயிகள், வேளாண்மை சீர்திருத்த அமைச்சர் Miguel Rossetto- விற்கும் அதேபோல செய்தனர். அது மிகவும் கடுமையான ஒன்று, நமது நண்பர்களில் ஒருவர் மக்களது அதிருப்திக்கு இலக்காகி வருகிறார் என்பது மிகக் கடுமையானது.''

LO பற்றி குறிப்பிட்ட சுவார்ட்ஸ் அவர்கள் வெறும் தொழிற்சங்க முன்னோக்குடன் செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். அண்மையில் அவர்கள் நடத்திய விழாவில் ஆர்லட் லாகியே தனது உரையில் ஒரு முறைகூட ஈராக் போர் பற்றி குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பதால் உலகம் முழுவதிலும் கடுமையான வர்க்கப் போராட்டங்களை உருவாக்க இருக்கிறது. ட்ரொட்ஸ்கி தனது சக தோழர்களுக்கு கூறிய அறிவுரையை சுவார்ட்ஸ் நினைவுபடுத்தினார். ''கட்சியை அத்தகைய சோதனைக்கு தயார்படுத்துவதற்காக இப்போதே அதன் நனவுகளை மீண்டும் மெருகூட்ட வேண்டும், பளபளப்பாக்க வேண்டும், அதனுடைய விட்டுக்கொடுக்காத அரசியலை கெட்டியாக்க வேண்டும், எல்லா கருத்துக்களையும் இறுதிவரை கொண்டு செலுத்த வேண்டும், சதி செய்கிற நண்பர்களை மன்னிக்க கூடாது.''

இந்த அணுகுமுறைதான் ICFI-ன் அரசியல் பணிக்கும், அதன் சர்வதேச அங்கமான WSWS-ன் அரசியல் பணிக்கும் மையமாக விளங்குவதாக சுவார்ட்ஸ் குறிப்பிட்டார்.

அப்போது உரையாற்றிய Antoine Lerougetel முந்திய ஞாயிறன்று பாரிஸில் நடைபெற்ற இரண்டு தனித்தனி பேரணிகள் பற்றி குறிப்பிட்டார். ஒரு பேரணி சமூக பாதுகாப்பு பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்டது, மற்றொரு பேரணி புஷ் பாரிஸ் விஜயத்திற்கு எதிராக நடைபெற்றது. இந்தப் பேரணிகள் பிரெஞ்சு இடதுகள், தீவிர இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பங்களிப்பை அம்பலப்படுத்தின. அவர்கள் அனைவருமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் வெளிப்பாட்டை நசுக்க முயன்றனர். அவர்கள் முதலாளித்துவம், ஜனநாயகம் மற்றும் சமுதாய உரிமைகள் மீது தொடுத்திருக்கும் தாக்குதலிலிருந்து ஏகாதிபத்திய இராணுவவாதம் வெடித்துச் சிதறியிருக்கும் பிரச்சனையை தனிமைப்படுத்த நனவுபூர்வமாக வேலை செய்திருந்தனர் எனச்சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர்க் குணத்தை அவர்கள் அழுத்தம் மற்றும் எதிர்ப்பு என்ற அளவோடு நிறுத்திக்கொண்டனர். சோசலிச வேலைத்திட்டம் மற்றும் சோசலிச நனவு வளர்வதற்குரிய எந்த விவாதமும் நடக்கவிடாது தவிர்த்தனர், தடுத்து நிறுத்தினர். இந்தமட்டுப்பாடுகளை WSWS ஆதரவாளர்கள் மட்டுமே எதிர்த்து நின்றனர் மற்றும் தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனத்தோடு செயல்பட வலியுறுத்தும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை எடுத்துவைத்தனர் என்று Lerougetel குறிப்பிட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பகுதியின் வளர்ச்சி நிதிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது 200-க்கு மேற்பட்ட யூரோக்கள் வசூலாகின. அதற்குப்பின்னர் தனித்தனி விவாதங்கள் நடந்தன.

Notes:
1.
"Letter to a friend in France," February 14, 1939, in Leon Trotsky on France, New York, 1939, p. 210

See Also :

பேர்லின்: ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய வெற்றிகரமானக் கூட்டம்

Top of page